Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அண்ணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட 4 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டன் தொலைக்காட்சிக்காரன் தான் இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் போட்டு குடல்வெளியை வராக்குறையாய் வாந்தியெடுக்கிறான்.

அவங்கள் எடுத்தால் ......., பித்த வாந்தி அல்லது மசக்கை வாந்தி தான் எடுப்பாங்கள் .

  • Replies 80
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழப்பு : இராணுவம் பொய் பிரசாரம்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில் 250 இற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் இது இலங்கை அரசின் பொய் பிரசாரம் என தெரியவந்துள்ளது

http://www.swissmurasam.net/srilanka/14402...8-10-42-36.html

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தலைவரது மரணம் பற்றிப் பலவிதமான கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறது. முதலில் தலைவர் அம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி தப்பிச் செல்ல எத்தனித்த போது தாம் சுட்டதில் அது தீப்பற்றி எரிந்ததாகக் கூறியது. இப்போது, தலைவரும், அவருடன் பொட்டம்மான், சூசையும் ஒரு கவசமிடப்பட்ட வானிலும், இன்னொரு பேரூந்தில் பலத்த ஆயுதங்களுடன் போராளிகளும் முன்செல்ல முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நேராக வந்தார்களாம், அப்போது இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்ததாம், இரண்டு மணித்தியாலக் கடும் சண்டைக்குப் பின்னர் அந்த வான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி அழித்தார்களாம். அதெப்படி ரெண்டு மணித்தியாலச் சண்டைக்குப் பிறகும் தலைவர் அந்த வானிற்குள் அசையாமல் இருந்தார்? வேடிக்கை பார்த்திருப்பாரோ??!!!இதை என்னவென்று சொல்வது?முன்னேறிவரும் ராணுவத்தை நோக்கி எவராவது தப்பிச் செல்லும் நோக்குடன் வருவார்களா? தற்கொலைத்தாக்குதல் நடத்த வந்தார்கள் என்று சொல்ல நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படியானாலும், எதற்கு பலத்த ஆயுதம் தரித்த போராளிகள் பேரூந்தில் முன்செல்ல வேண்டும்? அதுவும் ராணுவத்தை நோக்கி? எதற்கு தலைவரும், பொட்டரும், சூசையும் ஒன்றாக ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும்? எங்கேயோ உதைக்கிறதே? நாளைக்கு இன்னுமொரு கதை வரும், தலைவர் விமானத்தில் பறந்த போது தாம் அதைச் சுட்டு வீழ்த்தியதில் விமானம் கடலுக்குள் வீழ்ந்து விட்டதென்று....ஆகவே சற்றுப் பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மக்கள் இழப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது அதை கொச்சைப்படுத்தி கதைத்தவர்கள் மீது சேறு பூசி போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறி பொய்பிரச்சாரத்தை முன்னெடுத்து இப்போது....

உங்கடை நிகழ்சிநிரலுக்கு அமைவா தேவையென்டா முன்னிலைப்படுத்துங்கோ இல்லையெண்டா பின்னிலைப்படுத்துங்கோ!

வன்னி பொதுமக்கள் சும்மா சாகமா சிறுவர் முதல் முதிவர் பெண்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தி போராடி சாக வேணும் என்று எழுதினவர் நீங்கள். இறுதிவரை அந்த சனம் குடும்பம் குடும்பமா அப்பாவிகளாகவே ஒப்பாரி வைத்து இறந்ததன் மூலம் என்ன படிப்பினையை பெற்றீர்கள்? யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில சஞ்சரிக்கும் உங்கள் நினைத்து அனுதாப்படுகின்றேன்.

உங்கள் குருர ஆசை போலவே வன்னிமக்களுக்கு இன்று ஏற்பட்ட அவல நிலை நாளை எங்களுக்கு ஏற்படும்போது இன்று அவர்கள் அதை எப்படி எதிர் நோக்கினரோ அப்படியே நாங்களும் எதிர் நோக்குவோம்!

அப்போதும் நீங்கள் இப்போது போலவே எங்கள் சடலங்களை வைத்து உங்கள் குருர ஆசைகளை நிறைவேற்றுங்கள் :rolleyes:

மக்களை பற்றி சிந்திப்பவனே..... ஒரு தேசத்தின் விடியல் பற்றி சிந்திப்பவன்.

அவனின் வாழ்க்கை ஒரு போராகவே இருக்கும்...... மக்களும் மாக்களாக அன்றி போராளிகளாகி தேசத்தை விடிவிக்க வேண்டும் என்ற வெறியிருக்கும்.

தவிர குதர்கம் பேசுவோருக்கு மக்களின் இறப்பு எண்ணிக்கை மட்டும் தெரியுமே தவிர..... வழி தெரியாது.

வலிகளில்லாமல் வாழ்க்கை இல்லை. வலிக்கு என் தாய் பயந்திருந்தால் .ன்று நானே இருந்திருக்க முடியாது.

மக்களின் நலன் காத்த நாயகர்களையும் நாம் அறிவோம் ....... நக்கி வாழும் நாய்களையும் நாம் அறிவோம்....... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளையும் நாம் அறிவோம்.

தமிழ் உணர்வுள்ள ஒருவன் எஞ்சி வாழும் வரை...... கரையோடிகளின் வாழ்வு வெறும் கனவே.

எமது போராளிகளும் தளபதிகளும் வீணாக இறக்கவில்லை. பலரின் முகங்களை எமக்கு தோலுரித்து காட்டிவிட்டே இறக்கின்றார்.

எதிரியின் பலத்தை மட்டுமே ஆராய்ந்து போனார்கள் அவர்கள். சில முகமூடிகளையும் ஆராய்ந்து தொடரும் போராட்டம் இனிதே வெல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் புலிகளை அழித்தால் எல்லாம் சரிவரும் என்று சொல்லித்திரிந்த தமிழ் வே.......மக்களும், இந்திய நாய்களும் சர்வதேசச் சனியங்களும் மகிந்தவிடம் எங்களுக்கென்று ஒரு சிறு கிராமமாவது கேட்டுப் பார்க்கட்டும். இந்தியா செய்ததெல்லாம் எங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த புலிகள் எனும் பேரியக்கத்தை அழித்து சிங்களப் பேயிடம் உண்வாக எங்கலைத் தள்ளியதுதான். இனி எந்தத் தீர்வோ அல்லது முடிவோ இந்தியா சிங்களத்திடம் கேட்கப்போவதில்லை. தனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அது இனிச் சிங்களவன் மீதியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அகன்றுவிடும். புலிகள் அழியவேண்டும் என்று காத்திருந்த சர்வதேசச் சனியங்கள் இனி எல்லாம் முடிந்த திருப்தியில் திரும்பிப் போய்விடும். தனது இனம் அழிவதையே ரசித்துப் பார்த்திருந்த தமிழ் வயிற்றில்ப் பிறந்த காட்டேரிகள் இனித் தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடும். உலகத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுக் கொன்று அடையளம் தெரியாமல் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான உண்மைத் தமிழ்த் தேசியவாதிகளும், தமிழர்க்கான தனிநாட்டு வேள்வியில் தம்மையே வெந்து உருக்கித் தீயில் சங்கமமான எமது இனிய போராளிகளும் இறைவனையே நிகர்த்த எமது அன்புத் தலைவரும்(உண்மையாக இருக்கக் கூடாது) இனித் தெரியாமல் போகும். நாம் மட்டும் அரசியல் அநாதைகளாய் பூமியில் பிணங்களாக வலம் வருவோம். சரித்திரத்தில் இலங்கையில் தமிழன் வாழ்ந்தான் என்று தொல்பொருள்சாலையில் சாட்சிப்படுத்தட்டும்.

இல்லை ரகுநாதன் அண்ணா!

நிச்சயம் அவர்கள் எல்லோரும் கூடி தமிழர்களுக்கு ஒரு நல்ல விடிவை தருவார்கள். அது ஆப்கானிஸ்தான் ஈராக் போன்று..... ஜனநாயகத்தின் உச்சமாக இருக்கும். றோட்டு போடுவதே ஜனங்கள் முடிவெடுத்த பின்னர்தான் என்ற அளவில் ஜனநாயகம் தலைவிரித்து நிற்கும். அது புதிய முறை என்பதால் மக்களுக்க கொஞ்கம் அசௌகரியம் இருக்கும். அவ்வளவே.

தலைவர் பத்திரமாக இருக்கிறார். வதந்திகளை நம்பவேண்டாம். போராளிகளால் பத்திரமான இடத்திற்கு கூட்டிச்

செல்லப்பட்டுள்ளார்... தகவல் பெறப்பட்ட இடம் நம்பகமான இடம்.

Edited by வசி_சுதா

தலைவர் மற்றும் மகன், நடேசன் அண்ணா அனைவரும் நலமுடன் இருப்பதாக செ.பத்மநாபன் சேனல் 4க்கு செய்தி அளித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக செய்தி சில மணிகளில் வெளிவரும்.

:rolleyes:

தயவு செய்து செய்தி வந்தவுடன் இணைக்கவும்,,,,, தாங்க முடியல... ஆனால் நடேசன் அண்ணா செத்தது உண்மை... அது தான் பயமா இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மட்டுமே வாழக் கூடிய அடர்ந்த காடுகள் வன்னியில் இன்னும் உள்ளன.. அவைகளை இராணுவம் நெருங்கவே இல்லை இன்னும்

எந்த கொம்பனாலும் அங்கே போக முடியாது..

எந்த சட்டலைட்டும் படம் பிடிக்க முடியாது..

26.11.2009 மாவீரர் தினம் தலைவன் உரையுடன் தான் தொடங்கும்

தலைவர் பத்திரமாக இருக்கிறார். வதந்திகளை நம்பவேண்டாம். போராளிகளால் பத்திரமான இடத்திற்கு கூட்டிச்

செல்லப்பட்டுள்ளார்... தகவல் பெறப்பட்ட இடம் நம்பகமான இடம்.

வசி.. நல்ல செய்தி, எப்படி உறுதி படுத்திறது.... தயவு செய்து உறுதிபடுத்தவும்... என்னால முடியல..

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படையினரின் முற்றுகையை உடைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வெளியேறினார்?

பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும்இ இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பொட்டம்மான்இ சூசைஇ கபில் அம்மான்இ ரட்ணம் மாஸ்ரர்இ ஜெயம்இ வேலவன்இ லோரன்ஸ் போன்ற தளபதிகளும் தேசியத் தலைவருடன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று அதிகாலை நந்திக் கடலில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை தொடர்ந்து தேசியத் தலைவரும் தளபதிகளும் முற்றுகையை உடைத்திருக்கலாம் என்று சிறிலங்காப் படைத் தரப்பு மட்டத்தில் பேசப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும்இ கைது செய்யப்பட்டு விட்டதாகவும்இ அவருடைய உடல் பனகொடை முகாமில் உள்ளதாகவும் பல வதந்திகள் சிங்கள மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டுள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

இதில் உண்மையான செய்தியை அறிவதற்கு சில மணித்தியாலங்களோஇ சில நாட்களோஇ சில மாதங்களோ காத்திருக்க வேண்டி வரலாம் என்றே படுகின்றது.

தற்பொழுது இன்று (18.05.09) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டு விட்டதாக பன்னாட்டு ஊடகங்களில் செய்தி பரவ விடப்பட்டுள்ளது.

நன்றி பதிவு இணையத்தளம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மதுரையில் புலித்தலைவர் பிரபாகரனின் மரணித்ததாக மாலை தினசரிகள் இலங்கையரசு சொல்லியபடியே செய்திய வெளியிட்டிருந்தும் பலரும் நம்பவில்லை. எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையுள்ளது...மீண்டும் உத்வேகத்துடன் ஈழப்போராட்டம் சுதந்திரம் பெறும் வரை தொடரும், தமிழர்களின் ஆதரவும் அர்பணிப்பும் நிச்சயம் என்றும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசே தலைவர் பற்றி போட்ட செய்தியை தானே கழற்றிட்டுது. அதுமட்டுமன்றி சரத் பொன்சேகா புலிகள் எனியும் ஒன்று கூட விடமாட்டன் எங்கிறார்.

ஆக விடுதலைப்புலிகள் ஒன்று கூடக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவரே ஏற்றுக் கொண்ட பின்.. இது கிழக்கின் உதயம் போலத்தான் கதை..!

எமது தேச விடுதலைப் போராட்டம் தொடரும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. நாங்கள் எல்லாம் எமது தேசத்தை காக்கப் புறப்பட்டால் விடுதலை என்பது அதிக தூரம் இல்லை. அதைச் செய்வோம். வெட்டிக்கு வதந்திகளை பரப்பிக் கொண்டு திரியுற நேரம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

ரைகர்வேல் எங்கையிருந்தய்யா இந்த செய்தி எடுத்தீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு தானே போட்ட செய்தியை கழற்றிட்டுது. அதுமட்டுமன்றி சரத் பொன்சேகா புலிகள் எனியும் ஒன்று கூட விடமாட்டன் எங்கிறார்.

ஆக விடுதலைப்புலிகள் ஒன்று கூடக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவரே ஏற்றுக் கொண்ட பின்.. இது கிழக்கின் உதயம் போலத்தான் கதை..!

எமது தேச விடுதலைப் போராட்டம் தொடரும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. நாங்கள் எல்லாம் எமது தேசத்தை காக்கப் புறப்பட்டால் விடுதலை என்பது அதிக தூரம் இல்லை. அதைச் செய்வோம். வெட்டிக்கு வதந்திகளை பரப்பிக் கொண்டு திரியுற நேரம்..! :rolleyes:

நெடுக்கையா தாங்கள் கூறுவது சரி நாங்கள் எந்த வதந்திகளையும் நம்பி ஏமாறாமல் இருக்கவேண்டும் சிங்களத்தின் எந்தவொருசெய்தியையுமே நான் நம்பியதில்லை நம்பப்போறதுமில்லை

ஈசலின் வாழ்க்கை எட்டு நாளைக்குதான்

அதுதான் இன்றைய இலங்கை அரசும். இன்றும் நாளையும் வெற்றியை கொண்டாடும். நாளைய மறுதினம் உலகம் கை விரிக்கும் அன்று தாமே தம்மை அழிக்கும்

சிங்கக்கொடி பறந்த இடங்களில் மட்டுமல்ல அது பறக்க முடியாத இடமெல்லாம புலிக்கொடி பறக்கும்

வெல்வோம் நாம் அதுதான் எமது இலக்கு இடையில் எந்த தடையோ மடையோ வந்தாலும் சோரப்போவதில்லை. தலைமைய அழிப்பதன் மூலம் புலத்தமிழரின் மனதை வெல்லலாம் எ;ன்று நினைத்து ஏமாந்து விட்டது உலகமும் இலங்கை அரசும்

பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் பாருங்கள் ஏதேதோ எல்லாம் கதை விடுறானுங்கள்

தற்ஸ்ரமிழ்.கொம் இல்

சென்னை: விடுதலைப் புலிகளின் கொடியை உற்று நோக்குவோருக்கு ஒரு ஆச்சரியம் தெரியும். கொடியில் இடம் பெற்றுள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை 33. புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில் என்பது வியப்புக்குரிய ஒற்றுமை.

விடுதலைப் புலிகளின் கொடி செந்நிறத்திலானது. இரு துப்பாக்கிகள் குறுக்கும் மறுக்குமாக இருக்க, நடுவே கம்பீரமான புலி ஒன்று படுத்திருக்கும். சுற்றிலும் தோட்டாக்கள் அணிவகுத்திருக்கும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியில் உள்ள தோட்டாக்கள் எண்ணிக்கை 33. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிறது. அவர்களின் தனி ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில்தான்.

33 ஆண்டுகளில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் அந்தக் கொடியில் 33 தோட்டாக்களை பிரபாகரன் பதித்தார் என்று கூறுவோர் உண்டு. ஆனால் ஈழப் போராட்டம் 33 ஆண்டுகளில் பலன் ஏதும் இல்லாமல் முடிந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போராட்டம் முடிந்துவிட்டது என்று நீங்களும் தீர்மானித்து விட்டீர்களா?

இறுதியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நம்பிக்கையை தளர வைத்து விடுதலை போராட்டத்தை திசை திருப்ப தான் இந்த வதந்தி முயற்சி....

வன்னியில் நிலத்தை இழந்திருக்கலாம் - ஆனால் சிங்களத்துடன் ஆன எமது போர்க்களம் இன்னும் உண்டு... எமது விடுதலையை நாம் எடுக்கும் வரை அந்த களம் இருக்கும்.

இழப்புகளை கண்டு இலக்கை தவற விட்டால் - வரலாறு மன்னிக்காது நம்மை...

தெளிவான திடமான நோக்குடன், எமது ஈழப் போராட்டத்தை தொடருவோம்...

-----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1242666395520_307.jpg

ஏரிக்சூல்கைம் புலித்தேவனுடன் நேற்று நள்ளிரவு பேசியதாகவும் அப்போது விடுதலைப்புலிகள் (நடேசன் உட்பட்ட பெரிய தளபதிகள்) 3ம் தரப்பிரடம் சரணடைய விரும்புவதாகவும் புலித்தேவன் தெரிவித்ததாக தெரிவித்திருந்தார். அதை Red Crossம் அறியப்படுத்தியதாகவும் காலையிலே அவர்கள் இறந்துவிட்டதாக பதில் வந்ததாக தெரிவித்தார்.

Vg nett

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மட்டுமே வாழக் கூடிய அடர்ந்த காடுகள் வன்னியில் இன்னும் உள்ளன.. அவைகளை இராணுவம் நெருங்கவே இல்லை இன்னும்

எந்த கொம்பனாலும் அங்கே போக முடியாது..

எந்த சட்டலைட்டும் படம் பிடிக்க முடியாது..

26.11.2009 மாவீரர் தினம் தலைவன் உரையுடன் தான் தொடங்கும்

வன்னி மற்றும், அம்பாறைக் காடுகளில் தேடுதல் செய்வதற்காக சிறிலங்கா அரசு ரசியாவிடம் இருந்து உலங்கு வானூர்திகளைக் கொள்வனவு செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. எதிரி தனது அடுத்த கட்ட நடவடிக்கைகக்குத் தயாராகின்றான்.

நாங்கள் அழுது கொண்டும், வீரம் கதைத்துக் கொண்டும், ஆறுதல் சொல்லிக் கொண்டும் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாமலும், வன்னியில் அகதியாகப்பட்டு அழிக்கப்பட்ட, மக்கள் தொடர்பாக எவ்வித சட்டநடவடிக்கைகளோ, நீதிக்கான எவ்வித முயற்சியும் செய்யாமல் காலத்தைக் கெடுத்து தமிழனை நடுத்தெருவில் நிறுத்துவோம்.

எனி என்ன செய்யப் போகின்றோம். உண்மையில் சொல்லப் போனால் அழிவு என்பது உண்மை. அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிலையில் இன்று இயக்கம் இல்லை. அதற்கு ஆட்களும் இல்லை. அந்த மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் தலைமை நம்மிடமும் சர்வதேசத்திடமும் தான் விட்டுச் சென்றுள்ளது. சர்வதேசம் நாய் என்று கூடத் திரும்பிப் பார்க்காது. நாங்கள் தான் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாங்கள் என்ன செய்யப் போகின்றோம். தினமும் மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோமா?? எனி வரும் காலங்களில் கவனயீ{ர்ப்பு கத்தரிக்காய் என்பது எல்லாத்தையும் தாண்டிய நிலையைப் புலம்பெயர் தமிழ்மக்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

வந்திகளை நம்பாதீர்கள் என்று வருகின்ற வதந்திகளை நம்பி உங்களை அறுதல்படுத்தி எல்லாத்தையும் அடக்கிக் கொள்ளாதீர்கள்.

எனி வரும் காலங்களில் என்னவெனில், தமிழீழம் எமக்கு வேண்டாம். அவ்வாறே சிங்கள தேசமும் உலகில் வேண்டாம்.

நாங்கள் தமிழீழம் என்ற ஒரு விடயத்துக்காகத் தான் பொறுமை.... பொறுமை.... எல்லாம் அழியும் வரை காத்து... கடைசியில் சிங்களக் கைதிகளுக்கு மன்னிப்புக் கொடுத்து...

நயவஞ்சகம், வெறி, பயங்கரவாதம் என்ற எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வோம்.... சீனாவோடு சேர்ந்து அதன் எதிரிகளை உடைப்போம்... அவ்வாறே இந்தியாவோடு சேர்ந்து சீனாவை உடைப்போம்... அந்த வெறியை நாம் வளர்த்துக் கொள்ளும் வரை.... கண்ணீரைச் சேமியுங்கள்.

அது தான் நாம் இவ்வளவு காலமும் அம்மான்களுக்கும், தளபதிகளுக்கும் , போராளிகளுக்கும் போராடிய போராட்டத்திற்குக் கொடுக்கின்ற மரியாதையாக இருக்கும்

நாங்கள் தமிழீழம் என்ற ஒரு விடயத்துக்காகத் தான் பொறுமை.... பொறுமை.... எல்லாம் அழியும் வரை காத்து... கடைசியில் சிங்களக் கைதிகளுக்கு மன்னிப்புக் கொடுத்து...

அதற்க்கு முன் உலகில் உள்ள அனைத்து கோவில்களை உடைபோல் இல்லையேல் நாங்கள் எங்கள் மண்டைகளை உடைபோம் கருத்து களத்தில் கருத்து கற்களால்.

வன்னி மற்றும், அம்பாறைக் காடுகளில் தேடுதல் செய்வதற்காக சிறிலங்கா அரசு ரசியாவிடம் இருந்து உலங்கு வானூர்திகளைக் கொள்வனவு செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. எதிரி தனது அடுத்த கட்ட நடவடிக்கைகக்குத் தயாராகின்றான்.

பெற்றோல் அநியாமா வீணாக்கப் போகினம்.

தூயவன் சிங்களவனின் நோக்கமும் அதுதான். தலைவர் பற்றிய வதந்திகளை பரவவிடுவதன் மூலம் மக்களை சேர்வடைய செய்வதும் கொல்லப்பட்ட 25ஆயிரம் மக்களின் சாவினை திசைதிருப்புவதுமே நோக்கம். அவன் அதில் வெற்றியும் பெற்றுவிட்டான் என்பது யாழ்களத்தில் சிலர் எழுதும் கருத்துகளிலேயே தெரிகிறது.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்.. கோயிலை உடையுங்கோ....மண்டையை உடையுங்கோ என்று கொண்டு?!!

புலிகளை வென்று விட்டோம் என்று நேற்று தான் இலங்கை அறிவித்தது.... ஒரு நாளிற்குள் நம்பிக்கை இழந்து பித்து பிடித்து அதை உடைப்போம், இதை துடைப்போம் என்ற அளவிலா எமது நிலையை வைத்து இருப்பது?!

விடுதலை இயக்கம் என்ன சொன்னதோ அதை இனி என்றாலும் சீராய் செய்வோம்..

மக்கள் போராட்டம், மக்கள் புரட்சி மூலம் தான் - எமக்கு இழைக்க படும் அநியாயத்தை உலகிற்கு அறிய தர வேணும்.... உலக அரசாங்கங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் - மேலைய ஜனநாயக அரசாங்கங்களை தீர்மானிப்பது, அவர்களின் போக்கை கண்நோக்குவது சர்வ தேச சமூகம் எனும் பொது மக்களும் தான்....எல்லா நாடும் இந்தியா போல அல்ல.

துணிவான சர்வதேச ஊடகங்களையும் நாம் எமது போராட்டத்தின், எமது அவலத்தின் நிலைபாடுகளை இனி என்றாலும் இனம் கண்டு வெளிக்கொணர செய்ய வேண்டும்...

எமது இனத்திற்கு பாதகமான இந்த நிலையை தளராது உலகிற்கு உணர்த்தி - எமது இனத்தின் நிரந்தர விடுதலைக்காக - பாதகத்தை சாதகமாக்கி கொள்தல் தான் ஒரே வழி.

விடுதலை புலிகள் இயக்கம் இன்னும் அழியவில்லை....

ஏன் அதற்குள் சங்கோடு திரியிறீர்கள்?!

ஏன்.. கோயிலை உடையுங்கோ....மண்டையை உடையுங்கோ என்று கொண்டு?!!

புலிகளை வென்று விட்டோம் என்று நேற்று தான் இலங்கை அறிவித்தது.... ஒரு நாளிற்குள் நம்பிக்கை இழந்து பித்து பிடித்து அதை உடைப்போம், இதை துடைப்போம் என்ற அளவிலா எமது நிலையை வைத்து இருப்பது

ஓ நீங்களா?

யாழில கோவில் கட்டி அதை உடைக்க போன பெரியார்கள் சீடர்கள் பிரச்சனன தெரியும் இருந்துமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நீங்களா?

யாழில கோவில் கட்டி அதை உடைக்க போன பெரியார்கள் சீடர்கள் பிரச்சனன தெரியும் இருந்துமா?

விளங்கவில்லை....

:mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.