Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளக்கிடக்கை

Featured Replies

ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். இன்று யாழ் களத்தின் அங்கத்தவர்களிற் பெரும்பான்மையானோர் முப்பதுகளில் அல்லது அதற்குக் குறைந்த வயதுகளில் உள்ளவர்கள். எங்களிற்கு மேற்படி செய்தி ஒரு செய்தி மட்டுமே. ஏனெனில் நாங்கள் அரச காவல் துறைக்குப் பயந்த அனுபவம் எங்களிற்கு நேரடியாக ஈழத்தில் இருக்கவில்லை. எங்கள் காலம் இராணுவத்துடன் தான் ஆரம்பமாகியது. இதைப் பற்றி இப்போது இங்கு எதனால் எழுதவேண்டி வருகிறது என்றால், மேற்படி சிறு மாற்றம் எங்களின் உளவியலில் பலத்த பங்கு வகிக்கிறது.

நாங்கள் விரும்பியோ விரும்பாதோ, நாங்கள் வாழ்ந்த தேசத்தின் அன்றைய சட்டங்களையும் ஒழுங்குகளையும் எதிர்ப்பது எமக்குக் கட்டாயம் என்றானது. அந்த எதிர்ப்பு எமது வாழ்வாதாரத்தின் அடிப்படையாகியது. ஆனால், ஒழுங்குகள் எனும் போது அது அரசபயங்கரவாதத்தின் ஒழுங்குகள் மட்டுமே எதிர்க்கப்பட்டன என்று நாம் கருதிவிடமுடியாது. எமது சமூகத்தில் எமக்குள்ளிருந்த பல ஒழுங்குகளும் சேர்ந்தே மாற்றம் பெற்றன.

உதாரணமாக, மாணவர்கள் பாடசாலை விட்டால் உடனே வீடு வந்தே தீரவேண்டும் என்றிருந்த ஒழுங்கை மீறி நண்பருடன் குளத்தில் குளித்துவிட்டு வந்தால் வீட்டில் எதிர்பார்க்கக்கூடிய எதிர்வினையானது, பள்ளியில் நடந்த இயக்கக் கூட்டத்திற்கு சென்று வந்ததால் வீடு வரப்பிந்தியது என்ற விடயத்திற்கு வரும் எதிர்வினையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. அதாவது, வீட்டிற்குப் பிந்தி வருதல் குற்றம் என்ற ஒழுங்கு இப்போது பிந்திவருவதற்கான தண்டனை அற்ற காரணங்களில் ஒன்றாக இயக்கக்கூட்டம் என்ற புதியதொரு காரணத்தையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டி வருவதால் மாறுகிறது. மேலும், பெற்றோர் தண்டித்ததால் இயக்கித்திற்கு ஓடியவர் என்று கூட ஒவ்வொரு ஊரிற்கும் பரிட்சயமான ஒருவராவது இருக்கவே செய்தனர் என்ற ரீதியில், பெற்றோரின் பிள்ளைகள் மீதான ஓளுங்காற்று நடவடிக்கைகளும் தளரவே செய்தன.

குடும்பம் என்ற நிலையை விட்டு ஊர் என்ற நிலையில் பார்த்தால், ஓருவருடைய வேலியடைத்த காணிக்குள் அல்லது மதில் கட்டிய வீட்டிற்குள் இன்னொருவர் உள்நுழைவதற்கு அனுமதி தேவை என்றிருந்த நிலை, இயக்கங்கள் முகாம் அமைப்பதற்கு எந்தக் காணிக்குள்ளும் வீடுகளிற்குள்ளும் (அவை ஆட்கள் இன்றி இருக்கும் பட்சத்தில்) வரலாம் என்றாகி இன்னொரு ஒழுங்கு மாறியது. ஒருவருடைய காணிக்குள் நிற்கும் மரத்தை வெட்டுவதற்கு அனுமதி தேவை என்ற நிலை மாறி, களத்தில் வீழ்ந்தவரை நினைவுகூர்;வதற்காய் எந்தக் காணிக்குள்ளும் வாழையோ மூங்கிலோ வெட்டலாம் என்றாகி இன்னொரு ஒழுங்கு மாறியது. இப்படி சட்டங்களும் ஒழுங்குகளும் வழமைகளும் அன்றைய சமூகம் அறிந்திருந்த பழைய பாணியில் இருந்து திடீரென மாறியதோடு ஒழுங்குகளை எதிர்பது கவர்ச்சியாய் ஆனது.

எனினும், நாம் எதிர்க்கின்ற ஒழுங்கிற்கு மாற்றான எங்களுடைய புதிய ஒழுங்கை எம்மால் உடனடியாகப் பிரதியிட்டுவிட முடியவில்லை. பல இயக்கங்கள் ஆரம்பித்த ஆரம்ப நிலையில் நிராகரிக்கப்பட்ட ஒழுங்குகளும் சட்டங்களும், தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை நிறுவனமயப்படுத்தப்படாது வெற்றிடமாயே இருந்தன. இயக்கத்திற்குள்ளும், ஒழுங்குகள் நடுவப்படுத்தப்பட்டுப் பொதுவாகிய நிலை பின்னால் தான் வந்தது. நெடுங்காலம் ஒரு ஊர்ப் பொறுப்பாளர் அல்லது பிரதேசப் பொறுப்பாளர் என்பவர் தலைமையுடன் முற்றாய்த் தொடர்பின்றி அல்லது நீண்டகாலம் தொடர்பற்ற இடைவெளிகளைச் சந்தித்து, முடிவுகளைத் தாங்களாகத் தங்கள் மட்டத்தில் எடுக்கும் நிலையே இருந்தது. இதனால் பொதுவான ஒழுங்கு சட்டம் என்ற நிலை மறைந்து ஒரு ஒழுங்கின்மைக்குள் (கேயோஸ்) ஒழுங்குகளை வெறுத்து நாங்கள் வாழவேண்டி வந்தது.

யாரும் துள்ளி எழுவதற்குள் நானே கூறிவிடுகின்றேன். இந்த இடத்தில் சமூகத்தின் ஒழுங்குகள் சட்டங்கள் என்பனவற்றின் அடிப்படைத் தார்ப்பரியம் என்ன? அவை யாரிற்கு அவசியமாகின்றன? அவற்றின் இயல்பான நயவஞ்சகத் தன்மை மற்றும் ஒட்டுண்ணித்தனம் என்பன எவ்வாறு அமைகின்றன? போன்ற முனைகளில் பலரிற்குக் கருத்து வைக்கத் தோன்றும். எனக்கும், மிஷெல் பூக்கோவை எனக்கும் பிடிக்கும், அவரது எழுத்துக்களை நானும் நிறையவே வாசித்துள்ளேன். சமூக சட்டங்களிற்கும் ஒழுங்குகளிற்கும் வக்காலத்து வாங்குவதற்காக இதை நான் எழுதவில்லை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொண்டு அப்பால் நகர்வோம்.

உலகின் சட்டங்களும் ஒழுங்குகளும் நயவஞ்சகத்தன்மை மிக்கன. ஆனால் சட்டங்களையும் ஒழுங்குகளையும் எமது நலன் சார்ந்து மாற்றுவது என்பது பலத்தால் மட்டுமே சாத்தியமானது. பலம் எனும் போது ஒன்றில் அது தடியாய் இருக்கலாம் அல்லது கரட்டாய் இருக்கலாம். ஆனால் உள்ள ஒழுங்கு தன்னால் மாறாது. சிக்கலான ஒழுங்குகளை மாற்றுவதற்கான பலம் எமக்கு இல்லாது போயின் எமக்குள்ள ஒரே தெரிவு, ஒழுங்களைப் புரிந்து அவ்வொழுங்களிடம் இருந்து எமது நலன்களை எவ்வாறு நாம் உறுதி செய்து கொள்வது என்பது மட்டுமே. பூக்கோவின் சிந்தனையால் கவரப்பட்டு ஒழுங்கை நிராகரித்து நான் மட்டும் வாழ்வதால் எதுவும் நடந்து விடாது. உலகின் ஏழு பில்லியன் மக்களும் ஒழுங்குகளால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு மக்கள் குழுமமாக எமது நலன்களை நாம் ஒழுங்களை அனுசரித்து மட்டுமே பெறமுடியும். ஏனெனில் ஒழுங்களை முற்றாக நிராகரி;த்து ஓங்கி எழும் பலம் எம்மிடம் இல்லை.

இந்தப் புள்ளியில் தான், இப்பதிவின் ஆரம்பத்தில் நான் பேசிய விடயங்களிற்கான காரணம் உள்ளது. இன்று யாழ்களத்தில் கருத்தாடும் பெரும்பான்மையினருடைய வயது போராட்ட காலத்திற்குட்பட்டது—அதாவது முன்னைய ஒழுங்குகள் நிராகரிக்கப்பட்ட காலத்தினது. நாங்கள் பிரச்சினையை (சிங்கள பேரினவாதம்) ஒருமைப்படுத்தி அதற்கான தீர்வையும் (ஆயுத போராட்டம்) ஒருமைப்படுத்தி இருந்த சிந்தனைக்குள் வளர்ந்தவர்கள். கடந்த மே மாதம் வரையும், எங்களின் சிந்தனை நியாயமானதாகவே இருந்தது. உண்மையில் ஒரு பிரச்சினையியைத் தீர்ப்பதற்கு அப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணத்தை அகற்றுதல் என்பது தான் விரும்பத்தகு தீர்வும் முதற் தெரிவும். நாங்களும் எங்கள் விரும்பத்தகு முதற் தெரிவிற்கு உயிர்களைக் கொடுத்து முயன்றோம். ஆனால் மே பத்தொன்பதாம் திகதி, எங்கள் ஆன்மாவை உலுப்பிய கொடிய உண்மை எங்களின் தொண்டை வழி தடி கொண்டு எங்களிற்குள் திணிக்கப்பட்டது. அதாவது, எங்களின் தெரிவினை அமுல்படுத்தும் பலம் எங்களிடம் இல்லை என்பதே அந்த உண்மை.

தோற்றுப் போன ஒரு வழிமுறை என்பதால் அதன் அனைத்துத் தார்ப்பரியங்களும் நிராகரிக்கப்படவேண்டியன அல்ல என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. முள்ளிவாய்க்காலில் எங்கள் மீது அறையபட்ட உண்மை உண்மை என்பதால், என்றைக்கும் எமக்குத் தேவையான பலத்தை எம்மால் அடைந்து விடமுடியாதென்றாகி விடாது என்ற கருத்தை நாம் உள்வாங்கத் தான் வேண்டும். ஆனால், “என்றைக்கும்” என்ற பதம் அடிப்படையில் நேர வரையறை அற்ற பதம். எங்கள் நலன்களிற்காக எத்தனை காலம் நாங்கள் காத்திருக்கத் தயாராய் உள்ளோம்? எத்தனை உயிர்களை இழக்கச் சித்தமாய் உள்ளோம்? இந்தக் கேள்விகளிற்கான விடை யாரால் எவ்வாறு அளிக்கப்படலாம்? போன்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அதாவது, இன்றைய நிலையில் ஆயுத போராட்டம் எமது தேர்வாகும் என்றால், எமக்குத் தேவையான பலம் என்பது நாலு தொடை நடுங்கிச் சிங்கள இராணுவத்தை வெல்லும் மன உறுதி என்பது மட்டும் அல்ல. உலகை, அதன் அனைத்து அஸ்திரங்களோடும் (தொழில் நுட்பம் உட்பட) எதிர்கொண்டு வெல்வதற்கான பலம் எமக்கு இருந்தால் மட்டுமே ஆயுதப் போராட்டம் எமது முதன்மைத்தெரிவாக இனிமேல் ஆக முடியும். உலகு எனும் போது அமெரிக்காவும் அதற்குள் அடக்கம். ஆகவே, ஆயுத போராட்டம் தான் எமது தெரிவு என்றால், அத்தெரிவிற்கான அடிப்படையான எமக்குத் தேவையான பலத்தை எவ்வாறு எந்த கால எல்லைக்குள் நாம் அடைவோம் என்ற திட்டத்தை ஆயுத போராட்டத்தை முதன்மைத் தெரிவாகப் பரிந்துரைப்பவர்கள்; கூறியே ஆகவேண்டும்.

ஆயுத போராட்டத்திற்கு மாற்றாக, அல்லது ஆயுத போராட்டம் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பக்க முறைமையாய் இருக்க, முதன்மை முறைமையாய், உலக ஒழுங்குகளிற்குள் எமது நலன்களை உறுதிசெய்யும் இதர வழிமுறைகளை அடையாளம் காண்பது என்பதும் ஒரு தெரிவு தான் என்பதை ஆயுத போராட்ட ஆர்வலர்களும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஆயுத போராட்டம் என்பது இதர முறைமைகளிற்கு வலுச்சேர்பதாய் இருக்கலாம் ஆனால் முதன்மை முறைமையாய் இருக்கமுடியாது என்ற கருத்து உதாசீனப்படுத்தப்படமுடியாதது. ஏனெனில் எங்களின் இன்றைய வாழ்வு முள்ளிவாய்க்காலைக் கடந்து நிற்பது.

இங்கு தான் ஒருமைக்குள் வளர்ந்த எங்களின் உளவியல் ஒரு சிக்கலைத் தோற்றுவிக்கின்றது. அதாவது, நாங்கள் செய் அல்லது செத்து மடி என்ற கலாச்சாரத்திற்குள் அர்ப்பணிப்புக்களைப் பார்த்தபடி வளர்ந்தவர்கள். பேசுவதை வெட்டிப் பேச்சாக மட்டுமே கருதி வளர்ந்தவர்கள் நாங்கள். செய்து காட்டாத எழுத்துக்களும் பேச்சுக்களும் எங்களிடம் எடுபடாது. நாங்கள் யாரேனும் ஒருவரிடம் எங்களின் தீர்வை எதிர்பார்ப்பவர்கள். ஒருமை என்பது எங்களோடு ஒட்டிப்போனது. பலர் சேர்ந்து எங்கள் பிரச்சினையின் ஒவ்வொரு பாகங்களிற்கான தீர்வைத் தேடுதல் என்பது எங்களிற்கு உடன்பாடற்றது. கட்டழைப்படி அனைவரும் ஒத்து ஒருமையாக அணிவகுப்புச் செய்வது மட்டுமே எங்களின் சிந்தனையுடன் ஒத்திசைவது. ஆனால் எங்களின் இந்தப் பண்புகள் ஆயுதப் போராட்டத்திற்கு மட்டுமே வலுச் சேர்ப்பன. ஏழு பில்லியன் மக்களின் அரசியலிற்குள் எங்களின் அரசியலை உறுதி செய்வதற்கு எங்களின் தற்போதைய பண்புகள் தடையாக மட்டுமே இருக்கமுடியும்.

கனடாவில் இப்போதெல்லாம் சமூகநிகழ்வுகழ் “தமிழ் சமூகம்” என்ற கட்டமைப்பால் நிகழ்த்தப்படுகின்றன. ஏன் இந்தப் பெயர் எமக்கு அவசியமானது என்பதை யாரும் கூறித் தெரிந்துகொள்ளும் அவசியம் எனக்கில்லை. மேலும், “தமிழ் சமூகம்” என்பதை நக்கல் பண்ணுவதற்காக இங்கு நான் இதைக் குறிப்பிடவுமில்லை. இதை நான் குறிப்பிடுவதன் ஓரே காரணம், இன்றைய நிலையில் எமக்கு இன்றியமையாததான “தமிழ் சமூகம்” (சிவில் சொசையிற்றி) என்ற சிந்தனையினை, நாங்கள் கட்டழைக்கு அணிவகுக்கும் நிழச்சி ஏற்பாட்டாழர் என்ற விடயமாக மாற்றி வைத்துள்ளோம். இந்த ஒருமைக்குள் யார் எதைத் தேடுவது?

கனடாவில் உளவுத்துறை இரண்டு கட்டமைப்புக்களிற்குள் செயல்படுகின்றது. இவ்விரண்டு கட்டமைப்புக்களும் தங்களிற்குள் குடிமிப்பிடி சண்டையாக வாழினும் நடைமுறையில் உளவு விவகாரங்களில் இவை இரண்டிற்கும் பங்குண்டு. இவ்விரண்டு கட்டமைப்புக்களினதும் ஆங்கில அடைமொழி நான்கு எழுத்துக்களால் ஆனது. அந்தவகையில்; கனேடிய உளவுத்துறை எங்களிற்குள நான்கெழுத்தாக ஆனது. எதற்கெடுத்தாலும் நாங்கள் கூறுகின்ற ஒற்றைக் காரணம் நாலெழுத்து பிரச்சினை கொடுக்கும் என்பது தான். தனிநபர் பெயரினை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்றறிவித்தால் அந்நபரிற்கு ஆபத்து, எனவே நாங்கள் தமிழ் சமூகம் என்றறிவிக்கின்றோம் என்பார்கள். சரி உலகத்தமிழர் என்றறிவித்தால் பிரச்சினை தமிழர் பேரவை என்றறிவித்தால் என்ன என்று யாரும் கேட்டால், தமிழர் பேரவையின் செற்திட்டம் அரசியல் சார்;நதது, அது ஒரு லொபி அமைப்பு, அதற்கு நற்பெயர் தேவை, இவ்வாறான செயற்பாடுகள் தமிழர் பேரவையின் பெயரையும் கெடுத்து தடைசெய்யப்பட்ட அமைப்பாய் மாற்றத் தான் உதவும் என்பார்கள்.

ஆகமொத்ததத்தில் மேற்படி கூற்றுக்கள் வாயிலாக ஒருவர் அறியக்கூடியது என்னவெனில், இங்கு “தமிழ் சமூகம்” ஒழுங்கு செய்யும் நிகழ்வுகள் எல்லாம் கனேடிய சட்டத்தோடு உராய்கின்ற, கனேடியர்களால் வெறுக்கப்படுகின்ற நிகழ்வுகளாகவே இருக்கின்றன. அதனால் தான் இந்நிகழ்வுகளைப் புனைபெயரில் ஒழுங்கு செய்ய வேண்டி ஏற்படுகின்றது. ஆக, கனடாவை கொதிக்கப்பண்ணும் நிகழ்வுகளைத் “தமிழ் சமூகம்” ஒழுங்கமைக்கின்றது. எதற்காக ஒழுங்கமைக்கின்றது? இது கூடவா தெரியாது, எமது மக்களின் இன்னல்கள் தொடர்பில் விழிப்புணர்வேற்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கின்றது. அதாவது, ஏற்பாட்டாளர்கள் எத்தனையோ தியாகங்கள் செய்து எத்தனையோ ஆபத்துக்களைச் சந்ததித்து, கனடாவைக் கொதிக்கப்பண்ணி ஏற்படுத்துமு; இந்நிகழ்வுகளானவை, எமது மக்களின் இன்னல் தொடர்பில் கனடாவின் மனசாட்சியை உலுக்கி இரத்தக்கண்ணீர் வடிக்கச் செய்வதற்கான செயற்பாடுகளாகும்.

இந்த லொஜிக் எங்கையோ உதைக்கிற மாதிரியில்லை?

சொந்தப் பெயரில்; அல்லது பேரவையின் பெயரில் ஒழுங்கு செய்யப்படக்கூடாத நிகழ்வுகள் இவை என்ற தெளிவு உள்ள “தமிழ் சமூகம்”, அத்தகைய நிகழ்வினால் தமிழ் சமூகத்திற்கு நன்மை பிறக்கும் என்று எதனால் நம்புகிறது? ஒரு நிகழ்வு கனேடிய சமூகத்தால் பிரச்சினைக்குரியதாய் பார்க்கப்படுகின்றது என்றால், அந்நிகழ்வின் தார்ப்பரியம் என்ன? எதனால் அது பிரச்சினையாகிறது என்று ஆராயாத தலைமைத்துவம் சாத்தியமா?

மே பத்தொன்பது வரை, பணம் சேர்ப்பதே முதன்மை இலக்காக இருந்தது. ஆயுதபோராட்டம் என்ற இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதற்குப் பணம் அவசியம். அந்த வகையில் மக்களை எழுச்சியாய் வைத்திருப்பது மிகமிக அவசியம். அதற்காகக், கனடாவின் ஆசீர்வாதம் பெறமுடியாத சில செயற்பாடுககையும் அப்பப்போ நடாத்தியே தீரவேண்டி இருந்தது. ஏனெனில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருமைக்குள் மக்கள் எழுச்சியாக இருந்தால் மட்டுமே பணம் கிடைக்கும். ஆயுதப் போராட்டம் எமது முதன்மை முறைமையாய் இருந்தவரை இது ஏற்புடையதே. ஏனெனில், அடிப்படையில் எமது நலன்களை இராணு பலத்தால் பெற்று விடமுடியும் என்றே நாங்கள் நம்பினோம். அங்கீகாரம் என்ற அடுத்த கட்டத்திற்குத் தான் எங்களிற்கு உலக அபிப்பிராயம் தேவைப்பட்டது. ஆயுத ரீதியில் நாங்கள் எங்கள் இலக்கை அடைந்து வைத்துக் கொண்டு, உலகம் விரும்பிய நேரம் எங்களை அங்கீகரி;க்காலம் அது வரை நாங்கள் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து எமது நாட்டை வளப்படுத்திக் கொண்டிருப்போம் என்பதே எமது நிலைப்பாடாய் இருந்தது. ஆனால் மே பத்தொன்பதில் எங்கள் அடிப்படை மாறிவிட்;டது. ஆயுதப் போராட்டம் எங்களின் முதன்மை முறைமையாய் இல்லாது போய் விட்டது.

இந்நிலையில் எங்களிற்குத் தேவை உண்மையான “தமிழ் சமூகம்”. தனது தேவைகள், அங்கலாய்ப்புக்கள், ஆதங்கங்கள், சிந்தனைகள், தெரிவுககள் பற்றிப் பயப்படாது தடையின்றிக் கருத்தாடும் தமிழ் சமூகம் எங்களிற்குத் தேவை. சிந்தனைகள், விவாதங்கள் எங்களிற்குத் தேவை. இந்த நிமிடத்தில், எங்களிற்கான முறைமை என்னவென்று முடிவெடுக்காது நாங்கள் உள்ள இந்த நிலையில், எங்களைப் பற்றி நாங்கள் படிக்கவேண்டும். சுயவிசாரணைகள் செய்ய வேண்டும். எங்களிற்கு என்ன வேண்டும் என்று நாங்கள் எங்களிற்குள் கூற வேண்டும். எங்களின் பொதுமை என்பது என்ன என்று நாங்கள் ஒரு உடன்பாட்டிற்குக் கருத்தாடல் மூலம் வரவேண்டும்.

எழுதுவதும் கருத்தாடுவதும் என்பது வெட்டிப் பேச்சாய்; மட்டும் தான் இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு கருத்துக்கள் ஒவ்வொருவரால் ஒவ்வொரு விதத்தில் உள்வாங்கப்படும். எழுதியவரிற்கே இல்லாத தெளிவு அவ்வெழுத்தை வாசிக்கும் வாசகனிற்கு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. ஒரு சிந்தனை அதைச் சிந்தித்தவரைக் காட்டிலும் வினைத்திறனுடன் அச்சிந்தனையை உள்வாங்குபவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு உலகில் நிறையவே உள்ளது. நாம் காணத் தவறும் வழிகளை நாம் காண்பதற்கு முதலில் அனைவரும் வழிகளைத் தேடத் தொடங்க வேண்டும்.

எங்களது இதுவரை நடந்த அனுபவத்தில், துரோகிகள் எங்களின் வீழ்ச்சியில் பாரிய பங்கு வகித்திருக்கின்றார்கள். அதனால் துரோகிகள் மீதான எங்களின் அவதான உணர்வு நியாயமானது. எங்களின் ஒருமைக்குப் புறப்பான எழுத்துக்கள் தொடர்பில் எங்கள் சந்தேகம் நியாயமானது. எதிரியோடு கைகோர்த்து வந்து துரோகிகள் எங்கள் தலைகளைக் கொய்துள்ளார்கள். துரோகிகள் மீதான எங்களின் வெறுப்பு நியாயமானது. ஆனால், எதனால் துரோகிகளால் எங்களை வெல்ல முடிந்தது என்றும் நாங்கள் ஆராய வேண்டும். துரோகிகள் காலமுள்ளவரை உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள். எங்கள் எதிரியும் துரோகிகளிற்குப் புகலிடம் கொடுத்துக் கொண்டு தான் இருப்பான். ஆனால் துரோகிகள் காட்டிக்கொடுக்க முடியாத கட்டமைப்பு எங்களிடம் இருக்குமேயானால் துரோகி தானாய் இல்லாது போய்விடுவான். ஓவ்வொரு துரொகியாய் தேடி அழிப்பதைக் காட்டிலும், துரோகிகள் செயற்படுவதற்கான அடித்தளத்ததை இல்லாது செய்வது பலமானது.

இரகசியம் என்பது இருக்கும் வரை தான், இரகசிய விற்பனையாளனிற்குக் கிராக்கி இருக்க முடியம்;. அத்தோடு, இரகசியங்கள் துரோகிகளால் மட்டும் பாவிக்கப்படவில்லை. இரகசியத்தை அதிகாரம் ஆக்கிய ஒட்டுண்ணிகளும் நம்முள் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எங்கள் பிரச்சினைகள், அபிலாசைகள் என்ன என்பது இரகசியமாய் வைத்திருக்கப்படவேண்டியதல்ல.

உண்மையில் உலகில் எங்களது பிரச்சினை பற்றிப் பல குளப்பங்கள் இன்னமும் உள்ளன. உலகை விடுவோம், எங்களிற்குள் கூட எங்களின் பிரச்சினை பற்றி இன்னமும் தெளிவின்றியே இருக்கின்றது. முப்பத்து மூன்று வருடங்களின் முன்னர் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி மக்களிற்கு வகுப்பெடுத்து விளங்கப்படுத்த வேண்டிய நிலை இன்றைக்கு எதனால் ஏற்படுகின்றது?

எங்களின் பொதுமைக்கான பிரச்சினை என்ன? எங்களின் பொதுமைக்கான அபிலாசைகள் என்ன? என்பதில் எங்களிற்குத் தெளிவு பிறக்கையில் நாங்கள் அதை வெளிப்படியாய் உலகின் முன் வைப்பதில் எந்தக் கெடுதலும் இல்லை. எங்களின் வெளிப்படையான அபிலாசைகள் நோக்கி உலகின் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒழுங்கி;ற்குள் “கிறியேற்றிவாக” நாங்கள் நடக்கையில் துரோகியின் வீச்சுக் குறைந்து போகும்.

இன்றைய நிலையில் எங்களிற்குள் கட்டற்ற பரந்த கருத்துப் பகிர்வும் விவாதமும் அவசியம். உண்மையில் எங்களின் இன்றைய கழைத்த நிலையில் நாங்கள் செய்யக் கூடியதும் இது தான். பொதுமைக்காகப் போராடும் இனமாக நாங்கள் இருக்கையில் எங்கள் பொதுமை என்ற கோட்டையின் செங்கற்களான மக்களிற்கு ஏன் எதற்காக நாம் போராடுகின்றோம் என்பதில் தெளிவிருக்க வேண்டும். நாங்கள் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு மக்களிடம் நீங்கள் எதனை விரும்புகிறீர்கள் என்று கேட்டு விட்டு, மக்களின் பதில் எங்களின் எதிர்பார்ப்போடு முரண்படுகையில் முறைப்பது என்பது கருத்தாடலாகாது.

புலத் தமிழர்கள் இன்று கடந்து போன முறைமையின் அடிப்படையிலான செயற்பாடுகள் பலவற்றைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அச்செயற்பாடுகளில் பங்கெடுப்பவர்கள் தியாகிகளாகவும் கேள்வி கேட்பவர்கள் போராட்டத்தின் பால் ஈடுபாட்டை தொலைத்துவிட்டு நிற்கும் பதர்களாகவும் பார்க்கப்படும் நிலைமை உள்ளது. ஒரு பிரச்சினையை உருவாக்கிய மனநிலையில் இருந்து அப்பிரச்சினைக்கான தீர்வு அடையாளம் காணப்பட முடியாதது என்பது ஐன்ஸ்ரைனின் கூற்று. இக்கூற்றில் எனக்கும் உடன் பாடு உண்டு. சும்மா இருந்த எங்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய எங்களின் போராட்டம் எங்கள் மனங்களில் எப்படிப் பார்த்தாலும் நியாயமாகவே இருந்தது. ஆனால் உலகோ சிங்களத்தோடு ஒன்று சேர்ந்து எங்களை இன்று தோற்கடித்து நிற்கின்றது. நியாயமானதாய் எங்களிற்குப் படும் எங்களின் போராட்டம், உலகிற்குச் சிங்களத்தோடு கைகோர்த்து எங்களைத் தோற்கடிக்கும் நிலையினை எவ்வாறு சாத்தியமாக்கியது? உலகிற்கு எதனால் இது சாத்தியமானது என்ற கேள்வி எங்களிற்குள் பிறக்காது, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நாங்கள் நடக்கும் வரை எங்களிற்காகக் காத்திருக்கும் உலகின் பெறுபேறுகளில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

எங்களிற்கு முந்திய எங்களின் சந்ததி, உள்ள ஒழுங்கிற்குள் தமது தனிப்பட்ட தேவைகளை எவ்வாறு உறுதிசெய்து கொள்வது என்பது தொடர்பில் நடைமுறை அனுபவம் பெற்றிருந்தார்கள். அரசியல் வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பெரும்புள்ளிகள் இப்படிப் பல்வேறு தரப்பட்ட ஒட்டுண்ணிகள் மத்தியில் தங்கள் நலன்கள் சார்ந்து வெட்டியோடும் திறனை எமக்கு முன்னோர் பெற்றிருந்தார்கள். நாங்கள் ஒழுங்கின்மைக்குள் அர்ப்பணிப்புக்களைப் பார்த்து கறுப்பு வெள்ளைப் பார்வையோடு வளர்;ந்ததால், எங்களிற்கு உள்ள ஒழுங்கிற்குள் வெட்டியோடும் நடைமுறை அனுபவம் கைவராது போனது. இதனால் தான் எங்கள் சிந்தனையில், செய் அல்லது செத்துமடி என்பததைத் தவிர்ந்த அனைத்தும் வெட்டிப் பேச்சாக, துரோகத் தனமாக, விலைபோதலாகப் படுகின்றது. ஆனால் எங்கள் முன் இருக்கும் பிரச்சினை என்பது உள்ள ஒழுங்கிற்குள் நாங்கள் வெட்டியோடுவதால் மட்டுமே தீர்க்கப்படக்கூடியது.

எங்கட பிரச்சினை உலக ஒழுங்கை மாற்றுவதோ, புரட்சி செய்வதோ, தத்துவ உருவாக்கமோ இல்லை. எங்கட பிரச்சினை சிங்கள ஆபத்து நீங்கி நாங்கள் நாங்களாய்ச் சுதந்திரமாய் வாழவேண்டும் என்பது மட்டுமே. எங்களின் பலம் அல்லது சக்தி மட்டுப் படுத்தப் பட்டது. உலகை எங்கள் போக்கில் மாற்றுவது எங்களின் இலக்கல்ல. உள்ள ஒழுங்கை நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்குக் கருத்தாடலும் விவாதமும் அவசியம்.

பி.கு: எனது கருத்தோடு அனைவரும் உடன்படவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எனது சிந்தனை தவறாயின் அதைத் தெரிந்து கொள்வதும் எனது நோக்கமே. எனவே, எனது கருத்தில் ஓட்டைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்--தெரிந்து கொள்கின்றேன். நீங்கள் முன்வைக்கும் எதிர்க் கருத்தோடு எடுத்த எடுப்பில் எனக்கு உடன்பாடு வரவில்லை எனின், விவாதிக்கத் தயாராய் உள்ளேன்.

Edited by Innumoruvan

இன்னுமொருவன், மினக்கட்டு நீண்ட ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீங்கள். எங்கடை கொள்கை வகுப்பாளர்கள், நன்னடத்தை சட்டவியலாளர்களுக்கு விளங்குறமாதிரி தலைப்பை மாற்றுங்கோ. அதாவது உள்ளக்கிடக்கை.. ஆழ்மன அடிவாரம் உப்பிடி தலைப்புக்களை போடாமல்.. கனேடிய தமிழ் சமூகத்தின் தில்லு முள்ளுகள்.., அன்று கொண்டாட்டம் இன்று திண்டாட்டமா? உப்பிடி நம்மட ஆக்களிண்ட பாசையில தலைப்பை எழுதினால்தான் பாய்ஞ்சு அடிச்சு... கருத்துக்களும், ஆலோசனைகளும் வந்து குவியும். அடுத்ததடவையாவது உந்த ரெக்னிக்கை பாவியுங்கோ.

அடுத்ததாக, கள்ளவேலைகள், சட்டவிரோதமான வேலைகள் ஏதும் செய்தால்தான் நாலு எழுத்துகாரருக்கு பயப்படவேணும். இல்லாவிட்டால்.. ஏன் ஒளிந்து ஒளிந்து வாழவேணும். செயற்படவேணும்? ஓர் வேலையைச்செய்யும்போது அது சட்டவிரோதமானது என்றால் மேற்கொண்டு அதை ஏன் செய்கின்றார்கள்? நீங்கள் சொல்வதுபோல் பெரும்பான்மை சமூகத்துடன் மல்லுக்கட்டி எங்கள் பிரச்சனையை தீர்க்கமுடியாது. நம்மவர்களில் பலர் உணர்ச்சிவசப்படுபவர்களாய் இருக்கிறீனம். உணர்வுகள் முன்னாலும் அறிவு பின்னாலும் போகும்போது.. என்ன செய்வது?

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழத்தமிழர்களின் யூதக் கனவையும்" உங்களைது நீண்ட "உள்ளக்கிடக்கையும்" வாசித்த பின்னர் எஞ்சுவது வெறுமைதான். தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் செயல் வீரர்களாக இருந்தவர்கள். தமிழர்கள் வெல்வோரின் பின்னால் எப்போதும் அணிதிரள்பவர்கள். உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளவும், மாற்றங்களை விவாதிக்கவும் நேரமில்லாதவர்கள். ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பிரச்சினையின் அடியாழத்தை தேடுவதை விடுத்து அப்படியான பிரச்சினையை முன்னர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வைத்தே தீர்வைத் தேடுபவர்கள். எனவேதான் இறந்த காலத்திலேயே உழலவேண்டியுள்ளது.

  • தொடங்கியவர்

மச்சான் உங்கள் கருத்திற்கு நன்றி. தலைப்புப் பற்றிய உங்கள் கருத்தை ஒரு வகையி;ல் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

கிருபன்,

பதிவு நீண்டுவிட்டமை உண்மை தான். சொல்லவந்ததைச் சொல்வதற்குள் நீண்டுவிட்டது. இன்னமும் சொல்லப்பட வேண்டிய சில முனைகள் நீட்சிகாரணமாகவே உள்ளடக்கப்படாதுள்ளன.

எல்லோரிற்குள்ளும் இன்று வெறுமை உள்ளிருந்து துன்புறுத்துவது உண்மை தான். நாம் அறிந்தோ அறியாமலோ முகங்களும் நினைவுகளும் படம்போல மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்த வெறுமையின் பிடிக்குள் சிக்கி மன அழுத்ததற்குள் செல்வதா அல்லது இந்த வெறுமை வெற்றி கொள்ளப்படக் கூடியதா என்ற தேடலின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் இப்பதிவும்.

பரவாயில்லை.. உள்ளக்கிடக்கைதானே.. நீளமாய் எழுதினால் பிரச்சனை இல்லை. ஆனால்.. எங்கடை ஆக்களுக்குத்தான் உது விளங்குமோ தெரியாது. ரெண்டு மூன்று வசனத்தில குட்டையை கிளறிவிடுறமாதிரி எழுதினால்தான் எங்கடை ஆக்களுக்கு வாசிக்கிறதுக்கு இலகு, அத்தோட விளங்கும். ஆரோக்கியமான ஆழமான சிந்தனைகளை உள்வாங்கிற விளையாட்டு எல்லாம் இஞ்ச சரிவராது. எடுத்தமா கவிழ்த்தமா எண்டு கருத்து நச்செண்டு இருக்கோணும். பெஸ்ட் ஆவ் லக்கு நெக்ஸ்டு டைமு

Edited by மச்சான்

இன்னுமொருவன் நீண்ட கட்டுரை இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஒரு பகுதியை வாசித்தேன், மிகுதி வாசிக்க வேண்டும். வாசித்ததை வைத்து மட்டும் ஒரு சிறு கருத்து.

எங்களில் பலருக்கு நின்று நிதானித்து, உலக நடப்பை ஆராய்ந்து பலரின் கருத்துக்களை உள்வாங்கி நல்லது கெட்டதை ஆராயும் பழக்கம் என்பது எட்டா பொருத்தாம். சில நேரம் எமக்கு பாதகமாக நடந்த விடயத்தை கூட, இதேல்லாம் ஏன் இப்படி நடக்கிறது, இனிமேலும் இப்படி நடக்காது இருக்க நாம் எப்படி செயற்பட வேண்டும் என எண்ணுவதை விடுத்து, ஏதோ வீரதீரமான விடயமாக சவடால் விட்டு எழுதும் மனப்பக்குவம். அண்மையில் சீமானை திருப்பி அனுப்பிய விடயத்தை பற்றி ஒரு வலைப்பதிவர் எப்படி தலைப்பிட்டார் என பார்த்தால் அது புரியும். அவர் இட்ட தலைப்பு " சீமானின் பேச்சை கண்டு கனடா அரசு பயந்துவிட்டது" என்ற சாரப்பட இருந்தது.

வேறு என்ன சொல்வது. உங்களின் உள்ளகிடக்கையை எழுதியிருக்கிறீர்கள், இதை படித்து புரிந்து கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்......

Edited by KULAKADDAN

உங்கள் உள்ளக்கிடக்கையை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். அது முக்கியமானது.

சும்மா இருந்த எங்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய எங்களின் போராட்டம் எங்கள் மனங்களில் எப்படிப் பார்த்தாலும் நியாயமாகவே இருந்தது

உண்மையில் இது எங்களை நாங்கள் ஏமாற்றும் ஒரு கூற்றே. இத்தால் சிங்களவர்கள் யோக்கியர்கள் ஆகமுடியாது. ஆனால் நாமக்கு முந்திய தலைமுறை சும்மா இருந்தவர்கள் இல்லை. நாம் எமக்குள் அதிகாரத்தை தேடும் ஒரு சமூக இயக்கத்தைச் சார்ந்த இனம். எமது அழிவுகளின் முடிச்சு இங்கேதான் தனது தொடக்கத்தை கொண்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆழும்வரை எமது இனம் எவ்வாறு இருந்தது? அதுவும் ஒரு அன்னிய ஆக்கிரமிப்புக் காலம் தான். ஆனால் எமது இனம் சாதி மதம் அந்தஸ்த்து கல்வியறிவு பேன்றவற்றைக் ஆயுதமாக கையில் எடுத்து எமக்குள் ஒரு சமூகயுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது. அந்த ஆயுதங்களை வைத்து அதிகாரங்களை எமக்குள் வரையறுத்தது. எமக்கான பசியும் அதன் எல்லையும் அதற்கான இரையும் எமக்குள்ளகவே அடங்குகின்றது. அன்னிய ஆக்கிரமிப்பு என்பதை உணரும் நிலையில் எமது முன்னோர்கள் இருக்கவில்லை. இந்தத் தலைமுறையில் நடந்த ஆயுதப்போராட்ட காலத்தாலும் கவனிக்கப்படாத பண்டாரவன்னியன் விதிவிலக்காக இருப்பதையும் எமது சமூக யுத்தத்தோடுதான் இனம் காணமுடியும்.

இவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பானது எமது இனத்தை சிங்களப் பகுதிகளில் வேலைக்கு அமர்த்தியபோது எமது சமூகயுத்த முறை சிங்கள மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. வெள்ளைகளின் ஆட்சியில் தமிழ்க் கண்காணிகளும் அதிகாரிகளும் அத்தோடு சேர்ந்த கூட்டமும் சிங்கள பாமர மக்களை எவ்வாறு கையாண்டது என்பதை நாம் சுலபமாக மறந்து விடுகின்றோம். எமக்குள் கீழ்சாதி என்றும் படிப்பறிவில்லாதவன் என்றும் வேற்று மதத்தவன் என்றும் தொடர்ந்த சமூக யுத்தம் சிங்களவன் மீது பாவிக்கப்பட்ட போது அது இனப்பிரச்சனை என்னும் நெருப்பில் எண்ணையாக மாறியது. சிங்களப் பெருந்தேசியக் கட்டுமானத்தையும் எழுச்சியையும் விரைவுபடுத்தியதிலும் அதற்கொரு பயங்கரவாத உணர்வை வளர்த்ததிலும் எங்களுக்குள்ளான சமூகயுத்ததின் தவறான பாவனை பெருங்காரணமாகின்றது. இங்கே சிங்களப் பேரினவாதத்தை நியயப்படுத்துவது நோக்கமில்லை ஆனால் அதற்கப்பால் எம்மைப்பற்றிய உண்மைகளை நாம் கதைக்கவேண்டும்.

நாம் இனமாக தோற்றதற்கும் முதல்காரணம் மேற்குறிப்பிட்ட சமூக யுத்தமே. இன்றும் தொடர்வது அதுவே. ஆயுதப்போராட்டகாலங்களில் எமக்குள்ளான மோதல்கள். இன்றும் தொடரும் மோதல்கள் மற்றும் ஒன்றுபட முடியாத கருத்து மோதல்கள் எல்லாம் தொடரும் சமூக யுத்தத்தின் ஒரு அங்கமே. களங்கள் மாறியது முறைகள் மாறியது ஆனால் நாம் மாறவில்லை. பண்பாட்டுத்தளத்தில் எமது மனம் மாறவில்லை. இந்த மனமாற்றம் இன்றி ஒரு பொது உடன்பாட்டுக்கு நாம் வரமுடியாது என்பதே யதார்த்தம்.

புலம்பெயர் தேசத்தில் பல்லினங்கள் நடந்து செல்லும் ஒரு சாலையில் நான் ஒரு தமிழனைக் காண்கின்றேன். இதற்கு எனக்கு உதவியாக இருப்பது பல்லினங்கள். தமிழர்கள் கூடிய ஒரு வீட்டில் நான் தமிழனை சாதியாய் மதமாய் பிரித்துக்காண்கின்றேன். இன்றும் தமிழன் ஒரு புறநிலைக் காட்சியாகவே இருக்கின்றான். சிங்களவனும் அவனது மூர்க்கத்தனமான கொலைகளுமே எம்மை தமிழனாக மறுபடி மறுபடி முகத்தில் அறைந்து கூறியது. நாம் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும் முள்ளிவாய்க்கால் தான் சாட்சி. நாம் எல்லோரும் இன்று நிச்சயமாக அம்மணமாகத்தான் நிற்கின்றோம். ஆனர் இந்த அம்மணக் கூட்டத்துக்குள் கோவணம் கட்டிய ஒருவராக மாறிவிட முற்படுகின்றோம். எமது நிர்வாண நிலைக்குள்ளும் வரலாற்று வழியில் தொடர்ந்து வரும் சமூகயுத்தம் தந்த மனநிலை மாறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பார்த்து கனடாவே கடகட வென்று நடுங்கிட்டுது...தொடை நடுங்கியள் அடுத்தது அமெரிக்கா ஜரோப்பா.. சீனா எல்லாம் நடுங்கும்..அவையளும் நடுங்கி முடிந்ததும் நேரடியாக தமிழீழம் கிடைச்சிடும்...எனவே இன்னுமொருவன் இப்பிடி கஸ்ரப்பட்டு நீண்ட கட்டுரையெல்லாம்..எழுதி மினக்கெடாதையுங்கோ..5ம் கட்ட ஈழப்போர் எங்கை எப்பிடி வெடிக்கும் என்று ஏதாவது எழுதுங்கள் படிக்க ஆவலாயிருகிறம்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""""""""இன்றைய நிலையில் எங்களிற்குள் கட்டற்ற பரந்த கருத்துப் பகிர்வும் விவாதமும் அவசியம். உண்மையில் எங்களின் இன்றைய கழைத்த நிலையில் நாங்கள் செய்யக் கூடியதும் இது தான். பொதுமைக்காகப் போராடும் இனமாக நாங்கள் இருக்கையில் எங்கள் பொதுமை என்ற கோட்டையின் செங்கற்களான மக்களிற்கு ஏன் எதற்காக நாம் போராடுகின்றோம் என்பதில் தெளிவிருக்க வேண்டும். நாங்கள் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு மக்களிடம் நீங்கள் எதனை விரும்புகிறீர்கள் என்று கேட்டு விட்டு, மக்களின் பதில் எங்களின் எதிர்பார்ப்போடு முரண்படுகையில் முறைப்பது என்பது கருத்தாடலாகாது. """""""""

'''''''''''''''''''''தோற்றுப் போன ஒரு வழிமுறை என்பதால் அதன் அனைத்துத் தார்ப்பரியங்களும் நிராகரிக்கப்படவேண்டியன அல்ல என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. முள்ளிவாய்க்காலில் எங்கள் மீது அறையபட்ட உண்மை உண்மை என்பதால், என்றைக்கும் எமக்குத் தேவையான பலத்தை எம்மால் அடைந்து விடமுடியாதென்றாகி விடாது என்ற கருத்தை நாம் உள்வாங்கத் தான் வேண்டும். ஆனால், “என்றைக்கும்” என்ற பதம் அடிப்படையில் நேர வரையறை அற்ற பதம். எங்கள் நலன்களிற்காக எத்தனை காலம் நாங்கள் காத்திருக்கத் தயாராய் உள்ளோம்? எத்தனை உயிர்களை இழக்கச் சித்தமாய் உள்ளோம்? இந்தக் கேள்விகளிற்கான விடை யாரால் எவ்வாறு அளிக்கப்படலாம்? போன்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன.'''''''''''''''''''

''''''''''''''''''''''''''புலத் தமிழர்கள் இன்று கடந்து போன முறைமையின் அடிப்படையிலான செயற்பாடுகள் பலவற்றைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அச்செயற்பாடுகளில் பங்கெடுப்பவர்கள் தியாகிகளாகவும் கேள்வி கேட்பவர்கள் போராட்டத்தின் பால் ஈடுபாட்டை தொலைத்துவிட்டு நிற்கும் பதர்களாகவும் பார்க்கப்படும் நிலைமை உள்ளது. ஒரு பிரச்சினையை உருவாக்கிய மனநிலையில் இருந்து அப்பிரச்சினைக்கான தீர்வு அடையாளம் காணப்பட முடியாதது என்பது ஐன்ஸ்ரைனின் கூற்று. இக்கூற்றில் எனக்கும் உடன் பாடு உண்டு.''''''''''''''''''''''''''

நன்றி இன்னுமொருவன் ...நான் பார்த்த, பார்க்கின்ற யாழலை இன்னுமொரு தளத்திற்கு எடுத்து செல்கின்ற கருத்துக்கள்...நான் நாடகம் பயிலும் போது எனது நடகசிரியரிடம் சொல்லுவேன் "sir இந்தகருத்து பார்க்கிற ஆட்களுக்கு விளங்குமோ , இலகுவாக சொல்லுவம்" என்று ,அவர் சொல்லுவர் ". என்னுடைய பெயர் ).. உமக்கு விளங்க்குமொண்டடல் மற்ரக்களுக்கும் விளங்கும்" அது போல , காலப்போக்கில் மற்றையவர்களும் உங்கள் கருத்தை விளங்கி பதில் எழுதுவார்கள்

""""இன்னுமொருவன், மினக்கட்டு நீண்ட ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீங்கள். எங்கடை கொள்கை வகுப்பாளர்கள், நன்னடத்தை சட்டவியலாளர்களுக்கு விளங்குறமாதிரி தலைப்பை மாற்றுங்கோ. அதாவது உள்ளக்கிடக்கை.. ஆழ்மன அடிவாரம் உப்பிடி தலைப்புக்களை போடாமல்.. கனேடிய தமிழ் சமூகத்தின் தில்லு முள்ளுகள்.., அன்று கொண்டாட்டம் இன்று திண்டாட்டமா? உப்பிடி நம்மட ஆக்களிண்ட பாசையில தலைப்பை எழுதினால்தான் பாய்ஞ்சு அடிச்சு... கருத்துக்களும், ஆலோசனைகளும் வந்து குவியும். அடுத்ததடவையாவது உந்த ரெக்னிக்கை பாவியுங்கோ"""

நன்றி மச்சான் ..நிதர்சனமான யதார்த்தம்

உண்மையில் இது எங்களை நாங்கள் ஏமாற்றும் ஒரு கூற்றே. """""""இத்தால் சிங்களவர்கள் யோக்கியர்கள் ஆகமுடியாது"""""""""". ஆனால் நாமக்கு முந்திய தலைமுறை சும்மா இருந்தவர்கள் இல்லை. நாம் எமக்குள் அதிகாரத்தை தேடும் ஒரு சமூக இயக்கத்தைச் சார்ந்த இனம். எமது அழிவுகளின் முடிச்சு இங்கேதான் தனது தொடக்கத்தை கொண்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆழும்வரை எமது இனம் எவ்வாறு இருந்தது? அதுவும் ஒரு அன்னிய ஆக்கிரமிப்புக் காலம் தான். ஆனால் எமது இனம் சாதி மதம் அந்தஸ்த்து கல்வியறிவு பேன்றவற்றைக் ஆயுதமாக கையில் எடுத்து எமக்குள் ஒரு சமூகயுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது. அந்த ஆயுதங்களை வைத்து அதிகாரங்களை எமக்குள் வரையறுத்தது. எமக்கான பசியும் அதன் எல்லையும் அதற்கான இரையும் எமக்குள்ளகவே அடங்குகின்றது. அன்னிய ஆக்கிரமிப்பு என்பதை உணரும் நிலையில் எமது முன்னோர்கள் இருக்கவில்லை.

Volcano: தனிப்பட ரீதியில் நான் பலருடன் கதைத்துள்ளேன்...இப்பவும் தங்கட பழைய கதை கதைக்கிறவர்கள் இருக்கிறார்கள்...இதை சொன்னால் கோபம் வரும் ...நாங்கள் துரோகியாவோம்.....தரப்படுத்தலை பற்றி கதைக்கிறவர்கள் தரப்படுத்தலால் கம்பஸ் கிடைத்த வன்னி , மன்னார் , முல்லைதிவு, மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை ஆட்களை பற்றி கதைப்பதில்லை....பெரதேணியவில் இருந்த ( யாழ்ப்பாண )தமிழரின் எண்ணிக்கை குறைந்தது தான் ஒரே பிரச்சனை...

புலம்பெயர் தேசத்தில் பல்லினங்கள் நடந்து செல்லும் ஒரு சாலையில் நான் ஒரு தமிழனைக் காண்கின்றேன். இதற்கு எனக்கு உதவியாக இருப்பது பல்லினங்கள். தமிழர்கள் கூடிய ஒரு வீட்டில் நான் தமிழனை சாதியாய் மதமாய் பிரித்துக்காண்கின்றேன். இன்றும் தமிழன் ஒரு புறநிலைக் காட்சியாகவே இருக்கின்றான். சிங்களவனும் அவனது மூர்க்கத்தனமான கொலைகளுமே எம்மை தமிழனாக மறுபடி மறுபடி முகத்தில் அறைந்து கூறியது. நாம் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும் முள்ளிவாய்க்கால் தான் சாட்சி. நாம் எல்லோரும் இன்று நிச்சயமாக அம்மணமாகத்தான் நிற்கின்றோம். ஆனர் இந்த அம்மணக் கூட்டத்துக்குள் கோவணம் கட்டிய ஒருவராக மாறிவிட முற்படுகின்றோம். எமது நிர்வாண நிலைக்குள்ளும் வரலாற்று வழியில் தொடர்ந்து வரும் சமூகயுத்தம் தந்த மனநிலை மாறவில்லை.

நன்றி :சுகன் ...நான் நினைக்கிறன் நீண்ட நாட்களுக்கு பின் என் விம்பத்தை இன்னுமொருவரில் (உங்களில்) பார்கிறேன் ...

சீமானை பார்த்து கனடாவே கடகட வென்று நடுங்கிட்டுது.

சாத்திரி,குளகட்டன் ................உங்களுடன் நானும் இணைகிறேன்

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் நீண்ட கட்டுரை இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஒரு பகுதியை வாசித்தேன், மிகுதி வாசிக்க வேண்டும். வாசித்ததை வைத்து மட்டும் ஒரு சிறு கருத்து.

எங்களில் பலருக்கு நின்று நிதானித்து, உலக நடப்பை ஆராய்ந்து பலரின் கருத்துக்களை உள்வாங்கி நல்லது கெட்டதை ஆராயும் பழக்கம் என்பது எட்டா பொருத்தாம். சில நேரம் எமக்கு பாதகமாக நடந்த விடயத்தை கூட, இதேல்லாம் ஏன் இப்படி நடக்கிறது, இனிமேலும் இப்படி நடக்காது இருக்க நாம் எப்படி செயற்பட வேண்டும் என எண்ணுவதை விடுத்து, ஏதோ வீரதீரமான விடயமாக சவடால் விட்டு எழுதும் மனப்பக்குவம். அண்மையில் சீமானை திருப்பி அனுப்பிய விடயத்தை பற்றி ஒரு வலைப்பதிவர் எப்படி தலைப்பிட்டார் என பார்த்தால் அது புரியும். அவர் இட்ட தலைப்பு " சீமானின் பேச்சை கண்டு கனடா அரசு பயந்துவிட்டது" என்ற சாரப்பட இருந்தது.

வேறு என்ன சொல்வது. உங்களின் உள்ளகிடக்கையை எழுதியிருக்கிறீர்கள், இதை படித்து புரிந்து கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்......

குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு நன்றி.

எமது சமூகம் தொடர்பில் நீங்கள் முன்வைக்கும் ஆதங்கத்தோடு நான் முற்றாக உடன் படுகின்றேன். சீமான் விடயத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்து உண்மையானது. ஊரில் ஒரு பழமொழி உண்டு “இறைச்சி உண்பவர் என்பதால் எலும்பை மாலையாய்ப் போட்டுத் திரியக்கூடாது என்று”. ஆனால் தற்போது கனடாவில் உள்ள நிலமை என்னவெனில் “மாமிசமே சாப்பிட்டறியாப் பிறவிச் சைவக்காரர் எல்லாம் எலும்புமாலை போட்டுத் திரியிறார்கள்”.

கிருபன் கூறியதைப் போல, வெறுமை தான் வந்து மிஞ்சுகிறது.

  • தொடங்கியவர்

சுகன் உங்களது ஆக்கபூர்வமான ஆழ்ந்த கருத்துக்களிற்கு மிக்க நன்றி.

முதற்கண், நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள எனது கட்டுரையின் பகுதியானது, எங்களை நோக்கி நாங்கள் கேட்கவேண்டிய ஒரு கேள்வியாக, எங்களால் ஆராயப்படவேண்டிய முனைகளில் ஒன்றாகத் தான் எனது கட்டுரையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தக் கேள்வியினை நாம் நிட்சயமாக அணுகியே தீரவேண்டிய ஒரு முனையில் நீங்கள் அணுகத்தொடங்கியிருப்பமை உண்மையில் மனதார மகிழ்ச்சி அளிக்கின்றது.

நீங்கள் எந்தக் கோணத்தில் இருந்து இந்தக் கேள்வியை அணுகுகி;ன்றீர்கள் என்று புரிகிறது. இருந்தாலும் சில கேள்விகள் தோன்றுகின்றன.

முதலாவதாக, “நாம் எமக்குள் ஒரு அதிகாரத்தைத் தேடும் சமூக இயக்கத்தைச் சார்ந்த இனம்” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இ;ந்தப் பண்பு எமது இனத்திற்கு மட்டுமான பண்பு அல்ல. அனைத்து இனங்களிற்குள்ளும் இந்தப் பண்பு இருக்கின்றது. உண்மையில், மனிதன் மட்டுமல்ல விலங்கு இராச்சியத்தில் அனைத்துமே இப்படித் தான் இருக்கின்றன. தாவரங்களும் சூரிய ஒளிக்குப் போட்டி போட்டு உயர முனைந்து கொண்டு தான் இருக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களிற்கான போட்டியில் அனைத்து அஸ்திரத்தையும் ஒரு உயிரனம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரயோகித்தே தீரும். இது சரியா பிழையா என்று நான் கூறவில்லை, ஆனால் இந்தப் பண்பு தமிழர்களிற்கான தனித்துவமான பண்பு என்று ஏற்றுக் கொள்ளமுடியாது.

இந்த இடத்தில் நீங்கள் கேட்கலாம், அப்படியாயின் சிங்களவர் எங்கள் மீது கட்டவிழ்த்த பேரினவாதமும் விளங்கிக் கொள்ளக்கூடியது தானே என்று. நிட்சயமாக விளங்கிக் கொள்ளப்படக்கூடியது தான். ஆனால் அதற்காக, சிங்களத்தின் ஆசைக்கு நாங்கள் இசையவேண்டும் என்பதில்லை. அதனால் தான் எங்கள் போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் ஆகிறது.

அது சரி வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் எங்களிற்கு அவசியப்படாத வாழ்வாதாரப் போராட்டம் ஏன் சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் ஏற்படுகின்றது என்று ஒரு கேள்வியை முன் வைத்துள்ளீர்கள். இந்த வேற்றுமை கூட எங்களின் சிங்களத்துடனான போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் தான் என்று நிறுவுவதற்கே உதவுகிறது. எவ்வாறாயின், எமது சமூகம் தனது தேவைகளாகக் கருதிய மிகப் பெரும்பான்மையான விடயங்களோடு வெள்ளையர் ஆக்கிரமிப்பு முரண்படவில்லை. அதாவது, எங்களோடு போட்டி போட்டுக் காணி வாங்கி அல்லது எங்களைத் துரத்திப் போட்டு வெள்ளையன் எங்கள் பிரதேசங்களில் குடியேறவில்லை. எங்களது முதுசங்களையும் வைத்திருந்தபடி புதிதாயும் எங்கும் எங்களால் வெள்ளையர் காலத்;தில் காணி வாங்க முடிந்தது. எங்களிற்கு சான்றிதழ் நோக்கிய படிப்பென்றால் வெறி. படிப்பைத் தொடர்ந்து வேலைக்கு வெறி. இந்த இரண்டையும் வெள்ளையர் தாம்பாளத்தில் வைத்து எங்களிற்குக் கொடுத்தார்கள். நாங்கள் இயல்பில் முதலாளித்துவச் சிந்தனை உடைய, போட்டி மனப்பான்மை ஊறிப்போன, பிரயாசம் மிகு இனம்.. வெள்ளையன் நலன்களோடு எங்களின் இந்தப் பண்புகள் ஒத்துப் போயின. சுpங்களவர் தாராள மனதோடு "ஐலன்ட்டர்" மனநிலையில் வாழ்வை இலகுவாய் வைத்திருக்க நாங்கள் அடிமைத்தனமாய் வேலைசெய்வதில் விண்ணர்கள் என்று நிறுவனோம். வெள்ளையன் எங்களிற்கு வெள்ளைக்கொலர் உத்தியோகம் தந்தான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய மாட்டோம் என்றோம். வெள்ளையன் எங்களிற்கு அந்நியமான மலைநாட்டில் தோட்டம் செய்து பணியாட்களைக் கொண்டுவந்தான். எங்களது முதலாளித்துவ சிந்தனையில் வந்த பணியாட்களும் தமிழர்கள் என்றெல்லாம் எங்களிற்குத் தோன்றவில்லை. நாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் நாங்கள் நாங்களாக எங்களது பெறுமதிகளோடு செழிப்பாய் வாழ்ந்தோம். வெள்ளையரை நாங்கள் பொருளாதார சந்தர்ப்பமாய்த் தான் பார்த்தோமே அன்றி ஆக்கிரமிப்பாய் பார்க்கவில்லை. ஆங்கிலம் கற்க மாட்டோம் என்று நாங்கள் அடம் பிடிக்கவில்லை.

மதம் மாற்றல் என்ற ஒரே ஒரு விடயத்தில் தான் வெள்ளையர் முரண்டு பிடித்தனர். அப்போதும் குறிப்பிட்ட தொகையினர் பொருளாதாரம் உறுதிசெய்பட்டவேண்டும் என்ற நிபந்தனையோடு மதமும் மாறிக் கொண்டாhர்கள். பின்னர் நாவலர் காலத்தில் தொய்ந்த சயமயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான செயற்பாடுகளிற்கும் வெள்ளையர் சனநாயகப் பாணியில் சரி எண்டனர். மொத்தத்தில் அக்காலத்தில் நம்மவர்கள் நடைமுறைச் சாத்திய மனிதராய் மட்டுமே இருந்துள்ளனர்.

சிங்களத்திற்குப் போகுமுன், வெள்ளையர் காலத்தின் மேற்கண்ட நடைமுறை பெரும்பாலும் ஆதிக்க வர்கத்திற்குத் தான் பெருமளவில் சாத்தியமாய் இருந்தது, தமிழர்கள் அனைவரிற்கும் இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தழிழர்களிற்குள் தமிழர்களால் ஒடுக்கப்பட்டவர்களிற்கு, வெள்ளையர் வந்தது இருந்த நிலையை மோசமாக்கவில்லை. மதமாற்றம் முதலிய புதிய முனைகளும் அதனாலான இலாபங்களும், மேலும் வெள்ளையரால் தோன்றிய சில புது பொருளாதாரச் சந்தர்ப்பங்களுமே அனைவரிற்கும் நிகழ்ந்தன. வெள்ளையர் தமிழரின் வாழ்வாதாரத்தோடு மிண்டவில்லை. சாதி வெறிக்கெதிராக தமிழரிற்குள் போராட்டங்கள் முனைப்பெடுத்துத் தான் இருந்தன. இப்போராட்டங்கள் அதிக வெற்றி பெற்றிருக்காத போதும் போராட்டம் எழுந்தது மறுக்கமுடியாதது. ஆனால் சிங்களம் தனது பாகுபாடற்ற தமிழ் வெறியால் தமிழனை ஒன்றாக்கி அவன் போராட்டத்தையும் தற்காலிகமாகவேனும் ஒன்றாக்கியது.

இனி சிங்களப் பகுதிகளில் வெள்ளையர் காலத்தில் பணிபுரிந்த எங்களவர் சிங்களப் பாமரனை ஒடுக்கியது இனவாதத்தீயில் எண்ணை ஆகியது என்ற கருத்து. நீங்கள் கூறுவதை மறுக்கவில்லை ஆனால் சிங்களத்திற்குள்ளும் பிரிவினைகள் அன்றைக்கு மட்டுமன்றி இன்றைக்கும் இருக்கின்றன. கரையோரச் சிங்களவர் கண்டியச் சிங்களவர் என்பது மட்டுமன்றி, எங்களவர் சாதிகளிற்குள் சாதி பிரிப்பது போல் அவர்களிற்குள்ளும் பரம்பரைப் பெருமை அது இது என்று இருக்கவே செய்கின்றன. எங்களது கங்காணிகள் செய்யாத கொடுமை சிங்களவரால் சிங்களவரிற்கும் நடந்து கொண்டு தான் உள்ளது. அவர்களிற்குள்ளும் ஜே.வி.பி புரட்சிக்கான ஏது நிலை இருந்தது தான். ஆனால் பிரச்சினை என்னவெனில், எங்களிற்குள் இருந்த உள் முறுகல் புறத்தே இருந்து வந்த ஆபத்தை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்தது, ஆனால் அவர்களிற்குள்ளான முறுகல் எங்களை அழிப்பதற்காக ஒன்றானது. அவர்களிற்கு எங்களது கங்காணி செய்த கொடுமை ஞாபகத்தில் நிற்க அவர்களின் உள்ளுர் நிலமை அவர்களிற்கு மறந்து போனது. மகாவம்சம் முதலிய நம்பிக்கைகள் அவர்களிற்கு அவர்களது உள்ளுர் நிலமையை சிறிய பிரச்சினையாகவும் எங்களை அழிப்பது பெரிய பிரச்சினையாயும் காட்டியது தான் எங்களின் பிரச்சினை.

நாங்கள் வேலைகள் வியாபாரங்களில் ஆதிக்கம் செலுத்தியதால் சிங்களவரிற்குத் தோன்றி பாதுகாப்பு உணர்வு தான் இனவாதம் என்று கொண்டாலும் கூட, வளங்களிற்கான போட்டியில் அவர்களதும் எங்களதும் நலன்கள் மிண்டிக் கொண்டமை தான் வெள்ளையரிற்கெதிராய் போராடாத எங்களை சிங்களவரிற்கெதிராய் போராட வைத்தது. ஆங்கிலம் கற்க மறுக்காத நாங்கள், முன்பு சிங்களமும் கற்ற நாங்கள், சிங்களம் கற்பது சட்டமூலம் அவசியமாக்கப்பட்டபோது மறுத்தமை எங்களின் வளங்கள் மட்டுப்படப்போகின்றன என்று அறிந்ததால் தான்.

இன்னுமொரு விடயம் சுகன், வெள்ளையர் போகும் போது, இலங்கை சின்ன நாடு இந்தச் சின்ன நாட்டுக்குள் நாங்கள் சேர்ந்திருப்பது தான் பொருளாதார ரீதியில் அறிவுபூர்வமானது என்ற பிரிவினைக்கு எதிரான கருத்தையும் நாங்கள் தானே பரவலாகக் கொண்டிருந்திருக்கின்றோம் (ஆவணங்கள் சொற்பமான எங்கள் கலாச்சாரத்தில் இந்தச் சிந்தனைக்கான ஆவண ஆதாரத்தை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆனால் எங்களிற்கு மூத்தவர்கள் நானறிந்தவரை இப்படித்தான் சொல்லுகிறார்கள்).

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களிற்கான இருத்தலியல் போட்டி என்பது தவிர்க்க முடியாதாய் இருப்பதாலும், சிங்களம் திட்டமிட்டு எங்களிற்கான வளங்களின் கிடைத்தலில் கைவைத்ததாலும் நாங்கள் எங்களின் வளங்களிற்காகப் போராடியமை எங்களைப் பொறுத்தவரை நியாயமாய்ப் படுவதில் தவறில்லை. எங்களிற்குள் நாங்கள் ஒரு பிரிவினர் இன்னுமொரு பிரிவினரின் வளங்களை மறுத்தமையால் உள்ளுக்குள் முறுகல்கள் இருந்தபோதும் ஒப்பீட்டு அளவில் வெளியாபத்துப் பெரிதாய்ப்பட்டது தான் தற்காலிகமாகவேனும் தமிழனை ஒன்றாக்கியது. மேலும் நாங்கள் எங்களின் வளங்களிற்காகக் கடினமாகப் படிக்கவும், கடினமாக வேலை செய்யவும் பிரயாசப்படவும் தான் முயன்றோம். எதையும் ஆக்கிரமிக்கவோ சூறையாடவோ முனையவில்லை. சரி கொழும்பு போன்ற வியாபாரச் சுரங்கங்களை விட்டுவிட்டு பாரம்பரியமான எங்கள் பிரதேசங்களில் மட்டும் இருந்து கொள்கின்றோம் என்றும் கேட்டுப்பார்த்தவர்கள் என்றவiயில் எங்களிற்கு எங்கள் போராட்டம் நியாயமாகப்படுவது தவறில்லை என்றே தோன்றுகின்றது.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள் சாத்திரி.

  • தொடங்கியவர்

வொல்கேனோ, வாசித்துப் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

நல்லதொரு நீண்ட கட்டுரை இன்னுமொருவன்... என் மனதுள் சரியாக இல்லாத பல இடங்களை உங்கள் கட்டுரை நிரப்பிச் சென்றுள்ளது. இத்தகைய கட்டுரைகளை யாழில் மட்டும் பிரசுரிக்காது, வேறு இணையங்களிலும் Blog குகளிலும் எழுதுங்கள் பலர் வாசிக்க வேண்டும்.

இந்த திரிக்கான சுகனின் பின்னூட்டலும் சிறப்பாக இருக்கின்றது..சுகனும் தொடர்ந்து எழுதுங்கள்..

Edited by நிழலி

  • தொடங்கியவர்

வாசித்துப் புரிந்து கொண்டமைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"""உண்மையில் உலகில் எங்களது பிரச்சினை பற்றிப் பல குளப்பங்கள் இன்னமும் உள்ளன. உலகை விடுவோம், எங்களிற்குள் கூட எங்களின் பிரச்சினை பற்றி இன்னமும் தெளிவின்றியே இருக்கின்றது. முப்பத்து மூன்று வருடங்களின் முன்னர் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி மக்களிற்கு வகுப்பெடுத்து விளங்கப்படுத்த வேண்டிய நிலை இன்றைக்கு எதனால் ஏற்படுகின்றது?""""

நான் சொல்லுவேன் இது இயல்பானது, அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று, ஏன்னெனில், ஒரு பிரச்சனை நீண்ட காலம் நீடிக்கும் பொது பலரும் பலவாறு பாதை மாறலாம், புதிய பாதைகள் தோன்றலாம், தொடக்க பாதையே மறந்திருக்கலாம், அதற்காக தொடக்கத்தை மீள சொல்லுவது தவறில்லை, இது இயல்பானது என்றுதான் நான் பார்க்கிறேன்.1956 இல், என்ன நடந்து என்று எனக்கு தெரியாது, ஆனால் அப்ப பிரச்சனை மொழி, தமிழ் அரசகரும மொழி அந்தஸ்த்து இழந்தது, பிறகு 2009 உயிர்...இப்ப உயிர் பயம், மனமிளக்கிற பயம், அடிமைத்தனம்....எனவே எங்களுக்கு என்ன இப்ப வேணும் என்று அறிவதில் பிழையில்லை..அது தெரியாமல் இருப்பதிலும் பிழையில்லை.. இந்த நீண்ட போர்தான் எங்களை பிரித்தது, சுக்கு நுறக்கியது, நீண்ட போரில் யாரும் திசை மாறலாம், அதை ஏற்ருகொள்கிற பக்குவம் எங்களிடம் இல்லை, முதிலில் திரும்புகிறவன் துரோகி பின்னர் திரும்புகிறவன் அரசியல் போராளி...இரண்டும் அடிப்படையில் ஒன்று என்று விளங்ககத வரைக்கும் கட்சிமரல்களும், காட்சிமரல்களும் தொடரவே செய்யும்...நீங்கள் பிறிதொரு இடத்தில் சொன்னபடி ..மீண்டும் இன்னுமொரு யுத்தம் வந்தால் யாருக்கும் தெரியாது அது எவ்வளவு காலம் செல்லுமென்று, அந்த காலத்திலும் மீண்டும் மீண்டும் தடங்கல்கள் , புதிய பாதைகள் வரும் இன்னும் இன்னும் புதிய புதிய காட்சிகள் வரும்...அப்போது முள்ளி வாய்க்காலே மறந்து போயிருக்கும்...

நீங்கள் கனடாவில் இருந்தால் ஒட்டவா உள்ள museum of civilizations, பார்க்க வேண்டும், நான் நினைக்கிறேன் , பெரும்பாலும் அதில் தான் உள்ளது ."100 வருடத்துக்கு முந்தய வரலாறு ?? புனையப்பட வரலாறு" என்று கருத்து பட--- நிட்சயமாக இதேபோல் இல்லை, ஆனால் அப்படி ஒரு கருத்து பட உள்ளது .. அப்படி உள்ள பொது வட்டுக்கொட்டையை பற்றி பேசுவது அல்லது தெரியாமல் இருப்பது தவறில்லை ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"""மட்டுப்படுத்தப்பட்ட வளங்களிற்கான இருத்தலியல் போட்டி என்பது தவிர்க்க முடியாதாய் இருப்பதாலும், சிங்களம் திட்டமிட்டு எங்களிற்கான வளங்களின் கிடைத்தலில் கைவைத்ததாலும் நாங்கள் எங்களின் வளங்களிற்காகப் போராடியமை எங்களைப் பொறுத்தவரை நியாயமாய்ப் படுவதில் தவறில்லை.""'

வேலையில், உயர் பதவிகளில் என்ன நடந்து என்று என்னக்கு தெரியாது, ஆனால் , கல்வியில் தரப்படுத்தல் என்பது தேவையானது என்றே நான் சொல்லுவேன்... எனக்கு தெரியாது இப்ப உள்ள பல்கலை அனுமதி முறைக்கும் 1972 ஆண்டு கொண்டுவந்த தரப்படுத்தலும் ஒன்றோ என்று, ஆனால் இப்ப உள்ளது நான் சொல்லுவேன் ஒரு சிறந்த ஏற்றுக்கொள்ளகூடிய முறை..பெரும்பாலான துறைகளுக்கு மருத்துவம், பொறியியல் ..... 40 வீதம் திறமை ..யாரும் போகலாம், ~ 50 மாவட்ட அடிப்படையில், ~ 10 கஷ்ட பிரதேசம் அல்லது பின்தங்கிய மாவட்டம்... இதை எந்தவகையில் பிழை என்று சொல்லுகிறீர்கள் , எனக்கு நினைவிருக்கு, UK இல் நடந்த ஒரு விவாதத்தில இதபற்றி கதைக்க வெளிகிட்டு, தமிழ் ஆள், இது ஒண்டும் தெரியாம கதைச்சு போட்டு , கடைசியில " ஆர் உங்களுக்கு சொன்னது / என்ங்கேயிருந்து நீங்கள் தகவல் எடுத்தனீங்கள் என்று கேட்க, friend சொன்னதோ இல்லாட்டி uncle சொன்னதோ எண்டவர்...

JVP,

பற்றி குறிப்பிட்டீக்கள், எனக்கு தெரிய அவர்களும் " வளப்பங்கீடிற்காக" போராடிய குழுதான், அவர்களும் போராடீனர்கள், நாங்களும் போராடினோம், ஆனால் இருந்த/ இருக்கின்ற வளம் என்னவோ மட்டுப்பட்டது தான்...நாங்கள் எங்களிடம் முன்னர் இருந்தது மீண்டும் வேண்டும் என்று போராடினோம் , அவர்கள், தங்களுகுரியது போதாது என்று... முடிவில்லா போராட்டம்....

இதில் எது நியாயம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்??

சிங்களவரிடம் உள்ள சமூக ஏற்ரத்தழ்வுகள் ஒப்பிடளவில் குறைவு..அவர்களிலும் பொருளாதார வளம் மிக்கவர்கள், அது குறைந்தவர்கள் உண்டு, ஆனால் அது பல சந்தர்பங்களில் எங்களுக்கு உள்ள மாதிரி தடையாக இருப்பதில்லை, திருமணம், புத்த பிக்குவாக போறது,

நான் நினைக்கிறன் எங்களது சாதி முறைமை ஆகக்குறைந்தது, ~1970 ஆண்டுக்கு பிறகு பிறந்த ( படித்த) சிங்களவருக்கு ஒரு புதுமையான விடயம், அதே நேரம் என்னுடம் படித்த சக தமிழ் மாணவர் ஒருவர் இருவர் வெளிப்படையாகவே சொன்னது, " வீட்டை சொன்னவை , படிக்காட்டியும் பரவாயில்லை எங்கட சாதி மாறி கலியாணம் கட்டவேண்டாம்"

வாசிக்க வாசிக்க போய்கொண்டேயிருக்கின்றது உங்கள் கட்டுரை.(இன்று மகனின் பெற்றோருக்கான சந்திப்பு. 5.30- 5.40 போனன் கதைத்தன் வந்தன்.) எங்களால் இது முடியுதில்லை ராஜேந்தரின் பாட்டு சீன் போல் தான் எல்லாமே.

நீண்டிருந்தாலும் மிக ஆரோக்கியமான கட்டுரை.உலக அரசியலின் வரைவிலக்கணம் 'மக்சஞனா'என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து பிறந்ததாக சொல்வார்கள். அதாவது சின்ன மீனை சாப்பிட்டால் தான் பெரிய மீன் வாழலாம்.உலக முதல் வல்லரசு அமெரிக்கா தொடக்கம் எமது போராட்டத்தில் புலிகள் வரை இது பொருந்தும்.மகிந்தாவும், இன்று சரத் பொன்சேகாவும் ஏன் இந்தியாவிற்கு ஓடோடிப்போகின்றார்கள் என்றால் தியறி அதுதான்.எனது நாடு நான் என்னவும் செய்வேன் நீ யார் கேட்பதற்கு என்று இவர்கள் கேட்கலாமே.கேட்டால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.துரோகம் செய்தாலும் கருணாநிதிக்கும் உது தெரியும்

நாம் ஒன்றுமே இன்னமும் விளங்கிக்கொள்ளாமல் சீமான் கர்சிக்கின்றார்,நெடுமாறன் பிரட்டப் போகின்றார்,தமிழ் நாடு கொந்தளிக்க போகின்றது ஒரு புறம்.

எமது போராட்டதில் 5 தாவது பெரிய ஆமியை அடித்தனாங்கள்,உள்ளுக்க விட்டு அடிப்பம்,நட்டுவாக்காலி போர் யுக்தி,இப்படியெல்லாம் முன்பு எழுதினோம் என்ற ஒரு பிரஞ்ஞை கூட இல்லாமல் இப்போது புலம் பெயர்ந்து நாங்கள் புடுங்கப் போகின்றோமாம்.

இதற்கு என்ன தீர்வு இந்தியாவின் காலில் விழுவதா? அல்லது சிங்களவனின் --------நக்க சொல்லுகின்றாயா எனத்தான் பலரும் கேட்கப் போகின்றார்கள்.

முழுத் தமிழனுக்கும் ஒரு விடிவு கிடைக்குமென்றால் நான் எதையும் நக்க தயாராயிருக்கின்றேன்.

அன்று முதல் இன்று வரை எமது தலைவர்கள் தமக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே ஒழிய தமிழனுக்கு என்ன தேவை என்று பார்க்கவில்லை.

:) வாழ்க்கையில் நாள் தோறும் காலையில் எழுந்து செய்தி ஊடகங்களில் வழி நாட்டில் நடந்த அசம்பாவிதங்களை சகிப்பு தன்மையோடு கேட்ப்பவருக்கும், படிப்பவருக்கும், அந்த அசம்பாவித்தில் நேரடியாக பாதிக்க பட்டவருக்கும் அந்த சம்பவம் பற்றி நேர் எதிராக கருத்துக்கள் இருக்கும்.

நான் அப்படியான இருவேறு சம்பவங்களில் பாதிக்க பட்டு இருக்கிறேன். உயிர் பயத்தில் உடல்நடுங்கி உறைஞ்சு போய் இருந்து இருக்கிறேன். என்னால் இன்னுமொருவனை போல சிந்திக்க முடியவில்லை.

தமிழனின் தீர்வு என்பது கிழித்து எறிய கூடிய காகிதங்களில் எழுத்துக்கள் அல்ல...

மேலும் கனடிய அரசு , பிரித்தானிய அரசும் கூட தமிழர் தாயகப்பிரச்சினையை அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் செயற்படும் முறைமைகளில் வேறு வேறான கொள்கைகளை உடையவை. இவைகளின் அடிப்படை காரணங்கள் என்பது தான் முக்கியமானது.

குடியேற்ற நாடான கனடாவில் தமிழர்கள் இண்றும் ஈழத்தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை கனடிய அரசு கொஞ்சமும் விரும்பவில்லை. கனடாவில் குடியுரிமை பெற்ற தமிழர்கள் அனைவரும் கனடிய நலன்களில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதே கனடிய அரசின் விருப்பமும் ஆகும்.

Edited by தயா

  • தொடங்கியவர்

வொல்கேனோ,

33 வருடம் சென்று விட்டதால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எம்மவரிற்கு மறந்து போனது இயல்பானது என்று நீங்கள் கூறும் கருத்து ஒரு வகையில் பார்க்கையில் நியாயமானதாய் படுகையிலும், இக்கூற்று பல விடயங்களைத் தவறவிடுகிறதாகவே எனக்குப் படுகின்றது.

அதாவது, 33 வருடதிற்கு முன்னர் போர் ஓய்ந்து போய் நாங்கள் வாழ்ந்திருந்தால் நீங்கள் கூறுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது. ஆனால் ஆறு மாதம் முன்னாலும் தமிழர் இறந்து கொண்டிருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எங்களிடம் மல்ரிபரலும் அவர்களிடம் வெள்ளைப் பொஸ்பரசும் வரமுன்னர் வந்தது. இடையில் எத்தினையோ நடந்து விட்டது. எழுபதுகளில் போராட்டத்தில் இணைந்திருந்து விட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நிறைவேறிய பின் புலம் பெயர்ந்த ஒருவரிற்குத் தெரிந்திராத பல பரிமாணம் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களிற்குத் தெரிந்திருக்கும். நீங்கள் சொல்வது போல் போராட்டப்பாதை பல பரிமாணங்களைக் கண்டு மாற்றமடைந்துள்ளது. இன்றைய நிலையில் வட்டுக்கோட்டை முதல் முள்ளிவாய்க்கால் வரை என்ற ஆராய்வும் இனி என்ன என்ற தேடுதலும் தான் தேவையே இன்றி, 76ல் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை மக்களிற்கு விளக்கி அதை அவர்கள் மீள்உறுதி செய்கிறார்களா என்று வாக்கெடுப்பதில்லை. 76ல் இருந்த உலகு இன்று இல்லை. 76ல் இருந்த நாங்கள் இன்று இல்லை.

எனக்கு எல்லாம் தெரியும் என்று மருந்தளவிற்கும் நான் இங்கு கூறவரவில்லை. பிரச்சினை என்னவெனில் “எங்களிற்கு நியாயமாக படும் எங்களின் போராட்டத்தை வெளிப்படையாய் ஒடுக்குவது உலகிற்கு எவ்வாறு சாத்தியமானது” என்ற கேள்வியை நாங்கள் கேட்டே ஆகவேண்டும் என்ற அடிப்படையில் தான் மேற்படி கேள்வியையும் முன்வைத்திருந்தேன். செயலிற்கு முதல் செயல் பற்றிய தெளிவும் தி;ட்டமிடலும் தேவை. புலம் பெயர்ந்த தமிழர் தான் பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஒரு புறத்தும், இப்புலம் பெயர்ந்;த பிரச்சாரப் பீரங்கிகளிற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி வகுப்பெடுக்கின்றம் என்று இடையிலும், நாங்கள் எல்லாம் சொல்லியம் உலகம் எங்களைக் கைவிட்டுவிட்டது என்று மறுபுறத்திலும் நாங்கள் சொல்லிக்கொண்டிருப்பது முரண்பாடானது என்பதை எடுத்துக் காட்டவே மேற்படி கேள்வியை உள்ளடக்கியிரு;நதேன்.

உங்களது இரண்டாவது பின்னூட்டத்தைப் பொறுத்தவரை, எனது பின்னுர்ட்டத்தை; சுகனின் கருத்துக்கான எனது பின்னூட்டமாக நீஙகள வாசிக்கவி;ல்லை என்றே தோன்றுகின்றது. அதனால், சுகனின் கருத்தையும் எனது கருத்தையும் சேர்த்து வாசித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அர்யுன்,

கருத்திற்கு நன்றி. உங்களது மகனின் ஆசிரியருடனான சந்திப்பிற்கு நீங்கள் செல்கையில் உங்கள் மகனின் கல்வி என்ற நலனோடு 100 வீதம் கருத்தொருமித்து, உங்கள் மகனின் கற்றல் முறை பற்றிய வரலாறை உங்கள் உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, உங்கள் மகனின் இறுதி பெறுபேறு அட்டையையும் அதில் ஆசிரியர் கொடுத்திருந்த விபரங்களையும் வாசித்துக் கிரகித்து மனதிருத்திக் கொண்டு, குறிப்பான மேலதிக கேள்விகளிற்காக ஆசிரியரைச் சந்திக்கச் செல்வீர்கள். அங்கு உங்கள் கேள்வி 10 நிமிடத்தில் ஆசிரியரால் சமாளிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் எங்கள் பிரச்சினை பற்றி, பாதுகாப்பான புலத்தில் பல கருத்து நிலைகளோடு பலதை மறந்து இருக்கும் வாசகர்களின் கவனத்தை முதலில் பெறவேண்டும். பின்னர் காரணகாரியத்துடன் நாம் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லவேண்டும். உங்கள் மகனின் கல்வியில் உங்களிற்கு 100 வீத அக்கறை. அது உங்கள் நலன். எங்கள் போராட்டம் அனைத்து வாசகரினதும் நலன் என்றோ 100 வீத அக்கறை என்றோ கூறிவிட முடியாது. எனவே உங்களது ஒப்பீட்டில் எனக்கு உடன்பாடில்லை.

தயா,

உங்களது எதிர்ப்பை நாகரிகமாகமாக முன்வைத்தமைக்கு நன்றிகள். ஆனால், ஒரு வகையில் நீங்களும் கருத்தை விட்டுக் கருத்தாளனைத் தான் அணுகியுள்ளீர்கள் போலுள்ளது. அதாவது, அடிப்படையில் போராட்டத்தினதும் போரினதும் எந்தத் தாக்கத்தையும் நேரடியாக அனுபவிக்காத புலத்தில் பிறந்த ஒரு மனிதனாய் நீங்கள் என்னைக் கருதுகிறீர்கள் போலுள்ளது. நீங்கள் அனுபவித்த அளவிற்கு சாவின் வாசனையை மற்றையவர் அறிந்திருக்கமுடியாது என்றும், பத்திரிகை படித்துத் தான் தெரிந்து கொள்கிறார்கள் என்றும் எங்கனம் இத்தனை திடமாக நீங்கள் நம்புகிறீர்கள்? சரி, நீங்கள் நினைப்பது தான் சரி என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயின், ஒரு சிந்தனையானது உங்களிற்கு ஏற்புடையதாய் படினும் அதனைக் கூறுபவர் உங்கள் அளவிற்கு மரணத்தை மணந்திராவிடின், அவர் தமிழர் ஆயினும் அவரது சிந்தனை குப்பைத் தொட்டியில் போடப்படவேண்டியது என்று நம்புகிறீர்களா? தமிழர் நலன்கள் பற்றி சிந்திப்பதற்கான உரிமை ஆராரிற்கெல்லாம் உள்ளது என்று நினைக்கிறீர்கள்,? அது தான் உண்மையான உங்களது கருத்து நிலையாயின் எங்கனம் எமது போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழரின் பெயரால் தமிழரிற்காக நடாத்தப்படுகின்ற போராட்டம் என்று உங்களால் கூறமுடிகிறது?

எனது கருத்துப் பற்றிய விவாதத்தில் என்னைப் பற்றிக் கதைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் உங்களிடம் சில கேள்விகள். ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தினன் ஒரு பள்ளிச் சிறுவனின் அல்லது சிறுமியின் வாயிற்குள் துவக்கு முனையை வைத்து, விசையில் விரல் வைத்து, எந்நேரமும் அவ்விசையை அமுக்கி விடலாம் என்ற நிலையில் ஒரு பத்து நிமிடம் நிற்பதை சாவை அண்மித்த அனுபவமாக ஏற்றுக் கொள்வீர்களா? பள்ளிச் சீருடையில் பேருந்தில் பள்ளி சென்று கொண்டிருக்கையில், பேருந்தை இடைநிறுத்தி, சிறுவனிலும் பெரிய தென்னம்மட்டையால் சிறுவன் தமிழன் என்பதால் மட்டும் நையப்புடைக்கப்படுவது அனுபவம் என்று ஏற்றுக் கொள்வீர்களா? செல் மழைக்குள் முட்டி மோதி ஓடிக்கொண்டிருக்கையில் அருகிலிருந்த ஆருடையதோ இரத்தம் முகத்தில் தெறிப்பது அனுபவம் என ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா? பள்ளி வி;ட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு பாலத்தின் மீது உங்கள் பேருந்து செல்கையில் இராணுவ கெலிகொப்ரர் காரணமின்றிச் சரமாரியாக பஸ்மீது ரவகளைத் தூவ, பள்ளிச் சிறுவரும் அருகிருந்த மக்களும் சிதறி ஓட, பள்ளி உடையில் உங்கள் பள்ளி உயர்வகுப்பு மாணவன் ஒருவன் இறந்து விழ, மறுநாள் அவனது மரண வீட்டில் அவனது தாயார் “பசியோட வந்த பிள்ளைக்கு ரவயைத் தின்னத் தந்தாங்களே” என்று கதறுவதைப் பார்த்துத் திகைக்கும் அறியாவயதுச் சிறுவனின் அனுபவம் அனுபவம் என்று ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா? போர் தொடாத தமிழன் என்று எத்தனை பேர் உள்ளார்கள் என்று சொல்லத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பதிவு.ஆனால் இந்த அவசர உலகத்தில் மேலும்

மேலும் தேவைகளை அனாவசியமாக உருவாக்கி வாழும் சுயநலமே

முதன்மைக் குணமாகக் கொன்ட எம்மினத்துக்கு இதெல்லாம் எந்தளவுக்கு

புரியும் அல்லது உதவும் என்பது கேள்விக்குறியே.

முதலாவதாகஇ “நாம் எமக்குள் ஒரு அதிகாரத்தைத் தேடும் சமூக இயக்கத்தைச் சார்ந்த இனம்” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இ;ந்தப் பண்பு எமது இனத்திற்கு மட்டுமான பண்பு அல்ல. அனைத்து இனங்களிற்குள்ளும் இந்தப் பண்பு இருக்கின்றது. உண்மையில்இ மனிதன் மட்டுமல்ல விலங்கு இராச்சியத்தில் அனைத்துமே இப்படித் தான் இருக்கின்றன. தாவரங்களும் சூரிய ஒளிக்குப் போட்டி போட்டு உயர முனைந்து கொண்டு தான் இருக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களிற்கான போட்டியில் அனைத்து அஸ்திரத்தையும் ஒரு உயிரனம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரயோகித்தே தீரும். இது சரியா பிழையா என்று நான் கூறவில்லைஇ ஆனால் இந்தப் பண்பு தமிழர்களிற்கான தனித்துவமான பண்பு என்று ஏற்றுக் கொள்ளமுடியாது.

உங்களின் இந்தக் கருத்துக் குறித்து நிறைய முரண்பாடுகள் இருக்கின்றது. தேவையின் அடிப்படையிலான அதிகாரம் போட்டி நிலை என்ற எல்லைகளை கடந்து நிற்பது சாதியம். சாதியம் என்பது இங்கே சாதி பார்ப்பது என்ற பொருளிலானதில்லை மாறக சாதியம் வளர்த்துவிட்ட தனிமனித மற்றும் சமூக ஆழுமை பற்றியது. எமக்குள்ளான பிடிவாதக்குணம் ஒன்றுபட முடியாத மனோபாவம் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற போக்கு அறிவுக்குப் புலனாகியும் அழுக்குகளை கழுவாது சுமந்து திரியும் குணம் வேற்றினங்களுடன் ஐக்கியப் பட முடியாத குணம். இப்படி பலவற்றை அடிப்படையாகக் கொண்ட மனோபாவம். இந்த மனோபாவம் தற்கொலைக்குள் எம்மை தள்ளிவிட்டுள்ளது. இனம் என்ற எல்லைகளை சிதைத்தெறிந்துள்ளது. அந்தவகையில் நாம் தனித்துவமானவர்கள்.

மனித இனத்தின் இந்தப் பிரதிநிதியை புகழ்வது பிறரே. சிக்கனமானவன். பழமைபேண்வாதி. மதபக்தி உடையவன். பிடித்ததை விடாதவன். ஒரு விடயத்தை ஆர அமரப்பார்ப்பவன். பொதுவான கல்வியறிவு உடையவன். வரப்போவதெல்லாம் ஆபத்தானதே எனப் பார்ப்பவன். ஊழில் நம்பிக்கை உடையவன். கிண்டல் கேலிக்காரன். சந்தேகப்பிராணி. போட்டியிடுபவன். விடாது வழக்காடுபவன். உணர்ச்சிவசப்படுபவன். கலந்து நடந்து கொள்பவன். மற்றவர்களைப் பற்றி தெரிந்திருப்பதில் நிபுணன். தான் பேச விரும்புபவன். சாதிக்குணமுடையவன். குடும்பமயப்பட்டவன். அடக்குமுறைகளை தாங்கிக் கொள்பவன். மற்றவர்களுடன் கூடிவாழும் பண்புடையவன் அல்லன். மூட நம்பிக்கையுள்ளவன். ஏதேச்சதிகாரப்போக்குடையவன். ஆணாதிக்கக் காரன். பொருள் நலத்தையே நோக்குபவன் என வரும் இந்தக் குணவியல்புகள் சில இயல்பானவை சில ஒன்றுக்கொன்று முரணானவை. யாழ்ப்பாண மனிதர்களுள் பெரும் பகுதிக்கான விவரணமாகும். எந்த ஒரு மனிதனிடத்தும் இவையெல்லாம் இருப்பதில்லை.

ரொபொட் கோம்ஸ். யாழ்ப்பாணம் 1980 பக் 4 (யாழ்ப்பாணம் சமூகம் கருத்து நிலை பண்பாடு நூலில் இருந்து மேற்கோள்)

எமது குணம் பற்றிய ஏனையவரின் பார்வை என்ன என்பதோ அல்லது இதுகுறித்த தற்கத்துக்காகவோ இதை இங்கு மேற்கோள் காட்டவில்லை மாறாக எமது ஆழுமை குறித்த முக்கியத்துவம் தனித்துவமானது அதில் மாற்றங்கள் அவசியமானது என்பதின் அடிப்படையிலே எனது கருத்து அமைகின்றது என்பதை சுட்டிக்காட்டவே.

பல சாதிகள் முரண்பாடுகள் பின்னர் பல இயக்கங்கள் முரண்பாடுகள் சண்டைகள் சாவுகள் துரோகங்கள். இரண்டையும் ஒப்பிட முடியாதது. ஏனெனில் பல சாதிகளும் பல மத வர்க்க சமுகத்தை சார்ந்தவர்களும் சேர்ந்தது தான் பின்னாளில் இயக்கமானது. ஆனால் எப்படி எமக்குள் மோதிக்கொண்டோம்? சர்வசாதராணமாக உயிர்பலியெடுத்தோம் துரோகங்களை செய்தோம் எப்படி? இங்கேதான் எமது குணம் மனவியல்பு தனித்து நிற்கின்றது. இனம் என்ற உணர்வால் எமது ஆழுமையை நெறிப்படுத்த முடியவில்லை. எமது குணத்தை மாற்ற முடியவில்லை. இன விடுதலை தேவையான ஒன்று என்ற போதும் தேவை குறித்த அறிதல் உணர்தல் கூட எமது மன இயல்பை மாற்றவில்லை. இங்கே தான் எமது தனித்துவம் ஏனைய இனங்களுடன் புறம்பு பட்டு நின்கின்றது. அறிவு வளர்ந்தும் பொருளாதராத்தில் வளர்ந்தும் தொழில் முறைகள் மாறிய பின்னரும் சாதியத்தை தக்கவைக்க எந்த ஒரு மனநிலை இயங்குகின்றதோ அந்த மன நிலையும் அது சார்ந்த ஆழுமையும் தனித்து நிற்கின்றது. அந்த ஆழுமையின் மாற்றமே முதற்படி அவசியமாகின்றது.

ஒரு மனிதன் சுயமாக உழைத்து உயிர்வாழும் நிலையில் மான உணர்வும் அது சார்ந்த ஆழுமையும் இயல்பாக வளர்கின்றது. எமக்கு இது விதிவிலக்கு. இங்கேயும் சாதியம் கோலோச்சுகின்றது. எப்படித்தான் ஒருவன் தன்காலில் சுயமாக உழைத்து உயிர்வாழ்ந்த போதும் அவன் என்னுமொருவனுக்கு கீழனவனாக மேலானவனாக மாற்ற முடியாத விதிக்குள் தள்ளப்படுகின்றான். அடிமைக்குணம் என்பதின் உற்பத்திமூலம் இங்கே தான் ஆரம்பிக்கின்றது. நேற்றுவரை எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்கைளிடம் நாம் ஓடோடி வந்ததிற்கும்; தப்பி தப்பி ஓடுவதற்கும் எவ்வளவு அடிபோட்டாலும் தென்னிலங்கையில் போய் ஒட்டிக்கொள்வதற்கும்மான அடிப்படை இங்கே தான் ஆரம்பிக்கின்றது.

நாம் ஏனைய இனங்களில் இருந்து தனித்து நிற்கின்றோம். எமது மனவியல்பாலும் சமூக உறவுகள் குறித்த ஆழுமையாலும் தனித்து நிற்கின்றோம். அறிவையும் அனுபவத்தையும் பெற்ற பின்னரும் தொடரும் மனவியல்பும் ஆழுமையும் ஒரு உளவியல் நோயாகவே இனம்காணக் கூடியதாக உள்ளது. இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக இனம் என்ற வடிவத்தை அழித்து மரணம் என்ற விழிம்பில் தற்போது நிற்கின்றோம்.

இந்த திரியை கொப்பி பண்ணி மின்னஞ்சலில் பல நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதில் பலர் சொன்ன பதில் 'நீளமாக இருக்கு...வாசிக்க நேரம் இல்லை' என்பதாக இருந்தது. அவர்களில்,

இரண்டரை மணித்தியாலம் மினக்கெட்டு தமிழ் சினிமா எனும் குப்பையை பார்ப்பவர்களும், தினம் தினம் தொலைக்காட்சி நாடகங்களை பார்க்க மினக்கெடுபவர்களும் 'மானாட மசிராட' போன்ற கேவலங்களை பார்பதற்காய் நேரம் ஒதுக்குபவர்களும் அதில் இருந்தனர் என்பது தான் வியப்பு

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி சiPவன்

சுகன்,

எமது சமூகத்திற்குள் உள்ள சாதியப் பிரச்சினையை சிறிதாக்கிக் காட்டுவதோ நிராகரிப்பதோ எனது நோக்கம் இல்லை. அடிமை ஆண்டான் என்ற சிந்தனை பொருளாதார சுரண்டல் என்ற அடிப்படையில் தான் உருவாவதாகவே எனக்கு இன்னமும் படுகின்றது. தேவைகளைக் கடந்து நிற்பது சாதியம் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதாவது ஒருவனின் ஆழுமையை மழுங்கடிப்பது, எவ்வளவு உயர்ந்தாலும் அடிமை என்ற சிந்தனையi வளர்ப்பது என்பன எல்லாமே கூட அடிமை அவன் உருவாக்கம் என்ற தொழிற்பாட்டின் அங்கம் தான். அடிமை ஏன் ஆண்டானிற்குத் தேவைப்படுகிறார் என்பதற்கு இரு காரணம். ஒன்று ஆண்டான் தான் அடைய விரும்பும் வசதிகளிற்கான போட்டியைக் குறைப்பதற்காகத், தன்னால் இயன்றவரை மக்களை அடிமைகள் ஆக்குகின்றார். அடிமை மனநிலையில் உள்ள ஒருவன் ஆண்டானோடு போட்டியிட முன்வராமை ஆண்டானிற்கு இலாபம். இரண்டாவது ஆண்டான் தனது தேவைகளை தான் அடைவதற்கான எரிபொருளாகவும் அடிமைகளைப் பாவித்துக் கொள்கின்றான். தேவை என்பது அடிப்படை உணவு உடை உறையுள் என்பதைத் தாண்டி ஆடம்பரத் தேவைகளாக இருக்கலாம். ஆனால் தேவைகள் சார்ந்தது தான் அடிமை உரவாக்கம் அல்லது சாதியம்.

இது எங்களிற்கு மட்டுமான குணம் அல்ல. கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள பூர்வகுடியினரும் இவ்வாறே நடாத்தப்படுகின்றனர்.

இன்னுமொரு தரவ. அண்மையில் அமெரிக்காவின் ஸ்ரான்போட் பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களில் ஓரே புள்ளி நிலையில் இருந்த வெள்ளை கறுப்பு மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களிற்கு ஒரு சோதனை எழுதக் கொடுத்தது. அம்மாணவர்களின் புள்ளிகள் ஆராய்ச்சியாளர் எதிர்பார்த்ததைப்போல அவர்களின் புள்ளி நிலையிலேயெ அமைந்தது. இந்நிலையில் இன்னுமொரு நாள் பிறிதொரு சோதனை அதே மாணவர்கள் எழுதப் பணிக்கப்பட்டனர். சோதனையின் கடினம் முன்னையதை ஒத்தே இருந்தது. ஆனால் இம்முறை சோதனை எழுதுவதற்கு முன்னர் மாணவர்கள் தங்களின் நிறம் கறுப்பா வெள்ளையா என்று ஒரு கட்டத்தில் தெரிவு செய்தபின்னரே சோதனை எழுத அனுமதிக்கப்பட்டனர். இப்போது பெறுபேறுகள் சுவாரசியமாக அமைந்தன. கறுப்பின மாணவர்களின் புள்ளிகள் கணிசமான அளவு குறைந்திருந்தது. அதாவது நிறுவனப்படுத்தப்பட் நிற ஓடுக்குமுறை வரலாறானது, தாம் கறுப்பினத்தவர் என்பதை மூளையில் பதிவு செய்த மாத்திரத்தில் கறுப்பின மாணவரின் பெறுNறைக் குறைத்தது. இது தொடர்பில் ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்கின்றன. நாங்கள் மட்டும் தான் இழிகுணம் உடைய இனம் என்று நாங்கள் நிறுவிவிட முடியாது, உலகெங்கும் அக்கிரமங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அமெரிக்க இராணுவத்திலும் கறுப்பின அமெரிக்கர் இறக்கின்றனர்.

எனினும் நாங்கள் இங்கு தலைப்பை விட்டு விலகுவதாகவே எனக்குப் படுகின்றது. ஒரு விடயத்தில் நாங்கள் உடன்படுகின்றோம், அதாவது எங்களிற்குள் நிறைய மாற்ம் தேவைப்படுகின்றது.

அடுத்து, இந்த விவாதத்திற்குள் நாங்கள் வந்ததற்கான காரணம், எங்களின் போராட்டம் எங்களிற்கு நியாயமாய் பட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே. அந்தவகையில், சரி சாதியம் தேவை நிலை கடந்தது என்றறே வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறும் அனைத்து இழி குணங்களாலும் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான இனம் தான் நாங்கள் என்றும் கொள்வோம். ஆனால் நீங்களே கூறிய படி நாங்கள் அனைவரும் சிங்கள ஆபத்துத் தொடர்பில் உடன்படுகிறோம் என்றால், இழிகுணங்கள் உள்ளவர்கள் என்பதற்காக எமது உரிமைக்காய்ப் போரிடும் உரிமை எமக்கு மறுக்கப்படவெண்டுமா? கொலைக்குற்றவாழிக்கே தனது உரிமைக்காகப் போராடும் உரிமை உண்டென்ற உல நடைமுறையில், எங்களிற்குள் நாங்கள் உரிமை மறுப்பவர்கள் என்பதால் எங்களின் உரிமை பற்றி நாங்கள் பேசமுடியாதா? எது நியாயம், எது சரி எது தவறு என்று சோப்பன்ஹாவர் பாணியிலோ, நீட்சே பாணியிலோ சார்த்தர் பாணியிலோ, சிமோன் போவர் பாணியிலோ நாங்கள் ஆராய்ந்தால் எந்த முடிவிற்கும் வரமுடியாது. ஆனால் உள்ள உல ஒழுங்கில், உள்ள நியாயம் என்ற கட்டமைப்பில் எங்கள் போராட்டம் எங்களிற்கு நியாயமாகப் படுவது வியப்பில்லை. எனவே சாதியம் போன்ற இழி குணங்கள் உள்ளவர்கள் என்பதால் எங்களின் நலன்கள் பற்றிப் பேசும் உரிமை நியாயமற்றது என்று கூறி விட முடியாது. மேலும் நாங்கள் தற்காலிகமாகவேனும் ஒன்றிணைந்து எங்கள் பொது உரிமைகள் பற்றிப் பேசரிய வரலாறும் முறக்க முடியாதது. உலக ஓழுங்குக்குள் முரண்பாடுகள் நிறைந்து தான் கிடக்கின்றன. நியாய தர்மம் என்று சந்தேகத்திற்கிடமற்று வரைவிலக்கணங்கள் அரிது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இன்னுமொருவன்,

நான் இப்பவும் நம்புகிறேன், வட்டுகோட்டை தீர்மானத்தை மறந்திருப்பதும், அதைப்பற்றி வகுப்பெடுப்பதும், அதை வாக்கேடுப்பதும் இயல்பானது என்றே, ----நான் சொல்லவில்லை, அதனால் எங்களுக்கு தீர்வு வரும், மக்களின் பிரச்சனைகள் தீரும் என்று, ஆனால் அதை மறந்தவர்கள், போராட்டத்தில் ஈடுபடதவர்களோ அன்றி போராட்டத்தால் பாதிக்கப்படாதவரோ அல்ல. கிட்டத்தட்ட நீங்கள் தயாவிற்கு சொன்னது போல்...திரும்பவும் சொல்லுகிறேன் அதனால் தீர்வு வரும் என்று சொல்லவில்லை, ஆனால் அதை மக்களுக்கு சொல்லுவது தவறில்லை.. இதே போல் தான் நாடு கடந்த அரசாங்கமும், எங்கள் பாதையின், கிளைப்பதை...எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பமில்லை..ஏனெனில், இத்தகைய செயற்பாடுகள் தாயக மிள்திரும்பலுக்கு தடையாக இருக்குமென்பதால்... ஆனால் நிட்சயமாக, ஒரு வடிவம் மாறிய போராட்டமே...

33 வருடமாய் போராடினோம், ஆனால் எங்கள் போராட்டத்துக்கும், வட்டுக்கோட்டைக்கும் தீர்மானத்துக்கும் இடையே இடைவெளி இருந்தது, சுயநிர்ணய உரிமை, தனிதமிழ் ஈழம்..இரண்டும் ஒன்றல்ல...இப்போது, தனிதமிழ் ஈழம் சர்வதேசந்திடம் சொல்லமுடியாது என்பதால் வட்டுக்கோட்டையை எடுத்துள்ளோம், கிட்டத்தட (பழைய) புதிய பானையில் பழைய கள்ளு.

உங்களுடை வாதத்தை புலம்பெயர் சமூகம் தொடர்பானது: ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் தான் பிரச்சாரம், அவர்கள் தான் பலம், அவர்களுக்குத்தான் வகுப்பெடுப்புக்கள், அவர்களை/ எங்களை சர்வதேசம் கைவிட்டுவிட்டது....

இதுவும் இயல்பானதே... இது பல படிகளை கொண்ட செயற்பாடு,

அவர்கள் தான் பிரச்சாரம், அவர்கள் தான் பலம் , நிட்சயமாக, அவர்களால் தான் UN முன்னால், Ottawa Parliament, UK parliament , மற்ற மற்ற பார்லிமென்ட் முன்னால் பிரச்சாரம் செய்யமுடியும், அவர்களால் தான் பணம் கொடுத்து லோபி செய்ய முடியும், இன்னும் பல...

அவர்களுக்குத்தான் வகுப்பெடுப்புக்கள: இவர்கள் ஒருவரும் அரசியல் படித்துவிட்டு இங்கு வரவில்லை, மாறி மாறி இடம்பெயர்ந்து விட்டு, இங்கே பல சந்தர்பங்களில், Odd-Jobs செய்து கொண்டு இருப்பவர்கள், அவர்களுக்கு வட்டுக்கோட்டை தெரியாது, 13 சரத்து தெரியாது, தரப்படுத்தல் தெரியாது, முன்னர் நான் குறிப்டிருந்தேன், தமிழ் பிரிட்டிஷ் forum இல் இருப்பவருக்கு தரப்படுத்தல் என்றால் என்னவென்று தெரியாது..அவர்களுக்கு வகுப்பெடுத்தல் என்பது ....

அவர்களை/ எங்களை சர்வதேசம் கைவிட்டுவிட்டது: அது உண்மை, நாங்கள் எங்களால் ????இயலக்கூடியதை , செய்தோம், ஆனால் பலன் தரவில்லை, கவலைதான்...ஆனால் மீண்டும் செய்வோம்!!!

""""""""""""""" “எங்களிற்கு நியாயமாக படும் எங்களின் போராட்டத்தை வெளிப்படையாய் ஒடுக்குவது உலகிற்கு எவ்வாறு சாத்தியமானது” """"""""""""""

இது ஒரு விவாதத்திற்குரிய விடயமாக தான் நான் பார்க்கிறேன்...எங்களுக்கு நியாயம்...மற்றவர்களுக்கு எப்படி? அதைத்தான் தரப்படுத்தலுடன் தொடர்பு படுத்தி எழுதியிருந்தேன்...இன்னும் மொன்று, பல நாடுகள் எங்கள் போராட்ட முறையையும் , எங்களது எதிர்பப்புகளையும் தான் எதிர்த்தார்களே தவிர (வெளிப்படையாக) இன்னமும் எங்களில் கரிசனை உள்ளவர்போல் தான் காட்ட முற்படுகின்றன..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.