Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்றது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1247327180.jpg

IMG6624-1247327222.jpg

IMG6624-1247327253.jpg

IMG6624-1247327419.jpg

IMG6624-1247327446.jpg

GTN

Edited by ஜீவா

  • Replies 98
  • Views 9.9k
  • Created
  • Last Reply

குறுகிய காலப்பகுதியில் 50,000ற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் போனது. 50,000 இற்கும் மேற்பட்ட மக்களின் அவயவங்கள் துண்டாடப்பட்டு நிரந்த அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள். 350,000சொச்சம் மக்கள் சித்திரவதை கூடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதனாலேயே புலிகள் இயக்கம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஆயுதங்கள் மூலம் மக்களை பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இவ்வளவு இழப்புக்கள் மத்தியில் புலிகளின் தலைமையும், போராளிகளும் இழப்புக்கள் இன்றி தப்பி இருந்தால்கூட இது மிகப்பெரிய ஓர் தோல்வியே. மக்கள் சம உரிமைகளுடன் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே போராட்டம் தொடங்கியது. இதற்காகவே மக்களும் அமோக ஆதரவு கொடுத்தார்கள். ஆனால்... மக்களிற்கு வாழ்க்கையே இல்லை வாழ்வதற்கு மக்களே இல்லை எனும்பொழுது அதன்பிறகு போராட்டம் மூலம் சாதிக்கப்படப்போவது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் மக்களை காப்பாற்ற முடியாத தலைவரும்,தளபதிகளும் உயிரோடு இருப்பதில் பிரயோசனமில்லை என சொல்கிறீர்களா...அப்படிப் பார்த்தால் புலம் பெயர் மக்களாகிய நாங்களும் தான் உயிரோடு இருக்க கூடாது.அவ் மக்கள் கடைசி நேரத்தில் காப்பாற்றுங்கள் என கெஞ்ச கெஞ்ச சும்மா வேடிக்கை மட்டும் தான் எங்களால் பார்க்க முடிந்தது.

நீங்களே உங்கள் பதிவுகளில் சொல்லி இருக்கிறீர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்தால் என்ன செய்வீர்கள்...யாழ்ப்பாணத்தைய

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆயுதப் போராட்டம் இருக்குதோ,இல்லையோ தலைவரும் தளபதிகளும் உயிரோடு இருப்பதே தமிழருக்கு கிடைக்கும் வெற்றியாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

அப்படியிருந்தால் நிச்சயம் கடந்தகால, இனி நடக்கப்போகும் நகர்வுகள் பற்றி மீளாய்வு செய்யாமலிருக்க வாய்ப்பில்லை. பட்டறிவும் திறனாய்வும் செம்மைபடுத்தி இனிவந்தாலும், இழந்த இழப்புகளும் ரணங்களிலிருந்தும் மீண்டு ஒன்றுபட கால அவகாசமும், உரிய தருணமும் தேவைப்படும்..காலம் கனிந்து வரட்டும்..வேதனையை சகித்துக்கொள்ளவே வேண்டும்.

மாப்பிள்ளை

கருணானிதி

முரளீதரன்

தேவானந்தா

ஆனந்த் சங்கரி

நீலன் திருச்செல்வம்

அமிர்தலிங்கம்

சித்தர்த்தன்

பல தமிழ் அரச அதிகாரிகள்

ராஜன் கூழ்

ஜெயரஜ்

புலம் பெயர் தமிழ்ர் பெயரில் கொலைகார பாவி மகிந்தவைச்சந்தித்த குழு

இப்படி

நீண்ட பட்டியல் உண்டு

முக்கியம் யாழில் பல பேர் ஊடுருவி விட்டிட்டினம்

களை பிடுங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை இல்லையேல் யாழும் போய் யாழ் இணயமும் போகும்

தமிழ்த் தேசிய விபச்சாரம் தான் இவர்களின் குலத்தொழில்

இவர்களுக்கு இதுதான் வேலை

ரதி உங்களுக்கு என்னமாதிரியோ தெரியாது. எனக்கு புலிகள் இயக்கத்தில் அதிக பிடிப்பும் மதிப்பும் வந்தது தமிழ்ச்சனம் மீது யாராவது கையைவைத்தால் அந்தக்கையை உடைப்பதே! இதனால் சிறீ லங்காவில் தமிழ்ச்சனங்கள் மீது சேட்டைவிடுவதற்கு பயப்படும் காலம்கூட இருந்தது. இன்று எங்கள் பெண்கள் பகிரங்கமாக அழிக்கப்படுகின்றார்கள். சனங்கள் குழந்தைகள் எல்லாம் துடிதுடிக்க இறந்து இருக்கின்றார்கள். இதனை புலிகள் இயக்கத்தினால் ஆயுதங்களினால் தடுக்க முடியவில்லை. இப்படி அழிவைப் பார்த்துக்கொண்டு பொத்திக்கொண்டு இருப்பது என்றால் ஏற்கனவே பொத்திக்கொண்டு இருந்து இருக்கலாம். புலிகள் மக்களை காப்பாற்றுவார்கள் என்றுதான் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.

இன்றுகூட... நான் எல்லாளன் படையோ இல்லாட்டிக்கு என்ன மண்ணாங்கட்டி படையோ சிங்களவனின் கொட்டத்தை அடக்கி அவன் எங்கள் சனம்மீது கைவைப்பதற்கு பயப்படும்படியாக செய்யும்படி ஏதாவது இயக்கம் இருந்தால் அல்லது புதிதாக உருவாகினால் புலிகளைவிட அதற்கே எனது தனிப்பட்ட ஆதரவை கொடுப்பேன். அழிவைக் கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடு என்கின்ற தலைவரின் சிந்தனை தலைவராலேயே செயற்படுத்த முடியாமல் போய்விட்டது.

அரசியல் ரீதியாகவும் தாங்களே தமிழ்மக்களின் பிரதிநிதிகள், ஆயுதரீதியாகவும் தாங்களே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் சர்வமும் தாங்களே என்று எல்லாவிடயத்திலும் புலிகள் இயக்கம் முன்னிலைப் படுத்தப்பட்டமையும் அழிவுக்கு ஓர் காரணம்.

எங்களுக்காக குரல்கொடுக்கும் பிரையன் செனவிரட்ன அவர்கள்கூட ஒரு இடத்தில் தெளிவாக கூறி இருக்கின்றார். அதாவது புலிகள் ஆயுதரீதியாக மட்டும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்று.

இது அரசியல், ஆயுதம் என்று இரண்டு தோணிகளில கால்வைத்து கடைசியில இரண்டும் இல்லாமல் இரண்டிலும் தோல்வி அடைந்து நடுக்கடலில் தாங்களும் மூழ்கி சனங்களும் மூழ்கி செத்ததுதான் கண்டமிச்சம்.

இனியாவது ஒரு அமைப்பு, ஒரு குரல் என்று இல்லாமல்.. இதயசுத்தியுடன் போராடக்கூடிய பல்வேறு தலைமைகளை நாங்கள் ஊக்கப்படுத்துவோம். தனியே புலிகளை மட்டும் வளர்த்துவிடுவது பயன் தரப்போவது இல்லை.

அரசியலுக்கு என்று ஓர் தலமை வேண்டும். ஆயுதங்களுக்கு என்று ஓர் தலமை வேண்டும். இவர்கள் இணைந்து செயற்படவேண்டும். ஆனால்.. இது எல்லாம் சர்வமும் புலிகளாக இருக்கத் தேவையில்லை. அப்போதுதான் சர்வதேசத்தில் நாங்கள் ஒழுங்காக பிச்சை எடுக்கமுடியும்.

என்னைப்பொறுத்தவரையில் புலிகளின் தலைவர், தலமை இருக்கின்றார்கள் இல்லை என்பதைவிட அவர்களின் இழப்பைவிட 50,000 சனங்களின் உயிர்போனது, 50,000 பேருக்குமேல் நிரந்தர அங்கவீனர்கள் ஆகியது, 350,000 இற்கும் மேற்பட்ட சனங்கள் சிறைக்கைதிகள் ஆகியது இந்த இழப்பே பெரிதாக தெரிகின்றது.

ஓர் ஓடுகின்ற கப்பலுக்கு மாலுமியாக இருப்பவனே தலைவன். மூழ்கிய கப்பலில் இருந்து உயிர்தப்பிய மாலுமி தலைவன் என்று நீங்கள் சொன்னால்... உங்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால்.. அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கோவிக்ககூடாது. மன்னிக்கவும்.

யாராக இருந்தாலும் கப்பலை பாதுகாப்பாக ஓட்டத் தெரிந்தவர்கள் மட்டும் மாலுமியாக வரட்டும். இப்போது அப்படியானவர்கள் எம்மிடையே இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் எங்கள் இளையோர்கள் இந்த வெற்றிடத்தை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

மாப்பிள்ளை

கருணானிதி

முரளீதரன்

தேவானந்தா

ஆனந்த் சங்கரி

நீலன் திருச்செல்வம்

அமிர்தலிங்கம்

சித்தர்த்தன்

பல தமிழ் அரச அதிகாரிகள்

ராஜன் கூழ்

ஜெயரஜ்

புலம் பெயர் தமிழ்ர் பெயரில் கொலைகார பாவி மகிந்தவைச்சந்தித்த குழு

இப்படி

நீண்ட பட்டியல் உண்டு

முக்கியம் யாழில் பல பேர் ஊடுருவி விட்டிட்டினம்

களை பிடுங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை இல்லையேல் யாழும் போய் யாழ் இணயமும் போகும்

தமிழ்த் தேசிய விபச்சாரம் தான் இவர்களின் குலத்தொழில்

இவர்களுக்கு இதுதான் வேலை

கண்டுபிடிப்புக்கு நன்றி!

Edited by மாப்பிள்ளை

ஓர் ஓடுகின்ற கப்பலுக்கு மாலுமியாக இருப்பவனே தலைவன். மூழ்கிய கப்பலில் இருந்து உயிர்தப்பிய மாலுமி தலைவன் என்று நீங்கள் சொன்னால்... உங்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால்.. அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கோவிக்ககூடாது. மன்னிக்கவும்.

இவ்வளவு காலமும் அந்த கப்பல் நல்லா ஓடேக்க "ஆகா இதுதான் உலகத்தின்ட மிகச்சிறந்த கப்பல்" இந்த தலைவர் போல உலகில எந்த தலைவரும் இல்லை என்டு பாடின ஆக்கள் கப்பல் கவிண்டு போச்சுது இனி உவரெல்லாம் தலைவரா இருக்க முடியாது என்டு சொல்லிறதுதான் உலகத்தின்ட உச்சக்கட்ட பச்சோந்தி தனம்.

கப்பல் கவிழ போகுது என்டு தெரிய வரேக்கயே நீங்கள் களத்தில இறங்கி கப்பல் கவிழாம இருக்க உழைச்சிருக்கலாமே??

இப்ப கூட யார் புதுசா வருவாங்கள் நான் வீட்ட இருந்து விசிலடிக்கலாம் என்டு தான் நினைக்கிறீங்களொழிய என்ன பங்களிப்பு நான் செய்யலாம் என்டு எப்பவாவது நினைச்சதுன்டா????

பிரபாகரன் ஒன்டும் கடவுள் இல்லை..நீங்கள் எல்லாம் வெடிக்கை பார்க்கேக அவர் மட்டும் உலகத்தை எதிர்த்து சண்டை பிடிச்சு வெல்ல

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை விட வேறு ஒரு தகுதியான மாலுமி தமிழினத்திற்கு கிடைக்கமாட்டான்.

எத்தனை மாலுமிகளை தமிழினம் கண்டது.எல்லோரும் கப்பலுக்கு ஓட்டை போட்டார்களே அவர்களை நம்பச் சொல்கிறீர்களா?பதவியும் சுயநலமும் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தில் இவ்வளவு காலமும் சூறாவளிகளையும் சுனாமிகளையும் எதிர்கொண்டு கப்பலைச் செலுத்தியதே பெரிய சாதனை.இலக்கு அடையுமட்டும் பயணம் நிற்காது.பயண வழிகள் நிலமைக்கேற்ப மாறுபடும்.அதுவரை மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வேலைகளைச் செய்யாதிருப்பதே தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.

ஓமுங்க புலிகள் தோற்றதற்கு நாந்தான் காரணம். எல்லாரும் என்னை தூற்றுங்கோ.

புலம்பெயர் மக்கள் ஆதரவு கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்தான் அளந்து வாசித்து இருக்கவேண்டும். தமிழ்மக்கள் நாங்கள் அம்பு மட்டுமே. அதை ஏவுபவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் என்று கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ.

மூன்று அடி ஆழமான தண்ணி நிக்கிது எண்டுகொண்டு முப்பது அடி ஆளமான தண்ணியுக்க நீந்தத்தெரியாமல் குதித்தால் அதற்கு பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.

நிலமை சரியாக துல்லியமாக தெரிந்து அதற்கு ஏற்றவகையில காரியங்களை ஆற்றி இருக்கவேணும். புலம்பெயர் மக்களின் ஆதரவு, தாயக மக்களின் ஆதரவு எவ்வளவு கிடைத்ததோ அதற்கு ஏற்றவகையில் மெதுவாக போயிருக்கலாம். எந்த வேகத்தில் போவது என்பது எங்கள் கைகளில் இருக்கவில்லை. தலமையின் கைகளிலேயே இருந்தது. நாடித்துடிப்பை சரியாக பார்க்காமல் பிழையாக பார்த்து இருந்தால் அதற்கு நாங்களா பொறுப்பு?

மேலும்...

இந்தக்கருத்துக்களை இங்கு நான் எழுத முக்கிய காரணம் புலிகளை தூற்றுவதற்காக அல்ல. இனி போகப்போகின்ற பாதை ஒழுங்கானதாய் இருக்கவேண்டும். இனியாவது விரலின் வீக்கம் அறிந்து செயற்படுங்கள். புலம்பெயர் மக்கள், தாயக மக்கள் எவ்வளவு ஆதரவு தருகின்றார்களோ அதற்கு ஏற்றவகையில் உங்கள் தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள்.

சும்மா எல்லாத்துக்கும் மக்களே காரணம் மக்களே காரணம் என்று குறை கூறினால்.. இந்த மக்களை நம்பி ஏன் போராடினீர்கள்? மக்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்றால் வேறு வேலையை பார்த்து இருக்கலாம் தானே? கடைசிவரை அதற்கு சந்தர்ப்பம் இருந்ததுதானே? இனியும்கூட இருக்கின்றதுதானே?

நீங்கள் உங்கடைபாட்டுக்கு பெரிய எழுப்பங்கள் எடுத்துப்போட்டு.. பிறகு சனங்கள் ஆதரவு தராமல் இருக்கும்போது சனங்களை திட்டி என்ன செய்யப்போறீங்கள்?

அப்படியானால்.. பெரிய திட்டங்கள் செயற்படுத்தமுன் சனங்களின் ஆதரவு பெறுவதற்குரிய மக்களின் முழுச்சக்கி பயன்படுத்தப்படுவதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு அவை செயற்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். அதில் வெற்றிபெற்றபின் காரியங்களில் இறங்கி இருக்கலாம்.

நீங்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்று சொன்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால்.. உலகநியதி என்பது ஒரு தோல்வி வந்தால் அதற்குரிய முழுமையான மீள்பார்வை செய்யப்பட்டு அந்ததந்த பொறுப்பில் உள்ளவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் அல்லது தமது பதவிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

Edited by மாப்பிள்ளை

கீளே உள்ள பந்தியை ஒரு இணையத்தில் பார்த்தேன்! புலிகளை கடுமையாக சாடும் ஒரு களம்! ஆனால் இது தான் யதார்த்தமோ என எண்ண வேண்டியுள்ளது! இதை இங்கு ஒட்டியதால் நான் துரோகி பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை!

விடுதலைப் புலிகளின் அமைப்பு வடிவம் ஒரு அரசியல் இயக்கத்தையோஇ மக்கள் யுத்தக் குழுக்களையோ ஒத்த வடிவம் கிடையாது. அதிகாரங்கள் முழுவதும் தலைமையிடம் குவிந்திருந்தஇ எதிர்த்துக் கேள்வி கேட்பது என்றே பேச்சுக்கே இடமற்றஇ விமர்சனங்களைக் கடுகளவேனும் சகித்துக்கொள்ளாதஇ இரகசியமும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் பேரங்களும் திரைமறைவு ஒப்பந்தங்களும் நிறைந்திருந்த ஒரு தலைமையால் அந்த இயக்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அந்தத் தலைமைக்குழு முற்றாக அழிக்கப்பட்டதும் அந்த இயக்கம் செயலற்றுப்போனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புல்லரிக்குது

புலிகள் தோற்றதும் நல்லதாய் போய்விட்டது.. இப்ப பலரின் சாயங்கள் பல்லிழிக்குது...

புலிகளை தூற்ற முன்னர் 'இதை சொல்லுவதால் என்னை ஒரு துரோகியாக எண்ணினாலும் பரவாயில்லை' என்ற ஒரு முகவுரையுடன் எழுதுவார்கள் அதை வைத்தே இவர்களின் உண்மையான முகம் தெரியும்.

இப்படி முகவுரை எழுதுவதும் ஒரு உளவியல் தந்திரம்தான்.. துரோகியாக எண்ணிணாலும் பரவாயில்லை என்று எழுதும்போது அதை படிப்பவர் அய்யோ இவர் உண்மையை தான் சொல்லுறார் பாவம் என்று எண்ணிவிடுவார்கள். எழுதுபவர் நோக்கமும் நிறைவேறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நீங்கள் சொல்வது புலிகள் தங்கள் உயிரை கொடுத்து போராட வேண்டும் ஆனால் நாங்கள் புலம் நாட்டில் இருந்து கொண்டு புலிகளை தவிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்கிறீர்கள்....மாணவர் அமைப்பை சேர்ந்த இளையோரை முன் நிறுத்த வேண்டும் என்கிறீர்கள் நல்ல விடயம் ஆனால் அவர்களுக்கு பின்னால் யார் நிற்பது....நான் நினைக்கிறேன் நீங்கள் புலிகளை பந்தயக் குதிரையாகத் நினைக்கிறீர்கள் குதிரை தோற்றவுடன் உங்களால் தாங்க முடியவில்லை அவர்களும் மனிதர்கள் தான் என நீங்கள் யோசிக்கவில்லை ...என்னைப் பொறுத்த வரை மாற்றுக் கருத்துக்காரர் எவ்வளவோ மேல் அவர்கள் என்ன காரணத்திற்காகவோ அன்றில் இருந்து இன்று வரை புலிகளை எதிர்க்கிறார்கள்[அவர்கள் கொள்கையில் உறுதியாக இருக்குறார்கள்]...புலம் பெயர் நாட்டில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் வன்னி மக்களை காப்பாற்ற போராடினோம் நாங்களே இப்படி போராடி இருக்கையில் புலிகள் போராடமல் இருந்திருக்க மாட்டார்கள் கடைசி நேரத்தில் என்ன நடந்தது எதற்காக இவ்வளவு பேரழிவு இதற்கான பதில் புலிகளிடமே இருக்குது...யார் கண்டது கடைசியில் அந்த மக்களை புலிகள் தான் திரும்பவும் காப்பாற்றுவார்களோ தெரியாது.

பெச்சி, எங்கண்டை உண்மையான முகத்தைகண்டு நீங்கள் என்ன செய்யப்போறிங்கள்? அங்க 350,000 சனம் முகம் காணமுடியாமல் சிறையுக்க இருக்கிதுகள். அதுகளிண்ட முகத்தை பார்க்கிறது இனி எப்பிடி என்று யோசியுங்கோ.

சிங்களவனுக்கு மிகுந்த ஒர் plus pointஆக அமைஞ்ச விசயம் ஜனநாயகம் என்கின்ற முகமூடி.

ஐக்கியதேசிய கட்சி ஆட்சிக்குவந்து எல்லா காடைத்தனங்களும் செய்வாங்கள். பிறகு கொஞ்சக்காலத்தால சுதந்திரக்கட்சி ஆட்சிக்குவந்து எல்லாக் காடைத்தனங்களும் செய்வாங்கள். பிறகு திரும்பவும் ஐக்கியதேசியக்கட்சி ஆட்சிக்கு வந்து காடைத்தனங்கள் செய்வாங்கள்.

இதுமாதிரியே காலத்துக்கு காலம் புதிய சனாதிபதிகளும், பிரதமர்களும், மந்திரிகளும், படைத்தலைவர்களும் வந்து அக்கிரமங்களை செய்துபோட்டு நல்லபிள்ளையாட்டம் செத்துப் போயிடுவாங்கள்.

பின்னால வாறவன் முன்னால போனவை தூற்றிவிட்டு தானும் அதே காடைத்தனத்தை செய்வான். அவனுக்கு பின்னால வாறவன் இவனை தூற்றிவிட்டு அதே காடைத்தனத்தை செய்வான். இப்படியே தொடர்ந்து செல்லும்.

இந்தவகையில்.. உலகம் புதிதாக ஆட்சிக்கு வருபவர்களை இலகுவாக மன்னித்துவிடும். அவர்களுக்கு மாபெரும் வரவேற்றும் மரியாதையும் கொடுக்கும்.

ஆனால்.. தமிழர்கள் எங்களுக்கு நடப்பது என்ன?

என்ன நடந்தாலும்.. புலி புலி புலி... எல்லாத்துக்கும் காரணம் புலிப்பயங்கரவாதிகள். ஏன் இப்படி? சிங்களவனின் ஆட்சிகள் போல் நாங்கள் ஏன் பழைய தவறுகளை மூடிமறைக்க இயலாமல் இருக்கின்றது?

காரணம் என்ன என்றால் தலமை மாறுபடாமல் ஒன்றாக இருப்பது. திருப்பித் திருப்பி ஒரு தலமையே இருக்கும்போது உலகத்தை பேக்காட்ட முடியாமல் போகின்றது. சிறீ லங்கா போல் உலகத்திடம் பிச்சை எடுப்பதற்கு மாறுபடாத தலைமை தடையாக இருக்கின்றது.

சிங்களவனுக்கும் எங்களுக்கும் இடையில் உள்ள இந்த வேறுபாடு சிங்களவன்கள் பகிரங்கமாக தமிழ்மக்களை அழிப்பதற்கு உதவி இருக்கின்றது.

இப்போது மகிந்த காரணமாக சிறீ லங்காவை உலகம் வெறுத்தாலும் நாளைக்கு மகிந்தவின் குணாம்சங்களை உடைய அல்லது இன்னமும் கேவலமான காடைத்தனங்கள் உள்ள சிங்களவன் தலைவராக வரும்போது உலகம் மீண்டும் சிறீ லங்காவிற்கு அமோக ஆதரவு கொடுக்கும்.

ஆனால் எங்கள் விடயத்தில்.. ஆகக்குறைந்தது உலகத்தை பேக்காட்டுவதற்காகவாவது ஒரு மாற்றம் வரவில்லை.

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டுத் தலைவரும் வீரமரணத்தை அறிவித்திருந்தால் ஆகா இவரல்லவோ மகாபுருஷர் என்று புதுநானூறு பாடியிருப்பார்கள். இப்போதுதான் வாய்ப்புத் தேடிவந்திருக்கிறது வசைவுகளைவிட்டுவிட்டு, வளையுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

தோல்விக்கு காரணம் புலிகள்தான்

அவர்களுடைய கொள்கைகள்தான்

அவர்களது பிடிவாதம்தான்

அவர்களுடைய வளைந்து கொடுக்காத முடிவுகள்தான்

ஆனால்

அவர்களது கொள்கைகள் என்ன?

அவர்களது பிடிவாதம் எதில்?

அவர்கள் எதில் வளைந்து கொடுக்கவில்லை?

இதற்கான உங்கள் பதிலில்தான் உள்ளது

தோற்றது சரியா?

பிழையா என்பது......................????????

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நீங்கள் ஒரு நாட்டின் அரசாங்கத்தையும் போராளிகளையும் ஒப்பிடுகிறீர்கள் ஒரு அரசு தப்பு செய்தால் அதை மற்றைய நாடுகள் விமர்சிக்கும் ஆனால் உள் நாட்டு விவகாரம் எனச் சொல்லி அதில் தலையிடாது[சில நாடுகள் விதி விலக்கு ஈராக்]ஆனால் போராட்டம் அப்படி அல்ல என்ன தான் போராட்ட தலைவர்கள் மாறினாலும் தங்களுக்கு அதில் சாதகம் இல்லா விட்டால் சர்வதேசம் தலையிடவும் மாட்டாது அவ் மக்களுக்கு உதவியும் செய்யாது.இவ்வளவு ஏன் தற்போது தான் சர்வதேசத்தை பொறுத்த வரை தலைவரும் புலிகளும் அழிந்து விட்டார்களே இனி மேலாவது அந்த முகாம்களில் இருக்கும் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப சொல்லி இலங்கை அரசை தூண்டலாமே ஆனால் எந்த நாட்டு அரசாவது ஏதாவது செய்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருத்தர் எழுதியிருக்கிறார்

தமிழனை அடித்தவனின் கையை

புலிகள்ஒடித்தார்கள்

அதனால் புலிகளை நான் ஆதரித்தேன் என்று.

அதுசரி

அந்தக்கையை ஒடித்ததனால் எத்தனைபேர்

புலிகளுக்கு எதிரி அல்லது துரோகியானார்கள்.................???????????????

... மக்களை காப்பாற்ற முடியாத தலைவரும்,தளபதிகளும் உயிரோடு இருப்பதில் பிரயோசனமில்லை என சொல்கிறீர்களா...அப்படிப் பார்த்தால் புலம் பெயர் மக்களாகிய நாங்களும் தான் உயிரோடு இருக்க கூடாது.அவ் மக்கள் கடைசி நேரத்தில் காப்பாற்றுங்கள் என கெஞ்ச கெஞ்ச சும்மா வேடிக்கை மட்டும் தான் எங்களால் பார்க்க முடிந்தது.

...என்னைப் பொறுத்த வரையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் இருக்குதோ, இல்லையோ தலைவரும் தளபதிகளும் உயிரோடு இருப்பதே தமிழருக்கு கிடைக்கும் வெற்றியாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும் ...

எனது கருத்தும் இது தான்...

தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டுத் தலைவரும் வீரமரணத்தை அறிவித்திருந்தால் ஆகா இவரல்லவோ மகாபுருஷர் என்று புதுநானூறு பாடியிருப்பார்கள். இப்போதுதான் வாய்ப்புத் தேடிவந்திருக்கிறது வசைவுகளைவிட்டுவிட்டு, வளையுங்கள் பார்க்கலாம்.

இது வசைவுகள் அல்ல. எதிர்காலமும் இழவில் போகக்கூடாது என்பதற்கான புலம்பல்கள். தோற்றால் தாயக, புலம்பெயர் மக்களே காரணம். வெற்றி பெற்றால் தலைவரே காரணம் என்று சொல்லச் சொல்லுறீங்களோ?

தோற்றது சரியா?

பிழையா என்பது......................????????

முதலில தோல்வி என்று நீங்கள் எதை நினைக்கிறீங்கள் குகதாசன் அண்ணா? என்னைப்பொறுத்தவரையில் தோல்வி என்பது பல்லாயிரம் மக்களின் உயிரிழப்புக்கள். முற்றிலும் மக்கள் பிணங்களாகியது. அங்கவீனர்களாகியது. சிறைப்பிடிக்கப்பட்டது. நில இழப்பைபற்றி இங்கு நான் சொல்லவில்லை. நீங்கள் தோல்வி என்று எதை நினைக்கிறீங்கள் என்று ஒருக்கால் சொல்லுங்கோ.

இவ்வளவு ஏன் தற்போது தான் சர்வதேசத்தை பொறுத்த வரை தலைவரும் புலிகளும் அழிந்து விட்டார்களே இனி மேலாவது அந்த முகாம்களில் இருக்கும் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப சொல்லி இலங்கை அரசை தூண்டலாமே ஆனால் எந்த நாட்டு அரசாவது ஏதாவது செய்ததா?

இது அவர்கள் தூண்டி நடைபெறுகின்ற விடயங்கள் அல்ல. நாங்கள் பிச்சை எடுத்து நடைபெறுகின்ற விடயங்கள். சிங்களவனுக்கு எங்களைவிட நன்றாக பிச்சை எடுக்கத் தெரிந்து இருக்கின்றது. நாடுகள் ஒன்றும் சொல்லவில்லை ஏன் என்றால் எங்களைவிட சிங்களவன் நன்றாக பிச்சை எடுக்கின்றான். காலத்திற்கு காலம் மாறுபடுகின்ற தலமை அவன் எங்களைவிட நன்றாக பிச்சை எடுப்பதற்கு உதவுகின்றது. சர்வதேசத்தை பொறுத்த அளவில் புலிகள் என்பது பயங்கரவாதிகள். பயங்கவாதிகளுக்கு உலகம் பிச்சையும் போடாது, ஆதரிக்கவும் மாட்டாது. எனவேதான் புலிச்சாயம் இல்லாத ஒரு தலமை பிச்சை எடுக்கும் வேலையை செய்வதற்கு தேவை.

தமிழனை அடித்தவனின் கையை

புலிகள்ஒடித்தார்கள்

அதனால் புலிகளை நான் ஆதரித்தேன் என்று.

அதுசரி

அந்தக்கையை ஒடித்ததனால் எத்தனைபேர்

புலிகளுக்கு எதிரி அல்லது துரோகியானார்கள்.................???????????????

தமிழனை அழித்தவனின் கையை ஒடித்ததனால் புலிகளை எதிர்த்தவர்களைவிட ஆதரித்தவர்களே அதிகம்.

ஆனால்...

புலிகள் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்த்தமையால் அதற்காக கையை ஒடித்தமையால் புலிகளை ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்களே அதிகம்.

அதாவது பொதுவான எதிரியை - சிங்களவனை, இந்தியப்படைகளை - அழிக்கும்போது புலிகளுக்கு அதிக ஆதரவும், தமிழ் மககளிடையே இருந்த தமது எதிர்ப்பாளர்களை அழித்தபோது புலிகளுக்கு அதிக எதிர்ப்பாளர்களும் (உங்கள் பாசையில் துரோகிகளும்) கிடைத்து இருக்கின்றார்கள்.

Edited by மாப்பிள்ளை

கடந்த காலத்தில் அண்ணையைச் செல்லியும் போராளிகளின் தியாகத்தை ஆகோ ஓகோ எண்டு புகழந்து தள்ளியும் பிழைப்பு நடத்தினவை இப்ப அண்ணையையும் போராளிகளையும் விமர்சிக்க வெளிக்கிட்டினம். அது இந்த ஓடற கப்பல் ஓடாத கப்பல் கதை சொல்லுறவர் ஏன் கனடாவுக்கு வராமல் களத்திலை நிண்டு போராடியிருக்கலாம் தானே! உவர் போராட்டத்துக்கு 'எடிகேட்டற் பீப்பிள்" தலைமை தாங்கியிருக்கோணும் எண்டு சொல்லித் திரியிறதாகவும் நேற்று கதைகேக்கை கனடாவில உள்ள எங்கடை பொடியள் சொன்னாங்கள்.நான் விமர்சிக்கிறவையை ஒண்டு கேக்கிறன் அண்ணையும் எங்கடை போராளிகளும் சுமந்த பாரச்சுமையை குறைக்கிறதுக்கு நீங்கள் என்ன செய்தனீங்கள்? தன்னுடைய வாழ்நாளெல்லாம் சலுகைக்கு மண்டியிடாமல் துரோகத்துக்கு துணைபோகமல் பணத்துக்கு விலைபோகமல் இனவிடுதலை ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு உண்மையா உழைச்ச அண்ணைக்கு என்னுடைய கண்ணுக்கு முன்னால எவன் சேறு புச நினைச்சாலும் நான் அவனை அடிச்சு முறிப்பன்.அண்ணையாலை உருவாக்கப்பட்ட ஒவ்வெருவருக்கும் இந்தக் கடமை இருக்கு. இண்டைக்கு போராட்டம் தோத்துப் போச்சு எண்டு ஒப்பாரி வைக்கிறவை விட்டுக்கு ஒருதரா 10 இலட்சம் பேர் போர் களத்தில் நிண்டு போராடியிருந்தால் இங்கே புலத்தில உள்ள 3 இலட்சம் குடும்பங்களும் 10 இலட்சம் பேரும் வீட்டுக்கு ஒரு பிள்ளைகளை நாட்டுக்காக படிப்பிச்சு ஒவ்வொருதரும் ஆளுக்கு வருடம் 12 ஆயிரம் யுரோ பணம் கொடுத்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எண்டு சிந்திச்சுப் பாருங்கோ?

அடடா... நாங்கள் போராளிகளின் தியாகங்களை வைத்து பிழைப்பு நடாத்தினோமா? எத்தனை மில்லியன் டாலர்கள் சம்பாதித்தோம் என்று கூறமுடியுமா?

இது கருத்துக்களம் கருத்துக்களை பகிர்கின்ற இடம். நீங்கள் தவறான இடத்தில் வந்து நிக்கிறீங்கள் என்று நினைக்கின்றேன்.

இங்கு அண்ணையைப் பற்றி ஏதாவது சொன்னால் கையை உடைப்பன் காலை உடைப்பன் என்று சொல்லுற நீங்கள் அங்க வன்னியிலபோய் அண்ணனுக்கு பாதுகாப்பாக நின்று இருக்கலாம்.

எம்மைப் பொறுத்தவரையில் எம்மால் மானசீகமாக தலைவரையும், போராளிகளையும் மதிக்கமுடியும். ஆனால்... உங்களைப்போல் மற்றவர்களுக்கு கையை காலை உடைப்பன் என்று சொல்லிக்கொண்டு திரியமுடியாது.

எனக்கு கையை காலை உடைப்பன் என்று சொல்லுறதைவிட்டு அங்க தாயகத்தில கையை காலை இழந்து இருக்கின்ற பல்லாயிரம் தமிழ்ச் சனங்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று கொஞ்சம் யோசியுங்கோ. இதற்கு எடியுகேட்டட் பீப்பில் ஆக இருக்கத் தேவையில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தாலே போதும்.

புலிகள் தோற்றது ஏன் என்றுதான் இன்னும் கேட்கின்றோம் தவிர நாங்கள் தோற்றது ஏன் என்று தோல்விக்குப் பிறகும் நாம் கேட்கத் தயாராக இல்லை. இதுவே தோல்விக்கு காரணமாகின்றது. புலிகளும் சரி அதன் தலமையும் சரி இந்த இனத்தில் ஒன்றே. நாம் என்றைக்கும் புலிகளை ஒரு புறம்பான சக்தியாகவே நோக்கி அவர்கள் ஈழம் பெற வேண்டும் என்று இருந்து வருகின்றோம்.புலிகள் மட்டுமில்லை மாற்று இயக்கங்களும் அதன் தலமைகளும் கருணா சங்கரி டக்ளஸ் இன்னும் எத்தனையோபேர் அத்தனையும் இந்த இனமே. எமது இனம் குறித்து ஒருவடிவத்துக்கு வர முடியாது. எனவே எமது இனத்தை ஒரு கப்பலுக்கு ஒப்பிடுவதும் அதை ஒரு மாலுமி ஓட்டுவதும் என்பது ஒரு மேலாண்மை தனத்தில் இருந்த மாயை உணர்வே அன்றி உண்மை இல்லை. அவ்வாறு நடைமுறையில் என்றும் இருந்ததும் இல்லை.

தோல்விக்கும் அழிவுக்கும் நாமே காரணமாக இருக்கின்றோம். தாயகத்தில் வாழும் மக்களில் இருந்து போராட்டம் படிப்படியாக புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்தே நழுவியது. முழுக்க முழுக்க மேலாண்மைத் தனத்தின் விருப்பாகவே தமிழீழம் என்ற இலட்சியம் மாறியது. மேலாண்மைத்தனத்தின் விருப்புகளுக்காக எஞ்சிய மக்கள் போராடி தனி அரசு அமைக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது. இன்றும் புறநிலை அரசு என்ற கோட்பாடு மேலாண்மைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி மக்கள் சார்ந்தது இல்லை. ஏக மக்களினது நலன்கள் சார்ந்ததாக இருப்பின் புற நிலை அரசு என்ற எண்ணப்பாட்டிற்குப் பதிலாக வதைபடும் மக்களுக்கான மனித உரிமைப்போராட்டமாகவே அது இருந்திருக்கும்.

தனி அரசு என்ற மேலாண்மைக் கனவில் வறுமைப்பட்ட மக்கள் அழிகின்றார்கள். எவர் எப்படிச் சொல்லினும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே படிப்படியாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்களாலேயே பணம் செலுத்தி வேறு நாடுகளுக்கு நகர முடிந்தது. கல்வியில் மேம்பட்டவர்கள் அரசை அனுசரித்து வாழப்பழகிக் கொண்டனர். வடிகட்டி வடிகட்டி இறுதியில் வறுமைப்பட்ட மக்களே போராட்டத்தை சுமந்தனர். ஆனால் தமிழீழம் என்ற கோட்பாடும் தனி அரசு என்ற விருப்பும் மேலாண்மைவாதத்தின் விருப்பாகவே இருந்துவந்திருக்கின்றது.

தமிழன் என்ற மான மாயை ஒரு கோமாளித்தனம் என்றால் சிலர் துள்ளிக் குதிக்கலாம். இதே கருத்துக்களத்தில் வன்னி மக்கள் இராணுவப்பிடிக்குள் செல்லும்போது அதற்காக கோபப்பட்டு கருத்தெழுதியவர்கள் இருக்கின்றார்கள். மானம் போவதை விட சாவது மேல் என்று கூhசாமல் சொன்னவர்கள் இருக்கின்றார்கள். எப்படி ? எப்படி சொல்ல முடியும் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு வன்னிமக்கள் மானத்துடன் சாக வேண்டும் என்று? மொத்த சனத்தொகையில் பத்தில் ஒன்பது பங்கு சனமும் இராணுவக்கட்டுப்பாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு அவர்கள் எல்லோரினது மானத்துக்கும் வன்னி வறுமைப்பட்ட மக்களை எப்படி பயன்படுத்த முடியும்? இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டிய மேலாண்மைத்தனம் இதுதான்.

மானமுள்ள இனம் என்று ஒரு மாயையை உருவாக்கி அதன் அடிப்படையில் ஒரு தனி அரசை ஸ்தாபிக்க முனைந்தார்கள். அவ்வாறு ஒன்றும் இல்லை. கீழ்சாதிக்கும் மேல்சாதிக்கும் இடையில் மானம் மரியாதை என்பது பொதுவான ஒன்றல்ல. இந்துவுக்கும்; இஸ்லாமியனுக்கும் பொதுவான ஒன்றல்ல. என்னும் பிரதேசமாகவும் பல கூறுகளாகவும் பொதுவான ஒன்றல்ல. பின்னர் எப்படி இனத்துக்கு என்ற மானம் உணர்வு பொதுவாக இயங்க முடியும்? தமிழ்த்தேசியம் மானம் உணர்வு என்பதெல்லாம் ஒரு மேலாண்மைத்தனத்தின் நிர்ப்பந்தம் தவிர தமிழீழம் எங்கும் வியாப்பித்த ஏக மக்களின் பொதுவான எண்ணப்பாடாக என்றும் இருந்ததும் இல்லை. அவ்வாறான ஒரு பொது இயக்கத்துக்குள் இனம் தன்னை உட்படுத்தவும் முடியாத அளவுக்கு நாம் முரண்பட்டுக்கிடக்கின்றோம். புலிகள் இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்த இந்த முரண்பாட்டுக்குள்ளே அடங்குகின்றது. இனி முயலும் புற நிலை அரசும் என்னும் பலவும் இதற்குள்ளாகவே அடங்கும்.

என்ன சுகன் மானம் கெட்ட கருத்தாய் சொல்லுறீங்கள். ஒண்டுக்கு நாலுதரம் வடிவாய் யோசிச்சுத்தான் சொல்லுறீங்களோ? நான் மேல மாலுமியைப்பற்றி எழுதினதுக்கே எனக்கு கால் கை இல்லையாம். உங்களுக்கு கப்பலே இல்லையெண்டு உதை எழுதினதுக்கு சங்குதான். :icon_idea:

இப்போதும் எழுதுகிறார்கள் புலிகளின் தமிழீழ கோரிக்கை , புலிகளின் போர் எண்று.. அப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கும் தமிழர்கள் தான் இப்போதும் பெரும்பாண்மையாக இருக்கிறார்கள்...

அதாவது சிங்களவனுக்கும் புலிகளுக்கும் நடந்த போருக்கு நடுநிலைவாதிகள் போல காட்டி கொண்டு.....

அப்படி சொல்லும் எவனும் தன்னை ஒரு விடுதலை விரும்பியாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை... தன்னை ஒரு பார்வையாளனாகவே வைத்து இருந்தான் எனும் உண்மை வெளிப்படை ...

இப்படியானவர்களுக்காக போராடினார் தேசிய தலைவர் என்பது தான் அவருக்கு இழுக்கை கொடுக்கிறது... இவர்களுக்காகதான் பல மாவீரர்கள் தமது உயிரை கொடுத்தனர் எனபதும்தான் மனதுக்கும் கவலையை கொடுக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bond007, இதில் உள்ள இணைப்பை எனக்கும் அனுப்பியிருந்தார். இதை காவி செல்வது தான் இவர் வேலை. பிரபாகரன் வசை பாடுதல் தான் இவர் வேலை .

போரை யாரும் விரும்பி ஏற்கவில்லை போர் எம்மீது திணிக்கப்பட்டது. நாம் சண்டை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சிங்களம் எம்மை கொண்டது, கொள்கிறது, கொள்ளும்.

ஒரு 3 அல்லது 4 பேர் உள்ள குடும்பத்தை கூட வெற்றியாக கொண்டு செல்ல முடிவதில்லை. எதிர்காலம் யாருக்கும் தெரிவதில்லை.புலிகள் தமது வலுவுக்கும் மேல் உள்ள முளு உலகுடனும் சண்டை செய்தது. இதில் புலிகளை விமர்சிப்பதில் ஒன்றும் இல்லை. ஒற்றுமையாகவும் நேர்மையாகவும் முயற்சி செய்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.