Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினை விதைத்துமா வினை அறுப்பது?!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி 1.

தினை விதைத்துமா வினை அறுப்பது?

தினை விதைத்துமா வினை அறுப்பது?!

எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். எப்போதும் புன்னகைத்துக்கொண்டிருக்கும

  • Replies 92
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண் மாதிரி எத்தனையோ பெண்கள் சமூதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்குறார்கள்..வாழ்த்துகள் கதையை மேலும் தொட‌ருங்கள்...

//'சொல்லுங்கள் உறவுகளே "தினை விதைத்தால் அறுவடை வினை என்பது பொருந்தாத விதிதானே?//

ஆமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெண் மாதிரி எத்தனையோ பெண்கள் சமூதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்குறார்கள்..வாழ்த்துகள் கதையை மேலும் தொட‌ருங்கள்...

//'சொல்லுங்கள் உறவுகளே "தினை விதைத்தால் அறுவடை வினை என்பது பொருந்தாத விதிதானே?//

ஆமாம்

நன்றி ரதி,

இது மருந்துக்கு கூட 'கலப்படம் கலக்காத உண்மைக்கதை!.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கணவனே கண் கண்ட தெய்வம் என பத்தினிகளாக வாழ்வதால்

தான் "அவர்கள் "தலைக்கு மேல் எகிறுகிறார்கள். பெண் தான் பொறுத்து போகணும்

என்று எழுதி வைத்த விதியாச்சே ......

தமிழ்தங்கை, யதார்த்தமான பல விசயங்களை சொல்லி இருக்கிறீங்கள். நான் இப்போது யோசிப்பது என்ன என்றால்.. உண்மையில் இதுதான் நிஜ உலகம் - நிஜ உலகத்தில் இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தால் என்ன செய்வது? தனிமனித ஒழுக்கங்கள் எல்லாம் பள்ளியில பத்தாம் வகுப்புவரை சமய, தமிழ் பாடங்களில படிச்சதோட சரி. இவற்றையெல்லாம் யார் நடைமுறை வாழ்க்கையில பிரயோகம் செய்கிறீனம்? விரல்விட்டு எண்ணலாம்.

இதனால்... பேசாமல் பொத்திக்கொண்டு உலகம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவகையில் எல்லோரும் கூத்து ஆடுவது பொருத்தமாக இருக்குமோ என்று யோசிக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி கணவனே கண் கண்ட தெய்வம் என பத்தினிகளாக வாழ்வதால்

தான் "அவர்கள் "தலைக்கு மேல் எகிறுகிறார்கள். பெண் தான் பொறுத்து போகணும்

என்று எழுதி வைத்த விதியாச்சே ......

"விதிகளை எழுதி வைத்தவர்கள் ஆண்களாயிற்றே நிலா அக்கா. பெண்ணுக்கும் ஆணுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். "உணர்வு வேறு/உணர்ச்சி வேறு என்கின்ற வித்தியாசத்தைப்புரிந்துகொள??ள வேண்டும்.

தமிழ்தங்கை, யதார்த்தமான பல விசயங்களை சொல்லி இருக்கிறீங்கள். நான் இப்போது யோசிப்பது என்ன என்றால்.. உண்மையில் இதுதான் நிஜ உலகம் - நிஜ உலகத்தில் இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்தால் என்ன செய்வது? தனிமனித ஒழுக்கங்கள் எல்லாம் பள்ளியில பத்தாம் வகுப்புவரை சமய, தமிழ் பாடங்களில படிச்சதோட சரி. இவற்றையெல்லாம் யார் நடைமுறை வாழ்க்கையில பிரயோகம் செய்கிறீனம்? விரல்விட்டு எண்ணலாம்.

இதனால்... பேசாமல் பொத்திக்கொண்டு உலகம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவகையில் எல்லோரும் கூத்து ஆடுவது பொருத்தமாக இருக்குமோ என்று யோசிக்கின்றேன்.

"எல்லோரும் கெட்டுப்போகின்றார்கள் என்பதற்காக நாமும் அப்படி இருக்க வேண்டுமென்று நினைப்பது சரியல்ல முரளி.

'ஆண் ' ராமனாயிருந்தால் பெண் நிச்சயம் சீதையாகவே இருப்பாள்". அதற்குரிய விளக்கமும் இந்தக்கதையில் வரும்:)

கோவலனால் மூன்று பெண்களின் வாழ்க்கை அநியாயம் ஆனது. அதனால் தானோ என்னவோ 'சீதைகளும் கூட இப்போது அயோத்தியை விட கோகுலத்தை விரும்புகின்றார்கள்?:)

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினை விதைத்துமா 'வினை" அறுப்பது?

பகுதி 2:

புன்னகைப்பெண்ணை அன்று தரிசித்தேன். சுவாமி விவேகானந்தரின் புத்தகத்தோடு தன்னை மறந்திருந்தாள். " ஆஹா காதல் கவிதை இருக்க வேண்டிய கரங்களில் சுவாமிகளா? " என்றேன் நக்கலாய்.....'

திரும்பி பார்த்து அவளுக்கேயுரிய ரேட் மார்க் புன்னகையுடன் 'ம்ம்ம்...காதல் சந்தோஷம் தான் ஆனால் ஆன்மிகம் 'நிம்மதி" இல்லையா? மனசுக்கு நிம்மதிதான் தேவையா இருக்கு' என்றபடி மீண்டும் புன்னகையோடு புத்தகத்தில் மூழ்க...

நான்: ம்ஹீம் காதல் இருபக்கமும் நிறைந்திருந்தால் அதுவும் நிம்மதிதான் ஆனால் இங்கு ஒருபாதிதானே உருகி வழியுது என்றபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்..."

அவள்: என்ன என்னையே பார்த்துக்கொண்டிருக்கீங்க?" ...

நான்: ம்ம் உன் அழகை ரசிக்கத்தெரியாதவன் முட்டாள் இல்லையா?

அவள்: ம்ம் என்னழகை மட்டுமல்ல "அழகை ரசிக்கத்தெரியாதவர் எல்லோருமே முட்டாள்கள்தான் என்று சொல்லிக்கொண்டு என் சம்பாஷணையில் கலப்பதற்காய் புத்தகத்தை மூடி வைத்தாள்.

நான்:ஓ!! அப்ப நான் புத்திசாலி என்று ஒத்துக்கொள்கிறாய் இல்லையா?

அவள்: ஒத்துக்கொள்ளாமல் எப்படி? என்னுடைய பிரெண்ட் ஆயிட்டீங்களே! (என்றாள் கலப்படம் சிறிதும் அற்ற சிரிப்போடு)

நான்: நன்றி செல்லம் என்றபடி மீண்டும் அவளைப்பார்த்தேன்

அவள்: என்ன என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறீங்

கவிதை நல்லாய் இருக்கிது:

சொல்லெடுத்துக் கொடுத்திருக்கும் என்னவளின் நினைவுகளைச்

சுமந்திங்கு செல்லுமுன்னர் குரல்கேட்க ஆசை!

வில்லுப்போலும் புருவத்தை மெலவுயர்த்தி எனைப் பார்க்கும்

வேல்விழியைக் கண்டிடவே என்னுள்ளோர் ஆசை!

பெருகிவரும் இதழமுதம் பருகிவிடு என்னத்தான் எனசொல்லும்

செவ்விதழில் சேர்ந்தினிக்க இப்போது ஆசை!

ஆடிவரும் மயிலெனவே அசைந்துவரும் அன்னத்தின்

கையிரண்டைப் பற்றியுனை அணைத்திடவோர் ஆசை!

செல்லமகள் சின்னக்குயில் சுந்தரியின் செவ்வதரம்

துடிக்கின்ற நிலைகண்டு விழிநீர் துடைத்துவிட ஆசை!

என்னவளே என்னுயிரே! என்னதான் செய்கின்றாய் நீ!

ஏனிப்படி எனை ஆக்கிவிட்டாய்! இதுவும் இனிக்கிறதே!

சோகத்தில் நானிருக்கும் நேரத்தில் நீயினிக்க

எனைக்கொண்டு மடிசாய்த்து விழிமூட ஆசை.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை,

இன்று தான் உங்களின் கதை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது....படித்தேன் இல்லை..... நன்றாக அழுதேன் என்று தான் சொல்ல வேண்டும்.மிகவும் நன்றாக உள்ளது உங்களின் கதை.எனக்கு மனதுக்கு பிடித்திருந்தால் யாருடைய ஆக்கமாக இருந்தாலும் விமர்ச்சிப்பது வளக்கம்.அந்த வகையில் உங்களின் ஆக்கங்களையும் படிப்பேன்.விமர்ப்பேன் அவதானித்து இருப்பீர்கள்.கதை மட்டு மல்ல கவிதை கூட மிக...மிக அழகாய் உள்ளது....வாழ்த்துச் சொல்ல வார்த்தை இல்லை எனக்கு.பல வற்றை சுமந்து கொண்டு இருப்பவர்களுக்குத்தானே தெரியும் அவற்றின் வலிகள்.நன்றி...

யாயினி.

நிச்சயிக்கப்பட்ட ஆண் செய்வது தவறு எனினும், இடையில் புகுந்து கோலிக்குண்டு விளையாடும் இரண்டாமவரின் செயல் சரிதானா? :D

அந்தப் பெண் வளர்ந்துவிட்டவர். அவர் ஒரு சுய முடிவு எடுத்து தானாக வெளியேறாத வரை, இடையில் புகுந்து இவர் ஆட்டையைப் போடுவது சரியாகப் படவில்லை..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாய் இருக்கிது:

சொல்லெடுத்துக் கொடுத்திருக்கும் என்னவளின் நினைவுகளைச்

சுமந்திங்கு செல்லுமுன்னர் குரல்கேட்க ஆசை!

வில்லுப்போலும் புருவத்தை மெலவுயர்த்தி எனைப் பார்க்கும்

வேல்விழியைக் கண்டிடவே என்னுள்ளோர் ஆசை!

பெருகிவரும் இதழமுதம் பருகிவிடு என்னத்தான் எனசொல்லும்

செவ்விதழில் சேர்ந்தினிக்க இப்போது ஆசை!

ஆடிவரும் மயிலெனவே அசைந்துவரும் அன்னத்தின்

கையிரண்டைப் பற்றியுனை அணைத்திடவோர் ஆசை!

செல்லமகள் சின்னக்குயில் சுந்தரியின் செவ்வதரம்

துடிக்கின்ற நிலைகண்டு விழிநீர் துடைத்துவிட ஆசை!

என்னவளே என்னுயிரே! என்னதான் செய்கின்றாய் நீ!

ஏனிப்படி எனை ஆக்கிவிட்டாய்! இதுவும் இனிக்கிறதே!

சோகத்தில் நானிருக்கும் நேரத்தில் நீயினிக்க

எனைக்கொண்டு மடிசாய்த்து விழிமூட ஆசை.....

நன்றி முரளி. கவிதை கலந்து எழுதத்தான் வருகிறது எனக்கு:D

தமிழ்தங்கை,

இன்று தான் உங்களின் கதை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது....படித்தேன் இல்லை..... நன்றாக அழுதேன் என்று தான் சொல்ல வேண்டும்.மிகவும் நன்றாக உள்ளது உங்களின் கதை.எனக்கு மனதுக்கு பிடித்திருந்தால் யாருடைய ஆக்கமாக இருந்தாலும் விமர்ச்சிப்பது வளக்கம்.அந்த வகையில் உங்களின் ஆக்கங்களையும் படிப்பேன்.விமர்ப்பேன் அவதானித்து இருப்பீர்கள்.கதை மட்டு மல்ல கவிதை கூட மிக...மிக அழகாய் உள்ளது....வாழ்த்துச் சொல்ல வார்த்தை இல்லை எனக்கு.பல வற்றை சுமந்து கொண்டு இருப்பவர்களுக்குத்தானே தெரியும் அவற்றின் வலிகள்.நன்றி...

யாயினி.

.

யாயினி,

உங்கள் வரிகள் உற்சாகமூட்டுகின்றன. எங்கள் பெண்களுக்குள் இருக்கின்ற பெரிய பிரச்சனையே அதுதான். முதல் முடிவை சரியாக எடுக்காமல் பிறகு அவஸ்தைப்படுவது

நிச்சயிக்கப்பட்ட ஆண் செய்வது தவறு எனினும், இடையில் புகுந்து கோலிக்குண்டு விளையாடும் இரண்டாமவரின் செயல் சரிதானா? :D

அந்தப் பெண் வளர்ந்துவிட்டவர். அவர் ஒரு சுய முடிவு எடுத்து தானாக வெளியேறாத வரை, இடையில் புகுந்து இவர் ஆட்டையைப் போடுவது சரியாகப் படவில்லை..! :lol:

நடைமுறையில் இப்படியெல்லாம் இருக்கிறது டங்கு அண்ணை. இடையில் ஒருவர் புகாமல் இருக்கவேண்டுமெனில் ‘எந்த இடைவெளிகளும் காதலர்களுக்கிடையிலோ/ கணவன் மனைவிக்கிடையிலோ வரக்கூடாது. வந்துவிட்டால் இப்படித்தான் அதை விட இது நல்லமே என்று மனம் எடை போடத்தொடங்கிவிடும்.

சுயமுடிவை எப்போது பெண்கள் தாமாக எடுத்தார்கள்; இப்போதும் திணிக்கப்பட்ட வாழ்க்கை முறைதான் அவர்களுக்கு பெரும்பாலும் வாய்த்துவிடுகின்றது.

எத்தனையோ கனவுகளுடன், கற்பனைகளுடன் எதிர்பார்ப்புகளுடன் அதைவிட நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுகின்ற வாழ்க்கையில் மறுபாதி சரியில்லா விட்டால்; அவளுக்கும் தான் வடிகால் ஏது?!

வலிகளைக் கொடுத்தவனை விட மருந்து போடுபவனை மனசுக்குப்பிடித்துத்தானே போகின்றது? “ஒரு வகையில் அது தவறுதான் என்று கொண்டாலும்.....’போலியாய் வாழ்வதைவிட நிஜத்துடன் வாழ்வது நிம்மதி தானே?!

  • கருத்துக்கள உறவுகள்

'காமம் தான் தவறு காதல் தவறல்லவே!. அன்புக்கு அன்பை பரிசாகக்கொடுப்பது குற்றமில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்
.

இரண்டாமவர் புகுந்து விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

இரண்டாமவர் புகுந்து விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்?

விளையாட்டு வினையாகுமா? அதுவே விதியாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!.

”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற போர்வையை பெண்கள் உதறி ஆகவேண்டுமா இல்லையா? என்று மட்டும் சொல்லுங்கோ நுணா அண்னா? :D

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளைக் கொடுத்தவனை விட மருந்து போடுபவனை மனசுக்குப்பிடித்துத்தானே போகின்றது? “ஒரு வகையில் அது தவறுதான் என்று கொண்டாலும்.....’போலியாய் வாழ்வதைவிட நிஜத்துடன் வாழ்வது நிம்மதி தானே?!

அப்படி போடுங்கோ.....வாழ்வுதான் முக்கியம் .நாமும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ விடவேண்டும் ''.....

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையில் இப்படியெல்லாம் இருக்கிறது டங்கு அண்ணை. இடையில் ஒருவர் புகாமல் இருக்கவேண்டுமெனில் ‘எந்த இடைவெளிகளும் காதலர்களுக்கிடையிலோ/ கணவன் மனைவிக்கிடையிலோ வரக்கூடாது. வந்துவிட்டால் இப்படித்தான் அதை விட இது நல்லமே என்று மனம் எடை போடத்தொடங்கிவிடும்.

சுயமுடிவை எப்போது பெண்கள் தாமாக எடுத்தார்கள்; இப்போதும் திணிக்கப்பட்ட வாழ்க்கை முறைதான் அவர்களுக்கு பெரும்பாலும் வாய்த்துவிடுகின்றது.

எத்தனையோ கனவுகளுடன், கற்பனைகளுடன் எதிர்பார்ப்புகளுடன் அதைவிட நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுகின்ற வாழ்க்கையில் மறுபாதி சரியில்லா விட்டால்; அவளுக்கும் தான் வடிகால் ஏது?!

வலிகளைக் கொடுத்தவனை விட மருந்து போடுபவனை மனசுக்குப்பிடித்துத்தானே போகின்றது? “ஒரு வகையில் அது தவறுதான் என்று கொண்டாலும்.....’போலியாய் வாழ்வதைவிட நிஜத்துடன் வாழ்வது நிம்மதி தானே?!

தம்பதிகளிடையே இடைவெளிகள் ஏற்படுவதும் போவதும் சாதாரணமான ஒன்று. அதற்காக குறுக்குசால் ஓட்டுவது சரி என்று சொல்ல முடியுமா? அப்படியென்றால் எல்லக் குடும்பங்களிலும் குறுக்குசால் தவிர்க்க முடியாமல் போய்விடும்..! :D

இந்தக் கதையில் வரும் நிச்சயிக்கப்பட்ட ஆண் தவறு செய்பவராகவே வைத்துக்கொண்டாலும், அத்தவறுக்கு இப்பெண் செய்யும் தவறு பிராயச்சித்தம் ஆகாது. பெண்ணுக்கு ஆறுதல் அளிக்கச் சென்றவர் தன் காதலை வெளிப்படுத்துவது conflict of interests ஆகும்..! :lol:

இரண்டாமவருடன் காதல் அளவுக்கும் போகத்துணிந்த பெண்ணுக்கு, முதலாமவரிடமிருந்து தானாக்ப் பிரியும் அளவுக்கு சிந்தனை வளர்ச்சி இல்லையா? இனிமேல் பிரிந்தால் இரண்டாம் நாயகனின் தூண்டுதலின் பேரில்தான் பிரிந்து சென்றார் என்று கொள்ளப்பட வேண்டும். இச்செயல் ஏற்புடையதல்ல. நியாயத்தன்மை குறைந்தது. :D

  • கருத்துக்கள உறவுகள்

”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற போர்வையை பெண்கள் உதறி ஆகவேண்டுமா இல்லையா? என்று மட்டும் சொல்லுங்கோ நுணா அண்னா?

கல்லு, புல்லு பற்றி தெரியாது தமிழ்தங்கை. கணவன் மனைவிக்கிடையில் ஒரு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புகள் இருக்குமிடத்து அவர்களின் இருவருக்கும் உள்ள பிரச்சனையில் அரைவாசி குறைந்து விடும். மிகுதி இருவரும் ஆற அமர இருந்து கதைத்து முடிவுகள் எடுக்கலாம். குடி தான் பிரச்சனை எனில் நிறைய பேர் திருந்தி உள்ளார்கள். குடியை தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டவர்கள் அதாவது தமது கடமையை செய்பவர்கள் பலரை கண்டுள்ளேன். மிகுதி உங்களின் போக்கை பொறுத்து எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கதையின் படி இரண்டாமவரில் உள்ள காதலால் (சில வேளை காமத்தால் :D ) EXCUSE ஒன்றை தேடி கொண்டு முதலாமவரை "காய் வெட்டும் " முயற்சியாகவே என்னால் பார்க்க முடிகிறது. இரண்டாமரை தேடும் அளவுக்கு முதலாமவர் விட்ட தவறு சில வேளை "I LOVE YOU" சொல்லாமல் விட்டிருக்கலாம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினை விதைத்துமா வினை அறுப்பது?

பகுதி 3.

படித்தாள் ரசித்தாள் ஒவ்வொன்றாய்ச்சுவைத்தாள் இப்படிப்பட்டவளுக்காக அல்லவா கவிதை எழுத வேண்டும் அவளின் ரசிப்புத்தன்மை அதை ஏற்றுக்கொண்ட விதம் ஓராயிரம் கவிதைகளைப்படைத்துவிடத்தூண்??ியது.

அவள்: அப்படியே உங்களைக்கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு"டா" .

நான்: தயக்கமில்லையே செய்யலாமே! என்றேன் இரு கைகளையும் அவளைப் பார்த்து நீட்டியபடி.

அவள்:செல்லக்குட்டி; ஆனால்…இதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று …..

நான்: அதை நீதான் சொல்லணும்; நீதான் செல்லம் என் உலகம்!...

உன் பார்வையில் ஒரு தடுமாற்றம் தெரிகிறதே? செய்வது தவறோ தப்போ என்று எண்ணுகின்றாயா?

அவள்: எப்படிடா செல்லக்குட்டி? கண்டுபிடித்தீர்கள்? ம்ம்...பயமில்லை ஆனால் இது பாவமில்லையா? அவனுக்கு ஒரு பெண்ணின் உணர்வுகளோ காதலின் மகத்துவமோ புரிவதில்லைத்தான் ஆனால் 'ஒழுக்கமானவன்"

நான்:ஏகபத்தினி விரதனாக மட்டும் இருப்பதில் 'ராமனாகிவிட முடியாது கண்ணே! 'சீதையை ராமன் எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டான் தெரியுமா? 'இராவணன் சீதையின் காலடியில் விழுந்து கெஞ்சியும் சீதை மசியவில்லையெனில் 'ராமன் பூரணமானவன்" சீதையை அப்படி கவனித்துக்கொண்டான் அதனால் தான் அவளுக்கு ராமன் இருக்குமிடமே அயோத்தியானது.

அவள்: சிரித்துக்கொண்டே சொன்னாள் "ம்ம் சிலர் 'ராமன் என்று தங்களைப்பிரகடனப்படுத்திக்க??ள்கின்றார்கள் 'வேடிக்கையாக இருக்கிறது செல்லம்.

நான்: ம்....'சீதையை 'காட்டுக்கு வா என்று ராமன் அழைக்கவே இல்லை ஆனால் அவள் ராமனைப் பின் தொடர்ந்தாள்.ராமனைப்போல் இருந்துவிட்டால் சீதை பின்னாலேயே ஓடி வரமாட்டாளா என்ன?

அவள்: ம்ம்....நான் உங்கள் பின்னால் ஓடி வருவதைப்போலத்தானே? என்று சிணுங்கிச்சிரித்தாள்.

நான்: என் செல்லமே! தீர்க்கமாய் ஒரு முடிவெடு...உன்னை நான் ஊரறிய மணவாட்டி ஆக்குகின்றேன். தயங்காதே இந்த சமுதாயம் 'சேற்றை வாரி இறைக்குமே தவிர சோற்றுக்கு வழி சமைக்காது. நீ வாழ வேண்டிய பெண். இத்தனை காலமும் நீ பட்ட இன்னல்கள் போதும்

அவள்: காலம் முழுதும் காதலோடு வாழ ஆசைப்படுகின்றேன் கண்ணா!. எப்படியெல்லாம் ஒரு கணவன் இருக்கவேண்டுமென்று விரும்பினேனோ அதற்கும் ஒரு படி மேலாகவே என்னை ஆக்கிரமித்துவிட்டீர்கள். என் கற்பனைக்கு உயிர் வடிவம் கொடுத்திருக்கின்றீர்கள். இப்போது என் உயிரில் உணர்வில் உள்ளத்தில் நீங்களே நீங்கள் மட்டுமே வியாபித்திருக்கின்றீர்கள்.

நான்: உனக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தன் சுயநலத்தை மட்டுமே பெரிதாகக்கொண்டவனோடு உன் வாழ்க்கை சிறக்காது. நீ காலம் முழுவதும் களிப்போடு வாழவேண்டியவள். காதலாகி நிறைந்தவள்.

அவள்: ம்ம். என் தேவைகள் அவனுக்கு தீர்ந்துவிட்டதுதான். எதை சாதிக்கவேண்டுமென நினைத்தானோ அதை என்னைக்கொண்டு செய்துவிட்டான். என் வாயாலேயே " அவனை வேண்டாம்' என்று சொல்லவேண்டுமென்பதற்கான ஆயத்தங்களில் அவன் இறங்கிவிட்டான் செல்லம். தன்னில் பழி வரக்கூடாது என்பதற்காக; அதன் காரணமாகவே என்னை உதாசீனப்படுத்துகின்றான்.

நான்: நீ சொல்லாமலேயே எனக்குத்தெரியும் செல்லம். நீ தான் அவனுக்காக ஏங்கினாய் உருகினாய் அவனுக்கு உன் உணர்வுகள் புரியவே இல்லை. "பெண்" எப்போதும் ஆணின் காலடியில் கதறிக்கிடக்கவேண்டும் என்று விரும்புகின்ற ஆதிக்க வெறி அவனைச்சூழ்ந்திருக்கிறது அதுவும் உன்னிடமிருந்தே எல்லாம் பெற்றுக்கொண்டு நீ அவன் காலைச்சுற்றி வரவேண்டுமென்பதே அவனின் விருப்பம்.

அவள்: நீங்கள் சொல்வது 100% உண்மைதான். வாழ்க்கையின் இளமை வயதின் இன்பங்களைத்தொலைத்தாகிவிட்ட??ு இனியும் அப்படி இருக்க முடியாது. காலம் முழுக்க கண்ணீரோடு வாழவேண்டிய தேவை இல்லை. நீங்கள் போதும் எனக்கு!.....

நான்: அப்படியே அவளை அருகணைத்து இதழ் சுவைத்தேன்.

இன்முகத்தைக் கண்டிருக்க இரண்டு கண்கள் போதாதே!

நின் பதத்தில் பணிந்திருக்க என தலையும் குனியுதே!

அன்புவடிவைக் கும்பிடவே என் கைகளும் குவியுதே!

நாடியுன்னைத் தேடிவர என்கால்களும் விரையுதே!

திருமுகத்தில் திளைத்திருக்க மனமிங்கே விரும்புதே!

நின்னடியில் யானிருக்க என்றும் நெஞ்சம் நாடுதே!

ஒட்டிவந்து சேர்ந்திருக்க நின்கருணை வேண்டுதே!

அட்டியின்றிக் கலந்திருக்க ஆழ்மனமும் அணுகுதே!

அவள்: உன்னுடனே இருப்பதற்கே இந்த உயிர் சுமக்கின்றேன் உன்னடியில் கிடப்பதற்கே எந்தன் ஆயுள் இங்கு வளர்க்கின்றேன் உன் கரத்தைப் பிடிப்பதற்கே காத்தல் இங்கு செய்கின்றேன் உன் இதழ் அமுதம் பருகிடத்தான் தாகத்துடன் இருக்கின்றேன்! உன் மார்பில் சாய்ந்திடவே தூக்கம் கூடத் துறக்கின்றேன்! என் விழியை உன் வழியை பார்த்தே வாசல் திறக்கின்றேன்! உனக்கெனவே இருப்பதில் தான் பெருமிதம் நான் கொள்கின்றேன்

அவன்: கள்நிறைக்கும் மலர்நிறைத்த கார்மேகக் கூந்தல் - அது

என்னைத்தொட்டுத் தழுவையிலே என்னில் ஒரு சிலிர்ப்பு!

கள்வடியும் மலர்க்கணைகள் வீசிவரும் விழிகள் - அது

என்னைத்தாக்கி வீழ்த்தையிலே களித்திருக்கும் மனசு!

கள்வழியும் செவ்விதழ்கள் மெல்லவங்கு விரியும் - அது

சிந்துகின்ற தேன்குடித்து என்னுயிரும் வளரும்!

கள்ளின் மணம் வீசிவரும் பொன்னுமேனி கொண்டால் - அது

என்னில் கொள்ளும் போதையிலே என்னையே யான் மறப்பேன்!

கள்வடிக்கப் பனையேறும் வாளிப்பான கால்கள் - அது

அள்ளும் என்னை வெல்லும் செயலில் என்ன யானும் சொல்ல!

கள்ளெடுத்து வாயிலிட மெல்லவொரு விறைப்பு - அது

போல என்னைத் தழுவும் கைகள் தந்திடுமே தணப்பு!

கள்நிறையும் குடம்போலச் சிவந்திருக்கும் பூவும் - அது

கொள்ளும் வரை கொள்ளையிலே கொள்ளைபோகும் கரும்பு!

கள்ளின் குணம் அத்தனையும் கன்னி உன்னில் கண்டேன்!- அது

செய்யும் சின்ன வேதனையில் எங்கோ யானும் பறந்தேன்!

அவள்: ஓயாத அலையாகி கரை தழுவும் கடல்போல எனைத் தழுவும் காதல் நீ செல்லம்! மலைபோல உன் அன்பு எதனாலும் அழியாது எதைக்கண்டும் உருகாத வெல்லம்! உனைப்போல ஓருறவு எவருக்கும் வாய்க்காது நீ இறையின் மறு உருவே திண்ணம்! மனம் பறிக்கும் சுகம் கூட்டி தமிழ் கொண்டு கவிசேர்க்கும் வண்ணம்! குறையேதும் இல்லாத குணக்குன்றே நீ எனக்கேதான் என்றும் என்றென்றும் வளமான தமிழ் கொண்டு என் வலமாகி நின்றாயே! உனக்கீடாய் இல்லை இங்கெதுவும்! வரும் நாளும் சுகமாக உன் மடி சேர்வேன் நிறைவாக தொழுகின்றேன் வானுறையும் தெய்வம்

.……… காதல்.....தொடர்கிறது!

*********

முற்றும்...

இதையும் வாசிச்சுப்போட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கோ...உங்களுக்கான விடையுடன் வாறன்:D

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் வாசிச்சுப்போட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கோ...உங்களுக்கான விடையுடன் வாறன்:)

இதைப் படித்தவுடன் எண்ணத்தில் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்..! :unsure:

களவொழுக்கத்துக்கு கவிதை ஒரு கேடா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் படித்தவுடன் எண்ணத்தில் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்..! :unsure:

களவொழுக்கத்துக்கு கவிதை ஒரு கேடா? :lol:

அதுதானே நல்லா கேட்டிங்க டங்கு :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினை விதைத்துமா வினை அறுப்பது

அவள்: அப்படியே உங்களைக்கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு"டா" .

நான்: தயக்கமில்லையே செய்யலாமே! என்றேன் இரு கைகளையும் அவளைப் பார்த்து நீட்டியபடி.

அவள்:செல்லக்குட்டி; ஆனால்…இதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று …..

நான்: அதை நீதான் சொல்லணும்; நீதான் செல்லம் என் உலகம்!...

உன் பார்வையில் ஒரு தடுமாற்றம் தெரிகிறதே? செய்வது தவறோ தப்போ என்று எண்ணுகின்றாயா?

அவள்: எப்படிடா செல்லக்குட்டி? கண்டுபிடித்தீர்கள்? ம்ம்...பயமில்லை ஆனால் இது பாவமில்லையா? அவனுக்கு ஒரு பெண்ணின் உணர்வுகளோ காதலின் மகத்துவமோ புரிவதில்லைத்தான் ஆனால் 'ஒழுக்கமானவன்"

நான்:ஏகபத்தினி விரதனாக மட்டும் இருப்பதில் 'ராமனாகிவிட முடியாது கண்ணே! 'சீதையை ராமன் எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டான் தெரியுமா? 'இராவணன் சீதையின் காலடியில் விழுந்து கெஞ்சியும் சீதை மசியவில்லையெனில் 'ராமன் பூரணமானவன்" சீதையை அப்படி கவனித்துக்கொண்டான் அதனால் தான் அவளுக்கு ராமன் இருக்குமிடமே அயோத்தியானது.

அவள்: சிரித்துக்கொண்டே சொன்னாள் "ம்ம் சிலர் 'ராமன் என்று தங்களைப்பிரகடனப்படுத்திக்க

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல Erotic ஆக போகுது தமிழ் தங்கை. தொடருங்கள். :unsure:

தமிழ்தங்கை உங்கள் கதை நல்லாவே போகின்றது தொடருங்கள்....

எனக்கு இப்படி ஒரு சம்பவம் தெரியும் உண்மையில் லண்டனில் நடந்த கதை... முதலில் இப்படி கட்டி அப்புறம் விட்டு இட்டு வேறு ஒருதங்களை காதலித்து மணத்தார்கள்... அவர்கள் இப்போ சந்தோசமாகவும் இருக்கிறார்கள்.... குழந்தையும் பிறந்து விட்டுதா இருக்க வேண்டும்... ஒன்றுமே புரியவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல Erotic ஆக போகுது தமிழ் தங்கை. தொடருங்கள். :lol:

பின்ன.. இண்டைக்கு எத்தினை தரம் refresh பண்ணியிருப்பன் தெரியுமே..! :unsure::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கப்பா.

தங்கைச்சி கதை நல்லகதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.