Jump to content

உப்பு மா செய்வது எப்படி ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ இண்டைக்கு காலையில் நான் எங்கயோ பார்த்தேனே இட்டலி அவிக்கும் முறையை...ஆ..செய்முறையோடு வந்த அண்ணா கூட திண்ணையில் நித்தா கொண்டாரே..அதுவும் சும்மா அல்ல..குறட்டை விட்டு.ம்ம்ம்..எனக்கு கும்ப கர்ணண் தான் ஞாபகத்தில் வந்தார். :):D

Link to comment
Share on other sites

யாயினி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கம் போடவேணும் போலை இருந்தது.

திண்ணையிலை பார்த்தால் ...... ஒருவரையும் காணவில்லை. அது தான் உடனே அங்கேயே படுத்திட்டன்.

திண்ணையில் படுத்ததால் நல்ல காத்தோட்டமாய் இருந்தது. :D:D

இந்த உப்பு மா இன்னும் தொடர்கிறதா?

கறுப்பி, உப்பு மா தலைப்பு.... இப்ப இட்டலி தோசையில வந்து நிக்குது. :D

Link to comment
Share on other sites

உப்பு மா உப்பாய் இருக்காது தானே!!!!!

அப்ப சீனி மா செய்யுறது எப்புடி எண்டு அறிய தாங்கோவன்!!!!!!!

சீனியையும் மாவையும் சேர்த்தால் சீனி மா தயார் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உழுந்து தோசை சுடும் முறையை காட்டித்தாறன்
??????:lol:
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உப்பு மா நல்ல விருப்பம்.

'வெறும் ரவையை வறுத்து 'செத்தல் மிளகாய் போட்டுச்சாப்பிடுவதிலும் இப்படிச்செய்து பாருங்கோ.

மிக முக்கியமாகத்தேவையான பொருட்கள்

ரவை - 1 பேணி

(வறுத்தது) இல்லை சுத்தமாகக் கழுவிய தாச்சியில் 'தண்ணியைத் துடைச்சுப்போட்டு காயவிட்டு ஒரு 5 நிமிடங்கள் வறுத்தால் போதுமானது அதிகமாக வறுபட்டால் கறுக்குமுறுக்குன்னு இருக்கும்:lol:)

தாளிக்க:

செத்தல் மிளகாய் = 4 (சின்னதாக வெட்டியது)

கடுகு= 1 தே,கரண்டி

பெருஞ்சீரகம்= 1 தே.கரண்டி

பெரிய வெங்காயம் =1(தோலுரித்து கழுவி நீள வாக்கில் வெட்டியது:unsure:

கறிவேப்பிலை = 10 இலை(கழுவியது)

முக்கியமாக - 4 மேசைக்கரண்டி எண்ணெய்

சுவைசேர்க்க:

1 உருளைக்கிழங்கு தோலுரித்துக் கழுவி சின்னதாக வெட்டிப்பொரித்தது

1 கத்தரிக்காய் கழுவி வெட்டிப்பொரித்தது

1 கரட், தோல் சீவி சின்னதாக வெட்டியது

பாதி லீக்ஸ் கழுவி சின்னதாக வெட்டியது

10 பீன்ஸ் -கழுவி மிகமிகச்சின்னதாக அரிந்தது

குடை மிளகாய் - கழுவி சிறுது சிறிதாக வெட்டியது

பெரிய தக்காளிப்பழம் - கழுவி மிகச்சிறிதாக அரிந்தது.

**உப்பு** சுவைக்கேற்ப

அடுப்பில் வைக்க:

கழுவித்துடைத்த 'தாச்சி"

கிளறிவிட-

மர அகப்பை ஒன்று.

மிக முக்கியம்- கொதிக்க வைத்த 1 1/2 பேணி தண்ணீர்:D

'அடுப்பைப்போட மறக்காமல் தாச்சியை வைத்து அடுப்பைப்போட்டு அதனுள் எண்ணைய் விட்டு கொதித்ததும்,

கடுகு போட்டு வெடிக்க விட்டு உடனேயே பெ.சீரகம் போட்டு அது கருக முதல் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு அப்படியே செத்தல் மிளகாய் கறிவேப்பிலை போடவும். எல்லாம் வதங்கியவுடன், கொதித்த நீரை விடவும்(நேரம் மிச்சம் என்பதால் கொதிக்க வைச்சிருப்பது நல்லது)

அதன் பிறகு அதனுள் 'சுவைசேர்க்க" தந்த காய்கறிகளைப்போடவும். நன்றாக வெந்தவுடன். உப்பு போடவும். அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் விட்டு(இல்லாவிட்டால் ரவை அடிப்பிடிக்கும்) ரவையை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு கிளறிவிட 'பொங்கல் ஆகாமல் 'உதிரி உதிரியாய் உப்புமா வரும்.

இது மிகச்சுவையாக இருக்கும்.

என்ர மனுசனுக்கு மிகப்பிடித்த சாப்பாட்டில் 'நான் செய்யும் உப்புமாவும் ஒன்று:D)))

**சுவைசேர்க்க**தந்த பட்டியல் 'தனிய சமைச்சு சாப்பிடுபவர்களுக்கு கஷ்டமாக இருப்பின்.

தாளிக்கத் தந்தவற்றுடன் ரவையைச்சேர்த்துச்சாப்பிடலாம். :Dpost-3570-035175900 1283544348_thumb.jpg

தோழரே தமிழ் தங்கை அதற்கு பேர் கிச்சடி.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நல்ல அழகிய தமிழில் உப்பு மா செய்யும் விதம் பற்றி........

கருவேப்பிலை கழுவதிலிருந்து........ தாச்சியை ஈரம் இல்லாமல் துடைத்து அடுப்பில் வைக்கும் பக்குவம் பற்றி சொல்லித்தந்த தமிழ்தங்கைக்கு நன்றி. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புமா சுவையோடு பதிவு போடட் முறையும் ( சுவையும் )அருமை. நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கையின் உப்புமா செய்முறை நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கும் கீழே " உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக் கொடு" அதுதான் யோசிக்க வைக்குது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கையின் உப்புமா செய்முறை நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கும் கீழே " உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக் கொடு" அதுதான் யோசிக்க வைக்குது! :rolleyes:

அண்ணை,

சாப்பாடு செய்தால் முதல் சுவை பார்க்கிறது நான் தான்; அதனால பயப்பிடாதீங்கோ:unsure:)

வீட்டில் தனிய இருந்துசமைச்சுச்சாப்பிடப்பஞ்சி என்றால்.

கரட்+முட்டை சாண்ட்விச்& பீட்ரூட் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம் போஷாக்கான சாப்பாடு அத்தோடு ஒரு கோப்பை பாலும் குடித்தால்!:lol:

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ரவை

தண்ணீர்/பால்

செத்தல்

வெங்காயம்

கடுகு

சீரகம்

கருவேப்பிலை

உப்பு

விரும்பினால்

கரட்

கத்தரிக்காய்

உருளைக்கிழங்கு

முதலில் ரவையை நல்லா வறுத்து ஆறவிடுங்க

பின் சட்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணை விடுங்க

இதில் வெட்டிய வெங்காயம் கறிவேப்பிலை, கடுகு ,பெருஞ்சீரகம், செத்தல் போட்டு வதக்குங்க வதங்கியதும் விரும்பினால்கரட் உ. கிழங்கு, கத்தரிக்காய் பொரித்து போடலாம், எல்லாம் வதங்கியதும்

தண்ணீர்/பால் விட்டு கொதிக்க விடவும்( 1 கப் ரவைக்கு 11/2 கப் தண்ணீர்/பால்)

னல்லா கொத்தித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்

பின் வறுத்து வைத்திறுக்கும் ரவையை போட்டு கிண்டவும் கொஞ்ச நேரம் கிண்டினதும் அடுப்பில் இருந்து இறக்கி சாப்பிடுங்க

இன்று செய்து பார்க்கப்போகின்றேன், நன்றாக வந்தால் ஒரு பச்சை உங்களுக்கு நாளை

இந்த உப்பு மா இன்னும் தொடர்கிறதா?

:lol:  :D

Link to comment
Share on other sites

சுடுதண்ணியைச் சேர்த்தபின் ரவையைப் போடுமுன் பட்டர் அல்லது மாஜறினையும் ( 1 மேசைக்கரண்டி கூடப் போட்டாலும் நல்லது) சேர்க்கவும் அப்ப நல்ல மெதுமையாக வரும். நான் வதக்கும் போது கறிமிளகாய், கரட், பீன்ஸ், வெங்காயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை,ginger (எல்லாம் சின்னனாக வெட்டியது)போடுவேன்.  ம்ம்ம்ம்ம்......... நான் லீக்ஸ் போடுவதில்லை ஏனேனில் லீக்ஸ் போட்டால் அதன் ரேஸ்ட் மட்டும் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.