Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத்தின் எழுத்து மூல பத்திரத்தில் குறிப்பிடப்பட்டவை சம்பந்தன் எம்.பி க்களுக்கு விளக்கி கொண்டு இருக்கின்றார்.

Featured Replies

சரத்பொன்சேகா கையளித்துள்ள எழுத்து மூல பத்திரத்தினை இன்று சம்பந்தன் பாராளுமன்ற கட்டடத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் எனவும் இல்லாவிடில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கிழிக்கப்படும் என விரட்டுவதாகவும் எம்.பி க்கள் கூறுகின்றனர்.

சரத் பொன்சேகாவின் ஆவணத்தில் மொத்தம் 10 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம் அதன் சுருக்கம்;

சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாதுகாப்புப் படையினரை மாற்று இடங்களில் நிலை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, தேசிய பாதுகாப்பு மற்றும் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுவதுடன் மிக முக்கியமான இடங்களில் மாத்திரமே பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்படுவர் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி மற்றும் விவசாயம் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் தற்போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளும் கட்டடங்களும் அவற்றின் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் காணிகள் அரசுக்கு ஒதுக்கப்படும் முறைமை நீக்கப்படுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு ஜெனரல் பொன்சேகா கையளித்துள்ள ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கான முழு உரிமைபற்றியும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வாணிப வர்த்தகத் தடைகள் அனைத்தும் நீக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியப் போக்குவரத்து வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படுவதுடன், யுத்தத்தின்போது தங்களது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் விசேட நிவாரனம் வழங்கப்படுமெனவும் இந்த ஆவணம் கூறுகிறது.

ஆதாரங்களின்றி தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்களெனவுயும் தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டம் சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதால் அது நீக்கப்படுமெனவும் அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் 10 அம்சங்களில் சிலவற்றைத் தவிர மிகுதி காலப்போக்கில் எந்த அழுத்தமும் இன்றி சிங்கள அரசால் செய்யப்பட்டு ஆக வேண்டிய விடயங்கள். குறிப்பாக வர்த்தகத்தடை மீன்பிடித்தடை.. இவற்றால் சிங்கள அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை அது தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளாது. இதனால் பாதிக்கப்படுவது சிங்களவர்களும் தான்... அவர்களின் வர்த்தக உற்பத்திகளும் தான்.

அரச படைகள் தேசிய பாதுகாப்புக்கருதி கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் என்பதனுள் இருக்கும் சூட்சுமம்.. சம்பந்தருக்குப் புரியாததல்ல. அயர்லாந்தில் ஐ ஆர் ஏயின் ஆயுதப் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பிரிட்டிஷ் படைகள் எப்படி இன்றுள்ளனவோ அப்படி அமையுமா சம்பந்தர்..??! இதை தெளிவாக விளக்க வேண்டும்.

பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும் என்பது சட்டரீதியான விடயம். அதை தேர்தல் வாக்குறுதியாக்க வேண்டியதில்லை. அரசக்கு அரச படைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இதைச் செய்யலாம். ஏனெனில் தற்போது வடக்குக்கிழக்கு சிறீலங்காவின் சிங்கள தேசத்தின் நிர்வாக முறைமைக்குள் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பின் பின் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில்.. இதனை ஏன் தேர்தல் வாக்குறுதியாக்க வேண்டும்.

இன்றைய பிரச்சனை.. உயர் பாதுகாப்பு வலயங்கள்.. மீளக் குடியமர்த்தல்.. சிறைகளில் உள்ள அரசியல்கைதிகள் மற்றும் போராளிகளுக்கு பொதுமன்னிப்பும் விடுதலையும்.. தமிழ் மக்களின் 60 (சிறீலங்காவின் சுதந்திரத்தில் இருந்து) ஆண்டு கால அரசியல் நெருக்கடிக்கு சரத் பொன்சேகா முன் வைக்க உள்ள தீர்வும் தான். இவை குறித்து சரத் பொன்சேகாவோ மகிந்தவோ எந்த உறுதி மொழிகளையும் வழங்கவில்லை.

போராளிகளுக்கு பொதுமக்களுக்கு அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய சிங்களவர்கள் முன்வரவில்லை. ஆனால் ஜே வி பி யினருக்கு அவ்வாறு அளித்தனர். அதெப்படி..???!

தமிழீழ விடுதலைப்புலிகள் எல்லாப் பேச்சுக்களின் போது முன்னிலைப்படுத்திய விடயம் மக்களின் அன்றாட பிரச்சனைக்கு தீர்வு. மக்களின் சுமூக வாழ்வு. அதன் பின் மக்களின் 30 - 35 ஆண்டுகால அரசியல் போராட்டம் தொடர்பான கோரிக்கைகளுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு.

சம்பந்தர்.. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மட்டும் தேர்தல் வாக்குறுதிகளைப் பெற்றுவிட்டு.. மிகுதிக்கு அடுத்த 5 ஆண்டுகள் காத்திருக்கவா சொல்கிறார்.

ஒருவேளை சம்பந்தர் ஆதரவளிப்பதை சிங்கள மக்கள் வெறுத்து சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்காது விட்டால்.. மகிந்த பதவிக்கு வந்தால்..தமிழ் மக்களை யார் காப்பாற்றுவது.. டக்கிளசும்.. கருணாவும்.. பிள்ளையானுமா..??! அவர்கள் இப்படி வாக்குறுதிகளைக் கூட பெற முன்வரவில்லை. அப்படி இருக்க... எப்படி தமிழ் மக்களின் நீண்ட அபிலாசையான அரசியல் உரிமைக்கு தீர்வு சாத்தியமாகப் போகிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிக்கைக்கு நல்ல தீர்வு வழங்கப்படாது ஏற்படுத்தப்படும் தற்காலிக அமைதிச் சூழல் இனப்பிரச்சனையை தீர்க்காது. இதனை 1987 - 90 ஆண்டு கால இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னான இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும்.. அதன் பின்னான அரசியல் சித்துவிளையாட்டுக்களும் உறுதி செய்து நிற்கின்றன. அப்போதும் 1990இல் விடுதலைப்புலிகள் மீள புத்துயிர்ப்புப் பெறும்வரை சிங்கள.. இந்திய தலைமைகள் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு தேடக் கூட முன்வரவில்லை. அந்த நிலை மீளக் கூடாது. மீண்டும் அகதிகள் கனடாவுக்கும்.. அவுஸ்ரேலியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஓடும் நிலை உருவாகாமல் இருக்க வேண்டின்... நிறைய மன மாற்றங்கள் சிங்கள ஆளும் வர்க்கத்திடமும் சிங்கள மக்களிடமும் வர வேண்டும். சம்பந்தன் அதற்கான தயார்படுத்தலை செய்வதாகத் தெரியவில்லை. சாதாரண வங்குரோத்து அரசியல் நடத்தவல்ல.. தேசிய தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் எழுதியது அனைத்தும் உண்மையானவை.மீளக் குடியமர்த்தல் நிவாரணங்கள் வழங்கல் போன்றவற்றை சிறிலங்கா அரசு செய்தால்தான் வெளிநாட்டு உதவிகளை அது பெற முடியும்.அதனடிப்படையிலேயே வரும் தை மாதத்திற்குள்அனைவரும் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று பான்கிமூனுக்கு மகிந்த உறுதியளித்திருந்தார்.தொடர்ந்து முகாமில் வைத்திருந்து நிவாரணம் கொடுக்கிறதிலும் பார்க்க வெளியில் விட்டால் மக்கள் தங்கள் பாட்டை தாங்களே பார்த்துக் கொள்வார்கள்.அரசுக்கும் செலவும் மிச்சம். அத்துடன் வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து தப்புவதுடன் உதவிகளையும் பெறலாம். ஆக ஒப்பந்தம் எழுதப்படாமலே நடைமுறைக்கும் வரப்போகும் விடயங்களுக்கு ஒப்பந்தம் எதற்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி வாயே திறக்கவில்லை.சிறையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன் வைக்காததேன்.இப்படி ஒப்பந்தம் எழுதுவதற்கு பேரம் பேசினோம் என்று சொல்வதற்கு வெட்காமாயில்லை.இதைவிட மக்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டிருந்தால் மக்கள் ஒன்றில் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் அன்றேல் மகிந்தவைப் பழிவாங்குவதற்காக சரத்தை ஆதரிப்பார்கள்.பேரம் பேசுவது போல நடித்தது தங்கள சுய நலத்திற்காக என்றே நினைக்கிறேன்.இம்முறை மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் அதிக ஆர்வம் காட்டவில்லை.மகிந்தவைப் பழிவாங்கவே எண்ணுகின்றனர். ஆனால் இவர்கள் போட்ட உப்புச் சப்பற்ற ஒப்பந்தத்தைப் பார்த்து வெறுத்துப் போய் தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்குவதற்கு சரத் ஒத்துக் கொண்டார் என்று மகிந்த தரப்பு பிரச்சாரம் பண்ணி சரத்திற்கு விழ இருந்த சிங்கள வாக்குகளையும் அள்ளிக் கொண்டு போகிறாரோ தெரியவில்லை.மொத்தத்தில் ஒப்பந்தம் போட்டு சரத் தனக்குத்; தானே மண் அள்ளிப் போடுறாரோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முக்கியமான இடங்களில் படையினர் நிலை கொள்ளுவார்கள்??????????எல்லா இடங்களும் அவங்களுக்கு முக்கியமானவைதான்.சிங்களக் குடியேற்றம் பற்றி எதையும் காணோம்?????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் 10 அம்சங்களில் சிலவற்றைத் தவிர மிகுதி காலப்போக்கில் எந்த அழுத்தமும் இன்றி சிங்கள அரசால் செய்யப்பட்டு ஆக வேண்டிய விடயங்கள். குறிப்பாக வர்த்தகத்தடை மீன்பிடித்தடை.. இவற்றால் சிங்கள அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை அது தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளாது. இதனால் பாதிக்கப்படுவது சிங்களவர்களும் தான்... அவர்களின் வர்த்தக உற்பத்திகளும் தான்.

அரச படைகள் தேசிய பாதுகாப்புக்கருதி கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் என்பதனுள் இருக்கும் சூட்சுமம்.. சம்பந்தருக்குப் புரியாததல்ல. அயர்லாந்தில் ஐ ஆர் ஏயின் ஆயுதப் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பிரிட்டிஷ் படைகள் எப்படி இன்றுள்ளனவோ அப்படி அமையுமா சம்பந்தர்..??! இதை தெளிவாக விளக்க வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிக்கைக்கு நல்ல தீர்வு வழங்கப்படாது ஏற்படுத்தப்படும் தற்காலிக அமைதிச் சூழல் இனப்பிரச்சனையை தீர்க்காது. இதனை 1987 - 90 ஆண்டு கால இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னான இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும்.. அதன் பின்னான அரசியல் சித்துவிளையாட்டுக்களும் உறுதி செய்து நிற்கின்றன. அப்போதும் 1990இல் விடுதலைப்புலிகள் மீள புத்துயிர்ப்புப் பெறும்வரை சிங்கள.. இந்திய தலைமைகள் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு தேடக் கூட முன்வரவில்லை. அந்த நிலை மீளக் கூடாது. மீண்டும் அகதிகள் கனடாவுக்கும்.. அவுஸ்ரேலியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஓடும் நிலை உருவாகாமல் இருக்க வேண்டின்... நிறைய மன மாற்றங்கள் சிங்கள ஆளும் வர்க்கத்திடமும் சிங்கள மக்களிடமும் வர வேண்டும். சம்பந்தன் அதற்கான தயார்படுத்தலை செய்வதாகத் தெரியவில்லை. சாதாரண வங்குரோத்து அரசியல் நடத்தவல்ல.. தேசிய தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்..! :rolleyes::lol:

உண்மை .

நெடுக்காலபோவான் அவர்களது கருத்து ஏற்புடையதே.

மாறிமாறிக் கட்சிகளைச் சந்தித்து, ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர்களுக்கு ஏதோ கிடைக்கப் போகிறது என்ற மாயத்தோற்றப்பாட்டை உருவாக்குவதற்குப் பதிலாக,அதாவது, மோதகத்தையும் - கொழுக்கடையையும் திருப்பித் திருப்பிப் பார்க்கும் குழந்தைபோல பார்ப்பதில் செலவழிக்கும் நேரத்தை கொழும்பு, கண்டி, காலி, அனுராதபுரம், எனச் சிங்களவர்கள் பெரும்பாண்மையாக வாழும் இடங்களில், எப்படிச் சிங்களத்தலைமைகள் தமிழரிடம் பரப்புரைப் பயணத்தை செய்கிறதோ அதேபோல் ஏன் செய்யக் கூடாது. மகிந்தவுடனோ, சரத்துடனோ கதைத்த விடயங்களை வெளிப்படுத்துவதை விடுத்து இலங்கைத் தீவில் அமைதியும் சகவாழ்வும் அபிவிருத்தியும் எப்படி தோன்றம் பெறவைக்கலாம் என்று மீதமிருக்கும் நாட்களைச் செலவழிப்பதனூடாக சிங்கள அரசுகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மகாவம்ச மாயையின் கருத்தியலைக் கொண்டவர்களிடையே மாற்றம் இருக்கிறதா? தமிழரை எதிர்க்கும் சக்திகளாக அரசா? அதில் மக்களின் பங்கென்ன போன்ற பல்வேறு விடயங்களையும் இனங்காணவும் வெளிப்படுத்தவுமான களமாகவும் மாற்றுவதே கூட்டமைப்பின் இன்றைய பணியாக இருக்க வேண்டுமேயன்றிக் கட்சிகளோடு கதைத்துத் தமிழர்களுக்குப் போக்குக் காட்டி சிங்களத்துக்குப் பலம் தேடுவதல்ல என்பதே இந்த அரசியல் தெரியாத அடியேனின் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கடதாசியில் எழுதிவாங்கினால் பெறுமதியில்லை கல்வெட்டிலை பொறிக்க சொல்லுங்கோ.

அரசாங்கங்களிடம் வெளிநாடுகளைச் சாட்சி வைத்து செய்யப்பட்ட உடன்படிக்கைகளே இறுதியில் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்

இருக்கும்போது உனக்கும் பே பே உன் அப்பனுக்கும் பே பே காட்டிட்டு பேயிடுவாங்கள். சரத் அல்ல எவன் வெண்டாலும் தமிழன்

பிறகு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு கொழும்புக்கும் யாழுக்குமென்டு அலையவேணும். சம்பந்தனும் இனி வரும் காலங்களில்

தனித் தவிலடிக்க கிளம்பினாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

Edited by vanangaamudi

இதுவரை வெற்றி பெறக்கூடியதாக கருதப்படும் இரண்டு சிங்கள வேட்பாளர்களும் தமிழர்களுக்கு உரிய அடிப்படைத் தீர்வுகளையேனும் கோடிட்டுக் காட்டவில்லை. பேயுக்கா அல்லது பிசாசுக்கா வாக்களிப்பது என்று அனைவரும் சிந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது வெளிப்படை.

சிவாஜிலிங்கமும் கட்சி / கூட்டமைப்பு ஒன்றில் இருக்க வேண்டிய அடிப்படை கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித் தனமாக செயற்பட்டதாக தோன்றுகிறது. இது வழமையாக தமிழர் மத்தியில் தாராளமாக வெளிப்படும் சந்தேகப் பார்வையை உசுப்பிவிட்டதாக தெரிகிறது. அதே முறையில் தமிழ் காங்கிரசும் பஹிஸ்கரிப்போம் என அறிக்கை விட்டனர்.

கூட்டமைப்பு அவசரப்பட்டு அரைகுறை உறுதி மொழிகளை நம்பி அறிக்கை விடத் தயாராகுகிறது. பேரம் பேச இன்னமும் மூன்று கிழமைகள் இருக்க ஏன் இந்த அவசரமோ தெரியவில்லை. அரைகுறை உறுதி மொழிகளே தமிழர்களுக்குப் போதும் என்ற முடிவோ தெரியவில்லை! இறக்குமுன் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற அவசரமோ எனவும் மக்கள் கதைப்பது காதுகளில் விழுகிறது.

அரச அடிவருடிகளின் மற்றும் மலையகக் கட்சிகள் போல் அடிமைத்தன அரசியல் செய்து எலும்புத் துண்டையாவது நக்குவோம் என பேசுவோரும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

புத்தி ஜீவிகள் என்ற பெயரில் இன்னொரு குழுவினர் அறிக்கை விட்டு தமக்குத் தெரிந்த அரைகுறை ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பஹிஸ்கரிப்பதும் தமிழர்களுக்கு வாக்களிப்பதுவும் ஜனநாயகம் இல்லை என்ற பாணியில் அவர்கள் அறிக்கை. சிவாஜிலிங்கத்தின், தமிழ் காங்கிரசின், டக்ளசின், சித்தார்த்தனின், ஏன் கூட்டமைப்பில் உள்ளவர்களின் தான் தோன்றித் தனத்தை வன்மையாக கண்டித்து இருந்தால் புத்திஜீவிகளை பாராட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் தமிழர்கள் வலிமையான, நேர்மையான, உறுதியான தலைமை இன்றி மீண்டும் நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர்.

நாம் சரியான திசையில் செல்கிறோமா?

எனவே தமிழர்கள் அவசரப்படாது இறுதி சிலதினங்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதே விவேகமானது எனத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் இந்த அதிபர் தேர்தல் தமிழ்போசும் மக்களுக்கு ஒரு அரசியல் இடைத்தங்கல் முகாம் மட்டுமே. பல்லாயிரக்கணக்கான, தேசம் மீடகப் புறப்பட்ட எமது இளையோரை என்னவிதப்பட்டும் மீட்க வேண்டும். அதற்காக எலலாவகையான முயற்சிகளையும் நாம் எடுத்தல்வோண்டும், ஆகவே நாம், சம்பந்தன் ஐயாவுடன் ஒத்துழைப்பதே தற்போது புத்திசாலித்தனம். இங்கு கருத்தெழுதுபவர்கள் சித்திரவதைச் சிறைகளில் வாடும் தமிழ் இளையோரது நிலையினை ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். இதுதவிர பல போராளிகள் சேரிடமில்லாது காடுகளிலும், அயல்நாடுகளிலும் ஒருவேளைச் சோத்துக்கே வழியறியாமல் திண்டாடுகிறார்கள். அவர்கள் மீண்டும் தமது உறவுகளுடன் சேரவேண்டுமாகவிருந்தால் இலங்கைத்தீவில் இராணுவ அச்சுறுத்தல் ஓரளவுக்காவது நீங்கவேண்டும். புலம்பெயர் உறவுகளே, சரத்பொன்சேகாவை முழுமையாக நம்பமுடியாது. எனினும், எமது இளயோரைக் காப்பாற்ற வேண்டுமாகவிருந்தால் சரத்தை ஆதரிப்பதே முறைமை.

சரத் பொன்சேகா வந்தால் எப்படி எமது இளைஞர்களை பாதுகாக்க முடியும் என்று ஒரு கணம் விளக்கமாக எடுத்துச் சொல்வீர்களா...??!

இதே சரத் பொன்சேகாதான்.. செம்மணி மற்றும் யாழ்ப்பாணப்படுகொலைகளின் பின்னால் இருந்து பல நூறு இளைஞர்களைக் கொன்று புதைத்தவர். இவர் எப்படி எமது இளைஞர்களை அதுவும் ஜனாதிபதி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்ய முடியும்.

ஜனாதிபதியாக சரத் வந்ததும்.. தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை அதை அளியுங்கள் அதன் பின்னர் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்பார். நாடாள மன்றத்தேர்தலும் வரும். அதிலும் ஐ தே கட்சி கூட்டணி வென்றுவிட்டது.. என்று வையுங்கள்.. எமக்கு 3 இல் இரண்டு பெரும்பான்மை இன்றி சட்டத்திருத்தங்களை செய்ய முடியாது.. பயங்கரவாதச் சட்டத்தை ஒழிக்க முடியாது.. அதை ஒழிக்காமல் படைகளை விலக்க முடியாது.. அதற்கு நிறைவேற்ற எதிர்கட்சிகள் அனுமதிக்காது என்பார். ஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வந்துவிட்டது என்று வையுங்கள்.. மீண்டும் புலிகளை வளர்க்கிறார்கள் என்று புத்த பிக்குகளை வைத்து ஒரு போராட்ட நாடகத்தை ஆடுவார். என்னால் சிங்கள மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக பெளத்த மதத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பார்..??! அப்போ என்ன செய்வீர்கள். அட வாக்குப் போட்டமே.. அல்லாட விட்டுட்டானே என்று ஒப்பாரியா வைப்பீர்கள்.

மகிந்தவோ சரத்தோ.. உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல. சிங்களத் தலைமைகளை நம்பி தமிழர்கள் மீண்டும் நாசமாகப் போகத்தான் வேண்டுமா. அதைவிடுத்து சர்வதேசத்தை நோக்கி தமிழர்கள் சிலவற்றைச் செய்து காட்ட வேண்டும். தேர்தல்களில் சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் சர்வதேசத்தின் தலையீட்டோடு கூடிய தீர்வுகளை நோக்கி நகர முடியும். அப்படி செய்தால் அன்றி தமிழருக்கு சிங்களம் ஒரு போதும்.. நீதியான நியாயமான தீர்வுகளைக் காண ஒத்துழைக்கா. ஏமாற்றங்களே மிஞ்சும். இறுதியில் சிங்களவர்களும் அவர்களின் தமிழ் அருவருடிகளும் முஸ்லீம் அருவருடிகளும் பணக்காரராகி வயிறு வளர்த்ததே மிஞ்சும். காணமால் போனவர்களும் சிறையில் வாடுபவர்களும் எந்த உய்வையும் பெற முடியாது.

சர்வதேசத் தலையீடு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு தாயகத்தமிழர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு என்பனவோடு சிங்கள மக்களிடம் தமிழர்கள் பற்றிய அவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்ற மனமாற்றம் இன்றி சிறீலங்காவில் தமிழர்களுக்கு விடிவு வரப்போவதில்லை. இந்திய தமிழக பச்சோந்தித்தலைமைகளை நம்பி சிறீலங்காவை தமிழர்கள் அசைக்கவும் முடியாது..! இதுதான் யதார்த்தம்..!

சர்வதேச அனுசரணையுடன் எழுதப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையே கிழித்துப்போட்டு இணைத்தலைமை நாடுகளை பேய்க்காட்டி யுத்தம் முடிந்த கையோடு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று சொன்னவர் தான் இந்த சரத் பொன்சேகா. இறுதில் நடந்தது என்ன...???!

ஏன் நீங்கள் திருந்தவே மாட்டோம்.. அல்லது இதைத்தவிர தமிழர்களுக்கு செய்ய ஏதும் லாய்க்கில்லை என்று முடிவுகட்டி விட்டீர்களா..??! இப்படித்தான் ஒவ்வொரு சிங்கள ஜனாதிபதியையும் தெரிவு செய்யச் சொல்கிறீர்கள். பிரேமதாசாவில் இருந்து.. இதுதான் நடக்கிறது. ஆனால் முடிவில்...????!

பட்டும் திருந்தாத இந்த தமிழ் ஜென்மங்களை எவர் தான் காப்பாற்றுவாரோ...????! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ என்ன செய்யச் சொல்கிறீர்கள்? முள்ளிவாயகால் வரையிலான தமிழினப்படுகொலை சர்வதேசத்தின் நிகழ்ச்சித்திட்டத்துடன்தான் நடைபெற்றது என்பதை தங்களது கருத்தின்மூலம் (நெடுகஸ்) மறுதலிக்கிறீர்களா? இவர்கள் எமக்கு என்னத்தைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? எதிர்காலத்தில் சமூக அமைப்பை கட்டமைக்கக்கூடிய இளையோர்களை சிறைகளிலிருந்து வெளியேற்ற என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? முள்ளிவாய்க்கால் வரைக்குமான படுகொலையினபோது புலம்பெயர் தெருக்களில் நின்று அவர்களைக் காப்பாற்று என மன்றாடிணோமே யாராவது காதிலெடுத்தார்களா? அதன்பின்பு ஐ.நாவில் கொண்டு வந்த போர்க்குற்றத்திற்கான தீர்மானத்தை நீங்கள் கூறும் சர்வதேசத்திற்குள் உள்ளடக்கிய நாடுகள்தானே முறியடித்தது? அவற்றிற்குள் புரட்சிகர நாடுகள் என நாம் கொண்டாடும் கியூபா, வியட்னாம் போன்ற நாடுகளும் சேர்ந்துநின்றதே எம்மால் என்ன செய்ய முடிந்தது? மகிந்த இப்போது, இனவழிப்புத் தேரை வேகமாக ஓட்டுகின்ற கொடுமையான போர்வெறிச் சாரதி. அத்தேரது வேகத்தை ஓரளவிற்காவது குறைக்கவேண்டுமாகவிருந்தால் ஆடசிமாற்றம் தேவை. மாறாக, சரத் வந்து அற்புதங்கள் ஏதாவது நடாத்துவார் என நான் யாருக்கும் கூறவரவில்லை. நாளை தேசத்தின் எமது இளையோர் சிறைகளில் வெந்து சுண்ணாம்பாகிய பின்பு, நாங்கள் அந்தநேரம் பிழைவிட்டிட்டம் என அழுவதிலும் பார்க்க ஒருமுறை முயன்றுபார்ப்பேமே.

முள்ளிவாய்க்கால் வரை படுகொலைகளில் சர்வதேசத்தின் பாராமுகமான பங்களிப்பு என்பது இருந்தது. ஆனால் அந்த நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றதில் தமிழர்கள் எமக்கும் பொறுப்பு உண்டு. புலிகளை பயங்கரவாதிகள் என்ற போது அதனை ஆணித்தரமாக மறுத்து அவர்கள் மீதான தமிழ் மக்களுக்குள்ள அவசியத்தை தமிழ் மக்கள் சரியான வகையில் வெளி உலகிற்கு உணர்த்த முன்வரவில்லை. ராஜீவ் காந்தி ஈழத்தில் செய்த படுகொலைகள் தொடர்பில் வெளி உலகில் வாழும் மக்களுக்கு தெரியவே தெரியாது. அந்ததக் காலக்கட்டங்களில் தமிழர்கள் இவற்றை வெளி உலகிற்கு கொண்டு வருவதை ஒரு கட்டமைப்பூடு செய்து வந்திருந்தால்.. ராஜீவ் கொலையை மையப்படுத்தி எழுப்பட்ட பல சிக்கல்களில் இருந்து தமிழர்கள் தம்மை நியாயப்படுத்திக்காட்டி வெளியேறி உலகின் அனுதாபத்தை ஈர்க்க வாய்ப்புக் கிட்டி இருக்கும். இன்றும் அதே தவறைத்தான் செய்கின்றோம்.

அன்று போல் தான் இன்றும். அது தமிழர்கள் விட்ட மிகப்பெரிய தவறும் கூட. அதனால் தான் சர்வதேசமும் சில நகர்வுகளை சிக்கல்கள் இன்றி நாசுக்காகச் செய்ய முடிந்தது. இருந்தாலும் இறுதியில் புலம்பெயர் நாடுகள் எங்கும் நடைபெற்ற போராட்டங்கள் சர்வதேசத்தை கொஞ்சம் கருசணை காட்டச் செய்தது. ஆனாலும் மீண்டும் அடக்கிப் போய் அமைதிப்பட்டுள்ள.. தமிழர்களால்.. சர்வதேசக் கருசணையும் தமிழர்கள் மீதான அக்கறையும் பார்வையும் தீவிரம் இழந்துள்ளன.

இந்த நிலை தமிழர்களைப் பொறுத்தவரை ஆபத்தானது.

சரத்துக்கோ.. மகிந்தவுக்கோ வெளி அழுத்தம் கொடுக்காமல் எதனையும் உள்ளூர் அரசியல் அழுத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாதிக்க முடியாது. அதில் இளைஞர்களின் விடுதலையும் அடங்கும். இந்தியாவின் தலையீட்டோடு தான் 1987 இல் பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அது குமரப்பா, புலேந்தி அம்மான் கைதோடு சிங்கள அரசால் மீறப்பட்டிருந்தது. அண்மையில் கூட ஐநா தான் சிறுவர் போராளிகள் என்று கூறி சில நூறு இளையவர்களை மீட்டெடுத்து பெற்றோரிடம் கையளித்துள்ளது. இதில் சிறீலங்காவிற்கு வெளியில் இருந்தான மனித உரிமை அமைப்புக்கள் தந்த அழுத்தங்களே அதிகம் பங்களிப்புச் செய்துள்ளது. இந்தளவுக்குக் கூட உள்ளூர் அரசியல் கொண்டு அழுத்தங்களளை சிங்கள அரசுகள் மீது பிரயோகிக்க முடியாத நிலையில்.. சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவோ மகிந்தவுக்கு வாக்களிக்கவோ கேட்பதன் மூலம் எதைச் சாதிக்க முடியும்..??! இந்தக் கேள்விக்கு விடையின்றி.. மக்களை எப்படி வாக்களிக்கக் கோர முடியும்..??! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கினம். அதாவது தேர்தலை புறக்கணிக்காமல் ஆராவது ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று.

தமிழ் மக்கள் மெல்ல மெல்ல இனி அரசியலில நம்பிக்கை வைத்து அதில கலந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் வரை படுகொலைகளில் சர்வதேசத்தின் பாராமுகமான பங்களிப்பு என்பது இருந்தது. ஆனால் அந்த நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றதில் தமிழர்கள் எமக்கும் பொறுப்பு உண்டு. புலிகளை பயங்கரவாதிகள் என்ற போது அதனை ஆணித்தரமாக மறுத்து அவர்கள் மீதான தமிழ் மக்களுக்குள்ள அவசியத்தை தமிழ் மக்கள் சரியான வகையில் வெளி உலகிற்கு உணர்த்த முன்வரவில்லை. ராஜீவ் காந்தி ஈழத்தில் செய்த படுகொலைகள் தொடர்பில் வெளி உலகில் வாழும் மக்களுக்கு தெரியவே தெரியாது. அந்ததக் காலக்கட்டங்களில் தமிழர்கள் இவற்றை வெளி உலகிற்கு கொண்டு வருவதை ஒரு கட்டமைப்பூடு செய்து வந்திருந்தால்.. ராஜீவ் கொலையை மையப்படுத்தி எழுப்பட்ட பல சிக்கல்களில் இருந்து தமிழர்கள் தம்மை நியாயப்படுத்திக்காட்டி வெளியேறி உலகின் அனுதாபத்தை ஈர்க்க வாய்ப்புக் கிட்டி இருக்கும். இன்றும் அதே தவறைத்தான் செய்கின்றோம்.

இனிமேலாவது........?

Edited by kalaivani

  • தொடங்கியவர்

சரத்பொன்சேகா சம்பந்தருக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ள ஆவணம் இங்கே இணைக்கப்படுகின்றது. இந்த ஆவணத்தில் சரத் பொன்சேகா செய்ய போவதாக வாக்குறுதியளித்துள்ள வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் குழுவில் உள்ளோர் பட்டியலில் பொது மக்கள் சார்பாக அல்லது கூட்டமைப்பு சார்பாக எவரும் இல்லை என்பதுடன் மூன்றாம் தரப்பு அல்லது மனித உரிமை அமைப்புக்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sarath%20docu3_0.jpeg

ஏனைய பக்கங்களுக்கு http://www.eelanatham.net/story/sarath%20fonseka%27s%20signed%20document

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலாவது........?

இனிமேலாவது............

தமிழினம் தனக்கிடையேயான இழுபறிகளை தூரவைத்துவிட்டு, ஒன்றிணையுமா? அல்லது தனக்குள் மோதியும் விமர்சித்தும் அழியுமா? இதுதான் விதியா? இனியாவது ஒரு விதி செய்ய வல்லோராவோமா? எம்மை நாமே முதலில் சுயவிமர்சனத்துக்குட்படுத்துவோம் . எத்தனைபேர் தேசியத்துக்கான கடமையை உளத்தூய்மையோடு செய்தோமென்று எமை நாமே கேட்போம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில இருந்து என்ன தெரியுதெண்டால் என்கட ஆக்களில இரண்டு இலட்சம் பேரை போட்டுத்தள்ளிட்டு சும்மா ஒரு பேப்பரில கையெழுத்து போட்டால் சரி, நம்பிடுங்கள். மொக்கு கூட்டம். அது சரி படத்தில எல்லா ரப்பர் ஸ்டாம்புகளும் நிப்பது கண் கொள்ளா காட்சி. இந்த ரப்பர் ச்டாம்புகளிண்ட முதலாளி புலியோ, சிங்களவனோ இல்லை. இந்திய காந்தி குடும்பம். அது தான் ஒவ்வொரு முறையும் ஓடிப்போய் சீல் குத்திக்கொண்டு வருவினம். இதுகளை பத்தியெல்லாம் செய்தி போட்டு நேரத்தை வீனாக்காதீங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.