Jump to content

தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

புலத்தில் பிறந்த பிள்ளைகள், தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?

எத்தனை வயதில் தமிழில் கதைக்காட்டில் , நான்கள் அதையிட்டு கவலைப்பட வேண்டும்?

தமிழ் நாடகம்,படம் பார்ப்பது நல்லது என்று சில பேர் சொல்லுரவை, அது எந்தளவிற்கு சரி?

வேற என்கே இது பற்றி மேலதிக விபரம் பெறலாம்?

நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலத்தில் பிறந்த பிள்ளைகள், தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?

எத்தனை வயதில் தமிழில் கதைக்காட்டில் , நான்கள் அதையிட்டு கவலைப்பட வேண்டும்?

தமிழ் நாடகம்,படம் பார்ப்பது நல்லது என்று சில பேர் சொல்லுரவை, அது எந்தளவிற்கு சரி?

வேற என்கே இது பற்றி மேலதிக விபரம் பெறலாம்?

நன்றி..

பிறந்ததில் இருந்தே தமிழில் கதைத்தீர்களானால் அவர்களும் தமிழில் கதைப்பார்கள். என்ரை பையன் போற வாற வேற்றினத்தவர், கடைகளில் காண்பவர்கள் எல்லோருடனும் தமிழில் தான் கதை... நான் தடுப்தே இல்லை. அவர் தமிழில் சொல்லி முடிய, அவர்களுக்கு அவர் சொன்னதில் சுருக்கதை சொல்லி விடுவேன்

இப்ப டே கெயரில அவையளோடையும் தமிழ்தான் ஆனாலும் சிறு காலத்திலேயே ஆங்கிலத்தையும் கதைக்க கற்று விட்டார். "எடே அவையோட ஆங்கிலத்தில கதை, அவைக்கு தமிழ் விளங்காது" எண்டு சொல்ல, அப்பிடியெண்டால் தான் அவரக்ளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறேன் எண்டு, அவர்கள் ஆங்கிலத்தில் கதைப்பது புரிந்தாலும் தமிழில் தான் பதில் சொல்லுவான். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி சபேஸ்,

அவருடைய வயதையும், எத்தனை,எத்தனை வயதில் அவர் இப்படி 2 மொழியையும் விளன்கிக்கொள்ள தொடன்கினவர் என்று சொல்ல முடியுமா?

மன்னிக்கவும், நான் எப்பவும் "ன்" ஒரு எழுத்துக்காக பாவிக்கிறேன்...எனக்கு அந்த எழுத்து எப்படி எழுதுவது என்று தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சபேஸ்,

அவருடைய வயதையும், எத்தனை,எத்தனை வயதில் அவர் இப்படி 2 மொழியையும் விளன்கிக்கொள்ள தொடன்கினவர் என்று சொல்ல முடியுமா?

மன்னிக்கவும், நான் எப்பவும் "ன்" ஒரு எழுத்துக்காக பாவிக்கிறேன்...எனக்கு அந்த எழுத்து எப்படி எழுதுவது என்று தெரியாது.

1.5 வயதில கொஞ்சம் தமிழ் கதைப்பார். 2 வயதில தான் நல்லா கதைக்க தெடங்கினவர். இந்த இணைப்பில் உள்ள பாட்டுகள் கதைகள் விரும்பி பார்ப்பார். மற்றபடி ரிவி இல வாற சிறியவர்களின் ஆங்கில நிகழ்ச்சிகள் பார்பார். 3 வயதில டேகெயர் போன பின்னர் (3 மாதம் தான் போக தொடங்கி) இரண்டும் கதைப்பார். அநேகமானவற்றிற்கு தமிழிற்கு உரிய ஆங்கிலமும், ஆங்கிலத்திற்குரிய தமிழும் தெரியும். நான் அறிந்த அளவில் 5-6 வயது மட்டும் எத்தினை மொழியைக் கற்பித்தாலும் இலகுவாக உள்வாங்குவார்கள்.

ங் எழுதுவதற்கு (நான் பாவிக்கும் எழுத்துருவில்) q தட்டச்சு செய்ய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எப்பவும் "ன்" ஒரு எழுத்துக்காக பாவிக்கிறேன்...எனக்கு அந்த எழுத்து எப்படி எழுதுவது என்று தெரியாது.

சிலவேளை நீங்கள் எந்த எழுத்து வடிவம் பாவிக்கின்றீர்கள் என்று தெரியாது ......

இதனையும் முயற்சி பண்ணி பாருங்கள்.

ng = ங்

nj = ஞ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலத்தில் பிறந்த பிள்ளைகள், தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?

எத்தனை வயதில் தமிழில் கதைக்காட்டில் , நான்கள் அதையிட்டு கவலைப்பட வேண்டும்?

தமிழ் நாடகம்,படம் பார்ப்பது நல்லது என்று சில பேர் சொல்லுரவை, அது எந்தளவிற்கு சரி?

வேற என்கே இது பற்றி மேலதிக விபரம் பெறலாம்?

நன்றி..

நாடகம் , படம் பார்ப்பதால் வளரும் பிள்ளை பழுதாக சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு .

எமது நாடகங்களில் , பழிக்குப் பழி , மாமியார் கொடுமை , கள்ளக்காதால் போன்றவையே முன்னணி வகிக்கின்றது.

சினிமா படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் . :(

குழந்தை பிறந்து வைத்திய சாலையால் வந்தவுடனேயே ...... தமிழில் உரையாட ஆரம்பியுங்கள் .

குழந்தைக்கு கிரகிக்கும் சக்தி அதிகம் .

பின் மூன்று வயதாக இருக்கும் போது ........ அருகில் உள்ள நல்ல தமிழ் பாடசாலையில் சேர்த்து விடுங்கள் .

மற்றைய தமிழ் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆச்சரியப் பட தக்க வகையில் தமிழ் கதைக்க ஆரம்பிக்கும்.

ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் .....ஒரே நேரத்தில் பல மொழிகளை கற்கும் திறனை உடையவை .

வளர்ந்த பின் தமிழ் கற்பிப்போம் என்று இருந்தீர்களானால் , பின் அக்குழந்தைக்கு தனது பாடசாலைப் படிப்புடன் தமிழ் மொழி எழுதிப்படிப்பது சிரமம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி உங்கள் இருவருக்கும்

நான் பாவிப்பது பாமினி--யாழில் உள்ளது..

எனக்கு இப்ப ங்,ங,ஙா,ஙி....தெரியும்..

மற்றது நான் உங்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

எங்களது மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது..ஒரளவு கதைப்பா அங்கிலத்தில, ஆனா, தமிழிலும் கதைப்பா..அது அங்கிலத்தை போல அல்ல..

பிறகு வாரேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் தமிழைப் பேசுங்கள். முக்கியமாக தாயிற்கும் பிள்ளைக்குமான மொழியை தமிழிலேயே வைத்திருங்கள். பிள்ளைகள் இலகுவாகத்தமிழ் பேசுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ் படித்து தமிழில் உரையாடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்லை உங்கடை மனுசியை பிள்ளையோடை தமிழிலை மட்டும் கதைக்க சொல்லுங்கோ?

மற்றதெல்லாம் பிள்ளைக்கு தானாய் வரும்.

Posted

எரிமலை (முதலில் உங்களின் பெயரையும் தமிழில் மாற்றுங்கள்.... பாருங்கள் என் பெயரை எவ்வளவு அற்புதமாக இருக்குது தமிழில் :rolleyes: )

அநேகமானோர் சொன்னதைப் போல், வீட்டில் முழுக்க முழுக்க தமிழில் கதையுங்கள். 10 பிள்ளைகள் பெற்ற சாகரா பாட்டி சொன்னதைப் போல், தாய் தமிழில் கதைத்தால் பிள்ளைகள் இலகுவாக தமிழிழ் கதைப்பினம். எனக்கு 4 வயதில் மகன் இருக்கின்றான். ஆரம்பத்தில் இருந்து தமிழில் உரையாடுவதால், தமிழில் சரளமாக கதைக்கின்றான். ஆங்கிலம் இப்பதான் கொஞ்ச கொஞ்ச சொற்கள் பழக ஆரம்பித்து இருக்கின்றான். தன் வயதை ஒத்த பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்க முயல்கின்றான். எம் வீட்டில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை எதுவும் இல்லை. இடையிடையே பார்க்கும் தமிழ் திரைப்படங்களைத் தவிர (அவையும் நல்லதா என விமர்சனம் பார்த்தே வீட்டில் போடுகின்றோம்) வேறு தமிழ் அசையும் ஒளிப்படங்கள் எதுவும் இல்லை. அதனால் தமிழை எம் ஊர் மொழியில் அழகாக கதைக்க கற்றுக் கொண்டுள்ளான். வீட்டில் தமிழ் பாடல்கள் அதிகமாக கேட்பதும் அவன் தமிழ் மொழியை நாடுவதற்கு ஒரு காரணம். பாடசாலை போய் ஒரு வருடத்துக்குள் நன்றாக ஆங்கிலம் படித்து கொள்வார்கள்....எனவே ஆங்கிலம் கதைக்க பழக மாட்டார்கள் என்று அச்சம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி உங்கள் இருவருக்கும்

நான் பாவிப்பது பாமினி--யாழில் உள்ளது..

எனக்கு இப்ப ங்,ங,ஙா,ஙி....தெரியும்..

மற்றது நான் உங்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

எங்களது மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது..ஒரளவு கதைப்பா அங்கிலத்தில, ஆனா, தமிழிலும் கதைப்பா..அது அங்கிலத்தை போல அல்ல..

பிறகு வாரேன்

உங்களது பிள்ளை விரைவில் தமிழ் படித்து , யாழ் களத்தில் அறிமுகமாகும் போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க காத்திருக்கின்றோம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தேவையான கேள்வி . அருமையான பதில்கள். தாய் மொழி தாயிடமிருந்தே இலகுவாகக்கற்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்

எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, மற்றவர்களுக்கும் பயன்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்களுக்கு உள்ள நடைமுறை பிரச்சனை- வேறை ஆட்களுக்கும் இருக்கக் கூடும், பிள்ளை பெரும்பாலன நேரம், தமிழில் கதைக்க சந்தர்பம் கிடைப்பதில்லை, அவவுடைய பெரும்பலான பகல் பொழுதில் வேற்று மொழியில்தான் கதைக்கிறா, அதை எப்படி ஈடுகட்டலாமோ தெரியவில்லை.

எரிமலை-வல்க்கனே, எனக்கு தமிழில், தட்டச்சு தெரியாத நேரத்தில் வைத்தது, அதைவிட, எரிமலை என்று சொல்லும்படி எனக்கு புதுமையாய், புரட்சியாய் எதுவும் தெரியாது. எனக்கு வல்க்கனே கொஞ்சம், சாது போல இருக்குது..

என்னுடைய தருமபத்தினி, வடிவாக தமிழ் கதைப்பா, பிள்ளையோடும் தமிழில்தான் கதைக்கிறவா

நன்றி வேறு தலையங்கத்தில் வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எரிமலை (முதலில் உங்களின் பெயரையும் தமிழில் மாற்றுங்கள்.... பாருங்கள் என் பெயரை எவ்வளவு அற்புதமாக இருக்குது தமிழில் :unsure: )

அநேகமானோர் சொன்னதைப் போல், வீட்டில் முழுக்க முழுக்க தமிழில் கதையுங்கள். 10 பிள்ளைகள் பெற்ற சாகரா பாட்டி சொன்னதைப் போல், தாய் தமிழில் கதைத்தால் பிள்ளைகள் இலகுவாக தமிழிழ் கதைப்பினம். எனக்கு 4 வயதில் மகன் இருக்கின்றான். ஆரம்பத்தில் இருந்து தமிழில் உரையாடுவதால், தமிழில் சரளமாக கதைக்கின்றான். ஆங்கிலம் இப்பதான் கொஞ்ச கொஞ்ச சொற்கள் பழக ஆரம்பித்து இருக்கின்றான். தன் வயதை ஒத்த பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்க முயல்கின்றான். எம் வீட்டில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை எதுவும் இல்லை. இடையிடையே பார்க்கும் தமிழ் திரைப்படங்களைத் தவிர (அவையும் நல்லதா என விமர்சனம் பார்த்தே வீட்டில் போடுகின்றோம்) வேறு தமிழ் அசையும் ஒளிப்படங்கள் எதுவும் இல்லை. அதனால் தமிழை எம் ஊர் மொழியில் அழகாக கதைக்க கற்றுக் கொண்டுள்ளான். வீட்டில் தமிழ் பாடல்கள் அதிகமாக கேட்பதும் அவன் தமிழ் மொழியை நாடுவதற்கு ஒரு காரணம். பாடசாலை போய் ஒரு வருடத்துக்குள் நன்றாக ஆங்கிலம் படித்து கொள்வார்கள்....எனவே ஆங்கிலம் கதைக்க பழக மாட்டார்கள் என்று அச்சம் வேண்டாம்.

:unsure::(:D:(:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழில் கதைக்க என்ன செய்ய வேண்டும்?

நல்ல கேள்வி

தமிழில் கதைக்க வேண்டுமாயின்

1) தமிழ் தெரியவேண்டும்

2) வாயை திறக்கவேண்டும்

தமிழனை வளருங்கள் தமிழ் தானாக வளரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் தமிழில் கதையுங்கள் பிள்ளைகள் தானாகவே கதைக்கத் தொடங்கும். 3 வயதிலிருந்து பிள்ளைகளு;கு தமிழ் சொல்லிக் கொடுக்கத் துவங்கலாம்.தமிழைப் பேசுவதால் வாழிடத்து மொழி படிப்பது கடினம் என்று சொல்பவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்.என்னுடைய பிள்ளைகள் தமிழ் ஜேர்மன் ஆங்கில மொழிகளில் நன்கு சரளமாகக் கதைப்பார்கள்.இதை விட பிரெஞ்சு இலத்தின் மொழிகளையும் பாடசாலையில் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிறுவயதில் குழந்தைகள் எத்தனை மொழிகளையும் உள்வாங்கிக் கொள்வார்கள்.கவலையை விடுங்கள் பிள்ளை தமிழில் பேச வேண்டும் என்ற உங்களது ஆர்வமே பிள்ளையைத் தமழில் பேச வைக்கும்.

Posted

முதல்லை உங்கடை மனுசியை பிள்ளையோடை தமிழிலை மட்டும் கதைக்க சொல்லுங்கோ?

மற்றதெல்லாம் பிள்ளைக்கு தானாய் வரும்.

சரியா சொன்னீர்கள் கு சா அண்ணை. பிறப்பு முதல் ஆரம்ப பாடசாலை வரைக்கும் நன்றாக தமிழ் கதைக்கின்ற பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை சென்ற பின் தமிழையே கதைக்காமல் விட்டது மாத்திரமன்றி கொன்னைத்தமிழ் கதைக்கின்றனர். தாய் தந்தையரும் அவர்களுடன் கல்லுத்தெருவில் பேணி உருட்டிவிட்ட மாதிரி உடைந்த பாசை கதைப்பதாலும் பிள்ளைகள் அப்படியே தமிழை கையை விட்டு விடுகின்றனர்.

பிள்ளை வேற்று மொழி பேசினால் தான் மரியாதையாம். அதுவும் தமிழனோடு சினேகிதம் வைக்காமல் வேற்று இனத்தவனோடு சினேகிதம் வைப்பது தானாம் மரியாதையாம். சோறு சாப்பிடாமல் வேற்று இனத்து சாப்பாடு சாப்பிடுவது தானாம் மரியாதையாம். இது பெற்றோரின் நிலை.

அடுத்தது சில பெற்றோர் " நான் தமிழர்களுடன் பழகுவதில்லை என் பிள்ளைகளையும் விடுவதில்லை" என சொல்லுவதையும் நான் கேட்டிருக்கின்றேன். இது தானாம் பாசனாம்.

என்ன கன்றாவியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் வணக்கம்..

இதில் கருத்து கூறியவர்கள், எல்லோரினதும் கருத்து ஒன்றாக இருப்பது நன்றாயிருக்கிறது. புலவரின் கருத்துக்கள் தொம்பூட்டுகின்றன. மற்றையோரினதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிந்த தமிழ் பெற்றேர் பலர் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை, கதைப்பதை ஊக்கப்படுத்துவதுடன், அதையிட்டு சந்தோசமும் அடைகிறார்கள்.அதில் தவறேதும் எனக்கு தெரியவில்லை. அது ஒருவகையான, சந்தோசம்,திருப்தி என்றுதான் நான் சொல்லுவேன். நான் இருந்த இடத்தில் நாங்கள் ஆங்கிலம் கதைத்தால் அதில் எந்தனை பிழை என்று பார்க்க கனபேர் இருந்தவை..அதில சில பேர்..தங்கள் சொல்லுகிற உச்சரிப்புதான் சரி என்று மற்றாக்களை பகிடி பண்ணுவினை, அப்படியான பின்புலத்தில் இருந்துவந்தவை தங்கட பிள்ளைகள் ஆங்கிலத்தில் கதைப்பதை பார்த்து சந்தோசப்படுவதில் தவறில்லை. புலத்தில் தமிழ் வேண்டும்-எங்கள் பிள்ளைகளுக்கு ஆனால் அது அந்தந்த நாட்டு தாய்மொழிக்கு மாற்றீடாக அல்ல. தமிழ் பிள்ளைகளுடன் பழகவிடாமல் உள்ள பெற்றேரைப்பற்றி..அது 100 வீதம் பிழையானது என்று சொல்ல மாட்டேன், எனக்கு தெரிந்த நல்ல தமிழ் பற்றுள்ள குடும்பம் ரெறண்டோவில் வீடு மாறியவர்கள், தமது மகனின் நண்பர்களால்,எனக்குத்தெரிய--உறவினர்கள் சொன்னது..ஒரு வீடு எரிந்தது/எரிக்கப்பட்டது இதுபோன்றதொரு காரணத்தால்..சில உயிர்களுமே போயிக்கு..

யாரையும் மனம்னோகவென சொல்லவில்லை..தெரிந்ததை பகிர்ந்தேன்..

Posted

என் அயலில் வசிக்கும் ஒருவர் பெருமையாகச் சொன்னார் தன் பிள்ளை தமிழல் கதைக்க வேண்டம் என்பதற்காகவே தமிழ் ரிவி எடுத்திருப்பதாக (சண் ரிவி) சண் ரிவியைப் பார்த்துத் தமிழ் கதைப்பதற்குப் பதிலாக தமிழ் கதைக்காமலே இருக்கலாம்.

இங்கு அனெகமானொர் குறிப்பிட்டது பொல வீட்டில் குழந்தையுடன் தமிழ் கதைத்தால் பிள்ளை தானாகவே கதைக்கும்.

ஏனைய நாடகளுடன் ஒப்பிடும் போது கனடாவில் தமிழ் கதைக்கக் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். இங்கிலாந்தில் நிலமை மிகவும் கவலைக்கிடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.