Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலகச் சமூகத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுமத்தின் அறிவிப்பு

Featured Replies

IMG50-1248183299.jpg

IMG50-1248183358.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி , ஈழதமிழர்களை வழி நடத்தும்வரை எம்மீதான தடை நீங்கப்போவதில்லை.

உருத்திரகுமார் மாதிரி யாராவது ஒருத்தர் புதிதாக ஏதாவது செய்தால் ஏதாவது விமோசனத்தை எதிர்பாக்கலாம்'

இல்லட்டி பழைய குருடி கதவ திறடி மாரிதான் போகும்....... :D

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து....

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை பத்மநாதன் வழிநடாத்துவார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2009, 07:31 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

21 ஜூலை 2009

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை - ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள் ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.

எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முடிவுக்கு அமைய - தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

எமது பெருந் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வண்ணம்,

நிறைவேற்றுச் செயற்குழு சார்பாக,

திரு.சுரேஸ் (அமுதன்), திரு.ராம்.

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஒருமித்த குரலில் ஒலிப்பதாக நினைக்கிறேன். ஆறுதலான விடயம்.. இன்னும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமித்த குரலில் ஒலிப்பதாக நினைக்கிறேன். ஆறுதலான விடயம்.. இன்னும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டி உள்ளது.

அவை என்ன தான் அறிக்கை விட்டு தொண்டை கிழிய கத்தினாலும் பன்னாட, பரதேசிகள் ஆகிய நாம் ஊருக்கொரு மக்களவை அமைத்தே திருவோம்....இது சத்தியம் ....நாம் கனடாவிலும் ஊருக்கொரு மக்களவை அமைக்க உத்தேசித்துள்ளோம் ....ஏனென்றால் நோர்வே , பிரான்ஸ் எல்லாம் அமைத்து விட்டார்கள் , நாமும் ஒரு அவை அமைத்து ஈனத் தமிழனின் பெயரையும் மானத்தையும் காக்கவேண்டும் ...,அப்பொழுதுதான் நமது ஒற்றுமை தெரியும் ....விரைவில் அவசர கூடம் பற்றிய தகவல் அறிவிக்கப்படும் ....

இணைந்து பங்களிக்க விரும்புவோர் தொடர்புகொள்ளவும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் இணைந்து வருவது நல்ல விடயம். பனங்காய் சொன்னது போல் கேபி இருக்கும் வரை எதாவது நடக்கும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை. வேறு ஒருவரை தலைமைப் பொறுப்புக்கு நியமிப்பதே சிறந்தது.

கே.பி , ஈழதமிழர்களை வழி நடத்தும்வரை எம்மீதான தடை நீங்கப்போவதில்லை.

உருத்திரகுமார் மாதிரி யாராவது ஒருத்தர் புதிதாக ஏதாவது செய்தால் ஏதாவது விமோசனத்தை எதிர்பாக்கலாம்'

இல்லட்டி பழைய குருடி கதவ திறடி மாரிதான் போகும்....... :wub:

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து....

கருணா மாதிரி எண்டால் இன்னும் நல்லா இருக்கும் ... எல்லா தமிழர்களையும் சிறிலங்கா சுதந்திரக்கட்ச்சிக்குள் இணைத்து ஒரு வளி பண்ணி இருப்பாரே....

குறிப்பு:- KP அண்ணை ஆயுத போரட்டத்துக்கு தலைமை தாங்க இல்லை, தமிழர்களின் அரசியல் போருக்கே தலைமை வகிக்கிறார்... கருணாவை மன்னிக்க முடியும் எண்றால் KP அண்ணை கருணாபோல யாரை யும் கொலை செய்ய இல்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் கவனமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வாரத்;தை

கள் அளந்து எழுதப்பட்டுள்ளது. கே பி ஐ சர்வ தேச நாடுகள் தேடவில்லை.சிறிலங்கா அரசுதான் இன்ரபோல்ட் மூலமாகத் தேடுகின்றது. (இந்தியாவைச் சர்வதேசம் என்ற பட்டியலில் இருந்து நீக்கி விளங்கவும்.)

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு சங்கதி போனறவற்றில் இந்த அறிக்கைகளைக் காணவில்லையே??????என்ன காரணம்? உண்மையான தமிழ்த் தேசிய ஊடகம் எது? தெளிவுபடுத்;துங்கப்பா!!!புதி(ர்)னத்தில் போட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: பத்மநாதனை குறை சொல்வதைக் காட்டிலும் அனைவரும் சேர்ந்து செயற்படுவதே நல்லது. இன்று பிளவுபட்டுப்போயுள்ள நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும். தொடர்ந்தும் பத்மநாதனைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதால் நட்டம் எமக்குத்தான். அவர் தலைவரால் இறுதிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஒருவர். ஆகவே எவர் எமக்கெதிராக இல்லாமல் இருக்கிறாரோ அவர் எமக்கு ஆதரவாக இருப்பதாகவே அர்த்தம் கொள்ளப்படல் வேண்டும். தலைவர் இருக்கிறார் அல்லது அவரில்லை என்று எமக்குள் பிளவுபட்டுப்போயுள்ள நாம் எல்லாவற்றையும் களைந்து ஒன்றுபடுவோம். எமது பலம் நாம் இரு குழுக்களாக இல்லாது ஒன்றுபட்டு நிற்கும்போதுதான். பத்மனாதன், காஸ்ட்ரோ..இவர்களிருவரும் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர்கள். அவர்களை நம்பி தலைவர் பல பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார். ஆகவே இவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதே எமது இன்றைய கடமையாக இருக்க வேண்டும். தேவையற்ற விதண்டாவாதங்களில் எம்மைப் புதைத்து அழிந்து போவதைவிட இணைந்து முன்னோக்கிச் செல்வோம். விடுதலை.....கொஞ்சம் தூரம் போய்விட்டாலும் நம்பிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது.

:wub: புல்வர் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட எல்லாத் தமிழ் இணையங்களுமே தமிழ்த் தேசியத்தை நேசிப்பவைதான். சில வேளைகளில் தனிமனிதர் மீதான தாக்குதல்களினால் அவை அவ்வப்போது பிளவு பட்டு நின்றாலும் அவற்றின் இலட்சியம் ஒன்றுதான் என்று நினைக்கிறேன். அதுதான் தமிழர்க்கான விடுதலை வாழ்வு.

பிற்குறிப்பு: புலவர், தமிழ்நெட்டிலும் இந்த அறிக்கை வந்திருக்கிறது நண்பரே. ஆனால் அதன் கருத்துக்களை வாசகர்கள்தான் சரியா பிழையா என்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. புதினம், பதிவு, சங்கதி, தமிழ்நெட்...இவை எல்லாமே சொல்வது ஒன்றைத்தான். ஆகவே கவலை விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆங்கில இணையச் செய்தியில் எவ்வளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. பத்மனாதனின் அறிக்கைகளை தமிழ்நெட் புறக்கணிப்பதாக அது சொல்கிறது. ஆனால் நேற்றைய புலிகளின் தலமைச் செயலக அறிக்கை தமிழ்நெட்டிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே சர்வதேச ஊடகங்களின் செய்தியில் இருப்பதை நாம் அப்படியே நம்பவேண்டும் என்றில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாம் நன்கு பிளவுபட்டுப்போயுள்ளோம். சர்வதேசத்துக்குத் தெரியுமளவிற்கு எமது பிளவு கிடக்கிறது. அதுவும் தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை என்று பிளவுபட்டுப் போயுள்ளோம் என்று மிகத் தெளிவாகச் செய்தி போட்டிருக்கிறார்கள். ஆகவே இனியாவது இந்த விதண்டாவாதங்களைக் கைவிடுவோம்.

இதோ தமிழ்நெட்டில் வந்த அந்த அறிக்கை........

New political formation of LTTE claimed

[TamilNet, Tuesday, 21 July 2009, 16:42 GMT]

Addressed as originating from the headquarters of the Liberation Tigers of Tamil Eelam, an Executive Committee on Tuesday, announced restructure of the organization and the leadership of Selvarasa Pathmanathan in taking up the future course of the movement. “We have set up a head office for our liberation movement and formulated various sector-based working groups and an executive committee," a press release on behalf of the Executive Committee said adding that the details will be shared in due course. Meanwhile, LTTE watchers said that the new formation has the burden to prove its credibility with the grass root at home and among the diaspora that aspire not incumbencies but a strong mass organisation to address the national cause.

Full text of the announcement in English

The press release claimed the announcement is a collective decision arrived at after consultations "among our members, including our cadres who bravely fought their way out of the battlefield and our representatives abroad and in the diaspora."

TamilNet, while re-iterating its stand as an independent media, committed to the cause of Eezham Tamil nationalism, requests readers not to take cues from it on the organisational matters of the present. Political steering of the Eezham Tamil cause is entirely a prerogative of the masses concerned, who have hitherto shown solidarity with a movement that did not surrender either the aim or the struggle.

கே.பி , ஈழதமிழர்களை வழி நடத்தும்வரை எம்மீதான தடை நீங்கப்போவதில்லை.

உருத்திரகுமார் மாதிரி யாராவது ஒருத்தர் புதிதாக ஏதாவது செய்தால் ஏதாவது விமோசனத்தை எதிர்பாக்கலாம்'

இல்லட்டி பழைய குருடி கதவ திறடி மாரிதான் போகும்....... :wub:

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து....

எமது போராட்டம் சர்வதேசமட்டத்தில நடத்தவேண்டும் என்று சொல்லுகிறோம் ,பிறகு சர்வதேச பொலிஸ்காரன் தேடுகிற ஆளின் தலமையி ல் போராட்டம் என்றால் அது கொஞ்சம் கஷ்டமான விடயம் தானே.

சர்வதேசத்திலயும்(புலம் பெயர் தேசம்)பதுங்கி பதுங்கியா அரசியல் நடத்த உத்தேசித்துள்ளோம்,வேண்டாமே(க

ெரில்லா அரசியல்) பதுங்கள் அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் விளக்கத்திற்கு நன்றி திரு ரகுநாதன் அவர்களே.ஆனால் பனங்காய் ஜில் அவர்களது கவலையும் புறந்தள்ளக்கூடியவையாக இல்லை.இருப்பினும் வெளிப்பார்வைக்கு செயற்படக் கூடிய தலைமை வெற்றிடமாக இருப்பதிலும் பார்க்க ஒரு தலைமை இருப்பது நல்லதே .தமிழர்கள் ஒரே அணியில் அணிதிரள்வோம்.

அவர் வழி நடத்தினால் தடை போகப்போவதில்லை, இவர் வழி நடத்தினால் போகும் ....... முட்டாள்த்தனமான வாதங்கள்!!! ...

உலக வரலாற்றில் ..... கோ சீ மிங், காஸ்ரோ, நெல்சன் மண்டேலா போன்றவர்களும் பயங்கரவாதிகள்தான்!!! பல தனி நபர் படுகொலைகள், குண்டு வெடிப்புக்களுக்கு சொந்தக்காரரான யாசீர் அரபாத்தும் முன்னால் பயங்கரவாதிதான்!!! ... என்ன , அவர்கள் உலக ஓட்டத்தை புரிந்து தம்மை மாற்றினார்கள்!! நாமோ?????? ..... வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ........!!!!!!!!!!!

..... இனி எவர் எம்மை வழி நடத்தினாலும், சர்வதேச ஓட்டத்துக்கு அமைவாக .... நாம் அவர்களுடன் இணைந்து எவ்வாறு செயலாற்றி, எம்மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் ... அதற்கான நகர்வுகள் எம்மை சர்வதேசம் அங்கீகரிக்கும்!!!

உலக வரலாற்றில் ..... கோ சீ மிங், காஸ்ரோ, நெல்சன் மண்டேலா போன்றவர்களும் பயங்கரவாதிகள்தான்!!! பல தனி நபர் படுகொலைகள், குண்டு வெடிப்புக்களுக்கு சொந்தக்காரரான யாசீர் அரபாத்தும் முன்னால் பயங்கரவாதிதான்!!! ... என்ன , அவர்கள் உலக ஓட்டத்தை புரிந்து தம்மை மாற்றினார்கள்!! நாமோ?????? ..... வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ........!!!!!!!!!!!

என்ன நாங்கள் மாறாமல் இருந்தது போல் தான் கதை அளக்கிறீர் , முடியுமட்டும் உலகத்துடன் ஒத்திசைந்து தான் போனார்கள். அழிக்க வேண்டும் என்றுமுடிவெடுத்தவர்கள் மக்களை கொன்று அவர்களையும் அழித்து விட்டாகள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வழி நடத்தினால் தடை போகப்போவதில்லை, இவர் வழி நடத்தினால் போகும் ....... முட்டாள்த்தனமான வாதங்கள்!!! ...

உலக வரலாற்றில் ..... கோ சீ மிங், காஸ்ரோ, நெல்சன் மண்டேலா போன்றவர்களும் பயங்கரவாதிகள்தான்!!! பல தனி நபர் படுகொலைகள், குண்டு வெடிப்புக்களுக்கு சொந்தக்காரரான யாசீர் அரபாத்தும் முன்னால் பயங்கரவாதிதான்!!! ... என்ன , அவர்கள் உலக ஓட்டத்தை புரிந்து தம்மை மாற்றினார்கள்!! நாமோ?????? ..... வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ........!!!!!!!!!!!

..... இனி எவர் எம்மை வழி நடத்தினாலும், சர்வதேச ஓட்டத்துக்கு அமைவாக .... நாம் அவர்களுடன் இணைந்து எவ்வாறு செயலாற்றி, எம்மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் ... அதற்கான நகர்வுகள் எம்மை சர்வதேசம் அங்கீகரிக்கும்!!!

அருமையான ஆழமான அரசியல் உள் நோக்கு பார்வை. ஏதோ பெரிய தவறு நடந்திருக்கின்றது என்பதை உங்களின் கருத்துக்கள் வாயிலாக புரிய முடிகின்றது தவிர....... என்ன தவறுகள்? வந்த சந்தர்ப்பங்கள் என்ன? யார் அதை தவறவிட்டார்? ஏன் தவறவிட்டார்? போன்றவற்றை தெளிவாக எழுதினால் எல்லோரும் வாசித்து தெளிவுபெறுவார்கள். அரசியலில் தெளிவுபெற வேண்டிய ஒரு முக்கிய காலத்தில் நிற்கிறோம். தெளிந்த நீங்களும் இப்படி அரைகுறையாக பேசினால் நாம் எப்படி புரிவது? காலத்தின் தேவை அறிந்து நெல்லையன்ஐயா அவர்கள் ஒரு தெளிந்த கட்டுரையை விரிவாக விரிப்பதென்பது எல்லோருக்கும் பயன்தரும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

http://www.kundumani.blogspot.com/

செ. பத்மநாதன் இந்த அறிக்கைக்குப் பின் இங்கிலாந்தின் சனல் - 4 க்கு பிரத்தியேகமான இடத்தில் இருந்து அளித்த செவ்வி.

(எனக்கு குறித்த இணைப்பை விடியோவாக இங்கு இணைக்க தெரியவில்லை. மேற்படி இணைப்பில் நீங்கள் நேரடியாகக் காணலாம்.)

Edited by nedukkalapoovan

செ. பத்மநாதன் இந்த அறிக்கைக்குப் பின் இங்கிலாந்தின் சனல் - 4 க்கு பிரத்தியேகமான இடத்தில் இருந்து அளித்த செவ்வி.

இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

http://www.kundumani.blogspot.com/

செ. பத்மநாதன் இந்த அறிக்கைக்குப் பின் இங்கிலாந்தின் சனல் - 4 க்கு பிரத்தியேகமான இடத்தில் இருந்து அளித்த செவ்வி.

(எனக்கு குறித்த இணைப்பை விடியோவாக இங்கு இணைக்க தெரியவில்லை. மேற்படி இணைப்பில் நீங்கள் நேரடியாகக் காணலாம்.)

அவர்களின் இணைப்பை வீடியோவாக இணைப்பது கடினமாக உள்ளதால் இந்த இணைப்பில் செவ்வியைக் காணலாம். வேறு எவருக்காவது குறித்த இணைப்பில் உள்ள வீடியோவை இங்கு இணைக்க முடியும் எனில் இணைக்கவும். அது யுரியுப் வீடியோ அல்ல. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் இணைப்பை வீடியோவாக இணைப்பது கடினமாக உள்ளதால் இந்த இணைப்பில் செவ்வியைக் காணலாம். வேறு எவருக்காவது குறித்த இணைப்பில் உள்ள வீடியோவை இங்கு இணைக்க முடியும் எனில் இணைக்கவும். அது யுரியுப் வீடியோ அல்ல. :icon_idea:

இங்கே இதை பார்க்கலாம்

http://www.vakthaa.tv/play.php?vid=4737

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.