Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.

  • Replies 61
  • Views 10.1k
  • Created
  • Last Reply

நம்மினம் வாழ தன் உயிரை கொடுத்து போராடிய போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான வீரமுள்ள , உண்மையாகவே ஆணுக்கு பெண் சமம் என நிருபித்த நிருபித்து கொண்டு இருக்கும் நம் தாய்க்கு நிகரான தெய்வ உருவான பெண் விடுதலை போராளிகளுக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள் . மன்னிக்கவும் வாழ்த்த எனக்கு தகுதி இல்லை . வணங்குகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.

ரதி இனிமலும் பெண்களுக்கு அடிமை விலங்கு என்ற பழைய பஞ்சாங்கத்தை புரட்டாதேங்கோ........ஆண்கள் செய்யும் எதை பெண்ணைக் செய்யவில்லை......விண்வெளிக்கு போகவில்லையா? விமானம் ஓட்டவில்லையா ? களத்தில் போராடவில்லையா? ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவில்லையா ? புகைப்பிடிககவில்லையா ?மது அருந்தவில்லையா ? வேலைக்கு செல்லவில்லையா ? தனியே எங்கும் செல்லமுடியாதா? ரெண்டாம் கலியாணம் கட்டவில்லையா? உடன்கட்டை ஏறுகிறார்களா? வீர சாகாசங்கள் செய்யவில்லையா ? ஆட்சி செய்யவில்லையா ? ஆராய்ச்சிகள் செய்யவில்லையா ? ஆண்கள் போடும் எல்லா உடையும் (ஒரே ஒரு உடையை தவிர ) அணியவில்லையா? நீங்கள் என்ன செய்யல என்று இப்ப பெண்களுக்கு அடிமை வாழ்வு உடைக்கணும் திறக்கனும் என்று சொல்லுறிங்கள்? உங்களுக்கு எல்லாம் இப்பிடி சொல்லி சொல்லியே பழகிப்போட்டுது .......... எம் தேசத்தில் பெண்களுக்கு எங்கு அடிமை வாழ்வு இருக்கின்றது, ஏதோ ரெண்டு மூன்று இடத்தில நடக்கிற விடயங்களை வைத்து இன்னமும் பெண்களுக்கு அடிமை வாழ்வு என்று சொல்லமுடியாது .......

உலகத்தில் இருக்கின்ற தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது பெண்கள் தின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பரந்த பூமிப்பந்தில் விரித்த தலையும் , ரத்தக்கண்ணீர் முகமும் , செல்லடியும் கிபீரடியுமாய் தன் குஞ்சுகளை சதையும் ரத்தத்முமாய் இழந்து ,

துயரு டன் வாழும் ஈழத்தமிழ் அன்னயின் துயரம் நீக்கி விடுங்கள் அப்போது கொண்டாடுவோம் பெண்கள் தினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள். களத்தில் நின்று போராடும் அனைத்து பெண் போராளிகளுக்கும் தலைவணங்குகிறேன் அன்பு சகோதரனாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணி நீங்க எந்த லோகத்தில் இருக்கிறீங்க?

புலத்தில. இப்பெல்லாம் சம உரிமை கேட்க வேண்டியது பாவப்பட்ட ஆண்கள் தான்.

வேலையில் கோப்பை கழுவி விட்டு வீட்டுக்கு வந்தால் சமைத்து மனைவிக்கும் கொடுக்க வேண்டிய நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இனிமலும் பெண்களுக்கு அடிமை விலங்கு என்ற பழைய பஞ்சாங்கத்தை புரட்டாதேங்கோ........ஆண்கள் செய்யும் எதை பெண்ணைக் செய்யவில்லை......விண்வெளிக்கு போகவில்லையா? விமானம் ஓட்டவில்லையா ? களத்தில் போராடவில்லையா? ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவில்லையா ? புகைப்பிடிககவில்லையா ?மது அருந்தவில்லையா ? வேலைக்கு செல்லவில்லையா ? தனியே எங்கும் செல்லமுடியாதா? ரெண்டாம் கலியாணம் கட்டவில்லையா? உடன்கட்டை ஏறுகிறார்களா? வீர சாகாசங்கள் செய்யவில்லையா ? ஆட்சி செய்யவில்லையா ? ஆராய்ச்சிகள் செய்யவில்லையா ? ஆண்கள் போடும் எல்லா உடையும் (ஒரே ஒரு உடையை தவிர ) அணியவில்லையா? நீங்கள் என்ன செய்யல என்று இப்ப பெண்களுக்கு அடிமை வாழ்வு உடைக்கணும் திறக்கனும் என்று சொல்லுறிங்கள்? உங்களுக்கு எல்லாம் இப்பிடி சொல்லி சொல்லியே பழகிப்போட்டுது .......... எம் தேசத்தில் பெண்களுக்கு எங்கு அடிமை வாழ்வு இருக்கின்றது, ஏதோ ரெண்டு மூன்று இடத்தில நடக்கிற விடயங்களை வைத்து இன்னமும் பெண்களுக்கு அடிமை வாழ்வு என்று சொல்லமுடியாது .......

உலகத்தில் இருக்கின்ற தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது பெண்கள் தின வாழ்த்துக்கள்.

அதுமட்டும்மா.. கஞ்சா அடிக்கல்லையா.. கொலை பண்ணேல்லையா.. மனிதர்களை ஏமாத்தல்லையா.. இப்படி இப்படி.. பலவும் செய்யினம்.

பெண்கள் ஏதோ.. விசித்திரப் பிறவிகளா.. அவைக்கு ஒரு நாள் ஒதுக்கி.. கொண்டாட. அப்ப அவையே தாங்கள் மனிசரில்லை என்றினமா..??!

நான் இத்தினத்தை அங்கீகரிக்கவில்லை. எனவே வாழ்த்துக்கள் இல்லை..! :o:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.

நீங்கள் மணமுடித்திருந்தால் உங்கள் கணவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இன்னும் மணமுடிக்காமலிருந்தால் உங்களுக்கு வரப்போகும் நோஞ்சானுக்கும் என் முன்கூட்டிய அனுதாபங்கள்.

இன்றைய உலகில் ஒருசில வீடுகளில் அவன் மனைவிக்கு அடிக்கிறான்

இன்றைய உலகில் ஒருசில வீடுகளில் அவள் கணவனுக்கு அடிக்கிறாள்

உங்களப்போன்றவர்களுக்கு இதுதான் பதில்.

உங்களுக்கு இதுசம்பந்தமாக வாதாட திறமையிருந்தால் வாருங்கள் வாதாடிப்பார்ப்போம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இப் பெருவெளியில் பெண்ணாய் பிறந்தேனே

woman1.jpg

இப் பெருவெளியில்

பெண்ணாய் பிறந்தேனே

உடல் மட்டும் அறிவீர்

உள்ளிருந்தும் மொழியா உணர்வறியீர்

உயிரின் வலியும் அறியீர்

1869 ம் ஆண்டு பிரித்தாணிய பாராளுமன்றப் பிரதிநிதியாகிய ஸ்ருவாட் மில் முதன் முதலில் பெண்களுக்கான வாக்குரிமை பற்றி பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பேசினார். 1893 ம் ஆண்டு நியூசிலாந்து முதல்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது. 1910 ம் ஆண்டு வேலை செய்யும் பெண்களுக்கான சர்வதேச மகாநாடு கொப்பன்காகனில் நடைபெற்றது. அம் மகாநாட்டில் ஜேர்மனியின் சோசலிச சனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவியான கிளாரா செர்கின் சர்வதேச பெண்கள் தினம் என்னும் எண்ணக் கருவை முன்வைத்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே தினத்தில் பெண்களின் குரல்களையும் அவர்களது வேண்டுகோள்களையும் ஒலிக்கச் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அவ் எண்ணக்கரு அன்று அம் மகாநாட்டில் கூடியிருந்த 17 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் சோசலிச கட்சிகள வேலைசெய்யும் பெண்களைப் பிரதித்துவம் செய்த குழுக்கள் போன்றவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களால் எந்த வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கான வாக்குரிமை அரசியலில் பெண்களின் பங்களிப்பு வேலை செய்யும் பெண்களின் உரிமைகள் போன்ற விடையங்கள் படிப்படியாகப் பேசு பொருளாக்கப்பட்டன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களின் நிலமைகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்ற போதும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் போர் நிகழ்ந்து வரும் நாடுகளிலும் பெண்களின் நிலமைகள் 18ம் நூற்றாண்டுகளில் இருந்த நிலைகளுக்கு ஒப்பானதாகவே உள்ளன.

உலகம் பெண்கள் தினத்தை கொண்டாடும் தருணத்தில் நாங்கள் எங்கு நிற்கிறோம் எனத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 80 களில் தமிழச் சமூகத்தின் எல்லா விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி எழுச்சி கொண்டது. அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தமிழ்ப் பெண்ணிலைவாதிகளும் கவிஞர்களும் மேற் கிளம்பினர். பெருமளவான பெண்கள் குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் இருந்து போராட்ட அமைப்புகளை நோக்கிப் பெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் வேலைக்கு போன பெண்களை விடவும் போராட புறப்பட்ட பெண்கள் அதிகமானவர்களாக இருந்தனர். ஆயினும் பல அமைப்புக்கள் சிதைந்த போது போராட போன பெண்கள் நிர்க்கதியானது மட்டுமல்ல அவர்கள் மாற்ற நினைத்த பெண்களின் சுயாதீனத்தை மறுக்கிற சமூக விழுமியங்களை மீளவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகினார்கள்.

மறுபுறம் ஸ்தாபன அமைப்பு சிதையாத ஒரேயொரு அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென ஒரு மகளிர் இராணுவத்தைக் கட்டியெழுப்பியதுடன் ஈழத்தில் பெண்களின் வினைத்திறன் மிக்க போர்ப் பங்களிப்பை உறுதிப்படுத்தினார்கள். ஆயினும் குடும்பம் ‐ சமூகம் என்னும் கருத்தியலுக்குள் பெண்ணின் நிலை தொடர்பான ஆழமான விமர்சனங்களை அவர்கள் ஸ்தாபன ரீதியாக முன்வைத்துச் செயற்படவில்லை. இதுவரை காலமும் பெண்கள் செய்யாத வேலைகளைச் செய்ய விடுதலைப்புலிகள் இயக்கம் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. ஆனால் முழு மொத்தமான பெண் விடுதலை என்னும் எண்ணக்கரு பற்றியும் யுத்தத்திற்கு பின்னர் பெண்ணின் நிலை என்ன என்பது பற்றியும் தெளிவான சிந்தனைக் கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கவில்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டும்மா.. கஞ்சா அடிக்கல்லையா.. கொலை பண்ணேல்லையா.. மனிதர்களை ஏமாத்தல்லையா.. இப்படி இப்படி.. பலவும் செய்யினம்.

பெண்கள் ஏதோ.. விசித்திரப் பிறவிகளா.. அவைக்கு ஒரு நாள் ஒதுக்கி.. கொண்டாட. அப்ப அவையே தாங்கள் மனிசரில்லை என்றினமா..??!

அட அதுதானே ............. :lol: நீங்கள் சொல்லுவிங்கள் என்று தான் மிகுதியை சொல்லாமல்விட்டன் நெடுக்ஸ்.

சரி என்னஇருந்தாலும் அவயளுக்கு ஒரு வாழ்த்து சொல்லிவிடுங்கோ,வாழ்த்து சொல்லாட்டில் ஆக்களை வைத்து அடிப்பினம் சொல்லிட்டன் :unsure:

சண்டித்தனத்துக்கு பயப்பிடுற ஆக்கள் நாங்கள் இல்ல. ஆனால் அமைதி வழியில் பயணிக்கவே விரும்புறம். நிராகரித்த ஒன்றை ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் நம்மிடம் இல்லை..! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.நான் ஒருவரையும் இதனை விழாவாக கொண்டாட சொல்லவில்லை.நம்மை 10 மாதம் சுமந்து பெற்ற அன்னைக்கு நன்றி தெரிவிக்க சொன்னேன்.

சுப்பண்ணை,நெடுக்ஸ் நீங்கள் மேலே சொன்ன அனைத்து கெட்ட பழக்கங்களையும் சில ஆண்களும் தான் செய்கிறார்கள் அதற்காக எல்லா ஆண்களையும் கெட்டவர்கள் எனச் சொல்ல முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக 10 மாதம் எங்களை தன் கருவில் சுமர்ந்தவள் என்பது தான் பெண்ணின் சிறப்பு. அத்தோடு ஒரு பிள்ளைக்கு இது தான் உன் தந்தை என தாய் சொல்லியே தெரிகிறது.மார்ச் 8 ம் திகதி அன்னையர் தினம் கொண்டாடுவதை போல தந்தையர் தினமும் ஓவ்வொரு வருடமும் அனுட்டிக்கப் படுகிறது.

பெண் எவ்வளவு தான் சாதனைகள் செய்தாலும் ஆண் அவளை அடக்கியே வைத்திருக்கிறான்.அன்பாலே,பாச

த்தாலே,கர்வத்தாலே அவளை அடக்கி வைத்திருப்பான்.ஒரு பெண் தனது கணவன் சரியில்லை என விகாரத்து எடுத்தால் இச் சமூதாயம் ஆணை குறை கூறுவதிலும் பார்க்க அப் பெண்ணையே விமர்சிக்கும்.மனைவி இறந்தால் கணவன் உடனே மறுமணம் முடிப்பான் கேட்டால் பிள்ளை வளர்க்க ஆட்கள் இல்லையாம்.தற்போதைய காலத்தில் பெண்களும் மறு மணம் முடிக்கிறார்கள் தான் ஆனால் விகிதாச வீதத்தில் குறைவாகவே உள்ளது.ஏன் சிறு வயதிலில் இருந்தே பெற்றோர் பிள்ளைகளுக்கு வித்தியாசம் காட்ட தொடங்குவார்கள்.சாப்பாடு விசயத்திலோ அல்லது வீட்டுக்கு லேட்டாக வரும் விசயத்திலோ பெடியன்கள் என்ன குழப்படி செய்து விட்டு எவ்வளவு நேரம் செல்ல வீடு வந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் அதே பெண் ஏதாவது சிறு காரணத்திற்காக லேட்டாக வந்தாலும் காச்சு மூச்சு என்று கத்துவார்கள் இது புலத்திலேயும் தொடர்கிறது.பெண் அடிமைத்தனம் இங்கு இருந்து தான் ஆரம்பமாகிறது.

குமாரசாமி அண்ணை நீங்கள் என்னை பெற்றி சொன்ன கருத்திற்கு நன்றி பதிலுக்கு நானும் உங்களைப் பற்றி எழுதலாம் ஆனால் எழுத மாட்டேன்.//உங்களுக்கு இதுசம்பந்தமாக வாதாட திறமையிருந்தால் வாருங்கள் வாதாடிப்பார்ப்போம்// என எழுதியிருந்தீர்கள் வந்திருக்கிறேன் உங்கள் ஆக்க பூர்வமான விவாதத்தை தொடருங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை,நெடுக்ஸ் நீங்கள் மேலே சொன்ன அனைத்து கெட்ட பழக்கங்களையும் சில ஆண்களும் தான் செய்கிறார்கள் அதற்காக எல்லா ஆண்களையும் கெட்டவர்கள் எனச் சொல்ல முடியுமா?

நான் ஆண்கள் இவற்றை செய்யவில்லை அல்லது ஆண்கள் நல்லவர்கள் என்று கூறவில்லையே பெண்களும் இவற்றை செய்கிறார்கள் பெண்கள் செய்யாதது எது உண்டு என்று தான் கேட்டேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக 10 மாதம் எங்களை தன் கருவில் சுமர்ந்தவள் என்பது தான் பெண்ணின் சிறப்பு.

நாம் பெண்களை மதிக்கிறோம்,தாயை மதிக்கிறோம் ஆனால் பெண்களுக்கு இன்னமும் சுதந்திரம் இல்லை அடிமை வாழ்வு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது

அத்தோடு ஒரு பிள்ளைக்கு இது தான் உன் தந்தை என தாய் சொல்லியே தெரிகிறது

கடவுள் வரம் கொடுப்பான் ஆனால் நேரில் வந்து நான் தான் உனக்கு வரம் கொடுத்தேன் என்று சொல்லவதில்லை

பெண் எவ்வளவு தான் சாதனைகள் செய்தாலும் ஆண் அவளை அடக்கியே வைத்திருக்கிறான்.அன்பாலே,பாச

த்தாலே,கர்வத்தாலே அவளை அடக்கி வைத்திருப்பான்.

அன்பு,பாசம் எல்லாம் ஒருவர் இன்னொருவரிடத்தே செலுத்துவது அதை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள்,ஆண் தனது மனைவியிடம் அன்பாக பாசமாக இல்லையென்றால் ஏன் அந்த பெண் சொல்கிறாள் அவர் என்னில பாசமில்லை என்று .... இது அடிமையா ரதி நீங்கள் அடிமை ஏது என்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை நீங்களா இது சும்மா அதிருது நீங்களா இது :lol::icon_idea: நெடுக்கர் நமக்கு இனி வேலையில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை நீங்களா இது சும்மா அதிருது நீங்களா இது :lol::lol: நெடுக்கர் நமக்கு இனி வேலையில்லை :lol:

சுப்பு பின்னிட்டார். முனி நாங்க எனி அதிருற காட்சிகள் பார்க்கலாம். ரதி அக்கா வாங்கோ. நீங்களும் சொல்லனும்.. அப்பதான் நியாயம் பிறக்கும்..! அநியாயம் அடையாளம் காணப்படும். பலர் அநியாயத்தை நியாயம் என்றெல்லோ அடையாளம் காட்ட நிக்கினம்..! பெண்களில் பலர் இந்த வகை..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நீங்களா இது சும்மா அதிருது நீங்களா இது :lol::lol: நெடுக்கர் நமக்கு இனி வேலையில்லை :lol:

ம் நான் தான் முனி,நன்றி. என்ன செய்ய நியாயங்களை சொல்வதற்கு சில அவதாரங்கள் எடுக்கவேண்டியிருக்கு :)

சுப்பு பின்னிட்டார். முனி நாங்க எனி அதிருற காட்சிகள் பார்க்கலாம். ரதி அக்கா வாங்கோ. நீங்களும் சொல்லனும்.. அப்பதான் நியாயம் பிறக்கும்..! அநியாயம் அடையாளம் காணப்படும். பலர் அநியாயத்தை நியாயம் என்றெல்லோ அடையாளம் காட்ட நிக்கினம்..! பெண்களில் பலர் இந்த வகை..! :icon_idea::lol:

நன்றி நெடுக்ஸ்,என்ன இருந்தாலும் இந்த விடயத்தில நான் உங்கள் சிஷ்யன் :lol: ,ரதிக்கு வேற போட்டு குடுக்கிறிங்களோ..... :(

பெண் அப்போதெல்லாம் பேசா மடந்தை..இப்போது

பேசாதிருந்துவிட்டால் அது விந்தை..

முக்காடிட்டும்..முழங்கால் மறைத்தும் வந்ததெல்லாம்..

பெண்ணடக்குமுறையென்று பேசுவோரே..

ஆண்கள் கற்பாகும் பொறிமுறைப்பிழை போல்தான்

பெண்கள் மணம் முடிக்கும் அதிசய பிழைகளும் ஆங்காங்கே நடக்கும்..

அன்னையை ஆண்டுக்கு ஒருமுறை தரிசிப்பவனுக்கு அன்னையர்தினம் வேண்டும்தான்..

மனைவியை மறந்துபோயும் மகிழ்விக்காதவனுக்கு மகளிர் தினம் அவசியம்தான்..

ஒவ்வொரு நாட்களுக்கு உண்மையாய் வாழும் ஒரு மனிதன் வியாபார யுக்திகளில் விளைந்த காதலர் தினத்திற்கு..கண்டகண்ட தினங்களிற்கு நடிப்புத்திறனை நயமாய் வெளிக்கொணரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது முதலாவது பதிவில் ஆண்கள் தான் பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன்.குற்றம் உள்ள மனம் குறுகுறுக்கும் அதே மாதிரி இங்கு உள்ள ஆண்களுக்கும் குறுகுறுத்தது போல கிடக்குது.

ஒரு பெண் தான் பிறந்ததில் இருந்தே தன் குடும்பத்தை சார்ந்தே வாழ்கிறாள்.சிறு வயதில் தந்தையும்,திருமணம் முடித்த பின் கணவனையும்,பிறகு பிள்ளைகளையும் சார்ந்தே வாழ்கிறாள்.அச் சார்ந்திருப்பதை தான் வேண்டாம் எனச் சொல்கிறேன்.

ஒரு ஆண் திருமணம் செய்யும் போது தன்னை விட அழகான பெண்ணை திருமணம் செய்வான் ஆனால் தன்னிலும் படித்த அல்லது தன்னை விட நல்ல வேலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டான் ஒன்று வேலையை விடச் சொல்வான் அல்லது அத் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான்.

ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தால் இச் சமுதாயத்தால் அவள் கெட்டுப் போனவளாகவே கருதப்படுகிறாள்.உங்களில் எத்தனை பேர் அப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பீர்கள்?

ஒரு ஆண் திருமணத்திற்கு முன் எத்தனை பேருடன் படுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் இச் சமுதாயம் ஒரு பெண் தப்பு செய்தால் மட்டும் அதை தூக்கி பிடிக்கிறது.[அதுக்காக பெண்கள் எல்லோரையும் தப்பு செய்ய சொல்லவில்லை] ஏன் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று தான் கேட்கிறேன்.

பெண்கள் என்ன தான் ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தாலும் விகிதாசார அடிப்படையில் ஆண்களை விட‌ குறைவாகவே உள்ளது.பெண்கள் ஏதாவது சாதனை செய்தால் அதை எங்கே எதிர்க்கலாம்,அவமானப் படுத்தலாம் என்பதிலே இச் சமுதாயம் கண்ணும் கருத்துமாய் இருக்கும் [உ+ம்] உங்களில் எத்தனை பேர் மியா என்னும் பாடகியை எதிர்த்தீர்கள்,அவமானப் படுத்தினீர்கள். அரசியலில் கூட எத்தனை பெண்கள் பாரளுமன்றங்களில் இருக்கிறார்கள்? 100 ஆண் எம் பி என்றால் 10 பெண் எம் பி இருப்பார்கள்.

ஒரு பெண்ணை அன்பாலே,பாசத்தாலே அடக்குதல் என்பது அவளது திறமையை கட்டிப் போடுதல்.என்ர குஞ்சு செல்லம் நீ இந்த வேலைக்கு[தன்னிலும் கூடிய வேலைக்கு] போனால் எனக்கு தானடி அவமானம் என சொல்லி அன்பாலே அவளைத் தடுத்தல்.

பெண்ணுக்கு எள்ளில் செய்த சாப்பாடு அந்த 3 நாட்களுக்கு மட்டும் கிடைக்கும் ஆனால் ஆண்களுக்கு? உங்களுக்கே தெரியும்.

நான் இச் சமுதாயம் என குறிப்பிட்டது பெண்களையும் சேர்த்து தான்.ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிமையாக வைத்திருப்பதன் காரணம் ஆண்கள் கோழையாக இருப்பது தான்.அத்தோடு ஆண்களுக்கு சுயமாக முடிவு எடுக்க தெரியாததும் ஒரு காரணம் ஆகும்.

உங்களுக்குத்தெரிந்த ஆண்கள் சமுதாய வட்டம் மிகச் சிறியதாக இருக்கிறது போல இருக்கின்றது ரதி. சுயமாக முடிவெடுக்கத்தெரியாத ஆண்கள் உலகத்தை ஆள்வதும்.. பெண் வாசம் படாத ஆண்கள் உலகத்தை ஆண்டதும் உங்களுக்கு தெரியாததல்ல. ஆண் ஒழுக்ககேடாக நடந்தால் சமுதாயம் காட்டிக்கொடுப்பதில்லை.இயற்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்குத்தெரிந்த ஆண்கள் சமுதாய வட்டம் மிகச் சிறியதாக இருக்கிறது போல இருக்கின்றது ரதி. சுயமாக முடிவெடுக்கத்தெரியாத ஆண்கள் உலகத்தை ஆள்வதும்.. பெண் வாசம் படாத ஆண்கள் உலகத்தை ஆண்டதும் உங்களுக்கு தெரியாததல்ல. ஆண் ஒழுக்ககேடாக நடந்தால் சமுதாயம் காட்டிக்கொடுப்பதில்லை.இயற்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி ரதி!

என்னைப்பொறுத்தவரைக்கும் இயற்கையாகவே பொம்புளையளுக்கு ஒருசில இயலாமைகள் இருக்கு.அதை நீங்கள் முதலிலை ஒத்துக்கொள்ளோணும்.

அடுத்தது நீங்கள் ஓரு குறுகிய வட்டத்துக்குள் நின்று பரவலாக சிந்திக்க முயல்கின்றீர்கள்.

ஒரு பெண் தான் பிறந்ததில் இருந்தே தன் குடும்பத்தை சார்ந்தே வாழ்கிறாள்.சிறு வயதில் தந்தையும்,திருமணம் முடித்த பின் கணவனையும்,பிறகு பிள்ளைகளையும் சார்ந்தே வாழ்கிறாள்.அச் சார்ந்திருப்பதை தான் வேண்டாம் எனச் சொல்கிறேன்.

மேலைத்தேய பெண்களின் வாழ்க்கை முறை சிறந்தது என சொல்ல வருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி ரதி!

என்னைப்பொறுத்தவரைக்கும் இயற்கையாகவே பொம்புளையளுக்கு ஒருசில இயலாமைகள் இருக்கு.அதை நீங்கள் முதலிலை ஒத்துக்கொள்ளோணும்.

கள்ளுச்சாமி சீ ச் சி குமாரசாமி அடித்தார் பாரு ஆப்பு <_<:lol:

ஆனனப்பட்ட அம்மி கல்லையே தூக்க நாங்கள்தான் வேணும் பாருங்கோ :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எனது முதலாவது பதிவில் ஆண்கள் தான் பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை.

அப்ப பெண்கள்தான் பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் தானே .ஆகவே இது பெண்களால் பெண்களுக்கு இடப்பட்ட அடிமை விலங்கு இதில் ஆண்கள் தலையை உருட்டாதீர்கள் .

பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன்.

திருப்பி என்ன அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆண்களுக்கு சமம் என்று நிரூபிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்,இப்ப ஏதில் நீங்கள் ஆண்களுக்கு சமமாக இல்லை என்று தான் கேட்கிறேன்? உங்கள் கருத்திலே நீங்களே உறுதியாக இல்லையே.எப்ப பார்த்தாலும் உடைக்கணும் என்ற அழிவு சிந்தனைதான் எதாவது ஆக்கணும் என்று சிந்தனை இல்லை.

குற்றம் உள்ள மனம் குறுகுறுக்கும் அதே மாதிரி இங்கு உள்ள ஆண்களுக்கும் குறுகுறுத்தது போல கிடக்குது.

நியாயத்தை குற்றமுள்ளவன் தான் கதைக்கவேண்டும் என்று இல்லை,தர்மத்தை நிலைடாட்ட அதர்மத்தை அடக்க ஒரு மனிதன் கிழர்ந்தெழுந்தால் போதும்.நீங்கள் சொல்லும் பெண் அடிமை பாரதியாரின் காலத்தில் இருந்திருக்கலாம் அனால் அதே பாரதி இப்பொழுது இருந்திருந்தால் எம் இனப்பெண்களின் வீரம் பார்த்து

"பெண்ணே உனக்கேது அடிமை

உன் வீரம் சொல்லும் புதுமை

எதிரியை மீதி இட்டு வை

உன் வீரம் நிலைத்திட தேவை அவன்

பெண் அடிமை பேசும் பேய்கள் எல்லாம்

கண் இருந்தும் இல்லா குருடர்களே " என்று பாடியிருப்பார்

ஒரு பெண் தான் பிறந்ததில் இருந்தே தன் குடும்பத்தை சார்ந்தே வாழ்கிறாள்.சிறு வயதில் தந்தையும்,திருமணம் முடித்த பின் கணவனையும்,பிறகு பிள்ளைகளையும் சார்ந்தே வாழ்கிறாள்.அச் சார்ந்திருப்பதை தான் வேண்டாம் எனச் சொல்கிறேன்.

எல்லோரது வாழ்க்கையும் அதாவது ஆணினதும் பெண்ணினதும் வாழ்க்கையும் குடும்பம் என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே முழுமை பெறுகிறது இதில் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் சார்ந்தே வாழுகின்றனர் இதில் எங்கே அடிமை வாழ்வு. இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தனியா இருக்கவேண்டியது தானே.உங்களுக்கெல்லாம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (ஆணின் மீசை).

நாம் பிறந்ததில் இருந்து அம்மாவை சார்ந்திருக்கிறோம்,திருமணம் முடித்து ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் பிள்ளைகளையும் சார்ந்திருக்கிறோம்,எமது குடும்பம் சமூகத்தை சார்ந்திருக்கிறது,சமூகம் அரசை சார்ந்திருக்கிறது,அரசு உலக நாடுகளை சார்ந்திருக்கிறது.இது இயற்கை இது எல்லாம் வேண்டாம் என்றால் நீங்கள் யாருமே இல்லாத விண்வெளியில் உள்ள கோள் ஒன்றில் போய்தான் வாழவேண்டும்.சின்னப்பிள்ளை கதையாய் இருக்கு.

ஒரு ஆண் திருமணம் செய்யும் போது தன்னை விட அழகான பெண்ணை திருமணம் செய்வான் ஆனால் தன்னிலும் படித்த அல்லது தன்னை விட நல்ல வேலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டான் ஒன்று வேலையை விடச் சொல்வான் அல்லது அத் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான்.

இது ஆணின் விருப்பம் அவன் அழகானவளை தேடுவதும் அசிங்கமானவளோடு வாழ்வது அவன் விருப்பம் உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டுங்கள் இல்லையென்றால் விட்டுவிட்டு அடுத்ததை பாருங்கள் (கட்டிப்போட்டும் அதை தானே செய்யிறிங்கள்) .ஒவொருவருக்கும் தங்களின் விருப்பங்களை சொல்ல உரிமை இருக்கு அது எப்படி உங்களை அடிமைப்படுத்துவதாய் அமையும்?நீங்கள் ஊரில் ஏதோ கிராமத்தில் இருப்பிங்கள் ஆனால் கேட்கிறது கனடா மாப்பிள்ளை ஏன் ஊரில இருக்கிறவங்கள் எல்லாம் ஆண்கள் இல்லையோ.....அவர்களை கட்டினால் பிள்ளை பிறக்காதோ.அதில்லை காரணம்..........காரணம் என்னவென்றால் தான் சொகுசாக கனடாவில வாழனும் இது உங்களின் சுயநலம் நீங்கள் இப்படி எதிர்பார்க்கும் போது கனடாவில இருந்து வெளுத்து வாற நம்ம மாப்பிளை நீங்கள் படித்திருக்கணும் அழகாக இருக்கணும் என்று கேட்பதில் என்ன தப்பு.இவர்கள் இப்படி கேட்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் தானே வழங்குகிறீர்கள் .

ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தால் இச் சமுதாயத்தால் அவள் கெட்டுப் போனவளாகவே கருதப்படுகிறாள்.உங்களில் எத்தனை பேர் அப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பீர்கள்?

இந்த உலகத்திலே மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை.ஒரு பெண் தான் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தால் அவள் தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணுகிறாள் சமூகத்தில் இருந்து தானாக ஒதுங்கி கொள்கிறாள் ஆனால் அதைவிடுத்து தனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு என்று தேடதொடங்கினால் தனது நிலைமையை விளக்கினால் ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது நேரில் பார்த்தும் இருக்கிறன். நீங்கள் வன்புணர்வை பற்றி கதைக்கிறீர்கள் ..பெண்கள் கலியாணம் கட்டமுதல் ஒருவனை காதலிக்கவேன்டியது அவனோடு குடும்பம் நடத்துவது வீட்டுக்கு தெரியாமல் அப்புறம் உந்த கன்னி கற்பு உது எல்லாம் என்னவென்றே தெரியாதமாதிரி வீட்ட பார்க்கிற மாப்பிளையை கட்டவேண்டியது இதுவும் ஒரு வகையில் கற்பை இழந்தவள் கலியாணம் கட்டுகிறாள் துணிவாக, அதேபோல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவள் அவளும் கற்பை இழந்திருக்கிறாள் ஆனால் கலியாணம் கட்டப்பயப்படுகிறாள் இங்கு யாரில் தப்பு ? உங்களிடமே............. இரண்டு பேரும் நீங்களே .உங்களை நீங்கள் முதலில் மாற்றிக்கொண்டு சமூகத்தை பற்றியும் ஆண்களை பற்றியும் கதையுங்கள்

ஒரு ஆண் திருமணத்திற்கு முன் எத்தனை பேருடன் படுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் இச் சமுதாயம் ஒரு பெண் தப்பு செய்தால் மட்டும் அதை தூக்கி பிடிக்கிறது.[அதுக்காக பெண்கள் எல்லோரையும் தப்பு செய்ய சொல்லவில்லை] ஏன் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று தான் கேட்கிறேன்.

ம் இந்த ஆணுடன் படுப்பவளும் பெண்தானே "அவளும் பெண்தானே " . அதை பற்றி எல்லாம் கவலைப்பட்டா அந்த பெண் தப்பு செய்கிறாள் அவள் ஊர் என்ன சொன்னால் என்ன உலகம் என்ன சொன்னால் என்ன எனக்கு இந்த நிமிடம் தான் முக்கியம்.இதுக்குள்ள பாட்டு வேற "இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா "

எல்லா தப்பும் செய்கும் போது ஓன்றும் தெரியாது செய்த பின்புதான் தலையில கைவைக்கிறது.....

பெண்கள் என்ன தான் ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தாலும் விகிதாசார அடிப்படையில் ஆண்களை விட‌ குறைவாகவே உள்ளது.பெண்கள் ஏதாவது சாதனை செய்தால் அதை எங்கே எதிர்க்கலாம்,அவமானப் படுத்தலாம் என்பதிலே இச் சமுதாயம் கண்ணும் கருத்துமாய் இருக்கும்

அரசியலில் 10 விழுக்காடு பெண்களுக்கு தான் விபசாரம் செய்யத்தெரியும் போல ஆகவே அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். பெண்களுக்கள் சில பேர் இந்த உடலை காட்டியே பலதை சாதிக்க தெரிந்தவர்கள்.உந்த பிரமன் மட்டும் எண்ட கையில கிடைத்தான் ...........யாராவது கண்டால் சொல்லுங்கோ விபசாரியை இல்லை பிரமனை.பெண்களை ஆண்கள் அவமானப்படுத்தும் என்று நினைக்கிறதில்லை அப்படி நினைக்கமுதல் அவன் காலை பிடிச்சிட்டான் கையை பிடிச்சிட்டன் என்று ஊரை கூப்பிட்டு அவனை கீழே தள்ளிவிட்டு அவனின் இடத்துக்கு நீங்கள் வந்திடுவிங்கள் இது தான் சில பெண்களின் குணம்,எங்க போனாலும் குணத்தை விடமாட்டிங்கள். தங்களை தாங்களே பதவிக்காக பணத்துக்காக அவமானப்படுத்தவேன்டியது இதுக்கிடையில நாங்கள் அவர்களை அவமானப்படுத்திறமாம்.

ஒரு பெண்ணை அன்பாலே,பாசத்தாலே அடக்குதல் என்பது அவளது திறமையை கட்டிப் போடுதல்.என்ர குஞ்சு செல்லம் நீ இந்த வேலைக்கு[தன்னிலும் கூடிய வேலைக்கு] போனால் எனக்கு தானடி அவமானம் என சொல்லி அன்பாலே அவளைத் தடுத்தல்.

ஒ ஒ நீங்கள் எல்லாம் இப்ப செல்லம் குஞ்சு என்று சொன்னால் சொல்லு கேட்பிங்களே எந்த உலகத்தில இருக்கிறிங்கள் இப்பிடி எல்லாம் சொன்னால் ரெண்டு கெட்ட வார்த்தையால திட்டிட்டு பெண்கள் தண்ட வேலையைத்தான் செய்வார்கள்.கண்ணை காதை திறந்துகொண்டு வாழபாருங்கோ.

பெண்ணுக்கு எள்ளில் செய்த சாப்பாடு அந்த 3 நாட்களுக்கு மட்டும் கிடைக்கும் ஆனால் ஆண்களுக்கு? உங்களுக்கே தெரியும்.

பெண்ணுக்கு 3 நாள் வருது (சாப்பாடு) ஆணுக்கு 30 நாள் வருதே,தலைக்கறி எனக்கு தா என்று வாங்கி சாப்பிடுற கூட்டமப்பா நீங்கள்,எந்த வீட்ட ஆணுக்கு பெண்ணுக்கு என்று தனியாக சமைக்கிறார்கள்,பெண்களுக்கு தான் சாப்பாட்டு விசயத்தில கொஞ்சம் கூடுதல் கவனிப்பு,உந்த வீட்ட இருக்கிறதுகளை கேட்டால் அவள் பலவீனமாக இருக்கிறாள் முட்டையை குடு உளுத்தம் கழியை குடு அதை குடு இதை குடு என்று அவள் 10 வருசத்துக்கு அப்புறம் பிள்ளை பெறப்போகிறதுக்கு அப்பவே ஆரம்பிச்சிடுவினம்.உந்த பிள்ளைக்கெல்லாம் ஆண்கள் தான் காரணம் என்று எங்களுக்கு ஏதாவது தாறிங்களே சூடையிண்ட தலைதான் தாறிங்கள்,சும்மா கதைக்கோணும் என்று கதைக்காதேங்கோ

நான் இச் சமுதாயம் என குறிப்பிட்டது பெண்களையும் சேர்த்து தான்.ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிமையாக வைத்திருப்பதன் காரணம் ஆண்கள் கோழையாக இருப்பது தான்.அத்தோடு ஆண்களுக்கு சுயமாக முடிவு எடுக்க தெரியாததும் ஒரு காரணம் ஆகும்.

அப்ப பெண்கள் ஆண்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களோ,அந்த பெண்ணும் பெண்தானே அப்ப உங்களுக்கு பெண்ணால் பெண்ணடிமை தான் இருக்கு ஆணால் பெண்ணடிமை இல்லை என்று சொல்ல வாறிங்களோ.............ஒன்றை உறுதியாய் சொல்லமாட்டிங்க்களோ? ஓம் ஆண்கள் கோழை என்று பெண்களின் முந்தானைக்குள்ள தானே ஒளிந்துகொண்டு திரியிறம் ....நாம் கோழையா வீரனா என்பதை ஒரு வீரனிடம்தான் காட்டுவமே தவிர

உங்களிடம் எல்லாம் நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை,ஆண்களுக்கு சுயமாக முடிவு எடுக்கதெரியாதா? கடவுளே இந்த பிள்ளையை என்ன செய்ய ........ ஆண்கள் எடுக்கும் எல்லா சரியான முடிவுகளையும் குழப்ப முயற்ச்சிப்பவளே பெண்கள்,ஆண்கள் எடுக்கும் முடிவுகளில் தங்களது ஆசையை திணித்து அவனது விருப்பு வெறுப்புக்களை ஓரம் கட்டி தனது முடிவாக காட்ட முயல்வதே பெண்கள்,ஆண்களும் உங்கள் முடிவுக்கு செவிசாய்க்கிறார்கள் எதற்காக ? தங்களுக்கு முடிவு எடுக்க தெரியாது என்பதற்காக அல்ல இதனால் ஏதாவது பிரச்சனை வந்து குடும்பம் பிரிந்துவிடக்கூடதே என்பதற்காகவே ...ஆண் பிள்ளையை பற்றி யோசிப்பான் அவர்களது எதிர்காலத்தை பற்றி யோசிப்பான் அனால் பெண்கள் சிறிய பிரச்சனைக்கு கூட விகாரத்து தான் முடிவு அவர்களுக்கு கொஞ்ச நாளில் எல்லாம் அலுத்துபோடும் போல.ஆண்கள் உங்கள் முடிவு பெரிய சரியான முடிவு என்று ஏற்றுக்கொள்ளவில்லை வேறு வழியில்லாமல் சமாதானமாக போவதற்காகவே ஏற்றுக்கொள்கிறார்கள்,ஆண்கள் முடிவெடுக்க நீங்கள் எப்பொழுது அனுமதிக்கிறீர்கள் சொல்வது பெண் அடிமை என்று அனால் செய்வது எல்லாம் ரவுடி தனம்.

அத்தனையும் யதார்த்தத்தைத் தழுவிய கருத்துக்கள். திறமையான சிந்திக்க வைக்கக் கூடிய அடிப்படைகள் நிறைந்த கருத்துக்கள். பெண்கள் சிந்திப்பார்களா..??! :lol:<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் சாதனை செய்கிறார்கள் நான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் ஆண்களின் சாதனையோடு ஒப்பிடுகையில் பெண்களின் சாதனைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று தான் சொல்கிறேன்.அழிவது மட்டும் பெண்ணாலே அல்ல ஆவதும் பெண்ணாலே தான்.

அண்ணா நீங்கள் புலம் பெயர் நாட்டில் இருப்பதால் நீங்கள் புலம் பெயர் நாட்டு மக்களை வைத்தே கருத்துகளை எழுதுகிறீர்கள் ஆனால் நான் பொதுவாக பெண்களின் பிரச்சனை குறிப்பாக ஈழத்தில் இருக்கும் பெண்களை வைத்தே முக்கியமாக எனது கருத்தினை சொன்னேன்.சார்ந்திருத்தல் என்பது முக்கியமாக பொருளாதார ரீதியாக சார்ந்திருத்தல்.புலத்தில் அந்த பிரச்சனை இல்லை பெண்கள் அநேகமாக வேலை செய்கிறார்கள்,பென்சன் வரும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசே பார்த்துக் கொள்ளும் ஆனால் ஈழத்தில்? கணவனில்,பிள்ளைகளில் தங்கியிருக்கும் பெண்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஏதாவது நடந்தால் அப் பெண்களின் வாழ்க்கை என்ன ஆவது அதனால் தான் சொல்கிறேன் ஆண்கள் உழைப்பார்கள் என இருக்காமல் பெண்களும் படித்து வேலைக்கு போக வேண்டும்.[ஈழத்திலும் நிலைமை தற்போது மாற்றம் அடைந்து வருகிறது].

நான் கனடாவில் தான் இருக்கிறேன் கனடா மாப்பிள்ளை தான் கேட்டேன் என உங்களுக்கு எப்படி தெரியும்? நான் எழுதியது பொதுவான ஆண் சமுதாயத்தை பற்றி தான் ஆனால் நீங்கள் அதற்கு பதில் கூற முடியாமல் அவனின்ட விருப்பம் இவனின்ட விருப்பம் என விதண்டவாதத்தில் எழுதியிருக்கிங்கள்.அப்படி பார்த்தால் திருமணமே அவர் அவரது விருப்பம் தான் ஆனால் பொதுவாய் நீங்கள் எடுத்து பார்த்திர்கள் என்றால் ஆண்கள் பெரும்பாலும் தன்னிலும் படித்த,தன்னை விட நல்ல வேலையில் இருக்கும் பெண்ணை மணம் முடித்தது குறைவு.

//அரசியலில் 10 விழுக்காடு பெண்களுக்கு தான் விபசாரம் செய்யத்தெரியும் போல ஆகவே அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். பெண்களுக்கள் சில பேர் இந்த உடலை காட்டியே பலதை சாதிக்க தெரிந்தவர்கள்//

பார்த்தீங்களா நீங்கள் மேலே எழுதியவற்றில் இருந்தே நீங்கள் என்ன மாதிரி ஆள் எனக் கணிக்கலாம்.நான் உதாரணத்திற்கு அரசியலை காட்டினேன் உடனே நீங்கள் அரசியல் செய்யும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என முடித்திருக்கிறீர்கள்.

கடைசியாக எல்லாவற்றையும்[எதுவும் தப்பு நடந்தால்]பெண்களை சுட்டிக் காட்டி விட்டு தப்பித்து கொள்பவர்கள் தான் ஆண்கள் என்பது உங்கள் எழுத்தில் இருந்தே தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.