Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் பெற்றுத்தர இயன்றவரை முயற்சிப்போம் - கலைஞர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழ மக்களுக்குத் தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளளோம். அவர்களது பிரச்சனைக்க நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு கடுமையான காச்சல் காரணமாக வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதரண பகுதிக்கு நேற்று மாற்றப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருவதாகவும், அவருடன் இனைந்து, கலைஞர் அவர்களும், தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் முதல்வரின் உடல் நலக்குறைவினால் , சோனியா காந்தியின் வரவும் ரத்து செய்யப்பட்டது. இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்யும் திட்டமும் நேற்று நடைபெறவில்லை. ஆயினும் சாதாரண பிரிவுக்ககு மாற்றம் செய்யப்பட்டதும், தேர்தற் பிரச்சாரம் முக்கிய கட்டத்தில் இருப்பதையுணர்ந்து முதல்வர் கருணாநிதி, தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். வைத்தியசாலையில் இருந்தவாறே தொலைக்காட்சி வழியாக அவர் ஆற்றிய உரை, திமுகத் தொண்டர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் ஆற்றிய உரையில்: என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, வணக்கம், வாழ்த்துக்கள். நான் மருத்துவமனையில் நலமாக இருக்கிறேன்.

கடந்த பிப்ரவரி திங்கள் 11-ம் நாள் அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக் கொண்டேன். இப்போது 2-வது கண்டம், இந்த கண்டத்திலும் உன்னை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கின்றேன்.

மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதை போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இருப்பது ஒரு உயிர், அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனையாண்டு காலமாக இளமை முதல் பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நெருங்கி விட்டது, தேர்தல் பணிகளில் நம்முடைய திராவிட முன்னேற்றக்கழக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதே போல விடுதலை சிறுத்தைகளும் அயர்வின்றி ஆங்காங்கே, பம்பரம்போல் சுழன்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

அதை கேட்க, கேட்க மருத்துவமனையிலே இருக்கின்ற எனக்கு மருந்தாக அவை ஆகின்றன. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வீடு வீடாக செல்! வாக்குகளைக் கேள்! தெரு தெருவாக அலைந்திடு! வீதி வீதியாக சென்றிடு ஊரெல்லாம் சுற்றிடு! தமிழ்நாட்டை காப்பாற்றிடு! இந்தியத் தாயகத்தை பாதுகாத்திடு! -அதற்காகவே தி.மு.க கழகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே.

நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்

என்னை நம்பு! என்னை மறவாதே! நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன்! எங்களுக்காக நீ!

உங்களுக்காக நான்! என்பதை மறந்து விடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்! நான் நேரில் உன்னோடு இல்லாமலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இருதயத்தால் உன்னோடு ஒன்றிப் போய் இருக்கின்றவன் எனக்கு நிம்மதியை வழங்கு!

வெற்றியை தேடித்தா! வெற்றி! வெற்றி! வெற்றி! அதைத்தவிர வேறு ஒன்றையும் எண்ணாதே! அதற்காக உழைத்திடு, அயர்வில்லாமல் உழைத்திடு என்று வேண்டி கேட்டுக்கொண்டு யார் எந்த பிரசாரம் செய்தாலும் என்ன பொய்யுரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுகளிலே இறங்கினாலும் அவைகளையெல்லாம் நம்பாதே!

என்னுடைய அன்பிற்கும், பண்பிற்கும் உரிய பேராசிரியர்கள் பலரும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த அறிஞர் பெருமக்களும், தமிழ்பண்பாடு மறவாத நம்முடைய தாயகத்தை சேர்ந்த என்னுடைய தனி மதிப்பிற்குரியவர்களும், விடுத்திருக்கின்ற அறிக்கையை நானும் கண்டேன்.

தமிழ்நாட்டிலே எப்படிப்பட்ட பண்பாட்டை, அரசியல் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் அதற்கு அணு அளவும் சேதாரமில்லாமல், அவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதற்கு ஏற்ப நட, நட என்று கேட்டு விடைபெறுகிறேன், வணக்கம்

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-07-05-36-40

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே. யம தர்ம இராஜ்ஜியதிலா? அங்கேயும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்.

எல்லாம் அந்த 500 மில்லியன் சிட்டை செய்த வேலை. சொறி நாயும் விட்டுட்டுது.

யாரைத்தான் நம்புவதோ பேதை ...........

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்
.

அட நிம்மதி என்றால் இதுதானோ.......ஒவ்வோரு நாளும் மக்கள் செத்தால் அதுதான் நிம்மதி.....இவரின்ட கருத்துக்கு கருத்து எழுதியே எனக்கு விசர் வரப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

.

அட நிம்மதி என்றால் இதுதானோ.......ஒவ்வோரு நாளும் மக்கள் செத்தால் அதுதான் நிம்மதி.....இவரின்ட கருத்துக்கு கருத்து எழுதியே எனக்கு விசர் வரப்போகுது

எனக்கு விசர் வந்துட்டுது .

வாக்கு சுத்தமாய் மாறிவிட்டது என்று சொல்லப் போதுமான ஆதாரம். சன்னியில் உலத்திக் கொண்டிருந்தும் பதவிக் கட்டில் இருந்து இறக்குகின்றார்கள் இல்லையே.

நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.

அந்தாள் சொல்லுறது உண்மைதான். கிழடு வைத்தியசாலையில் என்று அறித்ததும் ஈழ தழிழர்கள் சனி விட்டது என்று ஒரளவு நிம்மதி அடைத்தது உண்மைதானே?

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி பயத்தில் வாக்கு சுத்தமாக மாறி விட்டது.

இப்பதானே புரிகின்றுது

ஏன் வடிவேலு காமெடி செய்வத விட்டுவிட்டார் என்று

இந்தாளை விட எவனய்யா பெரிய காமெடியன்

போர் நிறுத்தம் செய்ய கலைஞர் முயற்சித்ததை நாங்கள் பாத்தம் தானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைஞர் கடைசி நேரத்திலையாவது முக்கி பார்ப்பம் என்று நல்லாத்தான் முக்கிறார் :o

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய கலைஞரைக் கைது செய்ய வேணும். பாரத மாதாவுக்கு ஜெய். :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜயாவுக்கு என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை .........இறுதிக்கட்ட புலம்பலோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் பெற்றுத்தர இயன்றவரை முயற்சிப்போம் - கலைஞர்

இதை தான் அறளை பெயர்தல் என்பதோ. :o

தன்னால் முடியாது என்று தெரிந்தும் , இவருக்கேன் தேவையில்லாத வேலை?

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

இது எமக்காக சொல்லப்பட்டதல்ல..........

அவரது கோடானுகோடி தொண்டர்களுக்காக சொல்லப்பட்டது

தான் படுத்துவிட்டாலும் தொண்டர்கள் தேர்தல் வேலைகளை தடையின்றி செய்யவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட ஒன்று.

ஆனால் உண்ணாவிரதமிருந்து தனது மரியாதையை கெடுத்துக்கொண்ட கலைஞர் அவர்கள்

;இந்த வேண்டுகோளின்பின் தனது தொண்டர்களையும் அவர்களது மரியாதையையும் கெடுத்துக்கொண்டுள்ளார்

இதன்மூலம் இன்னும் தோல்வியை அவர் அதிகரித்திருக்கின்றார் என்றே எனக்குப்படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனில் வாசகர் எழுதிய கம்மண்ட்:

"கருணா" நிதி: நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.

வாசகர்: மரணத்திற்கு மற்றொரு பெயர் நிம்மதி???

இப்ப புரியுதா? "கருணா" நிதி ஈழ மக்களுக்கு முழு "நிம்மதியும்" கொடுக்காமல் தான் "நிம்மதி" அடைய மாட்டர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயதுபோட்டுதெல்லோ அதுதான் ஆள் உளறுறார்

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களிடியே நடந்த சம்பவம் உண்மை.........கற்பனை நிஜமாக வேண்டும் .......

..சற்று பொறுத்து இருப்போம் ...........தங்கா பதிவுக்கு நன்றி .............இதை ஒரு நிகழ்வாக பார்த்திருக்கிறேன் டி வீ இல .....உங்கள் கற்பனை அபாரம் .

........நிஜமாக வேண்டும் .......இது தான் ஜீவ மரண போராட்டமென்பது ..............ஒற்றுமையே பலம் .

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர் தமிழீழத்தை ஆதரித்த போது நீங்களும் ஆதரித்தீர்கள். அப்புறம் ஜெயலலிதா தமிழீழத்தை தூசித்த போது நீங்களும் தூசித்தீர்கள் அல்லது ஒதுங்கி இருந்தீர்கள். இப்போ ஜெயலலிதா தமிழீழத்தை ஆதரித்தவுடன் நீங்களும் நீங்களும் என்றீங்கள். உங்களுக்கென்று சுயமா ஒரு கொள்கை இல்லையா ஐயா. எப்படி நீங்கள் இத்தனை வருடங்கள் அரசியல் செய்யுறீங்களோ. சின்ன வயதில நல்லா பிட் அடிச்சிருப்பீங்க போல..! :icon_idea::o:unsure:

இந்தியப் படைகள் ஈழத்தில் தமிழனப் படுகொலையை செய்துவிட்டு திரும்பிய போது வரவேற்கப் போக மறுத்த நீங்களா.. இன்று ஈழத்தில் யுத்த நிறுத்தம் என்று பொய் சொல்லித் திரிவது. முடியவில்லை ஐயா.. உங்களின் இந்தத் துரோகத்தை தாங்க. அன்று ஒரு தடவை இந்தியப் படைகள் ரப்பர் செல் அடிக்கிறதே தவிர தமிழ் மக்களைக் கொல்லவில்லை என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சென்னையில் இருந்து கொண்டு அறிக்கை விட்டது போல் நீங்களும் இருக்கிறீர்களே.. அவரைப் போல நீங்களும் அடிப்படை மனித நேயத்தையுமா அரசியல் சாக்கடைக்குள் தொலைத்துவிட்டீர்கள். :unsure:

Edited by nedukkalapoovan

தி.மு.க. வை காங்கிரஸ் கை கழுவி விட்டது: டாக்டர் ராமதாஸ் பேட்டி

தி.மு.க. வை காங்கிரஸ் கை கழுவி விட்டது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது"-

கேள்வி:- நடைபெற இருக்கும் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள். அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறீர்கள்?.

பதில்:- அதுபற்றி அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் கமிஷனிடம் தான் உள்ளது.

கேள்வி:- தேர்தல் கமிஷன் நடவடிக்கை எப்படி உள்ளது?.

பதில்:- தேர்தல் கமிஷன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. அதே சமயம் சென்னைக்கு வந்திருந்த தேர்தல் கமிஷனர்களை அன்புமணி சந்தித்து பேசியுள்ளார். அப்போது தி.மு.க. வினரின் அத்துமீறல்கள் குறித்து அவர் புகார் செய்துள்ளார். மேலும் தேர்தல் கமிஷனர்களிடம் ஆளுங்கட்சிக்கு துணை போகும் வேலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேள்வி:- ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ,தி.மு.க., காங்கிரசுடன் கூட்டு சேரும் என்று கூறியுள்ளாரே?

பதில்:- இதில் இருந்து 2 விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்று தி.மு.க. வை காங்கிரஸ் கை கழுவி விட்டது. இரண்டாவது தி.மு.க. வெற்றி பெறாது என்பவைதான் அவைகள்.

கேள்வி:- நீங்கள் சுற்றுப் பயணம் செய்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?.

பதில்:- மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 3 தொகுதிகளைத் தவிர மீதம் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு பெரிய அளவில் ௫வெற்றி வாய்ப்பு உள்ளது. எங்கள் அணிக்கு ஆதரவு அலையும், தி.மு.க. அணிக்கு எதிர்ப்பு அலையும் வீசுகிறது.

கேள்வி:- இலங்கை பிரச்சினை தொடர்பாக, சோனியா காந்தி வரும் போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று திரைப்படத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதே?.

பதில்:- அது மாதிரி செயலில் ஈடுபடுவது அவரவருடைய விருப்பமாகும்.

கேள்வி:- மத்தியில் 3-வது அணி ஆட்சிக்குவர வாய்ப்பு உள்ளதா?

பதில்:- மத்தியில் 3-வது அணிதான் ஆட்சி அமைக்கும்.

கேள்வி:- 3-வது அணிக்கு யார் தலைமை தாங்குவார்கள்?.

பதில்:- தேர்தலுக்கு பிறகு தான் அது பற்றி தெரியும்.

மேற்கண்டவாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

http://www.vikatan.com/

(putthan @ May 7 2009, 06:53 AM)

அட நிம்மதி என்றால் இதுதானோ.......ஒவ்வோரு நாளும் மக்கள் செத்தால் அதுதான் நிம்மதி.....இவரின்ட கருத்துக்கு கருத்து எழுதியே எனக்கு விசர் வரப்போகுது

எனக்கு விசர் வந்துட்டுது .

தமிழரை விசராக்குவது தான் கொலைஞ்சரின் கடைசி ஆசைபோல்.... :unsure: :unsure:

(கொ) கலைஞருக்கு பெட்டி காத்திருக்காம்.. அவர் கலைஞர் வந்து படுக்குறது தான் மிச்சமாம்..

கலைஞருக்கு கடசியா ஒன்று மட்டும் சொல்ல விருப்புகிறேன்..

ஒரு மனிதன் பிறப்பது.. சுற்றத்தாருக்கு இன்பம்..

அவன் இறப்பது.. சுற்றத்தாருக்கு துன்பம்..

இவை இரண்டும் மாறினால் அசிங்கம்.. ( பிறப்பது.. துன்பமாகவும் & இறப்பது....இன்பமாகவும்..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.