Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவனுக்கு கருவாடு அனுப்பும் யாழ்ப்பாணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னித் தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறித்து.. அவர்களின் உயிர் வாழ்வை நிராகரித்து நிற்கும் சிங்கள பேரினவாத தேசத்திற்கு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணேசின் ஏற்பாட்டின் கீழ் சிறீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏ 9 நெடுஞ்சாலை வழியாக கருவாடு, இறால் , வெங்காயம், பீற்றூட் போன்ற பொருட்கள் சிங்கள தேசத்திற்கு புரதச் சத்தூட்டி ஆடம்பரமாக வாழ அனுப்பப்படுகின்றனவாம்.

ஆனால் வன்னியில் வாழும் மக்களை இதே சிங்கள தேசம் பட்டினி போட்டுக் கொல்வதை இந்த யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஒரு தடவை தானும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்துக் கருத்துக் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய போதிய கடல் வாழ் புரத உணவுகள் இல்லாத நிலையில் ஒட்டுக்குழுக்களின் இராணுவத்தின் வியாபார நோக்கம் கருதி இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்க அதிபர் ஊக்கு விக்கிறாரா அல்லது உண்மையில் யாழ்ப்பாணத்தில் தேவைக்கதிகமான உற்பத்தி காரணமாக இவற்றை சிங்கள தேசத்திற்கு ஏற்றுமதி செய்கிறார்களா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்திலோ அத்தியாவசிய பொருட்களுக்கு அசுர விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடலுணவுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையி கடல் வயலத்தடைச் சட்டங்கள் அமுலில் உள்ள நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களால் விளைச்சல் நிலங்கள் விழுங்கப்பட்டுள்ள நிலையில் எப்படி யாழ்ப்பாணத்தில் இருந்து உற்பத்திகளை சிங்கள தேசத்துக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்படுகிறது என்பதும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

உலகெங்கும் சிறீலங்காப் பொருட்களை புறக்கணிக்க தமிழர்கள் முனையும் வேளை.. இன்றைய சூழலில் சிங்கள தேசத்திற்கு யாழ்ப்பாண உற்பத்திகளை அனுப்புவதன் நோக்கம் என்ன.

இதே சிங்கள தேசத்தின் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜேதுங்கா யாழ்ப்பாணத்தில் என்ன இருக்கிறது தமிழர்கள் சிங்களவர்கள் எனும் பெரு விருட்சத்தை பற்றி வளரும் கொடிகள் என்று வர்ணித்திருந்தவர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

யாழ்ப்பாண மக்களின் பொருண்மியம் இதனால் பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறது என்றால் அது சுத்தப் பொய். காரணம் யாழ்ப்பாண மக்களின் உற்பத்திகளை இராணுவ மற்றும் ஒட்டுக்குழு இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றைத் தென்னிலங்கைக்கு அனுப்பி கொள்ளை இலாபம் ஈட்டுவதையே இதன் மூலம் செய்ய உள்ளனர். இதையே கடந்த காலங்களிலும் செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்:

Jaffna food produces to be sent to South

Jaffna Government Agent (GA) informed Wednesday that 9 lorries will take a consignment of local food produces including dried fish, onions, beetroot and prawns to South Sri Lanka Thursday through A9 land route. Fisheries society sources expressed concern that this arrangement will raise the price of fish that is in heavy demand in the peninsula, affecting the consumers. The GA, however, said that this measure is being taken to increase marketing opportunities for the local products.

48,250 gm onions, 1,300 kg beetroot, 5,000 kg prawns and 5,000 kg dried fish are to be sent to the south Thursday.

9 lorries of the 22 that brought food commodities to Jaffna peninsula from Vavuniyaa Tuesday will be taking the local food products Thursday.

Dried food items for relief supply from the Commissioner of Essential Services were brought in 20 lorries while 2 carried fruits to private traders in the peninsula.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28691

Edited by nedukkalapoovan

சிங்களவர்கள் புலம் பெயர் தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களில் இருந்து உடுதுணி வரைக்கும் அனுப்பி வைப்பதாலும், புலம் பெயர் தமிழ் மக்களும் தம் பங்குக்கு சிங்களவர்களின் பொருளாதார பலத்தினை மேலும் கூட்ட அங்குள்ள வங்கிகளில் பணம் (அன்னிய செலாவணி) அனுப்புவதாலும் யாழ் மக்களும் கிழக்கு மக்களை போல உணவு அனுப்ப தொடங்கி விட்டார்கள் போல....

(பி.கு: விற்பனை செய்கையில் என்று போட்டால் எந்த ஒரு 'உணர்ச்சியூட்டலும்' இல்லை என்பதால் 'அனுப்பி வைத்தல் எனும் பதத்தினை பயன்படுத்துகின்றேன்),

யாழில் இருப்பவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் சொல்வது போல் ஒரு நிலமை இருக்கத்தான் செய்கின்றது ஆனால் இந்த நிலமை கடந்த சில காலங்களாக மாற்றம் பெற்றுள்ளது என்றே சம்பவங்கள் ஊடாக நம்பப்படுகின்றது. மகிந்த வருகையோடு யாழ்பாணத்தில் நடந்த ஆர்பாட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்கள் அதைத் தொடர்ந்த கடத்தல் காணமல் போதல் போன்ற நிகழ்வுகளால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். தற்போதய நிலவரப்படி தென்னிலங்கை மற்றும் கிழக்கில் தமிழர்கள் மீதான கெடுபிடி யாழில் மிக குறைந்துள்ளது. சிங்களத் தலமைகள் தமது இராணுவ அதிகாரமூடாக மக்களை முடிந்தளவு மாற்றியுள்ளனர். சிறைச்சாலை என்பது உண்மை ஆனால் அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் களையப்பட்டு அதுவே அவர்களுக்குரிய வாழ்வு என்பது ஏற்க வைக்கப்பட்டுள்ளது. யாழ் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை அதே நேரம் அதை நாங்கள் பார்க்கும் கண்ணோட்டத்துக்கும் யாழில் வசிக்கும் மக்கள் பார்க்கும் கண்ணோட்டத்துக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர்கள் அந்த சிறைச்சாலைக்குள்ளாகவே வாழ விரும்புகின்றார்கள் அல்லது அவர்கள் சம்மந்தப்படாமல் அகற்றப்பட்டால் நல்லது என்ற நிலையில் உள்ளனர். ஒரு சமூகத்தின் போராட்டத்தை முறியடிப்பது நிரந்தர தீர்வாகாது போராட்ட குணத்தை அகற்றுவதுதான் தீர்வாகும் என்ற அடிப்படையில் யாழில் சிங்களம் ஒட்டுக்குழு உதவியுடன் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. இதே நேரம் போராட்ட குணத்தை வளருங்கள் சிறையை உடைக்க முற்படுங்கள் என்று நாம் எதுவும் கூற முடியாது. அதற்கான அடிப்படைத் தகுதியும் எமக்கில்லை. யாழ் மக்களே கிழர்ந்து எழுங்கள் என்று இங்கிருந்து உசுப்பி விடுவதால் அங்கு பறிக்கப்படும் உயிர்களை எம்மால் காப்பாற்றவும் முடியாது. நாம் எமது உரிமைக்காக உலகில் எங்கெங்கு இருக்கின்றோமோ அங்கு இருந்தபடி தொடர்ச்சியாக போராடுவது ஒன்றே வழி. இதை பார்த்து அந்த மக்களும் தம்மை பாதுகாத்தபடி மீள்வதற்கு ஏதோ ஒரு முயற்ச்சி எடுப்பார்கள்.

உள்ளூர் உற்பத்திப் பொருள்களுடன் 9 லொறிகள் இன்று கொழும்பு புறப்படுகின்றன

[12 மார்ச் 2009, வியாழக்கிழமை 7:25 மு.ப இலங்கை]

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருள்களுடன் நேற்று முன்தினம் வந்து சேர்ந்த லொறிகளில் ஒன்பது லொறிகள் உள்ளுர் உற்பத்திப் பொருள்களுடன் இன்று காலை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளன.

ஏ9 பாதை ஊடாக 22 லொறிகள் அத் தியாவசியப் பொருள்களுடன் நேற்று முன் தினம் இரவு நாவற்குழிக் களஞ்சியத்தை வந் தடைந்திருந்தன. அந்த லொறிகளில் இருந்து பொருள்கள் இறக்கி முடிந்ததை அடுத்து அவை இன்று கொழும்பு நோக்கி புறப்படவுள்ளன.

அவற்றில் 9 லொறிகளில் 48,250 கிலோ வெங்காயம், 1300 கிலோ பீற்×ட், 5000 கிலோ றால், 5000 கிலோ கருவாடு ஆகி யன ஏற்றிச் செல்லப்படுவதாக அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார்.

நன்றி உதயன் இணையம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை இடைவழியில் பறித்து வன்னி மக்களுக்கு உணவாக்கினால் புண்ணியமாப் போகும். திண்டு கொழுத்து சிங்களவன் அடிக்கிறது காணாதென்று.. கருவாடு இறால் வேற அனுப்பினம்..! :unsure::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய எல்லோருக்கும் தத்தம் உயிர் மற்றும் வாழ்க்கை மேலேயே கவனம்.....!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய எல்லோருக்கும் தத்தம் உயிர் மற்றும் வாழ்க்கை மேலேயே கவனம்.....!!

வன்னி மக்களுக்கும் அந்த உரிமை இருக்குத்தானே. அப்ப அவர்கள் இவற்றை வழியில் மறிச்சு பறிச்சுக் கொண்டு போய் சாப்பிடுறதில தப்பே இல்ல. வன்னி மக்கள் செய்ய வேண்டியது.. இவற்றைப் பறித்து தங்களிடத்துக்கு கொண்டு போய் பகிர்ந்தளிப்பதுதான்.

மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் போடாது. புடுங்க வேண்டியதுதான். அநியாயத்தை அதன் வழியில போய் தான் நியாயத்துக்குள்ள வர வைக்க வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகட்டும் விடுங்களேன் ......

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களுக்கும் அந்த உரிமை இருக்குத்தானே. அப்ப அவர்கள் இவற்றை வழியில் மறிச்சு பறிச்சுக் கொண்டு போய் சாப்பிடுறதில தப்பே இல்ல. வன்னி மக்கள் செய்ய வேண்டியது.. இவற்றைப் பறித்து தங்களிடத்துக்கு கொண்டு போய் பகிர்ந்தளிப்பதுதான்.

மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் போடாது. புடுங்க வேண்டியதுதான். அநியாயத்தை அதன் வழியில போய் தான் நியாயத்துக்குள்ள வர வைக்க வேண்டும்..! :icon_idea:

புடுங்க எவ்வளவோ இடங்கள் இருக்க..............

ஏன் யாழ். மக்களின் வயித்தில் அடிக்கின்றீர்கள்

அதுசரி

அப்போ யாழ். மக்கள் எப்படி தங்கள் வயித்துச்சாப்பாட்டை பெறுவது என்று சொல்லமுடியுமா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புடுங்க எவ்வளவோ இடங்கள் இருக்க..............

ஏன் யாழ். மக்களின் வயித்தில் அடிக்கின்றீர்கள்

அதுசரி

அப்போ யாழ். மக்கள் எப்படி தங்கள் வயித்துச்சாப்பாட்டை பெறுவது என்று சொல்லமுடியுமா????

யாழ் மக்கள் 86 இல் இருந்து 95 வரை கருவாடும்.. இறாலும் சிங்களவனுக்கு அனுப்பி வைச்சோ.. வயிறு வளர்த்தவ. யாழ் மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய உற்பத்திகளைச் செய்ய முடியாத நிலையில்.. சிங்களவனுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவை என்ன என்பதுதான் கேள்வி..???!

கடல் வலய பாதுகாப்புச் சட்டங்கள்.. உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று எல்லாம் நடைமுறையில் இருக்க.. உற்பத்திக்கான வளப்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டு இருக்க.. வறுமையில் உள்ள மக்களால் எண்ணிப் பார்க்க முடியாத விலையில் கடலுணவுகள் இருக்க.. சிங்களவனுக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன..???!

இதனால் யாழ் மக்கள் நன்மை பெறவில்லை. தீமைதான் அடைகின்றனர். இன்னும் இன்னும் விலைவாசி ஏறப் போகிறது..??! அதை யார் கட்டுப்படுத்துவது. ரம்புட்டானும்.. மங்குஸ்தானும்.. அனுப்பி வைச்சு சிங்கள வியாபாரிகளுக்கு வழிகாட்டுகிறார்களா.. தமிழ் மக்களின் வயிறு வளர்க்க முயற்சிக்கிறார்களா..???! :icon_idea::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்கு நாங்கள் உற்பத்தி செய்ய பொருட்களை அனுப்பினால் தானே அவங்கள் வந்து இடுப்பு டான்சு ஆடுவாங்கள் அப்பதானே எங்கள் நெஞ்சு குளிந்து போகும் :icon_idea:

[பூ நகரி கைப்பற்ற விழா எடுத்த நாங்கள் நாளை முல்லைதீவு கைப்பற்றபட்டால் யாழ் தொடக்கம் தென் பகுதிவரை நடைபயணம் மேற் கொள்வோம்] :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளி உலகுக்கு படம் காட்ட........" எல்லாம் வழமைக்கு வந்து விட்டது ஏற்றுமதி இறக்குமதி உட்பட எலாம் நடக்குது". என்று

படம் காட்ட தான் இந்த அனுப்புதல்கள்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளைக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது

அவன் பள்ளிக்கூடம் நாளை போறத்துக்கு என்னவாவது செய்யவேணும் என்ற நிலை ஒரு தகப்பனுக்கு ஏற்படும்போது.....

கருவாட்டை சிங்களவனுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று சிந்திப்பான் என்று எனக்குத்தோன்றவில்லை

ஆனால்

வெளிநாட்டிலுள்ள நாங்கள் சிங்களவனின் சாமான்களுக்கு பதிலாக வேறு ஏதையாவது பயன்படுத்தலாம்

அது யாழ். மக்களின் புறக்கணிப்பை விட 1000 மடங்கு பயனனளிக்கும்

நiமுறைக்கும் சாத்தியம்

செய்வோமா???

யாழ் மக்கள் 86 இல் இருந்து 95 வரை கருவாடும்.. இறாலும் சிங்களவனுக்கு அனுப்பி வைச்சோ.. வயிறு வளர்த்தவ

எத்தனையாம் ஆண்டிலை நீங்கள் இருக்கிறீர்கள்

யாழ். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இப்ப இருக்கினம்

அதுக்கும் அவர்கள்தான் காரணம் என்று தப்பிக்க பார்க்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

அதுசரி

யாழ். மக்கள்மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு தங்களுக்கு.............

கோயிலுக்கு போனாலும் திட்டுகின்றீர்கள்

உள்ளுக்க இருந்தாலும் திட்டுகின்றீர்கள்

இறக்குமதி செய்தாலும் திட்டுகின்றீர்கள்

ஏற்றுமதி செய்தாலும் திட்டுகின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளைக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது

அவன் பள்ளிக்கூடம் நாளை போறத்துக்கு என்னவாவது செய்யவேணும் என்ற நிலை ஒரு தகப்பனுக்கு ஏற்படும்போது.....

கருவாட்டை சிங்களவனுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று சிந்திப்பான் என்று எனக்குத்தோன்றவில்லை

ஆனால்

வெளிநாட்டிலுள்ள நாங்கள் சிங்களவனின் சாமான்களுக்கு பதிலாக வேறு ஏதையாவது பயன்படுத்தலாம்

அது யாழ். மக்களின் புறக்கணிப்பை விட 1000 மடங்கு பயனனளிக்கும்

நiமுறைக்கும் சாத்தியம்

செய்வோமா???

யாழ் மக்கள் 86 இல் இருந்து 95 வரை கருவாடும்.. இறாலும் சிங்களவனுக்கு அனுப்பி வைச்சோ.. வயிறு வளர்த்தவ

எத்தனையாம் ஆண்டிலை நீங்கள் இருக்கிறீர்கள்

யாழ். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இப்ப இருக்கினம்

அதுக்கும் அவர்கள்தான் காரணம் என்று தப்பிக்க பார்க்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

எனக்குப் புரியல்ல நீங்கள் என்ன கதைக்கிறீர்கள் என்று. தமிழ் மக்கள் ஏதோ சிங்களவனுக்கு கருவாடு அனுப்பித்தான் வயிறு வளர்த்தது போல நியாயம் கற்பிக்க வெளிக்கிட்டது நீங்கள். 1986 இல் இருந்து 95 வரை பாதைகளை அடைத்தது சிறீலங்கா அரசு. புலிகள் அல்ல. 2006 இலும் பாதைகளை அடைத்தது சிறீலங்கா அரசு புலிகள் அல்ல. நீங்கள் தான் வரலாற்றை மறந்துவிட்டு எழுதிறீங்க என்று நினைக்கிறேன்..!

பாதைகள் அடைக்கப்பட்ட போது எல்லாம் சிங்களவனுக்கு அனுப்பிய கருவாடும் இறாலுமா எமக்கு சாப்பாடு போட்டன இல்லையே. ஒரே கிலோ மீன் 800 ரூபாய் விற்கப்படும் நிலையில்.. ஏன் சிங்களவனுக்கு அனுப்பனும் என்பதுதான் கேள்வி..??!

கேள்வியைப் புரிந்து கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.

உங்களுக்கு வெளிநாட்டில் பல நாட்டுப் பொருட்களும் கிடைக்கின்ற படியால்.. புறக்கணி.. சிறீலங்கா என்று குரல் கொடுப்பது ஒன்றும் கடினமான விடயமன்று. அதுமட்டுமன்றி அரசாங்கம் பணம் தருகுது.. வாங்கிச் சாப்பிடுவியள். ஆனால் ஊரில் மட்டுப்படுத்திய உற்பத்திகளையும் புடுங்கி கொழும்புக்கு அனுப்பினால் உள்ளூர் சந்தைகளில் பொருட்களின் விலை அதிகரிக்கும். அதை ஈடு செய்ய அந்நியச் செலவாணிதான் ஊருக்குப் போக வேண்டும். நீங்கள் இங்கு புறக்கணிக்கிறது.. அப்புறம் அங்கு வருமானமாகப் போய் சேரும்.

எழுத முதல் சிந்தியுங்கள்.. தயவுசெய்து..! :lol::icon_idea:

அதுசரி

யாழ். மக்கள்மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு தங்களுக்கு.............

கோயிலுக்கு போனாலும் திட்டுகின்றீர்கள்

உள்ளுக்க இருந்தாலும் திட்டுகின்றீர்கள்

இறக்குமதி செய்தாலும் திட்டுகின்றீர்கள்

ஏற்றுமதி செய்தாலும் திட்டுகின்றீர்கள்

யாழ் மக்கள் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனால் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஒட்டுக்குழுவினரும்.. சிறீலங்கா அரசுக் கூலிகளும்.. பிற வால்பிடிக் கூட்டத்தினரும் அங்கு தமது அடாவடிகளை தொடர்வதை அனுமதிக்க முடியாது. அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மக்களினது. அவர்கள் மெளனமாக இருப்பின்.. இருக்கிறதையும் இழந்து நிற்கும் நிலையே தமிழ் மக்களுக்கு ஏற்படும்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புரியல்ல நீங்கள் என்ன கதைக்கிறீர்கள் என்று. தமிழ் மக்கள் ஏதோ சிங்களவனுக்கு கருவாடு அனுப்பித்தான் வயிறு வளர்த்தது போல நியாயம் கற்பிக்க வெளிக்கிட்டது நீங்கள். 1986 இல் இருந்து 95 வரை பாதைகளை அடைத்தது சிறீலங்கா அரசு. புலிகள் அல்ல. 2006 இலும் பாதைகளை அடைத்தது சிறீலங்கா அரசு புலிகள் அல்ல. நீங்கள் தான் வரலாற்றை மறந்துவிட்டு எழுதிறீங்க என்று நினைக்கிறேன்..!

யாழ் மக்கள் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனால் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஒட்டுக்குழுவினரும்.. சிறீலங்கா அரசுக் கூலிகளும்.. பிற வால்பிடிக் கூட்டத்தினரும் அங்கு தமது அடாவடிகளை தொடர்வதை அனுமதிக்க முடியாது. அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மக்களினது. அவர்கள் மெளனமாக இருப்பின்.. இருக்கிறதையும் இழந்து நிற்கும் நிலையே தமிழ் மக்களுக்கு ஏற்படும்..! :icon_idea:

நீங்கள் வரலாறு பாடம் அது இது என்று ரொம்பதூரம் போகின்றீர்கள்

நான் நடைமுறை நிலமை பற்றிக்கதைக்கின்றேன்

எனவே இரண்டுக்கும் வெகுதூரம்............................

நிறுத்துகின்றேன்

நன்றி

தங்கள் பொன்னான நேரத்திற்கு.

இதேநேரம் எனக்கும் அங்குள்ளவர்களுடன் தொடர்புண்டு

அந்த மண் அப்படியேதான் உள்ளது

சாப்பிட மட்டும் வாய்திறக்கும் நிலையென்றாலும்........

உள்ளே கொதித்தபடி.....

எல்லாவற்றையும் தொலைத்தமாதிரி......

யாரையோ எதிர்பார்த்தபடி........

உலகத்துக்கு பல முறை இடித்துரைத்த அந்த மண்............

இன்றும்

அந்த மண் அப்படியேதான் உள்ளது

கிழக்கின் விடிகொள்ளிகள் சிங்களவனுக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழ்ப் பொம்பிளைகளையே பலாத்காரமாய் பிடிச்சு அனுப்புறாங்களாம். யாழ்ப்பாணத்தில நிலமை அந்தளவுக்கு மோசமாக இல்லை எண்டு சந்தோசப்படுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிகொள்ளிகள் சிங்களவனுக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழ்ப் பொம்பிளைகளையே பலாத்காரமாய் பிடிச்சு அனுப்புறாங்களாம். யாழ்ப்பாணத்தில நிலமை அந்தளவுக்கு மோசமாக இல்லை எண்டு சந்தோசப்படுங்கோ.

பெண்ணைக்கொடுப்பதையே தடுக்கவழியறியாது தமிழினம் இருக்க..............

கருவாடு போறதை பறிக்கச்சொல்லி சிலதுகள் போராட்டம் .............

நல்லா வருகுது வாயில.......

மோகன் அண்ணா கத்தி வைத்திருக்கின்றார் என்பதால்........

கிழக்கின் விடிகொள்ளிகள் சிங்களவனுக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழ்ப் பொம்பிளைகளையே பலாத்காரமாய் பிடிச்சு அனுப்புறாங்களாம். யாழ்ப்பாணத்தில நிலமை அந்தளவுக்கு மோசமாக இல்லை எண்டு சந்தோசப்படுங்கோ.

இந்த கொடுமைய வேற செய்யிறாங்களா அந்த நாய்கள்? :unsure::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு அவர்கள் கொடுப்பது கருவாடு, வெங்காயம்,..... பெறுவது சிங்களவனின் பணம்.

நாங்கள்.. கொடுப்பது டொலர், யூரோ, பவுண்ஸ், .. பெறுவது மீன், கருவாடு, கட்டைச் சம்பல், .....

இங்கு முதலில் திருந்தவேண்டியவர்கள் நாங்களல்லவா?

எந்த முகத்தோடு அவர்களை திருந்தச் சொல்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.