Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புத் தோழி லொல்லு

விமர்சனங்கள் ஒருவனைத் தட்டிக்கொடுக்கும் அற்புதமான வரிகள்.காலம் காலமாக ஒருத்தனைத் திட்டுவதற்கு முன்னர் நாங்கள் சொல்லிக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.

விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா

இளைஞனின் நிகழ்ச்சியில் தவறென்ன உள்ளது என்று தனித்தனியாகச் சுட்டினால் விளக்கம் கொடுக்கலாம்.பொதுவாக விமர்சனம் வைக்கிறோம் விமர்சனம் வைக்கிறோம் என்று சொல்கிறீர்களே தவிர என்ன விமர்சனம் என்று சொல்லவில்லை.

முக்கியமான ஒன்று.நீங்கள் வைப்பது தனிநபர் பார்வை.விமர்சனத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply

அன்பு நன்பனுக்கு..

நான் விமர்சனம் பற்றித்தான் கூறிஉள்ளேன்.. இளைஞ்ன் பற்றி அல்ல..!!

விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா  

நீங்கள் சொல்லும் வரைக்கும் தெரியாது.. இப்போ தெரியும்..! தாங்சுங்கோ...!!

அன்பு நன்பனுக்கு..

நான் விமர்சனம் பற்றித்தான் கூறிஉள்ளேன்.. இளைஞ்ன் பற்றி அல்ல..!!

நீங்கள் சொல்லும் வரைக்கும் தெரியாது.. இப்போ தெரியும்..! தாங்சுங்கோ...!!

தெரியாட்டி ..மூடி கட்டிக்கொண்டு இருக்கிறது...பிறகேன் உந்த விசயத்தைப்பற்றி கதைத்து வாயைக்கொடுத்து வாய்ப்பன் வேண்டுவான்...

லொள்ளு இளைஞனோட லொள்ளு பண்ணத்தான்

வந்திருக்கிறார் போல உள்ளதே..

நித்தியா கவிதைப்பக்கத்திலும் இளைஞனுடன் லொள்ளு

வரவேற்பிலும் லொள்ளு.. உராய்விலும் லொள்ளு..

ம்ம் ஏதோ குறிக்கோளோட வந்திருக்கிறது போலத்தான்

இருக்கு.. நடத்துங்கள்.. :P :P :lol:

லொள்ளு இளைஞனோட லொள்ளு பண்ணத்தான்

வந்திருக்கிறார் போல உள்ளதே..

அப்பிடியா தெரியுது அண்ணா???.. இல்லையே.. உங்களுடனும் லொள்ளு விடுவேனே.. !! குறிக்கோள் ஒன்றும் இல்லை..!! :lol::)

அப்பிடியா தெரியுது அண்ணா???.. இல்லையே.. உங்களுடனும் லொள்ளு விடுவேனே.. !! குறிக்கோள் ஒன்றும் இல்லை..!! :lol::)

அப்படித் தானே எல்லாருக்கும் தெரியுது, நீங்க கன காலமா எழுதிப் போட்டு இப்ப வந்து புது முகமூடி போட்டா தெரியாமலா போகும்.வடிவா உங்கட கணணித் திரைய உத்துப் பாருங்கோ , நாரதரின்ட முகம் தெரியும்.கவனம்.

ஆகா இளைஞனோடையே லொள்ளா? வாழ்த்துக்கள் தமிழிச்சி என்னால் முடிந்தால் நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறன் :P :P :P

ஆகா..கூட்டுச்சேர்த்து லொள்ளுப்பண்ணப்போறீங்களா...அக

ஆகா..கூட்டுச்சேர்த்து லொள்ளுப்பண்ணப்போறீங்களா...அக

என்ன பரிசு கெட்ட கதையாக கிடக்கு... அந்த ஒரு ஆளோடை இவளவு பேர் சோ்ந்து லொள்ளப்பண்ணபோறியளே.. அப்படி பெடியனட்டை என்னதான் இருக்கோ.... ம்ம்ம்ம்..........மச்சக்கார பொடியன்...

எல்லாம் ஒரு உராய்வு தான் சின்னக்குட்டி.... :wink: :lol::lol:

எல்லாம் ஒரு உராய்வு தான் சின்னக்குட்டி.... :wink:  :lol:  :lol:

:lol::lol::lol:

உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.

முரண்பhடு முட்டிமோதுறோம்..

உடண்பாடு வந்தால் கொஞ்சம் யோசிப்போம்..!! :lol::)

உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.

அப்ப நீங்க மட்டும் இப்படிக் கால் தேயாம ஓடிக் கொண்டிருக்கிறியள், இத்தனிக்கு கால் தேஞ்சு இடுப்பு மட்ட வந்திருக்க வேணுமே? :wink:

உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.

இப்படியும் ஆகுமே அண்ணா...உரச உரச பத்திக்குச்சி பத்திடும்...என்ன தத்துவம் சொல்லுறீங்க...! :lol::lol::lol:

என்ன குருவிகாள் நல்ல அநுபவம் போல ஆமா அது என்ன பத்திக்குச்சி என்றால்?????

என்ன குருவிகாள் நல்ல அநுபவம் போல ஆமா அது என்ன பத்திக்குச்சி

இதில என்ன அனுபவம் வேண்டி இருக்கு....பத்திக்குச்சி பத்திக்காதடா... நீ உரசிர வரையில...அப்படி என்று ஒரு பாடல் வரி இருக்கு...அதன்படி பாருங்கள்...! :wink: :lol:

திருத்தம்

உராய்வு: கவிதை நூல்

ஐரோப்பிய நாடுகள்: 5 €

அனுப்பி வைப்பதற்கான தபால் செலவு தனியே.

யேர்மனிக்குள் அனுப்பி வைப்பதற்கான செலவு:

புத்தகமாக அனுப்புவதற்கு: 85 cents

கடிதமாக அனுப்புவதற்கு: 1.44 €

***ஏனைய நாடுகளுக்கு தபால் செலவு மாறுபடும்.

இலங்கை: 150 ரூபாய்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு இன்னும் வரவில்லையாம். :evil: :cry: :lol: :?:

அப்ப நீங்க மட்டும் இப்படிக் கால் தேயாம ஓடிக் கொண்டிருக்கிறியள், இத்தனிக்கு கால் தேஞ்சு இடுப்பு மட்ட வந்திருக்க வேணுமே? :wink:

:lol::lol::lol:

  • 2 weeks later...

உராய்வு பற்றி என் கண்ணில் பட்ட ஒரு விமர்சனம்

கவிதைத்தொகுதி என் கைசேர்ந்த போது அதன் அட்டைப்படம் என் உணர்வில் கலந்த போது தாயின் கருப்பையில் ஒரு கரு நீந்துவது போல என் மனக் கண்முன் காட்சி தந்தது. மிகுந்த பயபக்தியுடன் ஒரு தாய்மைக்கே உரிய உணர்வோடுதான் என்னால் அந்த புத்தகத்தை தொடமுடிந்தது என்றால் மிகையாகாது.

உண்மையிலேயே எனது கைகளில் புதிய புத்தகம் கிடைத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடி ஓடி மூச்சிரைக்க கவிப்பசி தீர்த்த பின் தான் அட்டைப்படத்தில் இருந்து இறுதி பின் மட்டைப் புறம்மட்டும் படிப்பேன்.ஆனால் இந்த கவித்தொகுதி என்கை கிடைத்தபோது,... கிடைத்த போது என்பதை விட தவழ்ந்த போது என்னுள் மூச்சிரைக்க ஓடி ஓடி கவிப்பசிதீர்க்க முடியாமல் போய்விட்டது.

ஒரு கரு ஒன்று புத்தக வடிவில் என்கையில் தவழ்கின்ற தாய்மை உணர்வுதான் அதனை தடுத்தது எனலாம். அட்டைப் படத்தின் முக்கியத்தவத்தை இதன் மூலம் உரணமுடிகிறது என்னால்.

அந்த உராய்வு என்ற எழுத்து வடிவம் குhட சில நிமிடங்கள் என்னை தாமதிக்கச்செய்து விட்டது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டள்ளது. அதை அத்தகையதொரு வடிவமாக வடிவமைத்த ரொபேட்டுக்கும் பாராட்டுக்கள். இனி கவிதையுள் செலல்லாம் வாருங்கள்.

கவிதைதத்தொகுதி - உராய்வு

பக்கங்கள்-128

ஓவியங்கள்- மூனா

நூல் வடிவமைப்பு-நான்காம் தமிழ்.

கணணி வரைகலை-நான்காம் தமிழ்.

தலைப்பு எழுத்து- ரொபேட்.

வெளியீடு-வி.Nஐ.பதிப்பகம்.திருகோணமலை.

கவிதைகள்-54.

"காலத்தின் கவிக் குhர்" இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது.இக் கவி நூல்.அன்புடன் உராய்வுடன் நன்றியுடன் என முறையே கவிஞர் கி.பி அரவிந்தனது பார்வை அடுத்து கவிஞனுடைய பார்வை என விரிகிறது இன் நூல்.அந்தந்த கவிதைகளுள் இறங்கி அதற்கு தகுந்த மாதிரியான உணர்வுகளை படங்களிற்குhடாக கொண்டு வந்திருக்கிறார் கிறுக்கல் மன்னன் மூனா அவர்கள்.

இனி கவிதையுள் செல்லலாம் வாருங்கள்.

புதிய ஆண்டு ஒன்றை வரவேற்கின்றதான கவிதை. அப்படித்தான் நான் நினைத்தேன். வாசித்து முடித்த போது அந்த நினைப்பு காணாமல் போய் விட்டது. மிகுந்த ஆக்குரோசம் பொங்க கேள்விக் கணைகளோடு தொடங்கி புதியதோர் ஆண்டாய் மிளிர நீ என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என கட்டளை போடுவதாய் அமைகிறது.

அன்பு உள்ள இடத்தில்தானே ஆக்குரோசமும் கோபமும் கொப்பளிக்க முடியும். நாம் யாரிலெல்லாம் அதிகமாக அன்பு வைக்கிறோமோ அவர்களோடு தானே சண்டைபிடிக்கவும்; கெஞ்சவும்; குhத்தாடவும் முடியும்.

அதே போல புதிய ஆண்டிற்கு கட்டளை இட்டுவிட்டு வரங்கள் சில கேட்கிறார். புலம்பெயர்ந்த கட்டிடப்பனிக்கால வாழ்வை வெறுத்து ஓடும் ஒரு குழந்தையை இதில் காணமுடிகிறது.ஒரு தாயிடம் குழந்தை அடம்பிடிக்கிற தன்மை இந்த கவிதையில் காணப்படுகிறது. ஒரு குழந்தைக்கே உரிய துடினம் இந்த கவிதையில் தெரிகிறது. கவி வார்த்தைத்தேடல் பெருமிதத்தை தருகிறது. கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே இழுத்துவரப்படாமல் இயல்பாக வந்து அமர்ந்திருக்கிறது.உணர்வின் வடிவாய் கவிதைவரிகள் நர்த்தனமிடுகின்றன.

மொழியின் சிறப்பு பற்றி குhறுவதாக அமைகிறது அடுத்த கவிதை.

அன்னையின் தாலாட்டில் கண்வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். மொழிவளத்தை அங்கு தானே அறிந்து கொண்டோம். அந்த மொழியின் சிறப்பு இந்த அண்டமெல்லாம் தளைக்கும் என எத்தனை உறுதியிட்டு அறுதியிடுகிறார்.

ஆழக்கடலின் உள்ளிருந்தும்

கோளத்தமிழின் ஒலி முழங்கும்.

ஈழத்தாயின் மடியமரும்

தாளக் குhத்து ஆடி மகிழும்.

செத்து மடியும் என்பார்கள்

செம்மொழித் திறன் விளங்கும்.

செய்யுட் காலம் கடந்தும்

செய்மதி கண்டு தமிழ் சிறக்கும்.

கேள்வி கேட்டு கட்டளை இட்டு வரம் கேட்டு தன் மொழியாம் தமிழைப்பாடி தனக்குத்தானே நம்பிக்கை தீபத்தை ஏற்றிய கவிஞன். மீண்டும் நிலை குலைந்து அழும்காட்சி அடுத்து விரிகிறது.

தன்னைத்தானே தேற்றுவதும் அழுவதுமாய்போகும் கவிதை நம்மையும் கலங்க வைத்து விடுகிறது. இறுதியில் நம்மையெல்லாம் கலங்க வைத்த குழந்தை கண்சிமிட்டி சிரித்தபடி சிந்தனையை உதிர்ப்பது போல் கவிதையால் நம்மை கவர்ந்தீர்கிறார். அதில் பிரகாசம் தெரிகிறது. அடுத்தடுத்தமைந்த கடிதம் , ஈழம் என்ற தலைப்பிலான கவிதைகள்.

எண்ணத்தின் தோற்றமெல்லாம்

கன்னத்தில் தெரிகிறதே

ஏக்கத்தின் முழு உருவம்

என் உதட்டில் தவழ்கிறதே.

அழுது அடம்பிடித்து சிந்தனையை விரித்தவிட்டு குதாகலமாய் துள்ளி ஓடிய குழந்தையைப்பார்த்து அப்பாடா இனி அழுகை பிடிவாதம் எல்லாம் தொடராது என நினைத்து பெருமூச்சு விட்ட தாயை மறுகணமே ஏதோ ஒரு ஞாபகத்தில் மீண்டும் ஓடி வந்து அடம்பிடிக்கும் குழந்தைகயைப் பார்த்திருப்பீர்கள்.. அதே போல அடுத்த கவிதை தொடர்கிறது.விடுதலையின் பங்குதாரர் என்ற தலைப்பிலான கவிதை.

வீரமாய்ப் பாய்ந்த வேங்கை

தூரம் நோக்கிப் பயணமென்ன

வேரென்று நம்பி நின்றோம்

நீண்டு நீரும் உறக்கமென்ன

அழுதழுது தன்னை சமாதானப்படுத்துகின்ற தன்மை

களத்தினிலே புயலாய் வீரர்.

உள்ளத்தினில் பூவாய் வீரர்.

விடுதலையின் பங்கு தாரர்.

விடிவினிலே வெள்ளி வீரர்.

அழுது வடிந்து பின் இவரது கோபப்பார்வை கடவுள் மீது செல்கிறது.நியாமான கோபக்கனலே. சிந்திக்க வைக்கிறார்.

அடுத்த கவிதையில் கவிதை என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞனுக்குரிய மிடுக்கு வந்து விடுவது தெரிகிறது.

என்னை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள் என குரல் எழுப்புவது தெரிகிறது. தன்னைத்தானே கவிஞன் என தானே உறுதியிடுகிறான் இந்த குழந்தை. தன்னைத்தானே கவிஞன் என குhறும் கவிஞனை குழந்தை என்பது தகுமோ இனி என எண்ணத்தோன்றுகிறது. என்றாலும் விளையாட்டுக் குழந்தையல்லவா இவன். நம்பமுடியாது.

ம்... சவால் விடுகிறான். குhவி அழைக்கிறான் நம்மையெல்லாம் முஸ்டியை முறுக்குவது தெரிகிறது.

கொத்தித் தின்று உம்தன்

உடல் கொழுக்க

விரைந்து கரைந்துடன்

வாரீர் காக்கைகளே..

என அறைகுhவல் விடுகிறான் இந்த குழந்தை. என்னாச்சு இவனுக்கு..!? இத்தனை நகைச்சுவை கொண்ட திமிர்த்தனம் குhடாது என நினைக்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் என் எழுதல்

அன்றைய கிறுக்கல்கள் பார்த்து

வெட்கித்தலைகுனியும்

இன்றைய எனது கிறுக்கல்கள்

ஓ.. இப்படிக் குhட ஒன்றா... என நினைத்தபடி சண்டித்தனமாக வாறன் என நினைத்தபடி கதிரையில் இருந்து நிமிர்ந்தபடி எழுதிய காதிங்களை புறம் தள்ளி பேனைவை மூடிவைத்துவிட்டு இனி இந்த செல்ல விளையாட்டெல்லாம் இவரோடை சரிவராது என நினைத்தபடி நானும் அடுத்த பக்க கவிதைக்குள் நுழைகிறேன்.

ஓ ...... அது தானே பார்த்தேன்..!! என்ன இத்தனை வீரம் எங்கிருந்து வந்ததென.....!!!!

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு (குமரர்க்கு) மாமலையும் ஓர் கடுகாம். என்று சும்மாவா சொன்னார்கள்.

விருப்பு வெறுப்பு என்கின்ற கவிதை அந்த ரகசியத்தை சொல்லி நிற்கிறது.. அடுத்த பக்கத்திற்குள் நுழைகிறேன் இவள் யாரோ என்ற தலைப்பிலான கவிதை வாசித்தகுறையில் அடுத்த பக்கத்தை தட்டுகிறேன் ஆர்வமிகுதியால் ஆச்சரியம் அங்கும் காத்துக்கிடக்கிறது. ஆர்வமிகுதி மேலிட மற்றய பக்கங்களிற்கு தாவி ஓடுகிறேன். ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். எதுவுமே ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. காதலர்க்கு பசி இருக்கும் ஆனா சாப்பிடேலாது. அதே மாதிரி கவிப்பசி இருக்கு காதல் கவிதைகளை வாசிக்க முடியாமல் ஆச்சரியத்தில் பக்கங்களை புரட்டுகிறேன். ஒருபடியாக அமைதியாகி வாசிக்க தொடங்குகிறேன். ஆச்சரியம் மேலிட. ஆனந்த சந்தோசம்.

இயற்கையையும் பெண்ணையும் இந்த கவிஞன் ஒப்பிடுகின்ற தன்மை அன்பை பண்பை நேசத்தை பாசத்தை நகைச்சுவைத்தன்மையை இவனிடத்தில் காணமுடிகிறது இவனது காதல் கவிதைகளிற்குhடாக .

ஐயோ ஐயோ--

உயிரின் உயிரில்

காதல் சிற்பம் செதுக்குகிறாள்.

அடடாhh. ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் வரும் உணர்வு இந்த கவிதை வரி.

காதல் நோய் என்ற கவிதை அழகுற இயல்பாக வந்த அமர்ந்திருக்கிறது. எந்த ஒளிவுமறைவுமின்றி அத்தனை உணர்வையும் இயல்பாக வெளிச்சமிட்டிருக்கிறார்.

அடியே சகியே வலிக்குதடி

கண்ணில் நீர்தான் துமிக்குதடி.

உள்ளங்கால்கள் குhசுதடி

உச்சந்தலை கொதிக்குதடி

மூச்சுக்காற்றும் உளறுதடி.

மண்டைத்தேசம் குளிருதடி.

இதை வாசித்து முடித்தவிட்டு அடுத்த கவிதைக்குள் நகர்கிறேன். காதல் என்றால் என்ன என உணர முயல்கிறார். அத்தனை காதல் மாற்றங்களுக்குள்ளும் தன்னை உட்படுத்திய கவிஞன் ஆற அமர இருந்து சிந்தனைச் சிறகை விரிக்கிறார்.

வெளிச்சக்குப்பை அதற்கு தொடக்கப் ப(பு)ள்ளியாக அமைகிறது. ஆரம்பகால மழலைப்பருவம் மிளிர்கிறது. அது ஒரு கனாக்காலமாக கழிந்துவிடுவது வேதனை தான். வளர வளர வயதும் ஏற ஏற ஏனோ நாமெல்லாம் ஆண், பெண் என பிரிந்து கிடக்கிறோம். அதே மழலை உணர்வோடு இங்கே இந்த கவிஞன் அழைக்கிறான் தனது தோழியை. அடடாh--! திடீர் என வீரம்பேசி சிந்தனைச் சிறகை உயரவிரிக்கிறான். மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் சொற்பதங்களை இதில் எங்கே தான் சோர்ந்து போனது தெரியாமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

அடுத்து உலகம் தின்போம் கவிதையை பலமுறை வாசித்தேன். மனதில் ஒரு புத்தணர்வை புது உத்வேகத்தை தருவதான கவிதை.வாசித்து வாசித்து அந்த கவிதையோடு இரண்டறக்கலந்துவிட்டேன். தன்னைத்தானே திடப்படுத்தி மீண்டும் தனது பயணத்தில் உறுதியான நடையை தன்னகத்தே வரவழைத்திருக்கிறார்.

திரைகள் அகற்றி

முன் தெரி

திமிறித் திமிறி

முன் நகர்.

வெளிச்சக்குப்பையில் தனது சோர்வை மறைக்க பிரயத்தனப்பட்ட கவிஞன். இதில் அதனை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார். அது தானே கவிதையின் தார்ப்பரியம். துடிப்பின் துளி அதற்கு ஈடுகொடுத்து பல நம்பிக்கைகளை தாங்கி வந்திருக்கிறது.

செயற்படு பொருள் ஆச்சரியப்படுகிறேன். நல்லதொரு கவிதை.

சமூதாயத்தை

நிர்வாணப்படுத்து

அதன் காயங்களில்

முத்தமிடு

அழுக்குகளை

நக்கு.

பலமுறை இந்த கவிதை வாசிக்கத் தூண்டுகிறது. எத்தனை உண்மையை இயல்பாக சின்னச் சின்ன வரிகளுக்குள் சொல்லி முடித்திருக்கிறான் இந்த கவிஞன்.

ஒருமுறை என்ற கவிதையில் தன்னைத்தானே மீண்டும் இரண்டாவது முறையாக பகிரங்கமாக பிரகடினப்படுத்திக்கொள்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் ஏதோ குளை மினக்கெட்டு எழுதியிருக்கிறார் எண்டு நினைச்சன் நான் இன்னும் படித்து முடிக்கவில்லை முடிந்ததம் சொல்லுறன் :P

  • 1 month later...

பிறேமன் தமிழ்க்கலை மன்றமும் அப்பால் தமிழ் இணையத்தின் சலனம் அமைப்பும் 30.10.2005 ஞாயிறு ஜேர்மனி பிறேமன் நகரில் நடாத்திய 'குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்' நிகழ்வில் 'கவிக்கூர்' சஞ்சீவ்காந்தின் 'உராய்வு' கவிதை நூல் குறித்து 'செந்தமிழ்க் கோடையிடி' குமரன் அவர்களின் விமர்சன உரையின் வீடியோ பதிவு இங்கே..!!

http://www.tamilamutham.net/video/uraayvu.WMV

நிகழ்வை ஒளிவடிவில் தந்த சோழியான் அண்ணாக்கு நன்றிகள்..!

நளாயினி தாமரைச்செல்வனின் உராய்வு கண்ணோட்டத்தை வாசித்த போது உராய்வு கவிதை தொகுதி நான் இதுவரை வாசிக்கவில்லையே என வெறுப்படைகிறேன். :cry: :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.