Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணச் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarlcuisine.com/

யாழ்ப்பாண சமையல் இணைய தளத்திற்கு வருக.

இந்த இணையத்தளத்தில், இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாண குடாநாட்டின் சமையல் சாப்பாடு பற்றிய முறைகள், விபரங்கள் ஆகியவற்றைக் காணலாம்.

யாழ்ப்பாண சமையல் சாப்பாட்டு வகைகள் எந்த முறையில் தனிப்பட்டது என்பதை அறிய ‘About Jaffna' என்ற பக்கத்தைப்படிக்கவும்.

இந்தத்தளத்தில் யாழ்ப்பாண சமையல் சாப்பாடு பற்றி புலம் பெயர்ந்து வாழும் தற்கால தமிழ் சந்ததியாருக்கும், வருங்கால சந்ததியாருக்கும் எடுத்துக்கூற விரும்புகிறோம்.

இந்தத்தளத்தில் தந்திருக்கும் சாப்பாட்டு வகைகள் யாவும் யாழ்ப்பாணத்தில் பலகாலமாக வாழ்ந்து இந்தச்சுவையான சிறந்த உணவை உண்டு வந்த தமிழ் குடும்பத்தினரிடமும் எம்மிடமும் இருந்து கிடைக்கப்பெற்றன. அநேகமான சமயல் முறைகள் பல வருடங்களாக பல சந்ததிகள் மூலம் கிடைக்கப்பெற்று தற்காலத்திலும் நாம் வாழும் இடங்களில் பாவித்து வருகிறோம். இந்தத்தளத்தில் தந்திருக்கும் உணவு பதார்த்தங்களுக்கு தேவையான பொருள்கள் அனேகமானவை மேற்கத்திய நாடுகளில் கிடைக்கின்றன. அவைகள் இல்லாத பட்சத்தில் தேவையான இடங்களில் இவற்றிற்கு பதிலான பதார்த்தப்பொருள்கள் தந்திருக்கிறோம்.

.சமீப காலத்தில் இந்த தளத்தில் புதிய கட்டுரைகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகள் சமயலுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும், யாழ்ப்பாணத் தமிழ் இளம் சந்ததியாருக்கு தங்கள் மூதாதையர்களின் பண்பாடு, மரபு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் பற்றி அறிய ஒரு சந்தர்பத்தை கொடுக்கிறது. இவற்றில் சில பழைய நாகரீகமாய் சிலருக்கு தென்பட்டாலும் நமது மூதாதையர் இவற்றில் முழு நம்பிக்கை வைத்து இந்த கலாசாரத்தின் அடிப்படையில் வாழ்கையை நடத்தி, இக்காலத்தை போல் வெறுப்புடனும் துக்கத்துடனும் வாழாது தன் மன நிறைவோடும் சந்தோசமாகவும் வாழ்கை நடத்தினர்.

இந்த இணையத்தளம் உங்கள் தகவலுக்காக தருப்படுகிறது. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு தவறில்லாத தகவல் தருவதற்காக நியாயமான அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்தத்தளத்தில் தந்துள்ள தகவல்கள் யாவும் பிழையற்றவை என்று உறிதிப்படுத்த படவில்லை. அதே நேரம் பாவிப்பாளர்களாகிய நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டியது யாதெனில்,

. இந்த தளத்தில் அடங்கிய தகவல்கள், பொருள்கள், சேவைகள் ஆகியவற்றில் பிழைகள், தட்டச்சு பிழைகள் இருக்க்க்கூடும்,

. இந்த சேவை உங்கள் தேவைக்கு சரியானதாக இருக்காது,

. இந்த சேவையில் தடங்கல்கள், பாதுகாப்ப்பின்மை அல்லது பிழைகள் ஏற்படலாம்,

. இந்த சேவையை பாவித்து வரும் முடிவுகள் சரியானவையாகவோ அல்லது நம்பக்கூடியவையாகவோ இருக்காது,

இந்தத்தளதில் அடங்கிய தகவல்கள் அடிக்கடி மாற்றியமைத்தும், புது விடயங்களை உள்ளடிக்கியும் முன்னேற்றம் செய்யப்படும்.

இந்த இணையத்யதளத்தில் வேறு இயக்குநர்களின் இணையத்தளங்களின் விலாசங்கள் கொடுத்திருக்கலாம். இந்த தளங்களை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. இவற்றில் உள்ளடங்கிய தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. இவற்றை இங்கு தந்ததால் இவற்றில் உள்ள தகவல்களை நாங்கள் உறிதிப்படுத்தவில்லை. நீங்கள் இவற்றை பாவிப்பதினால் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ வரும் சிதைவுகளுக்கும் மற்றும் இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பளிகள் இல்லை.

http://www.yarlcuisine.com/

ஆஹா...இப்படியான ஒரு தளத்தைத் தான் நிறைய நாட்கள் தேடிக்கொண்டிருந்தேன். பலதடவை Google பண்ணியும் கிடைக்கவில்லை

நன்றி கந்தப்ஸ்

படங்களும் இணைத்திருந்தால் அற்புதம்.

நன்றிகள் கந்தர்.

கந்தப்பு!!!!!! என்ன கறுமம் ..........கறுமம்....................

யாழ்பாணத்துச் சமயல் எண்டு படிச்சுப் போட்டு தாய் மொழியாம் எம் தமிழ் மொழி எல்லோருக்கும் புரியும் மொழியில்

இருக்கும் எண்டு போனால் கண்டறியாத இங்கிலீசு மொழியில எழுதப்பட்டிருக்கிறது.....................

இப்படி ஒரு தளம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நன்று அதனால் அதை வேரோடு அழித்து விடுங்கள்..................

எங்கள் புhட்டி புhட்டன்; பாட்டன் பாட்டி எல்லாரும் உந்த .சிங்கிலீசிலயோ படிச்சு சமைச்சவை??????

தன் சொந்த மண்ணின் வாசனையை இயற்கையான காற்றின் வழியே தான் ஒவ்வொரு தமிழனும் சுவாசிக்க ஆசைப்படுவான்

இப்படியான செயற்கை சுவாசத்தில் அல்ல...............................

தயவு செய்து எல்லாவற்றையும் தமிழில் மாற்றி அமையுங்கள்!!!!!!!

நீங்கள் ஆங்கில பாண்டித்தியம் பெற்ரவராக இருந்தாலும்..........

எதுவும் தன் தாய் மொழியில் இருக்கும் போது தான் அது புரிந்து கொள்ளவும் அதன் இனிமையையும் உணர்ந்து கொள்ளவும்

இலகுவாக இருக்கும்!!!!!!!

இதில் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

தமிழ்மாறன், இந்த சமையல் குறிப்பு......

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட புலம் பெயர் தமிழர்களுக்கு ,

கனபேர் இங்கு ரமில்ஸ் ஆக மாறிப்போய் கனகாலமாகிவிட்டது.

என்னை போல் பல பேர் இருக்கிரார்கள் என்பதில் மகிழ்ச்சி

:unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன், இந்த சமையல் குறிப்பு......

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட புலம் பெயர் தமிழர்களுக்கு ,

கனபேர் இங்கு ரமில்ஸ் ஆக மாறிப்போய் கனகாலமாகிவிட்டது.

தமிழ் கதைக்க வாசிக்க தெரியாதவை இந்த யாழ்ப்பாண சாப்பாட்டை

சாப்பிடுவினம் என்று நினைக்கிறது முட்டாள்தனம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கந்தப்பு! டமில்ஸ் எல்லாம் பிசாவோடும் பேகறோடும் மினக்கடுவினம். தமிழர்தான் பாவமாப்பு!!!

தமிழ் கதைக்க வாசிக்க தெரியாதவை இந்த யாழ்ப்பாண சாப்பாட்டை

சாப்பிடுவினம் என்று நினைக்கிறது முட்டாள்தனம் :unsure:

எம் உணவு முறை பற்றி மற்ற நாட்டவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். எமக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதால் அது மற்றவருக்கு புரியாமல் காணாமல் போய்விடும். சீனர்களின், மலேசியர்களின் உணவு முறையை எந்த நாட்டு மொழியிலும் அறியலாம். அதே போல் எம் உணவு முறையும் வேற்று மொழிகளுடன் நிச்சயம் வரவேண்டும்.

இங்கு கனடாவில், பிரபலமான பாபு கேட்டரிங்கிற்கு போய்ப் பார்த்தால் தெரியும், தமிழர் அல்லாத எத்தனையோ பேர்கள் கியூ வில் நின்று உணவு வாங்குவதை.

உங்கள் கருத்தை நான் 100வீதம் ஏற்றுக்கொள்கிறேன்.எனது தொழிலும் சமயல்தான்.

நான் சொன்னது ரமில்ஸ் ஆக்களுக்கு மட்டும் தான்.ரமில்ஸ் விரும்பாத பல

தமிழரின் விடையங்கள் வேற்று நாட்டவருக்கு பிடித்திருக்குது.

Edited by sagevan

ஆமா, ஆமா யாழ்பாணத்தில... எப்ப புரியாணி (நஸ்கோரிங்) சாப்படீங்க... ?

தோசை, இடியப்பம், புட்டு எல்லாம் என்னாச்சு, இன்னும் பருப்புக்கறி ... அது இது எல்லாம் வரப்போகுதா?

எதுஎப்படி போனாலும்

தமிழை தமிழாக ஆகவும் ஆங்கிலத்தை இங்கிலிஸ் ஆகவும் எழுதியிருக்கிறார்கள். ஃ எந்தவிதத்திலும் பிழையோ குறையோ காணமுடியாது...

அதோட அந்தப் பழைய மறந்துபோன குசினிக் கருவிகளான

அரிவாள் (அல்லது அறுவாள்), திருவலை, புட்டுக்குழல், இடியப்பத்தட்டு, இடியப்பஉரல் உரல் அம்மி ... இன்னும், இன்னும் ...

போன்ற கருவிகளின் படங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறை பற்றிய இயங்கு படங்களையும் போட்டு

ஒரு நூதன சாலையையும் ஆக்கி விட்டீர்கள் என்றால்! அது ஒரு சிகரம் வச்சமாதிரி இருக்கும்.

மேலும் ஒரு சரக்குப் பட நிகண்டு , ... இன்னும், இன்னும் எத்தனையோ ... செய்லாம் ... இனைக்கலாம் ...

நான் ரமில் ஆனால் "jaffna cooking" என்று தான் கூகிள் பணித் தேடுவன்!

கந்தப்பு! உங்கள் வரவு அழைப்பிற்கு. மிகவும் நன்றி.

பின் குறிப்பு :

Jaffna Cookery

Those who are interested in Jaffna cooking may find the following two books useful. If anyone knows of any other books on this essential subject, please inform us. The second book, although it has the title 'Jaffna Cookery,' purports to have recipes from the East. If anyone knows a cookbook of eastern recipes, please let us know. -- Editor

Introduction to Jaffna Cookery

By Sathanithi Somasekaram

1995 ISBN: 955-9276-01-8

Published and distributed by:

Arjuna Consulting Company Ltd. 60, School Avenue, Station Road, Dehiwela, Sri Lanka

Tel: (94-1) 738803 or 077-312110

e-mail: arjunaco@slt.lk

From the Land of the Yaal Padi

RecipesJaffna.jpg

By Rani Thangarajah

148 Pages / Orient Longman / January 2003 / 8125025022

REGIONAL cooking is unique as it blends the distinctive features of the land and its people together, making the experience of eating an enriching one.

And so does this book too — Recipes of the Jaffna Tamils — written mainly for the Tamils from Jaffna and the eastern part of Sri Lanka who are scattered across the globe. But it moves beyond its regional contours to beckon all those who love cooking.

The housewife of Jaffna, being thrifty, makes minimum use of ingredients to turn out simple, wholesome fare. Nutrition for the family is the keyword rather than gourmet for a sophisticated palate. And the pictures reflect this quality aptly — with no frills, the food is served as it is on the family dining table.

As any self-respecting cookery book would do, Recipes of the Jaffna Tamils runs through the list of basic recipes, but with the flavour of Jaffna spicing it.

Breakfast dishes begin with the simple string hoppers and tomato sothi and move on to a rather exotic string hopper biriyani. Even the mundane puttu is transformed into ragi, spinach, and tapioca puttu.

The rice section is no exception. Among the curd and the tomato rice recipes you will find mango rice and the tangy tamarind porridge — a must during the monsoons.

Excerpts from "Letters from Jaffna" dot many a page to bring one closer to the aromas from a Jaffna kitchen: "Ah," said Appa "The rain and the puli Kanchi... " We said nothing as we allowed its warm, spicy, sour, hot comfort to warm our throats.

"Pachadi, Chambals, Chutneys" offers a wide variety of recipes. What with green banana skin pachadi to hibiscus flower and yoghurt pachadi, the combinations are mind-boggling. The home garden dominates the vegetable section. Pumpkin, yam, jackfruit seed, hibiscus flower and leaves figure largely in the recipes and they tend to lean rather heavily on coconut.

Jaffna, being a peninsula, has an abundance of seafood. The author has spared none — whether it be crab, shark, fish, prawn or squid. Meat dishes have their own niche.

A range of achars, pickles and vadahams follow to tease the appetite. Snacks and sweets border on the "homemade rustic" variety relying on jaggery, sesame seed, coconut and gingelly oil, to give them their distinct regional flavour.

From the fan-shaped leaves to the root, the palmyra palm forms an intrinsic part of the life and cuisine of this region.

The snacks, savouries, sweets and porridge produced from the Palmyra form a separate section in this book.

The simplicity of the recipes, the availability of the ingredients, the footnotes, index and the useful glossary make the experience of cooking enjoyable.

ROHINI RAMAKRISHNAN

Recipes of the Jaffna Tamils, compiled by Rani Thangarajah,

Edited by Nesa Eliezer, Orient Longman

-- review from The Hindu, July 20, 2003

www.sangam.org

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கதைக்க வாசிக்க தெரியாதவை இந்த யாழ்ப்பாண சாப்பாட்டை

சாப்பிடுவினம் என்று நினைக்கிறது முட்டாள்தனம் :(

சஜீவன் , ரமில்ஸ்க்கு இட்டலி, இடியப்பத்தின் மேல் எப்பவும் ஒரு காதல் உண்டு.

அவர்கள் இட்டலியையும், இடியப்பத்தையும் முள்ளுக்கரண்டியும் , கத்தியும் இல்லாமல் .....

இரண்டு கைகளாலும் பிச்சு ...... வாய்க்குள் வைக்கும் அழகே, அழகு. smiley-eatdrink020.gif smiley-eatdrink020.gif

  • கருத்துக்கள உறவுகள்

அதோட அந்தப் பழைய மறந்துபோன குசினிக் கருவிகளான

அரிவாள் (அல்லது அறுவாள்), திருவலை, புட்டுக்குழல், இடியப்பத்தட்டு, இடியப்பஉரல் உரல் அம்மி ... இன்னும், இன்னும் ...

போன்ற கருவிகளின் படங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறை பற்றிய இயங்கு படங்களையும் போட்டு

ஒரு நூதன சாலையையும் ஆக்கி விட்டீர்கள் என்றால்! அது ஒரு சிகரம் வச்சமாதிரி இருக்கும்.

மேலும் ஒரு சரக்குப் பட நிகண்டு , ... இன்னும், இன்னும் எத்தனையோ ... செய்லாம் ... இனைக்கலாம் ...

சில சமையல் உபகரணங்கள் அன்றும் ...... இன்றும்.......

string+hoppers+4.jpgstringhopper.jpg

bambooputtu1.jpgPuttumaker1.jpg

coconut.jpgcocunutmachine.jpg

kudkuran.jpg

philipin- kudkuran - image from www.carinderia.net

இதன் பெயர் தான் திருவலை

cocmilk.jpg

image from www.pacificworlds.com - yap native

இதில் தான் நாங்கள் தேங்காய் திருவி பால் பிழிந்து கறிவைத்தோம்

Coconut Grater - Seat என்று கூகிள் பண்னினால் வருவது இங்கே பார்க்க

மேலும்

அம்மியும் குழவியும்------------------------------------------------------------------------------------ஆட்டுக் கல்லு

batugiling02.jpglesung.jpg

image from http://www.pickles-and-spices.com/methods-of-grinding-spices.html

இங்க பாருங்கோ கதாயுதத்தையும் துக்கிக்கிட்டு இங்கிலஸ்ல முழங்கிற ...

Edited by ஜெகுமார்

... ரமில்ஸ்க்கு இட்டலி, இடியப்பத்தின் மேல் எப்பவும் ஒரு காதல் உண்டு.

அவர்கள் இட்டலியையும், இடியப்பத்தையும் முள்ளுக்கரண்டியும் , கத்தியும் இல்லாமல் .....

இரண்டு கைகளாலும் பிச்சு ...... வாய்க்குள் வைக்கும் அழகே, அழகு. smiley-eatdrink020.gif smiley-eatdrink020.gif

சிறி அண்ணா, தமிழ் கடையில் கறிபணிஸ் வாங்கி Jacketல் கறி வளிய, வளிய வீதில சாப்பிடுக் கொண்டு செல்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்யினம், அதையாவது பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் வடையை முள்ளுக் கரண்டியால் குத்தி கஷ்டப்பட்டு சாப்பிடும் டமில்சும் இங்க சிலர் இருக்கினம்... கேட்டல் எண்ணெய் கையில பிரழுமாம்... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு!!!!!! என்ன கறுமம் ..........கறுமம்....................

யாழ்பாணத்துச் சமயல் எண்டு படிச்சுப் போட்டு தாய் மொழியாம் எம் தமிழ் மொழி எல்லோருக்கும் புரியும் மொழியில்

இருக்கும் எண்டு போனால் கண்டறியாத இங்கிலீசு மொழியில எழுதப்பட்டிருக்கிறது.....................

இப்படி ஒரு தளம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நன்று அதனால் அதை வேரோடு அழித்து விடுங்கள்..................

எங்கள் புhட்டி புhட்டன்; பாட்டன் பாட்டி எல்லாரும் உந்த .சிங்கிலீசிலயோ படிச்சு சமைச்சவை??????

தன் சொந்த மண்ணின் வாசனையை இயற்கையான காற்றின் வழியே தான் ஒவ்வொரு தமிழனும் சுவாசிக்க ஆசைப்படுவான்

இப்படியான செயற்கை சுவாசத்தில் அல்ல...............................

தயவு செய்து எல்லாவற்றையும் தமிழில் மாற்றி அமையுங்கள்!!!!!!!

நீங்கள் ஆங்கில பாண்டித்தியம் பெற்ரவராக இருந்தாலும்..........

எதுவும் தன் தாய் மொழியில் இருக்கும் போது தான் அது புரிந்து கொள்ளவும் அதன் இனிமையையும் உணர்ந்து கொள்ளவும்

இலகுவாக இருக்கும்!!!!!!!

இதில் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

இந்த இணையத்தளத்துக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை. உறவினர் ஒருவர் மின்னஞ்சலில் இவ்விணையத்தை அறிமுகப்படுத்தினார்.

யாழ்கள உறுப்பினர் தூயா அவர்களின் ஈழத்து உணவு பற்றிய தொகுப்பு அவரது வலைப்பதிவில் நீங்கள் தமிழில் வாசிக்கலாம்.

http://thooyaskitchen.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா, தமிழ் கடையில் கறிபணிஸ் வாங்கி Jacketல் கறி வளிய, வளிய வீதில சாப்பிடுக் கொண்டு செல்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்யினம், அதையாவது பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் வடையை முள்ளுக் கரண்டியால் குத்தி கஷ்டப்பட்டு சாப்பிடும் டமில்சும் இங்க சிலர் இருக்கினம்... கேட்டல் எண்ணெய் கையில பிரழுமாம்... :D

குட்டி, இதைத்தான் சொல்வது அற்பனுக்கு பவிசு வந்தால்...... அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பானாம் . :(:(

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, இதைத்தான் சொல்வது அற்பனுக்கு பவிசு வந்தால்...... அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பானாம் . :D:(

இதென்ன பிரமாதம்.இப்ப வீட்டுக்குள்ளையே சனம் குடை பிடிக்குது :(

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம்.இப்ப வீட்டுக்குள்ளையே சனம் குடை பிடிக்குது :rolleyes:

உண்மை சஜீவன், எனது வீட்டிற்கு கிட்ட இருக்கும் ஒருவர் ஈழத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் ,

இங்கு நல்ல வேலை எடுத்து , தான் விரும்பியபடி ஒரு கலியாணத்தையும் செய்து , மிகவும் விலை கூடிய கார், வீட்டிற்கு அளவுக்கதிகமான ஆடம்பரங்களை செய்து கொண்டிருப்பார்.

அதே... நேரம் அவரின் தாய் வீடு ஒழுகின்றது பணம் அனுப்பச் சொல்லி கடிதம் பல எழுதியும் பதில் போடுவதில்லை.

சிறிது காலத்தில் அவரின் தாயும் மரணமடந்து விட்டார்.

அவரின் இப்போதைய நிலைமை .... குழந்தை இல்லை , மனைவிக்கு மாற்ற முடியாத சுகவீனம் என்று......கன பிரச்சினை.

இவற்றை நினைக்க அவர் தனது தாய்க்கு செய்த பாவத்துக்கு அனுபவிக்கின்றார் என்றே .... தோன்றுகின்றது.

  • 4 weeks later...

தள இணைப்பிற்கு மிக்க நன்றி கந்தப்பு :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தள இணைப்பிற்கு மிக்க நன்றி கந்தப்பு :wub:

கணகாலம் யாழிலை உங்களைப் பார்த்து. யாழுக்கு ஏன் முன்புபோல நீங்கள் இப்ப வருவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.