Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா?

புலம்பெயர் தமிழரில் குறிப்பிட்ட அளவானவர்களின் எண்ணப்பாடு புலிகளின் அழிவுக்கு ஒரு காரணம் அவர்கள் பாரதத்தைப் பகைத்துக் கொண்டதாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அழிவினோடு தமிழர் போராட்டம் சிதைவுற்றதென்றும் இது புலிகளின் அல்லது மிகச்சரியாக தலைவரின் தூரநோக்கில் நிகழ்ந்துவிட்ட தவறாகும் என்பதும் இவர்களது வாதம் ஆகும்.

நேற்றைய தமிழ்நெற்றில் வரையப்பட்டுள்ள ஒரு கட்டுரை முக்கியமான சில முக்கியமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. புதுடில்லியின் கொள்கைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரம்மா செலனியின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் தற்போதைய இந்திய தேசமானது எவ்வகையில் பூகோள ரீதியில் கட்டுப்படுத்த இலகுவான தனது தென்புலத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டு வருகிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது. மேலும் அந்தக் கட்டுரையில் கூறப்படுவதாவது:

தற்போதைய இந்தியக் கொள்கையானது கடல் போக்குவரத்துக்குச் சாதகமான தென்னிந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் பிடியை மேலும் வலுவிழக்கவே செய்யும். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு தேசம் மலர்ந்து சிங்கப்பூரினை ஒத்த ஒரு வளர்ச்சி ஏற்படுதலே இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது. அதை விடுத்து சீனா திபெத்தை ஆக்கிரமித்ததைப் போல சிறீலங்கா அரசை ஈழத்தில் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிப்பது என்பது இந்தியாவின் தென்புலப் பாதுகாப்பை மேலும் கேள்விக்குரியதாகவே ஆக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா தனது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் வேறு எந்த நாடாவது இந்தியாவின் தென்புலத்திலேயே குழப்பங்களை விளைவிக்கக் கூடும். சீனாவே கூட இதை மேற்கொள்ள எத்தனிக்கலாம்.

இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவரான தமிழகத்தவரும், கேரளத்தவரும் உலகெங்கும் பரந்துபட்டு வாழ்கிறார்கள். இலங்கையின் அதாவது சிங்களவர்களின் பூகோள அரசியல் முக்கியத்துவத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த இரு மாநிலங்களின் முக்கியத்துவமும். ஆனால் கேரள மற்றும் தமிழக அதிகார வர்க்கத்தினரின் இந்திய மத்திய அரசுடனான இணைந்த கேள்விக்குரிய செயற்பாடுகள் அவர்களின் பூகோள முக்கியத்துவத்தை இழக்க வைத்துவிட்டன.

மேலும் இந்தியாவின் சிறீலங்கா குறித்த வெளியுறவுக்கொள்கை 1987 ஆம் ஆண்டுமுதல் உறுதியான தூர நோக்கை அடிப்படையாகக் கொண்டதாக அல்லாது அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு வளைந்து கொடுக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசானது, நாட்டின் நலன்சார் கொள்கைகளைத் தூர எறிந்துவிட்டு ராஜீவின் கொலைக்குப் பழிவாங்கப் புறப்பட்டது. இதன் காரணமாக அப்போது இருந்த இலங்கை குறித்த நழுவல் போக்கு கைவிடப்பட்டு தாராளமான உதவிகள் சிறீலங்கா அரசுக்குக் கிடைக்கத் தொடங்கின. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட இந்திய அரசானது ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பாளார் நவிபிள்ளையின் சிறீலங்காவின் மனித உரிமைமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்த்து சிறீலங்காவுக்குச் சாதகமாக நடந்துகொண்டது.

பேராசிரியர் செலனி அவர்கள் மேலும், இலங்கை விவகாரத்தில் ராஜீவின் எண்ணப்பாடுகள் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவால் நயவஞ்சகமாக மாற்றப்பட்டது என்பதை ஒத்துக்கொள்கிறார். இலங்கை பிரிவினை அடைந்தால் அது அகண்ட தமிழகமாக காலப்போக்கில் தமிழகத்தையும் உள்ளிழுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்கிற நச்சுவிதை ராஜீவிடம் தூவப்பட்டது. இந்தப் பொறிக்குள் ராஜீவ் அகப்பட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் கொள்கைகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு பணிக்கப்பட்டார்கள். புலிகள் புதுடில்லியின் ஆட்டங்களுக்கு வளைந்து கொடுக்க மறுத்துவிடவே இந்திய இராணுவத்தின் துணையுடன் அவர்களை அடக்க ஆணை வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில் ராஜீவ் காந்தி ஒரு இலகுவான உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். வங்காளதேசத்தின் இந்திய அனுசரணையுடனான பிரிவினை என்பது, மேற்கு வங்காளத்தினை உள்ளடக்கிய அகண்ட வங்காளதேசமாக மாறிவிடவில்லை. அதேபோல என்னதான் ஈழமும் தமிழகமும் மொழியால் ஒன்றிணைக்கப் பட்டிருந்தாலும் அவைகள் தமக்குள்ளே பல கலாச்சார வேற்றுமைகளைக் கொண்டிருப்பவை ஆகும். 14 ஆம் ஆண்டின் பாண்டிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் இவையிரண்டும் தத்தமக்குரிய தனிப்பட்ட பண்புகளைக் கொண்டனவாகவே இருந்து வந்துள்ளன. இவை எல்லாவற்றையும் விட ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது தமிழகம் வாழாவிருந்ததும், கொலைகளுக்குக் காரணமான காங்கிரஸ் கூட்டணியையே மீண்டும் தேர்ந்தெடுத்ததும் மேற்சொன்ன கூற்றுக்களை உறுதிப்படுத்தப் போதுமானவை. எனவே அகண்ட தமிழகம் உருவாகும் என்கிற வாதம் அடிப்படை இல்லாதது ஆகும்.

இறுதியாக, இந்தியாவின் பிடி தளர்ந்து வருவதற்கு சமீபத்திய மன்மோகன் சிங்கின் அறிக்கையும் அதன்பிறகு சிறீலங்கா அரசு நடந்துகொண்ட முறையுமே தக்க சான்றாகும். இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்கள் மீண்டும் தத்தமது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்று உறுதியாக அவர் தெரிவித்த கருத்து காற்றில் பறக்கவிடப்பட்டது. மக்களின் முட்கம்பி வாழ்வு இன்னும் முடிந்தபாடில்லை.

கட்டுரை மூலம்: தமிழ்நெற்

இக்கட்டுரையின் சாராம்சங்களை உற்றுநோக்கும்போது மனதில் எழும் கேள்விகள் இவை.

1) ஏற்கனவே ஆளுமையில் தேய்ந்துவரும் இந்திய அரசை நம்பி அவர்களிடம் சரணாகதி அடைவது புத்திசாலித்தனமாகுமா? அல்லது வேறு ஒரு சக்தி தமிழர்களை அணுகும்போது அதனைக் கைக்கொள்வது உசிதமானதா?

2) மீண்டும் இந்தியக் கொள்கை குத்துக்கரணமடித்து தமிழர் சார்பு நிலைப்பாட்டை எடுக்குமானால் அது நம்பிக்கைக்கு உரியதாகுமா?

3) இறுதியாக, இந்தியா ஒரு தேய்ந்துவரும் சக்தி என்று கணித்துத்தான் புலிகள் இந்தியாவிடமிருந்து ஒதுங்கியிருந்தார்களா?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

தூரநோக்கு இருந்திருந்தால்

தாங்கள் வளமாக வாழ்வது எப்படி என்றல்லவா? நடந்திருப்பார்கள்

இந்திய இராணுவ காலங்களில் லெப்கேணல் ஜொனி அண்ணா இந்திய அரசின் செய்தி ஒண்றை தாங்கி மணலாற்று காட்டுக்கு தமிழ்நாடில் இருந்து அனுப்பப் பட்டார்.. வீட்டு காவலில் இருந்த கிட்டு அண்ணாவுடனான பேச்சு வார்த்தையில் இந்தியா தனது பேரத்தை தெளிவாக சொல்லி இருந்தது.... இந்திய ரூபாயில் 300 கோடி ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு தருவதாகவும்... புலிகள் ஆயுதங்களை கை விட வேண்டும் எண்றும் சொல்லப்பட்டு இருந்தது...

வந்து சொன்ன ஜொனி அண்ணாவிடம்... இந்திய இராணுவம் காட்டை சுற்றி வளைத்து நிக்கிறது... அனேகமாக தாக்குதல் கிட்டடியில் தொடங்கிவிடும்... கிட்டுவிடம் சொல் நான் இறந்ததின் பின்னர் புலிகளையும் மக்களையும் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்று கொள்ள சொல் எண்று பதில் சொன்னாராம் தலைவர்...

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

Edited by தயா

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

அதைத்தான் கருனா கொம்மாண் இப்ப செய்யிறார் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

அதைத்தான் கருனா கொம்மாண் இப்ப செய்யிறார் போல

:rolleyes: :rolleyes: :rolleyes:

ஆனையிறவு முகாம் தாக்குதல்களை அடுத்து புலம் பெயர் தொடர்பு சாதனங்களான வானொலிகளும், தொலைக் காட்சிகளும் தமது வழமையான அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்திவிட்டு அன்றைய வெற்றி தொடர்பான அறிவித்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை சேகரிப்பதற்கான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருந்தன. மக்கள் தாமகவே முன்வந்து பணமாகவும், நகையாகவும் தாராளமாகவே அள்ளிக் கொடுத்தார்கள். புலிகளது தலைமையை விமர்சித்த பலரது வாயை அடைக்கச் செய்து அவர்களை புலிகளது ஆதரவாளர்களாக மாற்றி விட்டது இந்த வெற்றி. ஒரு புரட்சிகர குழுவிலிருந்த சிலர் தமது அமைப்பை கலைத்துவிட்டு புலிகளுடன் சென்று சங்கமாகும் அளவிற்கு இந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து பெறப்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் மன உந்துதல்கள் காரணமாக அடுத்து வரும் ஒரு குறுகிய காலத்தினுள் யாழ் குடாநாட்டிலுள்ள ஏனைய இராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படலாம் எனவும், இதனை தொடர்ந்து கிழக்கிலும் இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் தமிழீழம் பிரகடனப்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்ற வகையில் எதிர்பார்ப்பு எங்கும் நிலவும் வகையில் படைகளின் சமபல தன்மை (Balance of Forces) புலிகளுக்கு மிகவும் சாதகமாக நகர்ந்திருந்தது. ஆனால் அடுத்த வந்த நிகழ்வுகள் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் நகரவில்லை.

அன்றிருந்த சர்வதேச நிலைமைகளில். விடுதலைப் புலிகள் அமைப்பானது தனியான அரசை பிரகடப்படுத்தினால் அதனை அங்கிகரிப்பதற்கு எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்புகளும் தயாராக இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பானது தன்னை தனியான அரசாக பிரகடனம் செய்வதை, சர்வதேச சமூகம் அங்கிகரிப்பதானது பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது. ஒரு தேச அரசை பிரகடனப்படுத்துவதும் அதனை சர்வதேச சமூகம் அங்கிகரிப்பது என்பதும் வெறுமனே இராணுவ வெற்றிகளினால் மாத்திரம் நடந்தேறுவதன்று. ஒரு தனியான தேசமாகவும், அதற்கு தனியரசை அமைப்பதற்கான உரிமையை அந்த அரசு கொண்டிருப்பதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்வது என்பது இன்னும் பல அம்சங்களில தங்கியிருக்கிறது. முறையானதொரு சிவில் சமூகத்தை கொண்டிருப்பது: முறையாக செயற்படும் ஒரு சிவில நிர்வாகத்தை கொண்டிருப்பது: தான் தனித்து ஒரு அரசாக செயற்படும் காலத்தில் தன்னை கொண்டு நடத்தக் கூடியதொரு மாற்று பொருளாதார திட்டங்களை வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக செயற்படுத்துவது: பதில் சொல்லும் பொறுப்பைக் கொண்டதொரு சரியான அரசியல் தலைமையை கொண்டிருப்பது: சர்வதேச சூழலில் நற்பெயரைப் பெற்றிருப்பது போன்றவை இதற்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் இப்படிப்பட்ட எந்த வொரு அம்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல் வெறுமனே இராணுவ வெற்றிகளால் மாத்திரம் ஒரு தனியான அரசை அமைத்துவிடுவது என்பது மிகவும் குறுகிய புரிதலின்பாட்பட்டதாகும். அதன் விளைவுகளே இங்கு வெளிப்பட்டன.

அத்துடன் இந்திய அரசு நேரடியான இராணுவ தலையீட்டடை தான் மேற்கொள்ளலாம் என்பது போன்ற சமிக்கைகளை வெளிப்படுத்தியது. தனது தரை. கடல் மற்றும் விமானப் படைகளை பெருமளவில் தென்னிந்திய தளங்களுக்கு நகர்த்தியதுடன், தேவைப்படடால் தாம் கப்பல் மூலமாக பலாலி மற்றும காங்கேசன்துறை இராணுவ முகாமகளிலுள்ள சிறீலங்கா படைவீரர்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்தது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பானது தாம் தமிழீழத்தை அடைவது இராணுவரீதியில் சாத்தியமாகிவிட்டதாகவும், ஆனால் ஏனைய தயாரிப்புகள், அதிலும் குறிப்பாக சர்வதேச நிலைமைகளில் போதியளவு தயாரிப்பின்மை அல்லது இதில் இழைத்த தவறுகள் காரணமாகவே மேற்கொண்டு முன்னேற முடியாமல் இருப்பதாக கூறப்பட்டது. இராணுவரீதியில் சாத்தியமான ஒரு அம்சமானது, அரசியல்ரீதியாக சாத்தியமற்றுப் போனதற்கான ஒரு வகை மாதிரியை நாம் இங்கு காண்கிறோம். ஆனால் குறிப்பிட்ட ஒரு குறுகிய காலத்தினுள் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டது.

புலிகளைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழானதாக அமைந்தது. ஆனையிறவு முகாம் தாக்குதல் மற்றும் ஜயசிக்குறு தாக்குதல்களுக்கு பின்பு அடிக்கடி பெரிய முகாம்களை தாக்குவது நின்று போனது. இதனால் அரசிடமிருந்து இராணுவ தளபாடங்களை கைப்பற்றுவது நின்று போனது. இத்துடன் மட்டும் நில்லாது இயக்கத்திற்கு நீண்டகாலமாக ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்து, அவற்றை நாட்டிற்குள் வெற்றிகரமாக கொண்டு போய்ச் சேர்ந்த்துவந்த கே.பி என்பவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். அவரது இடத்தை நிரப்ப வந்த புதியவர்கள் ஒரு மிகவும் மோசமான சூழலில் தமது கன்னி முயற்சிகளில் ஈடுபடலானார்கள். சிலர் தமது முதல் எத்தனிப்பின் போதே கைதானார்கள். இவற்றை தாண்டி கப்பலில் ஏறிய பொருட்களும் கடலில் வைத்து இந்திய – சிறீலங்கா இராணுவங்களினால் கைப்பற்றப்பட்டன. நடந்து கொண்டிருந்த சமர்களில் பாவிக்கப்படும் வெடி பொருட்களை பெற்றுக் கொள்வதிலேயே சிரமான நிலைமைகள் தோன்றின. அதேவேளை இந்த யதார்த்த நிலைமைகள் பற்றிய சரியான தெளிவில்லாதவர்கள் போல புலிகளது செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெற்று வந்தன. இரண்டு சிறிய விமானங்களை வைத்துக் கொண்டு உலகிலேயே விமானப்படையை வைத்திருக்கும் ஒரே கெரில்லா அமைப்பு என்று மார்தட்டினார்கள். இவற்றை கொண்டு வந்து தம்மால் உள்ளூரில் தயாரிக்ப்பட்ட குண்டுகளை அரச இலக்குகள் மீது தாக்குவதற்கு பயன்படுத்தினார்கள். இதற்கு வழங்கப்பட்ட பிரச்சார முக்கியத்துவம் இருந்த அளவிற்கு இவற்றின் தாக்குதல்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்iலை. (இதற்கு விதிவிலக்காக அநுராதபுரம் விமான நிலையம் மீதான தாக்குதலில் தரை மூலமாக ஊடுறுவித் தாக்கிய கெரில்லாக்களுக்கு துணையாக இந்த விமானங்கள் செயற்பட்டது இருக்கலாம்) ஆனால், இதற்கு மறுதலையாக, இவை ஏற்படுத்திய பாதகமான எதிர்வினைகள் பாரதூரமானதாக அமைந்தன.

இந்தியாவில் அணுஉலைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவை விடுதலைப் புலிகளது விமானங்களின் தாக்குதல் எல்லைக்கு உட்பட்டனவாக இருக்கின்றன. இந்தியாவின் கேந்திர நலன்களை பற்றிய எச்சரிக்கைகளை தேவையற்று கிளப்பிவிட இந்த விமானங்கள் காரணமாக அமைந்துவிட்டன. ஏற்கனவே சீனாவின் இராணுவ உதவிகள் காரணமாக எரிச்சலைடைந்து போயிருந்த இந்திய அரசு, இந்த விடயத்தில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை அனுமதிக்க முடியாது. ஏனெனில், சீனாவிலிருந்து பெறப்படும் ராடர்கள், புலிகளின் விமானங்களை மட்டுமன்றி இந்திய இராணுவ நடவடிக்கைகளையும் சீனா கண்காணித்துக் கொள்ள உதவும் என்பதால், இந்திய அரசு தான் விரும்பியோ, விரும்பாமலோ உதவி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இப்படியாக, புலிகள் ஏற்கனவே இந்தியாவுடன் ஏற்படுத்தியிருந்த முரண்பாடுகள், இந்த விமானப்படை தொடர்பான எச்சரிக்கைகள், சீனாவின் தலையீடு தொடர்பாக இருந்த அவதானங்கள் போன்றவை ஒன்று சேரவே, இந்திய அரசானது, சிறீலங்கா அரசுடன் இந்த போர் நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்துழைத்து புலிகளை கருவறுப்பது என்பதில் முழு மூச்சாக இறங்க வழிவகுத்தது. இதுவும் இந்த யுத்தத்தின் முடிவுகளை நிர்ணயித்ததில் தீர்க்கமான பங்காற்றியுள்ளது. குறிப்பாக புலிகளின் தலைமை இறுதியில் முழுமையாக அழிக்கப்பட்டதில் இந்திய உளவுப்படையான ‘ரோ’ முக்கிய பாத்திரம் வகித்ததாக நம்பப்படுகிறது. அத்துடன் இலங்கை விவகாரங்களில் நீண்டகாலமாக தலையீடு செய்து வந்த இந்திய அரசின் பாத்திரம், ஏனைய நாடுகள் எதனது பங்களிப்பையும் விட முக்கியமானதாக அமைந்தது.

சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதில் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பணத்தை பலவந்தமாக பெற முனைந்தது, இந்த நாடுகளில் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு இட்டுச் சென்றது. 2001 செப்டம்பர் 11 இற்கு அடுத்த உடனடியான காலத்தில் தடை செய்யப்படாமல் தப்பிக் கொண்ட ஒரு அமைப்பானது, 2005 இல் தடை செய்யப்பட நேர்ந்ததென்பதை, புலிகளில் முட்டாள்தனம் தவிர வேறு விதமாக விளங்கிக்கொள்ள முடியாது.

அடுத்ததாக, புலிகள் வேகமாக மிகவும் அத்தியாவசியமாக அவசியப்பட்ட நவீன ஆயுத தளவாடங்களை வாங்கிக் கொள்ள அவசிமான ஒரு கட்டத்தில், அவர்களது நீண்ட கால ஆயுத்கொள்வனவாளரான கே.பி என்பவரை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்தது அடுத்த பாரிய தவறாக அமைந்தது. அப்போது தோன்றியிருந்த நெருக்கடிமிக்க சர்வதேச சூழலில், அனுபவம் வாய்ந்த ஒருவரே வெற்றிகரமாக தொடர்ந்தும் செயற்படுவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இதற்கு தலைகீழாக புதியவர்களது “கத்துக்குட்டித்தனம்” மிகவும் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது. அடுத்து அடுத்தாக பன்னிரன்று ஆயுத கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டன. இப்படிப்பட்ட இழப்புகளை எந்தவொரு அமைப்புமே ஈடு கொடுப்பது என்பது மிகவும் கடினமானதே. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதுதான் இந்த விமானப்படை பற்றிய பரபரப்பும் சேர்ந்துகொண்டது. உண்மையில் இவர்கள் தொழில் நேர்த்தியுடன் (professional) செயற்பட்டிருப்பார்களானால், இந்தவிதமான பரபரப்புகளில் சக்தியை விரயமாக்காமல், மிக முக்கியமான சில ஆயுதங்களையாவது, உதாரணமாக விமான எதிர்ப்பு ஏவகணைகள் (stinger missels) மற்றும் தமது ஆயுதங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வெடிபொருட்களையாவது விமானங்களின் உதவியுடன் பரசூட் மூலமாக இறக்கியிருக்க முடியும். இன்று கூட பல்வேறு போராளி அமைப்புகளும் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளும் இப்படிப்பட்ட வழிமுறைகளை தாராளமாகவே கையாள்கிறார்கள். ஆனால் இவர்களது கவனங்களோ கோஷ்டி மோதல்களிலும், பண முதலீடுகளிலும் குவிந்திருந்தது.

இதேவேளை புலிகள் பலவந்தமாக புலம் பெயர் தமிழர்களிடம் சேகரித்த பணத்தில் பெரிய பகுதியொன்று அந்தந்த நாடுகளில்; மூலதனமிடப் பயன்படுத்தப்பட்டன. அதுவும் சாதாரணமான வியாபார முயற்சிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டன. உணவகங்கள், பலசரக்கு கடைகள், புடவைக்கடைகள் மற்றும் நீண்டகால முதலீடாக கருதப்பட்ட நிலையான கட்டிடங்கள் போன்றவற்றிலுமான முதலீட்டை எவ்வாறு புரிந்து கொள்வது. ஒரு குறுகிய காலத்தினுள் இயலுமான அனைத்தையும் செய்து அரசை அமைத்து, சர்வதேச அங்கிகாரத்தை பெற முயல்வதா அல்லது ஒரு வர்த்தக நிறுவனம் போல் நாலு காசு பார்க்க, அதுவும் நீண்டகால நோக்கில் முயல்வதா? நாம் எமக்கென சொந்த அரசை அமைத்த பின்பு இந்த கடைகளும் சொத்துக்களும் என்ன அந்நிய செலவாணியை ஈட்டித்தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்h? இதில் புலிகளுடன் இணைந்து நின்று வியாபாரிகளும், இந்த விவகாரங்களை ஊரிலிருந்து கையாண்டு நபர்களது இயலாமை தவிர வேறொன்றையும் காண முடியவில்லை. இந்த நிகழ்வுகள் புலிகளது தேசியிடுதலையை குறுகிய காலத்தினுள் அமைத்துவிடுவது தொடர்பாக அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

Full Arical on : http://www.orunews.com/?page_id=6240

இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முனைபவர்கள் புலிகள் அமைப்பினுள் இருந்து அதன் கடந்தகால தவறான அரசியல் பாதைகளுடன் முறித்துக் கொண்டு, ஏனைய சக்திகளையும் இணைத்துக் கொண்டு, ஜனநாய பாதையில் போராட்டத்தை தெராட வேண்டுமென நினைப்பவர்கள் எமது இயல்பான நண்பர்களாவர். இந்த போக்கு எதிராக நிற்க முனைபவர்கள் ஒரு வரலாற்று ஓட்டத்தை தடுத்து நிறுத்த முனைபவர்கள் என்பதை வரலாறு விரைவில் நிரூபித்துவிடும். நாம் ஆதரிக்கும் போக்கை வெளிப்படுத்துபவர்கள் பற்றியும் பல் வதந்திகள் உலாவுகின்றன என்பதும் உண்மையே. நாம் இங்கு தனிநபர்களை அல்லாமல் அவர்களால் முன்வைக்கப்படும் அரசியலை கருத்திற்கொண்டுதான்; எமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றையும் தாண்டி இன்னமும் பல சந்தேகங்களும், கடந்த காலம் தொடர்பான விமர்சனங்கசளும் கூட எமக்கு இருக்கின்றன என்பது உண்மையே. அவற்றையெல்லாம் பேசி தீர்த்துவிட்டுத்தான் எமது அரசியல் முடிவுகளை மேற்கொள்வோம் என்பது இன்றுள்ள நெருக்கடியான நிலைமைகளில சாத்தியப்படப் போவதில்லை. ஆனால் எமது அடுத்தடுத்த கட்டங்களில் இவை தொடர்பான பல்வேறு விடயங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

Edited by Bond007

இந்த கருத்தை தொடங்கியவர்களுக்கு அறிவு எண்டது இருக்கா?????? அதை இங்கு கொண்டுவந்தவர்க்கு.......................???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை தொடங்கியவர்களுக்கு அறிவு எண்டது இருக்கா?????? அதை இங்கு கொண்டுவந்தவர்க்கு.......................???

கட்டுரையை முழுக்கப் படிச்சிட்டுத்தான் கருத்து எழுதினீங்களா தம்பி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அணுஉலைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவை விடுதலைப் புலிகளது விமானங்களின் தாக்குதல் எல்லைக்கு உட்பட்டனவாக இருக்கின்றன. இந்தியாவின் கேந்திர நலன்களை பற்றிய எச்சரிக்கைகளை தேவையற்று கிளப்பிவிட இந்த விமானங்கள் காரணமாக அமைந்துவிட்டன. ஏற்கனவே சீனாவின் இராணுவ உதவிகள் காரணமாக எரிச்சலைடைந்து போயிருந்த இந்திய அரசு, இந்த விடயத்தில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை அனுமதிக்க முடியாது. ஏனெனில், சீனாவிலிருந்து பெறப்படும் ராடர்கள், புலிகளின் விமானங்களை மட்டுமன்றி இந்திய இராணுவ நடவடிக்கைகளையும் சீனா கண்காணித்துக் கொள்ள உதவும் என்பதால், இந்திய அரசு தான் விரும்பியோ, விரும்பாமலோ உதவி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இப்படியாக, புலிகள் ஏற்கனவே இந்தியாவுடன் ஏற்படுத்தியிருந்த முரண்பாடுகள், இந்த விமானப்படை தொடர்பான எச்சரிக்கைகள், சீனாவின் தலையீடு தொடர்பாக இருந்த அவதானங்கள் போன்றவை ஒன்று சேரவே, இந்திய அரசானது, சிறீலங்கா அரசுடன் இந்த போர் நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்துழைத்து புலிகளை கருவறுப்பது என்பதில் முழு மூச்சாக இறங்க வழிவகுத்தது. இதுவும் இந்த யுத்தத்தின் முடிவுகளை நிர்ணயித்ததில் தீர்க்கமான பங்காற்றியுள்ளது. குறிப்பாக புலிகளின் தலைமை இறுதியில் முழுமையாக அழிக்கப்பட்டதில் இந்திய உளவுப்படையான ‘ரோ’ முக்கிய பாத்திரம் வகித்ததாக நம்பப்படுகிறது. அத்துடன் இலங்கை விவகாரங்களில் நீண்டகாலமாக தலையீடு செய்து வந்த இந்திய அரசின் பாத்திரம், ஏனைய நாடுகள் எதனது பங்களிப்பையும் விட முக்கியமானதாக அமைந்தது.

இந்தக்கட்டுரை ஏதோ இந்தியா ரொம்ப நல்லவன் போலவும் புலிகள் விமானத்தைப் பறக்கவிட்டதாலதான் அவன் முழுமூச்சா அழிக்கவெண்டு வந்திட்டான் என்பது போலவும் இருக்கு. காங்கிரஸ் அரசு ஒன்று இந்தியாவில் வந்திட்டாலே இலங்கையில் என்ன நடக்கும் என்பது வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தாலே தெரியும். ஏதோ பிளேன் பறக்கவிட்டதாலதான் எல்லாம் பிழைச்சது என்பது ஏற்புடையதல்ல.

அதே மாதிரி ஆனையிறவைத் தொடர்ந்து முன்னேற முடியாமல் போனதுக்கு ஆள்ப் பற்றாக்குறைதான் காரணம் என்பது பலதடவை அலசப்பட்டுவிட்டது. அப்போதிருந்த வாஜ்பாய் அரசின் இலங்கை குறித்த கைவிடு நிலைக் கொள்கையும் எந்த அளவுக்கு ஓயாத அலைகள் 3 க்கு வலுச்சேர்த்தது என்பதையும் கருத்தில் கொள்ளல் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை தொடங்கியவர்களுக்கு அறிவு எண்டது இருக்கா?????? அதை இங்கு கொண்டுவந்தவர்க்கு.......................???

எதையும் எவனும் எழுதுவான் அதை பகுத்தாய்வு செய்வது ஒவ்வோருவரின் கடமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எவனும் எழுதுவான் அதை பகுத்தாய்வு செய்வது ஒவ்வோருவரின் கடமை

புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா என்கிற தலைப்பு பலரையும் விசனப்படுத்திவிட்டது போலும். புலிகளின் பாதையில் உறுதியான நம்பிக்கை வைத்தவர்கள் ஆம் என்னும் தீர்க்கமான பதிலை வைத்துவிட்டுச் சென்றிருப்பார்கள்..! :rolleyes:

இந்தக்கட்டுரையின் நோக்கம் இந்திய ஆதரவாளர்களின் (அடிமைகளின்? ) கருத்துக்களைக் கேட்பதேயன்றி புலிகளைக் குற்றம் சுமத்துவதல்ல. தற்போது நடந்துவரும் நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது புலிகளை அழிக்கவென்று 2004 இல் கிளம்பிய இந்திய அரசின் தற்போதைய நிலை மிகவும் பாரதூரமாக உள்ளது என்பதே இக்கட்டுரை சுட்டி நிற்கும் பொருள். இந்தியா என்கிற ஓட்டைக் கப்பலை நம்பாத புலிகளின் தூரநோக்கின் வெற்றி என்றும் இதனைக் கொள்ளலாம். :rolleyes:

...........இதனுடன் தொடர்புடைய Brahma Chellaney இன் கட்டுரையின் இணைப்பு

இணைப்பு

விடுதலைப் புலிகளின் இந்தியா குறித்த நிலைப்பாடு எப்பவுமே தெளிவாக இருந்திருக்கின்றது. ஆரம்பம் முதலே தலைவர் இந்தியாவை சரியாக எடை போட்டு இருந்தார். தமிழர் பிரச்சினையை இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக நயவஞ்சகமாக கையாண்டது. பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தை தன்னுடையா நலனுக்காக உருவாக்கிய போதும் புதிய தேசம், இந்தியாவுடன் நட்பாக இருக்கவில்லை. இந்தப் பின்னணில் ஈழப் பிரச்சினையை இந்திரா காந்தி வேறுவிதமாக கையாள நினைத்தார். அதாவது புதிய தேசம் ஒன்றை உருவாக்காமல், தமிழர் பிரச்சினையை அப்படியே இயங்கு நிலையில் வைத்துக்கொண்டு, சீனா, பாக்கிஸ்தான் போன்ற தன் எதிரி நாடுகளுடன் நட்பாக இருக்கும் இலங்கைக்குப் பாடம் புகட்ட எண்ணினார். அதன் காரணமாக ஈழத்தில் கொதித்துப் போயிருந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்படி பயிற்சி பெற்ற இயக்கங்களுக்குள் விடுதலைப் புலிகள் மட்டுமே சரியாக இந்தியாவை எடை போட்டு இருந்தனர். இந்திரா காந்தி நினைத்திருந்தால் 80களின் ஆரம்பத்திலேயே இப் பிரச்சினையை முடித்து விட்டிருக்கலாம். ஆனால் ஆதிக்க வெறி பிடித்த நேரு குடும்பத்தில் இருந்து வந்தவரிடம் நீதியை எதிர் பார்க்கமுடியுமா? வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுவெளியேறிய போது சுதந்திரமாக இயங்க விரும்பிய பல சமஸ்த்தானங்களை பலவந்தமாக இந்திய கூட்டமைப்புக்குள் இணைத்தவர் நேரு.

இந்தியா என்பது, ஒரு பெரிய (பம்பாய்) வெங்காயம் மாதிரி, ஒருவருக்கு அதை எறிவதன் மூலம் ஒரு காயத்தினை ஏற்படுத்தலாம். இந்தக் காயத்தினை உண்டாக்கின வெங்காயத்தை உரித்துகொண்டே போனால் ஒன்றுமே இருக்காது. இது போலவே இந்தியா இல்லாத ஒன்றை இருப்பது போல காண்பிக்கும் நாடு. இந்தியா தென் மாநிலங்களுடன் இணைந்திருக்கும் வரை தான் அதற்குப் பலம். இதனை நேரு குடும்பம் நன்கு அறியும். வட எல்லையில் தன்னுடையா எதிரிகளை அடக்குவதற்கு தென் மாநிலங்களின் அறிவும் படை வீரர்களும் அதற்குத் தேவை. ஆனால் தென் மாநிலங்களின் மக்களுக்கும் இந்தியாவின் வட போர் முனைக்கும் எவ்விதமான வரலாற்றுப் பகையும் இல்லை. இதனால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் தென் மாநில மக்களுடன் தேவை இல்லாமல் முரண்பட வாய்ப்பு உள்ளது. இது கூட (இன, நிற அடிப்படையில் )இறுதிச் சமரில் இந்நாடுகள் எமக்கு எதிராக நின்றமைக்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

என்னைப் பொறுத்த வரை சரியாக இந்தியாவை அடையாளம் கண்ட புலிகள், இப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ஒரு இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஒருபோதும் முனையவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் இதை உடனடியாகவே ஆரம்பித்திருக்க வேண்டும். இப்பவும் இந்தியாவை நம்புவதை விட எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரான அணியில் உள்ள நாடுகளை எம் பக்கம் திரும்பச் செய்வதே எமக்கு நன்மை பயக்கும். :rolleyes:

சில தினங்களுக்கு முன், முன்னைநால் யாழ்பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கூறினார் .......

........... "எம்மினத்தின் இவ்வழிவுகளுக்கும், அவலங்களுக்கும் எம்மினத்தின் தலைவர்களாக கடந்த 60 வருடங்களாக இருந்த அனைவரும் காரணகர்த்தக்கள். சிங்கள கசாப்பு கடைக்கு, இவர்கள் தமிழ் மக்களை போட்டி போட்டு அனுப்பி பலி கொடுத்தார்கள். ..... ஆனால் நான் ஆனந்தசங்கரியையோ, டக்லஸையோ, சித்தார்த்தனையோ போல் பிரபாகரனையும் துரோகி என அழைக்க மாட்டேன். பிரபாகரன் துரோகி அல்ல ஒரு முட்டாள். பிரபாகரனிடம் ஒரு இராணுவத்தளபதி உரிய குணாம்சங்கள் இருந்ததே ஒழிய அரசியல் தலைமைக்குரிய எவையும் இருக்கவில்லை". ......

தயவுசெய்து என்னை இங்கு ஒருவரும் வாட்டி எடுக்க வேண்டாம், இக்கருத்துக்கு!!! இது எனது சொந்தக்கருத்தல்ல.....

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

அற்புதமான சிந்தனை, தூரநோக்கு!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (தயா @ Oct 10 2009, 10:51 PM) *

இந்தியனிடம் அடிமையாக வேலை செய்வதை சிங்களவனிடமே செய்து விட்டு போகலாமே.. இதுதான் தலைவரின் வாதம்...

அற்புதமான சிந்தனை, தூரநோக்கு!

தலைவர் சொன்னதில் என்ன பிழை? சிங்களவனிட்ட இருந்து மீண்டு இந்தியனுக்கு அடிமையா இருக்கிறதை விட சிங்களவனிட்டையே அடிமையா இருக்கலாமே எண்டுதானே சொல்லியிருக்கிறார்..?!

ஓஓ.. இது உங்கட கருத்தியலுக்கு முரணா இருக்கு..! அதாவது இந்தியனிட்ட அடிமையா இருக்கிறதில பிரச்சினையில்லை என்கிற கோட்பாட்டுக்கு பங்கம் வந்திட்டிது..! :icon_mrgreen:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தினங்களுக்கு முன், முன்னைநால் யாழ்பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கூறினார் .......

........... "எம்மினத்தின் இவ்வழிவுகளுக்கும், அவலங்களுக்கும் எம்மினத்தின் தலைவர்களாக கடந்த 60 வருடங்களாக இருந்த அனைவரும் காரணகர்த்தக்கள். சிங்கள கசாப்பு கடைக்கு, இவர்கள் தமிழ் மக்களை போட்டி போட்டு அனுப்பி பலி கொடுத்தார்கள். ..... ஆனால் நான் ஆனந்தசங்கரியையோ, டக்லஸையோ, சித்தார்த்தனையோ போல் பிரபாகரனையும் துரோகி என அழைக்க மாட்டேன். பிரபாகரன் துரோகி அல்ல ஒரு முட்டாள். பிரபாகரனிடம் ஒரு இராணுவத்தளபதி உரிய குணாம்சங்கள் இருந்ததே ஒழிய அரசியல் தலைமைக்குரிய எவையும் இருக்கவில்லை". ......

சரியாச் சொன்னீங்கள்.... அப்படியே அந்த பேராசியரை சந்திச்சா சொல்லுங்கோ..... அரசியல் தலைமைக்கு இப்ப இடம் காலியாகிடக்குதாம்...... அப்படியே பென்சன் எடுக்க வரேக்க கச்சேரியடியிலே வச்சு ஒரு கட்சி ஆரம்பிச்சு தலைமை தாங்கி.. முடிஞ்சா ஏதாவது செய்யச்சொல்லி

தயவுசெய்து என்னை இங்கு ஒருவரும் வாட்டி எடுக்க வேண்டாம், இக்கருத்துக்கு!!! இது எனது சொந்தக்கருத்தல்ல.....

குறைச்சபட்சம்,முடிஞ்சா சொந்தாமாக ஒரு கருத்தைதன்னும் எழுதுங்கோவன்..... அதைவிட்டிடு உங்கட மனசிலவார கருத்துக்கெல்லாம் குஞ்சியப்பு சொன்னார்,கசிபடிச்சவர் சொன்னார் எண்டு கதை அளக்கிரியல்...... ஏன் இன்னும் பயம் போகேலையே.....

Bond007 Posted Today, 09:26 AM

ஆனையிறவு முகாம் தாக்குதல்களை அடுத்து புலம் பெயர் தொடர்பு சாதனங்களான வானொலிகளும், தொலைக் காட்சிகளும் தமது வழமையான அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்திவிட்டு அன்றைய வெற்றி தொடர்பான அறிவித்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை சேகரிப்பதற்கான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருந்தன. மக்கள் தாமகவே முன்வந்து பணமாகவும், நகையாகவும் தாராளமாகவே அள்ளிக் கொடுத்தார்கள். புலிகளது தலைமையை விமர்சித்த பலரது வாயை அடைக்கச் செய்து அவர்களை புலிகளது ஆதரவாளர்களாக மாற்றி விட்டது இந்த வெற்றி. ஒரு புரட்சிகர குழுவிலிருந்த சிலர் தமது அமைப்பை கலைத்துவிட்டு புலிகளுடன் சென்று சங்கமாகும் அளவிற்கு இந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஓம்பாருங்கோ இதைதான் நாமும் சொல்லுறோம்.... புலிகளின்ட வெற்றியிலே புலிகளை தூக்கி தலையில வச்சாடினவைதான் புலி தோத்ததும் தொப்பெண்டு நிலத்தில போட்டு மிதிக்கினம்...... மற்றும்படி தனது சொத்து சுகத்தை இழந்ததுகள் இண்டைக்கு ஒண்டுமே இல்லாம முகாமில வாடுதுகள்..... அதையும் காசாக்க தான் இந்த ஜனநாயக கடலில குதிச்சவை நீச்சலடிக்கினம்

சில தினங்களுக்கு முன், முன்னைநால் யாழ்பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கூறினார் .......

........... "எம்மினத்தின் இவ்வழிவுகளுக்கும், அவலங்களுக்கும் எம்மினத்தின் தலைவர்களாக கடந்த 60 வருடங்களாக இருந்த அனைவரும் காரணகர்த்தக்கள். சிங்கள கசாப்பு கடைக்கு, இவர்கள் தமிழ் மக்களை போட்டி போட்டு அனுப்பி பலி கொடுத்தார்கள். ..... ஆனால் நான் ஆனந்தசங்கரியையோ, டக்லஸையோ, சித்தார்த்தனையோ போல் பிரபாகரனையும் துரோகி என அழைக்க மாட்டேன். பிரபாகரன் துரோகி அல்ல ஒரு முட்டாள். பிரபாகரனிடம் ஒரு இராணுவத்தளபதி உரிய குணாம்சங்கள் இருந்ததே ஒழிய அரசியல் தலைமைக்குரிய எவையும் இருக்கவில்லை". ......

தயவுசெய்து என்னை இங்கு ஒருவரும் வாட்டி எடுக்க வேண்டாம், இக்கருத்துக்கு!!! இது எனது சொந்தக்கருத்தல்ல.....

அற்புதமான சிந்தனை, தூரநோக்கு!

நல்லது. யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்களைவிடத் திறமையானவர்கள், அறிவில் கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அவர்களின் திறமைக்கேற்ற விருதுகள்கூட இந்த உலகத்தில் உருவாக்கப்படவில்லையே. ஏனென்றால், அவர்கள் அவைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சொன்னவரைவிட, இதை இந்தக் களத்தில் கொண்டுவந்து சேர்த்தவரை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால் அதிமோதாவி பாருங்கள். :icon_mrgreen::(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்களைவிடத் திறமையானவர்கள், அறிவில் கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அவர்களின் திறமைக்கேற்ற விருதுகள்கூட இந்த உலகத்தில் உருவாக்கப்படவில்லையே. ஏனென்றால், அவர்கள் அவைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சொன்னவரைவிட, இதை இந்தக் களத்தில் கொண்டுவந்து சேர்த்தவரை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால் அதிமோதாவி பாருங்கள். :icon_mrgreen::(

வணக்கம் ஆச்சி long time

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிடம் ஒரு இராணுவத்தளபதி உரிய குணாம்சங்கள் இருந்ததே ஒழிய அரசியல் தலைமைக்குரிய எவையும் இருக்கவில்லை".

இருந்திருந்தால் ஒரு திருமாவளவனாகவோ, ஒரு கருணாநிதியாகவோ இனத்தையல்லோ காட்டி கொடுத்திருப்பார். ஆளுமை மிக்க தலைவராக காணப்பட்டார். அது தானே அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கத்தை தெரிவு செய்தார். இந்தியாவின் சுத்து மாத்துக்களை முதன் முதலில் இனம் கண்ட இயக்கம் புலிகள் இயக்கம் தான். புளட்டின் அரசியல் மேதாவியான சந்ததியார் போன்ரவர்கள் கூட இந்தியாவின் பம்மாத்தை புரியாமல் கடைசியில் உட்கட்சி பூசலால் (றோ புகுந்து விளையாடி) மாறி மாறி தங்களுக்குள் போட்டு தள்ளியதை யார் மறப்பார்கள்.?? சிங்களவுடன் பேசுவதற்கு செல்வநாயகம் போன்றவகளாலேயே முடியவில்லை என்பதை பிரபாகரன் நன்கறிவார். அவர்களுடன் பேசக்கூடிய ஒரே ஆயுதம் , ஆயுதம் தான் என்பதையும் அவர் தான் மக்களுக்கு உணர்த்தியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இருந்திருந்தால் ஒரு திருமாவளவனாகவோ, ஒரு கருணாநிதியாகவோ இனத்தையல்லோ காட்டி கொடுத்திருப்பார். ஆளுமை மிக்க தலைவராக காணப்பட்டார். அது தானே அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கத்தை தெரிவு செய்தார். இந்தியாவின் சுத்து மாத்துக்களை முதன் முதலில் இனம் கண்ட இயக்கம் புலிகள் இயக்கம் தான். புளட்டின் அரசியல் மேதாவியான சந்ததியார் போன்ரவர்கள் கூட இந்தியாவின் பம்மாத்தை புரியாமல் கடைசியில் உட்கட்சி பூசலால் (றோ புகுந்து விளையாடி) மாறி மாறி தங்களுக்குள் போட்டு தள்ளியதை யார் மறப்பார்கள்.?? சிங்களவுடன் பேசுவதற்கு செல்வநாயகம் போன்றவகளாலேயே முடியவில்லை என்பதை பிரபாகரன் நன்கறிவார். அவர்களுடன் பேசக்கூடிய ஒரே ஆயுதம் , ஆயுதம் தான் என்பதையும் அவர் தான் மக்களுக்கு உணர்த்தியவர்.
:icon_mrgreen::(:(:lol:
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு பூரான் கடிச்சு போட்டுதோ?? :icon_mrgreen: . இல்லை பசை வாளிகள் தான் தோழர் என்று சொல்லி அரசியல் பாடம் நடாத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டினவையோ.? :(:(:lol:

புளட்டின் அரசியல் மேதாவியான சந்ததியார் போன்ரவர்கள் கூட இந்தியாவின் பம்மாத்தை புரியாமல் கடைசியில் உட்கட்சி பூசலால் (றோ புகுந்து விளையாடி) மாறி மாறி தங்களுக்குள் போட்டு தள்ளியதை யார் மறப்பார்கள்.??

... உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் சந்ததியாரை, யார் போட்டது என்று???????????? ................ புளொட்டில் இருந்து வெளியேறிய சந்ததியார் தலைமையிலான ..... உங்களையும் இணைக்கிறோம், பேச வாருங்கள் .... இறுதியில் ..... போங்கோடாப்பா, சும்மா அவன் அவன் சந்ததியார், வங்கம் தந்த பாடம், புளொட்டின் மறுபக்கம் பற்றி கதைக்கிறான் என்றவுடன் .... உண்மை, வரலாறு தெரியாவிடின் சும்மா இருங்கள். ........ அதை கொடுத்து, இதை கெடுக்க வேண்டாம்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்ததியாரை தெரியுதோ இல்லையோ இறைகுமாரன்,உமைகுமாரனை யார் போட்டது என்று நல்லா தெரியுமய்யா!

சுழிபுரத்தில் புலிகளின் நோட்டீசு ஒட்டபோனவர்களை கொன்று மணலில் புதைத்தது யார் என்றும் ரொம்ப தெரியுமப்பு!!

இவர் புளொட்டில் இருந்து கொள்ளை வேறுபாட்டாலா (புளொட்டுக்கென்று கொள்கை கத்தரிக்காய் எதுவுமில்லை)

வெளிவந்தவர்?? இப்போது சொல்கிறோம்.கேட்டக்கொள்ளுங்க

அற்புதமான சிந்தனை, தூரநோக்கு!

இந்தியாவுக்கு ஒரு குறுநில சிற்றரசை கொடுக்க எங்கட தமிழ் இளைஞர்களை பிரபாகரன் பலி கொடுத்து இருக்க வேண்டும் எண்டிறீயள் ... அப்ப இந்தியா எங்களுக்கு முழு சுந்தந்திரத்தையும் வழங்கி இருக்கும் எண்டு நம்புறீயள்.. அப்பிடியே...???

அப்பவும் உங்களை அங்கீகரிக்க படாத ஒரு அரசாக ஒரு தாய்வானை போலத்தான் இந்தியா வைத்து பயன் படுத்தி இருக்கும் என்பது புரிகிறதா...??? இலங்கை அரசு காலில் விழுந்து கெஞ்சி இருந்தால் அப்பவே எல்லாரையும் போடுமாறு தானே (இலங்கை இராணுவம் ) எனும் பெயரில் பிடித்து கொடுத்தும் இருக்கும் ... இலங்கையில் இருந்து செயற்பட்ட போராளிகள் இலங்கை அரச படைகளின் நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்... இப்படி செய்தியை உலகு தெரிந்து வைத்து இருக்கும்...

அப்பவும் யாழ்களம் மாதிரி ஒண்றில் பிரபாகரன் ஒரு உதவாக்கரை எண்று நம்பி வந்த மக்களை இந்தியாவிடம் கூட்டி கொடுத்தான் எண்று நீங்கள் அலறி அடித்து இருப்பீர்கள்...

பங்களாதேசுக்குள் போவதுக்கு இந்தியர்களுக்கு உதவியது முக்திபாகினி எனும் அமைப்பு.... இப்ப அந்த அமைப்பின் பொறுப்பில் இருந்த தலைவர்கள் யாராவது உயிரோடு உள்ளார்களா எண்று யாராவது வங்காளிகளை சந்தித்தால் கேட்டுப்பாருங்கள்... பின்னர் இந்தியாவை புரிந்து கொள்ளலாம்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.