Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் திருந்துவது எப்போது?

Featured Replies

வணக்கம்,

கடந்த சில நாட்களாக தாயத்தில் தளபதிகள் பலர் வீரமரணம் அடைந்து விட்டார்கள். பெரிய தலைகள் எல்லாம் போயிட்டிது என்று கூறி சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் வலிமையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தாயக போராட்டத்தில் தளபதிகளின் இழப்பு என்பது தமிழருக்கு புதுமையான அல்லது முதலாவது அனுபவம் அல்ல. 1987ம் ஆண்டு இந்திய சிறீ லங்கா கூட்டு அரசாங்கங்களின் சதியில் ஒரே நேரத்தில் பல தளபதிகளை தமிழினம் இழந்து இருந்தது.

ஆனாலும்.. அவர்கள் இல்லாத நிலையில் தாயக போராட்டம் பெருவிருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு தளபதி இல்லாமல் போகும் நேரத்தில் பல தளபதிகள் ஏற்கனவே உருவாகி இருப்பார்கள். இதுதான் யதார்த்தம்.

இனியும்கூட இதேவிடயம்தான் தொடரப்போகின்றது. ஆயுதம் ஏந்தி போராடுவதை அங்குள்ள தாயக மக்கள் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் இங்கு இருந்து தாயக மக்களுக்கான எங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்வோமா? அதைவிடுத்து தளபதிகளின் வீரமரணங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் எங்களுக்கு தேவையானதா?

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் நோக்கமே தமிழ்மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களது மனவலிமையை உடைப்பதுதான். இதற்கு நாங்கள் துணைபோகலாமா?

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறு கலைஞன். யாழ் களத்தின் ஆஸ்தான ஆராட்சியாளர்களே இலங்கை இராணுவத்தின் காணொளிகளை இணைக்க தொடங்கி விட்டார்கள். நீங்கள் சொல்வது போல் அரசின் நோக்கம் நிறைவேறி வருகிறது என்பது (எம்மை குழப்புவது) சரிதான். வி.புலிகள், அரசு ஒவ்வொரு தளபதியும் இறந்து விட்டார் என கூற அத்தளபதியே மக்கள் முன் தோன்றி பல முறை அரசின் பொய் பிரச்சாரத்தை முறியடித்துள்ளார்கள். தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசோடு ஒட்டுக்குழுக்கள் தொடக்கம் வல்லரசுகளின் உளவுப்படை வரை மிண்டு கொடுக்கும் நிலையில் உடனடியாக மறுப்பு அறிக்கையோ காணொளியோ விட முடியாது. வி.புலிகள் கடந்த காலங்களில் தமது தளபதிகளின் இறப்பையோ, போராளிகளின் இறப்பையோ மறைத்ததில்லை.

தளபதிகள் இறப்பு தவிர்க்க முடியாதவை. கடந்த காலங்களில் பல பெறுமதியான தளபதிகளை இழந்துள்ளோம். தளபதி இறந்ததும் போராட்டம் நிறுத்தப்படும் எனில் சீலன் (சாள்ஸ் அன்ரனி) இறந்த போதே நின்றிருக்கும். நின்றதா இன்று வரை??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி, நுணா அண்ணா,

உங்களது கருத்துக்களை வழிமொழிகின்றேன். இருப்பினும் எம்மினத்தின் இழப்புக்கள் உண்மைதானே? தினம் தினம் செத்துமடியும் உறவுகளில் எதை வைத்து அடையாளம் காண்பது என்றே தெரியாத நிலையில் மனசு தவிக்கும் போது; அந்த வாய்ப்பை சிங்களம் இப்படிப்பயன்படுத்திக் கொல்(ள்)கின்றது.

போரில் தளபதிகளையும் வீரர்களையும் இழப்பது தவிர்க்க முடியாதது. மிகப் பெரும் தளபதிகளை இழந்த பின்பும் எமது போராட்டம் பெரும் எழுச்சியோடு நடந்திருக்கிறது. நாளையும் நடக்கும்.

ஆனால் இன்றைக்கு வீரச்சாவடைந்து விட்டதாக சொல்லப்படுகின்ற தளபதிகளுக்காக தமிழினம் அழலாமா? இல்லையா? என்று தெரியாது இருப்பதுதான் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் உத்தியோகபூர்வமாக அற்விக்கும் போது அழலாமே? அதற்கு முன் அழவேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறீர்கள்? :(

எதற்கு இந்த முகக்குறி ( :( )? இதில் நக்கல் தேவையில்லை.

விடுதலைப் புலிகள் அறிவிக்கின்ற போது அழுங்கள் என்றால் என்ன அர்த்தம்?

விடுதலைப் புலிகளின் கப்பல் ஒரு முறை மூழ்கடிக்கப்பட்டது: பல மாதங்கள் கழிந்த பின்னர் அதை புலிகள் அறிவித்தார்கள். தற்பொழுது பல தளபதிகள், போராளிகள் வீரச் சாவடைகின்ற பொழுது, அது பற்றி விடுதலைப் புலிகள் அறிவிக்கின்றார்கள் இல்லை.

இது எதைக் காட்டுகிறது?

இராணுவ வெற்றிகளின் மீது மட்டுமே தமிழீழப் போராட்டம் கட்டப்பட்டிருக்கின்றது. இழப்புகளை அறிந்தால், மக்கள் பின்வாங்கி விடுவார்கள். விடுதலைப் புலிகள் வென்று கொண்டிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். மக்களுக்கு பின்னடைவு பற்றிய செய்திகள் செல்லக் கூடாது.

இப்படியான ஒரு நிலையில் தமிழ் மக்கள் இருப்பது பற்றி வெட்கப்பட வேண்டும்

பெரும் தளபதிகளுக்கு ஏதேனும் நடந்திருக்குமோ என்று எல்லோரும் வேதனையுடன் அங்கலாய்க்கும் போதுகூட தனிநபர்கள் மீதான கோபத்தினால் நக்கலும் நையாண்டியுடனுமான தனிப்பட்ட தாக்குதலை செய்யும் அளவுக்கு நாம் கீழிறங்கிப் போய்விட்டோம் !!

Edited by நிழலி

சபேசன்... இறப்பு என்பது இயற்கையின் நியதி. விடுதலையின் பாதையில் வீறு கொண்டெழுந்த இனம் எத்தனையோ இழப்புக்களை சந்தித்திருக்கிறது. இறப்புக்களை கண்டு துவண்டு விடவில்லை. மாறாக புது வீரியத்தோடு புயலானது தான் வரலாறு.

images.jpg

images.jpg

images.jpg

images.jpg

images.jpg

தேசியத் தலைவரின் ஒவ்வோரு செயலுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதை அவர் சொன்னால் ஒழிய யாராலும் ஊகிக்க முடியாது

தேசியத்தலைவரில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்

தற்போது

இது தேவையில்லாத விவாதம்

வீரமறவர்களின் தியாகத்தை கேலி படுத்துவது போல் உள்ளது

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது

எதுகும் உறுதிபாடத நிலமையில் நாம் பேசுவது பெரிய தப்பு... போராளிகள் வீர சாவுடையுறார்கள் இங்கு நமக்கு இந்த விதாவதம் தேவையா? அதை விட ஒரு முக்கிய விஷயம் நாமே இணையங்களில் பேசுவது கலந்துரையாடுவது இது நல்லவா இருக்கு... சிங்களவர்கள் என்ன நோக்கத்துக்கு செய்தி இணைக்கிறார்களோ அதை நீங்களும் நம்புறிர்களே... அவர்களின் என்னமே இதுதானே மக்களை குழப்புவது... ஒரு போராளியை இழப்பது ஒரு கோட்டையை இழந்த மாதிரி அது கவலைக்குரிய விடையம் கூட ஆனால் இப்படி நடக்கிறதால நம் போராட்டம் முடிவு அடைய போறது இல்லை மேலும் மேலும் வளரதான் போகுது... நாம் நம்பிக்கையோட இருக்க வேணாமா? மன்னிக்கவும் இது என் தனி பட்ட கருத்து... எதுகும் உறுதிப்பாடதா செய்திகளை இணைக்காமல் இருப்பது நல்லம் இது

என் கருத்து...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரினதும் ஆதங்கம்மும் புரிகிறது.

சோகமான நேரதிதிலும் கொள்கையை மறக்கவேண்டாம்!

தலைமையை நன்றாக நம்மவேண்டும், ஆதரவு தரவேண்டும்!

ஈற்றிலே நாம் வெல்வோம்!

வெற்றியை மட்டுமே விடுதலைப்புலிகள் பெற்றுத் தரவேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அதற்குரிய செயற்பாடுகளைச் செய்தோமா என்றும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எமது கடமைகளை நாம் தலைவர் அவர்கள் எதிர்பார்த்தளவு சரியாகச் செய்திருந்தோமாயானால் எமக்கு இந்த நிலை வந்திருக்காது. சொந்த சகோதரர்களின் பிணங்களின் மேல் கொண்டாட நினைக்கும் பச்சோந்திகள் இருக்கும்வரை எமக்கு விடிவே வராது.

சொந்த சகோதரர்களின் பிணங்களின் மேல் கொண்டாட நினைக்கும் பச்சோந்திகள் இருக்கும்வரை எமக்கு விடிவே வராது.

சுருக்கமானதும் நேரானதுமான விடை எமது தேசியத்தலைவர் நாம் எல்லாம் சிந்திப்பது போல் சிந்திப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விணையத்தில் கருத்தெழுதுபவர்கள் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றூர்கள். தமிழீழ விடுதலைப்போராட்டம் தேசியத்தலைவரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் தலைவர் பெரும் சேனையை முதலில் தயார் படுத்திவிட்டு பின்பு நேரகாலம் பார்த்து போராட்டத்தை தொடங்கவில்லை. மேலும் யாழ்கள உறுப்பினர்கட்கும் வாசகர்கட்கும் ஒரு விடையத்தைக் கூறுகின்றேன்.

போர்நிறுத்த ஒப்பந்தம் அமூலில் இருந்த காலத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்களைத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்தார் இது யாழ்கள உறுப்பினர் சிலருக்கோ அன்றேல் வாசகர்களில் அனேகருக்கோ தெரிந்த விடையமே.

அச்சந்திப்பில் பல்வேறு விடையங்ளை தலைவர் பேசியிருந்தாலும் அவர் கூறிய ஒரு விடையம் அச்சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வியப்பளித்தது, காரணம் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கின்றார்கள் உலகஅரங்கினின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது இவ்வேளையில் எவ்விதமான காரணமும் இன்றி எதற்காக தலைவர் இதை எமக்குக் கூறுகின்றார் என அங்கு சென்ற அனைவர்க்கும் வியப்பு ஆனால் இதைப்பற்றி யாரும் தலைவரிடம் கேள்வி கேட்கவில்லை.

அவர் கூறிய அந்த விடையம்

மீண்டும் நாம் மிகப்பெரிய வல்லரசொன்றுடன் மோதவேண்டிவரும், அது அமெரிக்காவாகவும் இருக்கலாம், மீண்டும் நாம் காட்டுக்குள் போவோம் ஆனால் தமிழீழ விடுதலையை அடைந்தே தீருவோம், அவ்வேளையில் புலம்பெயர் தமிழ் சமூகமே பெரிய எடுப்பில் போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும் அதுவும் இளையோரே இதற்கு ஏத்தவர்கள் என. ஆகவே இளையோரே புலம்பெயர்தேசத்தில் உங்கள் கைகளில் போராட்டத்தினைக் கொண்டு செல்லும் கடிவாளம் தரப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்புக்களை ஏற்று நீங்கள் முன்னெடுங்கள். அதற்கு முதல் தலைவர் மேல் நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

உறவுகளே. தமிழீழ விடுதலைப்போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இன்னேரத்தில்,தேவையற்ற செய்திகளைப்பிரசுரித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாமல்,தீர்க்கதரசியான எம் தலைவர் எதைச்சொல்கிறாரோ அதைச்செய்யுங்கள். நிச்சயம் வெற்றி எமெக்கே.

தேசியத் தலைவரின் ஒவ்வோரு செயலுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதை அவர் சொன்னால் ஒழிய யாராலும் ஊகிக்க முடியாது

தேசியத்தலைவரில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்

தற்போது

இது தேவையில்லாத விவாதம்

வீரமறவர்களின் தியாகத்தை கேலி படுத்துவது போல் உள்ளது

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது

உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிகளின் மீது மட்டுமே தமிழீழப் போராட்டம் கட்டப்பட்டிருக்கின்றது. இழப்புகளை அறிந்தால், மக்கள் பின்வாங்கி விடுவார்கள். விடுதலைப் புலிகள் வென்று கொண்டிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். மக்களுக்கு பின்னடைவு பற்றிய செய்திகள் செல்லக் கூடாது.

இப்படியான ஒரு நிலையில் தமிழ் மக்கள் இருப்பது பற்றி வெட்கப்பட வேண்டும்

ஏன் இந்திய இராணுவ காலத்தில் கூட இப்படியான பின்னைடைவுகள் ஏற்பட்டது தானே. இப்போ இவ்வளவு பிரதேசங்களையும் , மக்களின் சொத்துக்கள், உயிர்கள் என இழந்துள்ளோம். இதெல்லாம் உங்களுக்கு பின்னடைவாக தெரியவில்லையோ. அப்போ வன்னியில் இன்னும் 2 1/2 லட்சம் மக்கள் புலிகளுடன் இல்லையோ. புலம் பெயர்ந்தவர்கள் வேண்டுமானால் அதுவும் நாலு பியரை அடித்து புழுகுபவர்கள் வெட்கப்படலாம்.

யாழில் அரசின் /இராணுவ காணொளிகளையே இணைக்க விட்டுள்ளார்கள். ஏதாவது உங்களுக்கு செய்திகள் கிடைத்தால் இணைக்கலாமே. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.