Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!

Featured Replies

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு. பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு, “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் - இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

* ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

* ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

* செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

* 1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை - அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி - கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

* 1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் - ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே - ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 - இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

* 2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

* ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

* செப்டம்பர் 2002:

பயங்கரவாத - பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

* செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

* 2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

கருத்துப்படத்தை காண: http://www.vinavu.com/2009/05/jayalalitha-is-anti-eelam/

வினவு தளத்திலிருந்து : http://www.vinavu.com/2009/05/jayalalitha-is-anti-eelam/

தொடர்புடைய இடுகைகளின் தொகுப்பு: http://www.vinavu.com/category/politics/eelam-politics-2/

  • Replies 65
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:wub::D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:wub::lol::(:o

தற்போதய சூழ்நிலையில் எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே ஈழத்திமிழரின் எதிர்பார்ப்பு.........

20 வருடங்களாக எமக்கு எதிராக பேசிய ஜெயலலிதாவா இல்லை 3 மாதகாலத்தில் 7000 க்கு மேற்பட்ட எனது மக்களை கொன்று குவித்த சோனியா கருநாநிதி கூட்டணியா என்றால் என் வாக்கு நிச்சயம் ஜெயலலிதாவுக்கு தான்...காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை...சோனியா ** யின் ரத்த பசிக்கு மேலும் என் மக்களை பலியிட நாம் அனுமதிக்க கூடாது. இதை கருநாய்க்கு வக்காலத்து வாங்கும் தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்ன கருணாநிதிக்கு வக்காளத்தோ? பிழை விடுகிறவர்கள் ஒரு நாளும் திருந்தமாட்டார்களா?

அது இருக்கட்டும் நீங்கள் விசுவானந்ததேவனை இலங்கை கடற்படையிடம் காட்டிக்கொடுத்த பிரான்ஸ் வாழ் இரயாகரனுடன் இணைந்து கொண்டு தமிழீழ விடுதலைப்போராளிகளை தமிழகத்தில் கொச்சைப்படுத்திக்கொண்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

வினவு நீங்கள் ஜெயா பற்றி கூறியது அனைத்தும் உண்மை. மறு பக்கமாக கருணாநிதி பற்றி ஒரு அலசு அலசிவிட்டு ஒரு தராசில் போடுவோம். ஒரு பக்கம் நம்பிக்கை துரோகி. அடுத்த பக்கம் எதிரி. எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.

Edited by nunavilan

இப்பத்த சூல் நிலையில இது ஒரு தேவை இல்லா ஆய்வு...

அம்மா வாழ்க்க :D

Edited by anuja

  • கருத்துக்கள உறவுகள்

வினவு நீங்கள் ஜெயா பற்றி கூறிஅய்து அனைத்தும் உண்மை. மறு பக்கமாக கருணாநிதி பற்றி ஒரு அலசு அலசிவிட்டு ஒரு தராசில் போடுவோம். ஒரு பக்கம் நம்பிக்கை துரோகி. அடுத்த பக்கம் எதிரி. எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை நுணாவிலான் ,

கடந்த இருவருடங்களுக்கு மேலாக நெடுமாறன் , வைக்கோ , சீமான் போன்றவர்கள் பயங்கரவாத ஸ்ரீலங்கா அரச இராணுவத்துக்கு போர்ப்பயிற்சியும் , இராணுவ தளபாடங்களும் கொடுக்கின்றது என்று ஆதாரங்களுடன் கூறியும் , அதனை ஒரு பொருட்டாக எடுக்காமல் இன்று லட்சக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த கருணாநிதியைப்பற்றியும் வினவு ஒரு அலசல் அலசி இருந்தால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்த சூல் நிலையில இது ஒரு தேவை இல்லா ஆய்வு...

:D

எரிகிற கொள்ளியில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேடும் நிலையில்தான் தமிழன் தற்போது இருக்கிறான்..! :wub:

ஜெ பதவிக்கு வந்தவுடன் எப்படி நடந்து கொள்வார் என்பதிலும் அவரின் இன்றைய கோசம் வெறும் தேர்தல் கோசமே என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இரு கூட்டணிகளிற்கிடையேயான தேர்தல் வாக்குறுதிகளில் இருக்கும் முக்கிய வேறுபாடாக ஈழ ஆதரவே காணப் படுகின்றது. ஜெ வெற்றி பெற்றால் தமிழக மக்களின் ஈழ ஆதரவிற்கான ஒரு முக்கிய சான்றாகவே கொள்ளப் படும். ஏனெனில் கருணாநிதியின் வெற்றி காங்கிரஸின் ஈழ மக்கள் அழிப்புக்கான தமிழக மக்களின் ஆதரவையே புலப் படுத்தி நிற்கும்.

இலங்கையில் சிங்கள மக்கள் மகிந்தவின் கட்சிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தமையை தமிழ் மக்களின் அழித்தொழிப்பிற்கு அவர்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எந்தளவிற்கு பார்க்கப் படுகின்றதோ அதே போன்றுதான் தமிழக மக்கள் தி.மு,க + காங்கிரஸ் கூட்டணியிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கினால் ஈழ மக்களின் அழிவிற்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரித்தமையாக பார்க்கப்படும்.

தமிழகம் நீங்கலாக மற்ற அனேக இடங்களில் காங்கிரஸ் தேர்தலில் வெல்லக்கூடிய நிலை இருக்கும் இன்றைய நிலையில் தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு கொடுக்கும் ஆதரவு அவர்கள் ஈழ மக்களின் மீதான அன்பையும் மத்திய அரசின் இனவழிப்பின் மீதான தம் கோபத்தினையும் வெளிப்படுத்தி நிற்கும்

ஈழ ஆதரவினை கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க வினருடனோ அல்லது ஜெயலலிதா அற்ற மூன்றாவது அணியினருடனோ கரம் கோர்த்திருந்தார்களாயின் ஈழ மக்களின் மேலதிக நம்பிக்கையினைப் பெற்றிருப்பார்கள். அல்லது தி.மு.க கட்சியானது காங்கிரசை கைவிட்டு ஈழ ஆதரவு அணியினருடன் ஒன்று சேர்ந்து இருந்திருதார்களாயினும் இன்னும் அதிகளவு நம்பிக்கையினை பெற்றிருப்பார்கள். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லையே...ஈழ மக்கள் ஜெயாவை நம்புவது அவவின் ஆளுமையாலோ அல்லது அவவின் இன்றைய ஈழ கோசத்தினை நம்பியதாலோ அல்ல.. காங்கிரஸ் கூட்டணி இந்தியாவில் மீண்டும் வெற்றியடைந்து இலங்கையரசுடன் கைகோர்த்துக் கொண்டு மீண்டும் பேரழிவிற்கான யுத்ததினை முன்னெடுக்க கூடாது என்ற எதிர்பார்ப்பினால் ஆகும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்து பின்னால குத்தின கருணாநிதிய விட அம்மா எவளவோ நல்லவா..

எதிரிய விட துரோகியே ஆபத்தானவன் ..

மறுபடியும் அம்மா வாழ்க.....

  • கருத்துக்கள உறவுகள்

kalaigar121.jpg

மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் தன்ர முடிவு என்று சொன்ன குள்ள நரி தான் இவன்..

இந்த கேவலம் கெட்டவனொட ஒப்பிடேக்க ஜெய அம்மா எவளவோ நேர்மையானவா..

வாய் திறந்தா பொய் பேசிற கருணாநிதிய விட மனசில பட்டதை வெளிய சொல்லுற அம்மா எவளவோ வேர்றர்..

ஈழத் தமிழனை நம்ப வைச்சு கழுத்து அறுத்த கருணாநிதிய விட .. தாங்கள் ஆட்ச்சிக்கு வந்தா தனி ஈழம் அமைப்போம் என்று சொன்ன அம்மா. எவளவோ மேல்

அம்மா வாழ்க

நம்பி கெடுவது எமது அன்றாட கடமையாகிவிட்டது.

ஆனாலும் ஈழத்தமிழர்கள் எதிரிகள் தேற்கடிக்கப்படவேண்டியது அவசியம். ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் ஈழஆதரவாளர்கள் இரண்டு அணியிலும் பிரிந்து போனது துரதிஸ்டம். தற்போதைய நிலையில் இந்திரா (சோனியா)காங்கிரஸ் அ.தி.மு.க.வின் உதவியைகேட்டால் அம்மா கண்டிப்பாக அந்த அணிக்கு பெரும்பான்மையுடன் ஆதரவு கொடுப்பார். (தி.மு.க ஆட்சியை கலைக்க நிச்சயம் வற்புறுத்துவார்)

தி.மு.க தனது ஆட்சியை இழக்கும். அப்படி செய்ய நினைத்தாலும் அம்மாவுக்கு ஒரு ஆபத்து இருக்கின்றது. ஈழத்தமிர்கள் முதுகில் சவாரி செய்துவிட்டு இடையில் ஓட நினைத்தால் சட்டசபை தேர்தலில் அதனுடைய பலனை அனுபவிக்க வேண்டி வரலாம். பார்ப்போம் யார் முதுகில் யார் சவாரி செய்யப்போகின்றார்கள் என்று. பா.ஜ.க அதிக ஆசனங்களை பெற்றால் எங்களுக்கு நலம்.

சோனியா காங்கிரஸ் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டால் ஜெயா அதிக ஆசனங்களை பெற்றால் ???????????

இனிமேல் தமிழக மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவுவைப்பற்றிக்கதைத்து ஒண்டும் வரப்போறதில்லை ஆனால் அவர் சொன்னவை அனைத்தும் உண்மை அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் முன்பும் இப்படித்தான் கருநாநிதியைப்பற்றி எழுதினதுக்கு இங்க சிலபேர் பெரிய போரே நடத்தினவே அதற்குப்பிறகு அவையளின்ட முகத்தில ஜயா புசினாரு சேறு தமிழன் என்டால் என்ன ஏமாந்து ஏமாந்து போகப்பழகினவனா என்ன சொத்துக்காக தகப்பனையே கொலைசெய்யுற காலத்திலபோய் அம்மான்ட வாக்குறுதியை நம்பி ஏமாறப்போகிறோமே. நல்லது நடந்தால் நல்லது ஆனால் நல்லது மாதிரி கெட்டது நடந்தால் ? எதற்கும் ஜயாவைப்போல அம்மாவையும் நம்பி ஏமாறக்கூடாது

சரி அம்மா கைகொடுக்கிறா என்டுசொல்லுறா பார்ப்பம் கொடுத்து அதை வாராமல் விட்டால் நல்லது

வினவு நீங்கள் ஜெயா பற்றி கூறியது அனைத்தும் உண்மை. மறு பக்கமாக கருணாநிதி பற்றி ஒரு அலசு அலசிவிட்டு ஒரு தராசில் போடுவோம். ஒரு பக்கம் நம்பிக்கை துரோகி. அடுத்த பக்கம் எதிரி. எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.

நுநா நீர் சொல்லுவது முற்றிலும் சரி துரோகியை பற்றி ஒரு காச்சு காச்சியிருக்கலாம்

தமிழ் நாட்டில் ஒரு சுத்தமான தமிழன் ஆட்சிதான் தேவை.. கருணானிதியோ, ஜெயலலிதாவோ ஒரே குட்டையில் ஊறிய நாத்தம் பிடித்தமட்டைகள்..

தமிழகமக்களை ஏமாளிகளாக, கையாளாதவர்களாக வைத்திருந்து தமிழ்பேசும் ஏமாற்றும் அரசியல் சாக்கடைகள்..

தற்போதைய நிலையில் ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டுக்க்கு காத்திருந்து கிடைக்காமையினால் ஈழக்கோசத்துடன் தான் ஆட்சியை பிடிக்க ஒரு யுக்தியை கையாண்டுள்ளார், அவரின் கடந்த காலம் செயல்கள், உரைகள் எல்லாம் சாட்சியங்கள்... அண்மையில் கூட யுத்தமென்றால் மக்களும் கொல்லப்படுவார்கள் எனக்கூறி இருந்தார்..

தற்போதைய நிலைமையில் கருணானிதி தனது ஊழல், மகளின் ஊழல்களை மறைப்பதற்கு மத்திய அரசுடன் சேர்ந்து ஈழத்தமிழன அழிப்பு கொள்கைக்கு பச்சக்கொடிகாட்டி தமிழகமக்களுக்கு தான் காப்பவர்மாதிரி இரட்டை வேசம் போட்டு தமிழ்மக்கள் முதுகில் குற்றியுள்ளார்....

இவரின்(பேடி) ஒப்பிடும் போது ஜெயலலிதா துணிச்சல் மிக்க கருத்துக்களை நேருக்கு நேர் சொல்கிறார்..

அதாவது முன்னைய நிலையிலுருந்து மாறிய கருத்துக்களை ஈழம் ஆதரவை பகிரங்கமாக கூறியுள்ளார் துணிச்சலுடன்... தமிழ்மக்களும் இந்திய மத்திய அரசுகளிடம் நீதி கிடைக்காமல் அதற்கு மாறக இலஙைக்கு ஒத்துழைப்பும் செய்து தமிழகமக்களின் உணர்வுகளை மதிக்கத நிலையில்

ஜெயலலிதவின் இந்த புதிய ஈழம் உரைகல் ஒத்தடம் கொடுப்பதாக ஆற்றில் விழுந்தவனுக்கு ஒரு குட்சி கிடைத்தமாதிரி இருகிறது.. இதனை வைத்து கரை சேரமுடியுமா? அல்லது இதுவும் ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி என்னும் கதையாகும?

தமிழர் நம்பி, நம்பி ஏமாறுவது கடந்த வரலாறு...

இனியும் ஏமாறது இருப்பதானால் சீமான் போன்ற, நெடுமாறன் போன்ற தமிழர்கள் சுத்தமான தமிழ் உணர்வாளர் கைய்க்கு தமிழகம் புரட்சிகள் மூலம்(தேர்தல்?) வர தமிழகமக்கள் கிரமத்திலிருந்து விழிப்புணர்ச்சியுடன் ஆரம்பித்தால் தமிழகம் என்ன உலக தமிழ்மககளுக்கும் வலுவான இனமாக்கப்படும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னிடம்

இருப்பது ஒரு குண்டு.,

எதிரியும், துரோகியும் சமதூரத்தில்

எவனை சுடுவாய் முதலில்.,

உன்

குண்டின் வேகம்

தமிழீழத்தின் தாகம்.

-பெரியார் குயில்

எதிரி-செயலலிதா

துரோகி - கருணா-நிதி

குண்டு-ஓட்டு

தெரிந்தே சுடுவோம்., கருணாநிதியை

செயலலிதாவிற்காக அல்ல.,

உடன் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்காக!!

வினவு.. நீங்களும் கருணாநிதி போல ஆகிவிட்டீங்களே.. அவர்தான் ஜெயலலிதாவுக்கு பதிலளிக்க முடியாமல் திணறும்போது 'ஜெயலலிதா முன்பு அப்படி சொன்னார்... இப்படி சொன்னார் என்று பழைய துணி கிழிவது போல மேடையில் பேசுவார்... இப்போ அந்த வேலையை வினவு எடுத்திட்டீங்களா?

ஜெயலலிதா சொன்னதை செய்யிறாவோ இல்லையோ அது வேறு விடயம். கருணாநிதி தோற்கவேண்டும் அதுதான் இப்போதைய தேவை.

இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்க தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.

இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.

எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.

அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட காணொலிக் [ Video] காட்சிகளை இலத்திரனியல் காணொலித் தட்டில் [DVD] எனக்கு திரையிட்டு காண்பித்தார்.

அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, காணொலி காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த காணொலி காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.

அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.

உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை இராணுவம் உத்தரவிடுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.

நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.

இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.

கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...

குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை [Concentration Camps] நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.

இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை இராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணிவெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?...

இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.

இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அடிபட்டு களைத்து ஒதுங்கிக்கொள்ளட்டும்......... தமிழீழ தாகம் மட்டும் தணியாது எரியட்டும். எல்லோரும் கிழடுபத்தி இறந்துவிடுவார்கள்..... தலைவனால் வளர்க்கபட்ட தளபதிகளின் போர்வீச்சால் ஈழம் மலரும்!

பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று குரல் கொடுக்காத சொந்த நாட்டின் நலனை விரும்பும் அமெரிக்கர்களோ இஸ்ரவேலர்களோ இல்லை. காரணம் அதை கொடுக்காது இருப்பதால் வீணாக தமது நாடு அழிந்து கொண்டிருக்கின்றது என்ற ஆக்க பூர்வமாக சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். முதலாளிகளின் நப்பாசை ஒரு போதும் ஜயிக்க போவதில்லை. முதலாளிதத்துவத்தை தூக்கி பிடித்த அமெரிக்காவால் உடனேயே கைவிட முடியாது. அததான் தற்போது லாபம் தனியார் மயம்.... நட்டம் பொதுஉடமை. என்ற ஒரு புதிய விடயத்தை கண்டுபிடித்து நாட்டு மக்களின் வரி பணத்தில் முதலாளிகளின் நஸ்டங்களை ஈடுசெய்திருக்கின்றது. இருப்பினும் இது நிலைக்க போவதில்லை. பில்லியன் டாலர் வாங்கி கொண'டு போனவர்கள் வெள்ளை மாளிகைக்கு இப்போதே திரும்ப தொடங்கிவிட்டார்கள். தந்தது முடிந்து விட்டதென்று. முதலளித்துவம் நிலைப்பதென்பது நிஜமற்ற நிழல் நிலைப்பது போன்றதொன்று. காரணம் ஒரு இடத்தில் இருக்கும் பொருளின் பெறுமதியின் விம்மங்களைத்தான் முதலீடு செய்கின்றார்கள். விம்மங்கள் எவ்வாறு நிலைக்கும்? ஜெயலலிதா கருணாநிதி சோனியா எல்லோரும் கூடி நின்று ஆட வேண்டும் அதுதான் எமக்கு நன்று! சில துன்பங்கள் எம்மை சு}ழ்ந்து கொள்ளும் தான் அதை தடுக்க முடியாது. பிறப்பினில் கூட தாய்க்கு வலியிருக்கும்தானே. வலி வேண்டாம் என ஒருதாய் நினைத்திருப்பின் நாம் எல்லாம் பிற்காமலயே இருந்திரப்போமே? ஈழ தமிழர்களாகிய நாமும் இது போன்று முன்பு ஒரு போதும் ஒன்று கூடியதில்லை 20வீதமானவர்கள்தான் போரின் சுமையை தமது தோள்களில் தாங்கினார்கள். தமது பிள்ளைகளை போராளிகளாக்கினார்கள் மிகுதி நாமெல்லாம் அவர்களின் சூட்டில் குளிர்காய்ந்தோம் அதற்கு தண்டனையும் வேண்டாமா?

பணபேய்கள் பரணியெல்லாம் ஆடட்டும். அதன் நசிப்பில் இருந்து புது ஜனநாயகம் முளைக்கட்டும். அங்கே ஈழங்கள் பல மலர்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன் கடந்த கால நினைவுகளை மீட்டி அசைபோடுவற்குரிய காலம் இதுவல்ல.

அந்தநிலையில் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் சிந்திக்க நேரமுமில்லை.

குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு பழைய சரித்திரங்கள் தேவையில்லை.

தற்போதைய நிலையில் யார் குத்தினாலும் அரிசியானால் போதுமென்ற மனப்பான்மையே ஒவ்வொரு ஈழத்தமிழனின் நிலைப்பாடு ஆகும்.

நாங்கள் ஜெயலலிதாவின் ஈழத்தமிழருக்கான எதிர்நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்தவர்கள் தான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு எமக்கு ஆதரவுக்குரல்தான் அதிக பட்சமாக தேவைப்படுகின்றது . முக்கியமானதும் கூட.

48 மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்பவர்களும்,பொம்மை மன்மோகனுக்கு தந்தி அடிப்போம் என்று சொல்பவர்களும் எமக்கு தேவையில்லை.

எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம். அது நாகரீகமுமில்லை. ஆனால் அவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தேர்தல் விஞ்நாபனம் செய்யும் போது இந்தியராணுவத்தால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் என்ன புளகாங்கிதம் கொள்ளமுடியுமா?

ஜெ சொல்லிவிட்டு செய்பவர்.கருணா சொல்லாமல் செய்பவர். கொள்கை ஒன்று. செய்முறை வேறு. எம்மைப்பொறுத்தவரை அவ்வளவுதான்.

இம்முறை ஜே சொல்லியிருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.

வேதனையில் விளிம்பில் இருக்கும் எம்மவரை ஏமாற்றும் காலம் போய்விட்டது என்பதை நினைவில் வைத்திருந்தால் :D

நம்பி இருந்தவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு சாகடிக்க பார்த்து கொண்டிருப்பவர் கருணாநிதி. ஆனால் யெயலலிதா புலிகள் தங்களை பலம் என்று காட்டிய போது அவர்களது பலம் அறிந்து கடுமையான விமர்சனங்களை வைத்தார் அது எங்களை ஒன்றும் பாதிக்கவில்லை ஆனால் இன்று இந்திய வல்லாதிக்க சதியால் பலவீனம் அடைந்த எங்களை பார்த்து ஆதரவான வார்த்தை களை கூறுவது மனத்திற்கு தெம்பாக இருக்கிறது.

சிறிலங்கன் கருநாவும் சரி தமிழக கருனாவும் சரி இருவரும் ஒரே காரியத்தை தான் செய்கிறார்கள்.

ஜெயாவின் வரலாறு... நிஜம்!

ஜெயாவின் மாற்றம்... காலத்தின் கட்டாயம்!

ஜெயாவின் வெற்றி... வரலாற்றுப் பாடம்!

ஜெயாவின் தமிழீழம்...?

Edited by சாணக்கியன்

வினவு.. நீங்களும் கருணாநிதி போல ஆகிவிட்டீங்களே.. அவர்தான் ஜெயலலிதாவுக்கு பதிலளிக்க முடியாமல் திணறும்போது 'ஜெயலலிதா முன்பு அப்படி சொன்னார்... இப்படி சொன்னார் என்று பழைய துணி கிழிவது போல மேடையில் பேசுவார்... இப்போ அந்த வேலையை வினவு எடுத்திட்டீங்களா?

ஜெயலலிதா சொன்னதை செய்யிறாவோ இல்லையோ அது வேறு விடயம். கருணாநிதி தோற்கவேண்டும் அதுதான் இப்போதைய தேவை.

ஈழத்தமிழன் கடந்த கால நினைவுகளை மீட்டி அசைபோடுவற்குரிய காலம் இதுவல்ல.

அந்தநிலையில் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் சிந்திக்க நேரமுமில்லை.

குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு பழைய சரித்திரங்கள் தேவையில்லை.

தற்போதைய நிலையில் யார் குத்தினாலும் அரிசியானால் போதுமென்ற மனப்பான்மையே ஒவ்வொரு ஈழத்தமிழனின் நிலைப்பாடு ஆகும்.

நாங்கள் ஜெயலலிதாவின் ஈழத்தமிழருக்கான எதிர்நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்தவர்கள் தான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு எமக்கு ஆதரவுக்குரல்தான் அதிக பட்சமாக தேவைப்படுகின்றது . முக்கியமானதும் கூட.

48 மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்பவர்களும்,பொம்மை மன்மோகனுக்கு தந்தி அடிப்போம் என்று சொல்பவர்களும் எமக்கு தேவையில்லை.

எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம். அது நாகரீகமுமில்லை. ஆனால் அவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தேர்தல் விஞ்நாபனம் செய்யும் போது இந்தியராணுவத்தால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் என்ன புளகாங்கிதம் கொள்ளமுடியுமா?

ஜெ சொல்லிவிட்டு செய்பவர்.கருணா சொல்லாமல் செய்பவர். கொள்கை ஒன்று. செய்முறை வேறு. எம்மைப்பொறுத்தவரை அவ்வளவுதான்.

இம்முறை ஜே சொல்லியிருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.

வேதனையில் விளிம்பில் இருக்கும் எம்மவரை ஏமாற்றும் காலம் போய்விட்டது என்பதை நினைவில் வைத்திருந்தால் :wub:

எல்லோரும் அடிபட்டு களைத்து ஒதுங்கிக்கொள்ளட்டும்......... தமிழீழ தாகம் மட்டும் தணியாது எரியட்டும். எல்லோரும் கிழடுபத்தி இறந்துவிடுவார்கள்..... தலைவனால் வளர்க்கபட்ட தளபதிகளின் போர்வீச்சால் ஈழம் மலரும்!

பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று குரல் கொடுக்காத சொந்த நாட்டின் நலனை விரும்பும் அமெரிக்கர்களோ இஸ்ரவேலர்களோ இல்லை. காரணம் அதை கொடுக்காது இருப்பதால் வீணாக தமது நாடு அழிந்து கொண்டிருக்கின்றது என்ற ஆக்க பூர்வமாக சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். முதலாளிகளின் நப்பாசை ஒரு போதும் ஜயிக்க போவதில்லை. முதலாளிதத்துவத்தை தூக்கி பிடித்த அமெரிக்காவால் உடனேயே கைவிட முடியாது. அததான் தற்போது லாபம் தனியார் மயம்.... நட்டம் பொதுஉடமை. என்ற ஒரு புதிய விடயத்தை கண்டுபிடித்து நாட்டு மக்களின் வரி பணத்தில் முதலாளிகளின் நஸ்டங்களை ஈடுசெய்திருக்கின்றது. இருப்பினும் இது நிலைக்க போவதில்லை. பில்லியன் டாலர் வாங்கி கொண'டு போனவர்கள் வெள்ளை மாளிகைக்கு இப்போதே திரும்ப தொடங்கிவிட்டார்கள். தந்தது முடிந்து விட்டதென்று. முதலளித்துவம் நிலைப்பதென்பது நிஜமற்ற நிழல் நிலைப்பது போன்றதொன்று. காரணம் ஒரு இடத்தில் இருக்கும் பொருளின் பெறுமதியின் விம்மங்களைத்தான் முதலீடு செய்கின்றார்கள். விம்மங்கள் எவ்வாறு நிலைக்கும்? ஜெயலலிதா கருணாநிதி சோனியா எல்லோரும் கூடி நின்று ஆட வேண்டும் அதுதான் எமக்கு நன்று! சில துன்பங்கள் எம்மை சு}ழ்ந்து கொள்ளும் தான் அதை தடுக்க முடியாது. பிறப்பினில் கூட தாய்க்கு வலியிருக்கும்தானே. வலி வேண்டாம் என ஒருதாய் நினைத்திருப்பின் நாம் எல்லாம் பிற்காமலயே இருந்திரப்போமே? ஈழ தமிழர்களாகிய நாமும் இது போன்று முன்பு ஒரு போதும் ஒன்று கூடியதில்லை 20வீதமானவர்கள்தான் போரின் சுமையை தமது தோள்களில் தாங்கினார்கள். தமது பிள்ளைகளை போராளிகளாக்கினார்கள் மிகுதி நாமெல்லாம் அவர்களின் சூட்டில் குளிர்காய்ந்தோம் அதற்கு தண்டனையும் வேண்டாமா?

பணபேய்கள் பரணியெல்லாம் ஆடட்டும். அதன் நசிப்பில் இருந்து புது ஜனநாயகம் முளைக்கட்டும். அங்கே ஈழங்கள் பல மலர்ந்திருக்கும்.

ஜெயாவின் வரலாறு... நிஜம்!

ஜெயாவின் மாற்றம்... காலத்தின் கட்டாயம்!

ஜெயாவின் வெற்றி... வரலாற்றுப் பாடம்!

ஆனால் தமிழ் ஈழம்....? ஜெயாவின் தமிழீழம்...?

:D

Edited by Netfriend

ஜெயலலிதா தோற்று போனார் எண்று வைத்து கொள்வம் .... அப்ப BBC தமிழில் செய்தி ஓண்றை போடுவார்கள்...

அந்த செய்தி... கீழே..

உலக தமிழர்கள் ஈழத்தமிழரின் தனி நாட்டு கோரிக்கையை நீராகரித்தனர்..

நடந்து முடிந்த இந்திய பாராளுமண்ற தேர்தலில் அ இ அதிமுக இலங்கையில் தனி ஈழம் அமைப்போம் எனும் கோரிக்கையோடு பமக, மதிமுக கம்யூனிக்கள் எண்று பல கட்சிகளோடு கூட்டு சேர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டி இட்டார்.. ஆழும் காங்கிரஸ் திமுக மீது அதிர்ப்தியில் இருந்த தமிழக மக்கள் செல்வி ஜெயலலிதாவின் தனி ஈழக்கோரிக்கையால் அந்த கட்ச்சிகளை தோற்கடித்து திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தனர்...

இது சம்பந்தமாக இலங்கையின் ஊடக அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவின் கருத்துக்களை செய்தி ஆய்வில் கேட்க்க்கலாம்.. மேலதிகமா அண்ணா பல்கலைக்களகதின் விரிவுரையாளரும், அரசியல் விமர்சகருமான புழுத்தலை புடுங்கியின் கருத்துக்களை மக்கள் மண்றத்திலும் கேட்க்கலாம்...

BBC தமிழ்

அரசியல் விமர்சகருமான புழுத்தலை புடுங்கியின் கருத்துக்களை மக்கள் மண்றத்திலும் கேட்க்கலாம்...

:D

Edited by வசி_சுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.