Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.

விற்றும் பிழைக்கலாம் விட்டும் பிழைக்கலாம் என்று பிழைக்க கற்றுகொண்ட கயவர்களோடு வீண்வாதம் செய்து நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.

அடிக்காதே அடிக்காதே என்று கத்தினால் போல் யாரும் அடிக்காதுவிடபோவதில்லை.

சின்ன மீனை பிடித்து சாப்பிட்டாலே பெரிய மீன் உயிர்வாழ முடியும் என்பது உலக நியதி. இதை எந்த காந்தியாலும் மாற்ற முடியாது.

அதனால்தான் ஒற்றுமையே நிறைந்த செல்வம் என்று முன்னோர் சொல்லி வைத்தார். அதை குழப்பினாலே மீன்பிடிக்கமுடியும் என்பது எதிரியின் திண்ணம்.

குழம்பியதும் இல்லாது மற்றவர்கள் இன்னும் குழம்பவில்லை என்று குற்றம் சுமத்தும் அளவிற்கு காலம் தமிழனை கொண்டு சென்றுவிட்டது. இப்படிபட்ட தமிழனுக்கு விடுதலை ஒரு கேடா?

உண்மை! மருதங்கேணியவர்களது கருத்து ஏற்புடையதே !

ஆனால், இது போன்ற புல்லுருவிகளைத் துயிலுரியாது விடுவதும் ஆபத்தானது. இவ எந்த ஊரிலிருந்து... அல்லது கொழும்பில் இருந்து எழுதுகிறாவோ? இன்று எதுவும் நடக்கும் காலமல்லவா?

  • Replies 70
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் ஒருசிலரை போட்டுதள்ளுவதற்கு பதிலாக புலத்தில் பலரை போட்டுத்தள்ளியிருந்தால் இன்று நிலைமை வேறு.

போட்டுத்தள்ளும் பொறுப்பை இனி நீங்கள் ஏற்று நடத்தலாம் இடம் வெற்றிடமாய்த்தான் உள்ளது. போட்டுத்தள்ளல் என்ற சொல்லே பல இடங்களில் தமிழனை வீழ்த்தி மூடியிருக்கிறது.

கவிதை படு பிற்போக்கானது. எமது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. குளிரென்றும் பாராமல் குழந்தைகள்,வயோதிபர் என லட்ச கணக்கில் எம்மக்களுக்கு ஒரு விடுவு வர வேண்டும் என வீதியில் இறங்கி போராடிய மக்கள் பற்றி இந்த கவிஞருக்கு எழுத தெரியாதா? பத்திரிகைகள், வானொலிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என கடிதங்களும் ,மின்னஞ்சல்களும் எம்மக்கள் அனுப்பவில்லையா? வணங்கா மண் போன்றவற்றுக்கும் , செருப்பு சேர்க்கிறோம் போன்றவற்றுக்கு மக்கள் பணம் கொடுக்கவில்லையா? . எமது சக்திக்கு அப்பால் மேலும் பல சக்திகளால் பல காரணங்களுக்காக எமது போராட்டம் நசுக்கப்படவில்லையா? இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்க ஏதோ வசை பாடுவது போல் தான் இக்கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. :(:lol:

இவை உங்கள் கருத்து. கவிதை எனது கருத்து. கருத்துச் சொல்வதே கடவை தாண்டலாய் எண்ணினால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் யாவும் நாங்களும் வாழும் நாட்டு அரசியலாளர்கள் முதல் ஊடகங்கள் வரை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். வசையா வாழ்த்தா என்பது புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டு மனநிலையில் இருந்து பார்த்தால் வசையாகத்தான் அர்த்தப்படும்.

கருத்தை கருத்தால் கேள்வி கேட்டு வினாக்கொடுத்து தெளிவுபெறாதவரையில் இப்படித்தான் வில்லங்கள் தொடரும்.

வணங்கா மண் செருப்புக்கு இந்தப்பகுதி தொடர்பில்லாதபடியால் அதை தவிர்க்கிறேன். அந்தந்தப்பகுதிகளில் விசாரித்து விளங்கிக்கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மூட்டிய நெருப்பு விடுதலைக்கானது இன்று நீங்கள் மூட்டும் நெருப்பு அதனை அழிப்பதற்கானது.

நல்ல கற்பனை சகாரா…நெருப்பாய் வீறோடு வீரியம் கொள்க உங்கள் விடுதலை உணர்வு…..நேற்று மூண்ட நெருப்பில் விடுதலையைச் சட்டெரித்துச் சுடுகாடு அனுப்பிய பங்கு எம்மை உங்களை அனைவரையுமே சாரும்.

காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை..

ஓம் குறையவில்லை இப்படி உசுப்பி உசுப்பியே கொல்லக் கொடுத்தது எனதோ உங்களதோ அதிகம் இல்லையே…?

சிந்திய குருதியிலேயே சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டோம் .

புரிந்தீர்கள் ஆனால் பேச்சோடு மட்டும்….விசுவமடுக் கரைதாண்டாக்கனவோடு இருந்த வீல்செயாரின் நம்பிக்கையில் முக்கியமானவற்றையெல்லாம் மூழ்கடித்ததே உண்மை…..

உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

உண்மைதான் இதில் ஒளிவுமில்லை மறைவுமில்லை….உள்மனச்சாட்சிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

வீரமரணம் விழ விழ வீரவணக்கம் செய்தது வெறும் வெற்றி பெருமிதத்திலோ அல்லது இன்னும் இன்னும் வீழ்ந்து மரித்துப் போங்கள் என்று பாடை கட்டவோ அல்ல. சிங்கள இராணுவ இராட்சதனினதும் சிங்கள பெளத்த பேரினவாததின் கோரப் பிடிக்குள்ளும் சிக்கிக் கொண்ட எம் துயரவாழ்வை தம்மை ஆகுதியாக்கி மீட்க வந்த எம் பிள்ளைகளின், சகோதரங்களின் மரிப்புகள் தந்த வேதனையிலும், அந்த மரிப்புகளினூடு விடுதலை கிடைக்கும் என்று நிச்சயம் நம்பியமையினாலும் தான். இன்றைய பெருந்துயருக்கும் படுதோல்விக்கும் முழுக்காரணமும் எம் ஐக்கியமின்மையும் ஒற்றுமையின்மையுமே தவிர வேறில்லை.

வதை முகாமிலிருந்தும், சிங்கள இராணுவ வெறியர்களிடமிருந்தும், சிங்கள பெளத்த பேரினவாததிலிருந்தும், இந்திய வல்லாதிக்க பார்பன வெறியர்களிடமிருந்தும், மக்களை நிரந்தரமாக மீட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் முதல்ல் செய்ய வேண்டியது இன்று எம்மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையும், பிறழ்வுகளையும் வேறுபாடுகளையும் நீக்கி ஒற்றுமைப் படுத்துவதே. தமிழீழம் காண்பதை விட மிகக் கடினமான முன் பணி இதுதான். தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெருந்தலைவனால் கூட செய்ய முடியாமல் போன விடயம் அது, அதை செய்வதற்கான முயற்சியில் நிச்சயம் இந்தக் கவிதை தன் பங்கை ஆற்றவில்லை....மாறாக இன்னும் பிளவுகளைத் தான் கூட்டிவிட்டுச் செல்கின்றது

உங்கள் கருத்தில் உள்ள நிதானம் அடுத்த அடியை திரும்பிப்பார்க்க வைக்கிறது.

உங்கள் கருத்துடன் எனக்கு மாற்றுக்கருத்தில்லை அத்தனையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்த இடத்தில் இருந்துகொண்டு வீரம்கொள் விடுதலைநெருப்பெடு என்ற வீராப்பு இப்போதைக்கு சாத்தியமில்லையென்பதை விளங்க மறுத்து தாங்கள் மட்டும் கிணற்றில் கிடப்பது போல் அனைவரையும் அறிவுரை சொல்லி அதே பழைய மொந்தையில் போய் குந்த வைப்பதைத் தான் இஙகு சில இடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றது நீங்களும் காலச்சுவமு அகிலனின் வலைப்பூவில் முகாமுக்குள்ளிருந்து குரல்களாக எழுதப்பட்ட குற்றச்சாட்டுதலை வாசித்திருப்பீர்கள். மற்றும் திருநாவுக்கரசு அவர்கள் பற்றிய அண்மைய செய்திகள் வாசித்திருப்பீர்கள். அவர்கள் அருகில் இருந்தவரை எல்லாம் சரியென்று காலக்கவிபாடியும் கவியரங்கு செய்த போதும் தவறுகளை அறியாமலா இருந்தார்கள். இப்போ முடிந்தது என்றபின் முழுப்பழியையும் பிரபாகரன் என்ற ஒரு மனிதனின் தலையில் போட்விட்டு தங்களை நிரபராதிகள் என்று நிறுவுவதையே கவிதையில் குறிப்பிட்டிருந்தேன் பொதுமையில். ஆனால் இதை அவரவர் தமக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொண்டு துரோகம் தொழில் வசையென்று கரைகாணும் கருத்துக்களை எதுவும் செய்ய முடியாது. அது அவர்கள் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

வீரமரணம் விழ விழ வீரவணக்கம் செய்தது வெறும் வெற்றி பெருமிதத்திலோ அல்லது இன்னும் இன்னும் வீழ்ந்து மரித்துப் போங்கள் என்று பாடை கட்டவோ அல்ல. சிங்கள இராணுவ இராட்சதனினதும் சிங்கள பெளத்த பேரினவாததின் கோரப் பிடிக்குள்ளும் சிக்கிக் கொண்ட எம் துயரவாழ்வை தம்மை ஆகுதியாக்கி மீட்க வந்த எம் பிள்ளைகளின், சகோதரங்களின் மரிப்புகள் தந்த வேதனையிலும், அந்த மரிப்புகளினூடு விடுதலை கிடைக்கும் என்று நிச்சயம் நம்பியமையினாலும் தான். இன்றைய பெருந்துயருக்கும் படுதோல்விக்கும் முழுக்காரணமும் எம் ஐக்கியமின்மையும் ஒற்றுமையின்மையுமே தவிர வேறில்லை.

வதை முகாமிலிருந்தும், சிங்கள இராணுவ வெறியர்களிடமிருந்தும், சிங்கள பெளத்த பேரினவாததிலிருந்தும், இந்திய வல்லாதிக்க பார்பன வெறியர்களிடமிருந்தும், மக்களை நிரந்தரமாக மீட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் முதல்ல் செய்ய வேண்டியது இன்று எம்மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையும், பிறழ்வுகளையும் வேறுபாடுகளையும் நீக்கி ஒற்றுமைப் படுத்துவதே. தமிழீழம் காண்பதை விட மிகக் கடினமான முன் பணி இதுதான். தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த பெருந்தலைவனால் கூட செய்ய முடியாமல் போன விடயம் அது, அதை செய்வதற்கான முயற்சியில் நிச்சயம் இந்தக் கவிதை தன் பங்கை ஆற்றவில்லை....மாறாக இன்னும் பிளவுகளைத் தான் கூட்டிவிட்டுச் செல்கின்றது

ஒற்றுமையின்மையை ஐக்கியமின்மையை இன்றும் பழைய பாணியில் தங்கள் அதிகாரங்களால் அல்லது பந்தங்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் குறியாயிருப்போருக்காவுமே இந்த எழுத்து. ஏனெனில் இவர்கள் சொல்லில் தமிழீழம் காணும் பலர் உள்ளார்கள்.

இவர்கள் தங்கள் எண்ணங்களில் செயல்களில் பொதுத்தன்மையில் வர வேண்டும். கருத்துக்களை சரிவர உள்வாங்கி எல்லாரையும் தங்களுடன் இணைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். இதைவிடுத்து இவர்களை இல்லது இவர்களுக்கப் பிடித்த தலைகளை கேள்வி கேட்டால் கத்தியெடு பொல்லெடு என வரும் பழையவீராப்பை தூக்கிவீசாதவரை ஐக்கியம் என்பது????

புலம்பெயர்ந்து இந்தநாடுகளில் நாம் கண்டமாற்றம் தாவணிகளும் பாவாடைகளும் ஜீன்சுக்கு மாறியதும் கோட்சூட்டுக்கு மாறியதுமாக உள்ள சிந்தனைப்போக்கு சிதர வேண்டும்.

இங்கு எத்தனையோ கட்சிகள் ஆனால் ஒரு கட்சியோடு இன்னொரு கட்சிக்காரன் ஒன்றாயிருந்து கருத்தால் மோதி தீர்வு பெறுகிறார்கள். ஆனால் நாம் இன்னும் கேள்விகேட்காத விமர்சனம் இல்லாத ஒற்றைக்கொள்கையே உயர்த்திப்பிடிக்கிறோம். இது இனி மிஞ்சிவர்களைக்கூட மீளவிடாத முற்பணிதான்.

இந்தக்கவிதை எந்தப்பங்கையும் ஆற்றவேயில்லை அது உண்மைதான். இந்தத்தமிழினத்தையே தன் வாழ்நாள் முழுவதும் நேசித்த தலைவனைக் கொலைகாரனென வாக்குமூலம் கொடுக்கும் வள்ளலார்களுக்காகவே எழுதப்பட்டது.

Edited by shanthy

அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

காலத்தின் தேவை கருதி ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளூகிறேன்.

புலிகள் வெற்றிபெற்ற போதெலாம் எங்கள் பாட்டுடைத் தலைவர்களானார்கள். வீழ்ந்தபோது அவர்களைத் தூற்றுவது செய்வது நல்லதல்ல. கடந்த காலம் மறக்கப்படவேண்டியது. ஆனால் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. புலிகளையோ மற்றவர்களையோ குற்றம் காணுவதை விடுத்து, இந்த வீழ்ச்சியில் ஏதோ ஒரு வகையில் தமிழர்களகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டன்பதனை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இன்னொரு ஆயுதப் போரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழர் தாயகம் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் கவிஞர்கள் வீரவசனம் எழுதி மக்களை உசுப்பேற்றுவதோ, அல்லது நடந்து முடிந்துவிட்ட துன்பியல் நிகழ்வுக்குக் காரணம் கண்டு கவி வடிப்பதோ ஏற்புடையதன்று. வீழ்ந்துபோய், சோர்ந்துபோய், இழந்துபோய், அழிந்துபோய் நிற்கும் எம் மக்களுக்கு இவை ஒரு வேளை சோறு கூடப் போடப்போவதில்லை.

கவிஞர்களே, காதலைப் பாடுங்கள், அன்னைய பாடுங்கள், இயற்கையைப் பாடுங்கள், ஏன் காமத்தைக் கூட பாடுங்கள். பாவம் வீழ்ந்து போன மக்களை விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//சும்மாயிருந்த மனிதனைச் சூரியனே…,சுடர் விளக்கே…,

சுழல்காற்றே சுனாமியே என்றெல்லாம்

ஒளிவட்டம் போட்டுப் பாடைகூட ஏற்றாமல்

பகைகாலில் நெரியுண்டு

நெற்றி பிழக்கக்காரணமாய் ஆனோரெல்லாம்//

இந்த வரிகளில் குரூரமான சந்தோசம் கொப்பளிப்பது வெளிப்படையாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சனமாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்டும்.. அவர்கள் உதிரம் சிந்தி.. உடல் உருக்குலைஞ்சு.. செய்த தியாகங்கள்.. சுமந்த உயிர்வலிகள் யுகம் யுகமாக ஈழத்தமிழனாக தன்னை உணரக்கூடிய ஒவ்வொருத்தன் நெஞ்சத்தையும் உருத்திக்கொண்டு இருக்கும். விழ விழ வீரவணக்கங்கள் சொன்னோம். இப்போது வீழ்வதற்கு எவரும் இல்லை என்கின்ற நிலையில இதுவரை காலமும் வீரர்களாக வீழ்ந்தவர்கள் வீணாகிப்போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே நாம் தமிழர்களே இன்று சண்டைகளில் ஈடுபடுவது நன்மை பயப்பது அன்று. ஆகவே தயவு செய்து நாம் அனைவரும் ஒரு குடை அதாவது தமிழன் என்ற இலட்சினையுடன் ஒன்றாக திகழ்தல் நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன்.

தமிழன் என்றாலே எங்களுக்குள் சில வேற்றுமைகள் இருந்தாலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எம் எல்லோரின் கடமையும் எமது மக்களை எவ்வளவு சீக்கிரமாக வெளியில் கொண்டுவருதல் என்பதை ஒவ்வொரு தமிழனும் உறுதி கொள்ளவேண்டும்

எம்முள் சில தற்காலிக பிரிவுகள் வரும். ஆனாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு நாம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தோமானா

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

காலத்தின் தேவை கருதி ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளூகிறேன்.

புலிகள் வெற்றிபெற்ற போதெலாம் எங்கள் பாட்டுடைத் தலைவர்களானார்கள். வீழ்ந்தபோது அவர்களைத் தூற்றுவது செய்வது நல்லதல்ல. கடந்த காலம் மறக்கப்படவேண்டியது. ஆனால் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. புலிகளையோ மற்றவர்களையோ குற்றம் காணுவதை விடுத்து, இந்த வீழ்ச்சியில் ஏதோ ஒரு வகையில் தமிழர்களகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்குண்டன்பதனை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இன்னொரு ஆயுதப் போரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழர் தாயகம் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் கவிஞர்கள் வீரவசனம் எழுதி மக்களை உசுப்பேற்றுவதோ, அல்லது நடந்து முடிந்துவிட்ட துன்பியல் நிகழ்வுக்குக் காரணம் கண்டு கவி வடிப்பதோ ஏற்புடையதன்று. வீழ்ந்துபோய், சோர்ந்துபோய், இழந்துபோய், அழிந்துபோய் நிற்கும் எம் மக்களுக்கு இவை ஒரு வேளை சோறு கூடப் போடப்போவதில்லை.

கவிஞர்களே, காதலைப் பாடுங்கள், அன்னைய பாடுங்கள், இயற்கையைப் பாடுங்கள், ஏன் காமத்தைக் கூட பாடுங்கள். பாவம் வீழ்ந்து போன மக்களை விட்டு விடுங்கள்.

நன்றாக சொன்னீர்கள் , ராசராசன் .

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ளும் பொறுப்பை இனி நீங்கள் ஏற்று நடத்தலாம் இடம் வெற்றிடமாய்த்தான் உள்ளது. போட்டுத்தள்ளல் என்ற சொல்லே பல இடங்களில் தமிழனை வீழ்த்தி மூடியிருக்கிறது.

இவை உங்கள் கருத்து. கவிதை எனது கருத்து. கருத்துச் சொல்வதே கடவை தாண்டலாய் எண்ணினால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் யாவும் நாங்களும் வாழும் நாட்டு அரசியலாளர்கள் முதல் ஊடகங்கள் வரை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். வசையா வாழ்த்தா என்பது புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டு மனநிலையில் இருந்து பார்த்தால் வசையாகத்தான் அர்த்தப்படும்.

கருத்தை கருத்தால் கேள்வி கேட்டு வினாக்கொடுத்து தெளிவுபெறாதவரையில் இப்படித்தான் வில்லங்கள் தொடரும்.

வணங்கா மண் செருப்புக்கு இந்தப்பகுதி தொடர்பில்லாதபடியால் அதை தவிர்க்கிறேன். அந்தந்தப்பகுதிகளில் விசாரித்து விளங்கிக்கொள்ளலாம்.

காழ்புணர்வதையும். கருத்துக்குள்ளும் கவிதைக்குள்ளும் புதைத்துவிட்டு.

கருத்துக்கு சுநதந்திரம் இல்லையா என்று விழிப்பதால் யாரும் கண்விழிக்கபோவதில்லை. எதிரியிடம் தாயையையும் தங்கைகளையும் கூட்டிவிடுவதைதான் மாற்று கருத்து என்று சிலர் ஏற்கனவே புலம்பியிருக்கிறார்கள்.

நான் முன்பே சொன்னதுபோல்............. விட்டும்பிழைக்கலாம் விற்றும் பிழைக்ககலாம். அது உங்கள் சொந்தவாழ்க்கை அல்லது கிடைத்த வசதி. ஆனால் அதுகளை கருத்து சுதந்திரம் என்றும் கவிதை சுதந்திரம் என்றும். கூக்குரல் இடுவதால் நீங்கள் ஏதோ கவிதை எழுதி கிழித்துவிட்டீர் என்று யாரும் உங்களை பாரட்ட போவதில்லை.

உங்கள் பதில்............... யாருடைய பாராட்டுதலுக்கும் நான் எழுதவில்லை எனது எண்ணங்களை கவிதையில் சொன்னேன் அவ்வளவே என்பதாகத்தான் இருக்கும். இதுகளை நாங்கள் யாழ்களத்திற்கு வரதொடங்கிய காலங்களிலேயே வாசிக்க தொடங்கிவிட்டோம். யாரும் பாராட்வில்லையெனில் அதில் ஏதோ தவறு இருக்கின்றது என்றுதானே பொருள் மீறி காறி உமிழ்கிறார்கள் என்றால் அதற்குள் அருவருப்பு உள்ளது என்றுதானே பொருள். காலத்தை அறிந்து உங்கள் புலாடக்களை விற்பதற்கு ஏதாவது புதிய முறைகளை கண்டுபிடியுங்கள். இந்த கருத்து சுதந்திர காய்களெல்லாம் அவியும்மாதிரி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலச்சுவட்டில் வெளியான கட்டுரையை நானும்படித்தேன்..வெற்றிகள் குவிந்தபொழுது ஆகா ஓகோ என்றும் சூரியத்தேவன் என்றும் புகழ்ந்து கட்டுரையும் கவிதையும் எழுதிவிட்டு.. போராட்டம் தோற்றதும்..போராட்டத்திறகாக புறப்பட்ட பலரும் களத்திலேயே இறந்துபோக..இவர்கள் தப்பியயோடி அப்படியே பேசாமல் இருக்காமல்..அத்தனை தவறுகளிற்கும் தலைவனே காரணம் என எழுதுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது...என்னைப்பொறுத்தவ???ை பிரபாகரன் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர்..அவரை யாரும் எந்தத் தராசிலும் வைக்க அருகதையற்றவர்கள்..அது எந்த கவிஞனோ..கட்டுரையாளனாகவிருந்த

ாலும் சரி..

மிக மிகச்சரியாகச்சொன்னீர்கள் சாத்திரி அண்ணை,

தலைவரை விமர்சிக்கக் கூடிய தகுதி யாருக்குமே இல்லை; 'எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே என்று சொல்பவர்கள் கூட' தலைவனின் நெறி, அவர் காட்டிய வழி, செயற்பட்டவிதம், ஒழுக்கக் கோட்பாடு, கட்டுப்பாட்டு இயக்கம் என்பனவற்றைப் பார்த்து வியந்து போய்த்தான் இருக்கின்றார்கள்; இதைப்பார்த்து பொறுக்க முடியாத விஷமிகள் தான் விஷம் கக்கிக்கொண்டிருக்கின்றார்க??்.

'சாந்தி!.

தற்போது 'சாடல்" தேவையில்லாத ஒன்று என்பது மட்டுமே என் கருத்து. 'ஒவ்வொருவருக்கும் உரிய பணியை ஒவ்வொருவரும் செவ்வனே செய்திருந்தால் இந்த இழிநிலை தமிழனுக்கு ஏற்பட்டிருக்காது. 'புதுவை இரத்தினதுரை ஐயா அவர்களது எழுச்சிச்சொற்களால் 'எழுந்து போய் உணர்வோடு இயக்கத்தில் இணைந்தவர்கள் பலர். 'கவிஞர்கள் சோரக் கூடாது. 'சோரம் போகவும் கூடாது.

'எதுவாக நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம்" என்று சொன்னசுவாமி விவேகானந்தரின் கருத்தை முன் வைத்தால் "நாம் எழுவோம்" என்கின்ற ஒற்றைச்சொல்லும் அதை நோக்கிய முயற்சியும் நம்மை எழ வைக்கும். அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருப்பதால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

'உன்னால் முடியும்" என்ற சொல் பல இலக்கின் எல்லையைத் தொட வைத்திருக்கின்றது.

துரோகிகளின் தோலை உரிக்க வேண்டிய பணி எமக்கானது அதே வேளை நமக்குள்ளேயே ஒவ்வொருவரைச் சாடிக்கொண்டிருப்பது 'வேற்றுமைகளை இன்னும் வேரோட வைக்கும்".

எம் தலைவன் எமக்கான வரம் -மா

வீரர்கள் தமிழ் ஈழத்திற்கு உரம்".

Edited by Thamilthangai

கவிதை என்ற போர்வையில் தங்கள் மன வக்கிரங்்களை கொட்டியிருக்கிறார்கள்.

தாயக கனவோடு காவியமாகிய மாவீரர்களை கேவலப்படுத்தும் தலைவரை இகழும் மறைமுக சொல்லாடல்கள் நன்றாகவே விளங்குகின்றன.

முள்ளிவாய்க்கால் பல படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. பல சுயநலங்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. இரத்தவாடை அழுகுரல்கள் ஓயும் முன்பே நல்லூர் மடுமாதா விழாக்கள் புலம்பெயர் நாட்டு கேளிக்கைகள் நிரம்பி வழியும் திரையரங்குகள் என எமது விடுதலைவேட்கையின் அளவும் எமது ஒற்றுமையின் வலிமையும் சர்வதேசத்திற்கும் சிங்களவனிற்கும் நன்றாகவே பறைசாற்றப்படுகின்றன.

வீழ்ந்த மாவீரர்களினதும் சிறையில் வாடும் போராளிகளதும் உறவினர்கள் இப்படிப்பட்ட ஒரு இனத்திற்காகவா எம்மவர்கள் போராடச்சென்றார்கள் என ஏங்கி அழவும் வயிறெரியவும் செய்்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அழிந்தது புலிகளும் மக்களும் மட்டும் அல்ல. தமிழனின் இனமான உணர்வும்தான்.

மரம் பழுத்தால் வெளவாலை

வாவென்றழைப்பதில்லை.

இன்று ஆள கையளவு காணியில்லை.

வான்படை, தரைப்படை

கடல்படை எதுவுமில்லை.

இனி நாம் நாம் வெற்று மரத்தில்

தரிப்போமா? மகிந்தாவுடன் சேர்ந்தால்

சுகபோக வாழ்க்கையல்லோ

சிலவேளை ஒருகாலம் உங்கள்

படைவந்தால் கவிஞர்களாய்

பரணிபாடுவோம். இப்போதும்

பரணிபாடுவோம் தோற்றவர்களையல்ல

வென்றவரை.

எதற்கும் படை சேருங்கள்

உங்கள் ஆட்சிகள் நடந்தால்

பழைய சோழர்கதையெல்லாம்

தட்டி புகழ்பாடுவோம்.

பொறுத்திருங்கள் நீங்கள்

வெல்லும்வரை காத்திருக்க நேரமில்லை

அதுவரை யாரையவாது பாடி

பொற்காசுகள் சேர்த்திடுவோம்.

அகதிநாட்டின் உதவிப்பணம்

சொகுசான வாழ்க்கைக்கு போதவில்லை.

இனத்தை விற்றாவது வாழ்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரம் பழுத்தால் வெளவாலை

வாவென்றழைப்பதில்லை.

இன்று ஆள கையளவு காணியில்லை.

வான்படை, தரைப்படை

கடல்படை எதுவுமில்லை.

இனி நாம் நாம் வெற்று மரத்தில்

தரிப்போமா? மகிந்தாவுடன் சேர்ந்தால்

சுகபோக வாழ்க்கையல்லோ

சிலவேளை ஒருகாலம் உங்கள்

படைவந்தால் கவிஞர்களாய்

பரணிபாடுவோம். இப்போதும்

பரணிபாடுவோம் தோற்றவர்களையல்ல

வென்றவரை.

எதற்கும் படை சேருங்கள்

உங்கள் ஆட்சிகள் நடந்தால்

பழைய சோழர்கதையெல்லாம்

தட்டி புகழ்பாடுவோம்.

பொறுத்திருங்கள் நீங்கள்

வெல்லும்வரை காத்திருக்க நேரமில்லை

அதுவரை யாரையவாது பாடி

பொற்காசுகள் சேர்த்திடுவோம்.

அகதிநாட்டின் உதவிப்பணம்

சொகுசான வாழ்க்கைக்கு போதவில்லை.

இனத்தை விற்றாவது வாழ்வோம்.

சோழன்...மிக அருமையாக எழுதியுள்ளீங்கள். யாராவது வெற்றியின் படியில் மேலே நிற்பவனை தொழும் அவலம்

இப்போ கவிதை வடிவிலும் வருகுது சோழன். எங்களின் ஒவ்வொரு வரியும் கோணல் வாய்களுக்கு நல்ல

சூடுகள்.இன்னும் எழுதுங்கள் சோழன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மூட்டிய நெருப்பு விடுதலைக்கானது இன்று நீங்கள் மூட்டும் நெருப்பு அதனை அழிப்பதற்கானது.

நல்ல கற்பனை சகாரா…நெருப்பாய் வீறோடு வீரியம் கொள்க உங்கள் விடுதலை உணர்வு…..நேற்று மூண்ட நெருப்பில் விடுதலையைச் சட்டெரித்துச் சுடுகாடு அனுப்பிய பங்கு எம்மை உங்களை அனைவரையுமே சாரும்.

சாந்தி எப்போதுமே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சமூகம்தான் விடுதலையை வேண்டிப் போராடும். போராட்டம் என்றால் என்ன? எப்போதுமே வெற்றியை மட்டுமே நிலைநாட்டிக் கொண்டிருப்பது போராட்டம் என்ற வகைக்குள் அடங்காது. வெற்றியை பெறும் முழுமை நிலையில் நாம் இருப்போமானால் விடுதலையை வேண்டல் என்ற பேச்சுக்கே இடமில்லை. விடுதலையை அடைந்தவர்களாகவே கருதப்படுவோம். ஆளும் வர்க்கம் என்பது எப்போதுமே விடுதலையை வேண்டி நிற்கும் ஒடுக்கப்பட்ட இனங்களை மூர்க்கமாகப் பயமுறுத்தி அடக்கி ஆள்வது கண்கூடு. எங்களின் தாயகமீட்பில் ஆளும் வர்க்கத்திற்கு உதவியாக பிராந்திய நலன்களும், வல்லரசுப் போட்டிகளும் அதிகரித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம். நெருப்பாய் இருந்த விடுதலை உணர்வுதான் இருப்பை எரித்தது என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சிங்கள அரசு விரும்பும் வகையில் உரிமைகள் அற்ற சமூகமாக ஆளும் வர்க்கம் விரும்பில் மாத்திரமே மனிதர்களாக வாழக்கூடிய வர்க்கமாக இருந்திருக்கலாம் என்பதாகவே தெரிகிறது. உங்களில் இருந்து வெளிப்படும் கருத்து சிங்கள அரசு விரும்பும் வகையில் உரிமைகள் அற்ற சமூகமாக ஆளும் வர்க்கம் விரும்பில் மாத்திரமே மனிதர்களாக வாழக்கூடியவர்களாக மாறவேண்டும் என்பதை அழுத்தி நிற்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

காலத்திற்குக் காலம் இழப்புகளால் எங்கள் வளர்ச்சி அதிகரித்ததே அல்லால் குறையவில்லை..

ஓம் குறையவில்லை இப்படி உசுப்பி உசுப்பியே கொல்லக் கொடுத்தது எனதோ உங்களதோ அதிகம் இல்லையே…?

நாம் அதீத இழப்புகளைச் சந்திக்காமல் விடுதலை என்ற உணர்வை ஏந்தவில்லை உங்களுக்கு அதிகம் இல்லாமல் இருக்கலாம். இழப்புகளை இங்கு எழுதி தனிப்பட்ட வகையில் எவருடைய பச்சாதாபத்தையும் பெற விரும்பவில்லை.

சிந்திய குருதியிலேயே சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொண்டோம் .

புரிந்தீர்கள் ஆனால் பேச்சோடு மட்டும்….விசுவமடுக் கரைதாண்டாக்கனவோடு இருந்த வீல்செயாரின் நம்பிக்கையில் முக்கியமானவற்றையெல்லாம் மூழ்கடித்ததே உண்மை…..

வீல்செயரை இழுத்துக் கிண்டல் அடிக்கும் உங்களுக்கு பேச்சு மட்டும் தான் வரும். எங்களுக்குக் கண்ணீரும் கடமை உணர்வும் வரும். என்ன கொக்கரிக்கத் தெரியாது.

உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

உண்மைதான் இதில் ஒளிவுமில்லை மறைவுமில்லை….உள்மனச்சாட்சிய

  • கருத்துக்கள உறவுகள்

bangheadcomputerxa6.gif

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

bangheadcomputerxa6.gif

:unsure:

டங்குங்குக்கு மண்டை கழண்டு போச்சுது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் ஏன்? முகாம்களில் இருப்பவர்களை வடிகட்டிய பின்னர் அவர்களது சொந்த இடங்களில் அரசு குடியமர்த்தும். அவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள்.. இன்னும் நூறு தலைமுறைக்கும் தமிழீழம் வேணும் என்று தாயகத்தில் இருந்து குரல் வராமல் மகிந்த பார்த்துக்கொள்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாந்தியக்கா,

உங்கள் ஆதங்கங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையே. உங்கள் மனநிலையிலிருந்து சிந்திக்க கூடிய எந்த ஈழத்தமிழனுக்கும் உரிய கோபமே யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ இங்கே சில பிரச்சினைகள் இன்றும் உருவெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. மாற்றத்தை காணும் மனப்பக்கும் பலருக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாங்கள் அழிந்து கொண்டிருக்கின்றோம் என்ற கோபத்தை உங்கள் கவிதை சொல்கின்றது.

இருப்பினும்...

தொடர்ச்சியான எமது விமர்சனங்கள், பின்னடிப்புக்கள், அல்லது குறிப்பிட்டவர்கள் மீதான எதிர்கருத்துக்கள் எதையும் செய்து விடப்போவதில்லை. காலச்சுவடு போன்ற இணையங்கள் காலத்திற்க்கு செய்யும் இந்த இரண்டகம் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும். நாங்கள் ஈழத்தமிழர்கள் எமக்கு எம்மை தெரியும், எம் தலைவனைத்தெரியும், எம் போராட்டத்தின் நியாயப்பாடுகள் புரியும்.

ஆதலால்...

நாங்கள் மற்றவர்கள் பற்றிய அக்கறையை விட்டு விடலாம். சர்வதேசத்தை நம்பியும், இந்தியாவையும் நம்பியும் காலம் கடத்துவது கூட இன்றைய காலகட்டத்தில் வெற்று வேலை என்பது எனது கருத்து. நாம் நிழலி சொன்னது போல எம்மை திடப்படுத்த வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமையை சிதைககிறவர்கள் மீது உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் அதுவே ஆபத்தானது. நாங்கள் உணர்வின் விளிம்பில் நின்று போராடினோம். இன்று ஈழத்தமிழினம் உணர்வுகள் செத்திட ஜடமாகி கிடக்கிறது. அவர்கள் மீது தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் திணிப்பக்கப்படும் போது எதிர்மறை விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இது எனது கருத்து மட்டுமே!

ஈராறு மாதங்கள் முன் ஓர்

அழகான விவாதம்

விடுதலைப்போராட்டத்தை

தத்தெடுத்த சாந்தி அக்கா

அழகான வார்த்தைகளால்

பிய்தெடுத்தார் ஓர் துரையை

தமிழ்ப்படத்தை பாாத்து

போராட்டத்தை வளர்த்ததாய்

ஆசிரியா அவர் சொல்ல

சீறியெழுந்த சாந்திஅக்கா

சீருடையில்லா புலியானார்

களத்திலும் காரசாரமாய் வாதங்கள்.

துரைசொன்னது தவறாய் இருந்தாலும்

அக்கா எடுக்கும் வாந்தி

கேவலமாய்...............................

நிர்வாகமே நீயும் திசைமாறினாயோ?

இனத்தை விற்று பிழைப்்பதைவிட

உடலைவிற்று பிழைப்பதே மேல்

தமிழா தறிகெட்டுப்பொனாய்

எல்லாம் கூலிப்பணத்துக்காய்....

இந்த ஆட்டங்கள் தொடரும்...

நான் வாழ்ந்தால் போதும்

ரூபாய்க்கு நாலுஇணையம்

வாங்கலாம் இலவசமாயும் கிடைக்கும்

குறிக்கோள் எதுவுமின்றி வசதிக்காய்

எமக்கு எவரும் நிரந்த நண்பர்களில்லை...

எதிரிகளும் இல்லை.............

ஆடம்பரங்கள் கேளிக்கைகள்

எம் குறிக்கோள்....எம் வியாபாரங்கள்

தொடரும் பொற்காசுகள் குவியும்வரை

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும்.

மௌனித்துக் கொண்டவர்களே!

இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.

பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.

எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு,

ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து,

இந்த இனஅழிப்பிற்கு,

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று

முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.

வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்

நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.

எங்கள் ஒப்பாரிகள்.

உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,

ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்.

பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்

தன்கையே தனக்குதவி எனும் இனம்

பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,

எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,

இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.

எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?

இல்லையே

உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று

அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.

இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,

துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,

ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்

பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,

துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,

அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,

நாளாந்தச் சாவுகளையும்,

கைகால் இழப்புகளையும்,

மனநலம் குன்றுவதையும்

உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று

யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.

அப்படியாயின்,

எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை

நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..

உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்

ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.

எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,

எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.

அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.

உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று

எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.

மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.

எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.

சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா.

ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!

நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்

எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.

எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.

நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.

தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்னெ;றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!

ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்

உன் போக்கு மாறும் காலம் வரும்.

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.

எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.

வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே

விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.

சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.

இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்

கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று

காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்

முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ

வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

நன்றி இலக்கியன்

யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ

வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

ஆழமான வரிகள்.

நுணாவிலான் எனக்கு இலக்கியன் யாரென்று தெரியாது ஆனால் இக்கவிதைவரிகள் யாழில் என்னால் பதியப்பட்டவை. சில கவிதைகளை வாசிக்கும் முகமறியாத் தோழர்கள் அவற்றை தாம் எழுதும் மற்றைய தளங்களில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் முகந்தெரியாத தோழர் இலக்கியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பழைய இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52348&hl=

வல்வை அக்கா.. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதான்..! பிறிதொரு காலத்தில் யார் எழுதிய கவிதை இது என்பதில் பிரச்சினை வந்துவிடும்..! அதால அவரவர் தங்கள் கவிதைக்குள்ள தங்கட பெயர் வாற மாதிரி எழுதிக் கொள்ளுங்கோ..! :wub:

ஆனால் சகாரா அக்காவின்ர கவிதைகளை கண்டுபிடித்துவிடலாம்..! பிரச்சினையில்லை..! பின்ன.. கந்தகப்புகை அது இதுவெண்டு ஏதாச்சும் வரும்தானே..! :(

(கோவிக்காதேங்கோ.. நான் சும்மா பகிடிக்கு..! :icon_mrgreen: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.