Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய சாத்தியம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் வாக்கை யாருக்கும் போடாமல் புறக்கணியுங்கோ.... இல்லை முடிய வில்லையா வாக்கை மகிந்தவுக்கு போடுங்கோ...

இந்தாள் இப்பிடி மாறுமெண்டு கனவிலயும் நினைக்கேல. :)

சம்பந்தனோ அல்லது எந்தவொரு தமிழ் தேசியக் கூடடமைப்பு வேட்பாளரோ போட்டியிடுவது உகந்ததாகத் தெரியவில்லை.

காரணம் தற்போதுள்ள சூழ்நிலையில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளைப் கூடப் பெற முடியும் என்று தோன்றவில்லை. அதற்கான காரணங்கள்

1. விரக்தியடைந்துள்ள தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்கலாம் (யாழ், வவுனியா உள்ளுராட்சித் தேர்தல்களைப் போல்)

2. மகிந்த மீதான கோபத்தின் காரணமாய் அவரைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காய் பொன்சேக்காவிற்கு வாக்களிக்கலாம் (பேயை விடப் பிசாசிற்கு போடலாம் என்ற அடிப்படையில்)

3. தமிழ்ப் பிரதேசங்களில் இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோர் திரண்டு வந்து மகிந்தவிற்கு வாக்களிப்பர்( ஒட்டுக்குழுக்களின் உபயத்தில்)

4. கூட்டமைப்பின் சில கூத்தாடிகளின் செயலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்களில் ஒரு சாராருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி

இதன்படி கூட்டமைப்பின் வேட்பாளர் மிகக் குறைந்த வாக்குக்களைப் பெறும் போது அதை வைத்து சிங்கள அரசு பல பிரச்சாரங்களை முன்னெடுக்கும்.

தமிழ் கூட்டமைப்பிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை

தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளரைப் புறக்கணித்து சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார்கள். இதன் மூலம் சிங்களத் தலைவரை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்

எனவே தமிழ் வேட்பாளர் போட்டியிடத் தான் வேண்டுமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.

சரி தமிழருக்கு றாஜபக்சவும் ஒன்று தான் பொன்சேக்காவும் ஒன்று தான் என்றால் நாம் விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கு வாக்களிக்கக் கூடாதா?

எப்போதுமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசி வருவதால் அவருக்குச் சிங்களவர்களும் வாக்களிப்பதில்லை. தமிழர்களும் வாக்களிப்பதில்லை.

இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுகிறீர்கள்?

இதுவரை தமிழ் மக்களிடம் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் நடைபெறவில்லையே?

இந்தாள் இப்பிடி மாறுமெண்டு கனவிலயும் நினைக்கேல. :)

நினைச்சு பாருங்கோ, கனவு காணுங்கோ... அதுதான் நிறைய கற்பனை வளத்தை கூட்டும்... இப்ப இருக்கிறதை விட கற்பனை கூடினால்தானே இன்னும் அதிகமாய் புளுகலாம்...

Edited by தயா

நாடுகடந்த அரசு புலத்தல் உள்ள மக்களை ஒன்றிணைக்க உதவலாம்

இருந்தாலும் தாயகத்தில் உள்ள மாக்களுக்கு ஒரு திடமான ஒரு தலைமை தேவை. இதுக்கு சம்பந்தர் பொருத்தமானவர்தான்.

புலத்து மக்கள் ஒன்றாகத்தான் இருக்கினம். நாடு கடந்த தமிழீழ அரசு, மக்களவை, வட்டுக்கோட்டை என பல பிரிவுகளைகளை உருவாக்கி, மக்களைப் பிரிப்பதற்கு முயற்சி இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றது.

புலம் பெயர்ந்த தமிழர் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலும், தற்காப்பு யுத்தம் தான் புலம் பெயர்தேசத்தில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா தேர்தலில் ஒருவர் 50 வீகிதத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்றால் தான் அதிபராகலாம். 50 வீகிதத்துக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் 2ம் , 3ம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சனாதிபதி தெரியப்படுவார்.

ரணிலைப் பிரதமாராக விரும்பும் தமிழர்கள் சம்பந்தருக்கு முதல் வாக்காகவும், 2 வது வாக்கை ரணிலின் உள்ள பொன்சேகாவுக்கும் வாக்களிக்கலாம். அதாவது மகிந்தா அல்லது பொன்சேகா ஆகியோரில் ஒருவரும் முதல் வாக்குகளின் படி 50 வீதத்துக்குக் குறைய வாக்குகள் பெற்றிருந்தால் 2வது ,3 வது விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மகிந்தா அல்லது பொன்சேகா தெரிவு செய்யப்படுவார்கள்.

இது நல்லதொரு திட்டம் இதை நான் ஆமோதிக்கிறேன்.

தமிழர்களது தீர்வை உலகத்துக்கு சொன்னமாதிரியும் இருக்கும், எம்மக்களை கொலை செய்யசொல்லி அம்பை எய்தவனை வீட்டுக்கு அனுப்பியதாகவும் இருக்கும், ஆயுதம் கொடுத்த இந்தியாவை தலை குனிய வைத்ததாகவும் இருக்கும், சீனாவுக்கு நெருக்கடி கொடுத்த மாதிரியும் இருக்கும், பதவி இழந்த மகிந்த கொம்பனியை விசாரனைக்கு உட்படுத்துவது இலகுவாகவும் இருக்கும், ஒரு கல்லில் பல மாங்காய்கள். :)

Edited by சித்தன்

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.எமது போராட்டமே அதனால் தானே ஆரம்பித்தது.சிங்க்ளவன் அதை நன்றாக திசைதிருப்பி எங்களை முதல் எங்களுக்குள்ளும், பின்னர் இந்தியாவுடனும் அடிபட வைத்துவிட்டான். 30 வருடபோராட்டத்தில் இவ்வளவு அழிவு வந்தாலும் எமது பிரச்சனை இப்போ சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. "முடிந்த அளவு" முழுததமிழரும் சேர்ந்து (நாட்டில் உள்ள+புலம் பெயர்ந்த)ஒரு தீர்க்கமான முடிவிற்கு இப்போது வராமல் விட்டால் தமிழனுக்கு என்றுமே விடிவு இல்லை.

இன்னமும் ஒட்டுக்குழு,துரோகி என வசை பாடுவதை விடுத்து எல்லோருக்குமான ஒரு பொது அழைப்பை விடலாம். வருபவர்கள் வரட்டும். வராதவர்கள் என்னவும் தங்களுக்கு விரும்பிய நிலைப்பாட்டை எடுக்கட்டும் அது அவர்கள் ஜனநாயக உரிமை.

எனது நிலைப்பாடு.

சம்பந்தன் போட்டியிட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

சரத் வந்தால் அ,ஆ இல் இருந்து சகலதும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மகிந்தாவை வெல்லப் பண்ணி இரண்டாம் தடவை வந்திருக்கின்றாய்,நீ உலகம் முழுக்க பறையடித்துக்கொண்டு திரிந்த பயங்கரவாதம் ஒழிந்து விட்டது இனி தமிழனுக்கு என்ன தீர்வு வைக்கப் போகின்றாய் என்று அழுத்தம் கொடுக்கலாம்.அத்துடன் வெற்றிக் களிப்பில் கண் மண் தெரியாமல் துள்ளிக் கொண்டு நின்ற சகோதரர்களுக்கு, சரத்தை உங்களுக்குஎதிராக போட்டியிட வைத்து இதுதான் அரசியல் என உலகம் ஒரு பாடம் அவர்களுக்கு படிப்பித்திருக்கின்றது.எனவே மகிந்தாவிற்கே எனது வாக்குகள்.

எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்கள்......................... உங்களுக்கே இதெல்லாம் ஓவராய் தெரியல........

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு திட்டம் இதை நான் ஆமோதிக்கிறேன்.

தமிழர்களது தீர்வை உலகத்துக்கு சொன்னமாதிரியும் இருக்கும், எம்மக்களை கொலை செய்யசொல்லி அம்பை எய்தவனை வீட்டுக்கு அனுப்பியதாகவும் இருக்கும், ஆயுதம் கொடுத்த இந்தியாவை தலை குனிய வைத்ததாகவும் இருக்கும், சீனாவுக்கு நெருக்கடி கொடுத்த மாதிரியும் இருக்கும், பதவி இழந்த மகிந்த கொம்பனியை விசாரனைக்கு உட்படுத்துவது இலகுவாகவும் இருக்கும், ஒரு கல்லில் பல மாங்காய்கள். :)

அவ்வாறு சம்பந்தன் போட்டியிட்டால், வரவேற்கத்தக்கது.

இன்று தமிழர்கள் உட்பட்ட சிறுபான்மையினரின் வாக்கு வங்கியிலேயே சிறிலங்கான் அரச தலைவர் யாரென்பது தீர்மானிக்கபட உள்ளதாக உள்ளமையால், மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே இனவாத சாக்கடையில் வளந்த தலைவர்கள்.

இத்தேர்தலில் நாம் இவ்விருவரில் யாருக்கு போட்டாலும், அதை சிங்களம் வரும் காலத்தில் எம் மக்கள் ஜனநாயக இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ இதை பயன்படுத்தி இருப்பதாக சர்வதேசத்துக்கு பிரச்சாரம் செய்யும்.

ஆதலினால் எம் எதிர்ப்பை காட்ட இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.

தயவுசெய்து எம் புலத்து ததேயின் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒரு முறைக்கு நூறு முறை சிந்தியுங்கள், துரோகி பட்டம் கொடுப்பதற்கு முன்னுக்கு!!! அதே உணர்ச்சி அரசியலில் சிங்களத்துக்கு மறைமுகமாக உதவ முற்படாதீர்கள்!!!

இவையே என் கருத்தும்

அதேநேரம்

இரு கொலைகாறர்களில் எவரையும் நாம் ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல

இருவரில் ஒருவருக்காவது நாம் வாக்குப்போட்டோம் என்ற பழிச்சொல்லிலிருந்தும் தப்பித்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக இது அமையும்

தாயக மக்கள் எந்த நிலைவந்தபோதும் தமது வாக்குகளை சரியாகவே பாவித்துள்ளனர்

இது வரலாறுநன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய ஆசை பொன்ஸ் வெல்லவேண்டும். ஆனால் வென்ற கையோடு கோத்தபாய அவனை போட்டுத் தள்ளவேண்டும். அல்லது கென்யாவில் உகண்டாவில் நடந்தது போல் மகிந்த அரசு அவன் பெற்ற வெற்றி முறையற்றது என அறிவிக்கவைத்து ஏதேனும் கோல்மால் செய்யவேண்டும். அல்லது பொன்ஸை ஏதேனும் ஒரு சாக்கை வைத்து கைதுசெய்யவேண்டும். இதனால் பெரும் அரசியல் குழப்பங்களும் படை இரண்டாகப் பிரிந்து பெரும் வன்முறையும் வெடிக்கவேண்டும். இப்படி அளவில்லா ஆசைகள்!

தப்பித் தவறியேனும் சிங்களவர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டு உதெல்லாம் நடக்க எங்கடை ஆக்கள் விடமாட்டினம், மே 19 இற்குப் பின் கன நீலன்கள், கன கதிர்காமர்கள் எல்லாம் இப்ப சிங்களவரை தோளில் சுமக்க........?

Edited by kalaivani

என்னுடைய ஆசை பொன்ஸ் வெல்லவேண்டும். ஆனால் வென்ற கையோடு கோத்தபாய அவனை போட்டுத் தள்ளவேண்டும். அல்லது கென்யாவில் உகண்டாவில் நடந்தது போல் மகிந்த அரசு அவன் பெற்ற வெற்றி முறையற்றது என அறிவிக்கவைத்து ஏதேனும் கோல்மால் செய்யவேண்டும். அல்லது பொன்ஸை ஏதேனும் ஒரு சாக்கை வைத்து கைதுசெய்யவேண்டும். இதனால் பெரும் அரசியல் குழப்பங்களும் படை இரண்டாகப் பிரிந்து பெரும் வன்முறையும் வெடிக்கவேண்டும். இப்படி அளவில்லா ஆசைகள்!

வாசிக்க வாசிக்க வாணி வடியதொடங்கீட்டுது போங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க வாசிக்க வாணி வடியதொடங்கீட்டுது போங்கோ..

அது வாணி இல்லை வீணி

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அண்ணையின் கருத்தே தற்போதைய நிலமையில் தமிழர்கள் விவேகத்துடனும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியைக் காட்ட உதவும். உண்மையில் சிறிலங்காவின் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. ஆகவே நாங்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும்.ஆனால் அந்த வாக்குகள் கள்ள வாக்குகளாக ஒட்டுக் குழுக்களாலும் அரச படைகளாலும் போடப்படுவதை தடுப்பதற்காக அந்த வாக்குகள் போடப்பட வேண்டும்.அதை செல்லாத வாக்காகப் போடலாம். ஆனால் குறுகிய கால இடைவெளியில் அதைப்பற்றி எல்லோருக்கும் விளக்குவது நடைமுறைச் சாத்தியமற்றது.ஆகவே தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உலகிற்கு சொல்வதும் அதே நேரத்தில் முடிந்தால் மகிந்தவை பதவியில் இருந்து இறக்குவதற்கும் உதவும்.சரத் பொன்சேகா வந்தாலும் மகிந்த செய்ததைத்தான் செய்வார். இப்போதைக்கு மகிந்தருக்கு தண்டனை கொடுத்த திருப்தியும் இந்தியாவுக்கு தலையில் குட்டின திருப்தியும் இருக்கும். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது தெரிவை தமிழர் ஒருவருக்கும் இரண்டாவது தெரிவை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணாவுக்கும் போடவேண்டும். இம்முறை 50% வாக்குகள் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.அந்த நிலையில் இரண்டாவது தெரிவு மகிந்தவோ சரத்தோ இல்லாமல் இருந்தால் நல்லது. அல்லது இவர்களில் ஒருவரை நாம் மறைமுகமாகவேனும் தெரிவு செய்தவர்களாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

1956 ல் தேர்தலில் தமிழ் மக்களின் பிராந்திய சுயாட்சியை ஆதரித்து போட்டியிட்ட பிறகு முதற்தடைவையாக தமிழர் தேசத்தை அங்கிகரித்து அதற்கு ஆதரவு கோரி வலதுசாரி கட்சிகளின் சிங்கள தலைவர்கள் கூட்டாக ஒரு பொதுவான வேட்பாளராக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியுள்ளன.

  • போர் உச்சநிலையில் இடம் பெற்ற பெப்ருவரி 2009 ல் கருணாரட்ண உலகம் முழுவதும் உள்ள 50க்கு மேற்பட்ட தொழிலாளர் கட்சிகளின் ஆதரவுடன் சிறிலங்கா உடனே போரை நிறுத்தி விடுதலைப்புலிகளுடன பேசி; இடைக்கால அரசை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தேடினார்.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியிலில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் 1972ல் தமிழருக்கு எதிரான குடியாட்சி சட்டத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி கொண்டு வந்த போது அதற்கு ஆதரவு வழங்கிய சமசமாஜ கட்சியில் இருந்து வெளியேறினார்.
  • 1978ல் தமிழர் விரோத சட்டங்களை அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்துக்காக பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அவரது பேராசிரியர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1988ல் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்துக்காக ஜே.வி.பி. யால் சுடப்பட்டார்.
  • 2008ல் தமிழருக்கு ஆதரவாக சிங்களவரை திரட்டி ஊர்வலம் வந்தபோது அடித்து மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  • அதே ஆண்டு பிற்பகுதியில் கனடாவில் தமிழர் நிகழ்வில் பங்குபற்ற விசாவுக்கு விண்ணப்பித்த போது அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கத்தவர் என்று காரணம் காட்டி கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது.

http://tamilnet.com/art.html?catid=79&artid=30689

Vikramabahu_Karunaratne_003_77146_200.JPG

கருணாரட்ண

RS1213B.jpg

சம்பந்தர்

இந்த கருணாரட்ணவா அல்லது சம்பந்தரா தமிழ் மக்களின் ஆதரவுக்கு பொருத்தமானவர்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 50 வருசமா எங்களுக்கு யாராவது விமோசனம் தருவார்கள் என்று

மாறி மாறி குத்தி களைச்சுப்போனம்.இப்ப எமக்கு விமேசனம் இல்லை

என்று தெரிந்து விட்டது.கடைசி அவங்களுக்கு ஒரு பேரளிவை யாரால்

தர முடியும் என்று அறிந்தால் அவனுக்கு எங்கள் வாக்கை குத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனோ அல்லது எந்தவொரு தமிழ் தேசியக் கூடடமைப்பு வேட்பாளரோ போட்டியிடுவது உகந்ததாகத் தெரியவில்லை.

காரணம் தற்போதுள்ள சூழ்நிலையில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளைப் கூடப் பெற முடியும் என்று தோன்றவில்லை. அதற்கான காரணங்கள்

இதவரை கூட்டமைப்பு சுயமாக எந்தவிதமான அரசியல் முன்னெடுப்பையும் எடுத்து வென்றதாகத் தெரியவில்லை. மற்றும் தேர்தல் நேரத்தில் காட்டுகின்ற வேகத்தை செயற்பாட்டில் கூட்டமைப்பு காட்டியதில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் 22பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். ஆனால் பலர் வெளிநாடுகளில் வந்திருந்து வீராவேச அறிக்கைகள் அறிவிப்புகள் செய்ததைத் தவிர வன்னிக்குள் சனம் செத்துக்குவிய பேசுறோம் படைக்கிறோமென்று கதைவிட்டதைத்தவிர பெரியளவு மாற்றத்தை செய்யவில்லை. தமிழின அழிவுக்கு எவரெல்லாம் காரணமோ அவர்களில் இந்தக் கூட்டமைப்பின் கைகளிலும் இரத்தக்கறையுண்டு என்பதை மறுக்க முடியாது.

இம்முறை சுயமாக ஒரு முடிவெடுத்திருக்கிறது கூட்டமைப்பு. அதாவது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது பற்றி. இதை மக்கள் மயப்படுத்தி தமது திட்டத்தை செயற்படுத்த விரும்பும் விடயங்களை வெளிப்படுத்தி மக்களுக்குள் இறங்கி முயற்சித்தால் குறைந்தது சிங்களப் பெரும்பான்மைக்கு கிடைக்கும் வாக்கில் ஒரு சின்ன ஆட்டத்தை ஏற்படுத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.