Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள படத்தில் நடிக்கவில்லை: சூர்யா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் மாட்டுகிறார் சூர்யா. முன்பு மாட்டியது வாய்க்கொழுப்பினால். இப்போது மாட்டப்போவது தேவையில்லாமல் கொடுத்த கால்ஷீட்டினால். கோடம்பாக்கத்தை குலுங்க வைக்கப் போகும் அந்த தகவல் இதுதான்.

தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது தமிழகம். சில மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு எதிராக படம் எடுத்து அதை சென்னையில் உள்ள லேப்பில் பிரிண்ட் போட வந்த சிங்கள இயக்குனர் ஒருவருக்கு அடி-உதை விழுந்ததெல்லாம் கூட சூர்யாவின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். சிங்கள இயக்குனர் சுரேஷ் குமார் சிங்கை என்பவர் இயக்கப் போகும் சிங்கள படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். படத்தின் பெயர் தேவதாசி என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யா-சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இலங்கையில் துவங்குகிறதாம். சிங்களன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க தமிழரான சூர்யா எப்படி ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த படத்தில் அவர் நடித்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்குமாம்!

Viduppu.com

Edited by Bctamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், சிங்களப் படத்தில் நடிக்கும் உத்தேசம் தனக்கு கொஞ்சமும் இல்லை என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சிங்கள இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது. இதற்கு தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிங்களவர் படத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இச்செய்தி குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,''சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதாக வெளிவந்த செய்தியை படித்தவர்கள் மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் இப்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் 'சிங்கம் ' படத்தில் நடித்து வருகிறேன்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ஒரு இந்தி படம் ஒன்றில் நடித்து உள்ளேன். உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இதை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

சிங்கள இயக்குனரின் இயக்கத்தில் சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. சிங்களப் படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்''என்று சூர்யா கூறியுள்ளார்.

நன்றி thedipaar.com

file பட்ங்களைப் பார்வையிட‌ http://www.thedipaar.com/cinema/cinema.php?id=2677&cat=news

நல்ல காலம் சபேசன் 'சிங்கம்' படத்தை புறக்கணிக்க முடிவு செய்யிறதுக்க சூர்யா மறுப்பறிக்கை வெளியிட்டார்.

எண்டாலும் சிங்கம் எண்ட படத்தில நடிக்கிற சூர்யா உடனடியா அந்தப்படத்தின்ர பெயரை புலி என்டு மாத்தோணும் இல்லாட்டி புலம்பெயர் தமீழர்கள் எல்லாம் சூர்யாட படங்கள புறக்கணிக்கப்போறம்.

எடுத்தற்கெல்லாம் கொடி பிடிப்பதே சிலரது வேலையாகிவிட்டது. இங்கே தமிழர்களுக்கெதிரி சிங்கள அரசா?? அல்லது முழுச் சிங்கள சமுதாயமா?? கலையையும் அரசியலையும் போட்டுக் குளப்பி என்ன பிரயோசனம்?? முகாம்களிலுள்ள மக்களுக்கு கஞ்சி ஊத்த சிங்கள அரசும் சிங்கள மக்களும் வேண்டும். ஆனால் சூர்யா சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கக் கூடாது. நல்ல காமெடி தான். நினைக்கவே கண்ணைக் கட்டுது..................

நன்றி முனிவர் ஜீ. :lol: "க" காலைவாரி "கு" வாகிவிட்டது. :lol: தற்போது மாற்றி விட்டேன்.

Edited by Vasampu

நல்ல காலம் சபேசன் 'சிங்கம்' படத்தை புறக்கணிக்க முடிவு செய்யிறதுக்க சூர்யா மறுப்பறிக்கை வெளியிட்டார்.

எண்டாலும் சிங்கம் எண்ட படத்தில நடிக்கிற சூர்யா உடனடியா அந்தப்படத்தின்ர பெயரை புலி என்டு மாத்தோணும் இல்லாட்டி புலம்பெயர் தமீழர்கள் எல்லாம் சூர்யாட படங்கள புறக்கணிக்கப்போறம்.

:lol:பின்னே நாங்கள் தன்மானச் சிங்கங்கள் (புலிகள்) அல்லவா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்தற்கெல்லாம் கொடி பிடிப்பதே சிலரது வேலையாகிவிட்டது. இங்கே தமிழர்களுக்கெதிரி சிங்கள அரசா?? அல்லது முழுச் சிங்கள சமுதாயமா?? கலையையும் அரசியலையும் போட்டுக் குளப்பி என்ன பிரயோசனம்?? முகாம்களிலுள்ள மக்களுக்கு குஞ்சி ஊத்த சிங்கள அரசும் சிங்கள மக்களும் வேண்டும். ஆனால் சூர்யா சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கக் கூடாது. நல்ல காமெடி தான். நினைக்கவே கண்ணைக் கட்டுது..................

வசம்பண்ணை குஞ்சி இல்லை கஞ்சியாக்கும் :lol:

நம்மட தமிழ் மக்களுக்கு சிலோன் மனோகர் சிங்கள பைலா பாட்டு பாடுனா தப்புத்தானே :lol::unsure:

நல்ல காலம் சபேசன் 'சிங்கம்' படத்தை புறக்கணிக்க முடிவு செய்யிறதுக்க சூர்யா மறுப்பறிக்கை வெளியிட்டார்.

எண்டாலும் சிங்கம் எண்ட படத்தில நடிக்கிற சூர்யா உடனடியா அந்தப்படத்தின்ர பெயரை புலி என்டு மாத்தோணும் இல்லாட்டி புலம்பெயர் தமீழர்கள் எல்லாம் சூர்யாட படங்கள புறக்கணிக்கப்போறம்.

:lol::):lol::lol::unsure::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுத்தற்கெல்லாம் கொடி பிடிப்பதே சிலரது வேலையாகிவிட்டது. இங்கே தமிழர்களுக்கெதிரி சிங்கள அரசா?? அல்லது முழுச் சிங்கள சமுதாயமா?? கலையையும் அரசியலையும் போட்டுக் குளப்பி என்ன பிரயோசனம்?? முகாம்களிலுள்ள மக்களுக்கு கஞ்சி ஊத்த சிங்கள அரசும் சிங்கள மக்களும் வேண்டும். ஆனால் சூர்யா சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கக் கூடாது. நல்ல காமெடி தான். நினைக்கவே கண்ணைக் கட்டுது..................

அடைச்சு வச்சிருக்கிற சனத்தை தங்கடை தங்கடை இடத்துக்கு போக விடச்சொல்லுங்கோ பாப்பம்.?

எந்த ஒரு நாய்க்கூட்டங்களும் அந்த சனத்துக்கு கஞ்சி ஊத்தத்தேவையில்லை

அவையள் தங்கடை பாட்டை தாங்களே பாப்பினம்.

இப்பவெல்லாம் கலையை கலையாக பாக்கேலாது

ஏனெண்டால் கலையெண்ட பேரிலைதானே அரசியலே நடக்குது

அடைச்சு வச்சிருக்கிற சனத்தை தங்கடை தங்கடை இடத்துக்கு போக விடச்சொல்லுங்கோ பாப்பம்.?

எந்த ஒரு நாய்க்கூட்டங்களும் அந்த சனத்துக்கு கஞ்சி ஊத்தத்தேவையில்லை

அவையள் தங்கடை பாட்டை தாங்களே பாப்பினம்.

இப்பவெல்லாம் கலையை கலையாக பாக்கேலாது

ஏனெண்டால் "கலையெண்ட பேரிலைதானே அரசியலே நடக்குது"

:Dஅட நீங்களொண்டு. புலத்திலை சில புலன்பெயர்ந்ததுகள், மகிந்த அரசு அடைச்சு வைச்ச எல்லாரையும், தை மாதத்திற்குள் விட்டிடுவாங்கள் போல என்று கவலைப்படுகினம். ஏனெண்டு கேட்டால் சனத்தை அடைச்சு வைச்சிருந்தால்த் தானாம், தங்கடை அரசியல் பிழைப்பை நடத்த முடியுமாம். இப்ப நீங்க சொன்னதிலை ஒரு சின்ன மாற்றம், "கலையெண்ட பேரிலைதானே அரசியலே நடக்குது" :):D

Edited by Vasampu

வவுனியாவில நிக்கிற சனத்தை அரசு விட்டாலும் , சனம் என்னவோ வன்னிக்கு போகேலாது எண்டு சொல்றாங்கள். ஆராவது வெடித்தால் மிஞ்சி இருக்கிற தங்கட உயிரும் போயிடும் எண்டு பயப்படுதுகள். வெளியில இருக்கிறவை வன்னிக்கு அனுப்புங்கோ எண்டு கத்தினம். நீங்கள் எப்ப போறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திரிகையாளர்களை வசைபாடி வழக்கு வம்பில் சிக்கியிருக்கும் சூர்யாவை நோக்கி அடுத்த வில்லங்கம் கிளம்பியிருக்கிறது! "சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா. அந்தப் படத்தி லிருந்து சூர்யா விலகாவிட்டால் அவரின் வீட்டின் முன் ஆர்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்' என பரபரப்பை கிளப்புகிறது இந்து மக்கள் கட்சி.

இது குறித்து விசாரணையில் இறங்கினோம்!

இந்தோ-லங்கன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகவிருக்கும் சிங்களப் படம் "தேவ தாசிகள்'! இந்தப் படத்தில் சூர்யா, சிம்ரன் ஆகியோருடன் சிங்கள நட்சத்திரங்களான க்ளட்டஸ் மெண்ட்டிஸ், ரெக்ஸ் கோடி பில்லி, சண்டன் விஜேஸ்ரீ மற்றும் பிரபல சிங்கள முன்னணி நடிகை மஞ்சுளா ஆகியோரும் நடிக்கிறார் கள். இதில் சூர்யா ஜோடியாக நடிகை மஞ்சுளா நடிக்கிறார். கேமரா மற்றும் நடனம் ஆகிய வேலைகளை தமிழ் சினிமா கலைஞர்கள் செய்கிறார் கள். பொலனருவா, சிகிதியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக் கிறது. படத்தை இயக்குவது சிங்கள சினிமாவின் பிரபல இயக்குநர் சுரேஷ் குமார சிங்கே. இப்படி ஒரு அதிரடி தகவல் கோலி வுட்டைக் கலக்க... "இலங்கையில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்து, முகாம்களில் அடைத்து சித்ரவதை பண்ணிக் கொண்டிருக்கும் நேரத் தில் சிங்களப் படத்தில் சூர்யா நடிப்பதா?' என கோபக் குரல்களும் ஒலிக்கிறது.

இந்த விஷயத்தை கையிலெடுத்து போராட தயாராகியிருக்கும் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரையிடம் பேசினோம்.

""எங்களுடைய சினிமா நண்பர்கள் மூலம் பத்து நாட்களுக்கு முன்பே சூர்யா சிங்கள படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வந்தது. உடனே நாங்கள் சூர்யா தரப்புக்கு தகவல் சொல்லியனுப்பினோம். ஆனால் ‘"சிங்களப் படத்தில் கமிட் ஆகவில்லை' என பதில் வந்தது! ஆனால் ஓரிரு மீடியாக்களில் "சூர்யா நடிப்பது உண் மைதான்' என இப்போது செய்தி வந்துள்ளது. இதையடுத்து இந்த படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்யும் மேனேஜர்களுள் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் எங்கள் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன். சூர்யா, சிம்ரன் ஆகியோருக்கு இலங்கை செல்ல ஃப்ளைட் டிக்கெட்டெல்லாம் போட்டாச்சு! டிசம்பர் 5-ந் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது என்று உறுதிபடுத்தியிருக்கிறார் அந்த மேனேஜர். அதனால்தான் சூர்யாவுக்கு எதிராக போராட்ட எச்சரிக்கை விட்டிருக்கிறோம்.

சூர்யாவை பாலா, அமீர் போன்ற தமிழ் கலைஞர்கள் தான் சிறந்த நடிகராக்கினார்கள். இப்போது அவர் திறமையை சிங்களர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவையும், நடிகர்களையும் வாழவைப்பதே உலகம் முழுக்க இருக்கும் இலங்கை தமிழர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக இலங்கை தமிழர்களை கொன்று குவித்து, கருவறுப்பு செய்து கொண்டிருக்கும் சிங்களர்களோடு சூர்யா எப்படி கைகோர்க்கலாம்? உலகறிந்த ஒரு தமிழ் நடிகர் சிங்களப் படத்தில் நடிப்பதிலிருந்தே தெரியவில்லையா... சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று' என நாடகம் போட சிங்கள அரசு முயற்சிக்கிறது. இந்த சதிக்கு சூர்யா உடந்தையாக இருக்கக் கூடாது!

இந்தப் பட திட்டத்தின் பின்னணியில் சென்னையிலுள்ள இலங்கை தூதர் வடிவேலு கிருஷ்ணமூர்த்தி இருந்து கொண்டு குழப்புவதாக சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது''’என ஆவேசப்பட்டார் அண்ணாத்துரை.

சினிமா வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தோம்.

நடிகை ராதிகா நிறைய சீரியல்களை தமிழ்-சிங்களத்தில் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார் இப்போதும். சிங்கள(அப்பா)- இந்திய(அம்மா) கூட்டுத்தயாரிப்பான பூஜா இரண்டு நாட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது சர்ச்சைக்கு காரணமான தேவதாசிகள் பட இயக்குநரின் முந்தைய படத்தில் சிங்கள ஹீரோ ரோஷன் ரணவா னாவுடன் நம்ம சிலந்தி மோனிகா நடித்திருக்கிறார். சிங்களப் படங்களை நமது சென்னை லேப்களில் பிரிண்ட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடிகர்களைப் பொறுத்தவரையில் முடிவு எடுப்பது பெரும்பாலும் அவர்களின் மேனேஜர்தான். சூர்யாவிடம் "இது இலங்கையில் தயாராகும் தமிழ்ப்படம்' என்றுகூட அவரின் மேனேஜர் தங்கதுரை சொல்லியிருக்கலாம். அதனால் சூர்யாவை குற்றம் சொல்ல முடியாது! கலைஞர்களுக்கு இன,மொழி பேதம் கிடையாது. இருப்பினும் இப்போதுள்ள சூழலில் உணர்வு ரீதியாக சிங்களப் படங்களில் தமிழ் நட்சத்திரங்கள் பங்கு பெறாமல் இருப்பது நல்லது'' என்றார்கள்.

சூர்யாவிடம் இது குறித்து கேட்டோம்.

""எங்களது அகரம் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகள் படிக்க உதவுகிறோம். திரையுலகம் சார்பில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கிறேன். தகவல்-தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் நடத்திய இலங்கை தமிழருக்கான மனித சங்கிலி போராட்டத்தில் நானும் என் தம்பி கார்த்தியும் கலந்து கொண்டோம்! நானும் இலங்கை தமிழரின் நலத்தில் அக்கறையுள்ளவன்தான். சிங்களப் படத்தில் நடிப்பதாக வந்த செய்தி எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது ஹரி இயக்கத்தில் ‘"சிங்கம்' படத்தில் நடித்து வரு கிறேன். தொடர்ந்து ராம்கோபால் வர்மாவின் இந்திப்படம். ஏ.ஆர்.முருகதாஸ் படம் நடிக்க வுள்ளேன்! இவைதவிர வேறு கமிட்மென்ட்ஸ் ஏதும் இல்லை. சிங்களப் படத்தில் நடிப்பதாக சொல்வது உண்மையல்ல... எனக்கு அதில் விருப்பமும் இல்லை''’என்றார் சூர்யா!

அதே நேரத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகை யில் பட ரைக்டர் சுரேஷ் குமார சிங்கே, தான் இயக்கும் "தேவ தாசிகள்' படத்தில் சூர்யா- சிம்ரன் நடிப்பதாக அளித் திருக்கும் பேட்டி சூர்யா விஷயத்தில் மேலும் சர்ச் சைகளை உருவாக்கு கிறது.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4016

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்களின் கூத்தை பாருங்கள்.

சிங்களவன் சிறந்த திட்டமிடலுடன் இங்கே காய் நகர்த்துகிறான். அங்கே(புலம்பெயர்) தங்களுக்குள்ளேயே அடிபிடி படுகினம்.

முதலில சிந்தித்து பாருங்கள் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க முன்னம்.

எம் மக்களை வன்னிக்கு திரும்பி அனுப்பவில்லை. அப்படியே அனுப்பினாலும் இராணுவ முகாம்களுக்கு பக்கத்திலேதான் குடியேற்றுகின்றனர். அதைவிட ஆங்காக்கு புத்தவிகாரைகள் வேறு.

வன்னியை பூர்வீகமாக கொண்டோர் இருப்பவர்களில் சில நூறு பேர்கள். ஆனாலும் அங்கு முன்னரான இடப்பெயர்வுகளினால் வந்தவர்கள் அதிகம்.

ஆனாலும் அவர்கள் மீள்குடியேற்றம் எனும் பெயரில் பழைய இடங்களுக்கே அனுப்புகின்றார்கள். ஏனெனில் வன்னியை சிங்கள நகரமாக மாற்றுவதற்காக.......

நிறைய உள்ளது பேச.................

தமிழன் பிரச்சனையை உணர்ந்து கதையுங்கள்...................(வசம்பு)

நன்றி.

ஈழத் தமிழர்கள் கேடு கெட்டவர்கள் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும் விதமாக இப்படியான திரிகள் வருகின்றன

புலம் பெயர் நாடு எங்கும் தமிழ் (போலி தேசிய) முதலாளிகள் நடாத்தும் விற்பனை நிலையங்களில் விற்கும் சிறிலங்கா பொருட்களைக் கூட தவிர்க்க முனையாத நாம் இன்று தமிழகத்தை நோக்கி விரல் நீட்டுகின்றோம்... கேடு கெட்டவர்கள் நாம் என எத்தனை முறைதான் வெளியே காட்டுவது

சூர்யாவும், சிவகுமார் ஐயாவும் சத்தமின்றி ஈழ அகதி மக்களுக்கு செய்யும் உதவிகளை பற்றிக்கூட எந்த உணர்வும் அற்றவர்கள் இன்று தம் போலி முகத்தை காட்ட முயல்கின்றனர்

நக்கீரன் எனும் கருணாநிதி பேராதரவு பத்திரிகையின் உண்மையான முகத்தை தெரிந்தும், அதன் ஈழ மக்கள் மீதான வியாபார அரசியல் நோக்கு கொண்ட தந்திரத்தை புரிந்து கொண்டும் இன்னும் இன்னும் ஏன் இப்படியான ஒட்டுதல்கள்?

you too Mullaimainthan ?

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யா கருணாநிதியின் பெறாமகனா? அது எப்படி? யாராவது கூறமுடியுமா?

சூர்யா கருணாநிதியின் பெறாமகனா? அது எப்படி? யாராவது கூறமுடியுமா?

சூரியா கருனாநிதியை பெரியப்பா என்றுதான் கூப்பிடுகிறவராம் ஆனபடியால் இவர் அவரின் பெறாமகன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி, இதன் உண்மைத்தன்மையை தெரிந்தவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக.

மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப‌ ஒன்றையே எழுதவேண்டிய தேவையாய் இருக்கின்றது. இலங்கைத்தமிழரின் அதாவது எமது பிரச்சனையை வைத்து எவன் எவனோ காசு பண்ணவும் அரசியல் பண்ணவும் பார்க்கின்றான்.இது தனது பிரச்சனையென்று த‌மிழன் ஒன்று பட்டு, போலிகளை இனம் காண மட்டும் எந்த ஒரு காலமும் தமிழனுக்கு விடிவு இல்லை. நாங்களே தொடர்ந்தும் எமது தலையில் மண்ணை கொட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

நிழ‌லி சொன்ன‌து முற்றிலும் உண்மை.இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை புறக்கணிப்பது என்ற ஒரு சிறு செயல் திட்டத்தையே நடைமுறைபடுத்த முடியாதவன் தான் புலம்பெயர் தமிழன்.

1. இது பற்றி வானொலியில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டேன் சீறீ லங்கா பொருட்க்களை விற்கும் கடைகளின் விளம்பரங்களை போடாமல் விடலாமே என்று,

2. இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் ஒருவரிடம் கேட்டேன் இவ்வளவு சொல்லியும் பின்னரும் தொடர்ந்து இறக்குமதி செய்கிறீர்களே என்று.

இருவ‌ர் பதில்க‌‌ளும் ஏற‌க்குறைய ஒன்றுதான். என்ன‌ த‌ம்பி குழந்தைப்பிள்ளை மாதிரி கதைகின்றீர்கள் நாங்களெல்லாம் ஒரு சிறு துளி.அவர்கள் கடல் மாதிரி,சன் டீ வி யிடம் இருந்து படம் இறக்குமதி செய்வதிலிருந்து எல்லாமே அவர்கள் செயல் தான் என்று. வேறு பலரிடம் பின்னர் விசாரித்து முற்றிலும் உண்மையென புரிந்து கொண்டேன்.மொத்த இறக்குமதியாளர்களே அவர்கள்தான் ஆனால் பினாமி பெயர்களில்.

இனியாவது நாம் விழிப்போமா?.‌

வசம்பண்ணை குஞ்சி இல்லை கஞ்சியாக்கும் :D

நம்மட தமிழ் மக்களுக்கு சிலோன் மனோகர் சிங்கள பைலா பாட்டு பாடுனா தப்புத்தானே :):D

அகா கிளம்பிடாங்கையா

Edited by vidivelli

மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப‌ ஒன்றையே எழுதவேண்டிய தேவையாய் இருக்கின்றது. இலங்கைத்தமிழரின் அதாவது எமது பிரச்சனையை வைத்து எவன் எவனோ காசு பண்ணவும் அரசியல் பண்ணவும் பார்க்கின்றான்.இது தனது பிரச்சனையென்று த‌மிழன் ஒன்று பட்டு, போலிகளை இனம் காண மட்டும் எந்த ஒரு காலமும் தமிழனுக்கு விடிவு இல்லை. நாங்களே தொடர்ந்தும் எமது தலையில் மண்ணை கொட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

நிழ‌லி சொன்ன‌து முற்றிலும் உண்மை.இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை புறக்கணிப்பது என்ற ஒரு சிறு செயல் திட்டத்தையே நடைமுறைபடுத்த முடியாதவன் தான் புலம்பெயர் தமிழன்.

1. இது பற்றி வானொலியில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டேன் சீறீ லங்கா பொருட்க்களை விற்கும் கடைகளின் விளம்பரங்களை போடாமல் விடலாமே என்று,

2. இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் ஒருவரிடம் கேட்டேன் இவ்வளவு சொல்லியும் பின்னரும் தொடர்ந்து இறக்குமதி செய்கிறீர்களே என்று.

இருவ‌ர் பதில்க‌‌ளும் ஏற‌க்குறைய ஒன்றுதான். என்ன‌ த‌ம்பி குழந்தைப்பிள்ளை மாதிரி கதைகின்றீர்கள் நாங்களெல்லாம் ஒரு சிறு துளி.அவர்கள் கடல் மாதிரி,சன் டீ வி யிடம் இருந்து படம் இறக்குமதி செய்வதிலிருந்து எல்லாமே அவர்கள் செயல் தான் என்று. வேறு பலரிடம் பின்னர் விசாரித்து முற்றிலும் உண்மையென புரிந்து கொண்டேன்.மொத்த இறக்குமதியாளர்களே அவர்கள்தான் ஆனால் பினாமி பெயர்களில்.

இனியாவது நாம் விழிப்போமா?.‌

அப்பிடியே இலங்கை தமிழனிட்டை செல்வம் கொழிச்சு வளியிது... தட்டோடை வந்திட்டாங்கள் ஏமாத்தி ஏந்துறதுக்கு... எதுக்கு கடுப்பை கிளப்புறீங்கள்...?

தமிழன் கடையிலை இலங்கை சாமான் இல்லை எண்டால், என்ன அந்த சாமான்களை மட்டும் போட்டு ஒரு இந்தியனோ, சிங்களவனோ கடையை திறந்து வித்து வருமானத்தை பாத்திட்டு போகட்டுமன்... அதிலையும் சிங்களவன் கடை திறந்தால் வருமானம் நேரடியாக சிங்களவனுக்கு போகும்...

இப்ப பிரச்சினை விற்பனை நிலையங்கள் இல்லை... வாங்கிறசனம்...

கனடாவை விடுங்கோ (எனக்கு தெரியாத இடம்) பிரித்தானியாவில் கடைகளுக்கு வரும் இலங்கை சாமான்களின் இறக்குமதி அளவு வெறும் 3- 30 மில்லியன் பவுன்ஸ்கள்.... ஆனால் எங்கட சனம் உண்டியல் மூலம் இலங்கைக்கு அனுப்பும் பணம் 300 மில்லியன் பவுன்ஸ் வருமாம்.... இதையும் ஒரு கடைக்காறன் தான் சொன்னார்...

ஊசி போறதை பாருங்கோ... அங்கை உலக்கை போகுது விட்டு போட்டு இருங்கோ...

இங்கையின் பாதுகாப்பு செலவு போனவருடம் 16000 கோடி ரூபாவாம்.... ஆனால் வெளிநாட்டில் இருப்போரின் பணம் எண்று வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு அரசு தனது பயன் பாட்டுக்கு எண்று வெளியில் எடுத்தது 10 000 கோடி ரூபாக்கள்... இது எப்பிடி இருக்கு...??

Edited by தயா

திருந்திறதுக்கு வழியே இல்லை.

நாங்களா சூரியாவின் பிரச்சனையை கிளப்பியது அது அங்க இருக்கிற ஒரு கட்சி செய்கிறது பிறகேன் புலம் பெயர் தமிழரை திட்டி தீர்க்கிறீகள்.

கருநாநிதி தமிழனை கொன்று ஒழித்த சிங்கள ராஜபக்சவுக்கு பரிசு கொடுத்து பொன்னாடை போர்த்ததை பேசாத தமிழ்நாட்டு தமிழன் சும்மா புரளி கிளப்பிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….?

தமிழீழத் தமிழர்களான நாம் ஆயுதப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பல சித்திரவதைகளிற்கு மத்தியில் மனவேதனை அனுபவித்து கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழீழத்தமிழர்களான எங்களால் பணம் சம்பாதித்து இன்று உலகளவில் பேசப்படும் நிலைக்கு வந்த நடிகர்கள் சிலரின் நடவடிக்கைகள் எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

surya001.jpg

சமீபகாலமாக எமது மக்களை பல்வேறு வழியில் கேவலப்படுத்திய சிங்களம் ஒரு தமிழனை தனது சிங்களப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் தமிழர்களை தமக்கு ஆதரவாக உலகுக்கு காட்ட முயல்கிறது. அதற்கு எமது தமிழர்களும் விலை போவது வேதனையான விடயம் தான்.

சிறந்த தமிழ் படங்களில் நடித்து வருபவரும் ஒரு தமிழ் பற்றுள்ள தந்தையின் வழி வந்தவருமான நடிகர் சூர்யா தன்னை வளர்த்து விட்ட தமிழை யும் தமிழர்களையும் மறந்துவிட்டாரா…?

தமிழீழத்தமிழர்களின் கதையை கொண்ட நந்தா படத்தின் மூலம் உயர்வடைந்த சூர்யா ஜோதிகாவை மணம் முடிந்த பின் வட இந்தியராக மாறிவிட்டாரா?. . . . . . . என்ற ஐயம் தமிழீழ மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. தந்தை சிவகுமாருடன் சகோதரன் சகிதம் தமிழீழப்படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு விளக்கேற்றிய உங்களின் உன்னத மனம் கண்டு மகிழ்ந்த கள்ளமற்ற மனமுள்ள தமிழர்கள் இன்றைய உங்கள் நிலை அறிந்து வெட்கி தலை குனிகிறோம்.

தமிழீழ போராட்டம் தற்போது நலிவடைந்து இருந்தாலும் அந்த போராட்டத்தாலும் அந்த போராட்டத்தின் உயிர் நாடியான எமது தேசிய தலைவரின் மறைமுகமான செயற்பாடுகளினாலேயே இப்படியான சில நடிகர்கள் இன்று பணம் சம்பாதித்து முன்னுக்கு வந்துள்ளார்கள். தமிழக நடிகர்களை வளர்த்து வைத்த பெருமை தமிழீழத்தமிழர்களாகிய எமக்கே உள்ளது. அதை மறந்து செயற்படுவார்களேயானால் அவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாகும் நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். போராட்டம் நிறைவடைந்து விட்டது தானே எங்கள் நிலைக்கு காரணம் யாருக்கும் தெரியாது

என்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை மாதிரி செயல்படுகிறார்களோ அல்லது அவர்களின் இந்நிலைக்கு எமது தேசிய தலைவர் தான் காரணம் என்று அவர்களுக்கு தெரியாமல் செயற்படுகிறார்களோ என்று தெரியவில்லை.

அஜித் தொடங்கி அர்ஜூன், விஜய் தற்போது சூர்யா வரை எமது உறவுகள் சிந்திய இரத்தத்தின் மீது பணத்தை சம்பாதித்து அந்த இரத்த நாற்றத்துடன் சிங்ளவனுக்கு துணை போகும் அண்மை செயற்பாடுகளால் வெந்து போயிருக்கும் தமிழீழ மக்களாகிய நாம் ஒரு கணம் சேர்ந்து சிந்திப்போமாக இருந்தால் இப்படியானவர்களின் இந்த நிலைக்கு எம்மால் முடிவு கட்ட முடியும். என்பதை தமிழீழ மக்களாகிய நாமும் சம்மந்தப்பட்டவர்களும் சிந்தித்து செயற்பட்டால் மீண்டும் இப்படியான நிகழ்வு தலை தூக்காமல் பார்த்து கொள்ளலாம்.

முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கொன்ற சர்வதேச குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு மேற்குலகம் விசா கொடுக்க மறுக்கு போது அதே கொலை வெறியர்களின் படத்தில் ஒரு தமிழனின் வளர்ப்பில் வந்தவர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது மேற்குலகிற்கு தமிழர் மீது இருக்கும் பற்றுக்கூட தமிழ்நாட்டிலுள்ளவர்களிற்கு இல்லை என்று சொல்லுமளவிற்கு இருக்கின்றது.

எத்தனையோ தமிழீழ உறவுகள் இரத்தம் சிந்தி மண்ணுக்கு விதையாகியிருப்பது சூர்யாவே உங்களுக்கும் சேர்த்து தான். இதை காலம் உணர்த்தும் அதை உணர்ந்து கொள்ள நீங்கள் மறுத்து எமது இனத்தை கேவலப்படுத்த நினைத்தால் உங்களது எதிர்காலத்தை உலகத்தமிழர்கள் தீர்மானிப்பார்கள். தமிழ்ப்பற்றாளர் தமிழீழப்பற்றாளர் நடிகர் சிவகுமாரின் வழியில் வந்த வாரிசான சூர்யா இப்படியான தமிழினத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள மாட்டார் என தமிழீழ மக்களாகிய நாம் நம்புகிறோம்.

நடிகர் சூர்யா சிங்களப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது சிங்கள ஊடகங்களில் வெளியாகியதை அறிந்த உடனே எம் மனம் மிகவும் வேதனையடைந்தது. எமது தமிழீழ மக்களை வைத்து பணம் சம்பாதித்த தமிழ் தொலைக்காட்சிகளே இன்று எமது இன்னல்களை படுகொலைகளை உலகிற்கு காட்டாது மறைத்து செயற்படுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் எமது மக்கள் தகுந்த பாடம் கற்பிக்கும் காலம் வெகுவிரைவில் வரும்.

surya002

உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழ மக்களே!,

எங்களால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கடைசியில் எமது கண்ணையே குத்திக்கொண்டிருக்கும் சூர்யா போன்றவர்களிற்கு தகுந்த பாடம் கற்பிக்கப் படவேண்டும். எமது பணியை சூர்யாவிலிருந்து ஆரம்பித்து எமது தமிழீழ இனத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து கைகொடுப்போம்.

தமிழ் மக்களை கொன்றுக்குவித்த துப்பாக்கியின் சூடு அடங்கும் முன்பே அதே துப்பாக்கியை ஏந்திய சிங்கள படையினரின் பாதுகாவலில் சூர்யா நடிக்கப்போகிறாரா…?

( சூர்யா சிறீலங்கா செல்வதற்காக விமானசீட்டு பதிவு செய்துள்ளதாக அவரது மேனேஜர் உறுதிப்படுத்தியுள்ளார்.)

நாராயணன் தமிழீழத்திலிருந்து

http://www.meenagam.org/?p=15691

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா தான் இது தவறான செய்தி என்று சொல்லி விட்டாரே.

சூரியா தான் இது தவறான செய்தி என்று சொல்லி விட்டாரே.

இப்ப தமிழர்களுக்கு எவர்கள் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் எதிராக கட்டுரை எழுதுவது,விமர்சனம் செய்வது போன்ற செயல்களை செய்வதன் மூலம் சிலர் பிரபலமாக் முயற்சிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சூர்யா சிங்களப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது சிங்கள ஊடகங்களில் வெளியாகியதை அறிந்த உடனே எம் மனம் மிகவும் வேதனையடைந்தது.

சூர்யா சிங்களப் படத்தில் நடிக்கவில்லை என்று மறுப்பறிக்கை வெளியிட்ட பின்பும் ,

சிங்கள பத்திரிகைகளில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி இங்கு செய்தியை பதிவதை என்னவென்று சொல்வது.

சூர்யா , சிவகுமார் போன்றவர்களின் தமிழ் பற்றை கேவலப் படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.