Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வழங்கிய உதவியாலேயே பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்ததாக நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு அது தொடர்வதாகவும் சபை முதல்வர் புகழாரம்

இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்புக் காரணமாகவே புலிப் பயங்கரவாதத்தைத் தம்மால் இந்தள வுக்கு ஒழித்துக்கட்ட முடிந்துள்ளது என்று அரசு நேற்று நாடாளுமன்றில் உறுதிபடக் கூறியது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்குத் தொடர்ந்தும் இந்தியா வழங்கிவரும் இந்த உதவிகள் அளவிட முடியாதவை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க இந்திய வைத் தியர்களின் வருகை தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அக்கூற்றுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே அப்போது இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு எமக்குத் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பஸில் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயங்களின் அடிப்படையில்தான் இந்தியா இந்த உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது.

அந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத்தான் இந்தியா, வைத்தியர்களை எமக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ வைத்தியர்கள் அல்லர். இராணுவத்திற்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள்.

ஆனால், இந்த வைத்தியர்களின் வருகையை ஜே.வி.பியினர் எதிர்க்கின்றனர். ஜே.வி.பியின் சுவரொட்டிப் போராட்டத்தில் புதிய தொனியைச் சேர்ப்பதற்காகவே ஜே.வி.பியினர் இந்த விடயத்தைப் பெரிதாகத் தூக்கிப்பிடிக்கின்றனர்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது அந்த நெருப்பை அணைக்கும் நடவடிக்கையில்தான் நாம் இப்போது ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் எமக்கு உதவி வழங்கும் நாடுகளை நாம் பகைத்துக்கொள்ள மாட்டோம்.

இந்தியா எமக்கு மருந்துப் பொருள்களையும் வழங்கியது. அவற்றை நாம் எமது சுகாதார அமைச்சின் ஊடாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநியோகித்துள்ளோம்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் விமானம் மூலம் பருப்பு போட்டது போல் அந்நாடு இப்போது செய்யவில்லை.

இலங்கை வந்திருக்கும் இந்திய வைத்தியர்களின் திறமை தொடர்பில் நாம் திருப்தியடைகின்றோம். அவர்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை வைத்தியசாலை நிரந்தரமானதல்ல. அது நடமாடும் வைத்தியசாலை. தேவையில்லாத பட்சத்தில் அது இல்லாது செய்யப்படும்.

புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளாலோ அல்லது இந்திய மருத்துவர்களாலோ எமது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படாது. இதை ஜே.வி.பி. நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது இந்தியாவின் உதவியைப் பெறுமாறு கூறிய ஜே.வி.பி. இப்போது இந்தியாவிடமிருந்து எந்த உதவிகளையும் பெறக்கூடாது என்கிறது. அக்கட்சி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகின்றது.

புல்மோட்டைக்கு வந்துள்ள இந்திய மருத்துவர்கள் அங்குள்ள கணியவளங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்கள் அதற்காக வரவில்லை. மக்களுக்குச் சிகிச்சையளிக்கவே வந்துள்ளனர்.

இந்தப் புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படும். அதன்பிறகு நோயாளிகள் பதவிய, கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுவர்.

எமக்கு உதவி வழங்கத் தயாராகவுள்ள நாடுகளிடமிருந்து உதவியைப் பெற நாம் தயாராகவுள்ளோம். அந்த உதவிகளை நாம் நிராகரிக்க மாட்டோம்.

இது தொடர்பில் சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

-உதயன்

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும், இந்திய - ஈழப் போரைத் தூண்டிக் குளிர் காய விரும்புகின்றதா மகிந்த அரசு??

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை நோக்கி கிடக்கின்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க இந்தியாவையும் சிங்களம் காட்டிக்கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் சூது சமாதான நாடு என்ற அதன் பெயரைத் திசைமாற்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனது வல்லரசுக்கனவுக்காக சர்ச்சைகளை உருவாக்கி அண்டையில் இருக்கும் சிறிய நாடுகளை மீள முடியாத அளவுக்குச் சிதைத்து வருகிறது. எப்போதுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பைக் கண்டு இந்திய நாட்டிற்குப் பேரச்சம் உள்ளது. அந்த அச்சத்தின் விளைவே சிங்களத்துடன் வைத்திருக்கும் கூட்டும் குலாவலும். ஆறு கோடி தென்னகத்தமிழர்கள் கொந்தளித்து எழுந்தாலும் அவர்கள் உணர்வை மதிக்காத இந்திய மத்திய அரசின் போக்கு எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழர் தாயகப் போராட்டத்தை எந்த வல்லரசும் நசுக்க முடியாது. போராட்டங்களின் வடிவம் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்றாற்போல் மாறும் அது தவிர்க்கமுடியாத ஒன்று ஆனால் குறிக்கோள் மிகவும் கூர்ப்படையும். போராட்டவடிவங்கள் உலகளாவிய ரீதியாக பல்முனைப்படும்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது காங்கிரசுக்கு பலத்த அடிதானே?!! அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படிச்சிங்களம் சொல்வது 'காங்கிரஸ் ஆட்சிக்கு ஆப்பாக முடியும் தானே?

வரலாற்றில் இந்தியா எப்போது ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்தது? சிலர் சொல்வது போல் சிங்கள அரசு இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் மோதவைத்தது கிடையாது அதற்கு அவசியமும் இல்லை. இந்தியா என்றும் தனது குறிக்கோளில் தெளிவாகவே இருக்கின்றது. முக்கியமான அதன் அசைவுகளில் ஆரம்பத்தில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தமிழர் எழுச்சியை சிதைத்தது. இது பல இயக்கங்களை ஒன்றிணைய முடியாமல் தனித்தனி|யே இந்திய மண்ணில் வளர்த்து தனது அதிகாரத்தின் கீழ் ஆழுமை செய்து மோதவிட்டு சிங்களத்துக்கு எதிரான தமிழர் எழுச்சியை சிதைத்தது. இந்த நிலையிலேயே ஈழத்தமிழர் எழுச்சி பாதி சிதைந்து விட்டது. அடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தம். தமிழருக்கு சாதகமாக நடப்பதாக சொல்லி ஆயுதங்களை வாங்கிய பின் தமிழர்கள் முதுகில் குத்தியது. இன்றும் மிச்ச சொச்ச தமிழினத்தை அழித்தொழிக்கின்றது. இன்று சிங்களம் அனுசரிப்பு போக்கு காட்டினாலும் இந்தியா அதை அனுமதிக்கப்போவதில்லை. இந்த இன அழிப்பானது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானது என்பது வெளிப்படையான பார்வை ஆனால் இதன் உள்ளகத்தில் இருப்பது ஆரிய இனத்துக்கும் ஆரியர் இல்லாத இனத்துக்குமான யுத்தம். சிங்களவர்கள் தம்மை ஆரியர் என்றே வரையறுத்துள்ளனர். அதே நேரம் எப்படிப் பட்ட கொடுமைகளை சிங்களம் செய்தாலும் இந்தியவில் ஆரிய அதிகார வர்க்கம் சிங்களத்தின் பக்கமே நிற்கின்றது. சிங்களத்துடன் கைகோரத்து நிற்கின்றது. இங்கே மதம் ஒரு பொருட்டல்ல. மதம் ஒரு முக்கியமான விடயமானால் ஈழத்தில் பெரும்பான்மை இந்துக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக இந்திய இந்துத்துவம் குரல் கொடுக்கும். இது இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனை இல்லை மாறாக ஒரு உயர்ந்த இனம் என்ற அதிகார வர்க்க இனத்துக்கும் அதிகாரமற்ற தாழ்ந்த இனத்துக்குமிடையிலான பிரச்சனை. தாழ்ந்த இனங்கள் அதிகாரம் பெறுவதை உயர்ந்த இனம் என்று தம்மை வரையறுப்பவர்கள் என்றும் அனுமதிக்கப் போவதில்லை. மதப்பற்றுதலோ அல்லது மொழிப்பற்றுதலோ இந்த அனுமதியை வாங்கி தர மாட்டாது. அப்படி வாங்கி தருமானால் இந்தியாவில் தலித்துக்கள் வாழ்வு வளம் பெற்றிருக்கும். இந்திய மீனவர்கள் மீதான இலங்கையின் கொலைத் தாக்குதல்களுக்கு இந்தியா பதில்அடி கொடுத்திருக்கும். இந்திய அதிகாரவர்க்கம் என்பது ஈழத்தமிழர்களை என்றும் அழிப்பதில் குறியாய் இருக்கும். ஒருவேளை இந்திய இலங்கை அதிகாரங்களை உடைத்து தமிழீழம் அமைந்தால் கூட அதன் பின்னரும் அழிப்பிற்கான முயற்சியை இந்திய அதிகாரவர்க்கம் செய்துகொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில் வென்றுவிட்டார்களா??.....சொல்லவே இல்ல :D:(:lol:

:D :D

ஈழத்தமிழினத்தை தனித்து சிங்களத்தால் வெற்றி பெற முடியாது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா வழங்கிய உதவியாலேயே யுத்தத்தில் புலிகளை ஒழிக்க முடிந்தது: நாடாளுமன்றில் சபை முதல்வர் நிமால் அறிவிப்பு [புதன்கிழமை, 18 மார்ச் 2009, 02:58.37 AM GMT +05:30]

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. என சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: தமிழ்வின்

--------------------------------

3 வாரங்களுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடையுமாம்: பாதுகாப்புத் தரப்பு

தமிழ்வின்

இராணவத்தினருக்கு 3 வாரங்களுக்கு போதுமான ஆயுதம் தான் உள்ளதோ?

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

இலங்கையின் அருமையான கபட அரசியலில் சாணக்கியத்தில் மீண்டும் இலங்கை மீண்டும் இந்தியாவின்மீது அருமையாக கரி பூசியுள்ளது(

உலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக உண்மை வந்துள்ளது) அருமையான அரசியல்... :D:( இனி என்ன நடக்கபோகிறது பொறுத்திருந்து பார்கலாம்.... இந்தியாவை.. ( அனைத்து நாடகத்துக்கும் உரியவரான இந்தியாவை) :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ் க்கு எதிரான பிரசாரத்தில் இலங்கையும் சேர்ந்து கொண்டாலும் நல்லதுதான் :(

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.