Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

Featured Replies

தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், எதிர் காலத்தல் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களாகிய உங்கள் கருத்தறிந்த பின்னர்தான் அரசியலுக்கு வருவேன் என்றும் அறிவித்தார்.

மேலும் பேசிய விஜய், ஒரு நெருங்கிய நண்பர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நானும் ராகுல் காந்தியும் சந்தித்து பேசினோம். என்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து ராகுல் ஆர்வமாக கேட்டறிந்தார். இளைஞர்கள் முன்னேற்றம் குறித்து பேசினோம். காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தி என்னை அழைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நீங்கள் காங்கிரசில் இணைவதை இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த விஜய், இளைஞர்களை அரசிலுக்கு இழுப்பதில் ராகுல் முழு கவனம் செலுத்துகிறார். நானும் இளைஞர்களை அரசிலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றாக இருந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை.

தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன் என்றார்.

தி.மு.க., அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எந்த அரசாவது நல்லது செய்தால் அந்த அரசோடு நானும் என் ரசிகர்களும் கைகோர்ப்பது பற்றி யோசிப்போம். அது எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார் விஜய்.

http://www.parantan.com/

  • கருத்துக்கள உறவுகள்

டமிழ் சிறி அண்ணா.. நீஙக்ள இணைத்த இணைப்பு வேலை செய்யிது இல்லை..மறு படியும் இணையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

டமிழ் சிறி அண்ணா.. நீஙக்ள இணைத்த இணைப்பு வேலை செய்யிது இல்லை..மறு படியும் இணையுங்கோ

http://www.youtube.com/watch?v=Ua7hoVIK5m0...feature=related

புயல் , இப்போ தெரிகிறதா ....... ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு 'வடிவேலு' கிடைத்தார்.

சரியா சொன்னீங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

கொமடி கிமடி பண்ணுராரோ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

இதுவரையிலும் எந்த ஆபத்துமில்லாமல் தமிழர்கள் இருப்பதாக கருதும் ஒருத்தர் இவராகத்தான் இருப்பார்

இவர் நாளைய தமிழகத்தின் தலைவர்

வாழ்த்துக்கள் தமிழகத்துக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ் நாளைக்கு முதழ் தான் எங்கட இனம் அழிஞ்சது.. அப்பேக்க இவர் என்ன செய்தவறாம்..எனக்கு உந்த பச்ச கள்ளன் மேல நம்பிக்கை இல்லை.. உவன் கருணாநிதி நம்பர் 2

Edited by kuddipaiyan26

அவர் சொன்னது தமிழர்களை இல்லை . அவர் டமிழர்களை தான் சொல்கிறார்/ இனும் கொஞ்ச காலத்தில் தமிழ் இல்லாமல் டமிழ் தான் வரும்.

இரண்டு நாட்கள் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம், ஒரு செத்தவீடு எண்டூ போச்சுது.

அங்க எல்லாம் இப்ப தமிழுக்கு வேலை இல்லை. ஆனால் நாங்கள் டமிழர்.

அரங்கேற்ற விழா சிறப்பு மலரில் ஒரு நாமத்துக்கு கூட தமிழ் எழுத்து இல்லை. எல்லாம் ஆங்கில மயம். பேசுக்கள் எல்லாம் ஆங்கிலம்.

அதிலும் பரதம் பற்றி இங்கிலிஸ்சில் ஒரு லெக்சரே வைச்சார்.

சரி செத்த வீட்ட போனா அந்தாள் 85 வயது. தமிழ் மொழி யோட அவர் உயிர் போச்சு. ஆனா செத்த வீடு வைச்சவையோ இங்கிலிசில பிச்சு உதறிச்சினம்

கிரான் டாட் , டாட் , அங்கிள் , என்று ஒரே ஸ்பீச்.

ஒண்டு தான் மிஞ்சுச்சு ஒருமூலையில தேவாரத்தை தமிழிழ பாடி சுண்ணம் இடிச்சு அவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

அப்ப எங்க தான் தமிழ், எதுக்கு தமிழ் ஏன் இந்த தலைமுறையே மொழியை இல்லாமல் செய்ய வேண்டூம் எண்டு தலைகீழா நிக்கினம்?

எத்தன பேர பாத்திட்டம்.

இவரும் பத்தோட ஒண்டு பதினொண்டு தான் கண்டியளோ!!!!!!

அடுத்த படம் ஓடுற ஓட்டத்தோட அண்ணாத்தையும் சேர்ந்து ஓடவேண்டும்.

செய்வோமா???????

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த படம் ஓடுற ஓட்டத்தோட அண்ணாத்தையும் சேர்ந்து ஓடவேண்டும்.

செய்வோமா???????

தமிழன அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்ற திமுகவின் சன், கலைஞர் தொலைக்காட்சியையே புலம் பெயர் வாழ் பல தமிழர்களின் வீடுகளில் இருக்கிறது. அதனையே நிற்பாட்ட முடியவில்லை.

தமிழன அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்ற திமுகவின் சன், கலைஞர் தொலைக்காட்சியையே புலம் பெயர் வாழ் பல தமிழர்களின் வீடுகளில் இருக்கிறது. அதனையே நிற்பாட்ட முடியவில்லை.

---------------------------------------------------

முயற்சி செய்தால் முடியும் கந்தப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

---------------------------------------------------

முயற்சி செய்தால் முடியும் கந்தப்பு!

எம்மவர்களில் பலர், காலையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் கலந்து விட்டு, மாலையில் சிறிலங்கா விளையாடுகிற துடுப்பாட்டப் போட்டி பார்க்க சிங்கக்கொடி பதித்த உடைகள் அணிந்து செல்கிறார்களே.

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று கோசமிட்டு களைத்து வீடு வந்ததும் சிறிலங்கா டில்மா தேனீர் குடிக்கிறார்களே. எவ்வளவோ குளிர்பானங்கள் இருக்க சிறிலங்காவில் தயாரான நெக்டோ குடிக்கிறார்களே. சிங்கப்பூர் எயர்லைன்ஸ் போன்ற தரமான விமான சேவை இருக்க, தரமற்ற சிங்களவனின் சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்கிறார்களே.

2007ல் மக்கள் தொலைக்காட்சியில் வந்த இந்திய மீனவர்களைக் கொன்றது சிங்களப்படைகளே என்று சிறுவன் ஒருவனின் வாக்கு மூலத்தை யாழ் உட்பட இணையத்தளங்களில் பார்த்தபின்பும் ,வீட்டில் உள்ள சன் தொலைக்காட்சியில் இந்திய மீனவர்களைக் கொன்றது புலிகள் என்று றோவின் பொய்யான செய்திகளைப் பார்த்தும் சூடு சுறணையற்று மானாட மயிலாட பார்க்கவேண்டும், என் இனத்தைப்பற்றி எப்படி வேணுமென்றாலும் சன் தொலைக்காட்சி சொன்னாலும் பரவாயில்லை என்று சன் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தருகிறார்களே.

இவர்களா திருந்தப் போறார்கள்?

Edited by கந்தப்பு

திருந்தவே இடம் இல்லை அண்ணே.

விளக்கம் இல்லாத மக்கள் கூட்டம்...

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

எல்லாமே விட்டு போகும் நிலை.

எங்கள் தமிழ்பள்ளி விடுமுறை விட்டு ஆரம்பிக்கும் முதல் நாள் வழமையாக கூட்டத்துடன் எம்மக்களுக்காக ஒரு நிமிட மௌனம் செய்வது

வழமை. இந்த கிழமை ஆரம்பிக்கும் போது அது நடக்கவில்லை.

பிறகு கேட்டபோது மன்னிக்கவும் மறந்திட்டம். அடுத்த முறை பார்ப்பம் .

இப்படியான சாதரண ஒன்றேயே வேண்டாம் என்று சொல்லி மறைக்க நிற்கும் தமிழர் நாம் எப்படி இனி உனர்வோடு ஒன்று சேரப்போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களில் பலர், காலையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் கலந்து விட்டு, மாலையில் சிறிலங்கா விளையாடுகிற துடுப்பாட்டப் போட்டி பார்க்க சிங்கக்கொடி பதித்த உடைகள் அணிந்து செல்கிறார்களே.

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று கோசமிட்டு களைத்து வீடு வந்ததும் சிறிலங்கா டில்மா தேனீர் குடிக்கிறார்களே. எவ்வளவோ குளிர்பானங்கள் இருக்க சிறிலங்காவில் தயாரான நெக்டோ குடிக்கிறார்களே. சிங்கப்பூர் எயர்லைன்ஸ் போன்ற தரமான விமான சேவை இருக்க, தரமற்ற சிங்களவனின் சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்கிறார்களே.

2007ல் மக்கள் தொலைக்காட்சியில் வந்த இந்திய மீனவர்களைக் கொன்றது சிங்களப்படைகளே என்று சிறுவன் ஒருவனின் வாக்கு மூலத்தை யாழ் உட்பட இணையத்தளங்களில் பார்த்தபின்பும் ,வீட்டில் உள்ள சன் தொலைக்காட்சியில் இந்திய மீனவர்களைக் கொன்றது புலிகள் என்று றோவின் பொய்யான செய்திகளைப் பார்த்தும் சூடு சுறணையற்று மானாட மயிலாட பார்க்கவேண்டும், என் இனத்தைப்பற்றி எப்படி வேணுமென்றாலும் சன் தொலைக்காட்சி சொன்னாலும் பரவாயில்லை என்று சன் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தருகிறார்களே.

இவர்களா திருந்தப் போறார்கள்?

இதில் எதையும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் செய்வதில்லை

யாரும் எனக்கு சொல்லவில்லை

எனக்கு தெரியும் என்னை கொல்வது எது என்று..

அதற்கு நான் எப்படி பணம் கொடுப்பேன்?????

இதில் எதையும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் செய்வதில்லை

யாரும் எனக்கு சொல்லவில்லை

எனக்கு தெரியும் என்னை கொல்வது எது என்று..

அதற்கு நான் எப்படி பணம் கொடுப்பேன்?????

என்னிட்டயையும் ஜி.ரி.வி தான் ஓலம் பாடுது. பிறகு தீபம் காரர் உந்த போராட்ட காலத்தில கொஞ்சம் உதவி செய்தவை எண்டு இப்ப ஒரு மலிவு கட்டணம் போட்டவை.ஒருவருடம் எடுத்தா ஒரு வருடம் இலவசம் எண்டு பின்ன அதையும் வீட்டுக்க கூட்டி எண்டு வைத்திருக்கிறன்.

மற்ற எல்லாம் ஊமை ரி.வி தான் .அதை பார்கிறதும் ஒரு சுகம் தான்...

உந்த பெட்டி கடைக்காரரை சன் ,ஜங்கரன்னுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு போராட்டமே நடாத்த வேனும்.

புண்ணாக்குகுகுகுகுகுகுகுகு

தமிழன அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்ற திமுகவின் சன், கலைஞர் தொலைக்காட்சியையே புலம் பெயர் வாழ் பல தமிழர்களின் வீடுகளில் இருக்கிறது. அதனையே நிற்பாட்ட முடியவில்லை.

இங்கு புலத்தில் பல தமிழ்தேசியத்தின் தூண்களின் வீடுகளிலும் சண்ணும், கலைஞருமாம். கேட்டால் அது பொழுது போக்குக்கு என்கிறார்களாம்.

இப்படித்தான் ரிரிஎன் இருந்த காலத்திலும் தீபம் தான் இவர்களின் வீடுகளிலாம்.

எப்படி, இப்படித்தன் ததே வளர்த்தனாங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்காகவா தமிழ் தேசியத்தை ஆதரித்தோம்?

இவர்களை தேசியத் தலைவருக்கு ஒப்பாகப் பார்த்தோமா?

தமிழர்களுக்கான போராட்டதின் தேவை இவர்கள் சொல்லியா தெரிய வந்தது?

இவை அனைத்துக்கும் பதில் இல்லை என்பதே. பிறகேன் இவர்கள் தான் எங்களுக்கான வழிகாட்டிகள் போல் சித்தரிக்கின்றீர்கள். அவர்கள் தப்பு செய்தால் நாமும் தப்பு செய்யலாம் என்று எவர் சொன்னது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்க முடியல சாமி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன் இப்படி தான் கருணாநிதியும் சொன்னார் , சொல்கிறார், சொல்வார். வந்து வாய்ச்சிருக்கிறாங்கள் தமிழர்களுக்கு தலைவர்களாக. அவர்களை சொல்லி குற்றமில்லை இழிச்ச வாய் மக்களை செருப்பால் அடிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லூசுக்கு வீட்டிலை வேற வேலையில்லை போல...

என்ன தலைப்பை போட்டாலும் வருகுது. தமிழ் தேசியம் எண்டு எதையோ தானே எழுதி தானே சாடுது.

நிர்வாகமும் லூசு எண்டு போட்டு அப்படியே விட்டுவிட்டது.

பாவம் உடனடி சிகிச்சை தேவை என்று மட்டும் புரியுது. அதுக்கு தொலைவிலிருந்து கருதெழுதி ஆகும்போல தெரியல்லை. பாவம் அதே நாட்டில் இருப்பவர்கள் யாராவது முயற்சி செய்து. நல்ல சைக்கோலாஜிஸ்ட் .டம் அழைத்து செல்ல முயற்சி செய்யவும். மூளை நல்ல பாதித்துவிட்டது எளிதாக பழுதுபார்க்க முடியாது ஆனால் நீண்ட நாள் சிகிச்சை செய்தால் கொஞ்சமாவது பலன் கிடைக்கும். யாரோ ஒரு தமிழ் நபர் என்று நினைத்தாவது அந்த உதவியை தயவு செய்து உரியவருக்கு செய்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(கந்தப்பு @ ளுநி 14 2009இ 02:33 யுஆ)

தமிழன அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்ற திமுகவின் சன்இ கலைஞர் தொலைக்காட்சியையே புலம் பெயர் வாழ் பல தமிழர்களின் வீடுகளில் இருக்கிறது. அதனையே நிற்பாட்ட முடியவில்லை.

---------------------------------------------------

முயற்சி செய்தால் முடியும் கந்தப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.