Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்: செ.பத்மநாதன்

Featured Replies

உந்த உருத்திரகுமார் எண்டவர் மலேசியாவைச் சார்ந்த கிண்ராப்ட் ஐச் சார்ந்தவர் இல்லைத்தானே?...

  • Replies 74
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உந்த உருத்திரகுமார் எண்டவர் மலேசியாவைச் சார்ந்த கிண்ராப்ட் ஐச் சார்ந்தவர் இல்லைத்தானே?...

உருத்திரகுமார் ஈழத்தை பிறப்பிடமாக கொண்டவர் .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உருத்திரகுமார் எண்டவர் மலேசியாவைச் சார்ந்த கிண்ராப்ட் ஐச் சார்ந்தவர் இல்லைத்தானே?...

என்ன யாழ்.நிலவன்...........????

எங்கே நிற்கின்றீர்கள்

புரியல.........

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உருத்திரகுமார் எண்டவர் மலேசியாவைச் சார்ந்த கிண்ராப்ட் ஐச் சார்ந்தவர் இல்லைத்தானே?...

இல்லை. இவர் நியுயோர்க்கில் வசிப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இம்மிகூட பிழையின்றி அரசியல் சாணக்கியத்துடன் எமது இலட்சியக் கனவு நிரந்தர விடிவை நோக்கிச் செல்ல உகந்த பங்களிப்பை வழங்குவோம். இதற்கான அடிகோலல் ஆரம்பத்தளமமைத்தல் என்பவற்றை தனிநபரெவரையும் மையப்படுத்தாத பன்நாட்டு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய ஆலோசகர் குழு ஒன்று முன்னெடுத்து வருவதாக அறிகிறேன்.

”நாடு கடந்த தமிழீழ அரசு” ஒரு சிறந்ததும், நடைமுறைச் சாத்தியமானதுமொரு சிந்தனையாகவே தெரிகிறது. ஆனால் இவ்வாறானதொரு அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எப்படியானதாக அமைய வேண்டுமென்பதற்கான விளக்கங்களும் தகவல்களும் தரப்படுமாயின் நிச்சயமாக அதனை முன்னெடுப்பதற்கு உலகத் தமிழ் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

மேலும் இவ்வாறானதொரு விடயத்தில் நிலத்திலிருக்கும் தமிழ் மக்கள் எந்தளவுக்கு இயங்குதிறன் கொண்டு செயற்படக்கூடிய நிலையிலிருப்பர் என்பது பெரும் கேள்விக் குறி. ஆனால் இத்தகைய செயற்பாடானது சர்வதேசத்திற்குத் ஈழத் தமிழரின் அரசியல் நிலைப்பாட்டினை மேலும் உறுதிபட இடித்துரைக்குமொன்றாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமெதுவும் இல்லை. ஆகவே விரைந்து இவ்வாறானதொரு அரசியல் இராச தந்திர நடவடிக்கையினை மேற்கொள்ளுதல் நலமென்றே கூறலாம்.

நாம் கட்டமைப்பை வரைந்துவிட்டு ஆதரவு கேட்பதை விட ஏற்கனவே ஜநா, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட அனைத்து நாட்டு அரசியல்வாதிகள் வெளிநாட்டு கொள்கை வகுப்போர் புத்திஜீவிகள் சட்ட வல்லுனர்கள் என்பவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களையும் உள்வாங்கி தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் விடிவும் தரக்கூடிய கட்டமைப்பை வரைந்தால் பின்னர் அதற்கு ஆதரவு கேட்டு அலையவேண்டியதில்லை. ஆகவே முதலிலேயே அவர்களது ஆதரவுகளையும் பெற்று கட்டமைப்பை வரைபோவமானல் எமது இலக்கை அடைவது மிக இலகுவாகவும் வேகமாகவும் இருக்கும்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நடவடிக்கை சரியான தருணத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது. தாயகத்தில் அரசியல் தலைமைத்துவ வெறுமை ஏற்பட்டள்ளதாகக் கூறி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வெளிக்கிட்டவைக்கு இது ஒரு அதிர்ச்சி வைத்தியமாகவே இருக்கும்.

உருத்திரகுமார் முன்னாள் யாழ்நகர மேயர்(த.வி.கூ)இராசா விசுவநாதனின் மகனென்று நினைக்கிறேன்.

இது பலத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் இளையோருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.அவர்களும் இந்த நிர்வாகக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் பலமுறை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்

கிட்டத்தட்ட எமது வழக்கறிஞர் என எல்லோராலும் அறியப்பட்டவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

”நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற சொல்லினை கேட்கையில் ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, தமிழரின் இறுதி லட்சியத்துக்காக போராட, நான் தயார் நீங்கள் தயாரா??

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணைக்கு அடுத்த நிலையில் பல தடவைகள் பேச்சு வார்த்தைகளில் பங்கு கொண்டவர்.

புலம் பெயர் மக்களை நோக்கி டக்கிளஸ் விட்ட அறிக்கைக்கு புலம் பெயர் மக்கள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

One of the most important agenda of this 'Govt in Exile' should be obtaining the support of international media and the ministry of foreign affairs in other countries, especially the countries that voted against Tamils in the 'human rights' meeting. There are several countries like Cuba, malaysia, south american countries that probably did not know the real situation and the info was fed only by the GoSL representatives. The representatives of the "Eelam Govt' should try to have frequent meetings (at least once a month) with all countries in the Security Council and brief them about the status of the Eelam people in Sri Lanka and GoSL's atrocities.

Eelam Passports must be issued to the diaspora on refugee visas, if it is allowed by international law. The diaspora can hold two passports (Eelam and SL) until the formation of Eelam. These kind of activities will keep Tamils ready to transition smoothly when Eelam is born. Otherwise even those countries that help to form Eelam may question the Tamils' readiness to form their own country.

'Govt in Exile' என்பதை 'transnational government' என்று கொள்ளவும்.

தோழர் தளபதி குறிப்பிடுவது போல் இத்தகைய அரசுக்கு சர்வதேச ஊடகங்கள் மற்றும் மற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆதரவு மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஐ நா வில் நமக்கு எதிராக வாக்களித்த நாடுகளிடமும் ஆதரவை திரட்ட வேண்டும். பல நாடுகள் இலங்கையிடமிருந்து பெரும் செய்திகளை மட்டுமே வைத்து ஐ நா வில் வாக்களித்துள்ளதை பின்னர் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்இ

திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவுஇ மருத்துவம்இ கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

நக்கீரன்

இவரையும் இதில் இணைக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்[/b]

”நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற சொல்லினை கேட்கையில் ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, தமிழரின் இறுதி லட்சியத்துக்காக போராட, நான் தயார் நீங்கள் தயாரா??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருத்திரகுமார் அண்ணாவின் தலமையில் கண்டிப்பாக இச்செயற்த்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புகின்றோம்.

உருத்திரகுமார் அண்ணா வெளிப்படையான மற்றும் பன்முக பார்வையுடன் செயற்ப்படும் ஒருவர். இக்கால கட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குழப்பங்களுக்கு உரிய பதில் கிடைத்துள்ளது என்று திடமாக நம்புகின்றேன்.

எமது கட்டமைப்பில் "கண்டிப்பாக தற்போதைய புலம்பெயர் தலைவர்களில் சிலரை உள்வாங்கும் போது ஒருமுறைக்கு பல முறை சிந்திக்க வேண்டும்" என்பது எனது தாழ்வான வேண்டுகோள்....

உருத்திரகுமார் அண்ணாவின் தலமையில் கண்டிப்பாக இச்செயற்த்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புகின்றோம்.

உருத்திரகுமார் அண்ணா வெளிப்படையான மற்றும் பன்முக பார்வையுடன் செயற்ப்படும் ஒருவர். இக்கால கட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குழப்பங்களுக்கு உரிய பதில் கிடைத்துள்ளது என்று திடமாக நம்புகின்றேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழரை உச்சாகப்படுத்தும் அரசியல் மொழிகள் இலங்கை அரசியலின் களநிலவரத்தை மாற்றத்துக்குள்ளாக்காது. மூன்று லட்சம் மக்களின் மீள்குடியேற்றமும் பத்தாயிரத்துக்கு அதிகமான அரசியல் கைதிகளின் விடுதலையும் காலதாமதப்படுத்தும் அரசியல் வேலைதிட்டங்களை வெளிநாட்டுத் தமிழர் ஒன்றுக்கு இரண்டு தரம் சிந்தித்து செய்ய வெளிக்கிடுவது மிக அவசியமான தேவையாகும்.

``நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்`` எனும் கோசத்தைவிட `சர்வதேச தமிழர் கவுன்சில்` என்பது போன்ற சொல்லாடல் காரிய சித்தியுள்ள அரசியல் மொழியாகும்.

ஐயோ அப்ப பிகே துரோகி இல்லையா? இனி அவரை நம்பலாமா? இனி உருத்திரகுமார் ஒரு துரோகி என்று ஒருவரும் சொல்லப்போவது இல்லைத்தானே?

அடுத்ததாக..

மேலே சமாதானம் சொன்னமாதிரி... தாயகத்து தமிழ் மக்களைவிட புலம்பெயர் தமிழ்மக்களை உடனடியாக குசிப்படுத்தவேண்டிய தேவைதான் தற்போது இருக்கின்றது போலத் தெரிகின்றது.

தாயகத்தில் அவர்கள் செத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. ஆனால்.. நாங்கள் இங்கு மெண்டல் ஆகாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவகையில் இந்த செயற்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

இவர் தான் அவர்.

IMG6669-1245100346.jpg

கலைஞன், சமீப கால நிகழ்வுகளால் மிகவும் மனம் பாதிக்கப் பட்ட ஒருவராக நீங்கள் தான் இருக்கிறீர்கள் போலத் தெரியுது. ஒன்று சீரோ அல்லது மிக உச்சம் என்பது தவிர வேறெதுவும் இடையில் கிடையாது என்பது போல இருக்கிறது உங்கள் எள்ளல். ஒரு முன்னோக்கிப் போகும் அடியை எடுத்து வைத்தால் தாயகத் தமிழரை மறந்து விட்டார்கள் என்று எப்படி அர்த்தம் கற்பிக்கிறீர்களோ அறியேன். புலத்தில இருக்கிற தமிழர் தான் ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் கருத்தும் (அது உருவாக வழி வகுத்த புதிய சமாதானத்தின் கருத்தும்) உண்மையென்றால், புலத் தமிழரின் நடவடிக்கைகளுக்கு எதிர் வினையை மட்டுமே சிறி லங்கா அரசு ஆற்றுகிறது, மற்ற படி சிறி லங்கா அரசு தமிழர்களோடு மிகவும் cool என்பது போல தெரியுது.

பு.ச அவர்களிடமும் ஒரு கேள்வி:

1.சமஷ்டி, கூட்டாட்சி ஒற்றையாட்சி என்று வெறும் பதங்களில் தொங்கிக் கொண்டு சிறி லங்கா தமிழர்களுக்கு பேய்க் காட்டிய போது எங்க போயிருந்தீங்கள்?

2. தமிழர் கவுன்சிலோ எல்லை கடந்த தமிழ் அரசோ சிறி லங்கா பயங்கரவாத அமைப்பெண்டு கருவறுக்கத் தான் போகுது. பேரை மாத்தினா சிறி லங்கா ஓடி வந்து பேசுமெண்டு நம்புறீங்களா? எங்க இருந்து வந்தீங்கள் ஐயா? இவ்வளவு நாளும் ஊரில இல்லையா?

Edited by Justin

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்இ

திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவுஇ மருத்துவம்இ கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

நக்கீரன்

இவரையும் இதில் இணைக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்[/b]

தமிழக அரசியலில் களத்தில் உள்ளவர்களில் முக்கியமாக நாம் சிலரை நம்பலாம். உதாரணமாக நெடுமாறன் ஐயா, வை.கோ, சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி,.... இப்படி இன்னும் சிலர்.

ஆனால்.....

திருமாவளவன் இவர்களுடன் சமனாக மதிக்கப்படும் ஒருவராக இருக்கமாட்டார்.

இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

கோரிக்கை றிறைவேறவில்லை....

ஆயினும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு 'காங்கிரசை தமிழ் நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் தனது தலையாய கடமை... இலட்சியம்...' என்று பிரகடனம் செய்தார்.

இறுதியில் தேர்தலின்போது காங்கிரசுடன் ஓரணியில் ஒரே மேடையில் தோன்றினார்.

இவர்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கி நாய்கள்.

இவர்களுடைய வாய்ச் சவடால்களுக்கும்.... மயக்கு மொழிகளுக்கும்.... தமிழ் நாட்டு மக்கள் சில சமயம் எடுபடலாம்...

ஆனால் ஈழத் தமிழர்கள் இழிச்ச வாயர்களல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், சமீப கால நிகழ்வுகளால் மிகவும் மனம் பாதிக்கப் பட்ட ஒருவராக நீங்கள் தான் இருக்கிறீர்கள் போலத் தெரியுது. ஒன்று சீரோ அல்லது மிக உச்சம் என்பது தவிர வேறெதுவும் இடையில் கிடையாது என்பது போல இருக்கிறது உங்கள் எள்ளல். ஒரு முன்னோக்கிப் போகும் அடியை எடுத்து வைத்தால் தாயகத் தமிழரை மறந்து விட்டார்கள் என்று எப்படி அர்த்தம் கற்பிக்கிறீர்களோ அறியேன். புலத்தில இருக்கிற தமிழர் தான் ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் கருத்தும் (அது உருவாக வழி வகுத்த புதிய சமாதானத்தின் கருத்தும்) உண்மையென்றால், புலத் தமிழரின் நடவடிக்கைகளுக்கு எதிர் வினையை மட்டுமே சிறி லங்கா அரசு ஆற்றுகிறது, மற்ற படி சிறி லங்கா அரசு தமிழர்களோடு மிகவும் cool என்பது போல தெரியுது.

பு.ச அவர்களிடமும் ஒரு கேள்வி:

1.சமஷ்டி, கூட்டாட்சி ஒற்றையாட்சி என்று வெறும் பதங்களில் தொங்கிக் கொண்டு சிறி லங்கா தமிழர்களுக்கு பேய்க் காட்டிய போது எங்க போயிருந்தீங்கள்?

2. தமிழர் கவுன்சிலோ எல்லை கடந்த தமிழ் அரசோ சிறி லங்கா பயங்கரவாத அமைப்பெண்டு கருவறுக்கத் தான் போகுது. பேரை மாத்தினா சிறி லங்கா ஓடி வந்து பேசுமெண்டு நம்புறீங்களா? எங்க இருந்து வந்தீங்கள் ஐயா? இவ்வளவு நாளும் ஊரில இல்லையா?

????????????????????????சிந்திப்போமா? எப்போது?

ஓ நான் மட்டும்தான் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறனோ. நான் நினைச்சன் பலர் அப்படி இருக்கிறீனம் எண்டு. பரவாயில்லை வந்தவியாதி என்னோட மட்டும் இருந்துபோட்டு போகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ அப்ப பிகே துரோகி இல்லையா? இனி அவரை நம்பலாமா? இனி உருத்திரகுமார் ஒரு துரோகி என்று ஒருவரும் சொல்லப்போவது இல்லைத்தானே?

அடுத்ததாக..

மேலே சமாதானம் சொன்னமாதிரி... தாயகத்து தமிழ் மக்களைவிட புலம்பெயர் தமிழ்மக்களை உடனடியாக குசிப்படுத்தவேண்டிய தேவைதான் தற்போது இருக்கின்றது போலத் தெரிகின்றது.

தாயகத்தில் அவர்கள் செத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. ஆனால்.. நாங்கள் இங்கு மெண்டல் ஆகாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவகையில் இந்த செயற்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

மாற்றுக் கருத்து மாதிரி தெரியவில்லை ..

என்னடா ஒரு மாணிக்கங்களையும் காணவில்லை என்று பார்த்தன் ?

.

Edited by thivas

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நான் மட்டும்தான் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறனோ. நான் நினைச்சன் பலர் அப்படி இருக்கிறீனம் எண்டு. பரவாயில்லை வந்தவியாதி என்னோட மட்டும் இருந்துபோட்டு போகட்டும்.

அச்சாக் குஞ்சுக்கு கோவம் வந்துட்டுது போல..பரவாயில்ல.நீங்கள் தனிய இல்லை. அங்கால சாந்தியக்கோய் அடுத்த உச்சத்தில நிக்கிறா. இது எல்லாம் ஒரு சாதாரண துலங்கல் தான். ஒரு பாரிய இழப்புக்கு மனுஷன் துலங்கல் காட்டும் போது பல நிலைகள் இருக்கும். முதலில் மறுப்புணர்வு (denial), பிறகு கோபம் (anger) கடைசியா ஓவெண்டு அழுகிறது (breaking down). நாங்கள் பல பேர் பல நிலைகளில இருக்கிறதால தான் யாழில தமிழர் பிரச்சினை பற்றி என்ன செய்தி வந்தாலும் சிலர் எள்ளி நகையாடுறது (நீங்கள்) அல்லது வேறு சிலர் கோபாவேசம் காட்டுறது (நெல்லையன் உதாரணம்) என்று துலங்கல் காட்டீனம். எல்லாம் சரி வரும். ஆனா அதுக்காக யாழ் போல ஒரு ஆயிரம் பேர் (முதுகில குத்த அலையுற கூட்டம் உட் பட) கூடுற இடத்தில பகிரங்கமாக நாங்கள் எங்கட முகத்திலயே கரி பூசுறது எந்த விதத்தில நியாயம் எண்டு தெரியேல்ல. டெய்லி மிரர், லங்கா அகடெமி போன்ற தளங்களில சிங்களவன் எவ்வளவு ஒற்றுமையா நிக்கிறான் எண்டு போய்ப் பாருங்கோ ஒருக்கா. அங்க கட்சி வேறு பாடு இல்லை, வர்க்க வேறு பாடும் இல்லை. தமிழனுக்கு ஆப்பு வைக்க வேணுமெண்ட ஒரே குறிக்கோள் அவங்களையெல்லாம் சேர்த்து விட்டுது. ஆனால் பாருங்கோ அந்த ஒற்றுமை எங்களுக்கு ஒரு luxury ஆகப் போட்டுது. ஒரு விஷயம் குறித்த கருத்து வேறு பாடு இருந்தால் அத இங்க கொண்டு வந்து கொட்டி பப்ளிக்கா அடிபடுவம். பார்த்துக் கொண்டிருக்கிற புல்லுருவியள் (நேற்று டக்ளஸ் வந்த மாதிரி!) நேரம் பார்த்து மேலும் ஆப்பு வைப்பாங்கள். மன்னிக்க வேணும். தனி மடலில எழுதத் தான் நினைச்சன். ஆனா கலைஞன் மட்டுமின்றி பல பேர் யோசிக்க வேண்டிய விஷயம் எண்டதால பொதுவாகவே எழுதினன். தனிப் பட்ட கோபம் வேண்டாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசியலில் களத்தில் உள்ளவர்களில் முக்கியமாக நாம் சிலரை நம்பலாம். உதாரணமாக நெடுமாறன் ஐயா, வை.கோ, சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி,.... இப்படி இன்னும் சிலர்.

ஆனால்.....

திருமாவளவன் இவர்களுடன் சமனாக மதிக்கப்படும் ஒருவராக இருக்கமாட்டார்.

இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

கோரிக்கை றிறைவேறவில்லை....

ஆயினும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு 'காங்கிரசை தமிழ் நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் தனது தலையாய கடமை... இலட்சியம்...' என்று பிரகடனம் செய்தார்.

இறுதியில் தேர்தலின்போது காங்கிரசுடன் ஓரணியில் ஒரே மேடையில் தோன்றினார்.

இவர்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கி நாய்கள்.

இவர்களுடைய வாய்ச் சவடால்களுக்கும்.... மயக்கு மொழிகளுக்கும்.... தமிழ் நாட்டு மக்கள் சில சமயம் எடுபடலாம்...

ஆனால் ஈழத் தமிழர்கள் இழிச்ச வாயர்களல்ல!

தமிழக அரசியல்வாதிகள் பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களின் ஆதரவும் இதற்க்கு தேவை. அவர்களின் ஆதரவோடு நிறுத்திக்கொண்டால் நல்லது. அவர்களுக்கு இதில் எவ்வித அதிகாரங்களையும் தருவது மிகவும் ஆபத்து. கருணா , ஜெயா , வைகோ , ராமதாஸ் , திருமா சண்டையில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். கருணா யாருக்காவது விலைபேசி விற்றாலும் அதில் வியப்பில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.