Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Featured Replies

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

nobrl07102009a.jpg

ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது.

இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

ரைபோசோம்களின் முக்கியத்துவம்!

நமது உடலின் இயக்கத்துக்கு முக்கியப் பயங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உறுபத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய மகத்தான ஆராய்ச்சிகளுக்கே இம்மூவருக்கும் நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுடைய உயிரணுக்களுக்குள் மரபணு மூலக்கூறுகள் இருக்கும். அதன் மூலம் மனித இயக்கம் பற்றி அறிந்து கொள்ளலாம். மரபணுக்களின் தகவல்களின் அடிப்படையில் ரிபோசோம்களானது புரதத்தை உற்பத்தி செய்கின்றன. நமது உடலில் வெவ்வேறு வடிவமும் இயக்கமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உள்ளன. அவை நமது உடலின் வேதியியல் அளவை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

உயிரின் அடிப்படையை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு ரிபோசோம்கள்களின் இயக்கத்தை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயோடிக்ஸை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய இம்மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1952-ம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் 1971-ம் ஆண்டில் பரோடா பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். பின்னர், ஓகியோ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன், தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி. லெபாரட்டரி ஆஃப் மோல்குலர் பயாலஜியின் ஸ்ட்ரக்சுரல் ஸ்டடிஸ் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பற்றி மேலும் அறிய...www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

*************

தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ், 1940 ஆம் ஆண்டு பிறந்தார். அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் 1966-ம் ஆண்டு உயிரியல் மூலக்கூறு மற்றும் உயிரி இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

**************

அடா இ.யோனத்

இஸ்ரேலிலின் ஜெரூசலத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர், அடா இ.யோனத். இஸ்ரேலிலுள்ள வியிஸ்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்சில் 1968 ஆம் ஆண்டு எக்ஸ்ரே கிரிஸ்டல்லோகிராஃபியில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இஸ்ரேலிலுள்ள வியிஸ்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்சில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.

**************

===============================From Star=================

STOCKHOLM – Americans Venkatraman Ramakrishnan and Thomas Steitz and Israeli Ada Yonath won the 2009 Nobel Prize in chemistry on Wednesday for atom-by-atom mapping of the protein-making factories within cells.

The Royal Swedish Academy of Sciences said their work on ribosomes has been fundamental to the scientific understanding of life and has helped researchers develop antibiotics.

Yonath is the fourth woman to win the Nobel chemistry prize and the first since 1964, when Dorothy Crowfoot Hodgkin of Britain received the award.

"I'm really, really happy," Yonath said. "I thought it was wonderful when the discovery came. It was a series of discoveries ... We still don't know every, everything, but we progressed a lot."

This year's three laureates, who will share the 10 million kronor ($1.4 million U.S.) award, generated three-dimensional models that show how different antibiotics bind to ribosomes.

"These models are now used by scientists in order to develop new antibiotics, directly assisting the saving of lives and decreasing humanity's suffering," the academy said in its announcement.

The researchers used a method called X-ray crystallography to pinpoint the positions of the hundreds of thousands of atoms that make up the ribosome.

"This knowledge can be put to a practical and immediate use; many of today's antibiotics cure various diseases by blocking the function of bacterial ribosomes," the citation said. "Without functional ribosomes, bacteria cannot survive. This is why ribosomes are such an important target for new antibiotics.

Their work builds on the Charles Darwin's theory of evolution and, more directly, on the work done by James Watson, Francis Crick and Maurice Wilkins who won the 1962 Nobel Prize in medicine for mapping DNA's double helix, the citation said.

In 2006, Roger D. Kornberg won the Nobel Prize in chemistry for X-ray structures that showed how information is copied to messenger RNA molecules, which carry information from DNA to the ribosomes.

"Now, one of the last pieces of the puzzles has been added – understanding how proteins are made," said Professor Gunnar von Heijne of the Swedish Academy of Sciences, the chairman of the Nobel Committee for Chemistry. "This discovery is important not only for science as such, but also gives us tools to develop new antibiotics."

Indian-born Ramakrishnan, 57, is the senior scientist and group leader at the Structural Studies Division of the MRC Laboratory of Molecular Biology in Cambridge, England.

Steitz, a 69-year-old born in Milwaukee, is a professor of molecular biophysics and biochemistry at Yale University and attached to the Howard Hughes Medical Institute, both in New Haven, Connecticut.

Yonath, 70, is a professor of structural biology at the Weizmann Institute of Science in Rehovot, Israel.

Alfred Nobel, a Swedish industrialist who invented dynamite, established the Nobel Prizes in his will in 1895. The first awards were handed out six years later.

Each prize comes with a 10 million kronor ($1.4 million U.S.) purse, a diploma, a gold medal and an invitation to the prize ceremony in Stockholm on Dec. 10. The Peace Prize is handed out in Oslo.

On Monday, three American scientists shared the Nobel Prize in medicine for discovering a key mechanism in the genetic operations of cells, an insight that has inspired new lines of research into cancer.

The physics prize on Tuesday was split between a Hong Kong-based scientist who helped develop fibre-optic cable and two Canadian and American researchers who invented the "eye" in digital cameras – technology that has revolutionized communications and science.

The literature and peace prize winners will be announced later this week and the economics announcement is set for Monday.

================

நன்றி விகடன், ரொரண்டோ ஸ்ரார்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

பரிசு பெறும் தமிழாரால் உலகத்தமிழராகிய நாங்களும் பெருமை கொள்ளுகிறோம்..

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணணுக்கு பாராட்டுக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

இயற்பில் கற்ற ஒருவர் உயிர் இரசாயனத்தில் நோபல் பரிசு பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

nobrl07102009a.jpg

நோபல் பரிசு பெறும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் .

உங்களுக்கு கிடைத்த நோபல் பரிசின் மூலம் , தமிழன் என்னும் முறையில் நான் பெருமை அடைகின்றேன்.

  • தொடங்கியவர்

சக மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் மிகவும் சந்தோசப்படுகின்றேன் என ஒரு மின்னஞ்சலை அவருக்கு தட்டி விட்டுள்ளேன். அவருக்கு பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா இல்லையா என்பதற்கப்பால், ஒரு தமிழனை வாழ்த்திய திருப்தி கிடைத்தது

அவரின் மின்னஞ்சல்

ramak@mrc-lmb.cam.ac.uk

  • கருத்துக்கள உறவுகள்

சக தமிழனாக எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

இயற்பில் கற்ற ஒருவர் உயிர் இரசாயனத்தில் நோபல் பரிசு பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது..! :lol:

இன்னொரு உயிரியல் விஞ்ஞானியும் தோன்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் கவனத்தில் வைப்பது நல்லது..!

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாக, மனிதனாக மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நோபல் பரிசு பெறும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் . :D
  • கருத்துக்கள உறவுகள்

சக மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் மிகவும் சந்தோசப்படுகின்றேன் என ஒரு மின்னஞ்சலை அவருக்கு தட்டி விட்டுள்ளேன். அவருக்கு பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா இல்லையா என்பதற்கப்பால், ஒரு தமிழனை வாழ்த்திய திருப்தி கிடைத்தது

அவரின் மின்னஞ்சல்

ramak@mrc-lmb.cam.ac.uk

தகவலுக்கு நன்றி நிழலி . மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சக தமிழனாக எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..!

QஊஓTஏ (னெடுக்கலபோவன் @ ஓcட் 7 2009, 12:16 PM)

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

இயற்பில் கற்ற ஒருவர் உயிர் இரசாயனத்தில் நோபல் பரிசு பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது..!

இன்னொரு உயிரியல் விஞ்ஞானியும் தோன்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் கவனத்தில் வைப்பது நல்லது..!

:lol::D:)

நானும் இதைத்தான் நினைத்தனான் ஆனால், சொல்லத் தெரியவில்லை...எனக்கு யாழில் பிடித்து இதுதான்

எப்படி கோட் பண்ணுவதென்று சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

-----

இன்னொரு உயிரியல் விஞ்ஞானியும் தோன்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் கவனத்தில் வைப்பது நல்லது..!

:lol::D

எங்கையப்பா ......?

:D:D:D

smiley_emoticons_xmas_eckbanner01.gif

  • தொடங்கியவர்

எப்படி கோட் பண்ணுவதென்று சொல்ல முடியுமா?

1. ஓவ்வொரு பதிலுக்குரிய பெட்டியின் கீழ் quote என்றும் reply என்றும் உள்ளது. நீங்கள் quote இனை அழுத்தி விட்டு reply என்பதை அழுத்துங்கள்

2. இடையிடையே வருவனவற்றை quote பண்ண வேண்டும் எனில், quote என்ற சொல்லுடன் [] இனை வழங்கி பின் முடிக்கும் போது /quote என எழுதி [] பெட்டியினுள் இடுங்கள்.

உதாரணமாக

இயற்பில் கற்ற ஒருவர் உயிர் இரசாயனத்தில் நோபல் பரிசு பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

----உங்கள் கருத்து

விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது..!

---உங்கள் கருத்து

என வரவேண்டுமெனில் அவ்வாறு செய்யலாம்

3. Multiple replies இற்கு quote பண்ண வேண்டுமெனில், ஓவ்வொரு பதிலிலும் உள்ள quote பட்டனை அழுத்தி விட்டு இறுதியில் add reply என்பதை அழுத்துங்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வெங்கட்ராமன் ராமகிருஸ்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு உயிரியல் விஞ்ஞானியும் தோன்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் கவனத்தில் வைப்பது நல்லது..!

:rolleyes::D

அடப்பாவிகளா உயிரியலில் அரிவரி படிச்சவனுக்கு எல்லாம் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் உங்க மில்லியன் கணக்கானவங்களுக்கு எல்லோ கொடுக்கனும்..! நல்லாத்தா நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்க..! :lol::D

தமிழின் தமிழனின் பெருமை மீண்டும் ஒரு முறை உங்களால் உயர்ந்தது. நிலவில் நீரை கண்டறிய திரு.மயில்சாமி அண்ணாதுரையும், ரைபோசோம்களின் முக்கியத்துவம் கண்டறிய தாங்களும். கடின உழைப்பால் மனித குலத்துக்கு நீங்கள் ஆற்றிய பங்கிற்கு வாழ்த்துக்கள்.

இணைப்பை செயலாக்கிய நிழலிக்கு நன்றிகள்.

Edited by Sniper

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா உயிரியலில் அரிவரி படிச்சவனுக்கு எல்லாம் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் உங்க மில்லியன் கணக்கானவங்களுக்கு எல்லோ கொடுக்கனும்..! நல்லாத்தா நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்க..!

ஐயா அரிவரி...

உங்களுக்கே தெரியுது நீங்கள் அரிவரி என்று.. பிறகு என்ன லொல்லுக்கு..பெரிய கணக்கில..இயற்பியல்..உயிர்ராசய

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கானோ ,

முதலில் மேற்கோளை கொப்பி பண்ணிவிட்டு , எழுதவேண்டிய பதிலை வழக்கம் போல் கீழ் பெட்டியில் எழுதுங்கள் .

எழுதி முடித்த பின் , நீங்கள் கொப்பி பண்ணிய மேற்கோளை இப்போ .... மேல் பெட்டியில் பதியுங்கள் .

  • தொடங்கியவர்

நன்றி நிழலி... ஆன இப்பவும் சரிவரவில்லை.. கோட் பண்ணியபிறகு ரைப் பண்ண எல்லாம் அழியுது.. ஆங்கில சொற்கள் எப்படி ரைப் பண்ணுவது..

நீங்கள் யாழ் இணையம் தரும் ஆங்கிலம் to தமிழ் முறையினை பயன்படுத்தி தமிழ் எழுதுகின்றீர்கள் எனில் முதலாவது window இல் எழுதிய ஆங்கிலம் அனைத்தும் இரண்டாவது சாளரத்துக்கு mouse இனை கொண்டுவரும் போது அழிந்து விடும். இந்த முறையில் quote எனபதைக்கூட தமிழில் மாற்றி விடும். keyman software இனைப் பயன்படுத்தியே நானும் அநேகமானோரும் இங்கு தமிழில் எழுதுகின்றோம். பாமினி எழுத்துருவத்தை பயன்படுத்தினாலும் இந்த சிக்கல் இல்லை. யாழ் இணையத்தின் ஆங்கிலம் to தமிழ் முறை கொஞ்சம் நடைமுறை சிக்கல் கொண்டது. keyman software பயன் படுத்த தொடங்கும் முன், quote பண்ண வேண்டியதை notepadஇல் பிரதி பண்ணிவிட்டு இறுதியில் இணைப்பேன், ஒரு முறை save பண்ணி விட்டு ஆங்கிலத்தில் இணைக்க வேண்டியவற்றை edit இனை அழுத்தி அதன் பின் வரும் முதலாவது சாளரத்தில் எழுதுவேன்

அடப்பாவிகளா உயிரியலில் அரிவரி படிச்சவனுக்கு எல்லாம் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் உங்க மில்லியன் கணக்கானவங்களுக்கு எல்லோ கொடுக்கனும்..! நல்லாத்தா நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்க..! :rolleyes::lol:

பெரும் விருட்சமும் சிறு விதையில் இருந்து தான் உருவாகும்... உங்களைப் போன்ற தமிழ் தேசிய உணர்வும் கொண்ட ஒருவர் மிகப் பெரும் நிலைக்கு வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் எமக்கு !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ் சிறி, நிழலி...

பிறகு வாரன்..சுபமங்களாவின் "தமிழிச்சி" மூட்டை குழப்பி போட்டுது..

அடப்பாவிகளா உயிரியலில் அரிவரி படிச்சவனுக்கு எல்லாம் நோபல் பரிசு கிடைக்கும் என்றால் உங்க மில்லியன் கணக்கானவங்களுக்கு எல்லோ கொடுக்கனும்..! நல்லாத்தா நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்க..! :rolleyes::lol:

நோபல் பரிசு கிடைச்சால்தான் ஒருவன் ஓர் விஞ்ஞானி என்று அர்த்தம் இல்லை. உலகின் எத்தனையோ பல சாதனைகள் செய்த பல விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு என்ன.. சாதாரண பாராட்டுப் பத்திரம்கூட கிடைத்தது இல்லை.

குறிப்பிட்ட தமிழரின் திறமையை உலகம் கண்டுகொண்டுள்ளது. ஆனால்.. அவரைவிட திறமையான பல விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருந்து இருக்கலாம், கிடைக்காமல் போகலாம்.

அறிவியல் - விஞ்ஞானத்தில் ஒருவன் உண்மையில் எவ்வளவு சாதித்து இருக்கின்றான் என்று அளவுகோலிடுவது உண்மையில் முடியாத காரியம். வெளியில் திறமைசாலிகளாக இனம்காணப்படுபவர்கள் பல ஜில்மாலாக்கள் செய்து இருக்கலாம்.

ஆனானப்பட்ட நியூட்டன் பற்றியே பல அவதூறுகள் இருக்கின்றன, அதாவது அவர் தனக்கு மற்றவர்கள் அனுப்பும் கண்டுபிடிப்புக்களை திருடியவர் என்று..

ஒருவர் பிரபலமாக வந்தபின்னர் ஏனைய விஞ்ஞானிகள் தமது கண்டுபிடிப்புக்கள் அங்கீகாரம் பெறுவதற்கு அவற்றை பிரபலமான புள்ளிகளிடம் அனுப்புவது வழமை. இதில் சிலர் நேர்மையாக நடந்துகொள்ளலாம், சிலர் சுத்துமாத்து செய்யலாம்.

அதாவது..

சுருங்கக்கூறின்... நோபல் பரிசு என்பதும் ஓர் குலுக்கல் முறையில் கிடைக்கும் அதிர்ஷ்டமே. காலம், சூழ்நிலை சரியாக அமையும்போது அதிர்ஷ்டம் / கடவுளின் அருள் உள்ளவனுக்கு.. பரிசு கிடைக்கின்றது.

விஞ்ஞானம் என்பது ஓர் கடல். இதில் சுழியோடி முத்துக்களை பெற்றவர்கள் பல இலட்சங்கள்... அதில் நோபல் பரிசு சில நூறுபேருக்கே கிடைத்துள்ளது.

இன்னொரு விதத்தில் கூறுவதானால்..

ஒருவனின் தனிப்பட்ட ஒரு திறமை அவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்திற்கு நேர்விகித சமன் என்று கூறுமுடியாது. பரிசுகளிற்கு அப்பால் எத்தனையோ பல அவிழ்க்கமுடியாத முடிச்சுக்களான புதிர்கள் இருக்கின்றன.

++++++

என்னமோ... இந்தவருடம் ஏ.ஆர்.ரகுமானிற்கு ஆஸ்கார் விருது கிடைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி மீண்டும் ஒரு தமிழருக்கு நோபல் பரிசு கிடைத்தபோது ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்து 100% உண்மை. ஏற்றுக் கொள்கிறேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அரிவரி...

உங்களுக்கே தெரியுது நீங்கள் அரிவரி என்று.. பிறகு என்ன லொல்லுக்கு..பெரிய கணக்கில..இயற்பியல்..உயிர்ராசய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணணுக்கு பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.