Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக்கிடக்கை

Featured Replies

அடுத்துஇ இந்த விவாதத்திற்குள் நாங்கள் வந்ததற்கான காரணம்இ எங்களின் போராட்டம் எங்களிற்கு நியாயமாய் பட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே. அந்தவகையில்இ சரி சாதியம் தேவை நிலை கடந்தது என்றறே வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறும் அனைத்து இழி குணங்களாலும் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான இனம் தான் நாங்கள் என்றும் கொள்வோம். ஆனால் நீங்களே கூறிய படி நாங்கள் அனைவரும் சிங்கள ஆபத்துத் தொடர்பில் உடன்படுகிறோம் என்றால்இ இழிகுணங்கள் உள்ளவர்கள் என்பதற்காக எமது உரிமைக்காய்ப் போரிடும் உரிமை எமக்கு மறுக்கப்படவெண்டுமா? கொலைக்குற்றவாழிக்கே தனது உரிமைக்காகப் போராடும் உரிமை உண்டென்ற உல நடைமுறையில்இ எங்களிற்குள் நாங்கள் உரிமை மறுப்பவர்கள் என்பதால் எங்களின் உரிமை பற்றி நாங்கள் பேசமுடியாதா? எது நியாயம்இ எது சரி எது தவறு என்று சோப்பன்ஹாவர் பாணியிலோஇ நீட்சே பாணியிலோ சார்த்தர் பாணியிலோஇ சிமோன் போவர் பாணியிலோ நாங்கள் ஆராய்ந்தால் எந்த முடிவிற்கும் வரமுடியாது. ஆனால் உள்ள உல ஒழுங்கில்இ உள்ள நியாயம் என்ற கட்டமைப்பில் எங்கள் போராட்டம் எங்களிற்கு நியாயமாகப் படுவது வியப்பில்லை. எனவே சாதியம் போன்ற இழி குணங்கள் உள்ளவர்கள் என்பதால் எங்களின் நலன்கள் பற்றிப் பேசும் உரிமை நியாயமற்றது என்று கூறி விட முடியாது. மேலும் நாங்கள் தற்காலிகமாகவேனும் ஒன்றிணைந்து எங்கள் பொது உரிமைகள் பற்றிப் பேசரிய வரலாறும் முறக்க முடியாதது. உலக ஓழுங்குக்குள் முரண்பாடுகள் நிறைந்து தான் கிடக்கின்றன. நியாய தர்மம் என்று சந்தேகத்திற்கிடமற்று வரைவிலக்கணங்கள் அரிது.

நாம் ஒன்றுபட்டு இனமாக எமது போராட்ட நியயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குரிய பண்பு எம்மிடம் இருக்கவில்லை. அதன் நிமிர்த்தமான செயற்பாடு எம்மிடம் இருக்கவில்லை. சிங்களம் எம்மை இனமாக ஒடுக்கியபோது நாம் அதை இனமாக எதிர்கொள்ளவில்லை. கருத்துநிலையில் இதை நாம் வலியுறுத்த முற்படினும் உண்மை அதுவல்ல. எமது ஒட்டுமொத்த தமிழ்ச்சனத்தில் ஒருகட்டத்தில் மதவாரியாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இனம் என்ற ஒருங்கிணைப்பில் இருந்து விலகினார்கள். இயக்க முரண்பாடுகள் என்ற அடிப்படையில் விலகினார்கள். கருத்து அடிப்படையில் விலகினர்கள். பிரதேசவாத அடிப்படையில் விலகினார்கள். பொருளாதாரத்தை மையமாக வைத்து புலப்பெயர்வும் பெரும்பான்மை விலகல் நிலையே. எமது இனம் இவ்வகையாக சிதைந்த நிலையில் இனவிடுதலைக்கான போராட்டம் நியாயமானது என்பது உண்மை ஆனால் அந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொண்டு செயற்படவில்லை என்பது தானே யதார்த்தம். எம்மால் முதலில் மறுக்கப்பட்ட எமக்கான நியாத்தையே சர்வதேசம் பின்னர் மறுக்கின்றது. அண்ணளவாக நாற்பத்தைந்து லட்சம் சனத்தொகையில் ஆரம்பித்த போராட்ம் இறுதிக்கட்டத்தில் 3லட்சம் சனத்திற்கான போராட்டமாக சுருங்கியது. இது தான் சர்வதேசத்தின் நியாயமானது. தென்னிலங்கையில் பெரும்பான்மைத் தமிழர்கள். இஸ்லாமியத் தமிழர்கள். அரசகட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்கள் என ஒரு இனமாக விடுபட முடியாத சிக்கலில் தமிழன் தன்னை நுழைத்துக்கொண்டான். அதற்கேற்பவே போராட்டத்தை மறுதலிக்கும் தமிழர்தரப்பும் பெருமளவில் செயற்பட்டது. அனைத்தும் நடந்த போதும் சிங்களம் தமிழனாக வரையறுத்தே தனது ஒடுக்குமுறையை செய்தது செய்துகொண்டிருக்கின்றது. எமக்கான நியாயத்தை எமது இழிகுணங்கள் அது சார்ந்த ஆழுமையை கடந்து ஏற்கமுடியாமல் தோற்றுப்போகின்றோம் அல்லது அழிந்து போகின்றோம். விலகல் நிலை அனைத்திற்கும் நாம் தொடர்ந்து காரணம் கற்பிக்க முடியும். அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றோம். அதனால் ஏதொரு பிரயோசனமும் இல்லை.

ஒருவனை ஒருவன் ஒருவன் கருத்தை செயலை ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோதம் எமக்கு இயல்பாகிவிட்டது. இதுவே வலியுறுத்தப்படும் எமது இழிகுணம் சார்ந்த ஆழுமை. இதன் தோற்றுவாய்கள் சாதியம் சார்ந்த விடயங்களில் இருக்கின்றது. எமக்குள் வளர்ந்து நிற்கும் இந்த ஜனநாயக விரோதப்போக்கு இனம் என்ற வடிவத்தை சிதைத்துக்கொண்டே இருக்கின்றது. இன்றய சூழலில் கூட ஒரு தலமையின் கீழ் தமிழனால் ஒன்றுபட முடியாதுள்ளது. இன்றய நிலமை என்பது பிறிதொரு இனத்தால் தமிழன் இனமாக சீரளிக்கப்பட்டு மண்டியிடவைக்கப்பட்ட நிலையில் மாற்றம் என்பது சாத்தியமற்றுப்போகின்றது. நாம் அதிகம் சத்தம் போடுகின்றோம். சர்வதேசத்தை பொறுத்தவரை நாம் சொல்ல முற்படும் எமக்கான நியாயம் ஒரு சத்தமாக கூச்சலாகவே இருக்கின்றது. காரணம் எமது வாழ்க்கை முறை அவ்வாறாக உள்ளது. மத பிரதேச மற்றும் பல முரண்பாடுகளை கடந்து எமக்கான இனம் குறித்து நாம் தெளிவுடன் இருக்கும் போதே எமது போராட்ட நியயங்களை நாம் ஏற்றவர்கள் ஆகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் கட்டுரைக்கு நன்றி.ஆனால் உங்கள் வார்த்தைப் பிரயோகங்கள்,வசன நடைகள் ஏன் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாது உள்ளது இலகு நடையில் எழுதினால் இன்னும் அதிகப் பேர் வாசிப்பார்கள் அல்லவா தப்பென்றால் மன்னிக்கவும்.

போர் தொடாத தமிழன் என்று எத்தனை பேர் உள்ளார்கள் என்று சொல்லத் தெரியவில்லை.

:D எனக்கு தலைவலி... மண்டை ஓடு பிளந்துவிடுவது போல தலைவலி.. உயிர் போய்விடும் போலவும், தற்கொலை செய்ய வேண்டும் எண்று எண்ணும் அளவுக்கு வலி... வைத்தியர் சொல்கிறார் எனது தலைக்குள் கட்டியாம்.. கட்டியை அகற்றலாம் ஆனால் நான் பிழைத்து கொள்ள சிறிய அளவான சந்தர்ப்பங்களே இருக்கிறதாம்.... அவர் இன்னும் ஒரு வளியையும் சொல்கிறார். நான் தரும் வலிநிவாரணியின் துணையோடு சகிப்பு தன்மையோடு வாழப்பழகி கொள் என்பதுதான் அது..

எனக்கு நெருக்கமானவர்கள் பலர் சொல்கிறார்கள் கட்டியை அகற்றும் சிகிச்சை வேண்டாம் வலி நிவாரணியை போட்டு கொண்டு சகிப்பு தன்மையை வரவளைத்து வாழப்பழகி கொள் எண்று.. ஒரு சிலர்தான் சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தம்பி நீயே தீர்மானி எண்று..

கட்டியில் இருந்து விடுதலை வேண்டுமா வேண்டாமா என்பதை அந்த வலிதான் எனக்குள் தீர்மானிக்கிறது...

அப்படி ஒரு வலிதான் பிரபாகரன் என்பவரையும் விடுதலையை நோக்கி ஓட வைத்தது... அந்த வலியை உணர்ந்தவர்கள்தான் அவரின் பின்னால் போய் மாவீரர்களும் ஆகினர்..

இப்போ சொல்லுங்கள் உங்களுக்குள் எவ்வளவு வலி இருக்கிறது...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா,

நான் நினைக்கிறேன் நானும் உங்களுக்கு பதில் சொல்லாம் என்று,

நாங்கள் பேசிகொண்டிருப்பது, ஏன் ஒரு இனமாக, தமிழராக போராடவில்லை என்று, ஆனால் நீங்கள் சொல்லவாறது ஏன் நாங்கள் பிரபாகரன் பின்சென்று ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பது..உண்மையிலேயே இரண்டிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது, அந்த இடைவெளியை பற்றிதான் நான் நினைக்கிறேன் பேசுகிறோம் என்று..

சுகனினின் கடைசி பதிலை பார்த்தல் விளங்கும், முதலில் மதத்தை காரணம் காட்டி பிரிந்தோம்--தமிழ் முஸ்லீம், பிறகு போராட்ட முறைகாட்டி பிரிந்தோம் - மிதவாதம், ஆயுதப்போராட்டம், பிறகு வேறுபட்ட காரணங்களினால் ஆயுதப்போராடத்தில் பிரிந்தோம், பின்னர் பொருளாதார சமுக நலங்களினால் பெரியளவில் பிரிந்தோம், (கொழும்பு , வெளிநாடு )..... பின்னர் பிரதேச காரணத்தால் பிரிந்தோம் --கிழக்கு, வடக்கு மாகாணம் ...இறுதியில் ..6 கோடி தமிழருக்கு தனிதமிழ் நாடு வேணுமென்று 3 லட்சம் மக்களிடம் அல்லது அவர்களில் இருந்து வந்த அல்லது அவர்களை பெரும்பானமையாக கொண்ட புலிகளிடம் கொடுத்துவிட்டு நாங்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துவிட்டோம்...ஏன் இந்த நிலைமை ? நீங்கள் போராடியது சரி ஏன் மற்றவர்கள் உங்களோடு வரவில்லை? அல்லது மாவீரர் ஆகவில்லை?

இன்னுமொன்று, நீங்களே சொல்லுகிறீர்கள், பாதிக்கபட்ட அல்லது கடுமையாக பாதிக்கபட்டவர்களில், ஒருபகுதிதான் பிரபாகரன் பின்சென்று ஆயுதம் ஏந்தி போராடியது என்று.. ஏன் மற்றையவர்கள் செல்லவில்லை என்று யோசித்தீர்களா? அதற்குரிய விடை தேடுவது காலத்தின் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க வாசிக்க போய்கொண்டேயிருக்கின்றது உங்கள் கட்டுரை.(இன்று மகனின் பெற்றோருக்கான சந்திப்பு. 5.30- 5.40 போனன் கதைத்தன் வந்தன்.) எங்களால் இது முடியுதில்லை ராஜேந்தரின் பாட்டு சீன் போல் தான் எல்லாமே.

நீண்டிருந்தாலும் மிக ஆரோக்கியமான கட்டுரை.உலக அரசியலின் வரைவிலக்கணம் 'மக்சஞனா'என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து பிறந்ததாக சொல்வார்கள். அதாவது சின்ன மீனை சாப்பிட்டால் தான் பெரிய மீன் வாழலாம்.உலக முதல் வல்லரசு அமெரிக்கா தொடக்கம் எமது போராட்டத்தில் புலிகள் வரை இது பொருந்தும்.மகிந்தாவும், இன்று சரத் பொன்சேகாவும் ஏன் இந்தியாவிற்கு ஓடோடிப்போகின்றார்கள் என்றால் தியறி அதுதான்.எனது நாடு நான் என்னவும் செய்வேன் நீ யார் கேட்பதற்கு என்று இவர்கள் கேட்கலாமே.கேட்டால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.துரோகம் செய்தாலும் கருணாநிதிக்கும் உது தெரியும்

நாம் ஒன்றுமே இன்னமும் விளங்கிக்கொள்ளாமல் சீமான் கர்சிக்கின்றார்,நெடுமாறன் பிரட்டப் போகின்றார்,தமிழ் நாடு கொந்தளிக்க போகின்றது ஒரு புறம்.

எமது போராட்டதில் 5 தாவது பெரிய ஆமியை அடித்தனாங்கள்,உள்ளுக்க விட்டு அடிப்பம்,நட்டுவாக்காலி போர் யுக்தி,இப்படியெல்லாம் முன்பு எழுதினோம் என்ற ஒரு பிரஞ்ஞை கூட இல்லாமல் இப்போது புலம் பெயர்ந்து நாங்கள் புடுங்கப் போகின்றோமாம்.

இதற்கு என்ன தீர்வு இந்தியாவின் காலில் விழுவதா? அல்லது சிங்களவனின் --------நக்க சொல்லுகின்றாயா எனத்தான் பலரும் கேட்கப் போகின்றார்கள்.

முழுத் தமிழனுக்கும் ஒரு விடிவு கிடைக்குமென்றால் நான் எதையும் நக்க தயாராயிருக்கின்றேன்.

அன்று முதல் இன்று வரை எமது தலைவர்கள் தமக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே ஒழிய தமிழனுக்கு என்ன தேவை என்று பார்க்கவில்லை.

உங்களின் கருத்தின் இறுதியில் நீங்கள் அவசரபடுகின்றீர்கள் என்றே எனக்கு படுகின்றது.......

மீண்டும் ஒருமுறை வாசித்துபாருங்கள்.

அரசன் புத்திசாலியாக இருந்து மக்கள் ஏமாளிகளாக (அறிவற்றவர்களாக) இருக்கும் இடத்து. அரசனின் புத்தி கூர்மை கேள்வியானது?

அரசன் மக்களை புத்திசாலியாக்கலாமே என்பது விரண்டாவாதம். காரணம் ஒருவருடைய ஆககூடிய ஆட்சியாலம் என்பது 30-40 வருடத்திற்குள் முடிந்துவிடுகின்றது. இதற்குள் மூன்றாவது தலைமுறை முதலாவது தலைமுறையிடம் இருந்து சமூகத்திற்கு கூடாதவைகளை பெறுகின்றது!

எமது இனத்தின் ஒரு சாரர் அல்லது கூட்த்திற்கு இது வெகுவாக பொருந்துகின்றது. அதை அதிக அளவில் நாம் அலட்டாதுவிட்டாலும்...... பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள் நிலமையை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

நான் நினைக்கிறேன் நானும் உங்களுக்கு பதில் சொல்லாம் என்று,

நாங்கள் பேசிகொண்டிருப்பது, ஏன் ஒரு இனமாக, தமிழராக போராடவில்லை என்று, ஆனால் நீங்கள் சொல்லவாறது ஏன் நாங்கள் பிரபாகரன் பின்சென்று ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பது..உண்மையிலேயே இரண்டிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது, அந்த இடைவெளியை பற்றிதான் நான் நினைக்கிறேன் பேசுகிறோம் என்று..

சுகனினின் கடைசி பதிலை பார்த்தல் விளங்கும், முதலில் மதத்தை காரணம் காட்டி பிரிந்தோம்--தமிழ் முஸ்லீம், பிறகு போராட்ட முறைகாட்டி பிரிந்தோம் - மிதவாதம், ஆயுதப்போராட்டம், பிறகு வேறுபட்ட காரணங்களினால் ஆயுதப்போராடத்தில் பிரிந்தோம், பின்னர் பொருளாதார சமுக நலங்களினால் பெரியளவில் பிரிந்தோம், (கொழும்பு , வெளிநாடு )..... பின்னர் பிரதேச காரணத்தால் பிரிந்தோம் --கிழக்கு, வடக்கு மாகாணம் ...இறுதியில் ..6 கோடி தமிழருக்கு தனிதமிழ் நாடு வேணுமென்று 3 லட்சம் மக்களிடம் அல்லது அவர்களில் இருந்து வந்த அல்லது அவர்களை பெரும்பானமையாக கொண்ட புலிகளிடம் கொடுத்துவிட்டு நாங்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துவிட்டோம்...ஏன் இந்த நிலைமை ? நீங்கள் போராடியது சரி ஏன் மற்றவர்கள் உங்களோடு வரவில்லை? அல்லது மாவீரர் ஆகவில்லை?

இன்னுமொன்று, நீங்களே சொல்லுகிறீர்கள், பாதிக்கபட்ட அல்லது கடுமையாக பாதிக்கபட்டவர்களில், ஒருபகுதிதான் பிரபாகரன் பின்சென்று ஆயுதம் ஏந்தி போராடியது என்று.. ஏன் மற்றையவர்கள் செல்லவில்லை என்று யோசித்தீர்களா? அதற்குரிய விடை தேடுவது காலத்தின் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களா??

இறுதிகாலங்களில் இரண்டினது இடைவெளிகளும் குறைந்து இரண்டும் ஒன்றாகவே இருந்தது.

ஆனால் (தமிழருக்குள்) தமிழ் பேசும் இலங்கையின் ஈழபகுதியில் உள்ளவர்கள் இரண்டாக இருந்தார்கள். ஒருவர் தமிழராகவும் மற்றையவர்கள் தமிழரை காட்டிகொடுப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதே உண்மை. நாம் அதிக இளைஞர்களை இழந்தது அவர்கள் போராளிகள் என்பதனால் (மாவீரர்கள்) அல்ல தமிழர்கள் என்பதனாலேயே. தமிழர்கள் என்பதனாலேயே நடு றோட்டில் வைத்து சுடபட்டோம்.............. எமது வீட்டு கூரைகளின் மேல் குண்டுகளை சுமந்தோம்.

இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டதட்ட இரண்டு லட்சம்.

மாவீரர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 30 ஆயிரம்.

இடைவெளிகள் இல்லாமல் இருந்தது என்பதே உண்மை!

Edited by Maruthankerny

தமிழர்களுக்கு எந்த விதமான தீர்வு பற்றி பேசுகிறீர்கள் Volcano...??? அதை நான் இங்கு முதலாவதாய் எழுதியதில் எழுதி இருக்கிறேனே...! உங்களுக்காக மீண்டும் ஒரு தடவை சொல்வதில் தவறும் இல்லை... கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்...

தமிழர்களுக்காக தீர்வை பெற்று, வெறும் காகித்தில் மையினால் எழுதப்பட்டு எந்த நேரமும் கிளிந்து போகலாம் எனும் நிலையில் இருப்பதை ஒரு நிரந்தர தீர்வு எண்று தமிழ் மக்களின் தலையில் கட்டிவிட இனியும் பலர் முனையலாம்... ஆனால் வரலாறு தமிழர்களுக்கு நிலையான தீர்வு எண்றால் அது தனியாட்ச்சி தான் என்பதை சொல்லி நிக்கிறது... சிங்களவர்கள் அதைவிட வேறு ஒரு வளியையும் தமிழருக்கு விட்டு வைத்து இருக்கிறார்கள் இல்லை...

போராட்டம் என்பதில் எல்லா மட்டங்களிலும் தமிழர்களில் பலர் பார்வையாளர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர் இனியும் இருப்பர்... புலம்பெயர் நாடுகளில் போராட்டம் நடந்தால். அங்கு எல்லாம் வராமல், "நல்ல சனமோடா தம்பி" எண்டு விடுப்பு கேட்க்க எண்றால் நிறையப்பேர் இருக்கிறார்கள்...

ஒரு சாக்கடையின் அடைப்பை எடுத்து சுத்தி கரிக்க ஊர் எல்லாம் காசு போட்டு ஓர் இருவரை அதுக்குள் இறக்கி விட்டு போட்டு சுத்தி நிண்டு வேடிக்கை பார்ப்பது போலதான் பலர் வேடிக்கை பார்த்து விமர்சனமும் விசனமும் சொல்வார்கள்...

அது போலதான் எங்கட பிரச்சினையை தீர்க்க சாக்கடைக்குள் இறங்கிய சிலரை சுத்தி நிண்டு வேடிக்கை பார்த்தவர்களை பற்றி எவ்வளவு காலத்துக்கு தான் பேசுவது...??

நீங்கள் பிரபாகரன் பின்னால் போகவில்லை என்பது இப்போது எல்லாம் எனது கவலை இல்லை... தன் இனமானத்தை மதிக்காத ஒரு இனம் எந்த நிலைக்கு வரவேண்டுமோ அதுக்கு இப்போ வந்து இருக்கிறது... எனது கவலை எல்லாம் இந்த சுயநலவாதிகளுக்காக ஆயிரக்கணக்கான போராளிகள் போராடினர் என்பதே...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயா

""""""""""""""""போராட்டம் என்பதில் எல்லா மட்டங்களிலும் தமிழர்களில் பலர் பார்வையாளர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர் இனியும் இருப்பர்... புலம்பெயர் நாடுகளில் போராட்டம் நடந்தால். அங்கு எல்லாம் வராமல், "நல்ல சனமோடா தம்பி" எண்டு விடுப்பு கேட்க்க எண்றால் நிறையப்பேர் இருக்கிறார்கள்...

ஒரு சாக்கடையின் அடைப்பை எடுத்து சுத்தி கரிக்க ஊர் எல்லாம் காசு போட்டு ஓர் இருவரை அதுக்குள் இறக்கி விட்டு போட்டு சுத்தி நிண்டு வேடிக்கை பார்ப்பது போலதான் பலர் வேடிக்கை பார்த்து விமர்சனமும் விசனமும் சொல்வார்கள்...

அது போலதான் எங்கட பிரச்சினையை தீர்க்க சாக்கடைக்குள் இறங்கிய சிலரை சுத்தி நிண்டு வேடிக்கை பார்த்தவர்களை பற்றி எவ்வளவு காலத்துக்கு தான் பேசுவது...??""""""""""""""""""""""

நான் கேட்பது இதற்குரிய பதில்லைத்தான்????????????? ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்??

மருதங்கேணி

"""இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டதட்ட இரண்டு லட்சம்.

மாவீரர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 30 ஆயிரம்."""""

இதுக்கு என்ன பதில்????????????

பதில் தெரிந்த சொல்லுங்கோ ? இல்லாட்டி பதில் தேடுகிற வழியை பாருங்கோ ..இதைத்தான் நான் சொல்லுகிறேன் நாங்கள் ஒரு இனமாக போராடவில்லை என்று...உங்களுடைய பார்வையில் அவை காட்டிகொடுக்கிறவை, வேடிக்கை பார்க்கிறவை? ஆனால் ஏன் அப்படி வந்தவை என்று பார்த்தநீங்க்களோ ??

தாயா

நான் கேட்பது இதற்குரிய பதில்லைத்தான்????????????? ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்??

ஏன் இப்படி இருக்கிறார்கள் கேட்டால் அதுக்கு பதில், கடைந்து எடுத்த சுயநலம்... யாராவது போராடி எங்களுக்கு விடுதலையை பெற்று தரட்டும் நாங்கள் எங்களின் வாழ்வாதாரங்களை பலப்படுத்துவோம் எனும் எண்ணம்...

எல்லாரும் போராட்ட போனால் பிறகு யார் வைத்தியராகவும் பொறியியலாளராகவும் வந்து நாட்டை முன்னேற்றுவது எண்று எதிர் வினை சொல்லும் சிலரையும் நான் கண்டு இருக்கிறேன்... அவர்களிடம் எல்லாருமாக இரண்டு வருடங்கள் போராடி பின் எல்லாருமாக கல்வியை தொடரலாமே எண்றால் பதிலே சொல்லாமல் நழுவும் பலர்...

இப்படி சுயநலத்தின் உச்சம் தான் தமிழினம்... ஆனால் எல்லாருக்கும் தமிழீழமும் தனி நாடும் வேண்டும்...

எல்லாரும் சொல்வது போல ஏதொ சகோதர சண்டையால் தான் தமிழர் போராட்டம் பக்கம் தலை வைச்சும் படுக்கவில்லை என்பது எல்லாம் தங்களின் தவறுகளை மற்றவர்களின் மீது போடும் கோழைத்தனம்...

தமிழ் மக்கள் 90% ஒட்டு குழுக்களான மாற்று இயக்கங்களை பற்றி நல்ல புரிந்துணர்வோடு இருந்தனர் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி சiPவன்

சுகன்,

எமது சமூகத்திற்குள் உள்ள சாதியப் பிரச்சினையை சிறிதாக்கிக் காட்டுவதோ நிராகரிப்பதோ எனது நோக்கம் இல்லை. அடிமை ஆண்டான் என்ற சிந்தனை பொருளாதார சுரண்டல் என்ற அடிப்படையில் தான் உருவாவதாகவே எனக்கு இன்னமும் படுகின்றது. தேவைகளைக் கடந்து நிற்பது சாதியம் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதாவது ஒருவனின் ஆழுமையை மழுங்கடிப்பது, எவ்வளவு உயர்ந்தாலும் அடிமை என்ற சிந்தனையi வளர்ப்பது என்பன எல்லாமே கூட அடிமை அவன் உருவாக்கம் என்ற தொழிற்பாட்டின் அங்கம் தான். அடிமை ஏன் ஆண்டானிற்குத் தேவைப்படுகிறார் என்பதற்கு இரு காரணம். ஒன்று ஆண்டான் தான் அடைய விரும்பும் வசதிகளிற்கான போட்டியைக் குறைப்பதற்காகத், தன்னால் இயன்றவரை மக்களை அடிமைகள் ஆக்குகின்றார். அடிமை மனநிலையில் உள்ள ஒருவன் ஆண்டானோடு போட்டியிட முன்வராமை ஆண்டானிற்கு இலாபம். இரண்டாவது ஆண்டான் தனது தேவைகளை தான் அடைவதற்கான எரிபொருளாகவும் அடிமைகளைப் பாவித்துக் கொள்கின்றான். தேவை என்பது அடிப்படை உணவு உடை உறையுள் என்பதைத் தாண்டி ஆடம்பரத் தேவைகளாக இருக்கலாம். ஆனால் தேவைகள் சார்ந்தது தான் அடிமை உரவாக்கம் அல்லது சாதியம்.

இது எங்களிற்கு மட்டுமான குணம் அல்ல. கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள பூர்வகுடியினரும் இவ்வாறே நடாத்தப்படுகின்றனர்.

இன்னுமொரு தரவ. அண்மையில் அமெரிக்காவின் ஸ்ரான்போட் பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களில் ஓரே புள்ளி நிலையில் இருந்த வெள்ளை கறுப்பு மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களிற்கு ஒரு சோதனை எழுதக் கொடுத்தது. அம்மாணவர்களின் புள்ளிகள் ஆராய்ச்சியாளர் எதிர்பார்த்ததைப்போல அவர்களின் புள்ளி நிலையிலேயெ அமைந்தது. இந்நிலையில் இன்னுமொரு நாள் பிறிதொரு சோதனை அதே மாணவர்கள் எழுதப் பணிக்கப்பட்டனர். சோதனையின் கடினம் முன்னையதை ஒத்தே இருந்தது. ஆனால் இம்முறை சோதனை எழுதுவதற்கு முன்னர் மாணவர்கள் தங்களின் நிறம் கறுப்பா வெள்ளையா என்று ஒரு கட்டத்தில் தெரிவு செய்தபின்னரே சோதனை எழுத அனுமதிக்கப்பட்டனர். இப்போது பெறுபேறுகள் சுவாரசியமாக அமைந்தன. கறுப்பின மாணவர்களின் புள்ளிகள் கணிசமான அளவு குறைந்திருந்தது. அதாவது நிறுவனப்படுத்தப்பட் நிற ஓடுக்குமுறை வரலாறானது, தாம் கறுப்பினத்தவர் என்பதை மூளையில் பதிவு செய்த மாத்திரத்தில் கறுப்பின மாணவரின் பெறுNறைக் குறைத்தது. இது தொடர்பில் ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்கின்றன. நாங்கள் மட்டும் தான் இழிகுணம் உடைய இனம் என்று நாங்கள் நிறுவிவிட முடியாது, உலகெங்கும் அக்கிரமங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அமெரிக்க இராணுவத்திலும் கறுப்பின அமெரிக்கர் இறக்கின்றனர்.

எனினும் நாங்கள் இங்கு தலைப்பை விட்டு விலகுவதாகவே எனக்குப் படுகின்றது. ஒரு விடயத்தில் நாங்கள் உடன்படுகின்றோம், அதாவது எங்களிற்குள் நிறைய மாற்ம் தேவைப்படுகின்றது.

அடுத்து, இந்த விவாதத்திற்குள் நாங்கள் வந்ததற்கான காரணம், எங்களின் போராட்டம் எங்களிற்கு நியாயமாய் பட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே. அந்தவகையில், சரி சாதியம் தேவை நிலை கடந்தது என்றறே வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறும் அனைத்து இழி குணங்களாலும் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான இனம் தான் நாங்கள் என்றும் கொள்வோம். ஆனால் நீங்களே கூறிய படி நாங்கள் அனைவரும் சிங்கள ஆபத்துத் தொடர்பில் உடன்படுகிறோம் என்றால், இழிகுணங்கள் உள்ளவர்கள் என்பதற்காக எமது உரிமைக்காய்ப் போரிடும் உரிமை எமக்கு மறுக்கப்படவெண்டுமா? கொலைக்குற்றவாழிக்கே தனது உரிமைக்காகப் போராடும் உரிமை உண்டென்ற உல நடைமுறையில், எங்களிற்குள் நாங்கள் உரிமை மறுப்பவர்கள் என்பதால் எங்களின் உரிமை பற்றி நாங்கள் பேசமுடியாதா? எது நியாயம், எது சரி எது தவறு என்று சோப்பன்ஹாவர் பாணியிலோ, நீட்சே பாணியிலோ சார்த்தர் பாணியிலோ, சிமோன் போவர் பாணியிலோ நாங்கள் ஆராய்ந்தால் எந்த முடிவிற்கும் வரமுடியாது. ஆனால் உள்ள உல ஒழுங்கில், உள்ள நியாயம் என்ற கட்டமைப்பில் எங்கள் போராட்டம் எங்களிற்கு நியாயமாகப் படுவது வியப்பில்லை. எனவே சாதியம் போன்ற இழி குணங்கள் உள்ளவர்கள் என்பதால் எங்களின் நலன்கள் பற்றிப் பேசும் உரிமை நியாயமற்றது என்று கூறி விட முடியாது. மேலும் நாங்கள் தற்காலிகமாகவேனும் ஒன்றிணைந்து எங்கள் பொது உரிமைகள் பற்றிப் பேசரிய வரலாறும் முறக்க முடியாதது. உலக ஓழுங்குக்குள் முரண்பாடுகள் நிறைந்து தான் கிடக்கின்றன. நியாய தர்மம் என்று சந்தேகத்திற்கிடமற்று வரைவிலக்கணங்கள் அரிது.

அத்தி பூத்தால் போல் யாழுக்கு இன்னுமொருவன் வந்தாலும் சிந்த்திக்க வைக்க கூடிய கட்டுரை.நான் உங்கள் கட்டுரையை வாசித்த பின் கருத்துக்களை வாசிப்போம் என்று சுகன்,தயா அண்ணாவின் கருத்துக்களை வாசித்தேன்.அப்போது தான் நாம் உலக ஒழுங்குடன் நாம் ஒத்து போகவில்லை என்ற உங்கள் கட்டுரையின் சாராம்சம் அல்லது அனுமானம் எனது வாழ்க்கை அனுபவத்தினூடு ஒத்து வரவில்லை. ஏனென்று பார்த்தோமானால் 30 வருடத்துக்கு மேலாக அகிம்சை வழி மூலம் தமிழர்களுக்கு உரிமை வேண்டி அடங்கா தமிழன் சுந்தர்லிங்கம் தொடக்கம் தந்தை செல்வா ஈறாக அமிர்தலிங்கம் வரை போராடினோம்.கிடைத்தது காவல் படையின் அராஜகங்கள், சிங்கள காடையினாகளால் எமது மக்கள் கொல்லப்பட்டமை,பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை போன்றன.பின்னர் ஆயுத போராட்டம் தான் ஒரே வழி என இளைஞர்களால் நடாத்தப்பட்ட போராட்டமும் 33 வருட காலத்தின் பின்பும் தோற்கடிக்கப்பட்டது.அப்போ எப்படி தான் சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைகளை பெற்று கொள்வது.?

மேலும் எமக்குள் சாதியம் இருப்பதால் தான் போராட்டம் மழுங்கடிக்க பட்டது என்பதை முற்றாக ஏற்க முடியவில்லை. 1977 ல் வென்ற கூட்டணியிலும் சரி, அல்லது மாவீரன் பிரபாகரனின் படையணியிலும் சரி எல்லா சாதியை சேர்ந்தவர்களும் இடம் பெற்றார்கள்.எமக்குள் சாதி பிரச்சனை இருப்பது என்னவோ உண்மை தான். இதனை ஊதி பெருப்பித்திவர்கள்

அல்லது இதனூடாக எம்மை பிளவு படுத்தியவர்கள் சிங்கள அரசுகளும் அதன் அடிவருடிகளும் தான்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் , சனநாயகத்தினை நிச வாழ்வில் அமுல் படுத்துபர்களாம். எத்தனை வீதமான கறுப்பு இளைஞர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்றால் மிகப்பெரிய ஆச்சரியம் சுகனுக்கு உண்டாகும் .ஆனால் யாரும் இது பற்றி கூட கருத்து தெரிவிபதில்லை. அத்தோடு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்படுவர்கள் பற்றி பேசும் அமெரிக்கா எப்போவாது வருடத்தில் தூக்கில் தூங்கும் ரெக்சஸ் பற்றி பேசவே மாட்டார்கள். வியட்னாமிய - அமெரிக்க போரில் வடக்கு-தென் வியட்நாமியர்கள் என்று பிரிக்க பட்ட போதும் அமெரிக்கர்கள் போரில் தோற்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே.ஏதோ சாதியத்தால் தான் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பது என்னால் ஏற்க முடியவில்லை.இதே வர்க்க போராட்டம் என்றவர்கள் இன்று இனவாத அரசுடன் கூடி குலாவுவது யாவரும் அறிந்ததே.ஆக புலிகள் தமது நடைமுறை அரசு மூலம் பலவற்றை சாதித்தார்கள் என்பதை பலரால் சீரணிக்கமுடியாமல் உள்ளதற்கு நான் ஜவாப்தாரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். ......

.......

பள்ளிக்கூட பிள்ளைகள் ஒரு சைக்கிளில் .....

இரண்டு பேர் டபிள்ஸ் ஏறிப் போனாலே ....

பின்னாலை மோட்டர் சைக்கிள்ளை வந்து காறித் துப்புவார்களாம் ....

இடுப்பிலை கட்டியிருக்கிற பெல்ட்டாலை அடிப்பாங்களாம் .......

Edited by தமிழ் சிறி

இந்தத் திரியில் எனது கருத்துக்கள் தவறான ஒரு கோணத்தில் அணுகப்படுகின்றது. நாம் வெள்ளைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலம் முதல் சிங்கள அடிமையான இன்றய காலம் வரை எம்மால் இனமாக வடிவம் பெற முடியவில்லை. வெள்ளைகளையும் எங்கள் மண்ணில் இருந்து ஒருவன் எதிர்த்து மடிந்தான் அவன் பண்டாரவன்னியன். சிங்களவர்களையும் எதிர்த்து புலிகள் இயக்கம் மடிந்தது. ஒரு நீண்ட வரலாற்றில் எம்மால் இனமாக வலுப்பெற முடியவில்லை. இனியும் அதற்கான நம்பிக்கை இல்லை. இந்த நிலை ஏன் என்று ஆராயும் போது எனது கருத்து எமது சமூக மற்றும் தனிமனித ஆழுமை குணம் பிரச்சனைக்குரியது தற்கொலைக்கு ஒப்பானதாக இருக்கின்றது. இந்தக் குணங்கள் சாதி மதம் வர்க்க முரண்பாடுகள் தோற்றுவித்த ஒன்றாக இருக்கின்றது. இவைகள் எம்மை வேறு இனங்களில் இருந்து புறம்புபட்ட ஒன்றாக இருப்பதாக எண்ணுகின்றேன். இதை ஒரு உளவியல் நோயாகவே பார்க்கின்றேன். இது தேவைகளை அடிப்படையாக கொண்ட குணமாக அன்றி அதைக் கடந்தும் செல்கின்றது. அறிவின் முதிர்ச்சியாலும் இதை சரிப்படுத்த முடியவில்லை. அந்தவகையில் இந்தக் குணம் ஒரு நோயே.

இந்த அடிப்படையிலே சில கருத்துக்களை முன்வைத்தேன் அவைகள்

இனம் என்ற வடிவத்தை அடைய முடியாதபடி எமது நோய் அதை சிதைக்கின்றது

இனமாக எம்மை நாம் புறநிலை சார்ந்தே ஏற்றுக்கொள்கின்றோம் அகநிலையில் இல்லை

சிங்களம் எம்மை ஒரு இனமாக வரையறுத்து ஒடுக்கிய போதும் எமது அகநிலையில் உள்ள பிரச்சனைகள் நிமிர்தம் இனம் என்பதற்குரிய முக்கியத்தவத்தை நிலைநாட்டவில்லை. இன விடுதலை என்று ஆரம்பித்த போராட்டங்ள் அதற்கான நியாயங்கள் எம்மால் எமது வாழ்கை முறை ஊடாக நிராகரிக்கப்பட்டது.(மதத்திற்கான முக்கியத்துவம் பிரதேசவாதத்திற்கான முக்கியத்துவம் புத்திஜீவித அடிப்படையிலான முக்கியத்துவம் பொருளியல் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புலப்பெயர்வின் முக்கியத்துவம் இன விடுதலைக்கான முக்கியத்துவத்தை மேவி நின்றது)

இயக்க மோதல்களுக்கான மனப்பாங்கை இந்த நோயே ஏற்படுத்தியது. இனவிடுதலையின் முக்கியத்துவம் சார்ந்த பொறுப்புணர்வு இதை கட்டுப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் இனமாக நாம் எம்மை ஏற்கமுடியாத அகநிலை.

எமது இன விடுதலைக்காக புறப்பட்ட பல்வேறு குழுக்கள் பல்வேறு சித்தாந்தம் சார்புடையோர் அனைவரும் இந்த நோயில் இருந்து விடுபடாத நிலையிலேயே அனைத்தையும் முன்னெடுத்தனர்.

அகநிலையில் எமக்குள் ஜனநாயகத்தை நிராகரிக்கின்றோம். மனிதாபிமானத்தை மதிப்பதில்லை புறநிலையில் இனமாக அதை அற்த்தமற்று நிலைநாட்ட முற்படுகின்றோம்.

அடிமைக்குணம் என்பதும் இந்த நோயின் தாக்கமே. எம்மால் எமது அடிமைத்தனத்தை ஏற்கமுடியாது. புறநிலையில் இனமாக அடிமையாய் இருப்பதை விட அகநிலையில் அடிமையற்று இருப்பதற்கான வாழ்வியக்கமே எம்மிடம் பெரும்பான்மையாக உள்ளது. ஒரு பள்ளியில் இரண்டுமாணவர்கள் சுடப்படுவதும் இரண்டுபேர் காணமல் போவதும் இனப்பிரச்சனையின் விழைவு எனினும் எஞ்சிய நான்குபேரும் டொக்டர் ஆகவோ இஞ்சினியர் ஆகவோ போராடிக்கொண்டிருப்பார்கள். எமது எல்லை அது. இன உணர்வில் இருந்து மிக உயரத்தில் இருக்கும் மேம்பாட்டு அடயாளம் அது. பின்னாளில் லண்டன் கனடாவுக்குள் நுழைவதும் மிக உயரத்தில் இருக்கும் மேம்பாட்டு அடயாளமாகியது.

எமது குணவியல்பு மாறாமல் நோய் சரிசெய்யப்படமால் தொடரும் இந்தத் துயரவாழ்வில் இருந்து விடுபட முடியாது. நாம் அகநிலையில் இனமாக வலிமை பெறும் போதே புறநிலையில் எதையும் இனமாக சாதிக்க முடியும். அகநிலையில் இனமாக வலிமை பெற எமது குணம் தடையாக இருக்கின்றது. இது இன்றய நிலை இல்லை வரலாறு முழுவதும் இதே நிலைதான் தொடர்கின்றது. முற்காலத்தில் அன்னியர்கள் எங்கள் முற்றங்களில் நின்றார்கள் இன்று நாங்கள் அன்னியர்கள் முற்றங்களில் நிற்கின்றோம். தவிர்க்க முடியாமல் தமிழனாக இனமாக எதிர்நோக்கப்படுகின்றோம். இதை அகநிலைவரை ஏற்றுக்கொண்டால் இந்தத் தொடர்வரலாற்றில் ஒரு திருப்புமுனை கிடைக்கும்.

இன்னுமொருவனின் இந்த ஆக்கத்தால் சில தெளிவுகள் கிடைத்தது. உங்கள் பணி தொடரட்டும்.

  • தொடங்கியவர்

நிழலி,

இத்திரியை மின்னஞ்சல் வாயிலாகவும் உங்கள் நண்பரோடு பகிர்ந்ததாய்க் குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.

சுகன்,

எங்கள் சமூகம் தொடர்பில் நீங்கள் முன்வைக்கின்ற ஆதங்கங்களை நான் மறுக்கவில்லை. நாங்கள் நிறையவே மாறவேண்டி உள்ளது. எங்கள் சிந்தனை மாறவேண்டும். உண்மையில் ஈழத்தில் பெரும்பான்மையானோர் நாங்கள் காலாதிகாலமாக எங்கள் அடிப்படைத்தேவைகளை எங்களிற்குள்ளேயே பூர்த்தி செய்ய முடிந்தது. வியாபாரா ரீதியில் இலங்கையின் பிற பிரதேசங்களிற்குச் சென்றவர்களும் வியாபார வட்டத்திற்குள் அல்லது தொழில்துறை சார் வட்டத்திற்குள் தங்களை மட்டு;ப்படுத்திக் கொண்டனர். பிற இன மொழி கலாச்சாரங்களோடு எங்களிற்கு பாரிய அளவில் பல்வேறுபட்ட முனைகளில் பரிமாற்றங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. இதனால் எங்களின் சிந்தனை மாறுபட்ட கோணங்களில் விரியவேண்டிய அத்தியாவசியம் எங்களிற்கு ஏற்படவில்லை. என்ன பாடம் படிப்பது, எப்படி தொழிலைத் திட்டமிடுவது என எல்லாமே நடந்த பாணியிலேயே எங்களிற்குள் நடந்தபடி இருந்தது. தேவை தான் மாற்றங்களிற்கும் கண்டுபிடிப்புக்களிற்கும் அடிப்படை. எங்களிற்கு எல்லாம் ஒரே ரீதியில் நடந்ததால் மாற்றம் அவசியப்படவில்லை. எங்களைப் பற்றி நாங்கள் சற்று சுயமதிப்பு அதிகம் உடையவர்களாகவும் இருந்ததால் எங்கள் சிந்தனை உலக சிந்தனைகளில் உயர்ந்தது என்றும் நாங்கள் சில தருணங்களில் நம்பினோம். முதன் முதலில் எங்கள் போராட்டம் தான் எங்களை உலக ஆதரவு என்ற ரீதிpயல் சிந்திக்க வைத்தது. எங்களையும் மீறி எங்கள் போராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டபோது, எங்களிற்குத் தெரிந்த எங்கள் பாணியில் நாங்கள் உலகிற்கு செய்தி சொன்னோம். பெறுபேறு நாங்கள் எதிர்பார்த்த வண்ணம் நிகழாததால் இப்போது மீளாய்வு என்ற கட்டத்தில் நிற்கின்றோம்.

எங்களது சிந்தனை மாறவேண்டும் என்பதில் எங்களிற்குள் உடன்பாடு உள்ளதாகவே எனக்குப் படுகிறது. ஆனால் இதுவரை உள்ள சிந்தனை சாதியத்தின் தாக்கத்தால் தான் உருவானது என்ற உங்களது கருத்தோடும், இழி குணங்களாக நீங்கள் பட்டியலிடுபவை எங்களின் தனித்துவமான பண்புகள் என்பதிலும் தான்; சற்று மாறுபட்ட கருத்துநிலை உள்ளதாய் படுகிறது.

பல்வேறு கோணங்களிலான சிந்தனைகள், சிந்தனையைத் தூண்டும், மாற்றங்களை நோக்கிய எழுத்துக்கள்;, விவாதங்கள் கருத்தாடல்கள் கட்டின்றித் தொடரவேண்டும் என்பது இப்பதிவு முன்வைக்கும் கருத்தாகவே இருக்கின்றது. அதோடு நீங்கள் கூறுவது போன்று, பல்வேறு தரப்பட்ட கருத்துக்களையும் உள்வாங்கும் பக்குவம் முதலியனவும் நாங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்புகள் தான்.

ரதி,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனது வசனநடை வார்த்தைப் பிரயோகம் தொடர்பிலான உங்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

தயா,

நான் தமிழீழ எண்ணத்தைக் கைவிடுங்கள் என்றோ, ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதை விடுத்து அனுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள் என்றோ அல்லது எமது கடந்த 33 வருட ஆயு போராட்டத்தையோ, தலைமையையோ, மாவீரர்களையோ கொச்சைப் படுத்தியோ எங்காவது எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேனா? உங்களது உவமானம் மேற்படி பாணியில் நான் கருத்துக் கூறியது போலல்லவா சித்தரிக்கின்றது. ஆயுத போராட்டம் இன்று எமது அடிப்படை முறைமை என்ற ஸ்தானத்தில் இருந்து மாறிவிட்டது என்றும், எதிர்காலத்தில் முதன்மை முறைமையாய் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளேன். மேலும், ஏன் அவ்வாறு குறிப்பிடுகின்றேன் என்பதற்கான காரணங்களையும் நீட்டி எழுதியுள்ளேன். எனவே உங்களின் உவமானம் நியாயமானதாய் எனக்குப் படவில்லை.

அடுத்து எனக்குள் உள்ள வலியை நீ;ஙகள் உங்களது அளவீட்டில் அளவிடமுயல்கிறீர்கள். அளவிடமுயல்கிறீர்கள் என்பதற்கு மேலால், நீங்கள் ஒரு வலி பற்றி விபரித்து விட்டு, எனது வலி நிச்சயமாக நீங்கள் விபரித்த வலியிலும் குறைவானதாகவே இருக்கமுடியயும் என்று நீங்களே முடிவெடுத்து, நீங்கள் எதிர்பார்க்கும் பதிலையை நான் தருவேன் என்ற நம்பிக்கைத் தொனியில் கேள்வி எழுப்புகின்றீர்கள். நாங்கள் சிந்தனை மாற்றம் பெற வேண்டிய முனைகளில் இதுவும் ஒன்று. வலியைத் தாங்கிக் கொள்ளும் உங்களின் தன்மையின் அடிப்படையில் மற்றையவர்களின் வலியை அளவிட முயல்கிறீர்கள். இது ஆபத்தானது. ஓவ்வாவொருவரிற்கும் வித்தியாசமான வலி தாங்கும் தன்மை உள்ளது. உங்களால் தாங்கக் கூடிய வலி அனைவராலும் தாங்கப்படக்கூடியதாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கமுடியாது. வலி என்பது பொதுமையானது அல்ல. அது அவரவர் சார்ந்தது. இது தான் வலி, இவ்வளவிற்கு மேல் போனால் தான் வலி என்றெல்லாம் நாங்கள் பொதுவாக அறிவிக்க வெளிக்கிடுவது ஆபத்தானது. மேலும் வலியிற்கான எதிர்வினை என்பதும் அனைவரிலும் ஒரேவாறு இருக்கும் என்பதில்லை. போராட்டம் என்பது தமிழர் அனைவரிற்குமானது. அதனால் தான் கருத்துப் பகிர்வும் அது மூலம் எங்களின் பொதுமைக்கான அபிலாசைகள் என்னவென்று அறிய வேண்டும் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் நானும் நீங்களும் வலி என்று கருததாத விடயங்கள் சிலசமயம பெரும்பான்மையான தமிழர்களிற்குத் தாங்கமுடியதா வலியாய்ப் படலாம். அது வலியாக இருக்க அருகதை அற்றது என்று நானோ நீங்களோ அறிவிக்கமுடியது.

மற்றது மாவீரர் ஆர், அவர்கள் எந்த அடிப்படையில் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று நானும் நீங்களும் எங்களிற்குத் தெரிந்த எங்களின் உறவுகளான மாவீரர்களை வைத்து ஒரு ஊhகத்திற்கு வரமுடியுமே அன்றி, இதனால் தான் இவர் போராட்டத்தில் இணைந்து மாவீரர் ஆனார் என்று திட்டவட்டமாகக் கூறிவிடமுடியாது. நீ;ஙகளோ நானோ மாவீரராய் இருந்திருந்தால் எங்களைப் பற்றி எங்களிற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மாவீரர்களைத் தெரிந்தவர்கள் மட்டும் தானே. மேலும் எல்லா போராளியும் வலியாலோ, உணர்ச்சிவசப்பட்டோ தான் போராட்டத்தில் இணைந்தனர் என்று கூறி விடமுடியாது. பல சிந்தனைகளை வாசித்து உள்வாங்கி, முற்றிலும அறிவுபூர்வமாகப் போராட்டத்தில் இணைந்தவர்கள் உள்ளார்கள்.

குற்ற உணர்வு கொண்டு, அல்லது புனிதம் முதலான கருத்துக்கள் கொண்டு கருத்தாட்டலை மட்டுப்படுத்துவதால் எந்த நன்மையும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை.

நுணாவிலான்,

உங்கள் கருத்திற்கு நன்றி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய் 30 வருடம் அரசியல் வாதிகள் முயன்றார்கள் என்பது உண்மை தான். ஆனால், சர்வதேச அரசியலை அவர்கள் புரிந்திருந்தார்கள் என்றோ, அல்லது அன்றைய தலைவர்கள் சர்வதேசத்தை அணுகமுற்பட்டார்கள் என்றோ நாம் கூறிவிடமுடியாது. உண்மையில் உடல் பொருள் ஆவி அனைத்தும் கொடுத்து கடந்த 33 வருடம் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கு ஒப்பான அகிம்சைப் போராட்டம் அதே இதய சுத்தியோடு, அதே இலக்கோடு, அதே முனைப்போடு, ஆயதங்கள் மட்டும் இன்றி ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய 30 வருடத்தில் நடந்தது என்று நாங்கள் சற்றும் கருதிவிடமுடியாது. அந்த 30 வருடத்திற்கும் பின் வந்த 33 வருடத்திற்கம் நிறையவே வேறுபாடுகள். எனவே அந்தக் காலத்தை வைத்து நாங்கள் இன்று முடிவெடுக்கமுடியாது.

மேலும் நாங்கள் இப்போது எங்களை நோக்கி நொந்து கொள்வது ஆயுதப் போராட்ட காலத்தில் நாங்கள் இனமாக ஒன்றிணையவில்லை என்று. ஆயுத போராட்டத்திற்கு முந்திய 30 வருடம் என்பது கடந்த 33 வருடத்தைக் காட்டிலும் மக்கள் ஈடுபாடு குன்றியிந்த காலம். ஆரசியல் வாதிகள் முற்றிலும் அரசியல் வாதிகளாக வாழ்ந்த காலம் அது. அது பதவி அரசியலின் காலம். வேலை வாங்கித் தருவதற்காகச் சில்மிசங்கள் செய்த அரசியல் வாதிகள், ஓய்வூதியம் போன்ற விடயங்களைச் சரிசெய்ய லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் என அந்த 30 வருடத்தை நாம் போராட்ட காலம் என்றே கூற முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும் எமக்குள் சாதியம் இருப்பதால் தான் போராட்டம் மழுங்கடிக்க பட்டது என்பதை முற்றாக ஏற்க முடியவில்லை. 1977 ல் வென்ற கூட்டணியிலும் சரி, அல்லது மாவீரன் பிரபாகரனின் படையணியிலும் சரி எல்லா சாதியை சேர்ந்தவர்களும் இடம் பெற்றார்கள்.எமக்குள் சாதி பிரச்சனை இருப்பது என்னவோ உண்மை தான். இதனை ஊதி பெருப்பித்திவர்கள்

அதுக்குள் சாதியம் இருக்கிறது என்பதுதான் உண்மையாக எனக்கும் படுகிறது... மேல்த்தட்டு மக்கள் ( மேல் சாதி எண்டு தங்களை நினைத்து கொள்ளும் மக்கள்) எப்போதும் அதிகாரத்தில் உள்ளவர்களை துதிபாடி கீழ் இருப்பவர்களை வதைப்பதைதான் நாங்கள் சாதிய கொடுமை என்கின்றோம்...

இங்கை நடந்ததும் அதுதான்... இங்கே மீளாதியரில் இருந்து வெளியில் வர துடிக்கும் மக்களை அடக்கி வைத்து போராடியவர்களை எல்லாம் அடக்கி அளவோடு வைத்திருக்கவே பல சாதிய மனநிலையில் இருந்தவர்கள் முயண்றார்கள்... அதில் அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை பலரும் காலாக இருந்தனர்... இப்போதும் இருக்கின்றனர்...

போராடியவர்களில் பலதரப்பட்டவர்களும் இனைந்தார்கள் என்பது உண்மை... ஆனால் தடை சொன்னவர்களை ஆராய்ந்து பாருங்கள்..

என்ன அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் எங்களுக்கு வெளிப்படையாக புலப்படுவதும் இல்லை...

மற்றது மாவீரர் ஆர், அவர்கள் எந்த அடிப்படையில் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று நானும் நீங்களும் எங்களிற்குத் தெரிந்த எங்களின் உறவுகளான மாவீரர்களை வைத்து ஒரு ஊhகத்திற்கு வரமுடியுமே அன்றி, இதனால் தான் இவர் போராட்டத்தில் இணைந்து மாவீரர் ஆனார் என்று திட்டவட்டமாகக் கூறிவிடமுடியாது. நீ;ஙகளோ நானோ மாவீரராய் இருந்திருந்தால் எங்களைப் பற்றி எங்களிற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மாவீரர்களைத் தெரிந்தவர்கள் மட்டும் தானே. மேலும் எல்லா போராளியும் வலியாலோ, உணர்ச்சிவசப்பட்டோ தான் போராட்டத்தில் இணைந்தனர் என்று கூறி விடமுடியாது. பல சிந்தனைகளை வாசித்து உள்வாங்கி, முற்றிலும அறிவுபூர்வமாகப் போராட்டத்தில் இணைந்தவர்கள் உள்ளார்கள்.

இதைத்தான் நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிடிகிறீர்கள் என்பதை முழுமையாக புரிந்து வைத்து இருந்தமையால் தான் நான் அப்படி எழுத வேண்டியும் இருந்தது... மக்கள் யாரும் எண்றும் தாங்கள் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் இல்லை எண்று சொல்வது கிடையாது, சொன்னதும் கிடையாது ... இண்று சிலர் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை எண்று புரளியை கிளப்புவதையும் அனுமதிக்கவும் முடியாது...

உங்களின் இந்த கூற்று ஒட்டுமொத்த போராளிகளையும், மாவீரர்களையும் கொச்சை படுத்துகிறது... உங்களின் எழுத்து உங்கள் மீது மதிப்புக்கு பதில் அருவெருப்பை மட்டுமே கொண்டுவருகிறது... உங்களுக்கு தெரியாத ஒருவிடயம் எண்றால் அதைப்பற்றி கருத்து கூறாமல் இருப்பது மிக நல்லது...

என்னை பற்றி சொல்வதில் எனக்கு உடன் பாடு கிடையாது ஆனால் அனேகமாக உங்களை விட அதிகமான மாவீரர்களை நான் தெரிந்து வைத்து இருக்கிறேன்... கரும்புலிகளுக்கு பெயர் கொடுத்து தலைவருக்கு கடிதம் எழுதிய பல போராளிகள் தங்களின் பெயர் அழைக்கபடாமல் வேறு போராளிகளின் பெயர் வந்த போது கோபப்படுவதையும் பார்த்து இருக்கிறேன்...

இப்போ முக்கியமான விடயம் என்ன எண்றால் போராட்டம் பற்றியும் மாற்றம் பற்றியும் பேசும் நீங்கள் கூட உங்களுக்கு தெரிந்த சிலரும் நீங்களும் என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ அதே மன நிலைதான் தமிழர்கள் எல்லாருக்கும் இருக்கிறது எண்று பேச நினைக்கிறீர்களா....??? நீங்கள் போராளிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் சொல்வது அதைத்தான் குறியிடுகிறது..

நீங்கள் சொல்லும் மாறவேண்டிய போராட்ட வடிவங்கள் கூட தமிழர்களுக்கு என்ன வகையான தீர்வை எப்படி பெற்று தரும் என்பதை நீங்கள் இன்னும் சொல்லவில்லை... அப்படி நீங்கள் பரிந்துரைப்பது தமிழர்களுக்கு நிரந்தரமாக தீர்வை பெற்று தரும் எண்று நம்பிக்கை கொண்டு எவ்வளவு தமிழ் மக்கள் வருவார்கள்...??

பிரபாகரன் என்பவர் மீது நம்பிக்கை வைத்து பின் தொடர்ந்தவர்களையும் விட அதிகமான மக்கள் பின்னால் வந்து நிப்பதுக்கு ஏற்றது போல உங்களிடம் ஒரு நம்பிக்கையான தலைவர் இப்போது இருக்கிறாரா...??

குற்ற உணர்வு கொண்டு, அல்லது புனிதம் முதலான கருத்துக்கள் கொண்டு கருத்தாட்டலை மட்டுப்படுத்துவதால் எந்த நன்மையும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை.

சுருங்க சொன்னால் யாழ் வலிகாமல் நோக்கி முன்னேறி வந்த 12000 இராணுவத்தை எதிர்த்து போராடிய போராளிகளின் எண்ணிக்கை 650... அதேகாலத்தில் யாழ்மாவட்ட இளைஞர்களின் தொகை 200 000... அந்த சண்டைக்கு மருத்துவ உதவிக்காக வந்த யாழ்பல்கலைகளக மாணவர்கள் 10 பேர்... பல்கலைக்களக்கத்தில் மருத்துவம் படித்தவர்கள் 300 பேருக்கும் மேல்...

நிலைமை இப்படி அமைந்து சண்டை முடிந்து இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது அதுக்காக கவலைப்படாத தமிழன் எண்று யாராவது இருந்து இருப்பார்கள் எண்றா நீங்கள் நினைக்கிறீர்கள்....??

அப்போ அமெரிக்காவுக்கு கல்விக்கு போக தயார் செய்து கொண்டு இருந்த ஒருத்தர் கேக்கிறார் என்ன மச்சான் விட்டு போட்டு வந்திட்டியள்...?? இப்படியான ஒரு கேவலமான எண்ணம் தான் தமிழருக்குள்... நாங்கள் ஒரு துரும்பையும் தூக்க மாட்டம் ஆனால் இலவசமாக அறிவுரை மட்டும் சொல்லுவம்...

எனது கருத்துக்களை இங்கு இதோடு முடித்து கொள்கிறேன்... நண்றி வணக்கம்...

Edited by தயா

  • தொடங்கியவர்

...

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நீங்கள் நீண்டதொரு கட்டுரையை எழுதி இதில் பல விடயங்களை உட்படுத்தி இருக்கிறீர்கள். அதிகபடியான விடயங்களை ஒரு கட்டுரை வடிவத்தினுள் புகுத்தி இருப்பது என்பது தெளிவான கருத்தாடலை நெறிப்படுத்துமா? இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பது பலமுனைகளை நோக்கி நகர்த்தப்படுவதாக எனக்குப் படுகிறது. நீங்கள் இக்கட்டுரையை படிப்படியாக இலகுவாகப் புரியக்கூடிய முறையில் எழுதினால் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நல்ல கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் சொல்லக் கூடியவர்களிடம் இருந்தும் ஆளுமையாக கருத்துப்பகிர்வுகளுக்கு வழி வகுக்கும். உங்களுடைய கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளில் கருத்துப் பகிர்வு என்பது முக்கியமானதாக இருக்கிறது. அதற்கு கட்டுரையை வாசித்து உள்வாங்கி அதற்கான தங்கள் கருத்துகளை முன்வைக்கக்கூடிய தோற்றப்பாட்டை உங்கள் கட்டுரையில் ஏற்படுத்த வேண்டும். பொதுவாக சாம்பல் நிறத்தில் இசைவாக்கம் பெறவேண்டும் என்றால் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் கண்ட நன்மை, தீமை பற்றி அவற்றை மையமாகக் கொண்டே பார்க்கவேண்டும். இங்கு நீங்கள் பொதுவாக தனித்தனியாகத் தெளிவுபடவேண்டிய விடயங்களை எல்லாம் ஓரிடத்தில் குவித்து இது இன்னது, இது இன்னதிற்கானது என்று பிரித்தறியமுடியாத தன்மையை இக்கட்டுரைக்குள் அதிகரித்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. (முக்கிய குறிப்பு, இது எனக்குத் தோன்றிய சிந்தனை மட்டுமே) உண்மையிலேயே இன்னுமொருவன் இக்கட்டுரையில் நீங்கள் சொல்ல வந்தவற்றை பிரிவு பிரிவாக எடுத்து வந்தால் என்போன்றவர்களுக்கு வாசித்தல் மட்டுமல்ல கருத்துத் தெளிவுறுதலும் இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்

வல்வை சகாரா,

உங்களது கருத்துக்களிற்கு நன்றி. கட்டுரை நீண்டுவிட்டது என்பது உண்மை தான். உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்,

கடந்த கட்டுரையிலிருந்து இக்கட்டுரை பலதளச் செயற்பாடுகள் அவைபற்றிய விமர்சனங்களின் தேவைபற்றி நீள விபரித்திருக்கிறீர்கள். கட்டுரை கனடாவை மையப்படுத்தி எழுதப்பட்டாலும் ஈழத்தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரையான போக்கும் மாற்றமின்மையும் கோடிடப்பட்டுள்ளது. ஒற்றை வரியில் நல்ல கட்டுரையென்று பாராட்டிவிட்டுச் செல்லாமல் பல விடயங்கள் நாங்கள் தெளிவுபெற வேண்டிய விடயங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதில் உலக ஒழுங்கு,

இந்தச் சொல்லை இப்போ யாராவது பேசினால் கடந்தகால இப்போதும் தாங்களே தூண்களென நிற்கும் மனங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சொல்லாகவுள்ளது. இதன் வெளிப்பாடு அண்மைய காலத்தின் துரோகிகள் விலைபோனோர் போன்ற பதங்களில் கேள்வி கேட்போர் அல்லது விமர்சனங்கள் வைப்போரை விளிக்கும் நிலமையின் தொடர்ச்சி.

இதுவரை நாங்கள் ஏற்றிருந்த ஒற்றைத் தீர்மானம் ஆயுதம் தவிர்ந்து எங்களுக்கு ஒரு முடிவு இல்லையென்பதே முடிந்த முடிபாகவிருந்தது. தாயகத்தில் அதற்குரிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அவர்களின் வழிநின்ற புலத்து பரப்புரையாளர்கள் முதல் செயற்பாட்டாளர்கள் வரை அதே பழைய மனநிலையில் இன்றும் இதையே நியாயப்படுத்துவதிலிருந்து தெளிந்து சமகாலத்து ஒழுங்களை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட செயற்பாடுகளுக்குள் தம்மைப் புகுத்திக் கொண்டு இயங்க வேண்டும். ஆனால் புரிதலோ இயங்குதலோ இவர்களைப்பொறுத்தவரை இயலாத ஒன்று.

ஒன்று தங்கள் பதவிகளை விட்டு விலக முடியாத நிலமை. இன்னொன்று இதுவரை நாங்கள் சுமக்காமல் எதுவும் நடக்கவில்லையென்ற சிந்தனை.

இன்னும் ஒளிப்பு மறைப்பு நான்கெழுத்து வந்திடுவினம் விசாரிக்க மூன்றெழுத்து புகுந்திடுவினமென்று சாட்டுகளைச் சொல்லி பழைய நிலமையில் இன்னும் செய்வதுதான் கடமையென்ற மனநிலையில் உள்ள செயற்பாட்டாளர்கள் தங்களை மீள சிந்தித்துப்பார்த்தல் வேண்டும்.

உங்கள் கட்டுரையை பல நண்பர்களுக்கு அஞ்சல் செய்துள்ளேன்.

  • தொடங்கியவர்

சாந்தி,

பதிவைப் படித்துப் புரிந்து கொண்டமைக்கும் உங்கள் கருத்துக்களிற்கும் மிக்க நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.