Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்றது ஏன்?

Featured Replies

எல்லாமே சரியாகத்தான் இருந்தது... அதை கெடுத்தது யார்...??

தயா, நீங்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் - சுயநலம் என்பதே. எனக்கு என்னால் ஆயுதம் தூக்கி போராடமுடியாது. ஆனால்... ஆயுதம் தூக்கி யாராவது போராடி வெற்றியை ஈட்டித்தந்தால் மகிழ்ச்சியே. எனது குடும்பத்தினர் யாராவது ஆயுதம் தூக்கி போராடுவது என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வேறு யாராவது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆயுதம் தூக்கி போராடி சாவது என்றால் அதில் எனக்கு மறுப்பு இல்லை. என்னால் போராட்டத்திற்காக துன்பப்பட முடியாது. ஆனால் மற்றவர்கள் துன்பப்பட்டால் எனக்கு ஆட்சேபணை இல்லை. இப்படியான சுயநலமே எல்லா விடயங்களையும் கெடுத்து இருக்கின்றது.

ஆனால்.. இந்த சுயநலமே பெரும்பான்மை தமிழ்மக்களின் இதயத்தின் அடிநாதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சேற்றில் செந்தாமரை முளைப்பதுபோல் ஒரு சில உறவுகள் மட்டும் தன்னலமற்று இதயசுத்தியுடன் போராடி உயிரைக்கொடுத்து இருக்கின்றார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை. ஏன் என்றால் சுயநலம்.

உங்கள் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ள கீழ்வரும் வரிகள் நிதர்சனமானவை.

என்னையும் என் குடும்பத்தையும் போராட அழைக்க கூடாது... நெருக்கடியான காலங்களில் நிதி எல்லாம் கேட்க்க கூடாது... மற்றும்படி எனக்கு தனி நாடு தமிழீழம் எல்லாம் வேண்டும்...

இந்த வரிகளை நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள்வீட்டு வெளிகதவில் எழுதி மாட்டவேண்டும்.

  • Replies 98
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கையின் போர்க்குற்றக்களுக்கு துணை நின்றதையும் பிரசாரம் செய்து ... அதன் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் ஆகும் ஆசையில் மண் விழச்செய்ய வேண்டும்..

:D

இனிமேலாவது மற்றவன் செய்வான் என்று பார்த்துக் கொண்டிராது ஏன் வேலவன் சொன்னபடி இத்தகைய பிரச்சாரங்களை பல்மொழிகளிலும் முன்னெடுக்கக் கூடாது? இனிமேல் போராட்டம் புலம்பெயர் மக்கள் கைகளில் என்றால் காலம் தாமதியாது அவரவர் தமக்குத் தெரிந்த‌ சிறுசிறு வழிகளிலாவது குடைச்சல் கொடுக்கலாமே..! :D

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக இருக்க விட்டதுதான் ஈழத்தமிழர் விட்ட பிழை. அங்கும் போராட்டம் குண்டு வெடிப்பு என்டு எங்கலை போல் தொடர்ந்திருக்கனும்.

இல்லாட்டி வெட்கம் இல்லாமல் இன்னும் சிங்களவனின் தூதரகம் சென்னையில் இருக்குதானே.

அவைதானே தொப்புள் கொடி உறவு, நாங்களும் கைகொடுப்போம் எண்டு எங்களை உசுப்பேத்தினவை. செத்தாப்பிறகு மவுனிச்சு போய் இருக்கினம்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக இருக்க விட்டதுதான் ஈழத்தமிழர் விட்ட பிழை. அங்கும் போராட்டம் குண்டு வெடிப்பு என்டு எங்கலை போல் தொடர்ந்திருக்கனும்.

இல்லாட்டி வெட்கம் இல்லாமல் இன்னும் சிங்களவனின் தூதரகம் சென்னையில் இருக்குதானே.

அவைதானே தொப்புள் கொடி உறவு, நாங்களும் கைகொடுப்போம் எண்டு எங்களை உசுப்பேத்தினவை. செத்தாப்பிறகு மவுனிச்சு போய் இருக்கினம்

புலத்தில் புடுங்கலாம். கிளிக்கலாம் என்று தானே நீங்களும் உசுப்பேத்தினுீங்கள். அப்போ உங்களுக்கு என்ன செய்யணும். உங்களின் விடுதலைக்கு நீங்கள் உழைக்கவில்லை. மற்றவன் வந்து உங்களுக்குப் புடுங்கணுமா?? நன்றிக் கெட்ட நாய்க் குணம் என்றது இது தானா??

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக இருக்க விட்டதுதான் ஈழத்தமிழர் விட்ட பிழை. அங்கும் போராட்டம் குண்டு வெடிப்பு என்டு எங்கலை போல் தொடர்ந்திருக்கனும்.

இல்லாட்டி வெட்கம் இல்லாமல் இன்னும் சிங்களவனின் தூதரகம் சென்னையில் இருக்குதானே.

அவைதானே தொப்புள் கொடி உறவு, நாங்களும் கைகொடுப்போம் எண்டு எங்களை உசுப்பேத்தினவை. செத்தாப்பிறகு மவுனிச்சு போய் இருக்கினம்

இத தான் நானும் தமிழ்நாட்டில இருக்கிற என்ட நண்பனிட்ட கேட்டனான்...அவன் என்ன்ட்ட திருப்பி கேட்டான் " எங்களுக்காவது தமிழ்நாட்டில பொலிஸ் கைது கெடுபிடி இருக்கு ஆனால் நீங்களெல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில இருந்து என்னத்த புடுங்கினீங்கள்???" என்டு.

ஈழ (ஈன) தமிழரே புலம்பெயர்ந்த நாடுகளில வர்த்தக கண்காட்சி, ஊர் ஒன்றுகூடல் நடிகைகளை கூப்பிட்டு நிகழ்ச்சி என்டு துவங்கீட்டாங்கள் இதுல உங்களுக்கு தமிழ்நாட்டில குண்டு வெடிக்கோனுமோ??

..

Edited by Innumoruvan

நாரதர் உங்கள் கருத்து கவனிக்கத் தக்கது. புறநிலை அரசு என்ற நிலைப்பாட்டை விமர்சிக்கும் போக்கு என்னிடம் உள்ளது. இது குறித்து நான் சொல்ல வருவது ஒன்றுதான் தற்போது அவலப்படும் மக்களின் மறுவாழ்வு பாதுகாப்புக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல்கொடுக்கும் ஒரு அமைப்பே பின்னாளில் புற நிலை அரசு என்ற கோட்பாட்டுக்குள் நகர முடியும். இதையே முன்னரும் நான் எழுதியுள்ளேன். இதற்கு என்னால் உணரப்படும் காரணம் தாயகத்தில் நடைமுறையில் இருந்த நிழல் அரசு நிஜமாக முடியாமல் போனதற்கு பிரதான காரணம் மக்களின் வெளியேற்றமே. இதில் குறிப்பாக இனம்காணப்படவேண்டியது புலம்பெயர்வு. இந்தப் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வு ஏனைய மக்களுக்கு காட்டிய தவறான பாதை. அதன் பிறகே இந்த மக்கள் வெளியேற்றத்தில் சிங்கள அடக்குமுறை பிரதான பங்கை வகிக்கின்றது. ஒரு நிழல் அரசு கலைவதற்கு புலம்பெயர் வாழ் மக்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் பிரதான காரணமாக இருக்கின்றோம். இந்த விடயத்தை கருத்தில் கொள்ளாது மீளவும் நிழல் அரசு போல் புற நிலை அரசு என்று அரசு என்ற கருதுகோளில் காலூன்றுகின்றோம். ஒரு அரசு அமைவதற்கான அத்திவாரத்தை தகர்த்தவர்கள் நாங்கள். மீளவும் புறநிலை அரசு என்று ஒரு நிறுவனமய சிந்தனையில் எம்மை உள் நுளைக்க முற்படுகின்றோம். இது எமது மக்களின் தேவைகளுக்கான போராட்ட வடிவம் அன்று மாறக அரசு குறித்த எமது பெரு விருப்பம். இதை சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.

நிழல் அரசு கலைந்தற்கான காரணங்கள் பல. எல்லாக் காரணங்களை விடவும் பூகோள அரசியற் காரணங்களே முதன்மையானது.மேலும் நாங்கள் பலமற்றவர்கள், எமது பலம் எது பலவீனம் எது என்பதை நாம் அறியவில்லை.சமாதான காலத்தில் நடந்தவை எம்மை பலவீனப்படுத்தியே வந்துள்ளது.போராட்டாம் சிதைவடைந்ததை தலமை கவனிக்கவில்லை,சிங்கள தேசம் வலிமையடைந்து வருவதையும் கவனிக்கவில்லை.சிங்கள அரசின் அடக்குமுறையால் நேரடியாகாப் பாதிப்புக்கு உள்ளானவர்கள்

களத்தில் உள்ள மக்களே.இதில் புலம் பெயர்ந்தவர்களைக் குறை சொல்வதில் என்ன இருக்கிறது? யாருக்கு வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் புலம் பெயர்வார்கள்.இது இனியும் தொடர்ந்து நடக்கும்.இயலாதவர்கள் அடக்குமுறையால் போராட நிர்ப்பந்திக்கப் படுவார்கள் அல்லது சமரசம் செய்து சிங்கள மேலாண்மையை எற்றுக்கொண்டு வாழ்வார்கள்.

புறனிலை அரசு என்பது ,உண்மையில் பெயரளவிலையே ஒரு அரசாக இருக்க முடியும்.அது அடிப்படையில் புலம் பெயர்ந்தவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு சர்வதேச அமைப்பே.இதில் அரசு என்பது ஒரு எண்ணக் கருவே ஒழிய அது உண்மையில் எந்த அரச அதிகாரத்தையும் கொண்டிருக்கப் போவதில்லை.இந்த ஜன நாயாக அமைப்புக்குள் தாங்களாகவே மக்களும் மக்கள் சார்ந்த அமைப்புக்களும் இணைந்தால் ஒழிய இது சாத்தியப்படப் போவதில்லை.அத்தோடு இது புலம் பெயர் தமிழர்களின் நலங்களையும் கவனைக்க வேண்டும்.அல்லாது விடின் இது அர்த்தம் அற்றதாக வெறும் காகித அரசாக இருக்கும்.இதனூடாக ஒரு தொடர் அழுத்தைதை சர்வதேச ரீதிகாப் பிரயோகிக்கலாமே தவிர இதனை ஒரு அரசாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை.இதனைப் புலத்தமிழர்களின் ஒரு அரசியற் அமைப்பாகவே சர்வதேசம் பார்க்கும்.

இப்போதைய காலகட்டத்தில் ஒரு தனியரசு குறித்து சிந்திக்கும் நிலையில் தாயக மக்கள் இல்லை. அது குறித்த அவர்களது சத்தி உறிஞ்சப்பட்டுவிட்டது. இதை செய்தது சிங்களம் மட்டும் இல்லை எமது புலம் பெயர் வாழ்வின் தவறான வழிகாட்டலும் எமக்குள் இருந்த முரண்பாடுகளும் ஒற்றுமை இன்மையும் ஆகும். தாயகத்தில் வாழும் மக்களுக்கே தனியரசுக்கான தேவை இருக்கின்றது. அவர்களுடைய தேவையுடன் எமது தனி அரசு குறித்த விருப்பத்தை இணைக்கவேண்டுமே தவிர புறம்பாக இயங்க முடியாது. தேவையை அடிப்படையாக வைத்து அதற்காக பெறுதல் என்ற முயற்சியே வலிமையுடன் வெற்றி பெறும். எனவே தயாக மக்களை பாதுகாத்து மீள சக்தி உடையவர்களாக்கி பயணிக்கச் செய்வது என்பதே முதற்படி. அவர்களுடன் இணைந்து பயணிப்பது எமது பணியாக இருக்கவேண்டும். நாம் புறநிலை அரசாக நிறுவி அதன் ஊடாக தயாகமக்களுக்காக போராட முற்படுவதாக சொல்கின்றோம் ஆனால் தாயக மக்களுக்களின் மறுவாழ்வுக்காக போராடி அவர்களுடன் இணைந்து ஒரு அரசை நிறுவுவது குறித்து முன்நகர்வதே எனது கருத்து அமைகின்றது. இது தவிர்ந்த எமது அவசரம் தாயக மக்களை என்னும் சிங்களம் வடிவமற்று சிதைப்பதற்கு வழிகோலும். பின்னர் இங்குள்ள புறநிலை அரசும் நிழல் அரசுபோல் கலைந்து போகும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எமது அவசரங்களால் என்றைக்கும் மீள முடியாத சூனியத்துக்குள் ஒரு துளி நம்பிக்கையும் அற்றதாக ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வு தள்ளப்படும் அபயாம் இருக்கின்றது. நாம் அரசு என்று அமைத்து சிங்களவனை சற்று அச்சுறுத்தி ஆசுவாசப்பட முடியும் அதே நேரம் அதை நிஜமாக்குவதற்கான அத்திவாரத்தை சிங்களவன் சுத்தமாக துடைத்தளித்துவிடுவான். எப்போதும் எந்த ஒரு முனைப்புக்கும் தயகத்தில் வாழும் மக்களே அத்திவாரம். அதை பாதுகப்பதின் ஊடாகவே எந்த ஒரு எதிர்காலம் குறித்தும் நாம் சிந்திக்க முடியும்.

புற நிலை அரசு அமைக்காவிட்டாலும் சிங்களவர் தாங்கள் செய்வதைச் செய்து கொண்டுதான் இருப்பர்.புறனிலை அரசு என்னும் அமைப்புக்குள் தொண்டு நிறுவனக்களும் வருகின்றன.அண்மையில் வணக்கா மண்ணிற்கு நடந்ததைப் போல் எந்த தமிழர் தொண்டு அமைப்புக்களையும் சிறிலங்கா அரசு இயங்கவிடப் போவதில்லை.எவர் தனது நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலை செய்ய தயாராக இருகிறார்களோ அவர்களுடன் கூட்டுச் சேரவே அது தயாராக உள்ளது.அது இந்தியாவாக இருந்தாலும் இல்லை வேறு எந்த அரசாக இருந்தாலும் ஒன்று தான்.ஆகவே என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள மக்களை புலம் பெயர்ந்த தமிழரின் அமைப்புக்களால் தற்போது காப்பாற்ற முடியாது.அது இந்தியாவுடன் இணைந்து வேலை செய்யும் த தே கூட்டமைப்பினாலயே சாத்தியப்படும்.அவர்களும் இந்த புற நிலை அரசுடன் கூட்டாக வேலை செய்ய முடியாது.இன்னும் சில வருடங்களில் நிலமைகள் மாறும்.பூகோள ஆரசியல் எப்போதும் உறை நிலையில் இருப்பதில்லை.ஒரு காலத்தில் புற நிலை அரசும் ,களத்தில் மக்களின் போராட்டங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் தருணம் வரும்.அது வரை தனித்து இயங்குவதே சாத்தியம் ஆனது.

நாம் சற்றுக்காலம் மக்களின் அவலங்கள் குறித்து அரசு என்ற அலட்டல் இன்றி போராடமுடியும். அந்தக்காலகட்டத்தில் முடிந்தளவு எமது முரண்பாடுகளை களையவும் மீள தாயகம் நகர்வதற்கான கருத்தை விதைக்கவும் முடியும். இன்று விடுதலப்புலிகளின் தொடர்ச்சியாகவே புறநிலை அரசு வெளிப்படுகின்றது. அதே நேரம் புலிகள் குறித்த சர்வதேச நிலைப்பாட்டில் மாற்றம் என்னும் ஏற்படவில்லை. அரசு என்ற நிறுவன மயச் சிந்தனையின் ஊடாக மக்களுக்காக போராடக்கூடிய எந்தவித சாதகமான சூழலும் இப்போது இல்லை. இந்நிலையில் அவசரம் ஏன்? மனிதாபினமான மறுவாழ்வு பாதுகாப்புக் குறித்து போராடும் ஒரு அமைப்பை பொதுவாக நிறுவி போராட்டத்தை தொடர்ந்து அந்த அமைப்பு காலப்போக்கில் புறநிலை அரசாக மாறும் போது எமக்கு சாதகமான பல விடயங்களை நாம் ஏற்படுத்த முடியும். புறநிலை அரசை எதிர்ப்பது விமர்சிப்பது என்பதுக்கு அப்பால் ஒரு அச்சப்பாட்டின் அடிப்படையிலேயே எனது கருத்து அமைகின்றது.

தமிழருக்கான தீர்வு தமீழிழம் என்பதுவும் அது தமிழரின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் எழுந்தது என்பதற்காகவும் போராடிய அமைப்பே புலிகள் அமைப்பு.இந்தக் கொள்கையின் அடிப்படையில் எழும் கட்டப்படும் எந்த அமைப்பும் புலிகளீன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுவது இயல்பானது.அப்படி தொடர்ச்சியானதாக இல்லாமால் இருக்க வேண்டுமெனில் இந்த அடிப்படிக் கோரிக்கையின் அடிப்படையில் அது கட்டப்படாமால் இருக்க வேண்டும்.அப்படியாயின் இபிடிபி போன்ற அமைப்புக்களே தமிழருக்கு சாலச் சிறந்தவை.இதில் புதிதாக் ஒரு அமைப்பை அமைப்பது அவசியம் அற்றது.

மேலும் நிறுவனமாதால் என்பதனோடு உங்களுகுப் பிரச்சினை இருப்பதாகாப் படுகிறது.பின் ந னவீவினத்துவர் சொல்வதைப் போல் நிறுவனமாதால் என்பது பிரச்சினை இல்லை.எத்தகைய நிறுவனம் என்பதே ஆய்வுக்கு உரியது. நிருவனமாகாமால் ஒன்றையும் செய்ய முடியாது.தனி நபர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

புலம் பெயர்ந்த மக்களை அடிப்படியாக வைத்தே புறனிலை அரசியோ அமைப்பையோ நிறுவனத்தையோ அமைக்க முடியும்.அது அந்த மக்களின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார அபிலாசைகளைப் பிரதினிதுவப்படுத்த வேண்டும். களத்தில் உள்ள மக்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள் ஆயுதப் போராட்டம் நடாத்தப் போவதில்லை.

விளக்கத்திற்க்கு நன்றி நாரதர். பல கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் நிறுவனமாதால் என்பதனோடு உங்களுகுப் பிரச்சினை இருப்பதாகாப் படுகிறது.பின் ந னவீவினத்துவர் சொல்வதைப் போல் நிறுவனமாதால் என்பது பிரச்சினை இல்லை.எத்தகைய நிறுவனம் என்பதே ஆய்வுக்கு உரியது. நிருவனமாகாமால் ஒன்றையும் செய்ய முடியாது.தனி நபர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

நிறுவனமாதல் என்பது பிரச்சனையான விடயமாகவே எனக்கிருக்கின்றது. இதற்கு காரணம் எங்களுக்குள் எப்போதும் தொடரும் ஆதிக்க அடயாளம் தேடும் போட்டி நிலை. ஒரு நிறுவனத்தை ஆழுமை செய்வதில் உள்ள போட்டி நிலை அது முடியாமல் போகும் போது எந்த வித துர்ரநோக்குமற்று அதை எதிர்க்கும் மனநிலை. இது ஒரு நிறுவனத்தை அதன் இலக்கு நோக்கி இயங்க விடாமல் முடக்கும் சாத்தியங்கள் உள்ளது. இதை எத்தனையோ அனுபவங்களில் இருந்து பார்க்கின்றோம். இந்த போட்டி நிலையில் மாற்றம் என்பது சிறிதும் வராதநிலையில் நிறுவனம் குறித்த அச்சம் இருக்கவே செய்கின்றது.

ஒரு அமைப்பு என்றில்லாமல் அரசு குறித்த கருத்தும் அதற்கான கட்டமைப்பும் ஒரு நிறுவனமய சிந்தனையுடையது. இதில் இலக்கு என்பது தமிழீழம் என்பதே ஆகும். இனி எமது போட்டிநிலையில் உள்ள ஆதிக்கம் என்பது எதிர்நிறுவனங்களை அமைக்கும் அல்லது இருக்கும் நிறுவனத்தை சிதைக்கும் தன்மையுடையது. மேலதிகமாக இந்த புறநிலை அரசு குறித்த அமைப்பிபின் வளிநடத்தலில் புத்திசீவிகள் அதிகம் சம்மந்தமுறுவதால் அதிகப்படியான குழப்பங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டும். இவைகள் இலக்கை சிதைக்கவல்லன என்பதே அச்சமானது. பொதுவாக நிறுவனம் குறித்த என்னிடம் முரண்பாடான கருத்துக்கிடையாது ஆனால் எம்மவர்கள் அமைக்கும் நிறுவனம் குறித்து அச்சம் இருக்கவே செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்க்கு நன்றி நாரதர். பல கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.

ஒரு அமைப்பு என்றில்லாமல் அரசு குறித்த கருத்தும் அதற்கான கட்டமைப்பும் ஒரு நிறுவனமய சிந்தனையுடையது. இதில் இலக்கு என்பது தமிழீழம் என்பதே ஆகும். இனி எமது போட்டிநிலையில் உள்ள ஆதிக்கம் என்பது எதிர்நிறுவனங்களை அமைக்கும் அல்லது இருக்கும் நிறுவனத்தை சிதைக்கும் தன்மையுடையது. மேலதிகமாக இந்த புறநிலை அரசு குறித்த அமைப்பிபின் வழிநடத்தலில் புத்திசீவிகள் அதிகம் சம்மந்தமுறுவதால் அதிகப்படியான குழப்பங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டும். இவைகள் இலக்கை சிதைக்கவல்லன என்பதே அச்சமானது. பொதுவாக நிறுவனம் குறித்த என்னிடம் முரண்பாடான கருத்துக்கிடையாது ஆனால் எம்மவர்கள் அமைக்கும் நிறுவனம் குறித்து அச்சம் இருக்கவே செய்கின்றது.

புலத்தில் புடுங்கலாம். கிளிக்கலாம் என்று தானே நீங்களும் உசுப்பேத்தினுீங்கள். அப்போ உங்களுக்கு என்ன செய்யணும். உங்களின் விடுதலைக்கு நீங்கள் உழைக்கவில்லை. மற்றவன் வந்து உங்களுக்குப் புடுங்கணுமா?? நன்றிக் கெட்ட நாய்க் குணம் என்றது இது தானா??

புலம் பெயர் தழிரின் அதி உச்ச பங்களிப்பு போராட்டத்தில் கொடுக்கபட்டது ஒரு சில கழிவறை தமீழர்களை விட.

அதற்கு மேல் அகதி தமிழனுக்கு புலம் பெயர் நாட்டில் எநத செல்வாக்கும் கிடையாது.

அகதி என்ற முத்திரையின் கீழ் தான் வாழ்கின்றான்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற செல்வாக்குடன் அகதியாக வாழும் ஒரு கூட்டம் எப்படி ராஜதந்திர வேலைகளை நகர்த்துவது.

சும்மா கதைக்கலாம்.ஆனால் தமிழ்நாட்டு தமிழனுக்கு எல்லா செல்வாக்கும் இருந்தது. அவனால் எங்கள் போரை செம்மை படுத்தி வெற்றி பெற வைத்திருக்க முடியும்.

சுதந்திரம் அடைந்த கோசோவோ எங்கள்ளை போல் 2 இலட்சம் மக்கள் கூட்டி ஊர்வலம் நடாத்தவில்லை. 75 நாட்கள் தொடர் போராட்டம் நடாத்த வில்லை.

கிழக்கு தீமோர் உண்ணா விரதம் இருக்க வில்லை. இப்படி பல நாடுகள் களத்தில் பலம் கொண்டு சுதந்திரம் பெற்றன.

தமிழகதமிழன் தான் பலமாக நின்று செய்திருக்க வேண்டும். அழித்ததும் அவன்நாட்டு காரன் தானே

தமிழகத்தமிழன் காமெடி சூப்பர் நேசன் அவர்களே....

தமிழகத்தமிழனால் அவனுக்குண்டான உரிமைப்பங்கான காவிரி நீரையோ... முல்லைபெரியாரின் நீரையோ கூட வாங்க இயலவில்லை..... 450 தமிழக மீனவர்கள் சிங்களனால் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் பிடுங்க முடியாதவன்.

95% தமிழகத்தமிழனுக்கு ஈழத்தில் நடப்பது என்ன என்றே தெரியாது.... அவ்வாறு செய்திகள் இருட்டடிக்கப்படுகின்றன...

சில அமைப்பினர் தீவிரமாக பரப்புரை செய்ய்ததால் தான் இளங்கேவலன், சிங்களபாலு, மணிசிங்கள அய்யர் , போன்ற்றோர் மண் கவ்வினர்... தில்லுமுல்லு செய்து சிங்கள சிதம்பரம் வென்றான், ...

தமிழக மக்களுக்கு ஈழச்செய்திகள் கடுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன....

இந்த நிலைமையில் நீங்கள் தமிழக மக்களை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான்!!!

தமிழக மக்கள் ஒரு முறை மும்பையிலும்... மறுமுறை பெங்களூருவிலும் அடித்து விரட்டப்பட்டபோதே .... எருமை மாட்டு மீது மழை பெய்தது போல் தான் தமிழகம் இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தமிழன் காமெடி சூப்பர் நேசன் அவர்களே....

தமிழகத்தமிழனால் அவனுக்குண்டான உரிமைப்பங்கான காவிரி நீரையோ... முல்லைபெரியாரின் நீரையோ கூட வாங்க இயலவில்லை..... 450 தமிழக மீனவர்கள் சிங்களனால் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் பிடுங்க முடியாதவன்.

95% தமிழகத்தமிழனுக்கு ஈழத்தில் நடப்பது என்ன என்றே தெரியாது.... அவ்வாறு செய்திகள் இருட்டடிக்கப்படுகின்றன...

சில அமைப்பினர் தீவிரமாக பரப்புரை செய்ய்ததால் தான் இளங்கேவலன், சிங்களபாலு, மணிசிங்கள அய்யர் , போன்ற்றோர் மண் கவ்வினர்... தில்லுமுல்லு செய்து சிங்கள சிதம்பரம் வென்றான், ...

தமிழக மக்களுக்கு ஈழச்செய்திகள் கடுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன....

இந்த நிலைமையில் நீங்கள் தமிழக மக்களை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான்!!!

தமிழக மக்கள் ஒரு முறை மும்பையிலும்... மறுமுறை பெங்களூருவிலும் அடித்து விரட்டப்பட்டபோதே .... எருமை மாட்டு மீது மழை பெய்தது போல் தான் தமிழகம் இருந்தது!

வேலவன்,

இந்த நிலை மாறாதவரை ஈழத்துக்கு விமோசனம் வராது. பலமான ஊடகப் பிரச்சாரம் மட்டுமே ஓரளவுக்கு மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். ஆனால் பலமான ஊடகங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

சினிமாவில் புலம்பெயர் தமிழரின் பணம் எவ்வாறு முக்கிய பங்காக இருக்கிறதோ அவ்வாறே சில தமிழக ஊடகங்களிலும் செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட வேண்டும். சன் குழுமத்தை எதிர்ப்பதில் ஒரு நன்மையும் இல்லை. மாறாக புலம்பெயர் தேசங்களில் சன் ஒளிபரப்பை ஒருங்கிணைத்து அவர்களின் லாபக்கணக்கில் செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட்டால் சிறிது மாற்றங்களைக் காணலாம். :D

சினிமாவில் புலம்பெயர் தமிழரின் பணம் எவ்வாறு முக்கிய பங்காக இருக்கிறதோ அவ்வாறே சில தமிழக ஊடகங்களிலும் செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட வேண்டும். சன் குழுமத்தை எதிர்ப்பதில் ஒரு நன்மையும் இல்லை. மாறாக புலம்பெயர் தேசங்களில் சன் ஒளிபரப்பை ஒருங்கிணைத்து அவர்களின் லாபக்கணக்கில் செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட்டால் சிறிது மாற்றங்களைக் காணலாம். :D

ஒரு காலத்திலை எங்கட சனம் தமிழ் சினிமாவை எதிர்த்தது... இப்ப தொலைகாட்ச்சியை...

இப்ப எல்லாம் பெரிய வல்லரசான அமெரிக்கா எதிர்த்தாலே அதை பொருட்படுத்துகிறார்கள் இல்லை... ஆனால் அமரிக்காவால் வருமானம் வரும் எண்டால் வாயை பிளப்பார்கள்... இதுதான் நிதர்சனம்..

தமிழகத்து ஊடகங்களில் ஈழத்தமிழர் ஆதிக்கம் அல்லது பங்கெடுத்தல் என்பது இல்லாததன் விளைவே இப்போதைய இருட்டடிப்புகளுக்கு க்காரணம் அந்த நிலையை மாற்ற ... புலம்பெயர்ந்த ஈழமக்கள் முன்வர வேண்டும்...

அதற்கான வழிகளை ஆராய வேண்டும்!

நல்ல லாபம் கிடைக்கும் என்றால் சன் குழுமம் ஈழப்பிரச்சனையை பற்றி செய்திகள் தொடர்கள் வெளியிடத்தயங்காது.... முயன்று பார்க்கலாமே...

எனக்கென்னவோ இனி தமிழகத்து மக்களை நம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை .... என்றே தோன்றுகிறது!

முதலில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் தமக்கென்று ஒரு சிறந்த சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும்! அதன் வாயிலாக வன்னி மக்கள் புனர் வாழ்வு..... முகாம்களை சர்வதேசமயப்பட்டுத்தல் ... போராட்டங்கள் ,ஒன்று கூடல் நிகழ்வுகள் நடத்த வசதியாக இருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை போராட்டம் என்பது இடைவிடாத போராட்டம். இங்கே வெற்றி தோல்வி எல்லாம் கிடையாது.

காலத்திற்கேற்ப போராட்டத்தை வடிவமைத்து கொள்பவர்கள் புத்திசாலிகள். புரியாதவர்களுக்கு காலம்தான் புரியவைக்க முடியுமே தவிர இங்கே வீண் வரண்டாவாதம் செய்வதால் பலன் இல்லை.

புலிகளின் தலமை பத்திரமாக இருக்கி;ன்றது...... (மே 19 செ. பத்மநாதன் அனைத்துல செயலாளர்)

தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் ( 4 நாட்கள் கழித்து பிபிசி செய்தி சேவைக்கான பேட்டியில் பத்மநாதன்)

தலைவர் இறந்துவிட்டார் எனும் அனைத்துலக செயலாளரின் வார்த்தை பொய்யானது ( 7 நாட்ககளின் பின்பு புலிகளின் புலனாய்வு துறை)

எமது முந்திய செய்தி தவறானது. துன்பகரமாக எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் ( 6 நாட்களின் பின்பு புலிகளின் அதே புலானாய்வு பிரிவு)

இங்கே காலத்தின் கட்டாயம் உரியவர்களால் உரியவர்களுக்கு மிகவும் புத்திசாலிதனமாக எவ்வளவுக்கு எதிரிகளினது கண்ணில் மண்ணை துவலாமோ தூவிவிட்டு சொல்பட்டு இருக்கின்றது இருந்தும் எமது மாக்களுக்கு விளங்காததற்கு புலிகள் பொறுப்பேற்க முடியாது. எதிரியின் பலத்தையும் எமது எதிரிகளையும் அடையாளம் காணது போராடுவது என்பது எம்மை நாமே சுடுவது போன்றது அது. 1987ம் ஆண்டு புலிகளின் தலமை சுமார் இருபது வருடங்களின் முன்பு பாசிச இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கபட்டபோது. சரியான தகவலின் அடிப்படையில் சரியான இடத்தையே சுற்றிவளைத்தார்கள் என்பது குறிப்பிட தக்கது புலிகளின் தலமை ஊடறுத்து தப்பியது என்பது அதிர்ஸ்டகரமான தொன்று. தமிழ்ஈழ பெண்களின் முதலாவது ஆயுதபோர் என்றாலும் எமது தலமை பாதுகாக்கபட வேண்டும் என்ற அரிய அர்பணிப்பு போராலேயே அது அன்று கை கூடியதும் இங்கே குறி;ப்பிட தக்கது. 20 வருடங்கள் கழித்து அதே தலமை அதினிலும் மடமைத்தனமான முறையில் சிக்கியிருக்கும் என்பது முட்டாள்களின் கற்பனை மட்டுமே. தற்போதைய உலக இராணுவ நடவடிக்கைகள் என்பது ஏதோ ஒருவரோடு ஒருவர் நேரே நின்று சுடுவதல்ல. எதிரியின் ஒவ்வொரு அசைவும் நகர்வும் பல ஆயிரகணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சற்லைட்றின் உதவியுடன் அவதானிக்க படுகின்றது. ஒவ்வொரு உரையாடலும் தொழில்நுட்பத்துடன் பதிவுசெய்ய படுகின்றது. பின்பு தாக்குதல்கள் அனைத்தும் குறுந்துர நெடுந்துர ஏவுகணை உந்திகளாலும் சுப்பர்சோனிக் விமானங்களாலுமே நடத்தபடுகின்றது. இங்கே போர்களை தொழி;ல் நுட்பம்தான் செய்கின்றது இராணுவம் அல்ல. தவிர லேசர் ரக ஒளி துப்பாக்கிகளாலும். இராசாயன கலவைகளாலும் எதிரியின் உடலை துரத்தில் இருந்தவாறே செயலிழக்க செய்ய முடிகின்றது. இவையெல்லாம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை அமெரிக்க இராணுவமும் வியாபார நோக்கம் கருதி விளம்பரதிற்காக தொழில்நுட்பசாலைகளும் வெளியிடுகின்றன. காரணம் அமெரிக்க இராணுவத்தை பொறுத்த வரையில் இது பழைய புளித்த பால். ஆனால் சீனா இந்தியாவிற்கு இவைகளை தாயாரித்து வைத்திருந்தாலும் சோதனை செய்வதற்கு உரிய களங்கள் அமைய வில்லை அதற்காக அமைந்ததே தமிழுழ போர்க்களம். இது மாவிலாற்றிலேயே புலிகளுக்கு புரிந்துபோன ஒன்று ஆனால் நான் உட்பட புலிகள் அடிப்பார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ததோம். காரணம் நாம் அறிவை மழுங்கடித்து உணர்வுக்கு முக்யத்துவம் கொடுத்திருந்தோம். இதை உறுதிபட என்னால் இப்போது சொல்முடிவதற்கான காரணம் அங்கு வாழ்ந்தவர்களுடன் நடந்த உரையாடலும் நடந்துமுடிந்துள்ள அனைத்தினுடைய ஒரு அலசலும். விமானத்தினால் குறிவைத்து மாவீரன் தழிழ்செல்வனை மட்டுமே இந்திய சீன பாகிஸ்தான் உட்பட அமெரிக்காவின் ஒரு சற்லைற் கொம்பனியையும் வைத்திருந்த சிங்கள காடைகளால் சாகடிக்க முடிந்துள்ளது. அதுவும் அரசியல் துறை பொறுப்பாளர் என்பதால் வெளிநடமாட்டம் என்பது பகிரங்கமாகவே இருந்ததால்தான். பின்பு புலிகள் குறுகிய நிலப்பரப்புக்குள் குறுகிய பின்பும் இது முடியவில்லை. காரணம் இவையெல்லாவற்றையும் புலிகள் எதிர்பார்த்ததுதான். இங்கே சில சம்பவங்களையும் அறிக்கைகளையும் இரைமீட்க வேண்டியுள்ளது. மடு நோக்கி காடைகள் முன்னேறிய போது புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா சொல்கிறார் இராணுவம் மடுவிற்கு வந்தால் நாம் மதவாச்சியில் நிற்போம் என்று. இங்கே இரண்டு விதமாக இந்த கருத்தை பார்க்கலாம் ஒன்று இராணுவத்தை தாக்கியழிக்கும் எண்ணம் புலிகளிடம் இருந்தது ஆனால் அது கைகூடவில்லை? அல்லது புலிகளிடம் அப்படியொரு எண்ணமே இருக்கவில்லை ஆனாலும் மக்களையும் எதிரியையும் சரிநேராக வேவ்வேறு திசைகளில் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம். இதில் முதலாவதை பார்த்தால் புலிகளுக்கு அது கைகூடவில்லை என்பது தவறான கூற்று காரணம் புலிகள் அதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. முன்னேறும் இராணுவத்தை தாமதபடுத்தினார்களே தவிர இறுவரை எந்த தாக்குதல்களையும் புலிகள் திட்டமிட்டு செய்யவில்லை. இறுதிகாலத்தில் மட்டுமே புதுக்குடியிருப்பு ஆட்லறிதளம்மீதான ஒரு தாக்குதல் நடக்கின்றது அது புலிகளுக்கு அபார வெற்றியையும் கொடுக்கின்றது. அடுத்தது மாவீரன் தீபன் மாவீரி விதுசா உட்பட 300- 500 வரையிலான போராளிகள் இரசாயன தாக்குதலுக்கு இலக்காகி கொல்லபடுகின்றார்கள். இறுதிவரையில் இந்த இராணுவநடவடிக்கைகளை தமக்கு சதகமாக தமதபடுத்த கூடிய வகையில் களத்தில் புலிகள் வைத்திருந்த சக்திவாய்ந்த படையணி அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் காரணம் அதன்பின்பு காடைகளின் முன்னேற்றம் அவர்கள் விரும்பியவாறு நடந்துகொண்டிருந்தது. ஆனாலும் மே 17ம் திகதி அதாவது எமது ஆயுதங்களை நாம் மௌனிக்கின்றோம் என்று புலிகள் அறித்ததற்கு முதல் நாள். இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்றாம் நாள் பாரிய தாக்குதல் ஒன்று நந்திகடல் கரையினிலே நடந்திருக்கின்றது அதிலே 70 வரையான போராளிகள் கொல்பட்டதாக காடை இராணுவம் கூறியது ஆனால் யாருடைய உடலங்களையும் எந்த வீடியோபதிவுகளையும் வழக்கத்திற்குமாறாக அது வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது. நந்திகடலின் அகலம் குறைந்தது 1-2 மைல்கள் இதை தாண்டி முள்ளிவாய்க்காலுக்குள் அகப்பட்ட புலிகளால் எவ்வாறு அடுத்த கரையில் தாக்குதல் நடத்தபட்டிருக்கும் என்பது பல வினாக்களுக்கான விடைகளை உள்ளடக்கியது. இது எந்த வகையிலும் சாத்தியம் அற்ற ஒன்று இது முள்ளிசாய்க்கால் பகுதி நிலப்பரப்பை அறிந்தவர்கள் அறிவார்கள். வற்றாப்பளை புற காட்டுபகுதியினுடாக வந்திருக்க கூடிய ஒரு படையணியாலேயே இது சாத்தியமானது இந்த தாக்குதல் இராணுவத்தின் கூற்றுபடி எதிர்பாராத புலிகளுக்கு தோல்வியான தாக்குதலே ஆனாலும் 70 வரையிலான புலிகளே கொல்லபட்டார்கள் என்பதுதான் முட்டாள்தனமானது. காரணம் புலிகளின் இறுதி சண்டை இதுதான் இப்போது மீதமுள்ள அனைவருக்கும் மரணமே நிற்சம் என்ற பின்பு எவ்வாறு மீதமுள்ளவர்கள் போராடாது போனார்கள்? அரசியல் ரீதியாக மக்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடமை புலிகளுக்கு இருந்தது அதன் கரணமாகத்மான் கரும்புலிகளுக்கே ஒப்பான அந்த பொறுப்பை நடேசன் புலித்தேவன் சாள்ஸ்அன்ரனி ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள ஆயுதங்களையும் முக்கிய தளபாடங்களையும் எரியூட்டும் படியும் கூறிவிட்டு இன்னொரு படையணியின் உதவியுடன் முக்கியமானவர்கள் வெளியாறினார்கள் என்பதே சாத்தியமானது (அதற்காக தலைவர் அல்ல முள்ளிவாய்கலுக்குள் போய் முடங்கிவிட்டு எந்த தாக்குதல்களும் நடத்தாது அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்). இதற்கான ஆதாரங்களாக இராணுவ ஆட்சேர்ப்பு முழுகட்டுபாட்டில் இருந்தும் திறக்கப்படதா கண்டிவீதி போன்ற சிங்களத்தின் நடவடிக்கைகள் சொல்கின்றன. புலிகளுக்கான உணவு விநியோகத்தை ஒரு வருடத்திற்கு தடைபடுத்தி வைத்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது இவர்களின் திட்டம். அவர்களின் திட்டம் எதுவோ அது அவர்களுக்கே வெளிச்சம். அதுதான் முல்லைதீவு கடலே பெரிதும் பாதுகாக்க படுகின்றது உள்ள கடல் ரோந்து கலங்கள் போதாமல் பல அவசரமாக இறக்குமதி செய்யபடுகின்றன.

அல்லது தற்போதைய ஆய்வளர்களின் கருத்துபடி புலானாய்வு துறையின் அறிக்கையை ஆதராமாக்கி சொல்படும் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திலும் எந்த தோல்வி நிலையும் இல்லை. தலவைர் இறப்பது என்பது இன்றோ நாளையோ நேற்றோ நடக்க கூடிய ஒன்றுதான் ஆனால் புலனாய்வுதுறை பாதுகாக்க பட்டிருக்கின்றது என்ற அந்த செய்தியின் உள்விடயம்தான் முக்கியமானது. தற்போதைய உலக அரங்கில் ஆயுதபோராட்டம் சாத்தியமான ஒன்றல்ல. இது நாடுகளுக்கே பொருந்தும். வட கொரியா போருக்கு வாங்கோ வாங்கோ என்றுதான் அழைக்கின்றது யாரும் போவதற்கு இல்லை அது சாத்தியமும் இல்லை. ஆயுத போராட்டத்தை நாம் கைவிட வேண்டிய சூழலுக்குள் நாம் 2001ம் ஆண்டே வந்துவிட்டோம் ஆனால் எவ்வாறு என்பதுதான் கேள்வியாக இருந்தது. தற்போது அரசியல் போராட்டமே முன்னெடுக்க கூடியதும் எமது விடுதலையை விரைவாக்க கூடியதும். அதுவும் தோற்றுபோனால்.......... ஓரே வழி பயங்கரவாதம்தான் அதற்கு புலனாய்வு துறை மட்டுமே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் போராட்டமே முன்னெடுக்க கூடியதும் எமது விடுதலையை விரைவாக்க கூடியதும். அதுவும் தோற்றுபோனால்.......... ஓரே வழி பயங்கரவாதம்தான் அதற்கு

புலனாய்வு துறை மட்டுமே வேண்டும்.

நன்றி

புலிகளுக்கான உணவு விநியோகத்தை ஒரு வருடத்திற்கு தடைபடுத்தி வைத்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது இவர்களின் திட்டம்

இது நம்பும்படியாக இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கில திறமையுள்ளவர்கள் உங்கள் கருத்துக்களையும் விளக்கங்களையும் இங்கேயும் முன்வையுங்கள்.

http://xuitlacoche.blogspot.com/2009/04/ta...sri-lankan.html

ஆஹா. அப்படி என்றால் ஏன் அங்கு இருந்து ஐயோ எங்களை காப்பாற்றுங்கோ என்று கூச்சல் போடுறீங்களாம்? உங்களுக்கு உங்கள் அலுவலுகளுக்கு மட்டும், உங்கள் தேவைகளுக்கு மட்டும் புலம்பெயர் மக்கள் வேண்டும். ஆனால் அவர்கள் விமர்சனம் மட்டும் செய்யக்கூடாது. அதாவது பொத்திக்கொண்டு அங்கிருந்து என்ன சொல்லப்படுகின்றதோ அதை இங்கு இருக்கும் மக்கள் செய்யவேண்டும்? இதைத்தானே சொல்லுறீங்கள் நாரதர்? புலிகள் தோல்வியை சந்தித்தமைக்கு முக்கிய ஓர் காரணங்களில் இதுவும் ஒன்று!

நான் சொல்வதை இன்னும் கொன்ச்சம் விளக்கமாக எழுதினால்,

களத்தில் நிற்பவர்களே ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்கள், அவர்கள் புலத்தில் நடக்கும் போராட்டங்கலின் மூலம் விடுதலை பெறமுடியும் என்று நம்பி இருந்தால் கடைசி மட்டும் ஆயுதம் தாங்கிப் போராடி மடிந்து இருக்க வேண்டியதில்லை.அத்தோடு புலத்தில் உள்ளவர்கள் போராடி எதாவவது நடந்ததா? ஏன் வெறும் அறிக்கைகளுக்கு மேல் வேறு ஒன்றையும் இந்த மேற்குலகம் செய்யவில்லை? எல்லாவற்றிற்க்கும் அடிப்படை பூகோள நலன் என்பதே.மனிதாபிமான அடிப்படையில் மேற்குலகம் தலையிட விரும்பினால் அதனை இந்தியா தடுக்கிறது.இந்தியாவை மீறி மேற்குலகம் எதனையும் செய்யாது.ஏனெனில் வளர்ந்துவரும் சீனாவுக்கு எதிர்முனையாக மேற்குலகம் இந்தியாவையே நம்பி இருக்கிறது.ஆகவே புலத் தமிழகளின் போராட்டங்கலின் மூலம் நமது பிரச்சினையை புலத்தில் வாழும் மக்களுக்குப் புரிய வைக்க முடியுமே தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது.களத்தில் நின்றவர்கள் இதில் தெளிவாகவே இருந்தார்கள். நாங்கள் போராடி விடுதலை பெறுவோம், நீங்கள் அங்கீகாரதுக்கான வழியை ஏற்படுத்துங்கள் என்றே சொன்னார்கள்.

சீனாவினதும் இந்தியாவினதும் குறுகிய காலதுக்குள் கிடைத்த ஆயுத பல உதவி ,இராணுவ ரீதியாக நிலையை மாற்றி விட்டது.களத்தில் கிளி நொச்சி இழக்கப்பட்ட பின்னே தான் இது உணரப்பட்டு, புலத்தில் போராட்டங்களை நாடத்து மாறு கோரப்பட்டது.இது ஒரு இக்கட்டான இரானுவ நிலையில் இருந்து விடுபட எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே தவிர, இதுவே போராட்டத்தின் நோக்கமாக வடிவமாக இருக்கவில்லை.

இராணுவ ரீதியாக நாம் தோற்பதற்கான அடிப்படை, இந்தியா சீனா என்பனவற்றின் நகர்வுகளை தமிழர் தரப்பு தகுந்த வகையில் எடை போடவில்லை.இராணுவ ரீதியாகப் பலம் பெற்று வந்த சிங்கள அரசை அது சரியாக எடை போட வில்லை.இவ்வாறான விமரிசினங்கள் நியாயமனவை.ஆனால் நீ ஆயுதம் தூக்கியது பிழை இனியும் தூக்காதே என்பது எவ்வகையில் நியாயமானது? போராடுபவனே தனது போராட்ட வடிவத்தைத் தீர்மானிக்கிறான்.அவனின் அடக்கு முறையின் வடிவமே அந்து போராட்ட வடிவதைத் தீர்மானிக்கிறது.அவனைப் போராடச் சொல்லவும், போராடாமால் இருக்கச் சொல்லவும் நீங்கள் யார்? அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் பணம் கொடுப்பதால் இன்னொருவன் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டுமா ?அவன் அடக்குமுறைக்கு எதிராகாப் போராடும் உரிமை அவனுக்கு இல்லையா?

மற்றவனின் போராடும் உரிமையைப் பறிப்பது விமரிசனம் அல்ல அது ஒருவகையில் அடக்குமுறையின் இன்னொரு வடிவமே.

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஆயுதம் தூக்கியது பிழை இனியும் தூக்காதே என்பது எவ்வகையில் நியாயமானது? போராடுபவனே தனது போராட்ட வடிவத்தைத் தீர்மானிக்கிறான்.அவனின் அடக்கு முறையின் வடிவமே அந்து போராட்ட வடிவதைத் தீர்மானிக்கிறது.அவனைப் போராடச் சொல்லவும்இ போராடாமால் இருக்கச் சொல்லவும் நீங்கள் யார்? அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் பணம் கொடுப்பதால் இன்னொருவன் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டுமா ?அவன் அடக்குமுறைக்கு எதிராகாப் போராடும் உரிமை அவனுக்கு இல்லையா?

மற்றவனின் போராடும் உரிமையைப் பறிப்பது விமரிசனம் அல்ல அது ஒருவகையில் அடக்குமுறையின் இன்னொரு வடிவமே.

மிகச்சரியான வார்த்தை

எனவே அந்த மக்களின் அசைவுகளுக்காக நாம் காத்திருப்பதுதான் நியாயமானது

அதேநேரம் புலம்பெயர்ந்து வந்ததால் பேசும் உரிமை மறுக்கப்படலாகாது

என்னுடைய அசைவுகளும் நோக்கப்படவேண்டும்

நான் எங்கு வாழவேண்டும் என்பதை நானே தீர்மானிக்கவேண்டும்

இல்லையா.....???

சுகனினதும், நாரதரினதும் உரையாடல்கள் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கின்றன. எனக்குள் மயக்க நிலையில் இருக்கும் பல கருத்துகளை Polish பண்ண உதவுகின்றன.

இருவருக்கும் நன்றிகளும்...மேலும் தொடர்ந்து உரையாடுங்கள் என்ற வேண்டு கோளும்...

விளக்கத்திற்க்கு நன்றி நாரதர். பல கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.

நிறுவனமாதல் என்பது பிரச்சனையான விடயமாகவே எனக்கிருக்கின்றது. இதற்கு காரணம் எங்களுக்குள் எப்போதும் தொடரும் ஆதிக்க அடயாளம் தேடும் போட்டி நிலை. ஒரு நிறுவனத்தை ஆழுமை செய்வதில் உள்ள போட்டி நிலை அது முடியாமல் போகும் போது எந்த வித துர்ரநோக்குமற்று அதை எதிர்க்கும் மனநிலை. இது ஒரு நிறுவனத்தை அதன் இலக்கு நோக்கி இயங்க விடாமல் முடக்கும் சாத்தியங்கள் உள்ளது. இதை எத்தனையோ அனுபவங்களில் இருந்து பார்க்கின்றோம். இந்த போட்டி நிலையில் மாற்றம் என்பது சிறிதும் வராதநிலையில் நிறுவனம் குறித்த அச்சம் இருக்கவே செய்கின்றது.

ஒரு அமைப்பு என்றில்லாமல் அரசு குறித்த கருத்தும் அதற்கான கட்டமைப்பும் ஒரு நிறுவனமய சிந்தனையுடையது. இதில் இலக்கு என்பது தமிழீழம் என்பதே ஆகும். இனி எமது போட்டிநிலையில் உள்ள ஆதிக்கம் என்பது எதிர்நிறுவனங்களை அமைக்கும் அல்லது இருக்கும் நிறுவனத்தை சிதைக்கும் தன்மையுடையது. மேலதிகமாக இந்த புறநிலை அரசு குறித்த அமைப்பிபின் வளிநடத்தலில் புத்திசீவிகள் அதிகம் சம்மந்தமுறுவதால் அதிகப்படியான குழப்பங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டும். இவைகள் இலக்கை சிதைக்கவல்லன என்பதே அச்சமானது. பொதுவாக நிறுவனம் குறித்த என்னிடம் முரண்பாடான கருத்துக்கிடையாது ஆனால் எம்மவர்கள் அமைக்கும் நிறுவனம் குறித்து அச்சம் இருக்கவே செய்கின்றது.

நிறுவனமாகாமல் எதனையும் செய்ய முடியாது.ஆதிக்கப் போட்டி மிகுந்த நிறுவனம் பலம் இழந்து விடும்.ஆகவே நிறுவனம் என்பது எத்தகைய ஜன நாயாகப் பண்புகளின் அடிப்படையில் கட்டப்படுகிறது அது எந்தளவில் பரந்து பட்ட மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கிறது என்பதைப் பொறுத்தே அது பலமானதாக இருப்பதும் பலவீனமானதாக இருப்பதும் தங்கி இருக்கிறது.ஆதிக்கப்போட்டி இலக்கு நோக்கிச் செல்வதைத்தடுக்கிறது என்பதனால் நிறுவனம் அவசியம் அற்றது எனில் ,இலக்கு நோக்கிப் பயணிப்பது எப்படிச் சாத்தியம் ஆகும்? மாற்றுக் கருத்தாளார் ஏன் உதிரிகளாக தனி நபர்களாக பலம் அற்றவர்களாக இருக்கிறார்கள்? இவர்களால் ஒரு கூட்டத்தைத் தன்னும் ஒழுங்கு படுத்த முடியாமால் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன?அவர்களால் ஏன் நிறுவனமாக முடியாது இருக்கிறது.அவர்கள் பரந்து பட்ட மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை.தமிழர் என்னும் அடையாளாம் தழுவிய நிறுவனமாதலே பலமானது.இந்த அடையாளம் என்பது பொதுமைப்படுத்தப்பட்டதாக சாதி மத பிரதேச வேருபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.அதனையே புலிகள் நடைமுறைப்படுத்தினர்.சமாதான காலத்தில் இதில் சிதைவுகள் ஏற்பட்டது உண்மை.இசுலாமிய மக்கள் மீதன் வன் முறை என்பதுவும் குறும் தேசிய வாதமும் பிரதேச வாதாமும் தமிழர் என்னும் அடையாளத்தைப் பலவீனப்படுத்தின.இவற்றை இன்னும் தீவிரமாக எதிர்கொண்டு இருக்க வேண்டும்.

புத்திசீவிகளின் ஆலோசனைகள் அவசியமானவையே ஆனால் நிறுவனமாதால் ஒழுங்கமைத்தல் நிர்வகித்தல் போராடுதல் போராட்ட இலக்கின் மீதான் பற்றுறுதி என்பன புத்திசீவிக் குணாம்சியங்கள் அல்ல.புத்திசீவிகள் பலரின் அணுகுமுறை வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கிறது.அது அதிகாராம் சார்ந்ததே எப்போதும் இயங்கும் தன்மை உடையதாக இருக்கிறது.எனது அனுபவத்தில் வெகு சிலரே அரசியற் தெளிவுடன் செயற்படுகின்றனர்.பலருக்கு போராடுதல் என்பது ஒரு பிழையான் விடயமகவே படுகிறது.பல மேற்குலக அரசுகளையோ அன்று ஒரு நிறுவனத்தையோ எடுத்துப் பாத்தால் புத்திசீவிகள் ஆலோசகர்களாகவே இருக்கின்றனர் நிர்வாகிகளாக அல்ல.

எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆளுமை உள்ளவர்களே அதற்குத் தகுதியானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகனினதும், நாரதரினதும் உரையாடல்கள் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கின்றன. எனக்குள் மயக்க நிலையில் இருக்கும் பல கருத்துகளை Polish பண்ண உதவுகின்றன.

இருவருக்கும் நன்றிகளும்...மேலும் தொடர்ந்து உரையாடுங்கள் என்ற வேண்டு கோளும்...

உண்மைதான்

தொடரவேண்டும் இதுபோன்ற கருத்தாடல்கள் எமக்குள்

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கு இணைத்தமைக்கான காரணம் புரியவில்லை

ஆனால் இதைக்கேட்டபோது எனக்குப்பட்டது

அவலக்குரல் போல்தான் இருந்தது

அவர் இராணுவ தளபதி என்ற படியால்

அழவில்லை கெஞ்சவில்லை

மற்றும்படி அவரது வேண்டுகோளின் அர்த்தம்..............???

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.