Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08/09/2009, 21:29

சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

பழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் எழுதும் திறந்த மடல்.

ஐயா!

கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேகம் கிடையாது. சிங்கள தேசத்தின் பேரினவாத அரசியலாளர்களை எதிர்கொண்டு, தாங்கள் வேங்கை போலக் கர்ச்சித்த வீரத்தைக் கண்டு நாம் மகிழாத பொழுதில்லை.

சாபங்களுக்குட்பட்ட ஈழத் தமிழர்கள் துரோகிகள் துணையோடு தோற்கடிக்கப்படும் வரை நீங்கள் நேர் பாதையில் மட்டுமே பயணித்தீர்கள். அல்லது அவ்வாறு மட்டும்தான் பயணிக்க முடியும் என்ற வரையறைக்குள் மட்டுமே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள். அப்போது, விடுதலைப் புலிகள் பலத்தோடு களத்தில் நின்றார்கள். அந்தப் பலம் உங்கள் பாதையையும் செப்பனிட்டுத் துணை நின்றது.

விடுதலைப் புலிகளின் களமுனைத் தோல்வியும், இழப்புக்களும் உங்களைப் போலவே எங்களையும் பலவீனப்படுத்திவிட்டது என்பதில் மாறுபாடு கிடையாது. நிமிர்ந்து நின்ற நீங்களும் நாங்களும் அந்த ஒரு சில நாட்களில் நிலை குலைந்து தடுமாறித்தான் போய்விட்டோம். ஆனாலும், தலைவனின் கட்டளை எங்களை மீண்டும் நிமிர வைத்தது. நாம் முன்னரை விடவும் அதிக வேட்கையுடன் நிமிர்ந்து நிற்கின்றோம். எங்கள் தலைவன் எங்களுக்கு வழங்கிய அந்தத் திமிருடன் சிங்களத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம்.

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பிளவு படுத்திப் பார்க்க முடியாத சக்திகளாக நாங்களும் நீங்களுமே எஞ்சி இருக்கின்றோம். சிங்கள தேசத்தால் கட்டுப்படுத்த முடியாத, கைகளுக்கு எட்டாத தூரத்தில் விடுதலைப் புலிகளின் அதே இலட்சியத்துடன் புலம் பெயர் தேசத்தில் நாங்கள் தற்போது உங்களுக்குப் பலமாக எழுந்து நிற்கின்றோம், துணிந்து நிற்கின்றோம் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.

தமிழீழத்து மக்கள் இப்போது துப்பாக்கி முனையில் மவுனிக்க வைக்கப்பட்டுள்ளனர். நிர்ப்பந்தச் சிறைகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ஐந்து தமிழர்களுக்கு ஒரு படையினன் என்ற கணக்கில் சிங்களப் படை வீக்கம் பெற்றுள்ள நிலையில் தமிழர்கள் வாய் திறந்து பேசுவது சாத்தியமே இல்லை. அவர்கள் பேச மாட்டார்கள் என்பதனால், அவர்கள் மீண்டும் அடிமைகளாகிவிட்டார்கள், சிங்களத்தின் கொடுமைகளைச் சகிக்கப் பழகிவிட்டார்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. நீங்களும் அவர்களது மவுனத்தின் அர்த்தத்தை யாழ் மாநகரசபைத் தேர்தலில் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். அவர்கள் மவுனமாக இருந்தே வாக்களின்ன மறுத்துத் தமது தீர்மானத்தை நன்றாகவே சிங்கள தேசத்திற்கும், உலக நாடுகளுக்கும் ஏன் உங்களுக்கும், எங்களுக்கும் கூட உறைக்க உணர்த்தியுள்ளார்கள். அவர்கள் வாக்களிக்க மறுத்ததன் மூலம் உங்களை நிராகரிக்கவில்லை. தங்களை உரைத்துக் காட்டியுள்ளார்கள். மூவின மக்களால் நிறைக்கப்பட்ட வவுனியாவும் ஒரு தெளிவான முடிவை நமக்கு அறிவித்துத்தான் இருக்கிறார்கள்.

ஆம், தமிழீழ இலட்சியத்திலிருந்து அவர்கள் திரும்பிச் செல்லப்போவதில்லை. அவர்கள் உங்களிடமும், எங்களிடமும், உலக நாடுகளிடமும் அதைத்தான் மீண்டும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான எமது போராட்டங்களும் இப்போது மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்ட்ன. மேற்குலகின் பல நாடுகள் சிங்களத்தின் கொடூரங்களை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளன. சிங்கள தேசத்தின் மீதான அவற்றின் கண்டனங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. தமிழீழத்துக் கரு புலம்பெயர் தமிழர் கருவறையில் மெல்ல வளர ஆரம்பித்து விட்டன. அதைப் பெற்றெடுக்கும் புறச் சூழலும் அகச் சூழலும் நன்றாகவே கனிந்து வருகின்றது.

நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வவுனியா iதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள். சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொரூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம். அதனையும் எங்களிடம் விட்டுவிடுங்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மட்டுமே மவுனிக்க வைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தை மவுனிக்க வைக்கும் உரிமை எங்களுக்கும், உங்களுக்கும் கிடையாது. அது ஈழத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு. தேர்தல் களத்தில் உங்களுக்கு ஆணை வழங்கிய எமது சொந்தங்கள் அதை மீளப் பெறும்வரை யாராலும் இலட்சியத்தை மாற்றி அமைக்கவோ, அதில் சமரசம் செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது. உங்களுக்கும் எங்களுக்கும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே மக்கள் வழங்கியுள்ளார்கள்.

சிங்கள தேசத்தின் மீதான எமது மக்களின் அக்கினிப் பார்வையை திசை மாற்ற முயற்சிக்காதீர்கள். அது உங்களையும் சுட்டெரித்துவிடும். புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் போராட்டமே உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. எம்மைப் பயங்கரவாதிகளாக அறிவித்தவர்கள் கூட எமது பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்கள். எமக்காக சிங்கள தேசத்துடன் வாதிட்டார்கள். சிங்கள தேசம் துகில் உரியப்பட்டு, அம்மணமாகக் கூனி நிற்கின்றது. ராஜபக்ஷக்கள் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்ய அச்சப்பட்டு அத்தனை பயண நிரல்களையும் ரத்தாக்கிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் அந்த அசுரர்களிடம் எதை யாசிக்கச் சென்றீர்கள்? கேட்பதைக் கொடுப்பவன் சிங்களவனானால், தந்தை செல்வா போர்க் களத்தைத் திறந்துவிட்டுச் சென்றிருப்பாரா? போர்க்களத்தில் அத்தனை கொடுமைகளையும் புரிந்த திமிர்கொண்ட சிங்களத் தலைவனிடம் எப்படி ஐயா உங்களால் கைகுலுக்க முடிந்தது?

புலிகள் அழிந்துவிட்டார்கள் என சிங்கள அரசு திரும்பத் திரும்பச் சொல்வதை நீங்களும் நம்பி விட்டீர்களா? தமிழர்களை மீண்டும் ஒரு முறை விற்றுப் பிழைக்கலாம் என்று நீங்களுமா முடிவு செய்து விட்டீர்கள்?

வேண்டாம் ஐயா! வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பி வராது. இது புலிகளின் காலம் என்பதனால் வைத்த குறி தப்பாது! தமிழீழம் நோக்கிய ஈழத் தமிழர்களின் பாதையில் நீங்களும், நாங்களும் பணியாளர்கள் மட்டுமே. தலைவர்கள் தமிழீழ மக்கள் மட்டுமே. விதியை மாற்ற நீங்கள் முயற்சி செய்யாதீர்கள்! விதி உங்களை மாற்றிவிடும்.

:இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரையின் சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியவீலலை.

வன்னி மக்ககளை மீளளக்குடியேற்றும் பொறுப்பை புலத்து மக்களிடம் விட்டு விடட்டாம். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழிந்தத பின்னும் அந்தத மக்்களீன் அவல நிலையை எடுத்துச் சொல்லபுலம்பெயர் சமூகம் தவறியிருக்கிறது. வவீ வோன்ட் தமிழீழம் என்று கோசம் போாடடவர்கள் எல்லாம் இப்்பாது சமர் சஹொலீடே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் பொறுப்பை விடுங்கோஎன்று கூவிக் கொண்டிருப்பதில் என்ன பயன்???????

ஹிஹிஹிஹிஹிஹ ஐயோ ஐயோ....

இனி வரும் காலங்களில் எம்மவர்கள் இருவகையான போராட்டங்களை செய்ய இருக்கிறார்கள்!! ...

....... ஒன்று புலத்தில், மண்ணுக்கு தொடர்பற்று கற்பனைப் போராட்டம்!! ... மற்றது தம் வாழ்வை ஓட்ட, உயிர் வாழ சிங்களவனுக்கு சேவகம் செய்யும் இன்னொரு போராட்டம்!!!......

இரண்டும் ஒருபோதும் ஒரு கோட்டில் இனி செல்லப்போவதில்லை!!!!!!

சம்பந்தனுக்கு திறந்த மடல் எழுதும் இந்த ஈழநாடு மற்றும் அனைத்து புலம் பெயர் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கில் பலியானது நம் அப்பாவி தமிழ் மக்களே! வன்னியில் கலைச்சு பிடிச்சு 3 நாள் ரெயினிங் கொடுத்த போது சலாம் போட்டியள்! ஆனால் அதிலை செத்த மக்களை பற்றியோ அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய கருத்தை கூட வெளியல் சொல்லாது தடுக்கும் இந்த ஊடகங்கள் உண்மையில் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவார்களா?

அரச பயங்கரவாதம் பற்றி பந்தி பந்தியாக எழுதிக்கிழிக்கும் இந்த ஊடகங்கள் தமிழ் மக்கள் முள்ளிவாய்காகலில் பட்ட சில உண்மையான அவலங்களை வெளிக்கொணர மறுப்பது ஏன்? கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மடல்களை இராணுவத்தின் புலனாய்வின் வேலை என்று புறக்கணிக்கும் இந்த ஊடகங்கள் இனி பின் பக்கத்தில் விபச்சாரத்திற்கு விளம்பரம் போடுவதே மேலானது. உண்மைகள் நெடுநாள் உறங்காது! அன்று முடிந்தால் ஓட்டைச்சிரட்டையில் தண்ணி குடித்து சாவுங்கள்!

முன்னர் ஒரு நேரம்..காசு சம்பாதிக்க வேணுமென்றால்..புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் செய்து சம்பாதிக்கட்டும் என்று சொன்ன பாலச்சந்திரன் ஜயா அவர்கள் இன்று அளவிற்கதிகமாக தேசியம் புலிகள் என்று கதைத்தாவது தன்னுடைய பத்திரிகையை விற்கிறதற்கு முனைகிறார்..பாவம்..அவரும் எத்தனை கடை திற்ந்து எத்தனை தொழில் நடாத்தி உடைந்து போனவர்; ஏதோ இனியாவது தேசியம் கதைத்து உழைக்கட்டும்..

பி்..கு..பாலச்சந்திரன் ஜயா பற்றி எனக்கும் தெரியாது என்னுடைய கணவர் சொன்ன கருத்துக்கள் தான் இவை

Edited by சுமங்களா

டட்டடாய்ங்ங்ங் "அன்பு நேயர்களே இதோ நீங்கள் எதிர்பார்த்த திரைவிருந்து" டட்டடாய்ங்ங்ங்.............தொகுத்து வழங்குபவர் உங்ங்ங்கள் அபிமான கே.எஸ் ராஜா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வவுனியா iதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள். சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொரூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம். அதனையும் எங்களிடம் விட்டுவிடுங்கள்.

மே மாதம் வரை புலம் பெயர்ந்த நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் உட்பட பல செயற்பாடுகளைச் செய்தார்கள். அதற்கு பிறகு நீ துரோகி, அவன் துரோகி என்று ஒரு கூட்டமும், நாங்கள் தான் தாயகத்துக்கு அதிக உதவி செய்கிறோம், அவை பெரிசா ஒன்றும் செய்யவில்லை என்று இன்னொரு கூட்டமும், நான் பெரிசு , நீ பெரிசு என்று அடிபாட்டுக் கொண்டிருக்கினம். மே, யூன்,யூலை, ஒகஸ்ட் என்று 4 மாதங்களும் முடிந்து விட்டது. வன்னித்தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களும் வெளியேறவில்லை.

மற்றவர்களை நோக்கி கையை நீட்டாமல் உங்களை நோக்கி நீட்டுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைதான் அவர்களின் முதல் எதிரி, துரோகி, எல்லாமே

நான் என்ன செய்தேன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு மற்றவர்களை குற்றம் கண்டு பிடிக்க வாங்கோ

Edited by Mullaimainthan

பொறுப்பற்ற, இருந்த இடத்தில் இருந்து வெற்று கனவு காணும் கூட்டம் ஒன்றின் கட்டுரை

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அறிக்கை விடுவது போல இவ்வறிக்கை இருக்கிறது. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆழுக்கெல்லாம் ஒரு தனி மடல் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு திறந்த மடல் எழுதும் இந்த ஈழநாடு மற்றும் அனைத்து புலம் பெயர் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கில் பலியானது நம் அப்பாவி தமிழ் மக்களே! வன்னியில் கலைச்சு பிடிச்சு 3 நாள் ரெயினிங் கொடுத்த போது சலாம் போட்டியள்! ஆனால் அதிலை செத்த மக்களை பற்றியோ அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய கருத்தை கூட வெளியல் சொல்லாது தடுக்கும் இந்த ஊடகங்கள் உண்மையில் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவார்களா?

அரச பயங்கரவாதம் பற்றி பந்தி பந்தியாக எழுதிக்கிழிக்கும் இந்த ஊடகங்கள் தமிழ் மக்கள் முள்ளிவாய்காகலில் பட்ட சில உண்மையான அவலங்களை வெளிக்கொணர மறுப்பது ஏன்? கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மடல்களை இராணுவத்தின் புலனாய்வின் வேலை என்று புறக்கணிக்கும் இந்த ஊடகங்கள் இனி பின் பக்கத்தில் விபச்சாரத்திற்கு விளம்பரம் போடுவதே மேலானது. உண்மைகள் நெடுநாள் உறங்காது! அன்று முடிந்தால் ஓட்டைச்சிரட்டையில் தண்ணி குடித்து சாவுங்கள்!

அதைதானே இப்ப 1986ம் ஆண்டில் இருந்து நீங்கள் முக்கி முக்கி செய்தீர்கள். அதனால் என்ன பயன் கண்டீர்கள்...... உங்களை போல தேச நலனை விற்று வயிறுவளர்கும் ஒன்றிரண்டு பிள்ளைகளை விளம்பரமிட்ட அதே விபச்சாரிகளுக்கு பெற்றீர்கள். அதுகும் வந்த இந்தியனுடையதோ கூடியிருந்த சிங்களவனுடையதோ தெரியாது. ஆனால் தகப்பனார் பெயர்மட்டுமே உங்களுடையது.

இரண்டாம் உலக யுத்ததத்தின்போது ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கனடா எல்லையில் வைத்து சுடபட்டார்கள் அமெரிக்கா இராணுவத்தால். காரணம் புரிவதென்றால் அதற்கு நிற்சயம் ஆறுஅறிவு வேண்டும். அதில்லாவர்கள் அடம்பிடித்தால் நான் கடவுள் இல்லை அதையும் கொடுத்து விளங்கபடுத்த. மாடுகளை சாய்பதுபோல் சாய்துகொண்டு சென்று அடைத்து விட்டு செல்லடித்தபோது .............. கூட படுத்திருந்த அயல் வீட்டுகாரனை பற்றி சிந்திதிருப்பின் யாராலாலும் ஒட முடிந்திருக்காது. தான்மட்டும் வாழந்தால் போதும் என்ற பெருத்த சுயநலவாதிகளால்தான். அரசாங்கததிற்கே புலிகளை சாடி பிரச்சாரம் செய்ய முடிந்ததும் மீதியுள்Nளூரை கொல்ல முடிந்ததும். சுகம் என்றால் எல்லோருக்கும் பங்குவேண்டும் துன்பமென்றால் நீங்களே வைத்திருங்கள் என்ற இழிபுத்தியுள்ளவர்களிற்கு வாழ்வு கொடுத்து வைத்திருந்த பலனை வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் சந்தித்தார்கள். மக்கள் என்றால்............. யாரோ மேலே இருந்து குதித்தவர்கள் இல்லை எனது உறவுகள்.

முன்னர் ஒரு நேரம்..காசு சம்பாதிக்க வேணுமென்றால்..புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் செய்து சம்பாதிக்கட்டும் என்று சொன்ன பாலச்சந்திரன் ஜயா அவர்கள் இன்று அளவிற்கதிகமாக தேசியம் புலிகள் என்று கதைத்தாவது தன்னுடைய பத்திரிகையை விற்கிறதற்கு முனைகிறார்..பாவம்..அவரும் எத்தனை கடை திற்ந்து எத்தனை தொழில் நடாத்தி உடைந்து போனவர்; ஏதோ இனியாவது தேசியம் கதைத்து உழைக்கட்டும்..

பி்..கு..பாலச்சந்திரன் ஜயா பற்றி எனக்கும் தெரியாது என்னுடைய கணவர் சொன்ன கருத்துக்கள் தான் இவை

இப்படியும் இருக்குமோ???????????? :wub: :wub: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்குமோ???????????? :o :o :(

எப்புடி ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு நேரம்..காசு சம்பாதிக்க வேணுமென்றால்..புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் செய்து சம்பாதிக்கட்டும் என்று சொன்ன பாலச்சந்திரன் ஜயா அவர்கள் இன்று அளவிற்கதிகமாக தேசியம் புலிகள் என்று கதைத்தாவது தன்னுடைய பத்திரிகையை விற்கிறதற்கு முனைகிறார்..பாவம்..அவரும் எத்தனை கடை திற்ந்து எத்தனை தொழில் நடாத்தி உடைந்து போனவர்; ஏதோ இனியாவது தேசியம் கதைத்து உழைக்கட்டும்..

பி்..கு..பாலச்சந்திரன் ஜயா பற்றி எனக்கும் தெரியாது என்னுடைய கணவர் சொன்ன கருத்துக்கள் தான் இவை

இப்படியும் இருக்குமோ???????????? :lol::o :o

இறுதிக்கணம்வரை.....

எம்மோடு

எம்மக்களுக்காக

இறுதிவரை நின்றவர்களை வரிசைப்படுத்தினால்.....

திரு. பாலச்சந்திரன் அவர்கள் முதலிடம் பெறுவார்

தயவுசெய்து

நன்மை சொல்லாவிட்டாலும்

தீமையாவது சொல்லாதிருப்போம்

பின் குறிப்பு:- இது நானே நேரே கண்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாம் உலக யுத்ததத்தின்போது ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கனடா எல்லையில் வைத்து சுடபட்டார்கள் அமெரிக்கா இராணுவத்தால். காரணம் புரிவதென்றால் அதற்கு நிற்சயம் ஆறுஅறிவு வேண்டும்.//

இதுபுதுசா இருக்கு

முள்ளிவாய்க்கால் சில பத்துக்கணக்கில்.. மருதங்கேணியும் மனைவியும் பிள்ளைகளும் இருந்தாலும் இந்தச் சூத்திரம் பொருந்துமா..

இதுபுதுசா இருக்கு

முள்ளிவாய்க்கால் சில பத்துக்கணக்கில்.. மருதங்கேணியும் மனைவியும் பிள்ளைகளும் இருந்தாலும் இந்தச் சூத்திரம் பொருந்துமா..

:lol:

மருதங்கேணிக்கு இந்தச் சூத்திரம் பொருந்துமோ இல்லையோ தெரியாது. ஆனால் பிரபாகரனுக்கு நன்கு பொருந்தும். காரணம் இரு புதல்வர்களையும் அந்த மண்ணிலேயே வைத்திருந்து போராட வைத்து போர்க்களத்தில் வீழவும் செய்துவிட்டார். தானும் தப்பியோடாமல் கடைசி வரையில் அந்த மண்ணிலேயே இருந்து வீழ்ந்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாதுபோன புலிகளில் பிழைபிடித்து என்னத்தை சாதிக்கப்போகினமோ தெரியாது..! ஜேவிபி காலத்தில 50,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதை சிங்களவன் தூக்கிப் பிடிச்சிருந்தால் இண்டைக்கு அவன் முன்னணியில நிக்க வாய்ப்பில்லை..!

இவர்களின்ர கருத்துக்களில இருந்து ஒண்டுமட்டும் தெரியுது..! புலிகள் தமிழரின் பிரதிநிதிகள் என்பதையும், தமிழீழ நிழல் அரசைக் கொண்டு நடத்தினார்கள் என்பதையும் இவர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டிருக்கவில்லை..! அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால், அவசரகாலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புலிகளின் சில நடவடிக்கைகளில் பிழைபிடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்..! சரி பிழை என்பதற்கு அப்பால் ஒரு இறைமையுள்ள அரசு தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பது தவிர்க்கமுடியாதது. சிங்கள அரசு செய்யாததா? இந்திய, சீன அரசுகள் செய்யாததா? தமிழீழ நிழல் அரசு செய்தால் மட்டும் குய்யோ முறையோ என்று குதிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

எமக்கே தமிழீழத்தில் நம்பிக்கையில்லை. பிறகு மற்றவனை எப்படி உடன்பட வைப்பது?

இதுகள் எல்லாம் தமிழனா இருந்தாத்தானே தமிழீழ அரசில பற்றிருக்கும்.

இந்தியனுக்கோ சிங்களவனுக்கோ சோனிக்கோ பிறந்த கழிசடைகள் எல்லாம் கதைக்க வந்திட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி வரி வசூலிக்கிறது என்று அழுதவர்கள் இந்த நாடுகளில் வந்து மிகப் பெரிய தொகைகளை தாங்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கு வரியாக கட்டுகிறார்கள். ஆனால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். புலி செய்தால் மட்டும் குற்றம்.

கட்டாய இராணுவச் சட்டம் எத்தனை நாடுகளில் இருக்கிறது என்பது இவர்கள் அறியாததா? ஆனால் அதையே புலி செய்தால் குற்றம். (கட்டாயமாகச் சேர்க்கப்படுவதை ஆதரிக்க தப்பியோடி வந்த எங்களுக்கு எது வித அருகதைகளுமில்லை என்பது 100% உண்மை. ஆனால் அதை பிழை என்று சொல்ல இவர்களுக்கும் அருகதை இல்லை)

ஸ்டாலின் இரண்டாம் உலகப்போரின் போது இளைஞர்களை மாட்டு மந்தைகளை அனுப்புவது போல் ஜேர்மன் இராணுவத்தின் முன்னால் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தான். சொல்வார்கள்.. மூன்று பேருக்கு ஒருவரிடம் தான் துப்பாக்கி கொடுக்கப்படுமாம். ஒருவன் விழுந்தால் மற்றவன் அதை எடுத்து சுடவேண்டுமாம். போரில் இருந்து தப்புபவர்களை சுடுவதற்கென்றே ஸ்டாலின் ஒரு தனிப் படையை வைத்திருந்தான். பிரபாகரன் இடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் ஒரு தமிழன் வவுனியாவை நோக்கி செல்லமுடியாமல் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் ரஷ்யாவில் ஸ்டாலினை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள்.. காரணம் அவன் வென்றுவிட்டான். ஒரு வேளள இந்த முற்றுகையை உடைத்து பிரபாகரன் மட்டும் வென்றிருந்தால் இன்று இவர்களும் இதையெல்லாம் மறந்து புகழ்பாடியிருப்பார்களோ?

ஏதோ புலிகளின் தலைமையும் தளபதிகளும் தாங்கள் சொகுசாக இருந்துகொண்டு சாதாரண மக்களை இப்படி நடத்தியிருந்தால் நீங்கள் சொல்வது நியாயம். ஆனால் அவர்கள் வலியின் உச்சத்தை தாங்க்கிகொண்டு, தங்கள் குடும்பத்தினரின் மரணங்களையும் எதிர்கொண்டும், களத்தில் நின்று போராடிக்கொண்டும் தான் இதைச் செய்தார்கள். தங்களால் செய்யமுடியாததொன்றை மக்களிடத்தில் அவர்கள் கேட்கவில்லை. தங்களை போலவே மக்களையும் இருக்கச் சொன்னார்கள். சேர்ந்து போராடச் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கு இந்தச் சூத்திரம் பொருந்துமோ இல்லையோ தெரியாது. ஆனால் பிரபாகரனுக்கு நன்கு பொருந்தும். காரணம் இரு புதல்வர்களையும் அந்த மண்ணிலேயே வைத்திருந்து போராட வைத்து போர்க்களத்தில் வீழவும் செய்துவிட்டார். தானும் தப்பியோடாமல் கடைசி வரையில் அந்த மண்ணிலேயே இருந்து வீழ்ந்திருக்கின்றார்.

பிரபாகரனுக்கு நன்கு பொருந்தும். காரணம் இரு புதல்வர்களையும் அந்த மண்ணிலேயே வைத்திருந்து போராட வைத்து போர்க்களத்தில் வீழவும் செய்துவிட்டார். தானும் தப்பியோடாமல் கடைசி வரையில் அந்த மண்ணிலேயே இருந்து வீழ்ந்திருக்கின்றார்.

அந்த மகாபுருசரின் கொடைகளை....

தீர்ப்புகளின் கனதியை....

சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை.....

உண்மையில் உணரவேண்டுமாயின்

நானும் மகானாக வேண்டும்அதுவரை .........??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.