Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்........

கவிதை - இளங்கவி.....

மனதிலே பட்டாம் பூச்சிகள்

பறக்கும் நினைவுகள்.....

காளைகள் பேச்சில்

கிறங்கும் உணர்வுகள்.....

பொத்தி வைப்பதில்

பெட்டகம் போல் ஆசைகள்......

காதல் நினைவில்

தென்றல் போல் குளிர்ச்சிகள்....

திராட்சை கண் கொண்டு

ஓர் தினுசாய்ப் பார்ப்பாள்...

நாம் ஓடிய சயிக்கிளும்

உடைந்து விழுந்திடும்....

ஒழித்து நின்று

மெதுவாகச் சிரிப்பாள்

பசியால் ஒட்டிய வயிறும்

உணவால் நிரம்பிடும்....

ஒரே பார்வையில்

வா என்றும் சொல்லுவாள்.....

போ என்றும் கலைப்பாள்......

அது புரியாமல் நம்

சித்தம் கலங்கிடும்......

இப்படிச் சிக்க வைத்து

சிரிக்க வைக்கும்

வைத்தியம் தெரிந்தவள்.....

விடுதலை உணர்வில்

பைத்தியம் ஆனாள்....

சிரிக்க மறந்து

சிலிர்க்க நினைத்தாள்...

ஆம்... பெண் புலியாய் மாறி

சீறிப்பாய்ந்தாள்......

எதிரியையும் சிதறடித்தாள்....

சிக்க வைத்து சிரிக்க வைத்தவள்

சிலிர்த்து நின்று சிந்திக்க வைத்தாள்......

கருத்தரிக்கும் பசுபோல் அன்றி...

வேட்டைக்கு அலையும் கரும்புலியானாள்....

திராட்சைக் கண்களில்

செந்தணல் கொண்டாள்.....

சொக்கவைக்கும் கன்னங்களில்

மறைப்புப் பூச்சுகள் பூசினாள்...

சொர்க்கத்தின் சுகந்தரும்

செவ்விள மாதுளையை

மறைத்த சீருடையில்

மனிதக் குண்டுகள் தாங்கினாள்.....

பின்னழகில் பித்தனாக்கிடும்

பேரழகை மறைத்து

எதிரியைத் துவம்சம் செய்யும்

துப்பாக்கி காவினாள்....

மயக்கிடும் வதனத்தை

மறைத்துக் கொண்டவள்.....

காட்டிலும் மழையிலும்

தன் தூக்கமும் மறந்தாள்....

மாத விலக்கிலும்

மனம் சோராமல்

எதிரி வேட்டைக்கு

ஏங்கி அலைந்தாள்......

இதயத்தைத் தைக்கும்

இனிய காதலை

குப்பை மேடாக

மனதிலே எரித்தாள்....

காலத்தின் கட்டாயம்

சிறையிலே சின்ன மலராய்....

நிஜத்திலே செத்து

கனவிலும் அழுகிறாள்.....

இன்று அவள் விடுதலை வேள்விக்காய்

எரிந்திடும் நெருப்பாய்.....

வேதனை வீதியில்

பயனிக்கும் பெண்ணாய்.....

இளங்கவி.....

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

ஆகா:மிக..மிக நன்றாக உள்ளது உங்களின் கவிதை.உண்மை தான் நான் புகழ்ச்சிக்காக வெல்லாம் சொல்ல மாட்டன்.

இப்படி எத்தனை ஆயிரம்

பட்டாம்பூச்சிகளின் கனவுகள்...எல்லாம்

நிறைவேறாமலே போய் விட்டது....

அவர்களுக்காகவும் அம்மா,அப்பா....

சகோதர,சகோதரிகள்....ஏன்? காதலன்...

எல்லாம் காத்திருக்க இந்தப் புள்ளி மான்கள்

இருக்கும் இடமோ அன்னியனின் சிறைக்கூடம்.

யார் அறிவார் இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை..?

சிலர் போராடிச் செத்தார்கள்

பலர் கவிபாடி வாழ்கிறார்கள்

உங்கள் கவிகள் - ஒருபோதும்

மக்களைக் காக்காது

வெள்ளாவியல் - தள்ளி

சாகடித்தே சந்தோஷப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் போராடிச் செத்தார்கள்

பலர் கவிபாடி வாழ்கிறார்கள்

உங்கள் கவிகள் - ஒருபோதும்

மக்களைக் காக்காது

வெள்ளாவியல் - தள்ளி

சாகடித்தே சந்தோஷப்படும்

அற்புதமான சிந்தனை..... படைப்புக்களை நன்கு அறிந்து பரபட்சம் இல்லாது பாரட்டும் உங்கள் தன்மைக்கு நீங்களே நிகராக இருக்க முடியும்.

ஏனெனில் இவ்வளவு கீழ்தரமாக இறங்க யாருக்கும் ஒரு சிறு தயக்கம் இருக்கவே செய்யும். தொடருங்கள் உங்கள் பணியை.

உங்களால் யாழும் சிறப்படையட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா தலைவரே....

போராடிச் செத்தார்கள் உண்மை... எனக்காக மட்டுமல்ல உமக்காகவும் தான் ....

அண்மையில் புலத்திலிருக்கும் ஓர் நண்பி வன்னி முகாமில் அகப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தனது சி நேகிதியுடன் தொலைபேசியில் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் வன்னியில் முகாமில் அகப்பட்டிருக்கும் அந்த பெண் உறவு தன்னை வெளியில் எடுக்க 10 லட்சம் ரூபாய்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்து அழுகிறாள் என்று சொல்லியிருந்தா.... அதற்கு நான் புலத்திலிருக்கும் அந்த நண்பியுடன் தொடர்பை ஏற்படுத்தி சொன்னேன் நான் அண்மையில் வெளியிட்ட ஓர் கவிதைத் தொகுப்பின் 83% புத்தகங்கள் இன்னும் இந்தியாவிலேயே இருக்கிறது நீங்கள் விரும்பினால் அந்த மொத்தப் புத்தகங்களையும் எடுத்து விற்று வன்னியில் சிறைப் பட்டிருக்கும் அந்த ஒரு பெண்ணுறவையாவது மீட்கப் பயன் படுத்துங்கள் என்று.... அதற்கு இங்கிருக்கும் அந்த நண்பி எனக்குச் சொன்னது என்ன தெரியுமா.... நண்பரே உங்கள் நல்ல உள்ளம் எனக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மக்களிடம் பணம் பெறுவதென்பது கல்லில் நாருரிப்பது போல... பணம் உள்ளவர்களிடம் மனம் இல்லை... உங்களைப் போல் மனம் உள்ளவர்கலிடம் பணம் இல்லையென்று..... அது உண்மையென்றும் உணர்கிறேன் காரணம் எனது அவலப்படும் குடும்பத்தை பார்க்கும் பணத்தை புத்தக வெளியீட்டுக்கு உபயோகப்படுத்தி அந்தப் பணத்தையாவது எடுக்கும் பணியில் தோற்றுக் கொண்டிருக்கும் ஓர் கவிஞனைப் பார்த்து பணம் சம்பாதிக்கும் கவிஞர் என்கிறீர்கள்... சரி போகட்டும் விடுங்கள்...

எனது கவிகளில் எப்படி இருந்த சந்தோசங்கள் எந்த நிலைக்கு மாறி இப்ப படும் அவலங்காய் மாற்றமெடுத்துள்ளன என்று சொல்லியாவது சில மனங்களையாவது மக்களை விடுவிக்கும் போராட்டங்களில் ஈடுபடுத்தத் தூண்டுவதே என் நோக்கமே ஒழிய பணம் சம்பாதிப்பதல்ல....

இப்படி விதண்டாவாதம் பேசியே பலபேரைக் கொன்றுவிட்டீர்கள்.. இன்று இந்த கவிஞனின் மனதையும் கொன்று விட்டீர்கள்..... போராடிச்செத்தார்கள் என்று சொல்லியிருந்தீர்கள் அந்த போராடிச் செத்தவர்களின் தியாகங்களை நிறைவேற்ற என்ன செய்தீர்கள் என்பதை உங்கள் மனச் சாட்சியை கேட்டுப் பாருங்கள்...

உண்மையிலேயே எங்கள் விடுதலைக்காக உழைக்கும் நோக்கமிருந்திருந்தால் நீங்கள் இதய சுத்தியுடன் நாட்டுக்காகக் கவி எழுதும் கவிஞர்களைக் பணத்துக்காகப் பாடுபடுபவர்கள் என்று சொல்லியிருக்க மாட்டீர்கள்... உங்களுக்குத் தெரிந்த சில படைப்பாளிகள் அப்படியிருந்தால் எல்லோரையும் அந்த சகதிக்குள் போட நினைக்காதீர்கள்.. எங்களைப் போன்றோரின் படைப்புக்களைப் பாருங்கள் அவர்களின் கவியின் உள் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள்...

நீங்கள் என்னைக் கவி எழுதி பிழைப்பவன் என்று நிரூபியுங்கள் நான் இந்தக் கவித்துறையில் இருந்து முற்றாக விலகி விட்டு ஓர் சாதாரண பொதுமகனாக எனது நாட்டுக்கு செய்யவேண்டிய சேவையைச் செய்கிறேன்.... அல்லது உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருங்கள் ஐயா.....

மேலும் எனது பல படைப்புக்கள் எனது அனுமதியில்லாமலே பல ஊடகங்களில் போட்டுள்ளார்கள் அதற்கு நான் எதுவுமே செய்யவில்லை.... எனது கருத்துக்கள் மக்களுக்கு எப்படியாவது சேர்ந்தால் சரி என நினைத்து எனது ஆக்கங்களுக்கு நான் உரிமை கொண்டாடவில்லை..... நான் ஊடகங்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கிறேன் என்றுமட்டும் சொல்லாதீர்கள்.....

உங்களைப் போன்றோரின் கருத்துக்களும் ஒரு உளவியல் போர் தான் உண்மையான தாயக உணர்வுள்ளவரின் மனங்களைச் சிதைக்கும் நோக்கம் கொண்டது....

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தலைவரே....

தீயினால் சுட்டவடு உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு.

உங்கள் திரு வாயைக் கொஞ்சம் அடக்கி வாசிச்சால் நன்று எண்டு நினைக்கிறன்.தயவு செய்து உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை கூடியவரைக்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.அந்த கவிஞன் தனது மனக்குமுறலைத் தான் கொட்டி இருந்தாரே ஒளிய வேறு எதையும் செய்யவில்லை.உங்களைப்போல் புலம் பெயர்ந்த ஓர் உறவு தான் அவரும்.நீங்கள் மட்டும் என்ன தாயகத்திலா இருக்கிறீர்கள்?ஏன் உங்களுக்கு இப்படி ஒரு குணம்?ச்சே கேவலம்...

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி இதுக்கெல்லாம் போய் .....உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்கான போரில் மடிந்த , .சிறையில் இருக்கும் உறவு களை பற்றி எம் மக்கள் மறந்தே போனார்கள்.சிலர் தங்கள் வேலைகளில் மும்முரமாகி விடார்கள் கவிதை எழுதும் ஒருவனை , மனம் நோக செய்வது முறையல்ல . தன் உணர்வுகளை வார்த்தையால் கொட்டி , மனம் ஆறுகிறார் எனவே பாராட்டாவிடாலும் மனம் நோக செய்யாதீர்கள். இளங்கவி , உங்கள் கவிகளை வாசிக்கும் பலர் இருக்கிறார்கள் , மனம் தளரவேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அவர்களே!

உங்கள் கவிதை நன்றாக உள்ளது......பாராட்டுக்கள்

போற்றுவர் போற்றட்டும் துற்றுவர் துற்ரட்டும்

நீங்கள் உங்கள் வழியிலே செல்லுங்கள்

மனம் தளரதிர்கள்...

காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லெறி விழும்.

ஒருவரின் நெகரிவ்வான சிந்தனையால் இளங்கவி உங்களிற்கு எத்தனை பேரின் ஆதரவு கிடைக்கின்றது பாருங்கள். ஊர் ஓடின் ஒத்து ஓடுங்கள். ஒருவர் ஓடின் பார்த்து ஓடுங்கள்.

இளங்கவி சுடச்சுட ஒளிரும் பொன்போல...உங்கள் கவிதை மீது வசைபாட பாடத்தான் உங்கள் கவி இன்னும் ஒளிரும். நெகரிவ்வை பொசிற்றிவ் ஆக மாற்றி தொடருங்கள் உங்கள் பணியை.

அன்பு நண்பர் "தலைவன்" அவர்களே....உங்களிற்கு கருத்து சுதந்திரம் உள்ளது அதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு உண்iமாயனவர் கருத்து எந்த நேரமும் பிழையாக இருப்பதுமில்லை, அதே நேரம் சரியாக இருப்பதுமிலலை. ஆனால் அந்த கருத்தில் பிழை உண்டு என்று கூறும்போது அதை ஆராய்ந்து அதில் பிழை இருப்பின் அதை திருத்துபவர் தான் மனித உள்ளம் படைத்த உயர்ந்தவர். உங்கள் கருத்திலும் பிழை உள்ளது என்பது பலரது கருத்து. எம்மைப்போன்ற பதிவுலக நண்பர்கள் அனைவரும் உங்களை நல்ல உள்ளத்துடன் உங்கள் தவறை சுட்டிக்காட்டுகின்றேனாம். அதை ஆராய்ந்து அந்த கருத்தை உளப்பூர்வமாக திருந்தி உங்கள் உயர்ந்த குணத்தைக்காட்டுவதுடன், உங்கள் பொசிற்றிவான மாற்றத்துடன் எங்களைப்போன்ற பதிவுலக நண்பர்களுடன் யாழ்களத்தில் மகிழ்வாக கலந்து கொள்ளுங்கள் என்று அன்பாக காத்திருக்கின்;றோம்.

இளங்கவி உங்கள் பணியைத் தொடருங்கள். தலைவன் உங்கள் உண்மையான ஆதரவை எல்லேருக்கும் அளியுங்கள். உங்கள் சிறந்த மாற்றத்தை யாழ்கள உறவுகள் அன்போடு எதிர்பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லெறி விழும்.

ஒருவரின் நெகரிவ்வான சிந்தனையால் இளங்கவி உங்களிற்கு எத்தனை பேரின் ஆதரவு கிடைக்கின்றது பாருங்கள். ஊர் ஓடின் ஒத்து ஓடுங்கள். ஒருவர் ஓடின் பார்த்து ஓடுங்கள்.

இளங்கவி சுடச்சுட ஒளிரும் பொன்போல...உங்கள் கவிதை மீது வசைபாட பாடத்தான் உங்கள் கவி இன்னும் ஒளிரும். நெகரிவ்வை பொசிற்றிவ் ஆக மாற்றி தொடருங்கள் உங்கள் பணியை.

அன்பு நண்பர் "தலைவன்" அவர்களே....உங்களிற்கு கருத்து சுதந்திரம் உள்ளது அதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு உண்iமாயனவர் கருத்து எந்த நேரமும் பிழையாக இருப்பதுமில்லை, அதே நேரம் சரியாக இருப்பதுமிலலை. ஆனால் அந்த கருத்தில் பிழை உண்டு என்று கூறும்போது அதை ஆராய்ந்து அதில் பிழை இருப்பின் அதை திருத்துபவர் தான் மனித உள்ளம் படைத்த உயர்ந்தவர். உங்கள் கருத்திலும் பிழை உள்ளது என்பது பலரது கருத்து. எம்மைப்போன்ற பதிவுலக நண்பர்கள் அனைவரும் உங்களை நல்ல உள்ளத்துடன் உங்கள் தவறை சுட்டிக்காட்டுகின்றேனாம். அதை ஆராய்ந்து அந்த கருத்தை உளப்பூர்வமாக திருந்தி உங்கள் உயர்ந்த குணத்தைக்காட்டுவதுடன், உங்கள் பொசிற்றிவான மாற்றத்துடன் எங்களைப்போன்ற பதிவுலக நண்பர்களுடன் யாழ்களத்தில் மகிழ்வாக கலந்து கொள்ளுங்கள் என்று அன்பாக காத்திருக்கின்;றோம்.

இளங்கவி உங்கள் பணியைத் தொடருங்கள். தலைவன் உங்கள் உண்மையான ஆதரவை எல்லேருக்கும் அளியுங்கள். உங்கள் சிறந்த மாற்றத்தை யாழ்கள உறவுகள் அன்போடு எதிர்பார்க்கின்றோம்.

Nalim அண்ணா அவர்களின் கருத்தே எனது கருத்துமாகும்...

காய்த்த மரம் தான் கல்லடி படும் அதனால் கவலையை விடுங்கள் இளங்கவி அண்ணா..

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

விமர்சனங்கள் உங்களை வீரியப் படுத்தணுமே தவிர... சோர்வடைந்து விடாதீர்கள்..

உங்கள் படிப்புகளை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் ..மறுபடியும் உங்கள் தரமான படைப்புக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி சுடச்சுட ஒளிரும் பொன்போல...உங்கள் கவிதை மீது வசைபாட பாடத்தான் உங்கள் கவி இன்னும் ஒளிரும். நெகரிவ்வை பொசிற்றிவ் ஆக மாற்றி தொடருங்கள் உங்கள் பணியை.

இளங்கவி நலீம் சொன்ன இந்த வார்த்தைகளை எப்போதும் நினையுங்கள். மற்றவையெல்லாம் தூசு.

எப்போதும் கையாலகத்தனத்தில்தான் புலத்தமிழன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

தானும் . . . மாட்டான். .. மற்றவனையும் . . விட மாட்டான். .

கவலைப்படாதீர்கள் இளங்கவி உங்கள் கவிதையின் ரசிகன் நான்.

எழுத்துக்கள் மூலம் சாதிக்க கூடியதை வாய்ச்சொற்களால் சாதிக்க முடியாது.

தமிழன் எப்பவுமே இப்படித்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maruthankerny

விடுங்கள் அண்ணா...

இப்படிப் பல பேர்கள் இருக்கிறார்கள்.....

மேற்சொன்ன கருத்துக்கு எதிராகப் பல கருத்துக்கள் வந்ததிலிருந்தே என் உண்மை நிலையைப் புரிந்த பல வாசகர்கள் இருக்கிறார்கள் என்று அறிகிறேன்....

உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.....

இளங்கவி உங்கள் பணி தொடரட்டும். காய்க்கும் மரத்திற்கு கல்லெறி விழுவது சகஜம் தானே. உங்கள் கவிகளை ரசிக்க பலர் உள்ளனர். உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கின்றோம். தொடரட்டும் உங்கள் பணி....

ஈழமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

ஐயா தலைவரே....

உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை கூடியவரைக்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.அந்த கவிஞன் தனது மனக்குமுறலைத் தான் கொட்டி இருந்தாரே ஒளிய வேறு எதையும் செய்யவில்லை.உங்களைப்போல் புலம் பெயர்ந்த ஓர் உறவு தான் அவரும்.நீங்கள் மட்டும் என்ன தாயகத்திலா இருக்கிறீர்கள்?

உண்மை நிலையை அறியாது ஒருவரில் பொதுவாகவே குற்றம் சாட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள் காரணம் தாங்கள் செய்யும் பிழைகளில் இருந்து இலகுவில் தப்பித்துக் கொள்ள...

எமது பிரச்சனைகள் தீவிரமைடையத் தொடங்கியதிலிருந்து நான் எழுதிய படைப்புக்களைப் பார்த்தவருக்குப் புரியும்..'

எனது மக்களின் அவலங்களை எழுதி விற்றுத்தான் நான் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்றுமே எனக்கு வராது... அந்த வழியையும் நான் என்றுமே தேர்ந்தெடுக்க மாட்டேன்...... எனது படைப்பால் ஏதாவது கிடைக்குமாக இருந்தாலும் அதை எங்கள் மக்களுக்கே கொடுத்துதவுவேன் இதுதான் எனது மன நிலை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி

இளங்கவி இதுக்கெல்லாம் போய் .....உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்..

நன்றி உங்கள் ஆதரவுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்கா

எனது ஆக்கங்கள் எனது உள்ளக் குமுறல் மட்டுமல்ல.... மற்றவர்களின் மன நிலையிலிருந்து பார்க்கும் நிலையில் தான் எனது ஆக்கங்களைப் படைப்பேன்... அதனால் தான் என்னவோ அந்தந்தப் பாதையில் பயணித்த / பயணிப்பவர்களின் மனதைத் தொடுகிறது என்று நினைக்கிறேன்...

அத்துடன் எனது சமீபகால ஆக்கங்களில் எங்கள் அவலங்கலைச் சொல்லி அல்லல் படும் மக்களின் விடுதலைக்காய் திறக்காத மனங்களின் மனங்களையும் திறக்கும் முயற்சிதான் என் படைப்புக்கள்.... ராமர் பாலங்கட்ட அணில் உதவியது போல....

அதைப் புரியாதவர்கள் மக்களின் அவலங்களைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர் என்று சொன்னதைத்தான் மனதைப் பாதித்தது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி உங்கள் பணி தொடரட்டும். காய்க்கும் மரத்திற்கு கல்லெறி விழுவது சகஜம் தானே. உங்கள் கவிகளை ரசிக்க பலர் உள்ளனர். உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கின்றோம். தொடரட்டும் உங்கள் பணி....

ஈழமகள்

இளங்கவி அவர்களே........ தன் பெயரை தலைவன் என்று வைத்தவர் தன் கீழ்தரமான

சிந்தனைகளாலும் மற்ரவர்களின் மனங்களை புண்படுத்தி தான் சுகம் காணும் இழிவான

செயலிலும் தன்னை தலைவன் ஆக்கி உங்களையும் உங்கள் ஆக்கங்களையும்

அசங்கப்படுத்தி விட்டேன் என மனதில் பெருமிதம் கொள்ளலாம்................

அப்படி அவர் நினைத்து அதை செய்திருந்தால் அவர் நன்றாக தோற்றுவிட்டார்

என்பதை அன்பு உறவுகளின் உள்ளக் குமுறல்களாக வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துக்களில் இருந்து நன்றாக புரிந்து கொண்டிருப்பார்...........

அதனால் உங்கள் மனதை நீங்கள் சோர விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது தான் இப்படி தரம் கெட்ட சிந்தனையில் உள்ளவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தகுந்த பதிலாக இருக்கும்

அதானால் எழுதுங்கள் இன்னும் இன்னும் அதிகமாக எழுதுங்கள்............

உங்கள் கவிதையை படிக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்..............

நீங்கள் பணத்துக்காக தான் எழுதுகிறீர்கள் என்றால் சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

ஏனெனில் தரமற்ர ஒரு ஆக்கத்தை எவனும் பணம் கொடுத்து வாங்க மாட்டான்.............

இதில் இருந்தே ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்

அதாவது உங்கள் படைப்புக்கள் அனைத்தும் அற்பும்....... அற்புதம்.........

இந்த தலைவன் தன்னால் முடியாததை இன்னொருவன் செய்து பெயர் புகழ் வாங்குகிறானே என்ற

பொறான்மையிலும் இப்படி எழுதியிருக்கலாம்.......

எனவே மனம் தளராது தொடர்ந்து எழுதுங்கள்...........

இந்த தலைவனை கருவாக வைத்து உங்கள் அடுத்த கவியை தாருங்கள்

நாங்கள் இருக்கிறோம் அதை ஆவலாக படிப்தற்கு.........

அன்புடன்

உங்கள் கவியை என்றும்

தவறாமல் படிப்பவன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி அனுபவம் உங்களைச் செம்மைப்படுத்தும் நம்புகிறேன். எழுச்சி மிக்க எழுதுகோல்களுக்கு எழுவதற்கு யாரும் கற்றுத்தரவோ கைப்பிடிக்கவோ தேவையில்லை. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை எதிர்காலத்தில் நீங்கள் எழுதப்போகும் எழுத்துகள் புலப்படுத்தும். வலியை உணராதவன் வரலாறைப்படைக்க முடியாது.

சிலர் போராடிச் செத்தார்கள்

பலர் கவிபாடி வாழ்கிறார்கள்

உங்கள் கவிகள் - ஒருபோதும்

மக்களைக் காக்காது

வெள்ளாவியல் - தள்ளி

சாகடித்தே சந்தோஷப்படும்

தலைவன் இங்கு நீங்கள் பதிந்த இப்பதிவுக்கு பலர் மிகுந்த விசனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் அதிசயமாக இருக்கிறது பொதுவாக யாழில் அதிகளவில் எழுதாதவர்கள் போட்டிபோட்டு இங்கு எழுதுவது கொஞ்சம் இயல்புக்கு மாறாகத் தெரிகிறது. இளங்கவிமேல் அவர்களுக்கு இருக்கும் நட்புணர்ச்சியாக இருக்கலாம். ஆனால் எனக்கு உங்கள் எழுத்து ஏன் இவ்விதம் அமைந்தது என்றுதான் சிந்திக்கத்தூண்டுகிறது. இது இளங்கவியை நோக்கி மட்டுந்தானா அல்லது இங்கு கவிதை எழுதும் அனைவரையும் சினந்து வெளிப்பட்ட உங்கள் எழுத்துகளா?

இந்த இடத்தில் செப்ரெம்பர் 28 அன்று உங்கள் வரவு இந்தப்பதிவுக்காகவே ஏற்பட்டதுபோல் இருக்கிறது. ஏனென்றால் அத்தினத்தில் நீங்கள் வேறு எவ்விதப்பதிவையும் மேற்கொள்ளவில்லை. இளங்கவிமேல் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறதா?

யார் மேலும் எனக்கு வெறுப்பில்லை

நான் என் மேல் வெறுப்புற்றுள்ளேன்.

எனது கருத்தின் பின்

பலர் அவர் கவிதையை ரசித்துள்ளார்கள்

பாராட்டியுள்ளார்கள்

அதுவரை?

சாவுகளை வைத்தே

சாவு நாற்காலிகளில் வாழ்வோரிடையே

கொண்ட கோபம் இது

அவர் கவிதை நல்லதாக இருக்கிறது

கவிதைக்காக பாராட்டுகள்

யாழில் கருத்தெழுதிய பலர்

தன் முகங்களை மாற்றிக் கொண்டு

உண்மையான சாயலை தெரியத் தந்துள்ளமை

என்னைப் போல் பலருக்கும்

தெரியவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

யார் மேலும் எனக்கு வெறுப்பில்லை

நான் என் மேல் வெறுப்புற்றுள்ளேன்.

வாழ்க்கை துறவறம் நாடுகிறதோ என்னவோ

தலைவன் உங்கள் மேல் உங்களுக்கே வெறுப்பு எண்டால் அது கடுமையான மன உழைச்சல்

நோய்க்குள் தள்ளப்பட்டிருக்கிறியள் என நினைக்கிறேன்.................

இப்படியான சந்தர்பங்களில் தான் எதற்கு எடுத்தாலும் மற்ரவர்களை புண்புடுத்த வேண்டும் என்ற

எண்ணம் அதிகமாக தோன்றும்...............அதனால் விரைவாக டாக்டரை போய் பாருங்கள்!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.