Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கான நான்கு வழிகள் - மனோவின் ஆலோசனை

Featured Replies

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு உரிய நான்கு வழிகள் பற்றி மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து முன்மொழிந்துள்ளார். அதாவது இலங்கையில் வதியும் தமிழர்கள் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், அல்லது என்ன செய்யவேண்டும் என்பதே அந்த வழிமுறைகளாகும். வழி1. மஹிந்தவை ஆதரித்தல். வழி2. சரத்பொன்சேகாவை ஆதரித்தல் (பொது எதிரணியினரின் வேட்பாளர்). வழி3. சிறுபான்மையினர் ஒரு வேட்பாளரை நிறுத்துதல். வழி4. ஜனாதிபதி தேர்தலினை புறக்கணித்தல். இந்த நான்கில் எதையாவது செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மனோ.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு 4வது.

தேர்தலைப் புறக்கணிப்பது தான் தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி. இது இலங்கை முழுவதும் (மலையகம், தென்னிலங்கை அடங்கலாக) வாழும் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு எதிரான தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு காண்பிக்க இந்த தேர்தலை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மகிந்த ராஜபக்சவையோ அல்லது சரத் பென்சேகாவையோ ஆதரிப்பது என்ற இரண்டு தெரிவுகளும் கருத்தியல் ரீதியில் ஒன்றுதான். இருவருமே தமிழின அழிப்பில் உக்கிர தாண்டவம் ஆடியவர்கள். அடுத்த தெரிவான சிறுபான்மை சார்பான ஒரு பொது வேட்பாளரை நிறுத்துதல் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. இலங்கை அரசியலமைப்பின்படி சிங்கள பௌத்தர் அல்லதவர் சனாதிபதியாக முடியாது. அதைவிட ஒரு சிறுபான்மை வேட்பாளரால் 51% வாக்குகளைப் பெறமுடியாது. இப்படி பேட்டியிடுவதன் மூலம் தமிழ் வாக்குகளைப் பிரித்து, போட்டியிடும் கட்சி தமது எஜமானுக்கு விசுவாச சேவகம் புரியலாம். இதுவும் பயனற்ற தெரிவே. தற்போதைய சூழ்நிலையில் வாக்குகளைப் பிரித்துவிடுவதன் மூலம் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையப் பெறமுடியாது போகலாம். அப்படி பெரும்பான்மை பெற்றாலும் வரப்போவது ஒரு இனவாதியே. இன்னும் ஒரு விடயம் இப்படி போட்டியிடும் சிறுபான்மை வேட்பாளருக்கு உயிராபத்துக்கூட ஏற்படலாம்.

மனோ கணேசன் போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளியான இவர், என்ன பேசினாலும் இவரது இறுதிமுடிவு ஐக்கிய தேசிய கட்சி ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதாகவே இருக்கும். இடைப்பட்ட காலத்தில், மக்களை ஏமாற்றுவதற்காக நிபந்தனைகள், மீள்குடியேற்றம் என பம்மாத்து காட்டுவார். பின்னர் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என அறிக்கை விடுவார். இறுதியில் ஐதேகவில் சரணடைந்து விடுவார். மனோ கணேசனின் இறுதி முடிவு ரணிலையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஆதரிப்பதாகவே இருக்கும்.

சிங்கள தேசத்தில் என்ன நடந்தாலும், யார் எந்த அணியை ஆதரித்தாலும், எவர் போட்டியிட்டாலும், எவர் என்ன சொன்னாலும் தேர்தலைப் புறக்கணித்து விடுவது ஒன்றே தமிழர்களின் ஒரே தெரிவாக இருக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசமும் எம்மை நோக்கிப் பார்க்க ஆரம்பிக்கும்

இது இலங்கை வாழ் தமிழர்கள் அனவரினதும் வரலாற்றுக் கடமையாகும்.

நன்றி,

ராரா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் முதலில் தன்னை உணரவேண்டும்

புலிகளும் தமிழனை உணராததாலேயே நாம் தோற்றோம்

கசப்பானது என்றாலும் உண்மையை மறைத்து அடுத்தபடிக்கு போகமுடியாது

தமிழன் முழுப்பேரும் புறக்கணிக்கும்போதே தங்களது தெரிவு சாத்தியம்

இது நடக்கும் காரியமல்ல

வடகிழக்கே முற்றுமுழுதாக ஒன்றுபடாதபோது.......

மலையகம் முசுலீம்கள் என்று கனவு காணுவது மடமைத்தனம்

எங்காவது ஒட்டுவதே இன்றைய சாணக்கியமான முடிவு?????இது எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ..... கருணா , டக்ளஸ் தேவானந்தா , ஆனந்தசங்கரி , ஆறுமுகம் தொண்டைமான் போன்றவர்களில் ஒருவரை தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் என்ன ?

மற்றவர்களை விட மகிந்தவையே ஆதரிக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சமன்பாட்டில் இருந்து இந்தியாவை அல்லது சீனாவை வெளியேற்ற வேண்டும். மகிந்த சீன ஆதரவை பெற்றவர். அதனால் இந்தியா வேறு வழியில்லாமல் இழுபட்டுக்கொண்டு இருக்கு..

இந்தச் சூழ்நிலையால் இந்தியா, சீனா இரண்டுமே தமிழருக்கு எதிரான நிலையில் இருக்கு. அதனால் முழு சர்வதேசமுமே தமிழருக்கு எதிராக.. மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. இப்போது உள்ள நிலையில் நாம் இந்தியாவின் பக்கம் சாயும்படி செய்யப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தியா எந்த அளவுக்கு தமிழருக்கு உதவும்?

மாறாக, மேற்குலகுக்கு / இந்தியாவுக்கு ஆதரவான ஆட்சி இலங்கையில் தோன்றுமானால், சீனாவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கலாம். அப்போது தமிழகம் / ஈழம் ஆகியவற்றின் தேவை சீனாவுக்கு அதிகரிக்கலாம். இந்தியாவிடம் கிடந்து இழுபடுவதைக் காட்டிலும் சீனாவின் பக்கம் தமிழர்கள் நிற்பது நமக்குப் பலமாகவே அமையும். இந்த வழியில் போனால் எமக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எதற்காக எம் பக்கம் வரமுயற்சிக்கும் என்றும் அருள் புரிவீர்களா????

புலிகளும் தமிழனை உணராததாலேயே நாம் தோற்றோம்
புலிகள் ஒன்றிரண்டு தமிழர்களைப்பற்றி உணராதபடியால்தான் தோற்றார்கள்!

அதில் ஒருத்தர் இப்ப மகிந்தவின் விருந்தினராக விடுதியில் இருக்கிறார்.

மற்றவர்..............இருக்கிறார்

Edited by archunan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஒன்றிரண்டு தமிழர்களைப்பற்றி உணராதபடியால்தான் தோற்றார்கள்!

அதில் ஒருத்தர் இப்ப மகிந்தவின் விருந்தினராக விடுதியில் இருக்கிறார்.

மற்றவர்..............இருக்கிறார்

அண்ணையாணை. :) உங்கள் அரசியல் தீர்க்கதரிசனம் புல்லரிக்க வைக்குதண்ணோய். :D எப்படியண்ணை நீங்கலெல்லாம். கென்றி கெஸிங்சர் வரிசையில் நீங்கள் நிற்கிறீங்கள். :lol:

கூட்டிக்கழித்து பார்த்தால் மகிந்தவை ஆதரிப்பதோ அல்லது எதிர்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதோ அல்லது தேர்தலை புறக்கணிப்பதோ தாயகத்து தமிழருக்கு நீண்ட கால நோக்கில் நன்மையை தரப்போவது இல்லை.

1. மகிந்தவை அல்லது பொன்சேகாவை ஆதரித்து வாக்கு அளித்தால் இவ்வளவு காலமும் இவர்கள் தமிழரின் பச்சை இரத்தத்தை குடித்ததை நாம் அங்கீகரித்து அதற்கு ஆதரவும், ஊக்கமும் கொடுப்பது போலாகிவிடும். அத்துடன், சர்வதேசமே சொல்லும்.. தமிழரே இப்படி இவர்களிற்கு ஆதரவு கொடுக்கின்றார்களே.. அப்படி என்றால் இவர்களின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் எல்லாம் பொய் போல என்று.

2. தேர்தலை புறக்கணித்தால் ஆயுதம் மூலமாக தமிழர்கள் எதையும் அடைந்து விடமுடியாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யுகம் யுகமாக தொடர்ந்தும் தமிழர்கள் அரசியல் அநாதைகளாக இருக்கவே வழிவகுக்கும்.

3. ஆனால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் ஓர் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது அரசியல் ரீதியாக தமிழர்கள் தம்மை, தமது உரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.

மேற்கண்ட வழிகளில் தோல்வியென முன்கூட்டியே தெரிந்தும் தமிழர்களை நினைவுபடுத்தும் ஓர் தமிழ் சிறுபான்மை வேட்பாளருக்கு தமிழர்கள் ஆதரவு கொடுப்பதே எனது அறிவுக்கு சிறந்த தெரிவாக தெரிகின்றது. இது நீண்ட கால நோக்கில் பெரும்பான்மை இனத்திற்கு ஓர் பலமான செய்தியை கூறுவதோடு ஜனநாயக வழிக்கு நம்மவர்கள் திரும்பி அரசியல் ரீதியாக தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு உரம் ஊட்ட உதவும்.

இந்த தமிழ் சிறுபான்மை வேட்பாளராக தாயகத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பல தமிழர்களால் அறியப்பட்ட யாராவது தமிழரை நிறுத்தலாம் (அப்படி யாராவது தற்போது உயிரோடு இருந்தால்).

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எதற்காக எம் பக்கம் வரமுயற்சிக்கும் என்றும் அருள் புரிவீர்களா????

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், சீனாவுக்கு இலங்கை கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பது யாவரும் அறிந்ததே.. சீனாவின் ஆளுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதே இந்தியா மற்றும் மேற்குலகின் முயற்சியாக இருக்கிறது. ஒருவேளை அது சாத்தியப்படுமானால் (மேற்குலகின் சார்பான ஆட்சி இலங்கையில் அமையுமானால்) சீனா அப்படியே இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. புதிய ஆட்சியைத் தன்பக்கம் திருப்பவோ அல்லது தமிழர் பக்கம் கவனம் எடுக்கவோ முயற்சி செய்யலாம். எது எப்படி நடக்கும் என்று தெளிவாகக் கூறிவிட முடியாது. ஆனால் இதில் தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம் இருப்பதாகவே தோன்றுகிறது.

மறுவளத்தில், மச்சான் சொல்வதுபோல் தமிழர்கள் தமது பிரதிநிதியை தேர்தலில் நிறுத்தலாம். எதைச் செய்தாலும் மகிந்த அரசு தோல்வியைச் சந்திக்க வேண்டியது தமிழர்களின் தேவையின் பொருட்டு கட்டாயம் என நினைக்கிறேன்..!

எனது அபிப்பிராயம்...

யாராவது ஒரு தமிழனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி அவருக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கும்படி கோருவது. இவர் யார் என்பது முக்கியமல்ல. இவர் பிரபல்யமானவராக இருக்கக்கூடாது. இவர் எப்படியும் வெல்லப்போவதில்லை என்று தெரியும். ஆனால் இவருக்கு வாக்களிப்பவர்கள் தமிழர்களின் தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றிற்காக வாக்களிக்கின்றார்கள் என்ற உண்மை உலகிற்கு வெளிவரவேண்டும்.

Edited by பரதன்

ஏன் அவசரப்படுகிறீயள்.. தேர்தல் நெருங்கி வரும் போது போரில் எப்படி வெண்றோம் எண்று இருவருமே காரணம் அல்ல எண்று இருவரும் பிரச்சாரம் செய்யும் போது புரிந்து கொள்ளலாமே யார் எங்களின் நிலைக்கு காரணம் எண்று...

கும்பலா வந்து அடிக்க நிற்பவன், தனிய வந்து அடிப்பவன்... இதிலை எனது தெரிவு தனிய வாறவனுக்குதான்...

ஏன் அவசரப்படுகிறீயள்.. தேர்தல் நெருங்கி வரும் போது போரில் எப்படி வெண்றோம் எண்று இருவருமே காரணம் அல்ல எண்று இருவரும் பிரச்சாரம் செய்யும் போது புரிந்து கொள்ளலாமே யார் எங்களின் நிலைக்கு காரணம் எண்று...

கும்பலா வந்து அடிக்க நிற்பவன், தனிய வந்து அடிப்பவன்... இதிலை எனது தெரிவு தனிய வாறவனுக்குதான்...

சிங்களவனிடம் ஒற்றுமை கூட தயா.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ..... கருணா , டக்ளஸ் தேவானந்தா , ஆனந்தசங்கரி , ஆறுமுகம் தொண்டைமான் போன்றவர்களில் ஒருவரை தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் என்ன ?

அதிசயம் ஆனால் உண்மையும் ஆகலாம் சிறி.

அதில் ஒருத்தர் இப்ப மகிந்தவின் விருந்தினராக விடுதியில் இருக்கிறார்.

மற்றவர்..............இருக்கிறார்

இருக்கிறார் விருந்தினர் இதென்ன புதுக்கதையெல்லாம் சொல்றீங்கள் ?

கனபேர் மகிந்தவின்ரை விருந்தினராக இருக்கினம். இதில ஆரையெண்டு அடையாளம் காண்பது ?

சிங்களவனிடம் ஒற்றுமை கூட தயா.

தமிழர்களுக்கு எதிராக மட்டும் எண்றால் உண்மை ......

நேற்று மகிந்த சொன்னாரே புலிகளின் கப்பல்களை அழிக்க அமெரிக்கா உதவியது எண்று (இதை இரண்டு வகையில் எடுக்கலாம்) ... இந்தியா கப்பல் கொடுத்தது.. அமரிக்கா ஆயுதங்கள் பொருத்தி கொடுத்து உளவும் சொன்னது. ஆக இலங்கை படைகள் செய்தவை போட்டு கொடுத்த திட்டத்தை செயற்படுத்தின... (கடற்படை படைத்தளபதிக்கு வேலை இருக்க வில்லை...) தரைப்படை நன்மை அடைந்தது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் ஓர் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது அரசியல் ரீதியாக தமிழர்கள் தம்மை, தமது உரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.

சிந்திக்க வைத்தது மச்சான். சிங்களவர்களின் வாக்கு வங்கி இரு கூறாக பிரியப்போகின்றது வழமை போல்.வெற்றியை நிர்ணயிப்பது சிங்கள கூட்டணியில் அடங்காத சில விகிதமான தமிழர்கள் தான். ஏற்கனவே மலையக மக்கள் கூட்டணி அரசோடு நிற்பதால் அவர்களின் வாக்குகளை தமிழ் வேட்பாளார் பெற முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களின் நிலையும் இதே தான். மனோ கணேசனுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்.அவர் ஐ.தே.காவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லும் போது பல லட்சம் மக்களின் (கொழும்பு வாழ் தமிழர்)வாக்குகள் ஐ.தே.காவுக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

கிழக்கிலும் கருணா, முஸ்லிம் கட்சிகளால் சிறுபான்மை தமிழ் ,முஸ்லிம மக்களின் வாக்குகள் சிங்கள கட்சிக்கே செல்லும்.

வடக்கில் டக்ளஸ் தனது ஆட்பலம், ஆயுத பலம் மூலம் பல தமிழர்களின் வாக்குகளை இம்முறை மாநாகரசபை தேர்த்தலில் பெற்றது போல் பெற முடியும்.

வன்னி மக்களின் நிலைமை மட்டும் ஓரளவு தமிழர்களுக்கு சாதகமாக அமையும். கடந்த மாநகரசபை தேர்த்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்த்தலில் 80%கும் அதிகமானவர்கள் வாக்களிக்காமல் விட்டும் பெரிய செய்தியாக வெளியில் வரவில்லை. மேற்குலகிலும் வாக்களிகாதவர்களின் வீதம் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

முடிவாக சிங்கள வல்லாதிக்கம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் தம்மை ஆட்சி கட்டிலேற்றிய பின் தமது இனவெறியை அதே மக்கள் மீது காட்டுகிறார்கள்.இதனை முறியடிக்க முழு சிறுபான்மையினரதும் குரலாக ஒரு வேட்பாளர் ஒலிக்க செய்யவேண்டும்.

ஒரு முறை சனாதிபதி வேட்பாளராக குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது நினைவில் உள்ளது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன ஜனாதிபதி தேர்தலில என்ன நடந்தது எண்டு பாலாமாமான்ர 2005 மாவீரர் உரைய கேளுங்கோ?

லிங்க பாண்டு007 அண்ணன் தருவார். :)

அண்ணையாணை. உங்கள் அரசியல் தீர்க்கதரிசனம் புல்லரிக்க வைக்குதண்ணோய். எப்படியண்ணை நீங்கலெல்லாம். கென்றி கெஸிங்சர் வரிசையில் நீங்கள் நிற்கிறீங்கள்
.

சத்தியமா??நம்பமுடியவில்லை!!நீங்கள்தானே புல்லரிப்பு அதிகமாகி 'வழுதி' யின் வாந்தியை எடுத்து தடிவிக்கொண்டிருக்கிறியள்!! :D

என்ன நீங்கள் எல்லாரும் 'மோசே டயான்' லெவலுக்கு தாக்குதலை அங்குசெய்திருக்கலாம் இங்கு தாக்கியிருக்கலாம்....கொஞ்சம் அரசியலும் செய்திருக்கலாம் என்று ராணுவஆய்வுகள் போலவும் அரசியல் ஞானிகள் போலவும் இருக்கும் போது ச்சும்மா அந்த அமெரிக்கயுதனான அந்த 'கென்றி கெஸ்சிங்கர்' எம்மாத்திரம் :lol::)

Edited by archunan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.