Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் உறவுகளே ஒரு குழந்தையை தத்தெடுங்கள்::மனிதாபிமான வேண்டுகோள்

Featured Replies

அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது.

தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறார்களுக்கு தமது தாய் தந்தையர்கள் இறந்திருப்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் கூடவராத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலம் பெயர் வாழ் எம் உறவுகளே, நீங்கள் விரும்பினால் அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளக்கலாம். வீட்டிற்கு ஒருவராக நாம் அவர்களை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகள் பாதுகாக்கப் படுவார்கள். சற்றே சிந்தியுங்கள், ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது ஏற்கனவே சிறார்களுக்கு உதவும் ஒரு அமைப்பினூடாக இவர்களை தத்தெடுக்க ஆவணம் செய்யுமாறு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

எனது மனதை மிக அரித்துக் கொண்டு இருக்கும் விடயம் இது.... அப்படியான குழந்தைகளை தத்தெடுக்க ஏதேனும் ஒரு முறை இருக்கா? தெரிந்தால் தயவு செய்து அறியத் தரவும்

  • தொடங்கியவர்

நிழலி நோர்வே போன்ற நாடுகளுக்கு சனம் தேவை ஆதலால் ,நோர்வேயில் உள்ளவர்கள் முயற்சியெடுக்கலாம்,

வியட்னாம் யுத்த முடிவிலும் இவ்வாறு பல சிறுவர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படனர்.

இப்படி ஒரு குழந்தை எடுக்க வேண்டும் என்றால் அவர் கல்யாணம் ஆகிதான் இருக்க வேண்டுமா?? இதின் வழி முறைகள் என்ன என்று யாரும் தெரிந்தால் அறிய தாருங்கள்?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழுமென்றால் மேலதிக விபரங்களை தயவுசெய்து அறிய தாருங்கள்.

ஏன் இதற்கான ஒரு ஆக்க ரீதியான வலையமைப்பை உருவாக்க கூடாது?

செயலில் சரிவராது....

அதைவிட.....

ஒரு புலம்பெயர் நாட்டில் சமூகசேவை சங்கம் அமைத்து அதன் கிளை மூலம் சிரீ லன்காவில் இருக்கும் எமது போர் அனாதைகளுக்கு ஒரு வழிகாட்டலாம்.

யாராவது செட்டிலானவை மணிகட்டலாம்.......

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல விடயம். பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்காத அரசாங்கம் குழந்தைகளை தத்து எடுக்க அனுமதிக்குமா? இதை சர்வதேச நிவாரண நிறுவனங்களின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அவர்களின் உதவியை கோரலாம்.

கடந்த சில வாரங்களாக என் மனதில் தோன்றிய விடயமும் இதுதான். தயவு செய்து யாராவது கனடாவில் இருந்து தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

தத்தெடுப்பதற்கு என்ன தகுதி இருக்கவேண்டும்

யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை தந்தால் உதவியாக இருக்கும்.

நன்றி தராக்கி இவ்விடயம் பற்றி யாழில் இணைத்தமைக்கு............

ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய தார்மிக கடமை இது...............

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

செயலில் சரிவராது....

அதைவிட.....

தாய் தந்தை உறவினர்களை இழந்த அநாதைக்குழந்தைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும் சிங்கள வதை முகாமிலிருந்து எமது மக்களை மீள்குடியமர்த்தவும், அவர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பும் முயற்சிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எமது உடனடியான செயற்பாடுகள் தான் இன்று தலையாய கடமை. சரியான கட்டமைப்புகள் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் இல்லாமல் முகாம்களிலிருந்து பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது சாத்தியமற்ற விடயம் என்பது ஒருபுறமிருக்க சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் தமிழ் குழந்தைகளை தமது நன்மைக்கு பயன்படுத்தவும் இலாபம் சம்பாதிக்கவும் இதை ஒரு வியாபாரமாக்கவும் சந்தர்ப்பம் உள்ளது. அடுத்தது எமது அடுத்த சந்ததியினராகிய தமிழ் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறினால் சந்தோசமடையப்போவது சிங்கள இனவெறி அரசுதான்.

http://www.bufetat.no/?module=Articles;act...enFolder;ID=232

Edited by vanangaamudi

தயவு செய்து இது பற்றிய மேலதிக தகவல் தேவை தெரிந்தவர்கள் கூறவும். யாரோடு தொடர்பு கொள்ளலாம் என்பதையும் கூறவும்.

கனடாவில் குழந்தையை தத்து எடுப்பது சம்மந்தமான விபரம் இங்கே இருக்கின்றது. நிறுவனங்கள் ஊடாக தத்து எடுப்பதைவிட... கனடாவில் உள்ள குழந்தையின் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், அல்லது குறிப்பிட்ட குழந்தையை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மூலம் தத்து எடுப்பது நல்லது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

International adoption

About 2,000 foreign children are adopted by citizens or permanent residents of Canada every year. Citizenship and Immigration Canada works to deal with these adoptions as quickly as possible. However, international adoption can be a long process.

Before you apply

In all international adoptions there are separate processes:

* the adoption process; and

* the immigration or citizenship process.

You need to understand both of these processes.

You and your adopted child must complete both processes before you can bring the child to live with you in Canada.

The adoption process

To be eligible for an international adoption, you must meet:

* the adoption requirements of the province or territory or the country where you live, and

* the adoption requirements in the child’s home country.

Provincial and territorial governments are responsible for adoptions in Canada. If you live in Canada, your first step should be to contact your provincial or territorial government office to get information about adopting a child. See Provincial and territorial government offices in the Related Links section at the bottom of this page.

Some provinces and territories use licensed agencies to handle most of the adoption process. Your provincial or territorial government office will tell you if you will need to contact a licensed agency.

If you want to adopt a child from a foreign country, you must obey the laws of that country about adoption. Make sure you understand the laws before beginning the adoption process. Your province or its licensed adoption agency can advise you on these requirements.

The Hague Convention governs international adoptions in many countries, including Canada. Your provincial government office will explain the requirements if your adopted child is coming from a country that follows the Hague Convention. Follow the Hague Convention link in the Related Links section at the bottom of this page to learn more.

International adoption: Choosing the citizenship process or the immigration process

As of December 23, 2007, anyone adopted by a Canadian citizen after February 14, 1977 can apply for a grant of Canadian citizenship without first becoming a permanent resident. Some new adoptions will need to use the immigration process. The information below will help you understand both processes and decide which to use.

The citizenship process

You can apply for citizenship for an adopted person if:

* at least one adoptive parent is, or was, a Canadian citizen when the adoption took place

* the adoption severs (or severed) all ties with the adopted person’s legal parents

* the adoption was or will be completed outside Canada (except for Quebec).

The adopted person does not meet the requirements for the citizenship process if:

* neither parent was a Canadian citizen when the adoption took place

* the adoption took place before February 15, 1977

* the adoption did not fully sever all ties with the child’s legal parents

* the adoption will be completed in Canada, or

* a probationary period is to be completed in Canada before a final adoption order is issued from the child’s birth country.

Note: On April 17, 2009, a change to the law will—with a few exceptions—limit citizenship by descent to one generation born outside Canada. This change to the law may affect children adopted from outside Canada.

You can use the immigration process to apply for permanent resident status for the adopted child if:

* the adopted child is going to Canada to live right after the adoption takes place, or

* one or both parents are Canadian citizens or permanent residents.

The adopted person does not meet the requirements for the immigration process if:

* the adopted person is not going to Canada to live right after the adoption takes place

* you are an adult adoptee living outside Canada and not returning to Canada to live right after your application is approved.

International adoption:

The immigration process —

Who can apply

There are two processes that you must go through when you adopt a child from another country: the adoption process and the immigration process.

You and your adopted child must meet the eligibility requirements for both international adoption and the immigration process before you can bring the child to live with you in Canada.

Not all countries allow foreign adoptions. Before you apply to adopt a child from a foreign country, you should ask the adoption authority in your province or territory, or the appropriate foreign embassy in Canada, if adoption is allowed. You can find contact information for provincial and territorial government offices and foreign embassies or consulates in Canada in the Related Links section at the bottom of this page.

To be eligible for an international adoption, you must meet:

* the adoption requirements of your province or territory, and

* the adoption requirements in the child’s home country.

Adoption authorities in your province or territory, or their licensed adoption agencies, can give you information on eligibility requirements. You can find their contact information in the Related Links section at the bottom of this page.

Before you travel, see the Important Notice for Adoptive Parents in the Related Links section at the bottom of this page.

மூலம்:

1. http://www.cic.gc.ca/english/immigrate/adoption/index.asp

2. http://www.cic.gc.ca/english/immigrate/adoption/choose.asp

3. http://www.cic.gc.ca/english/immigrate/ado...n/apply-who.asp

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தத்து எடுப்பது என்பது என்று நீங்கள் எதை குறிப்பிகிற்ன்றீகள்.ஈழ்தில் வைத்து பாராமரிமத்தையா இல்லை இங்கு எம்முடன் அழை்து வந்து வழர்பதையா.

இரு வழிகளிலும் செய்யலாம் சஜீவன். ஆனால்... முடிவை குழந்தையின் கையில் விட்டுவிடவேண்டும். குழந்தை நீங்கள் வாழும் நாட்டிற்கு வரவிரும்பாவிட்டால் இங்கு அழைப்பது சிக்கலானது. உடனடியாக ஒன்றும் செய்யவும் முடியாது. ஏன் என்றால் குழந்தைகள் இப்போது ஓர் அதிர்ச்சியில் இருக்கும். அதிர்ச்சியில் உள்ள நிலையில் குழந்தைகளால சரியாக சிந்திப்பதே முடியாத காரியமாக இருக்கும். நீங்கள் உங்கள் நாட்டிற்கு அழைத்தபின் குழந்தை அங்கு திரும்பவும் போகப்போகின்றேன் என்று சொன்னால் என்ன செய்வது? இது குழந்தையின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட விடயம். உங்கள் எதிர்காலத்தையும் இது பாதிக்கும். எனவே, இங்கு அழைப்பதா அல்லது அங்கு ஆதரவு கொடுப்பதா என்பது மிகவும் முக்கியமான ஓர் தீர்மானம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதைய வன்னி நிலைமைக்கு ஒரு கேணைத்தனமான தலைப்பும் அதற்கேற்ற கருத்துக்களும்.

நிலைமை தெரியாமல் கதைக்கின்றீர்களா??????????????

ஒவ்வொருத்தரும் தங்களால் ஏதாவது உதவி செய்யமுடியுமா என்று பார்க்கிறீனம். இதில கேணைத்தனமாக என்ன இருக்கிது குமாரசாமி அண்ணா? வசதி இருப்பவர்கள் இப்படி குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கலாம். ஒன்றன்பின் ஒன்றாகத்தான் யோசிக்கவேண்டும் என்று இல்லைத்தானே.

குழந்தையை தத்து எடுப்பது என்பது நீண்டகால நோக்கில் நடைபெறுகின்ற செயன்முறை. இப்போதே இப்படி சிந்தனை நம்மவர்களுக்கு வருவது நல்லது தானே. இதுபற்றிய தகவல்களை அறிந்து இருந்தால், அதற்கு ஏற்றவகையில் தம்மை தயார்ப்படுத்தி வைத்து இருந்தால்.. சமயம் வரும்போது உதவிசெய்வது இலகுவாக இருக்கும்.

எனக்கு ஒருவர் இன்று சொன்னார். அங்கு இப்போது சாப்பாடுதான் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது என்று. சாப்பாடு கிடைப்பதே பெரியபாடாய் இருக்கின்றது என்று சொன்னார்.

தவிர, அம்மா பகவான், அப்பா பகவான், இதர சமயப் பிரச்சாரங்களும் அந்தமாதிரி நடைபெறுவதாக அறிந்தேன். பனை மரத்தால விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது மாதிரி...

ஓமோம் உங்கடை ஆட்டத்துக்கு சிங்களவன் விட்டுட்டாலும்...............

அதைவிட இந்தியன் எங்கடை விசயத்திலை எல்லா இடமும் கண்ணைபுடுங்கி வைச்சுக்கொண்டுதான் நிக்கிறான். அதுவும் எங்கடை எல்லாவிசயத்திலையும்--------------அதாவது எங்கடை மனுசிமாரின்ரை கூறைச்சிலைவரைக்கும் அவன் வந்து நிக்கிறான்........

எங்களுக்கு வேறை கனவழியள் நிறைஞ்சுபோயிருக்கு அதுகளை யோசியுங்கோ

உங்களுக்கு தெரிஞ்ச கனவழிகளில சில வழிகளை சொல்லுங்கோ. புலம்பெயர் உறவுகளே ஒரு குழந்தையை தத்தெடுங்கள்::மனிதாபிமான வேண்டுகோள் என்று தலைப்பில் சொல்லப்பட்டு இருக்கின்றது. இதில பிழையாக என்ன இருக்கிறது என்று எனக்கு தெரிய இல்லை. மேலே கருத்து எழுதிய ஐந்து உறவுகள் குழந்தையை தத்து எடுக்கும் தங்கள் ஆர்வத்தை சொல்லி இருக்கின்றார்கள். இதுபோல பல வாசகர்களும் இருக்கக்கூடும். குழந்தையை அவர்கள் தத்து எடுக்கும் ஆர்வத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

சரி சரி இப்ப என்ன பிரச்சனை?

வன்னி முகாமில் இருக்கும் குழந்தையைகளை தத்தெடுங்கள்?

நல்ல விடயங்களை எப்போதும் வரவேற்க வேண்டும். வாழ்த்துக்கள்.

இப்போதைய வன்னி நிலைமைக்கு ஒரு கேணைத்தனமான தலைப்பும் அதற்கேற்ற கருத்துக்களும்.

நிலைமை தெரியாமல் கதைக்கின்றீர்களா??????????????

குமராசாமி அண்ணா இது கேணைத்தனாமாய் தெரிய வில்லை... நல்ல நிலமையில் இருப்பவர்கள் பண்ணலாம்தானே... எனக்கு தெரிந்த குடும்பம் அவர்கள் ஊரிலையே அப்பா அம்மா இறந்து போயுட்டாங்க அந்த குழந்தை இவர்கள் இப்ப இங்க கொண்டு வர போகிறார்கள்.. அலுவல் பக்கிறார்கள்... இது மாதிரி எல்லாரும் பண்ணலாம்தானே... தப்பா இருந்தால் மன்னியுங்க அண்ணா...

முதலில் நீங்கள் வன்னிமுகாமில் இருக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து புலம்பெயர்மக்களுக்கு முன்னுதாரணமாக இருங்கள்.

பின்னர் இதைப்பற்றி மேலதிகமாக அதுவும் அவசியப்பட்டால் விவாதிக்கலாம்.

இந்தப்பதில் திருவாளர் கலைஞனுக்கும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது.

தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறார்களுக்கு தமது தாய் தந்தையர்கள் இறந்திருப்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் கூடவராத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலம் பெயர் வாழ் எம் உறவுகளே, நீங்கள் விரும்பினால் அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளக்கலாம். வீட்டிற்கு ஒருவராக நாம் அவர்களை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகள் பாதுகாக்கப் படுவார்கள். சற்றே சிந்தியுங்கள், ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது ஏற்கனவே சிறார்களுக்கு உதவும் ஒரு அமைப்பினூடாக இவர்களை தத்தெடுக்க ஆவணம் செய்யுமாறு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

நல்ல கருத்து,உடனடியாக செயல்முறை செய்வதில் சிக்கல்கள் இருப்பினும் அது குறித்து விவாதித்து நம்மை தயார் செய்து கொள்ள உதவும்.

நிராதரவாக வீதியில் நிற்கும் குடும்பங்களையும் பொருளாதர ரீதியில் பராமரிக்கலாம்.

நிச்சயம் வரவேற்ற கூடிய அத்தியாவசியமான, சூழ்நிலைக்கு பொறுத்தமான தலைப்பு.

நன்றி தராக்கி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அனாதைப் பிள்ளைகளை புலம் பெயர்ந்த மக்கள் தத்தெடுப்பது என்பது ஒரு நல்ல திட்டம். ஆனால் அதை சரியான தருணத்தில் சரியான முறையில் செய்தால் மட்டுமே எமது இனத்துக்கு பொது நன்மை. இல்லாவிடின் தனிப்பட்ட ஒவ்வொருவரும் தமது உறவினர்களையும் வேண்டியவர்களையும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து குளப்பியடித்துவிடுவார்கள். இதை நாங்கள் எதற்கு ஒப்பிடலாமென்றால் 80-90 களில் புலம் பெயர்ந்த மக்கள் தமது உறவினரையும் நண்பர்களையும் தம்முடன் கூடவைத்துக்கொள்வதற்காக அவர்களையும் புலம்பெயர வைத்தார்கள். இறுதியில் அங்கு எஞ்சியவர்கள் போராளிகளும் வசதிகுறைந்தவர்களும் வெளிநாடுகளில் உறவுகள் எதுவும் இல்லாதவர்களும் தான். சிலருக்கு ஆரம்பகாலத்தில் தாயகத்தில் இருந்த சிறிய தொடர்புகளும் பின் படிப்படியாக போராட்டத்தில் இருந்த ஈடுபாடும் குறைந்து போனது நாம் கண்கண்ட உண்மை.

குழந்தைகளை தாயகத்தில் இருக்கும்படியே அவர்களை தத்தெடுங்கள். அவர்களை முகாம்களுக்கு வெளியே கொண்டுவாருங்கள். அவர்களுக்கு நல்ல சுபிட்சமான வாழ்க்கையை வழங்குங்கள். அதைவிட சிறப்பான பணி வேறு எதுவும் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தைகளை தாயகத்தில் இருக்கும்படியே அவர்களை தத்தெடுங்கள். அவர்களை முகாம்களுக்கு வெளியே கொண்டுவாருங்கள். அவர்களுக்கு நல்ல சுபிட்சமான வாழ்க்கையை வழங்குங்கள். அதைவிட சிறப்பான பணி வேறு எதுவும் இருக்கமுடியாது.

வன்னியில் முகாம்களிலிருக்கும் ஒருவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஒருசிலகுழுக்கள் பத்துலட்சம் சிறிலங்கா ரூபாய்க்கள் கேட்கின்றார்கள்.

அந்த ஒருவரை அப்படி மீட்டு வெளியே கொண்டுவந்தாலும் அடுத்த குழுக்கள் மீண்டும் அவரை கடத்திவைத்து பணம் பறிக்க காத்திருக்கின்றன.

ஒருகதைக்கு சொல்லப்போனால் வன்னிமுகாம்களில் தமிழர்களை காற்றுபுகாத அளவிற்கு அடக்கி அமுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதையும் மீறி உங்கள் தத்தெடுப்பு விவகாரம்.

சிங்களவன் எங்கள் எல்லாவிடயங்களிலும் கண்ணுக்குள் எண்ணையை விட்டு கவனமாக இருக்கும் போது............தத்தெடுப்பு?

இன்று 200- 300 கும் மேற்பட்ட சிறுவர்களை போலீஸ் மற்றும் இராணவ அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு கூட்டி சென்று தங்கள் வீட்டு வேலைக்கு அமர்திவருகிரார்களாம்... எம் தமிழினத்தை (அடுத்த சந்ததியினரை) அடிமைகளாக முத்திரை குத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஈழத்தில் உள்ள சிறுவர்கள் காக்கப் படவேண்டும். எம் எதிர்கால சந்ததியினருக்கு நாமே உதவவேண்டும்... எப்படி? எப்போ? :icon_mrgreen::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.