Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவரமணி

Featured Replies

சிவரமணியின் கவிதைகள் சிலவற்றை எனது பாடசாலை நாட்களில் படித்திருக்கிறேன். நல்ல கவிதைகள்.இவர் எண்பதுகளில் புளொட் அல்லது ஈ.பி்.ஆர்.எல்.எவ். அமைப்பில் இணைந்து இயங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்..சரி

யாகத் தெரியாது இவரைப்பற்றிய விபரங்கள் தெரிந்த யாராவது யாழ் களத்தில்இருந்தால் தெரியப்படுத்தவும்..அறிய ஆவலாயிருக்கிறேன்..அவரிற்கு என்ன மனவிரக்தியோ தெரியாது 90ம் ஆண்டளவில் தன்னுடைய கவிதைகளையெல்லாம் கொழுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாராம்.இங்கு அவரின் கவிதை ஒன்றை இணைக்கிறேன் அவர் 83ம்ஆண்டு எழுதிய கவிதையொன்று இன்றை காலத்துடனும் ஒத்துப்போகின்றது

எழுதிய ஆண்டு: 1983

எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

புத்திசாலித்தனமான

கடைசி மனிதனும்

இறந்து கொண்டிருக்கின்றான்…

கேள்வி கேட்பதற்கான

எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்

இருட்டின் உறுதியாக்கலில்

உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்

அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை

சேலை கட்டிக் காப்பாற்றிய

சில நாகரீகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன

முடிவுகளின் அடிப்படையில்

வெற்றி பெற்றவர் வரிசையில்

யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?

தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்

சந்திக்குச் சந்தி

தெருக்களில் காத்துள்ளனர்

வினாக்களும் விடைகளும் முடிவுகளும்

யாவருக்கும் முக்கியமற்றுப் போனது

“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்

வாழ்வதை மறந்தோம்” என்பது

இன்றைய எமது

கடைசிப் பிரகடனமாயுள்ளது.

கவிதை வெறிமுட்டி

நான்

கவிஞன் ஆகவில்லை

என்னை வெறிமூட்ட

இங்கு

ஓராயிரம் சம்பவங்கள்

அன்று நான்

கவிதைகள் வரையவில்லை

என்னிடம் இருந்தது

கறுப்பு மையே

இன்றோ சிவப்பு மையால்

வரைகின்றேன்

என் உள்ளத்தை

உன் உள்ளத்தை

தோல்வியுறா தர்மத்தின்

இறுதித் தீர்ப்புகளை

நானொரு பிறவிக்

கவிஞன் அல்ல

என்னை வெறிமூட்ட

இங்கு

ஓராயிரம் சம்பவங்கள்

நானோ

இருபதாம் நூற்றாண்டின்

வசந்தத் தென்றல் அல்ல.

ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற

அவர்களின் அழகிய காலையின்

பாதைகளின் குறுக்காய்

வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத

முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த

அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும்

காரணமாய்

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களாயில்லாது போயினர்.

Edited by சுமங்களா

1983இலேயே தமிழனின் தலைவிதியை அக்கா துல்லியமாக எழுதிவச்சுப்போட்டு போயிருக்கிறா.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாத சேதிகளில் உள்ள சிவரமணியின் கவிதைகள் இரண்டு.. சுபமங்களா இவற்றையும் படித்திருப்பீர்கள்.

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்

பிரேதத்தைப் போன்று

சிதைக்கப்பட்டேன்

ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்

இரத்தம் தீண்டிய கரங்களால்

அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை

மேகத்திற்குள்ளும்

மண்ணிற்குள்ளும்

மறைக்க எண்ணிய வேளையில்

வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.

அவர்களின்

குரோதம் நிறைந்த பார்வையும்

வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்

என்னைச் சுட்டெரித்தன.

எனது

ஆசைகள் இலட்சியங்கள்

சிதைக்கப்பட்டன.

அவர்களின் மனம்

மகிழ்ச்சி கொண்டது.

அவர்களின் பேரின்பம்

என் கண்ணீரில்தான்

இருக்கமுடியும்.

ஆனால் என் கண்களுக்கு

நான் அடிமையில்லையே

அவர்களின் முன்

கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு

ரசித்தனர் அவர்கள்

என்றைக்குமாய் என்தலை

குனிந்து போனதாய்க்

கனவு கண்டனர்.

ஆனால்

நான் வாழ்ந்தேன்

வாழ்நாளெல்லாம் நானாக

இருள் நிறைந்த

பயங்கரங்களின் ஊடாக

நான் வாழ்ந்தேன்

இன்னும் வாழ்கிறேன்.

------------------------

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்

தோழர்களே

நாங்கள் எதைப் பெறுவோம்?

இன்பமும் இளமையும்

இழந்து நின்றோம்

ஏக்கமும் ஏழ்மையும்

சுமந்து வந்தோம்

நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்

சுதந்திரம் என்றீர்

எம் இனம் என்றீர்

எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்

விடுதலை வந்தது இன்று

சுதந்திரம் கிடைத்தது

எனினும்

தேசங்கள் பலதிலும் மனிதர்கள்

இன்னும்

பிச்சைப் பாத்திரங்களை

வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

நாமும் பெறுவோமா

தோழர்களே

பிச்சைப் பாத்திரத்தோடு

நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்

எனினும்

வேண்டவே வேண்டாம்

எங்களில் சிலரது விடுதலை

மட்டும்;

விலங்கொடு கூடிய

விடுதலை மட்டும்

வேண்டவே வேண்டாம்!

தோழர்களே

விலங்குகளுக்கெல்லாம்

விலங்கொன்றைச் செய்தபின்

நாங்கள் பெறுவோம்

விடுதலை ஒன்றை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான வரிகள்..கருத்து விளங்காவிடினும்-முழுமையாக

என்னைக் கொல்லும் சிறுமை....

அதில் உள்ள அவாவை பற்றிய விபரங்களால்,கருத்து பதியாமல் விட நினைக்கும் பச்சோந்தி மனம்..

சொண்ணாலும் குற்றமடா

சொல்லாவிட்டால் துக்கமடா..

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Sumangala, I don't have Tamil font to reply this.

  • 7 months later...

சொண்ணாலும் குற்றமடா

சொல்லாவிட்டால் துக்கமடா..

உண்மைதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் கனநாளைக்கு இந்தியாவில் காலம்தள்ளாதையுங்கோ. தற்போது தமிழ் எழுத்துரு தொலைந்ததுபோல் தமிழையும் தொலைத்துவிடுவீர்கள்.

சிவரமணியின் கவிதைப் பதிவுகள் நன்றாக உள்ளன.

யாரவர்?

தங்களுக்கு வேண்டப்படாதவராம் என்று சிலர் கதைச்சுக்கொள்ளுறீனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவரமணியின் கவிதைப் பதிவுகள் நன்றாக உள்ளன.

யாரவர்?

ஈபி யில் இருந்தவராம் புலிகள் தங்கள் கூத்தை பொறுக்க முடியாது பாண்ட் பண்ணுனதுக்கு எதிராக, அறம்பாடிய கவிதைகள் இவை, புலவரின் அறம்பாடலில் தமிழீழமும் 50000 உயிர்களும் எரிஞ்சு நாசமா போச்சு. :rolleyes::o:blink:

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் கனநாளைக்கு இந்தியாவில் காலம்தள்ளாதையுங்கோ. தற்போது தமிழ் எழுத்துரு தொலைந்ததுபோல் தமிழையும் தொலைத்துவிடுவீர்கள்.

இளஞாயிறு, சில மாதங்களாக, நோர்வே லண்டன் நோர்வே என்று வாழ்வு சுழலுது. நடிகர் சந்கத்தில் அங்கத்தவராக இணைத்துள்ளனர். எனது கடன்களைக் கட்டவும் எனது எழுத்து ஆய்வுகளுக்கான பணத்தை திரட்டவும்வேணும். அதுவரை திரைப்படங்களில் நடிக்க உள்ளேன். ஒரு சிங்கள கவிஞனாக இருந்தால் அல்லது தமிழக கவிஞனாக இருந்தால் எங்கள் எழுத்து உழைப்பை சமூகம் சுரண்டியிருக்காது. எங்கள் உழைப்புக்கு ஊக்கமும் கைமாறும் கிடைத்திருக்கும். நான் ஈழத்து தமிழ் கலைஞனல்லவா? please support young writers artists and poets.

எனது ஆக்கங்களை இணையத்தில் இட்டபோது இரண்டு தடவையும் அதே 15 பேர்தான் பணம் செலுத்தினார்கள். இப்போ நோர்வீஜிய கலாச்சார அமைச்சு நிறுவனம் தயாரித்த எனது நாடக பிரதியையும் ஆடியோவையும் யாழில் ஏற்றலாமா விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்டில் தமிழ் நன்றாக வளற்ச்சி அடைகிறது இளஞாயிறு. மிக நல்ல இலக்கிய கலை முயற்ச்சிகள் வெற்றி பெற்றுள்ளது. அங்கு கலையை எழுத்தை முழுநேர வேலையாகக் கொள்ள முடியும். எழுத்தை முழுநேர பணியாக கொண்டு வாழமுடியும். கூட்டங்களுக்கு அழைத்தால் எனக்கே 5000 - 10000 வரை பணம் தருகிறார்கள் என்றால் பாருங்கள்.

தோழி சிவரமணி பற்றி நானும் எழுதவேணும் அவர் எனது தோழி கவிஞர் அமரர் செல்வியோடு நெருக்கமாக இருந்தார். போராளிகள் செய்த மிகப் பெரிய தவற்றில் செல்வியின் கொலையும் ஒன்று. இயக்கம் சாராத விடுதலை மனித உரிமை ஆர்வலராக இருந்தார். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இருவருமே விடுதலை விரும்பிகள் ஆனாலும் பல்வேறு இயக்க போராளிகளின் மனித உரிமை மீறல்கள் அவர்கள் ஆதரிக்கவில்லை.சிவரமணி பற்றி விரிவாக எழுத விருப்பம்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் நன்று!!

கவிஞரே முடிந்தால் இவர்கள் இருவரையும் பற்றி கொஞ்சம் விபரமாக எழுதவும்.(யாழ் அனுமதித்தால்)

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே முடிந்தால் இவர்கள் இருவரையும் பற்றி கொஞ்சம் விபரமாக எழுதவும்.(யாழ் அனுமதித்தால்)

நேரமுள்ளபோது நிச்சயம் எழுதுவேன். நீங்கள் இளைய தமிழ் எழுத்தாளர்களதும் கவிஞர்களதும் ஆக்கங்கலைப் படிக்கும்போது அவர்களது உழைப்பை அனுபகிகிறதை உணரவேண்டும் என்பதையும், உங்களுக்கு திருப்தி அளிக்கிற படைப்புகளுக்காக இளம் படைப்பாளிகளுக்கு அதற்க்கான கொடுப்பனவுகளை வளங்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். நானறிந்த வரைக்கும் இலங்கைத் தமிழர்களைப்போல கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சுரண்டும்போக்கு தமிழக தமிழர் சிங்களவர் உட்பட வேறு இனங்களிடையே இல்லை.

Edited by poet

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அவமானப்படுத்தப்பட்டவள்

(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)

selvi-sivaramani-eelam-tamils-ltte-podicஉங்களின் வரையறைகளின்

சாளரத்துக்குப் பின்னால்

நீங்கள் என்னைத் தள்ள முடியாது.

இதுவரை காலமும்,

நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து

வெளியே எடுத்து வரப்பட்ட

ஒரு சிறிய கல்லைப் போன்று

நான்

என்னைக் கண்டெடுத்துள்ளேன்

என்னுடைய நாட்களை நீங்கள்

பறித்துக் கொள்ள முடியாது.

கண்களைப் பொத்திக் கொள்ளும்

உங்கள் விரல்களிடையே

தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்

ஒரு குட்டி நட்சத்திரம் போன்று

எனது இருத்தல்

உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்

இனியும் என்ன

தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்

நான்

பிரசன்னமாயுள்ளேன்

என்னை

அவமானங்களாலும்

அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,

உங்கள் எல்லோரினதும்

நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது

ஒரு அழுக்குக் குவியலாய்

பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை

அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்

நிராகரிக்கப்படும் வரை

உங்களின் எல்லாப் பாதைகளும்

அழுக்குப் படிந்தவையே.

சிவரமணி

'யுத்த கால இரவொன்றில்...'
--------------------------------

'உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று,
நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’

இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.

இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.

'ஒரு சிறிய குருவியினுடையதைப்போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்!’

1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது!

வாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.

'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்
தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது’

என சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது!

போராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரும், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.

சட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும் அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.

ஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்!’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் தும், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது!

தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...

'பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்!’


 

 

 

2. முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .



3. எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.



4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.

காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.

எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.

புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.



5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்



6. எழுதிய ஆண்டு: 1983

நன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கின்றான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரீகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்

வினாக்களும் விடைகளும் முடிவுகளும்
யாவருக்கும் முக்கியமற்றுப் போனது
“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்
வாழ்வதை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.

கவிதை வெறிமுட்டி
நான்
கவிஞன் ஆகவில்லை
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்று நான்
கவிதைகள் வரையவில்லை
என்னிடம் இருந்தது
கறுப்பு மையே
இன்றோ சிவப்பு மையால்
வரைகின்றேன்
என் உள்ளத்தை
உன் உள்ளத்தை
தோல்வியுறா தர்மத்தின்
இறுதித் தீர்ப்புகளை

நானொரு பிறவிக்
கவிஞன் அல்ல
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல.

ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.



7. எனது பரம்பரையம் நானும்

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.



8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு

 

 

 

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

 

இனியும் என்ன

தூக்கியயறியப்பட முடியாத கேள்வியாய்

நான் பிரசன்னமாயுள்ளேன்

என்னை

அவமானங்களாலும்

அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

 

ஆனால்

உங்கள் எல்லோரினதும் கனவுகளின் மீது

ஒரு அழுக்குக் குவியலாய்

பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை

அசுத்தம் செய்கிறேன

 

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர் :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.