Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொயாட்டாவில் வந்த மாப்பிள்ளை...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kadhalil-Vizhunthen16.jpg

வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று..

வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன்.

வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன்.

அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?!

இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப் போல..!

அட இந்தா தம்பி வந்திடார். வாங்கோ தம்பி.. நான் பிள்ளை தினேசிகாவை கூப்பிடுறன்.

அதெல்லாம் வேண்டாம் அங்கிள். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள். ஆன்ரி எப்படி இருக்கிறா..??!

நாங்கள் எல்லாரும் நல்ல சுகம் தம்பி. இந்தக் கலியாண வீட்டை சிறப்பா முடிச்சால் தான் எனக்கு நிம்மதி... அது மட்டும் எனக்கு நிம்மதியில்ல.

டோண்ட் வொறி அங்கிள்.. அவாவை நான் தானே கலியாணம் கட்டப் போறன். பிறகென்ன கவலை உங்களுக்கு.

இல்ல தம்பி அவளுக்கும் உங்களோட நேரில கதைக்க விருப்பம் இருக்குமெல்லோ அதுதான் சொன்னேன்.

அவாட தானே நான் எனி தினமும் கதைக்கப் போறன். பிறகென்ன. அவாவோட ஆறுதலா கதைப்பம். இப்ப நீங்கள் சொல்லுங்கோ அங்கிள்..!

தம்பி நல்ல புத்திசாலியாத்தான் இருக்கிறீங்க. அதுசரி தம்பி கனடாவில நீங்கள் எந்த கம்பனில சொப்ட்வெயார் இஞ்சினியரா இருக்கிறீங்கள்..?!

அங்கிள் எங்கட கம்பனி கனடாவிலேயே பெரிய சொப்ட்வெயார் கம்பனி. மைக்குரோ சொப்டிண்ட பாட்னர் கம்பனி.

அப்படியே. அப்ப நீங்கள் பில் கேட்சின்ர கூட்டாளிகள் என்றுங்கோ.

அப்படியும் சொல்லலாம் அங்கிள்.

எனக்கும் பெருமையா இருக்கு என்ர பிள்ளை வாழப் போற இடம் பெரிய பெருமைக்குரிய இடம் என்றதில.

இவ்வாறு மாப்பிள்ளையும் மாமனும் தமக்குள் உரையாடிக் கொண்டிருக்கையில்..

டாட்.. நான் கொஞ்சம் அபினேஷ் கூட கதைக்கனும் என்று கொண்டு வந்தாள் தினேசிகா.

அட.. வா பிள்ளை.. உன்னைத் தான் தேடிக் கொண்டிருந்தன். என்ன விசயம் பிள்ளை கதைக்கனும். தப்பி இப்பதான் வந்திருக்குது.

அது தெரியும் டாட். முக்கிய விசயம் ஒன்று கதைக்கனும் டாட்.

டோண்ட் வொறி தினேசிகா. பேரன்ஸ் முன்னாலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கோ. ஐ டோண்ட் மைட்.

மீ ரூ. நானும் எல்லாரையும் வைச்சுக் கொண்டு தான் கதைக்கனும் என்று நினைச்சனான்.

அப்பா அம்மாக்கள் பொம்பிளையிட மாப்பிள்ளையிட சாட், போட்டோ, படிப்பு, வேலை.. தகுதி, அந்தஸ்து.. சாதி... அதுஇதென்று எல்லாப் பொருத்தமும் பார்த்து பொருத்திட்டினம். பேப்பரில எழுதி வைச்சதுகளுக்கு சுகமா பொருத்தம் பார்த்திட்டினம். ஆனால்.. என் மனசில உள்ள சிலவற்றிற்கு பொருத்தம் பார்க்கல்ல. அதுதான் நான் சிலவற்றை எல்லார் முன்னிலையிலும் சொல்லலாம் என்றிருக்கிறன். யாரும் தப்பா நினைக்கக் கூடாது.

நான் சின்னனில இருந்து பசுமை காப்பு இயக்கத்தில (Green peace) மெம்பரா இருந்து கொண்டிருக்கிறன். நாங்களும் மக்களுக்கு பல வழிகளில சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பில ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறம். ஆனால் அநேக மக்கள் அதில கவனம் செலுத்திறதா தெரியல்ல. எங்கட வீட்டில கூட யாரும் அதில கவனம் எடுக்கிறதா தெரியல்ல.

என்னைப் பொறுத்த வரை எனக்கு வாறவர் என்றாலும்.. சுற்றுச்சூழலை பாதுகாக்கிற செயற்பாடுகளில் அக்கறை காட்டிறவரா இருக்க வேணும். அபினேஷின் செயற்பாடுகளைப் பார்த்தா அப்படியா தெரியல்ல. ஆடம்பரமா கார்களில வாறதில இருந்து.. அவரிட்ட தான் ஒரு மணமகன் என்ற தோறணை இருக்கே தவிர.. வேற எதிலும் அக்கறை இருக்கிறதா தெரியல்ல. இப்படியே அவர் இருப்பார் என்றால்.. என்னால அவரோடு ஒத்துழைச்சுப் போறது என்றது கஸ்டமாத்தான் இருக்கும். இதைத்தான் நான் முக்கியமா சொல்ல வந்தனான்.

தம்பி.. தினேசிகா சொல்ல வந்ததைச் சொல்லிட்டா. இப்ப சுற்றுச்சூழல் என்றது எங்கட எதிர்கால சந்ததிகளின் வாழ்வைத் தீர்மானிக்கிற முக்கியமான விடயமாப் போச்சு. அதனை பாதுகாக்க பராமரிக்க அதில அக்கறை எடுக்கத் தெரிஞ்சிருக்க வேணும் என்ற தினேசிகாவின் விருப்பத்தில தவறிருக்கிறதா தெரியல்ல. சம்பந்தி நீங்கள் இதைபற்றி என்ன சொல்லுறீங்கள்..??!

எனக்கும் பிள்ளை சொன்னதில தப்பிருக்கிறதா தெரியல்ல. தம்பி நீ என்ன சொல்லுறா..??!

டாட்.. எனக்கு தினேசிகா விட பசுமைக் காப்புக் கொள்கை பிடிச்சிருக்குது. ஆனால் அவா போல என்னால சுற்றுச்சூழல் பற்றி கவனம் எடுத்து செயற்பாடுகளைச் செய்யுற அளவுக்கு பொறுமையில்ல. இதில நான் அவாவுக்கு பெரிசா உதவ முடியும் என்று நினைக்கல்ல.

என்ன தம்பி இப்படிச் சொல்லீட்டீங்கள்.

அங்கிள் நான் எனது மனசில உள்ளதை உள்ளபடி சொல்லிட்டன். அதன்படி தான் நான் நடந்து கொள்ள முடியும்.

அபினேஷ்.. நீங்க உங்க நிலைப்பாட்டை தெளிவா உள்ளதை உள்ளபடி சொல்லிட்டீங்க. அதை வரவேற்கிறன். ஆனால்.. அடிப்படையில நாங்க இருவரும் கருத்தொருமித்து செயற்படக் கூடிய சோடிகளாத் தெரியல்ல. அந்த வகையில எனக்கு இந்த திருமணத்தில அவ்வளவு ஈடுபாடில்லை. இப்படிச் சொல்லிட்டன் என்பதற்காக நீங்க ஆத்திரப்படவோ ஆவேசப்படவோ வேண்டியதில்லை. இப்ப போல நாங்க நல்ல நண்பர்களா இருந்து கொள்வம். எங்க பெற்றோரும் அப்படியே இருந்து கொள்ளட்டும்.

இதைக் கேட்டுவிட்டு...

என்ன பிள்ளையள் நீங்கள் ஆளுக்கொரு கருத்தோட இப்படி எங்களை தர்மசங்கடத்தில தள்ளி விட்டிட்டுயள் என்றார் சுந்தரேசன் வருத்தத்தோடு..!

அங்கிள் உங்களுக்காக நாங்கள் பொய் சொல்லிட்டு அப்புறம் எங்கட வாழ்க்கையில பொய்யா வாழ்ந்து கொண்டிருக்கிறதில அர்த்தமில்ல. அதுதான் நான் உள்ளதை உள்ள படி சொன்னன்.. என்னில கோவிக்காதைக்கு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான் அபினேஷ்.

அப்பா நானும் எனது மனசில உள்ளதையே சொன்னன். அவருக்கு என்ர கருத்தோட ஒத்துவர முடியாது எனும் போது அவரோட எனக்கும் மனசளவிலும் ஒரு இயைபு ஏற்படப் போறதில்ல. அப்படியான ஒரு வாழ்வு எங்களுக்கு அவசியமா சொல்லுங்க என்றாள் தினேசிகா தெளிவோடு.

சரி பிள்ளையள் நீங்கள் உங்கட உங்கட விருப்பப்படி முடிவுகளை எடுத்திடீங்க. இதில நாங்கள் இதுக்கு மேல தலைப்போட விரும்பல்ல. எங்களுக்கு இதால எந்த வருத்தமும் இல்ல. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க தீர்மானிச்சிட்டம் என்றதை மட்டும் நான் சுந்தரேசனுக்கு சொல்லுவன் என்றார் சந்திரகாசன்.

உங்களைப் போலவே தான் நானும் நினைக்கிறன் சந்திரகாசன்.

சரி அது போகட்டும்.. இப்ப எல்லாரும் வாங்கோ டினருக்குப் போவம் என்று கொஞ்சம் கவலையோடு விருந்தாளிகளை அழைத்துக் கொண்டு சென்றார்.. எதிர்பார்ப்பு ஈடேறாத சோகத்தை வெளியில் காட்டிக் கொள்ளாது சுந்தரேசன்.

ஆக்கம்: தேசப்பிரியன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விசயம் தான் திருமணதடதுக்கு முன்பே ஒத்து போகுமா இல்லையா என்று அறிந்து கொள்வது.ஆனால 100 வீதம் எல்லா விசயத்திலும் ஒத்து போகக்கூடிய மாதிரி அமையுமா என்பது கேள்விக்குறிதான்.சில விசயங்களில் விட்டுக்கொடுத்துதான் போக வேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய விடயத்தைச் சிம்பிளாக எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்பது என்பது எங்கள் சமூக அமைப்பில் கடினமானது. நேற்றைகளை விட இன்றும் இன்றையைவிட நாளையும் மாற்றங்களை இலகுவாக இல்லாவிட்டாலும் ஏற்று நடந்தாலே உறவுகளின் தொடர்ச்சி இருக்கும். கதையில் புனைவு என்பதைக் காட்டிலும் யதார்த்தம் வெளிப்படுகிறது.

பணம் , பொன், தகுதி, சாதகம், சமூகம் என்று எல்லாப் பொருத்தமும் அமைந்தால் திருமணம் வெற்றிபெறும் என்று நினைக்கும் பாங்கு எம்மவர் மத்தியில் எழுதாத சட்டமாக இருக்கிறது. மனம்விட்டு ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ளாத முக்கியமாக எதிரெதிர் முனைகளாக இயங்கக்கூடிய ஆணையும் பெண்ணையும் வாழ்க்கை வண்டியில் பூட்டிவிட்டு இப்படித்தான் வாழவேண்டும் என்று ஊனப்படுத்தி வைப்பதில் எந்தப்பயனும் இல்லை. திருமணத்திற்கு முன்பாக மனந்திறந்து பேசி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இன்றைய நாட்களில் புலம்பெயர்ந்த ஈழசமூகத்தின் வாழ்வு என்பது நீண்ட மனஅழுத்தங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட வாழ்வு முறைக்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த சூழலில் புலம்பெயர்ந்த வாழ்வியலுக்குள்ளும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தமுடியாமல் தாம் வளர்ந்து, வாழ்ந்த சூழலையும் தொடர முடியாமல் தெளிவற்ற நிலையில் இருக்கும் புலம்பெயர் வாழ்வு முறை என்பது மிகவும் குழப்பகரமானது. இன்றைய நாட்களில் நாளாந்தம் நாம் காணும் பலருடைய வாழ்வு களையவே முடியாத அளவுக்கு பலத்த சிக்கல்களை உடையதாகவும், முரண்பட்டதாகவும் உளுத்துக் கிடக்கின்றன. இலகுவாகத் தீர்வு காணும் பாணியை நடைமுறைப்படுத்தாத காரணமே பல இடங்களில் விபரீதமான விளைவுகளைத் தோற்றுவித்துள்ளன.

தெளிந்த காலத்தில் பேசுதல் சிறந்தது. நல்ல சிறுகதை உரையாடல் தேசப்பிரியன்.

நெடுக்குத் தம்பிதான் தேசப்பிரியனா?

நான் முதல்ல நம்மட மாப்பு தான் ரொயாட்டாவில் போய் வெறுங்கையுடன் திரும்பி வந்துட்டாரோ என நினைத்தன்

கதையில் வரும் மாப்புள்ளையும், பெண்ணும் Hybrid car போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்கள் இருக்கின்றன என்பதை அறியவில்லை போலும். காரில் வந்து இறங்காத (அதுவும் BMW, Benz போன்ற ஆடம்பர கார்கள்) ஆண்களைத் பெண்கள் வெறுத்து ஒதுக்கும் காலத்தில், உந்தப் பெண் செரியான வித்தியாசமாக யதார்த்ததிற்கு ஒவ்வாத பெண்ணாக அல்லவோ இருக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகீவன் மற்றும் வல்வை அக்கா. :rolleyes:

நான் முதல்ல நம்மட மாப்பு தான் ரொயாட்டாவில் போய் வெறுங்கையுடன் திரும்பி வந்துட்டாரோ என நினைத்தன்

கதையில் வரும் மாப்புள்ளையும், பெண்ணும் Hybrid car போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்கள் இருக்கின்றன என்பதை அறியவில்லை போலும். காரில் வந்து இறங்காத (அதுவும் BMW, Benz போன்ற ஆடம்பர கார்கள்) ஆண்களைத் பெண்கள் வெறுத்து ஒதுக்கும் காலத்தில், உந்தப் பெண் செரியான வித்தியாசமாக யதார்த்ததிற்கு ஒவ்வாத பெண்ணாக அல்லவோ இருக்கு...

சூழலுக்கு மாசு உண்டாக்காத கார்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பாவனை குறைவு. விலை உயர்வு..! அதைவிட.. மக்களுக்கு அவற்றை வாங்கிப் பாவிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவு..!

மாப்பிள்ளை ஒருவேளை Hybrid car காரில் வந்திருந்தா.. மணமகள் ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டிருக்கும்.

யதார்த்தம் என்பது விதிவிலக்குகளை உள்வாங்குவதிலும் அடங்கி இருக்க வேண்டும். சாதாரண குடும்ப வாழ்க்கையே வேண்டாம் போராளியாகிறேன், கன்னி யாஸ்திரியாகிறேன் என்று வாழ்ந்து சமூகத்துக்கு சேவை செய்த பெண்களும் இருக்கிறார்கள் தானே..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கால போவானுக்கு அடிக்கடி கனடா கடுக்குது ஏன் என்று தான் புர்pயல்ல..

அவரிண்ட பழைய காதலி கலியாணம் கட்டி லைபுல செட்டிலாகி கனடாவில இருக்கிறாவோ என்னமோ.. :lol:

:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:(

ஒன்றைத் திரிப்பித் திரிப்பிச் சொல்லிட்டா மட்டும்.. அது உண்மையாகிடாது.. மாப்பு..! எப்படி வச்சமில்ல ஆப்பு..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தை சொன்ன கதை

அபினேஷ்.. நீங்க உங்க நிலைப்பாட்டை தெளிவா உள்ளதை உள்ளபடி சொல்லிட்டீங்க. அதை வரவேற்கிறன். ஆனால்.. அடிப்படையில நாங்க இருவரும் கருத்தொருமித்து செயற்படக் கூடிய சோடிகளாத் தெரியல்ல.

இப்படி எல்லா கலியாண ஜோடிகளும் ஒத்த கருத்து வேண்டும் என்றால் கலியாணம் கட்டாமல் பல ஜோடிகள் இருக்க வேண்டி வரும்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா.

உங்களின் கதையில் வரும் கதாநாயகிக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லைப்போலும்....அப்படியா?

இது உங்களின் கதைக்கு கருத்து எழுதுபவர்களின் கவனத்திற்கு:

ஒருவர் சொல்லிய விடயத்தை திருப்பி....திருப்பிச் சொல்லி புண்படுத்துவதை நிறுத்தினால் நன்று எண்டு நினைக்கிறன்.மனதார நேசித்த இரண்டு உறவுகள் பிரிவது எண்டால் அதை விட வேறு வேதனை தேவை இல்லை மனிதனுக்கு.அதற்காக ஒரு பெண் செய்த குற்றதிற்காக எல்லாப் பெண்களும் அப்படித் தான் இருப்பார்கள் எண்டு ஒரேயடியாக குற்றம் சொல்லவும் கூடாது.பலதும் பத்துமாக இருக்கத்தானே செய்வார்கள்.

நெடுக்ஸ் அண்ணா:

கனடா எண்டாலே பெண்கள் தப்பானவர்கள் தான் எண்டு நினைத்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே விட்டுக்கொடுக்கும் மனப்பாவம், மிக முக்கியமாக சகிப்புத்தன்மை அரிதாகிகொண்டே வருகிறது. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அதனால் வரும் பிணக்குகளும் இணக்கமுமே வாழ்க்கையில் மிகச் சுவையான தருணங்கள். எல்லாமுமே ஒத்துபோய், நினைத்ததெல்லாம் அமைந்துவிட்டால் வாழ்வில் சுவை, இல்லவே இல்லை.

தனக்கென சமுதாயக் கட்டமைப்புக்குள் இதுவே முன்னோர்கள் காட்டும் வாழ்க்கை நெறி, நமக்கும் சரிபட்டுவரும் என்று ஏற்றுக்கொண்டிருந்த காலம் போய், வெளியுலக அதீத தொடர்புகளாலும், நாகரீகம் என்ற பேரில் தொற்றிக் கொள்ளும் மோகத்தாலும், தானே முடிவெடுப்பதில் தவறிருக்காது என்று நம்பிக்கை கொள்வதாலுமே மன ஏற்றத் தாழ்வுகள் பிறக்கக் காரணமாகிறது. விருப்பங்கள் எல்லையற்றது...! ஆனால் அவை நடைமுறை சாத்தியங்களா, நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வுமா? பெற்றோர்களின் அனுபவ நேர்காட்டலை சிறிதாவது சீர்தூக்கி பார்க்கலாமே போன்ற எண்ணங்கள் தற்பொழுது இளையோரிடம் குறைந்து கொண்டே வருகிறதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

தன் குழந்தைக்கு எது பிடிக்கும், பிடிக்காதென சிறிதும் அக்கறை காட்டாத பெற்றோர்களாலும், தன் பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் நவீன காலத்திற்கு ஒவ்வாதவற்றை திணிப்பவர்கள் என நினைத்து செய்யும் திருமணங்களே சீக்கிரம் தோல்வியில் முடிகின்றன.

விளைவு... ? சச்சரவுகள்...பிரிவு..!

Edited by ராஜவன்னியன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சில வேவ்வேறனா கருத்துக்கள் உடைய தம்பதிகள் ஆரம்பத்தில் முரண்டு புடித்தாலும் , பிற்காலத்தில் போகப்போக சிலவிடயங்களை விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள்.

சில வேவ்வேறனா கருத்துக்கள் உடைய தம்பதிகள் ஆரம்பத்தில் முரண்டு புடித்தாலும் , பிற்காலத்தில் போகப்போக சிலவிடயங்களை விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள்.

அது சமுகத்தில தங்களை மற்றவையள் மதிக்க வேண்டும் என்றுதான் .பிள்ளைகள் பிறந்திட்டா பிள்ளைகளுக்காக என்று இப்படி கன காரணங்கள் இருக்கும்

  • 4 weeks later...

நெடுக்ஸ் அண்ணா:

கனடா எண்டாலே பெண்கள் தப்பானவர்கள் தான் எண்டு நினைத்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.நன்றி.

பெண்கள் விசயத்தில அவர் கனடா அமெரிக்கா அவுஸ்திரேலியா இந்தியா என்று பாகுபாடு காட்டமாட்டார். கனடா தமிழ்மக்கள் என்றுவரும்போதுதான் அவருக்கு ஒரு சின்னக்காய்ச்சல் அடிக்கும். <_<

பெண்கள் விசயத்தில அவர் கனடா அமெரிக்கா அவுஸ்திரேலியா இந்தியா என்று பாகுபாடு காட்டமாட்டார். கனடா தமிழ்மக்கள் என்றுவரும்போதுதான் அவருக்கு ஒரு சின்னக்காய்ச்சல் அடிக்கும். :D

:o அது எப்படி உங்களுக்கு தெரியும்? <_<

Edited by Jil

எத்தனை நூறு கருத்துக்களை அவரோட யாழிலை பகிர்ந்து இருக்கிறன், இதுகூட தெரியாட்டிக்கு எப்பிடி <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.