Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்?

Featured Replies

போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக நானில்லை. ஆனால் அது சோனியாவா என்று எனக்குத் தெரியாது.

கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில்

இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம்

கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்

எனக் கூறியுள்ளார்.பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின்

மறுவடிவம் எனக் கொள்ளலாம்.

இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் சூசகமாக தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் சம்பந்தத்தையும் நிராகரிக்க முடியாது என்று லாகூர் ஆணையாளர் குஷ்ரோ பேர்வைஸ் தெரிவித்திருப்பதாக வியோ தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

இலங்கை அணியினரை வெற்றிகரமான முறையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாத்துள்ளதாக பேர்வைஸ் கூறியதாகவும் ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் உளவுப் பிரிவான இன்ரர் சேவிஸ் இன்ரலிஜன்ஸின் (ஐ.எஸ்.ஐ) முன்னாள் தலைவர் ஜெனரல் ஹமீட் குல் கருத்துத் தெரிவிக்கையில்;

பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக பிரகடனப்படுத்தவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும் இலங்கை அணி மீதான தாக்குதல் அந்தச் சதியுடன் தொடர்புபட்டதொன்று என்றும் குல், ஜியோ தொலைக்காட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத உள்சார் கட்டமைப்புகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இத்தகைய குற்றச்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிரும்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபடக் கூடாதென நான் கோருகிறேன்.

இருகரத்தாலும் துணிவான நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்துவிட வேண்டும் . குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதே இந்த மாதிரியான விடயங்களுக்கு உரிய முறையில் தீர்வு காணமுடியும் என்று முகர்ஜி கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் நாட்டில் இந்தியாவினால் நடாத்தப்பட்ட தாக்குதல் என்று வைத்துக்கொண்டால் ஏன் ஒரு தாக்குதல் காரர்(பாகிஸ்தான் நாட்டவராக இருந்தால் கூட) கைது செய்யப்படவோ, அல்லது சுட்டுக்கொல்லப்படவோ இல்லை?

எல்லோரும் இந்தியப் பாதுகாப்பு எல்லைக்குள் வந்திருப்பார்கள். தாக்குதலுக்கான காரணங்களை இந்தியா முன்னெடுக்க முனைந்ததால் ஏற்பட்ட சந்தேகந்தான் இந்தியாதான் பின்னணி என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.

அவர்களின் நோக்கம் கொலை செய்வது போல தெரியவில்லை.... கடத்தல் நாடகம் செய்ய வந்தது போல இருக்கிறது... ஊண்றி கவனியுங்கோ மக்கா இலங்கை பாக்கிஸ்தான் அரசுகளுக்கு கூட இதில் சம்பந்தம் இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் நாட்டில் இந்தியாவினால் நடாத்தப்பட்ட தாக்குதல் என்று வைத்துக்கொண்டால் ஏன் ஒரு தாக்குதல் காரர்(பாகிஸ்தான் நாட்டவராக இருந்தால் கூட) கைது செய்யப்படவோ, அல்லது சுட்டுக்கொல்லப்படவோ இல்லை?

இந்தியரை உள்ளே அனுப்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை..! பாகிஸ்தானில் உள்ள கூலிப்படையை வைத்து இதை நடத்தியிருக்கலாம்..!

பாகிஸ்தான் சம்பந்தமாக இந்தியாவின் ( RAW இன்) அணுகுமுறையை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. அல்கைடா செயற்பாட்டுக்கு முந்திய காலம்.

2. அல்கைடா செயற்பாட்டுக்கு பின்னான காலம்.

முதலாவது காலகட்டத்தில் பாகிஸ்தானின் உள்ளூர் அரசியல் ஸ்திரத்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டு பாகிஸ்தானை ஒரு குளறுபடியான நாடாக மாறுவதற்கு இந்தியா தன்னால் ஆனதைச் செய்தது.

ஆனால் இரண்டாவது காலகட்டத்தில் ( தற்சமயம் ) பாகிஸ்தானில் ஜனனாயக ரீதியாக அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு இந்தியா விரும்பும். ( நம்பக் கொஞ்சம் கஸ்டம் தான் )

எவ்வாராயினும் இவ்விரு காலகட்டத்திலும் பாகிஸ்தான் உடைந்து போக இந்தியா விரும்பியது. உதாரணமாக பழுகிஸ்தான் பிரிந்து போதல்.

இந்தியா பாகிஸ்தானினுள் ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்றால் பழுகிஸ்தான் போராட்டக் காரர்களைப் பயன்படுத்தலாம். அல்லது ஷியா முஸ்லீம் களைப் பயன்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Paki Team தோக்கப் போகுது எண்டு தெரிஞ்சிட்டிது போலகிடக்குது. :lol:

அதான் முன் கூட்டியே...

ஒவ்வொரு சமுதாயமும் தங்கட நாகரீகத்துக்கு தக்க மாதிரித்தானே நடப்பினம். சிங்களவர் வீட்டுக்கு நெருப்பு வைக்கிற மாதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EMILY BOURKE: The umpires and the Sri Lankan team want to know why the Pakistani team changed its departure time that day.

MUTTIAH MURALITHARAN: What happened was we left at 8.30. So Yunus Khan has said they are going at 8.35, five minutes later. We saw the two escorts. We got one escort and they had one escort. Normally all of the buses go, about four, five escorts go. So they divided into two and maybe they would have well known information and everything.

EMILY BOURKE: That five-minute delay has also been playing on Simon Taufel's mind.

SIMON TAUFEL: We were told they wouldn't target the players, that they wouldn't target the sub-continent team. There are a lot of questions. I mean the first two days both team buses left at the same time. The third day the Pakistan team bus leaves five minutes after the Sri Lankan one. Why did that happen? I don't know the answer to that question.

Would they have attacked both buses at the same time? I don't know. You know, we can speculate as much as we like. I've just got to deal with the facts in front of me and the fact that, you know, I'm quite lucky to be here and see my kids and wife again and you know have an opportunity of still participating in the game of cricket.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தாக்கப்பட இருந்தது பாகிஸ்தானி குழு தான். முதலில் பாதுகாப்புக்கு வந்த ஆயுதபாணி (கொமாண்டோ அணி) தாக்குதல் காரர்களால் கொல்லப்பட்டார்கள். ஆனால் பின்னால் வந்த பஸ் வண்டி மீது வந்தவர்கள் இலங்கை குழு என அறிந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களை (இலங்கை குழுவை) கொல்லாமல் சென்று விட்டார்கள். உண்மையான தாக்குதல் நோக்கம் பாகிஸ்தானிய குழு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 3/5/2009 11:49:18 PM - பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதலுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என உறுதியாக கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

இலங்கை கிரிக்கட் வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பிலான விசாரணைகள் அந்நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பல விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

விடுதலை புலிகள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிரிக்கட் வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் பயன்படுத்தியுள்ள ஆயுதங்கள் அவர்களின் திட்டமிடல்கள் என்பன விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஒத்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விடுதலை புலிகள் பாகிஸ்தானில் எமது கிரிக்கட் வீரர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்து இலங்கை அரசாங்கத்தால் வடக்கில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழுத்தம் தெரிவிப்பதற்காக இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிக்கலாம்.

இந்த தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் லஷ்கர் அல் தொய்பா அமைப்புக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் புலனாய்வு தொடர்புகள் இருக்கின்றன என்பதை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். எனவே இவை அனைத்து விடயங்களை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் சம்பவத்துடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தான் தூக்கும்

இலங்கையில் என்ன நடந்தாலும் புலிகள்தான்

இந்தியாவில் என்ன நடந்தாலும்பாகிஸ்தான் தான்

பாகிஸ்தானில் என்ன நடந்தாலும் இந்தியாதான்

Edited by விசுகு

பாகிஸ்தானை இன்னொரு அப்கானிஸ்தானாக்க மாற்ற சில நாடுகள் கடுமையா முயற்சிக்கின்றன....

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.... பயங்கரவாத விளையாட்டை விளையாடிய பாகிஸ்தான் இன்று அதற்கே பலியாகும்போலுள்ளது.... இந்த ஆட்டத்தை ஆடவுள்ள இந்தியாவுக்கு யாராவது ஆட்டம் காட்டத்தான் போறார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.