Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுப்பேத்தும் செயல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சில கடுப்பாக இருக்கும் விடயங்கள் ஆள்பாதி ஆடை பாதியாக வருவது வந்த பின்பு நம்ம பசங்கள் ஒரு பார்வை பார்த்தால் என்னை பார்க்கான் உனக்கு அம்மா இல்லையா ,அக்கா இல்லையா என்று கேட்பது :D

நம்ம பசங்கள் காஞ்ச மாடுகள் தெரியதாதா என்ன இவங்களுக்கு :D:D:lol:

பேந்து கூசுது கூச்சமா இருக்கு என்று பிலா விடுகிற ஆட்களை [பெண்களை] பார்த்தால் கடுப்பாகுது :(

அடிப்படை மனோதத்துவ ரீதியாக பெண்கள் கவர்ச்சியாக வெளிக்கிடுவது பெரும்பாலும் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்றில்லை...

தங்களில் கவர்ச்சியானதை வெளிப்படுத்தி, அதில் கவனம் யாருக்கும் போகும் போது தங்களில் இருக்கும் குறைகள் வெளிதெரியாது என்பதும் ஆகும்.. இதில் ஆண்களில் கவனத்தை ஈர்ப்பதில் காட்டிலும் பெண்கள் அதிகம் கவலை படுவது ஏனேய பெண்களுக்கு போட்டியாக தாங்கள் இருக்கிறோமா என்று தான்....

அதனால் ஒருத்தி கவர்ச்சியாக வெளிக்கிட்டு நீங்கள் கண்டால், உடன தாறு மாறாய் கணிப்பீடு பண்ணாதீர்கள்.... பெரும்பாலும் அந்த பெண்ணிற்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்....தன்னில் இருக்கும் குறைகளை அவள் பொருட்படுத்தி அவற்றை மறைக்கும் முயற்சியில் + தனது தன்னம்பிக்கையை மேம்படுத்த தான் ஆடம்பரமாய் வெளிக்கிட்டு இருப்பார்.

அதனால் வீணாக கிண்டல் அடித்து இன்னும் அந்த பொம்பிளைபிள்ளைகளை சங்கட படுத்தாதீர்கள்....

அது அவ்வாறு இருக்க - பொம்பிளை பிள்ளையளுக்கும் பொடியள்ற சுபாவம் தெரிந்திராமல் வீணாக வார்த்தைகளை கொட்டுவது - "அம்மா அக்கா இல்லையா", அப்பிடி இப்பிடி என்று......

அம்மா அக்கா இருக்கும்....!! இருந்தால் போல?? அவர்களை அப்படி கண்ணோட்டத்தில் பார்க்கலாமா :lol: ? இல்லை தானே?

தாங்கள் தான் பொடியளை பெத்து வளர்த்த மாதிரி கதை!!! கெட்டித்தனமாய் கதைக்கிறம் என்று நினைத்து பெண்கள் சிலர் லொஜிக் இல்லாத வசனங்களை அதிகமாய் பிரயோகிப்பது....அது எனக்கும் கடுப்பேத்தும் விடயம்!!! :icon_idea:

  • Replies 165
  • Views 19.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலை இப்ப வெய்யில் வெக்கை.

எங்கை பாத்தாலும் பூ பூத்து குலுங்குது

எந்தக்கிழவியை பாத்தாலும் அழகுராணி மாதிரித்தான் தெரியுதுகள்

இதை விட பின்னேரப்பாரிலை மெல்லிய குளிர் காத்து வீச கையிலை இருக்கிற ஒரு பியர் போத்தில் என்னை அழகுபார்க்க.......

என்னால் முடியவில்லை????????????

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவமோ முனிவர் அண்ணா? :icon_idea:

பின்ன எங்க அனுபவம் தான் கருத்தாக சுஜி :D

இதை பற்றி நெடுக்கரிம் கேட்டு பாருங்கள் இன்னும் விளக்கமாக கொடுப்பார் :D:lol:

Ilayapillai Posted Today, 01:42 AM

அடிப்படை மனோதத்துவ ரீதியாக பெண்கள் கவர்ச்சியாக வெளிக்கிடுவது பெரும்பாலும் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்றில்லை...

இளைய பிள்ளை பெண்கள் கவர்ச்சியாக வெளிக்கிடுவது ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இல்லையா??? :lol::D

நாங்கள் கவர்ச்சியை இவர்களிடம் எதிர்ப்பார்ப்பதில்லை இவர்களை பார்த்தால் வணக்கம் சொல்லிட்டு போய்கிட்டே இருப்போம் கவர்சியாக இருக்கும் போதுதான் பல பிரச்சினை ஒட்டுவது உரசுவது ,வாறியா என கூப்பிடுவது போன்ற சில முறை கேடான சம்பவங்கள் நடக்கின்ற [பாலியல் வல்லுறவு]

உத விட்டுப்போட்டு உரிச்ச கோழி மாதிரி திரிந்தால பலருக்கு சுவைக்க தோன்றும் :(

பெண்களை கிண்டல் அடிப்பது கிடையாது இளையபிள்ளை அவர்களுக்கு ஆலோசனையாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை இப்ப வெய்யில் வெக்கை.

எங்கை பாத்தாலும் பூ பூத்து குலுங்குது

எந்தக்கிழவியை பாத்தாலும் அழகுராணி மாதிரித்தான் தெரியுதுகள்

இதை விட பின்னேரப்பாரிலை மெல்லிய குளிர் காத்து வீச கையிலை இருக்கிற ஒரு பியர் போத்தில் என்னை அழகுபார்க்க.......

என்னால் முடியவில்லை????????????

அண்ணோய் ........ இதுக்கெல்லாம் கடுப்பாகலாமா ?

மெல்லமாய் கண்ணடிச்சுப் பாக்கிறது . மடங்கினால் மள , மளவென்று காரியத்தில் இறங்கிறது தானே ..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இதிலுள்ள சின்ன வாண்டு நீதானே தம்பியா? என்ன பார்வை தமிழ்சிறியின் பார்வை இந்தப்பார்வை அந்தப்பார்வை..

நாட்டுக்கட்டை , சிலர் வெளிப்படையாக சொல்வார்கள் ....... பலர் சொல்லமாட்டார்கள் .

அந்த இடத்தை தங்களை அறியாமலே உற்றுப் பார்ப்பது , உலகளாவிய ரீதியில் இனம் , மொழி ,வயது வித்தியாசமின்றி உள்ளது என்பதே உண்மை .

எல்லாரும் பார்க்கச் சொல்லித் தான் , கடவுள் மனிதனுக்கு அதனை முன் பக்கம் படைத்துள்ளான் .

ஆடு , மாடுகளுக்கு அது பின் பக்கம் இருக்கிறது என்பதை கவனிக்கவும் .

எங்கண்ட சமுதாயத்தில தான் (அதுவும் முந்தைய சந்ததிகளில் தான் அண்ணா) உதுகள வெளில சொன்னா கெட்டவன்.. என்று நினைச்சிடுவினம் என்று பயந்தவை. ஆனால் மூடி வைச்சு எல்லாம் செய்வாங்கள். நல்லூர் திருவிழாவுக்க எல்லோ பார்க்கனும்.. எங்கட பொண்டுகளையும் ஆம்பிளையளையும். சின்னப்பிள்ளையள் இருக்கிறது கூடத் தெரியாம.. அவையள் விளையாடுற விளையாட்டுக்கள் கொஞ்ச நெஞ்சம் அல்ல. இத்தனைக்கும் வெளில பெரிய சுத்தமா கதைச்சுக்குவாங்க. ஒளிப்பு மறைப்பு செய்து.. வக்கிரமா நடக்கிறதில தமிழன் கில்லாடி..!

இப்ப பெண்களே அதைப் பற்றிக் கவலைப்படுறதில்ல. பார்க்கிறீயா.. நல்லா பார்த்திட்டுப் போ.. என்ற கணக்கா அவங்க இருக்காங்க. பார்க்கிறதால.. கற்பு பறிபோறப் போறதில்ல. பார்க்கப் பார்க்க பழகிடும். அலுத்திடும். சாதாரணமா முகம் பார்ப்பது போலாகிடும். திருட்டுத்தனமா பார்க்க வேண்டிய அவசியம் வராது. அவனாகவே உணர்வான்.. ஐயோ பாவம் என்று. அதுமட்டுமன்றி மூடிட்டு திரியுறதெல்லாம் கற்பைக் காக்குதுகள் என்றும் இல்ல.

இப்ப எல்லாம்.. பார்த்து.. அதைப்பற்றி இரண்டு விமர்சனம் செய்தாத்தான்.. ஆம்பிளை. இல்லைன்னா.. அவன் ஒரு கேணை..! :icon_idea:

இப்ப சமருக்கு (மேற்கு நாடுகளில்) அவனவன்.. சன் கிளாஸும் போட்டிக்கிட்டு.. ரசியோ ரசி என்று ரசிக்கிறான். பெண்களோ காட்சியோ காட்சி என்று இருக்கினம். இதில என்ன தப்பு இருக்கு. முகம் பார்க்கலாம். கை கால் பார்க்கலாம். ஆனால் boobs பார்க்கக் கூடாது என்பதில என்ன கற்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால் அதை வைச்சு பாலியலை தூண்டுற விதமா பேசுறது.. அதைப் பாலியல் தனமா பாவிக்கிறது.. அதை வைச்சுப் பெண்களை பாலியல் ரீதியா கீழ்த்தரமாக விமர்ச்சிக்கிறது.. கொடுமைப்படுத்திறது தான் தப்பு..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை கிண்டல் அடிப்பது கிடையாது இளையபிள்ளை அவர்களுக்கு ஆலோசனையாக இருக்கட்டும்

அண்ணா முனி - நீங்கள் எழுதிய குறிப்பை வைத்து பொதுவாக தான் சொன்னேன்....

கிண்டல் அடிக்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லவில்லை.... :icon_idea:

தமிழ் சிறி அண்ணா மிருகங்கள் நாலு காலில் இருப்பதால் அவற்றின் மார்பகங்கள் மறைவில் இருக்கிறன.....நாங்களும் குரங்காய் இருந்த காலத்தில் அப்படிதான் இருந்தது....

ஆட்டையோ மாட்டையோ ரெண்டு காலில் தூக்கி நிப்பாட்டி பாருங்கோ!!!!!! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எல்லாம்.. பார்த்து.. அதைப்பற்றி இரண்டு விமர்சனம் செய்தாத்தான்.. ஆம்பிளை. இல்லைன்னா.. அவன் ஒரு கேணை..! :lol:

இப்ப சமருக்கு (மேற்கு நாடுகளில்) அவனவன்.. சன் கிளாஸும் போட்டிக்கிட்டு.. ரசியோ ரசி என்று ரசிக்கிறான்.

உள்ள இருக்கிறது - Baked beans tin ஐ கவிட்டு கொட்டி விட்டது போல இருக்கும்.....பார்த்தால் அதுக்கு பிறகு சீவியத்துக்கும் யாருக்கும் ரசிக்க தோணாது!

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா முனி - நீங்கள் எழுதிய குறிப்பை வைத்து பொதுவாக தான் சொன்னேன்....

கிண்டல் அடிக்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லவில்லை.... :lol:

தமிழ் சிறி அண்ணா மிருகங்கள் நாலு காலில் இருப்பதால் அவற்றின் மார்பகங்கள் மறைவில் இருக்கிறன.....நாங்களும் குரங்காய் இருந்த காலத்தில் அப்படிதான் இருந்தது....

ஆட்டையோ மாட்டையோ ரெண்டு காலில் தூக்கி நிப்பாட்டி பாருங்கோ!!!!!! :lol::D

ஆட்டை மாட்டை நிமிர்த்தி நிப்பாட்டினாலும் கூட மார்பகம் அல்லது மடி என்பது உடலின் கீழ் பகுதியில் அதாவது அடிவயிற்றை அண்டி இருக்கும். ஆனால் மனிதனில் இருகால் இடப்பெயற்சியும் நிமிர்ந்த உடற்கோலமும் அவனின் கூர்ப்புப் பாதையில் மார்பகத்தை உடலின் மேற்பகுதிக்கு நகர்த்தி இருக்கிறது. இனப்பெருக்க உறுப்புக்கள் அடிவயிற்றில் காணப்பட (விலங்குகள் போல) மார்பகம் மட்டும் இடம் மாறியுள்ளது. இது கூர்ப்பின் விசேடித்த மற்றும் பிள்ளைப்பராமரிப்பு மற்றும் பாலூட்டலுடன் சம்பந்தப்பட்டு நிகழ்ந்திருக்கலாம்..! :icon_idea:

உள்ள இருக்கிறது - Baked beans tin ஐ கவிட்டு கொட்டி விட்டது போல இருக்கும்.....பார்த்தால் அதுக்கு பிறகு சீவியத்துக்கும் யாருக்கும் ரசிக்க தோணாது!

:(

உண்மை தான். வானில் தோன்றும் நிலா அழகு... எப்ப மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து பார்க்கும் போது மட்டுமே. அதுபோலத்தான்.. இதுகளும்.. அழகு தூர வைச்சு ரசிக்கும் வரைதான். கிட்டப்போய் தொட்டுப் பார்த்திட்டா.. அழகும் போய்விடும்.. ரசனையும் போய்விடும். இறுதியில்.. கனவினில் இனித்தது நிஜத்தில் கசக்கும். அதுதான் சொல்வார் புற அழகில் மயங்காதே அக அழகில் மயங்கு என்று. ஏனெனில் அக அழகான அன்புக்கு வாட்டமும் இல்லை. முதுமையும் இல்லை. நோயும் இல்லை. பிணியும் இல்லை..! தத்துவத்தனமா தெரிஞ்சாலும் யதார்த்தம் அதுவே..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஜேர்மனியிலை இப்ப வெய்யில் வெக்கை.

எங்கை பாத்தாலும் பூ பூத்து குலுங்குது

எந்தக்கிழவியை பாத்தாலும் அழகுராணி மாதிரித்தான் தெரியுதுகள்

இதை விட பின்னேரப்பாரிலை மெல்லிய குளிர் காத்து வீச கையிலை இருக்கிற ஒரு பியர் போத்தில் என்னை அழகுபார்க்க.......

என்னால் முடியவில்லை????????????

அழகை ரசிப்பது மனுசத் தன்னமை தானே? ஆனால் நீங்கள் ரசிப்பதால் அடுத்தவர் சங்கடப் படாமல் இருக்கவேணும்... கண்ணடிச்சு... அவள் கன்னபோத்தி அடிச்சு... ஏன் இந்த சிரமங்கள்....??? பேசாமல் கூலிங் கிளாஸ் கண்ணாடியைப் போட்டுப் பாருங்கோ... வெள்ளையள் எல்லாம் ஏன் கண்ணாடி போடுறது என்று நினைக்கிறியள்?? வெயிலுக்குக் கண்ண கூசக் கூடாது என்றா??? ஹிஹிஹி

என்னைப் பொருத்தவரைக்கும் கவர்ச்சிக்கும் ஆபாசத்திக்கும் வித்தியாசம் இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டை மாட்டை நிமிர்த்தி நிப்பாட்டினாலும் கூட மார்பகம் அல்லது மடி என்பது உடலின் கீழ் பகுதியில் அதாவது அடிவயிற்றை அண்டி இருக்கும். ஆனால் மனிதனில் இருகால் இடப்பெயற்சியும் நிமிர்ந்த உடற்கோலமும் அவனின் கூர்ப்புப் பாதையில் மார்பகத்தை உடலின் மேற்பகுதிக்கு நகர்த்தி இருக்கிறது. இனப்பெருக்க உறுப்புக்கள் அடிவயிற்றில் காணப்பட (விலங்குகள் போல) மார்பகம் மட்டும் இடம் மாறியுள்ளது. இது கூர்ப்பின் விசேடித்த மற்றும் பிள்ளைப்பராமரிப்பு மற்றும் பாலூட்டலுடன் சம்பந்தப்பட்டு நிகழ்ந்திருக்கலாம்..! :icon_idea:

Evolution நிகழ்வுகள் படிப்படியாக காலப்போக்கில் நடந்தது....நீங்கள் சொல்லவதெல்லாம் சரியே...

நான் ஆட்டை மாட்டை இரண்டு காலில் நிறுத்த சொன்னது நகைசுவையாக தான்.....ஒரே வரியில் நகைசுவையுடன் அதே நேரம் மனுசனும் மிருக குடும்பத்தில் தான் உள்ளான் என்பதை சொல்ல வந்தேன்...

ஆனால் விரும்பினால் ஒரு கோடி வருசங்கள் இரண்டு கையில ஒரு ஆட்டிடையோ மாட்டிடையோ முன்னங்கால்களை பிடித்து கொண்டு நின்று பார்க்கலாம்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

-------

-------

இப்ப எல்லாம்.. பார்த்து.. அதைப்பற்றி இரண்டு விமர்சனம் செய்தாத்தான்.. ஆம்பிளை. இல்லைன்னா.. அவன் ஒரு கேணை..! :(

இப்ப சமருக்கு (மேற்கு நாடுகளில்) அவனவன்.. சன் கிளாஸும் போட்டிக்கிட்டு.. ரசியோ ரசி என்று ரசிக்கிறான். பெண்களோ காட்சியோ காட்சி என்று இருக்கினம். இதில என்ன தப்பு இருக்கு. முகம் பார்க்கலாம். கை கால் பார்க்கலாம். ஆனால் boobs பார்க்கக் கூடாது என்பதில என்ன கற்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால் அதை வைச்சு பாலியலை தூண்டுற விதமா பேசுறது.. அதைப் பாலியல் தனமா பாவிக்கிறது.. அதை வைச்சுப் பெண்களை பாலியல் ரீதியா கீழ்த்தரமாக விமர்ச்சிக்கிறது.. கொடுமைப்படுத்திறது தான் தப்பு..!

கடவுள் மனிதனை படைக்கும் போது ஓரவஞ்சனை செய்து விட்டான் என்றே நினைக்கின்றேன் . :lol:

பறவைகளில் ஆண் பறவைகள் அழகு , உதாரணம் ; ஆண் மயில் , சேவல் .

மிருகங்களில் ஆண் மிருகங்கள் அழகு ; தாடியுடன் உள்ள சிங்கம் , தந்தத்துடன் உள்ள யானை , கொம்புடன் உள்ள மான் .

ஏன் ...... மனிதரில் பெண்களை அழகாக படைத்தான் இறைவன் .

எங்களுக்கும் எதனையாவது நீளமாக படைத்திருந்தால் ........ அதை தோழில் சால்வை மாதிரி போட்டுக் கொண்டு , நடப்பு காட்டியிருப்போமே . :D

------

தமிழ் சிறி அண்ணா மிருகங்கள் நாலு காலில் இருப்பதால் அவற்றின் மார்பகங்கள் மறைவில் இருக்கிறன.....நாங்களும் குரங்காய் இருந்த காலத்தில் அப்படிதான் இருந்தது....

ஆட்டையோ மாட்டையோ ரெண்டு காலில் தூக்கி நிப்பாட்டி பாருங்கோ!!!!!! :icon_idea::lol:

இளையபிள்ளை , ஆட்டை மாட்டை கஷ்டப்பட்டு தூக்கி நிற்பாட்டிப் பார்த்தாலும் ...... அது வழுக்கிக் கொண்டு பின்னங் காலடி மட்டும் போயிடுமே ........ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் மனிதனை படைக்கும் போது ஓரவஞ்சனை செய்து விட்டான் என்றே நினைக்கின்றேன் . :icon_idea:

பறவைகளில் ஆண் பறவைகள் அழகு , உதாரணம் ; ஆண் மயில் , சேவல் .

மிருகங்களில் ஆண் மிருகங்கள் அழகு ; தாடியுடன் உள்ள சிங்கம் , தந்தத்துடன் உள்ள யானை , கொம்புடன் உள்ள மான் .

ஏன் ...... மனிதரில் பெண்களை அழகாக படைத்தான் இறைவன் .

எங்களுக்கும் எதனையாவது நீளமாக படைத்திருந்தால் ........ அதை தோழில் சால்வை மாதிரி போட்டுக் கொண்டு , நடப்பு காட்டியிருப்போமே . :lol:

:D சிறி அண்ணா , தோளில போட்டு நடப்பு காட்டற எண்ணம் இருந்தால் இவவை மாதிரி பாரம் கட்டி ஈய்க்க வேண்டியது தான்!!!!!

2-281.jpg

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

1.எனக்கு இப்படியான தலைப்புக்களை கண்டால் போதும் GB கணக்கில கடுப்பு வரும்... அப்புறமா யாழில யாராச்சும் கருத்தெழுதினால் வருமய்யா கடுப்பு.. அப்பறமா யாழ் தின்னனயில வீட்டுக்கதைகளை மற்றவர்களும் பார்க்கட்டும் எண்டு கதைக்கிறவர்களை பார்த்தால் மோகன் மேல கடுப்பு வரும். :wub:

2.அப்புறமா, ஒரு பெண்ணண பார்த்து அவளுடன் கதைச்சு, அவளின் அன்புக்கு கட்டுப்பட்டு அவளை காதலிக்கிறன் எண்டு பய பக்தியோட சொல்ல, ஐயோ நான் அப்படி உங்கூட பழகல்ல, நண்பனாதான் நினைச்சனான், உனக்கு என்னைவிட நல்ல பொண்னு கிடைப்பா, எண்டு உளறுவாளயே கண்டால், (அவளை படைச்சவர்கள் மீது கடுப்பு வரும்).

3.தமிழ் பெண்களின் செயல்கள் (அதிலும் அழகுராணி என தன்னுள் கர்வம் கொள்ளும் பெண்கள்)...:wub:

மொத்தத்தில் எலோரும் கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம்.. பார்த்து.. அதைப்பற்றி இரண்டு விமர்சனம் செய்தாத்தான்.. ஆம்பிளை. இல்லைன்னா.. அவன் ஒரு கேணை..! :wub:

யோவ் நெடுக்ஸ்,இது காப்புபிமை மீறல் :wub:

2.அப்புறமா, ஒரு பெண்ணை பார்த்து அவளுடன் கதைச்சு, அவளின் அன்புக்கு கட்டுப்பட்டு அவளை காதலிக்கிறன் எண்டு பய பக்தியோட சொல்ல, ஐயோ நான் அப்படி உங்கூட பழகல்ல, நண்பனாதான் நினைச்சனான், உனக்கு என்னைவிட நல்ல பொண்னு கிடைப்பா, எண்டு உளறுவாளயே கண்டால், (அவளை படைச்சவர்கள் மீது கடுப்பு வரும்).

இது நகைச்சுவை மாதிரி தெரிய இல்லை. சொந்த அனுபவமோ? யாராவது ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றால் விலகிப்போவதுதான் நல்லது. பழகிவிட்டோம், காதலிச்சுவிட்டோம் என்று திணித்து அந்தப்பெண் அல்லது ஆண் அரை மனதுடன் உடன்பட்டுவிட்டு, பிறகு கலியாணமும் கட்டிப்போட்டு பிறகு சேர்ந்துவாழும்போது அந்த வாழ்க்கை பிடிக்காவிட்டால் என்ன செய்யிறது? இந்தவகையில இப்படியான பெண் உங்களுக்கு கிடைக்காதது உங்கள் நன்மைக்கே என்று நினைச்சுக்கொள்ளுங்கோ டன்.

எனது அக்கா அடிக்கடி எனக்கு சொல்லுவா. கலியாணம் கட்டினபிறகுதான் உனக்கு ஓர் வாழ்க்கை இருக்கிது, சந்தோசம் இருக்கிது என்று நீ நினைக்காதை எண்டு.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பிரச்சனையில இருக்கலாம். உண்மையான அன்பு, விருப்பம் இருந்தாலும் வேறு இடைஞ்சல்கள், அழுத்தங்கள் இருக்கலாம். உண்மையான அன்பு, விருப்பம் இருக்கிற ஒரு ஆளை நாங்கள் அணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால்.. எங்களிடமிருந்து விலகிப்போக முயற்சி செய்யும்போது அல்லது எங்களை கலட்டிவிடும்போது தொடர்ந்து துரத்துவது எங்களுக்குத்தான் இன்னமும் வேதனைகளைத் தரும்.

திருமணம் இரண்டு திருட்டுமனங்களின் இணைவு என்று நான் ஓர் இழையை தொடங்கி இருந்தன். அதில இதுசம்மந்தமாய பல விடயங்களை பகிர்ந்து இருந்தோம். விரும்பியோ அல்லது விரும்பாமலோ திருட்டு மனங்கள் இணைந்து கலியாணம்கட்டி சேர்ந்து வாழவேண்டும் எண்டுறதுதான் யதார்த்தம் - சமுதாய விதிமுறை எண்டால் வேறு ஒன்றும் செய்ய ஏலாது.

சிலருக்கு அதிர்ஸ்டம் உள்ளவர்களுக்கு எல்லாம் ஒழுங்காய் கைகூடி.. தமிழ்சினிமாவில வாய்க்கிறமாதிரி காதலும் நடந்து கலியாணமும்கட்டி வாழ்க்கையிலும் செழிப்பாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால்.. பலரின் கதை சோகக்கதைதான். தீவிரமான காதல் கடைசியில அண்ணா என்றும் நண்பா என்றும் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய ஏலாதுதான்.

ஆரம்பத்திலேயே கலட்டிவிடும் ஓர் உறவினால்... 20, 30, 40 வருசங்கள் என்று ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து எப்படி இறுதிவரை நின்றுபிடிக்க முடியும்?

யதார்த்தமான கருத்து.

ஆரம்பத்திலேயே அரை மனசு கால் மனசோட பழகிறவங்க கிட்ட.. எப்படி ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ எதிர்பார்க்கிறது. காலம் கடந்து பிறக்கும் ஞானத்தால் பலனில்லை. காலத்தே புத்திசாதுரியமா முடிவெடுக்கிறதுதான் நல்லது. காதல்.. நட்பு என்று எல்லாத்துக்கும் மேலால எங்களுக்கு என்று சொந்த வாழ்க்கை இருக்கு வாழ. அதை நிம்மதியா அமைச்சுக் கொள்ளனும். எப்பவும் அடுத்தவையை நம்பி எங்கட வாழ்க்கையை நிம்மதியாக்கிக்க முடியாது. எங்கட வாழ்க்கை எங்கள் கையில் தான்..! அதை முதலில் தீர்மானிச்சிட்டுத்தான்.. அடுத்தவையை அணைப்பதா வெறுப்பதா என்பதை தீர்மானிக்கனும். அடுத்தவளை/னை நம்பி வாழ்க்கையை ஆரம்பிச்சா அவங்க ஆரம்பத்திலும் கவுக்கலாம்.. இடையிலும் கவுக்கலாம்.. கடைசியிலும் கவுக்கலாம். ஆரம்பத்தில கவுத்திட்டா கொஞ்ச நாள் துன்பம். இடையில.. கடைசியில கவுத்திட்டா வாழ்க்கை பூரா துன்பம்.

எனவே தேர்வுகளை சரியாச் செய்ய வேண்டும். இன்றேல்.. அது உங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையே பாழாக்கிவிடும். அப்படி பாழ்பட்டுப் போனவங்க பலர். அதுவும் காதல் என்ற பெயரால் நம்பி ஏமாந்தவங்க ஏமாற்றப்பட்டவங்க பலர். காதல் என்பது இந்தக் காலத்தில் ஒரு கணணி விளையாட்டு. கேம் முடிஞ்சதும்.. விளையாட்டை மறந்திடனும். வாழ்க்கை என்பது அப்படியல்ல. அது நீங்கள் உங்கள் இறுதிக்காலம் வரை வடிவமைக்கும் பராமரிக்கும் ஒரு அழகிய பூங்கா..! அதில்.. குரங்கை அமர்த்தினா பூங்காக்குத்தான் நட்டம். நல்ல ரசிகனை.. ரசிகையை அமர்த்தினா.. வாழ்வுக்கு சிறப்பு. கூட ஒத்துழைக்கிறவங்க அமர்த்தினா செழிப்பான வாழ்வு..!

ஒளவையாரே சொல்லி இருக்கிறா.. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்னர்.. கொடிது கொடிது அன்பில்லாப் பெண்டிர். அதனிலும் கொடிது அவர் தம் கையால் உணவருந்துதல் என்று. சிந்திச்சிச்சுப் பாருங்க.. இயல்பான அன்பில்லாத நடிகைகளாக உள்ளவங்கள நீங்க பின் தொடர்ந்து உங்கள் வாழ்க்கை.. அமையின்.. அது என்னாகும் என்று..! பெற்ற குழந்தைக்கு பாலூட்ட மறுக்கும் தாயும்.. இடைவழியில் தவிக்க விடும்.. காதலும் ஒன்றுதான்..! :wub:

அரியது கேட்கின் வரிவடிவேலோய்

அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்

கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான் செய்தலரிது

தானமும் தவமும் தான் செய்ததாயின்

வானவர் நாடு வழி திறந்திடுமே

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்

அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால்

இன்புற உண்பது தானே

பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு

நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்

கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்

குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண்

புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்

இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது

உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது

தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது

முதலில் முடிவது முடிவில் முதலது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது .

(ஒளவை)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இண்டைவரை நெச்சனான் எனக்கு கடுப்பே வராதெண்டு இவங்கள் நெடுக்காலபோனதும் இளையபிள்ளையும்தமிழ்சிறியும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இப்படித்தான் வாழவேண்டும்"

எப்படியும் வாழலாம்

இந்த இரண்டு வகையான வாழ்க்கையிலும்

கடுப்பேறியவர் எந்த ரகம்?

கடுப்பேற்றியவர் எந்தரகம்?

உன்னை சொல்லி குற்றமில்லை....... என்னை சொல்லி குற்றமில்லை ........... காலம் செய்த கோல.............................

இப்படிக்கு

பென்மன்

நெடுக்காலபோவான்,

ஒளவைப்பாட்டி என்ன ஆம்பளையோ? பொண்ணுங்களை இப்பிடி போட்டுத்தாக்கி இருக்கிறா? பாட்டி எழுதினதில எனக்கு கீழ்வரும் வரிகள் மிகவும் பிடிச்சு இருக்கிது.

இனியது தனிநெடுவேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

அறிவுள்ளோரை என்று சொல்லாவிட்டாலும்.. மனதுக்கு பிடித்தவர்களை என்று சொன்னால் இன்னமும் நல்லாய் இருந்து இருக்கும்.

நீங்கள் சொன்ன கீழ்வரும் வரிகளும் நல்லாய் இருக்கிது:

வாழ்க்கை நீங்கள் உங்கள் இறுதிக்காலம் வரை வடிவமைக்கும் பராமரிக்கும் ஒரு அழகிய பூங்கா..! அதில்.. குரங்கை அமர்த்தினா பூங்காக்குத்தான் நட்டம். நல்ல ரசிகனை.. ரசிகையை அமர்த்தினா.. வாழ்வுக்கு சிறப்பு. கூட ஒத்துழைக்கிறவங்க அமர்த்தினா செழிப்பான வாழ்வு..!

ஆனாலும் பிரச்சனை என்ன என்றால் ரசிகையாய், அத்துடன் கூட ஒத்துழைக்கிறவங்களாய் ஆளை கண்டுபிடிக்கிறதுதானே ரொம்ப கஸ்டமாய் இருக்கிது. அப்பிடி கண்டுபிடிச்சாலும் டன் சொன்னமாதிரி இப்படியல்லோ முடியுது:

ஒரு பெண்ணை பார்த்து அவளுடன் கதைச்சு, அவளின் அன்புக்கு கட்டுப்பட்டு அவளை காதலிக்கிறன் எண்டு பய பக்தியோட சொல்ல, ஐயோ நான் அப்படி உங்கூட பழகல்ல, நண்பனாதான் நினைச்சனான், உனக்கு என்னைவிட நல்ல பொண்னு கிடைப்பா, எண்டு உளறுவாளே

சமுதாயம் ஆமோதிக்கிற திருமணத்தில ரசிகையை எங்க கண்டுபிடிக்கிறது? அதுவும் ஒத்துப்போற ரசிகை? ராட்சசியைத்தான் கண்டுகொள்ளலாம் என்று நினைக்கிறன். இதனால தனிமையே இனிமை எண்டுகொண்டு காலத்தை ஓட்டினால் பரவாயில்லையோ என்று எண்ணத்தோன்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயம் ஆமோதிக்கிற திருமணத்தில ரசிகையை எங்க கண்டுபிடிக்கிறது? அதுவும் ஒத்துப்போற ரசிகை? ராட்சசியைத்தான் கண்டுகொள்ளலாம் என்று நினைக்கிறன். இதனால தனிமையே இனிமை எண்டுகொண்டு காலத்தை ஓட்டினால் பரவாயில்லையோ என்று எண்ணத்தோன்றுது
.

நல்ல சிந்தனை வரவேற்க்க தக்கது கலைஞனுக்கும் கடைசியில் ஆப்பா :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெண்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு ராட்சசிகள் என்று தப்புகணக்கு போடாதீர்கள்.வார்த்தைகளை கொட்டினால் அள்ளமுடியாது.தீயினால் சுட்ட வடு உள்ளாறும் ஆறதே நாவினால் சுட்டவடு.வாயல் பேசும் சில வார்த்தைகள் கூட கடுப்பேத்தும் செயல் தான்.அவ்வையின் பாடல் உட்பட. :(:rolleyes:

யாயினி.

.நல்ல சிந்தனை வரவேற்க்க தக்கது கலைஞனுக்கும் கடைசியில் ஆப்பா :(:D

ஆப்பை வச்சுப்போட்டு ஒண்டும் தெரியாதமாதிரி கேட்கிறீங்கள். இதைத்தான் பதுங்கித்தாக்குதல் எண்டு சொல்லிறதோ? :(

எல்லா பெண்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு ராட்சசிகள் என்று தப்புகணக்கு போடாதீர்கள்.வார்த்தைகளை கொட்டினால் அள்ளமுடியாது.தீயினால் சுட்ட வடு உள்ளாறும் ஆறதே நாவினால் சுட்டவடு.வாயல் பேசும் சில வார்த்தைகள் கூட கடுப்பேத்தும் செயல் தான்.அவ்வையின் பாடல் உட்பட. :(:rolleyes:

யாயினி.

அய்யோ தாய்க்குலமே சாபம் கீபம் ஒண்டும்போட்டு பயப்படுத்தாதிங்கோ. நான் கள நிலமையைச் சொன்னன். நீங்கள் நல்ல பொண்ணு. :(

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

-----

மிருகங்கள் நாலு காலில் இருப்பதால் அவற்றின் மார்பகங்கள் மறைவில் இருக்கிறன.....நாங்களும் குரங்காய் இருந்த காலத்தில் அப்படிதான் இருந்தது....

ஆட்டையோ மாட்டையோ ரெண்டு காலில் தூக்கி நிப்பாட்டி பாருங்கோ!!!!!! :D:rolleyes:

Octavio-11464-Funny-images-music-Entertainment-ppt-powerpoint-118_88.jpg

இளையபிள்ளை , அப்படி நிற்பாட்டினாலும் ....... அது இருக்கிற இடத்தை விட்டு அசையுதில்லையே .......

:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியைப் படிச்சதில என்ன கடுப்பு வாறதெண்டே மற‌ந்து போச்சுது..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.