Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோப்பு கரணம் = Super Brain Yoga

Featured Replies

கிகி... நல்ல ஒரு யோகா. நல்லகாலம் இதைக் கண்டுபிடிச்சது ஒர் வெள்ளைக்காரன் எண்டு சொல்ல இல்லை. எதையும் வெள்ளைக்காரன் சூப்பர் எண்டு சொன்னாப்பிறகுதான் அதன் மகிமை விளங்கிது.

ஊரில வாத்திமார் தண்டனைக்காக மாணவர்களிற்கு வக்கிர மனத்துடன் கொடுக்கும் பயிற்சியை வெள்ளைக்காரன் சூப்பர் யோகா எண்டுற பெயரில பணம் சம்பாதிக்க பயன்படுத்துறான். வெள்ளைக்காரன் எங்களைவிட வேகமாய் முன்னுக்குபோக இதுவும் ஒரு காரணம்.

நான் சில வருடங்களுக்கு முன்னம் ஓர் பாடல் பயிற்சி பட்டறைக்கு போய் இருந்தன். அதில விரிவுரை செய்த ஆங்கிலப் பாடகர் தாங்கள் தற்போது தென்னாசியாவில இருந்து இறக்குமதி செய்த பாடல் பாடும்போது கவனிக்க வேண்டிய மிகவும் ஒரு நவீன நுட்பமாம் எண்டு ஊர் - இந்தியப் பகுதிகளில பாடுற ஒரு பாணியை - அசைவை - பாவத்தை சொல்லித் தந்தார். சிரிப்பாய் இருந்திச்சிது.

ஊரில எண்டால் வெறும் பரமேளம்.. வெளிநாட்டில எண்டால் அது அருமையான ஒரு இசைக்கருவி. இதுதான் உலகம்.. எங்கட பலம், எங்கட மகத்துவம் எங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே!

குளக்காட்டானை கனகாலமாகக் காணவில்லை. அப்ப நீங்களும் சூப்பர் யோகா செய்யுறதில Busyஆய் இருக்கிறீங்களோ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து சொன்னால் தான் அதன் தார்ப்பரியம் புரியும். இன்றேல்.. எந்த ஆராய்ச்சியுமின்றி.. நாகரிகத்துக்கு அப்பால் ஆனது என்று நாங்களே எங்களளவில் தீர்மானித்து.. மூட நம்பிக்கை என்று தூக்கி எறிஞ்சிடுவம்..! போதாக்குறைக்கு அந்த மத அனுட்டானங்களை வைச்சு மதத்தையும் பழிப்பம்..! அதை செய்யுறவையை புரட்சியாளர்கள் என்று போற்றி.. பொன்னாடை போர்ப்பம். இதை விட நாங்க எமது சமூகத்துக்கு உருப்படியா செய்தது என்னத்தை..??! :icon_idea:

முன்னொரு விவாதத்தில் எமது மத அனுட்டானங்களின் பின்னால் விசேட அம்சங்கள் பொதிந்திருக்கின்றன என்ற கருத்தை முன் வைத்த போது.. அதை விதண்டாவாதமாக்கிக் கொண்டு.. சிலர் மத எதிர்ப்புக் கருத்துக்களை அதில் தூவிவிட்டுச் சென்றனர். இதில் படித்த பட்டம் பெற்ற மேதைகளும் அடங்கும். இவர்கள் என்ன படிப்பை படிச்சு என்ன பட்டத்தை பெறுகிறார்களோ எனக்குப் புரியல்ல..! எம்மிடம் எம்முன்னோர் கற்றுத்தந்த பல பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கையின் பெயரால் அருகிவிட்டன. ஆனால் நிச்சயம் அவற்றை அறிவியல் ரீதியாக அணுகி அவற்றை எமது சமூகத்துக்கு மீள இனங்காட்ட வேண்டிய கடப்பாட்டை இது எடுத்துக்காட்டி நிற்கிறது.

எதிர்கொண்டவற்றை எல்லாம் எதிர்ப்பவன் புரட்சியாளன் கிடையாது. ஒன்றை சரியான காரண காரியங்களோடு ஆய்வுக்குள்ளாக்கிய தரவுகளோடு எதிர்ப்பவனே சரியான மாற்றத்துக்கு வழிகோலக் கூடியவன்.

காணொளி இணைப்புக்கு நன்றி குளக்காட்டான்.

Edited by nedukkalapoovan

ஏன் நெடுக்ஸ் எப்ப பார்த்தாலும் மதம் மதம் என்று அலம்பிக்கொண்டு... குளக்காட்டான் இதில மதம் பற்றி ஏதாவது எழுதினவரோ இல்லையே? பிறகு ஏன்? :lol:

ஓஓ இப்படி எழுதினா யாராவது வம்புக்கு வருவினம் பிறகு ஒரு 15 பக்கத்துக்கு இங்க சண்டைபிடிக்கலாம் என்றா? :lol: சம்பந்தப்பட்டவையோட ஏதாவது மனஸ்தாபம் என்றா புதுசா ஒரு தலைப்பை திறந்து சண்டை பிடிக்கலாமே? :icon_idea: அதை விட்டுட்டு கனகாலத்துக்கு பிறகு வந்த குளக்காட்டானை ஏன் ஓட வைக்க ஆயத்தமாகிறீங்கள்.. :lol:

தோப்புக்கரணத்துக்கும் விநாயக வழிபாட்டுக்கும் தொடர்பு இருக்குத்தானே..!

நீங்கள் எனது கருத்தை மேலோட்டமாகப் பார்க்கிறீங்க. அது தவறு. இதில் யாரையும் குறிப்பிட்டு சாட வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். முன்னர் பல விவாதங்களில் எமது மூதாதையர் கற்றுத்தந்த பழக்க வழக்கங்கள்.. இலக்கிய குறிப்புக்கள்.. அவை இனங்காட்டும் வரலாற்று அம்சங்கள் அறிவியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என்ற கருத்தை பல தடவைகள் முன்வைத்த போது அதை எள்ளி நகையாடியோரும் இங்குளர். அவர்கள் தமது எண்ணங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற இங்கு அதை எழுதக் காரணம்..!

குளக்காட்டானை சொல்லேல்ல. அவர் மதங்களை சகட்டு மேனிக்கு எதிர்ப்பவராக இனங்காணப்பட்டவரும் அல்ல.

தோப்புக்கரணம் என்பது வழி வழியாக விநாயக வழிபாட்டுடன் கடத்தப்பட்டு வந்தது. அதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறிக் கொண்ட போதிலும் உண்மையான அதன் நோக்கம் உடற்பயிற்சியே... என்பது இப்போது அறிவியல் ரீதியாகவும் உணரப்படுகிறது..!

நாம் இதை ஏலவே கற்று இருக்கிறோம். ஆனால் அங்கீகரித்திருக்கிறோமா..??! அல்லது இன்னும் தெளிவாக ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா.. இல்லை..!

மதத்தை நிந்திப்பதற்கு செலவு செய்த நேரத்தில் எத்தனை சதவீதத்தை அது கொண்டுள்ள காரியங்களுள் அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு செலவிட்டிருக்கிறோம். என்பதுதான் எனது ஆதங்கம்..! :lol:

Edited by nedukkalapoovan

சரி ஓகே நெடுக்ஸ்.. :icon_idea:

குளக்காட்டான் நீண்ட நாளைக்கு பிறகு பார்க்கிறேன்.. வரு வருக நலமா?!

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை மட்டும் தான் தோப்பு கரணம் போடுறனான். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிகி... நல்ல ஒரு யோகா. நல்லகாலம் இதைக் கண்டுபிடிச்சது ஒர் வெள்ளைக்காரன் எண்டு சொல்ல இல்லை. எதையும் வெள்ளைக்காரன் சூப்பர் எண்டு சொன்னாப்பிறகுதான் அதன் மகிமை விளங்கிது.

ஊரில வாத்திமார் தண்டனைக்காக மாணவர்களிற்கு வக்கிர மனத்துடன் கொடுக்கும் பயிற்சியை வெள்ளைக்காரன் சூப்பர் யோகா எண்டுற பெயரில பணம் சம்பாதிக்க பயன்படுத்துறான். வெள்ளைக்காரன் எங்களைவிட வேகமாய் முன்னுக்குபோக இதுவும் ஒரு காரணம்.

நான் சில வருடங்களுக்கு முன்னம் ஓர் பாடல் பயிற்சி பட்டறைக்கு போய் இருந்தன். அதில விரிவுரை செய்த ஆங்கிலப் பாடகர் தாங்கள் தற்போது தென்னாசியாவில இருந்து இறக்குமதி செய்த பாடல் பாடும்போது கவனிக்க வேண்டிய மிகவும் ஒரு நவீன நுட்பமாம் எண்டு ஊர் - இந்தியப் பகுதிகளில பாடுற ஒரு பாணியை - அசைவை - பாவத்தை சொல்லித் தந்தார். சிரிப்பாய் இருந்திச்சிது.

ஊரில எண்டால் வெறும் பரமேளம்.. வெளிநாட்டில எண்டால் அது அருமையான ஒரு இசைக்கருவி. இதுதான் உலகம்.. எங்கட பலம், எங்கட மகத்துவம் எங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே!

உண்மைதான் மாப்பு!

எங்கடை சைவசமய பழக்கவழக்கங்களெல்லாம் இயற்கையோடை அண்டினதுமட்டுமில்லை தேகாரோக்கியத்துக்கும் உன்னதமானது.இதை இனி ஒவ்வொண்டாய் புட்டுப்புட்டு வைக்கேலாது.ஏனெண்டால் எங்கடையள் இப்ப அவசர உலகத்திலை வாழுதுகள்.வெள்ளைக்காரன் சொன்னால்த்தான் கேக்குதுகள்.

மாடுசொன்னால் கேக்காது மணிகட்டினமாடு சொன்னால்த்தான் எங்கடை சனம் கேட்கும்.

போனகிழமை என்னோடை வேலை செய்யிற வெள்ளை ஒண்டு மஞ்சளைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்லுது............... என்ன கொடுமையடா முருகா? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கோயிலை மட்டும் தான் தோப்பு கரணம் போடுறனான். <_<

என்னைப்போன்ற ஆண்சிங்கங்களை பார்த்து நக்கல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன் நெற்றியில் குட்ட உள்ளே அமிர்தம் இளகும் பின் காதின் சோணையை நுள்ளிப் பிடிக்க மூளை சிலிர்த்து இயங்கும். அத்துடன் முழங்கால்வரை மடித்து நன்றாக குந்தி யெழும்ப உடம்பின் அத்தனை நரம்புகளும் தொழிற் படும்! இப்படி தினமும் காலை. மாலை மும்முறை செய்யின் உடற் சுறுசுறுப்புக்கும் உணவு செரிமானத்துக்கும் மிக மிக நல்லது!!!

இணைப்புக்கு நன்றி குளக்காட்டான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளக்காட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா சொல்லி தொப்புக்கரனம் போட்டால் .......கடவுளை கும்பிட்ட மாதிரியும் இருக்கும் .....உடம்புக்கும் நல்லம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.