Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்

:huh::(:huh:

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7482

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தானா ஒரு இரவு பொறுத்திருங்கள் என்று ..........தெரிவித்தது . உங்கள் உண்ண விரதம் ராஜ பட்சியை ஒன்றும் செய்யாது ?

இதய் எப்போவோ செய்திருக்கலாமே ........?

என்னடா இவர் ஜெயலலிதா விட்ட வெடிக்கெல்லாம் அசையாமல் இருக்கிறாரே எண்று பார்த்தேன் இதுதானா சங்கதி?

சீ.. முதலமைச்சருக்கும் இதுதான் நிலையா? இனி மிச்சம் மன்மோகன் சிங்தான் இருக்கு அவரும் உண்ணா விரதமிருந்தா நல்லா இருக்கும்.

எங்களுக்குத்தான் சிங்களவன் ஆபிறுக்கிறான் எண்டு பார்த்தா உங்களுக்குமா? சரத் பொன்ஸ் சொன்னது சரிதான் கோமாளிகள் தான் நீங்கள் போங்கள்.

இன்னும் சில் நாட்களில் இந்த நாடகத்தின் முடிவு தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இவர் ஜெயலலிதா விட்ட வெடிக்கெல்லாம் அசையாமல் இருக்கிறாரே எண்று பார்த்தேன் இதுதானா சங்கதி?

சீ.. முதலமைச்சருக்கும் இதுதான் நிலையா? இனி மிச்சம் மன்மோகன் சிங்தான் இருக்கு அவரும் உண்ணா விரதமிருந்தா நல்லா இருக்கும்.

எங்களுக்குத்தான் சிங்களவன் ஆபிறுக்கிறான் எண்டு பார்த்தா உங்களுக்குமா? சரத் பொன்ஸ் சொன்னது சரிதான் கோமாளிகள் தான் நீங்கள் போங்கள்.

இன்னும் சில் நாட்களில் இந்த நாடகத்தின் முடிவு தெரியும்.

கருணா நிதி ????????????????????

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி கிழவர் ஆருக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கிறாராம்

ஐயோ ஐயோ தொல்லை தாங்க முடியலைப்பா :(

ஆட்சியிலை இருப்பாராம் அவரே ஆர்ப்பாட்டமும் செய்வாராம்

என்ன சொல்ல தலையெழுத்து :huh::huh:

கருணாநிதியே... உண்ணால் முடியவில்லை என்றால் ஒப்பாரியும் வைக்க வேண்டாம்..உண்ணாவிரதமும் இருக்க வேண்டாம்.... பதவி விலகிவிட்டுப்போ... மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...

தழிழ் நாட்டு மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7492

என்ன வேகமான பதில்...... :huh::(:huh:

இன்னொரு வேகமான பதில்

பிரதமர் கோரிக்கை கருணாநிதி நிராகரிப்பு

இலங்கையில் ‌போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் முதல்வர் கருணாநிதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரின் ‌கோரிக்கையை நிராகரித்த முதல்வர் , எல்லாரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து பிரதமரின் விஷேச தூதர் சென்னை வரவிருக்கிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7494

Edited by piththan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை தொடங்கிய சிங்கள இனவெறி கொலையாட்டத்தில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அதை பாவித்து வாக்கு வேட்டையில்...

தமிழ் நாட்டின் இரத்தவெறி கலைஞரின் திருவிளையாடல்

பந்த், உண்ணாவிரதம்,மனித சங்கிலி.................................

இது தொடர்பான செய்தி

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7492

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரச்சனை: மதுரையில் அழகிரி தலைமையில் உண்ணாவிரதம்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது பேசிய அழகரி,

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் தான் நாங்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். இந்த உண்ணாவிரதம் உணர்வுப் பூர்வமானது . இதில் கட்சி ஆர்வமுள்ள அனைவரும், கட்சிக்கு அப்பாற்பட்டவரும் கூட கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழ் இன படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்களுக்கு எதிரான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதி வழியில் உண்ணாவிரதம் இருக்கி‌றேன் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7495

Edited by piththan

இருப்பதற்கு முன்னமே கைவிடுமாறு வேண்டுகோளா? செருப்பு சரியாகப் படவில்லை போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பதற்கு முன்னமே கைவிடுமாறு வேண்டுகோளா? செருப்பு சரியாகப் படவில்லை போலும்.

16 நாட்கள் சரியாக உயிர் வாழ முடியும் என்ற நம்பிக்கை.

தேர்தலிலும் வாக்கு வாங்கலாம்

இதுதான் சந்தர்ப்பம் என்று மன்மோகன்,சொனியா,ராகுல் தமிழ் நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வரலாம் மக்களே கவனம்

தந்தை, மகன் "அன்பு"த்தொல்லை தாங்கேல்ல....

தமிழர்களைப் பலப்படுத்துதலே ராஜபக்ஷவைப் பணியவைப்பதற்கு ஒரேவழி.

இது பகிடி இல்லைத்தானே....

இவங்கள் ஏன் வாறங்கள் எண்டு ஆருக்கும் தெரியுமோ?.... இவங்கள் வந்துதான் எங்களை பலப்படுத்தோனும் எண்டில்லை.

அப்பிடியிருந்தும் வாறாங்கள் எண்டால் அது அவங்களின் சுயநல காய்நகர்த்தல் தான் காரணம்.

கருணாநிதி ஐயா ஈழத்தமிழரை வைத்து காமடி கீமடி பண்ணேல்லையா? நடவடிக்கை எடுக்கவேண்டிய நீங்கள் ஆரை வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்

சிலவேளை ஈழத்தில் தாங்கள் நடத்தும் போரை நிறுத்தச்சொல்லி ஈழ ஆதரவாளர்கள் கொடுக்கும் தொல்லை தாங்காது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறாரோ என்னவோ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்போகிற போக்கில் தமிழ் நாடு, இந்தியா இல் உள்ள, தேர்தல் காய்ச்சலில் வாடும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் இதுவா மருந்து?????????????

மொட்டை த.........லு வும் இணைந்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐயா கருணாநிதியின் முயற்சியை எந்த விமர்சனத்துக்கும் இடமின்றி நான் வரவேற்கிறேன்.

இதில் அரசியல் இருக்கலாம்.. எதுவும் இருக்கலாம். அதையெல்லாம் இப்போ கவனிக்க நேரமில்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வினாடிக்கு வினாடி மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கலைஞரின் இந்த முடிவு ஏதாவது பலனைத் தருமா என்பதையும் நோக்க வேண்டும்.

கலைஞர் மட்டும் ஆட்சியை இழந்தோ.. எம்பி மாரை இழந்தோ எதனையும் சாதிக்க முடியாது. சகல தமிழகக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஒரே கொள்கை நிலையை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. கருணாநிதியை விமர்சித்துக் கொண்டிருக்கும் நேரமில்லை இது. எமது மக்களின் உயிர், உரிமை பிரியும் கடைசி நிமிடங்கள் இவை என்பதை எவரும் மறக்கக் கூடாது...! :huh::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நிறுத்தம் அறிவிப்பு வந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறதே? :huh:

ஓரு நாடகம் முடிந்து விட்டது.விமான தாக்குதல்களும் கனரக ஆயுதங்களும் பாவிக்கப்பட மாட்டாது என்று தான் அறிவித்தானுகளே தவிர போர்நிறுத்தமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

Army ordered to stop using heavy weapons - Govt.

Sri Lanka's military has been ordered to stop using heavy guns and combat aircraft that could cause civilian casualties in the battle against the LTTE , the government said today.

President Mahinda Rajapakse's office said in a statement that the government had "decided that combat operations have reached their conclusion," although military operations were continuing.

"Our security forces have been instructed to end the use of heavy calibre guns, combat aircraft and aerial weapons which could cause civilian casualties," the statement said.

The Sri Lankan government says its forces have cornered the Tamil Tigers in a small strip of coastal territory in the northeast but has come under international pressure amid reports of heavy civilian casualties.

டெய்லி மிரர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண் ரிவியில் காமெடி ரைமுக்கு பதிலாக கலைஞரின் உண்ணாவிரதம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐயா கருணாநிதியின் முயற்சியை எந்த விமர்சனத்துக்கும் இடமின்றி நான் வரவேற்கிறேன்.

இதில் அரசியல் இருக்கலாம்.. எதுவும் இருக்கலாம். அதையெல்லாம் இப்போ கவனிக்க நேரமில்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வினாடிக்கு வினாடி மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கலைஞரின் இந்த முடிவு ஏதாவது பலனைத் தருமா என்பதையும் நோக்க வேண்டும்.

கலைஞர் மட்டும் ஆட்சியை இழந்தோ.. எம்பி மாரை இழந்தோ எதனையும் சாதிக்க முடியாது. சகல தமிழகக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஒரே கொள்கை நிலையை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. கருணாநிதியை விமர்சித்துக் கொண்டிருக்கும் நேரமில்லை இது. எமது மக்களின் உயிர், உரிமை பிரியும் கடைசி நிமிடங்கள் இவை என்பதை எவரும் மறக்கக் கூடாது...! :unsure: :unsure:

Hmmm

நீங்கள் இப்பவா நித்தா கொண்டு எழும்பினிங்கள்

சண் ரிவியில் காமெடி ரைமுக்கு பதிலாக கலைஞரின் உண்ணாவிரதம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. :unsure:

இப்பத்தான் சேகுவாராவின் காணொளி இணப்பை பார்த்தேன் ஆஹா அற்புதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.