Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது: நிழலி

Featured Replies

அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது

யுகங்களுக்கு அப்பால்

பெருக்கெடுத்த காலம்

எம்மை அடிமையாக்கியே

இன்னும் நீண்டு செல்கின்றது

ஈழப் பெருங் கடலையும்

கால நதி சப்பித் துப்பியது

போர்ப் பரணி பாடி

அணிவகுத்த ஆயிரமாயிரம்

தோழர் போன திசை அழித்த

காலம் பெரும் பசி

கொண்டு அலையுது

நெஞ்சில் கனல் கக்க

தோழர்களை காத்த

மக்கள் மீதும்

நெருப்பு துகள்களை

கொட்டி பெரும்பசியை

தீர்த்தலைகின்றது

காலத்தின் திசைகளை

எமக்கு எதிரியாக்கியது

யார்

கொட்டும் குளவிகளின்

நுகத்தடியில்

எம் தலைவிதியை

செருகியது யார்

எதிரியின் கையில்

காலத்தை ஒப்படைத்தது

யார்

எமக்கான காலத்தை

நாமே எழுத முயன்ற

ரட்சகனையும் கால ராட்சதனா

கொன்றழித்தான்

அடிமையாய் கரையும் காலத்தை

உடைத்து சுதந்திரத்தின்

பெரு நெருப்பில்

சாம்பலாக்க முயன்றவனையுமா

கால அரக்கன்

சிதைத்து அழித்தான்

சூனியப் பெரு வெளியில்

கண்ணீர் துளியாய் போன

மந்தைகளின் வாழ்வை

மீட்க வந்த மேய்பனின்

கனவுகளையுமா

கால அசுரன்

சப்பித் துப்பினான்

உயிரற்ற உடலாய்

கிடக்கின்றோம் நாம்

இங்கு

உடலற்ற உயிராய்

அலைகின்றான் மேய்ப்பன்

அங்கு

அவனின் இறுதி

மூச்சிலும் எம்மில்

பற்றாத பெரு நெருப்பை

சபித்து கொண்டே

அலைகின்றான் அங்கு

கால சக்கரம்

நெரித்துப் போட்ட

எம் உணர்வுகளின்

மேல் காறி உமிழ்ந்தவாறே

அலைகின்றான் அங்கு

அவன் நடக்கும் பாதை

எங்கும் காலம் நின்று

பரிகாசம் செய்கின்றது

பற்றாத பெரு நெருப்பு

பற்றி கேலி செய்கின்றது

எம் மீதான

தோற்றுப் போன அவனின்

நம்பிக்கைகள் மீது

அவனின் ஆத்மா

கிடந்தழுகின்றது

இனி

அவன் தன் புல்வெளிகளை

இந்த ஆட்டுக் கூட்டத்திற்கு

தர மாட்டான்

காலத்தை

மாற்றி

எழுத முயன்றவனின்

தோல்வி

அவனின் மந்தைக் கூட்டதாலேயே

எழுதப் பட்டது

யுகங்களுக்கு அப்பால்

பெருக்கெடுத்த காலம்

எம்மை அடிமையாக்கியே

இன்னும் நீண்டு செல்கின்றது..

:நிழலி

(July 22, 2009

காலை 11:50)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா,

உண்மைதான் நீங்கள் கூறுவதுபோல் பல யுகங்கள் தாண்டியும் எம் மீதான அடிமைத்தனம் நீண்டுகொண்டே போகிறது.மிகவும் நல்ல கவிதை நன்றி.

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைக்கால பெருநதி முற்றுப்பெறாது நீள நீள இன்னும் வினாக்களும் அதிகரிக்கும்.

பற்றிக் கொள்ளாத பெருநெருப்பு????

காற்றின் திசையை வளம் மாற்றி விட்டவர்களின் தவறு.

நிழலி நெருப்பு முற்றிலுமாக அணைந்து விடவில்லை. புகை கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

உலக வரலாற்றில் பல இனங்களின் விடுதலைப் போரில் இறுதி வெற்றிக்காக ஏற்பட்ட பல தோல்விகள் அந்த இனம் சந்தித்த அடிமை வாழ்வும் என்பன சரித்திரங்களில் படிக்கும் போது ஏற்படாத மனத்தாக்கம் அதை எங்கள் இனம் அனுபவிக்கும் போது எங்களை வாட்டிவதைக்கிறது.....

எங்கள் சரித்திரம் எதிர்காலத்தில் மீட்டிப்பார்க்கப் படும்போது நாங்கள் தற்போது வசிக்கும் காலம் ஒரு கரிகாலமாக சொல்லப்பட்டு எங்கள் இனம் இததனை அழிவுகளைச் சந்தித்தும் உறுதி தளராமல் போராடி விடுதலையை வென்றெடுத்தது என்று சொல்லப்படலாம் அனால் நிகழ்காலத்தில் நாங்கள் இந்த அடிமைத்தனத்தை அனுபவிக்கும் போது உங்களின் வரிகளில் சொல்லிய வலிகள் தான் மிஞ்சுகிறது....

கவிதை அருமை....

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது

காலத்தின் திசைகளை

எமக்கு எதிரியாக்கியது

யார்

கொட்டும் குளவிகளின்

நுகத்தடியில்

எம் தலைவிதியை

செருகியது யார்

எதிரியின் கையில்

காலத்தை ஒப்படைத்தது

யார்

எமக்கான காலத்தை

நாமே எழுத முயன்ற

ரட்சகனையும் கால ராட்சதனா

கொன்றழித்தான்...

அடிமையாய் கரையும் காலத்தை

உடைத்து சுதந்திரத்தின்

பெரு நெருப்பில்

சாம்பலாக்க முயன்றவனையுமா

கால அரக்கன்

சிதைத்து அழித்தான்..

சூனியப் பெரு வெளியில்

கண்ணீர் துளியாய் போன

மந்தைகளின் வாழ்வை

மீட்க வந்த மேய்பனின்

கனவுகளையுமா

கால அசுரன்

சப்பித் துப்பினான்..

அவனின் இறுதி

மூச்சிலும் எம்மில்

பற்றாத பெரு நெருப்பை

சபித்து கொண்டே

அலைகின்றான் அங்கு

கால சக்கரம்

நெரித்துப் போட்ட

எம் உணர்வுகளின்

மேல் காறி உமிழ்ந்தவாறே

அலைகின்றான் அங்கு

அவன் நடக்கும் பாதை

எங்கும் காலம் நின்று

பரிகாசம் செய்கின்றது

பற்றாத பெரு நெருப்பு

பற்றி கேலி செய்கின்றது

எம் மீதான

தோற்றுப் போன அவனின்

நம்பிக்கைகள் மீது

அவனின் ஆத்மா

கிடந்தழுகின்றது

இனி

அவன் தன் புள்வெளிகளை

இந்த ஆட்டுக் கூட்டத்திற்கு

தர மாட்டான்

காலத்தை

மாற்றி

எழுத முயன்றவனின்

தோல்வி

அவனின் மந்தைக் கூட்டதாலேயே

எழுதப் பட்டது

:நிழலி

(July 22, 2009

காலை 11:50)

நிழலி,

எப்போதும் எழுதாமல் எப்போதாவது எழுதும் உங்கள் கவிதைகள் இப்போது எங்கள் இனத்தின் வாழ்வு மீதான கேள்விகளோடும் இழப்புகளோடும் நீண்டு விரிகிறது. துயர் அப்பிச் சொற்கள் காலத்தை மாற்ற முடியாச் சுமையோடு கனக்கிறது.

இந்த இனத்தின் காலத்தைக் காப்பாற்ற சாபத்தைக் கழுவ இனி எந்த மேய்ப்பனும் வரமாட்டான். அவனது காலத்தையும் கனவுகளையும் கொன்ற இனத்திற்காக இனி எந்தக் கடவுளரும் கொள்ளை போக வேண்டாம். அடிமையாய் அல்லது எதுவாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்.

காலத்தை

மாற்றி

எழுத முயன்றவனின்

தோல்வி

அவனின் மந்தைக் கூட்டதாலேயே

எழுதப் பட்டது

யுகங்களுக்கு அப்பால்

பெருக்கெடுத்த காலம்

எம்மை அடிமையாக்கியே

இன்னும் நீண்டு செல்கின்றது..

எமது காலத்தில் நடக்கும் நிகழ்வை பதிவித்திருக்கின்றது. மனிதனுக்கு இருக்கும் பல்வேறு குணங்கள் போல் அடிமைக்குணம் இயல்பாகி விட்ட சமூகம் அதனில் இருந்து மீளாது என்பதையே எமது காலம் உணர்த்தியுள்ளது. நதிகள் ஒரு நாள் வற்றிப்போகும் தவிர திசைமாறாது. எமது இனம் அடிமைக்குணத்தில் இருந்து மீளாது ஏனெனில் அது இயல்பாகி விட்ட ஒன்று. மந்தைகள் மேய்ப்பனை நம்பியதை விட மேய்பனே மந்தைகளை அதிகம் நம்பினான்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை

  • தொடங்கியவர்

அருமையான கவிதை

நன்றி கு.சா

மீண்டும் நல்லதொரு கவிதை வாசித்த திருப்தி.மனம் கனக்கின்றது நடந்தவைகளை நினைக்க.ஆனாலும் சில தமிழர்களை தவிர‌ இது நடக்கும் என பலராலும் எதிர்பார்கப்பட்டது.நாட்டில் இருந்தவர்களை விட்டு விடுங்கள் அவர்கள் எப்போதுமே வாய் திறந்ததில்லை.திறக்க யார் விட்டார்கள்.

உம‌து க‌விதையின் சார‌ம்

அவனின் இறுதி

மூச்சிலும் எம்மில்

பற்றாத பெரு நெருப்பை

சபித்து கொண்டே

அலைகின்றான் அங்கு

ஆனால் உண்மை அதுவல்ல,எத்தனை முறை கேட்டோம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று? தலைவர் எல்லாம் செய்வார் ஏன்,எதற்கு என கேள்விகள் கேட்காமல் காசைத் தாருங்கள் என்று தான் திரும்ப திரும்ம சொல்லப்பட்டது.உலக அரசியல் செய்யாமல் தமிழனுக்கு விடிவு வருமா எனக் கேட்டதற்கு,ஆயுதம் சொல்லும் அனைத்திற்கும் பதில், எதிரிக்கு கொடுக்கும் அடியில் உலகமே திரும்பும் என்றார்கள். நான் பெரிதும் மதிக்கும் ஆய்வாளர் கூட சுவிஸில் இருந்து கடைசிவரை சொன்னார் பாருங்கோவன் விளையாட்டை என்று.ந‌டேசன் கடைசி செக்கன் வரை வரை சொன்னார் எதிரி கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிற்கின்றான் நடந்து போய் அடிப்போம் என்று. கிழக்கு விடுபடும் போதே முக்கால் வாசி தமிழனுக்கு சந்தேகம் வந்து விட்டது.ஏனேனில் இது நடக்கும் என பெரும்பாலான தமிழன் எதிர்பார்த்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆய் ஆயெண்டு ஆய்ஞ்சு கடைசியில தமிழினின் சிந்தனைத்திறனை இந்த நிலமைக்கு கொண்டு வந்து ஆய்வாளப்பெருந்தகைகள் இப்ப இன்னும் அடியிருக்கெண்டு விடும் றீல்களை இனியும் கவனத்துடன் அவதானியுங்கள் அர்யுன். காசு தந்தால் சரி அங்கையெல்லாம் வேரோடு இனவாதம் சாய்ந்து விடுமென்ற கற்பனையில் மக்களை மிதக்கவிட்டு இன்றும் அதே கனவுலகில் மூழ்கடித்த பரப்புரைஞர்களும் ஆய்வாளர்களும் இனியாவது புழுகு மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு இருக்கலாம். புழுகிப்புழுகியே சுதந்திர தமிழீழக்கனவை சாகடிக்கும் சாகசக்காரர்களை மக்கள் இனங்கண்டு தடைகளை உதைத்துக் கொண்டு நகர்வதே அடுத்த கட்டத் தமிழின விடிவுக்கு உதவியானதாக இருக்கும்.

இலங்கையரசின் மனிதவுரிமை மீறல்கள் படுகொலைகள் தாங்கிய ஆவணப்புத்தகம் ஆறுமொழிகளில் வெளிவரவுள்ளது. இந்தப் புத்தகத்துக்கு யாராவது தங்கள் உதவிகளைக் கொடுக்கலாம். இந்த ஆய்வாளர்களின் விளையாட்டைப் பார்த்து இனிமேல் எதுவும் நடக்கப்போவதில்லை.

இந்த இணைப்பில் விபரங்கள் உள்ளது பாருங்கள் அர்யுன் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=65653

நான் சொன்னால் நீங்கள் என்ன நம்பவா போகின்றீர்கள்.இந்த ஆய்வாளர்கள் பலர் எனக்குத்தெரிந்தவர்கள், அவர்களுக்கு தாங்கள் ரீ.வி யிலும்,வானொலியிலும் வருவது பற்றித்தான் அக்கறை ஒழிய நாட்டில் நடப்பதை பற்றியல்ல.இதில் ஆக வெக்கக்கேடு என்னவென்றால் தாங்கள் இல்லாததை சொல்லுகின்றோம் தேவை கருதி என்றும், அப்படி சொல்லாவிட்டால் தங்களை கூப்பிட மாட்டார்கள் என்றும் என‌க்கு இவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். நான் முகத்திற்கு நேர் கிழியல்கொடுப்பதால் கண்டு ஒழிப்பவர்களும் உண்டு.இதில் பலரை நேற்று நடந்த 1999 பட வெளியீட்டு விழாவில் கண்டேன்.நாளைக்கு என்ன ஆய்வது என்பது தான் அவர்கள் பிரச்சனை. இவர்களில் பல பேர் தமிழீழபோராட்டத்தில் மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னால் நீங்கள் என்ன நம்பவா போகின்றீர்கள்.இந்த ஆய்வாளர்கள் பலர் எனக்குத்தெரிந்தவர்கள், அவர்களுக்கு தாங்கள் ரீ.வி யிலும்,வானொலியிலும் வருவது பற்றித்தான் அக்கறை ஒழிய நாட்டில் நடப்பதை பற்றியல்ல.இதில் ஆக வெக்கக்கேடு என்னவென்றால் தாங்கள் இல்லாததை சொல்லுகின்றோம் தேவை கருதி என்றும், அப்படி சொல்லாவிட்டால் தங்களை கூப்பிட மாட்டார்கள் என்றும் என‌க்கு இவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். நான் முகத்திற்கு நேர் கிழியல்கொடுப்பதால் கண்டு ஒழிப்பவர்களும் உண்டு.இதில் பலரை நேற்று நடந்த 1999 பட வெளியீட்டு விழாவில் கண்டேன்.நாளைக்கு என்ன ஆய்வது என்பது தான் அவர்கள் பிரச்சனை. இவர்களில் பல பேர் தமிழீழபோராட்டத்தில் மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்

ஆய்வாளர்கள் பற்றி நிறையப் பேசலாம். ஆனால் நிழலியில் கவிதையை திசைமாற்றிவிடும். அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

சாத்திரி கடந்த வருடம் ஆய்வுகள் பற்றி தனது நகைச்சுவைப் பாணியில் எழுதியதை இங்கே இணைக்கிறேன் அர்யுன் வாசித்துப்பாருங்கள். :lol:

http://sathirir.blogspot.com/2008/09/blog-post_14.html

நீங்களும் செய்து பாக்கலாம்

12:21 AM, Posted by சாத்திரி, No Comment

நீங்களும் செய்து பாக்கலாம்

சாத்திரி(ஒரு பேப்பர்)

வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்

1)கூகிழ் தேடி

2)விக்கி பீடியா தகவல்

3)கூகிழ் வரைபடம்

4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்

5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)

6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை

1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)

முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்

கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு

.

பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.

ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தின் குரூரத்தைச் சொல்லும் வரிகள். நல்லதோர் கவிதை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பான யதார்தத்தை சொல்லும் அருமையான வரிகள்.....

வரிகளை படிக்கும் போது மனதில் ஏதோ ஒரு வெறுமை தோன்றுகிறது...

Yet I do have hope we will see light at the end of this darkness

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.