Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 99 வீதம் ஆம் என்று வாக்களித்த பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 99 வீதம் ஆம் என்று வாக்களித்த பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் !

99% assent Tamil Eelam in overwhelming turn out of 31,000 in France

[TamilNet, Monday, 14 December 2009, 02:23 GMT]

31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,000 and 35,000. The near total turn out of voters amidst international campaign that Tamil Eelam is drowned in Mu'l'livaaykkal has stunned the observers. The public spirit has made sections of Tamil media, initially engaged in vicious campaign against the referendum, to make a U-turn supporting it later.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய பேச்சு எழுந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்துக் கிளம்பிய சில தமிழ் ஊடகங்களும், தனிப்பட்ட ஆய்வாளர்களும் இன்று தமது முயற்சிகளைக் கைவிட்டு இதற்குத் தம்மாலான ஆதரவையும் உற்சாகத்தையும் அளிப்பதைப் பார்க்கும்போது நிச்சயம் நாம் இந்த முயற்சியில் மீண்டும் ஒருங்கிணைவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து செல்வோம் !!!

பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!!!

யாழ்பாணத்தில் இருக்கும் எனது நண்பருடன் தொடர்பு கொண்டபோது சொன்னார் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களின் பிள்ளகளை தமிழில் படிக்கச் சொல்லி நாங்கள் இங்கிருந்து தீர்மானம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் புலம் பெயர்ந்தவர்கள் எங்களுக்கு என்னதேவை என்று தீர்மானிப்பதும் என்று சிரித்தார்.போய் துலைந்தததுமல்லாமல் அலுப்பு வேறு தருகின்றீர்கள் என்று குறை பட்டும் கொண்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தில் இருக்கும் எனது நண்பருடன் தொடர்பு கொண்டபோது சொன்னார் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களின் பிள்ளகளை தமிழில் படிக்கச் சொல்லி நாங்கள் இங்கிருந்து தீர்மானம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் புலம் பெயர்ந்தவர்கள் எங்களுக்கு என்னதேவை என்று தீர்மானிப்பதும் என்று சிரித்தார்.போய் துலைந்தததுமல்லாமல் அலுப்பு வேறு தருகின்றீர்கள் என்று குறை பட்டும் கொண்டார்.

மூளைச்சலவை செய்யப்பட்ட யாழ்ப்பாண குடிமக்கள் பலர் சீறிதர் பக்கம் தான். பக்கத்தில் உள்ள வீட்டில் என்ன நடக்குது என்றே தெரியாது.

Edited by Mullaimainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

நான் மேலே சொன்ன கருத்து உங்கள் போன்றவர்களுக்குத்தான். முடிந்தால் உதவுங்கள் அல்லது ஒதுங்கி நில்லுங்கள். உங்கள் கருத்தை உங்கள் யாழ்ப்பானத்து நண்பரின் வாய் மூலம் சொல்ல வருகிறீர்களே?? அது உண்மை என்றால், பூநகரி வீழ்ந்த போது நல்லூரிலும், யாழ்நகரிலும் சிங்கக் கொடியுடன் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவராக உங்கள் நண்பர் இருக்கக் கூடும்.

உங்கள் நண்பருக்கு இன்னொரு தகவல், இங்கே தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றன. தமிழும் இங்கே 12 ஆம் வருட இறிதியாண்டில் ஒரு வினாத்தாளாக வருகிறது. தமிழில் பற்றில்லாமல் நாங்கள் இங்கு இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாழில் என்ன தமிழுணர்வு இருக்கிறதோ அதற்குச் சற்றும் குறையாமல் இங்கும் இருக்கிறது. கருத்து எழுதும்போது சிந்தித்து எழுதுங்கள். நண்பரின் வாய்க்குள் உங்கள் கருத்தைத் திணிக்க வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்னும் வசிக்கும் தமிழர் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எந்த முடிவும் எடுக்கக்கூடாதா??

முடிவுகள் புலம்பெயர் நாடுகளில் எடுக்கப்படுவதற்கும் காரனமிருக்கு,

முதலாவது எடுக்கப்படும் முடிவுகள் எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவானது என்பது. ஊர்த் தமிழர்க்கென்று தனியாகவும் புலம்பெயர் தமிழர்க்கென்று தனியாகவும் முடிவெடுக்க முடியாது.

ரெண்டாவது, புலம்பெயர் நாடுகளில் மட்டுமே அவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. ஊரில் சிறு சுவரொட்டி ஒட்டினால்க் கூட காலையில் பிடிக்கப்பட்டு மாலையில் சுடப்பட்டு இறந்து கிடக்கும் உடல்தான் கிடைக்கும். இந்த லட்சணத்தில் எந்த அரசியல் முடிவுகளை எடுக்கப்போகிறீர்கள்?

உங்களாலும் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது, புலம்பெயர் தமிழர் முடிவெடுத்தாலும் பிடிக்குதில்லை என்றால், பின்னர் யார்தான் எமது அரசியல் எதிர்காலம் பற்றியும் எமது விடுதலை பற்றியும் முடிவெடுத்துச் செயல்ப்படுவது. மகிந்தவும் டக்கிளஸும் முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறீர்களா?? அதுவும் நல்லதுதான். மிகவும் சரியாகத்தான் சிந்திக்கிறீர்கள்.

ரகு

உப்பிடியானவங்களுக்கு பதில் எழுதேலாது...

நான் கூட அண்மையில் யாழுக்கு சென்றிருந்தேன்

மக்கள் திளிவாகவும் நிதானமாகவும் தான் இருக்கிறார்கள்.

முன்னம்போல் இல்லாமல் அவர்கள் அவதானத்துடனும் இருக்கிறார்கள்.

இங்கு சில பெருமக்கள் செல்வதுனுடைய பொருள் உங்களுக்கு தெரியும் வாயயநெ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பானத்து அண்மைய உள்ளூராட்சித் தேர்தலில நடந்ததைப் பார்த்தீர்கள்தானே?? அதுதான் ஊரிலுள்ள தமிழர்களின் முடிவு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?? அதாவது ஒரு இனக்கொலையை நடத்தி முடித்த சிங்களப் பயங்கரவாதியின் கட்சிக்குத் தமிழர் வாக்களித்தார்கள் என்கிறீர்கள், அப்படித்தானே?? அப்படி இல்லை, அது ஒரு மோசடி என்றால் என்ன செய்தீர்கள், ஏதாச்சும் செய்ய முடிந்ததா?? பேச்சுக்காகவேனும் தேர்தலை மீண்டும் நடத்துங்கள் என்று சொல்லுமளவிற்கேனும் உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா??இல்லையே, பிறகு எந்த லட்சணத்தில நீங்கள் முடிவெடுப்பீர்கள்?? அடிமைகளாக இருந்து கொண்டு சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா?? இல்லையென்றால் முடிந்தவனைச் செய்ய விடுங்களேன்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் "ஊரிலுள்ள தமிழரின் தலைவிதியை புலம்பெயர் தமிழர் தீர்மானிக்க முடியாது" என்கிற சப்பைக்கட்டல்கள் ஆங்காங்கே கேட்டு வருகிறது.சமரசம் செய்துகொண்டு சிங்களவருடன் வாழப் பழகிக் கொள்வோம் என்கிற மனோநிலையை தமிழர் கூட்டமைப்பு உற்பட பலர் வளர்க்க விரும்புகிறார்கள். இந்த சரணாகதி சமரசம் என்பது முடிவில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், தமிழ்த் தேசிய இனத்தின் சிங்களத்துக் கீழான முற்றான அடிமைப்படுதலுக்கும் எம்மை ஆட்படுத்தும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

தாயகத்திலிருந்து செயல்ப்பட முடியாத படியினால்த்தான் தேவையான அரசியல் நடவடிக்கைகள் புலத்தில் நடைபெறுகின்றன. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இதுவரையிலும் வடக்குக் கிழக்கில் தமிழர் சுதந்திரமாகவும், சிங்கள ஆக்கிரமிப்பின் அச்சமின்றியும் வாக்களித்த தேர்தல் ஒன்றோ அல்லது அபிப்பிராய வாக்கெடுப்போ நடைபெறவில்லை என்பதை மனதில் வைத்திருங்கள்.

தனியே புலம் தமிழராலோ அல்லது தனியே தாயகத்துத் தமிழராலோ எமது விடுதலையை வென்றெடுக்க முடியாது. இருவரும் சேர்ந்தாலே நாம் ஈழத் தமிழர். ஒருவரின் நடவடிக்கைகளுக்கு மற்றவர் பக்க பலமாயிருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி சூராவளி,

சிலரின் கருத்துக்களைப் பார்த்தால் கோபம்தான் வருகிறது. இவர்களைப் பற்றியோ இவர்களது அரசியல் பின்புலம் பற்றியோ எனக்கு அக்கறையோ அல்லது கவலையோ இல்லை. எனது கவலை, புலத்தில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்திக்கொண்டு, குறை கூறிக்கொண்டு தாமும் செய்யாமல், செய்பவனையும் விடாமல் இருப்பதுதான்.

பலமுறை இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதுவதை தவிர்த்தே வருகிறேன். சிலவேலைகளில் அவசியம் என்று கருதுவதால் எழுதுகிறேன்.

நடப்பவை சரியாகவே நடக்கின்றன. இடையில் இவர்களது கூச்சல்கள் எம்மை எதுவுமே செய்யப்போவதில்லை.

மீண்டும் உங்களுக்கு நன்றிகள், வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and the number is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,000 and 35,000. The near total turn out of voters amidst international campaign that Tamil Eelam is drowned in Mu'l'livaaykkal has stunned the observers. The public spirit has made sections of Tamil media, initially engaged in vicious campaign against the referendum, to make a U-turn supporting it later.

One of the poll observers, Stephen Gatignon, Mayor of the City of Sevran in whose area around 1800 voters turned out, welcomed all democratic moves of Eezham Tamils.

In Paris, the booths in the area called '93 Department' alone polled around 12,000 votes. This is a locality where many Eezham Tamils live. "Voters flocked in as families and we watched it with awe," said one of the French election officials.

Voters came with identities to prove their Eezham Tamil origin and since the voting took place for two days, date of birth and place of birth details were entered in a centralised database to prevent duplication. Indelible ink that can stay for 48 hours was also applied.

Enthusiastic voters from neighbouring countries also tried to participate in the polling, but they were all turned back by the election officials as the poll was exclusive to Eezham Tamils of residential status in France.

The poll was officiated and supervised by independent French election officials drawn from the members of local government bodies.

Results of two centres, far away from Paris and the postal votes, are awaited Monday noon.

Of the available accounts, 99.32 per cent said 'yes' to the following statement based on the main political principle of the Vaddukkoaddai Resolution of 1976 that was mandated by Tamils in the North and East of the island of Sri Lanka in 1977:

"I aspire for the formation of the independent and sovereign state of Tamil Eelam in the north and east territory of the island of Sri Lanka on the basis that the Tamils in the island of Sri Lanka make a distinct nation, have a traditional homeland and have the right to self-determination."

Only 43 voters said 'no' and 169 votes were invalid.

The grand success of the referendum was due to enthusiastic participation of all generations of Eezham Tamils, said the organisers. Senior citizens and youngsters were in the forefront in organisation. Braving harsh weather, many senior citizens took a special interest in distributing pamphlets and in door-to-door campaign, Mr. Thiruchothy, one of the organisers, told TamilNet.

The referendum was organised by the formation committee of the country council of Eezham Tamils called "The House of Tamil Eelam," supported by 61 Eezham Tamil organisations in France and two NGOs, Mouvement de la Paix (Movement for Peace) and Mouvement contre le racisme et pour l'amitié entre les peuples (Movement Against Racism and for Friendship between Peoples).

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்கத் தடுமாறுகிறது.சிறிலங்காவின் அதிபர் தேர்தல் நடக்கும் சம காலத்தில் புலத்தில் தமிழ்மக்கள் சனநாயக முறைப்படி தெளிவான முடிவை எடுக்கிறார்கள்.இதுவே தாயகத்தில் வாழும் மக்களின் கருத்தும் என்பதை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை 80 வீதமானவர்கள் புறக்கணித்ததின் முலமும் வாக்களித்தவர்களில் கணிசமான தொகையினர் கூட்டமைப்புக்கு வாக்களித்ததின் மூலமும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தபோது அதற்கு எதிராக சனநாயகம் பேசியவர்கள் இப்பொழுது சனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலம் எமது கருத்தைச் சொல்லும் போதும் எதிர்க்கிறார்கள். ஆக சிங்களவனின் ---யைக் கழுவுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.அவர்களைப் புறந்தள்ளி எமது கடமைகளை நாம் தொடரந்து செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய பேச்சு எழுந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்துக் கிளம்பிய சில தமிழ் ஊடகங்களும், தனிப்பட்ட ஆய்வாளர்களும் இன்று தமது முயற்சிகளைக் கைவிட்டு இதற்குத் தம்மாலான ஆதரவையும் உற்சாகத்தையும் அளிப்பதைப் பார்க்கும்போது நிச்சயம் நாம் இந்த முயற்சியில் மீண்டும் ஒருங்கிணைவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து செல்வோம் !!!பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!!!

பிரான்சில் வசிக்கின்றேன் என்னும் பெருமையுடன்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்னும் வசிக்கும் தமிழர் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எந்த முடிவும் எடுக்கக்கூடாதா??

அதானே.. நமக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வட இந்தியனே எங்கட விசயத்தில முடிவு எடுத்துக்கொண்டு வாறான்..! நாங்கள் செஞ்சால் மட்டும் பிடிக்குதில்லையாமா? :lol:

செவ்றோன் (Sevran) என்ற இடத்திலிருந்த வாக்குச் சாவடிகளில் திரண்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் வாக்கெடுப்பு பற்றி நான் பேசியவர்களில் பலர் சலிப்புடனும் நம்பிக்கையின்மையுடனும் காணப்பட்டனர். வாக்குச் சாவடிகளில் இளையோரையே அதிகமாகக் காணக் கூடியதாயிருந்தது. மே மாதக் கவனயீர்ப்புப் போராட்டங்களோடு அவர்கள் ஓய்ந்து போய் விடவில்லை. முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின்னர் மக்களின் கருத்துக்களை அறியத் தந்ததன் மூலம் நம்பிக்கையூட்டிய வாக்கெடுப்பு.

பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மூளைச்சலவை செய்யப்பட்ட யாழ்ப்பாண குடிமக்கள் பலர் சீறிதர் பக்கம் தான். பக்கத்தில் உள்ள வீட்டில் என்ன நடக்குது என்றே தெரியாது.

அர்ஜுனின் தொடர்ச்சியான கருத்திளை அவதானித்துப் பாருங்கள். அவரின் சாயம் புலனாகும். அதுவும் புளோட் பற்றிக் கேவலமாக எழுதுங்கள். கூடத் தெரியும்....

யாழ்பாணத்தில் இருக்கும் எனது நண்பருடன் தொடர்பு கொண்டபோது சொன்னார் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களின் பிள்ளகளை தமிழில் படிக்கச் சொல்லி நாங்கள் இங்கிருந்து தீர்மானம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் புலம் பெயர்ந்தவர்கள் எங்களுக்கு என்னதேவை என்று தீர்மானிப்பதும் என்று சிரித்தார்.போய் துலைந்தததுமல்லாமல் அலுப்பு வேறு தருகின்றீர்கள் என்று குறை பட்டும் கொண்டார்.

ஆக.... நீங்கள் ஒரு விதத்திலும் அலுப்புக் குடுகிறது இல்லை என்று சொல்லுறீங்கள்?? :lol:

அப்ப இந்தியனுக்கும், இத்தாலியனுக்கும், சீனருக்கும் முன்னுரிமை குடுக்கலாமா

என்று உங்கள் நண்பரிடம் கேட்டுச் சொல்லுறீங்களோ அர்ஜுன்? :D:D

'ஆம்' என்று வாக்குப் பதிவினை அளித்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்....

அது சரி யாரப்பா 169 செல்லா வாக்குகள் போட்டது??? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏராளமான தமிழ் டிப்ளமற்றிக் அறிஞர்களின் வேண்டுகோள்கள்,சதிகளை மீறி பிரான்ஸ் தமிழ்

மக்கள் உண்மையான உணர்வை காட்டி இருக்கிறார்கள்.

இனிமேல்தன்னும் இணையத்தில் எழுதியோ,தொலைக்காட்சியில் கருத்துப்பகிர்வு என்று குழறியோ

மக்கள் மனங்களில் ஒரு துரும்பு அளவுதன்னும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது என இணைய அறிஞர்களும்

மற்றையோரும் உணரவேண்டும்.

வருகின்ற 19,சனியன்று இங்கு கனடாவிலும் வாக்களிப்பு இடம்பெறப்போகின்றது. சகல வழிகளிலும் மக்களுக்கு முழு விபரமும் கொடுக்கப்படுகின்றது. கனடாவிலும் பெருவாரியான மக்கள் வாக்களிப்பர் என நம்புகின்றேன்

மேலதிக விபரங்களுக்கு: இணைப்பு

பிரித்தானியாவிலும் வாக்குப்பதிவு இடம் பெற இருக்கின்றது இணையச் செய்தியைத் தவிர வேறு எந்தச் சல சலப்பும் இல்லாது இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நன்றி.எல்லா நாடுகளிலும் போதுமான பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். பிரித்தானியாவில் போதிய அளவு பிரச்சாரமில்லை.சும்மாவே சாக்குப் போக்குச்சொல்லும் பிரித்தானிய மக்களுக்கு முறையாக பிரச்சாரம் செய்யாமல் விட்டால் நிறைய வாக்குகளை இழக்க வேண்டி வரும். ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் காட்டிய அசமந்தப் போக்கு இம்முறை இருக்கக்கூடாது.புலம் பெயர் ஊடகங்களே இதற்கான வேலைத் திட்டங்களை எடுக்க வேண்டும்.ஐபிசி ஜீரிவி போன்றவை இந்த விடயத்தில் ஆழமான கலந்துரையாட்களை நடத்த வேண்டும்.

இந்த இடத்தில் இக்கருத்து பதிவு செய்வது பொருத்தமாக இருக்காது, என்றாலும் ஊடகங்கள் தான் இன்று உலக மக்களை வழி நடத்து கின்றன, 2009 சனவரி மாதத்தில் இருந்து தமிழ் ஊடகங்கள், பல, 2009 இற்கு முன் தாம் நடந்து வந்த பாதையில் இருந்து விலகி வேறு திசையில் சென்றன!

இப்போது சில ஊடகங்களின் நிலைப்பாடு மக்கள்,வெளிப்படுத்தும் நிலைப்பாட்டிற்கு எதிர்மாறானவைகளாக இருக்கின்றது.

மக்களை வேறு திசை காட்டி வழி நடத்த முயற்சிக்கின்றன.

சில ஊடகங்கள் மே 19 இற்காக காத்திருந்தனவா???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி,

சில ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களை வேறு வழியில் நடத்த முயற்சிக்கின்றன என்று எழுதியிருந்தீர்கள். அவை எவை என்று சொல்ல முடியுமா?? ஏனென்றால் எனக்கும் இந்த கருத்து சில நாட்களாகவே இருந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் வரையிலும் தம்ழித்தேசியத்தை ஆதரித்து எழுதிவந்த முன்ணணி ஊடகமொன்று தற்போது தனது பெயரையும் போக்கையும் மாற்றிக்கொண்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் பிரான்சில் நடந்து முடிந்துள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி ஏனைய தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டு வரும் வேளையில் இந்த ஊடகம் ஒரு கொசுறுத் தகவலாகக் கூட இந்த நிகழ்வைப் பதிய விரும்பவில்லை.எதுவுமே நடக்காதது போல வேறு செய்திகளைப் பதிந்து வைத்திருக்கிறது. சிலவேளை நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சில தமிழ் ஊடகங்களுக்குள் இதுவும் அடங்குகிறதோ என்னவோ ??!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து

அவர்களின் பெயர்களையோ அல்லது இது சம்பந்தமாகவோ இங்கு எழுதி...

அவர்கள் நினைப்பதை

அல்லது

செய்ய விரும்பியவற்றை

;நீங்களே ஊதிப்பெருப்பித்துவிடவேண்டாம்

எல்லோரும் பொறுப்போடு செயற்படவேண்டிய நேரமிது.

எல்லாமே மக்கள் அறிவர்

அதேநேரம் எதிரிகளையும் துரோகிகளையும் பெருக்குவதை நிறுத்துவோம் முதலில்...

நானும் சிலவற்றை இங்கு கண்டேன்

ஆனால் பதில் எழுதாது விட்டுவிட்டேன்

காரணம் அவர்களுக்கு தெரியும் அவர்களைத்தான் சுடுகின்றேன் என....

வேண்டாம்

அது என்னுடைய நோக்கமன்று

அதுமட்டுமல்ல

என்னுடைய நோக்கத்திற்கு நேரெதிரானதுபுரிந்து கொள்வர் என எதிர்பார்க்கின்றேன்

நன்றி

புலம் பெயர் தேசமெங்கும் உண்மையான, தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகளின் அடித்தளத்தில் ஊடகங்கள் கட்டி வளர்க்கப்படவில்லை. இது ஒரு திட்டமிட்ட தொலை நோக்குச் செயற்பாடக இருக்குமோ என்ற கருத்து வலுப்பெற்றுச் செல்கின்றது.

சர்வதேச சக்திகளின் பேராதரவுடன் சிங்களத்தின் முற்றுகைக்குள் சிக்கி எமது விடுதலை அமைப்பு முள்ளிவாய்க்காலில் சிதைவடைவதற்கு முன்பே. புலம் பெயர் தேசமெங்கும் தமிழ் தேசியத்தின் பெயரால் இயங்கிவந்த ஊடகங்கள் தம் மூச்சை நிறுத்த தொடங்கிவிட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.