Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும் - பருத்தியன்

Featured Replies

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.

இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும்.

தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்டுமென்ற காட்டமான எண்ணமாகவே பொன்சேகாவுக்கான இவர்களின் ஆதரவு அமையும் என்பதே உண்மை.

இது இவ்வாறிருக்க, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும்... அதில் யார் வெற்றி பெற்றாலும்... அதன் பின் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான விடயங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியானாலும், சரத்பொன்சேகா புதிதாக ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்களினதும் அவர்களின் பின்னாலுள்ள சர்வதேச சக்திகளினதும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியே தமிழர் பிரச்சினை கையாளப்பட இருக்கின்றது. இது எந்தளவுக்கு தமிழருக்கு சார்பானதாகவும் நியாயமானதுமாகவும் அமையுமென்பது மிகவும் சந்தேகத்துக்குரியதே.

தமிழர்களின் பேரம்பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும், ஆயுதப் போராட்டமும் (தற்காலிகமாக) இல்லையென்று ஆனநிலையில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள வல்லாதிக்கம் இணங்கப் போவதில்லை. தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது.

தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். சிங்கள தேசத்திடமிருந்து தமிழருக்கான நியாயமான தீர்வு எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கு பட்டறிந்துள்ளார்கள். இருப்பினும், சர்வதேச ஆதரவுகளினைத் திரட்டி அதன்மூலம் தமக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழினம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள இந்த கால இடைவெளியினை தகுந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் திரைமறை வேலைகளில் சர்வதேசம் ஈடுபட ஆரம்பித்துள்ளது. சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில், தமது வல்லாதிக்க சுயநலன்களுக்கு ஏற்றவாறாக தமக்கு எப்பொழுதுமே சாதகமாக இருக்கக் கூடியவாறான ஒரு ஆட்சி இலங்கை தேசத்தில் அமைந்தால் போதுமானது என்ற சுயநல நோக்கத்துடனேயே செயற்படுகின்றது. தமிழர்களின் அபிலாசைகள், நியாயமான தீர்வு, சுதந்திரமான வாழ்க்கை என்பதெல்லாம் சர்வதேச நாடுகளினைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சம்தான். தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து இலங்கை அரசின்மீது தமது அழுத்தங்களினை பல்வேறு வழிகளில் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது சர்வதேசம். அவை தமிழர்மீதான அக்கறையினால்தான் என்று நாம் நினைத்தோமானால், அது எமது அறிவீனம்தான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைகளினைப் பொறுத்தவரையில் மகிந்தவை விட சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதியானால் தமக்கு சாதகமாக இருப்பார் என்று கருதுகின்றன. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட விடயத்தில் கூட பல சர்வதேச நாடுகளின் மறைமுக தொடர்புகள் இருப்பதாகவே கருதப்படுகின்றது. மறுபக்கத்தில் மகிந்தவுக்கு பின்புலமாக சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் என இன்னொரு சர்வதேசக் கூட்டணி துணை நிற்கின்றது. இவ்வாறு தற்போதைய இலங்கை அரசியலில் சர்வதேச பின்னணி செயற்பாடுகள் தொடர்கின்றன.

தேர்தலின் பின் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதிக்கு பிரதான கடமையாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதென்பதே அமையப் போகின்றது. ஆனால், ஜனாதிபதியே விரும்பினாலும் தமிழருக்கு நியாயமான தீர்வினை கொடுப்பதற்கு சிங்கள இனவாதிகள் இடங்கொடுக்கமாட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, தமிழர்களிற்கான தீர்வு என்ற பெயரில் உருப்படியில்லாத தீர்வொன்றினை முன்வைத்து அதன் மூலம் தமிழர்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் உத்வேகத்தினை குறைத்து காலப்போக்கில் விடுதலை உணர்வினையே இல்லாமற்செய்துவிடும் சாமர்த்தியத்தனமான திட்டமே வகுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களுக்கு இதைவிட சிறந்த தீர்வு வேறொன்றுமில்லை என்று பாராட்டுத் தெரிவித்து அதை அங்கீகரிப்பதற்கு சிங்களத்தின் பின்னால் நிற்கும் சர்வதேச நாடுகளும் தயாராகிவருகின்றன. பெரும் இழப்புக்களைச் சந்தித்து நொடிந்து போய் சுதந்திரத்தினை,உரிமைகளை இழந்து இன்றும் அகதிகளாய் அலையும் அவலத்துடன் அல்லாடும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை கூட்டுச்சேர்ந்து அழித்தது மட்டுமல்லாமல் இப்போது அவர்களின் சுயநலன்களுக்காக தமிழர் தீர்வு விடயத்திலும் பெரும் வரலாற்றுத் தவறினை இழைப்பதற்கு சர்வதேசம் தயாராகி நிற்பது நியாயமானதா? நீதியானதா??

தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை புரிந்துகொண்டு அவர்களுக்கான தீர்வினை முன்வைப்பதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அதையும் மீறி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காக சுயநலப்போக்குடன் சிங்களத்துடன் கைகோர்க்குமானால், அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்.

சர்வதேசத்தின் நீதியினை எதிர்பார்த்திருக்கும் தமிழர்களுக்கு சர்வதேசமும் சிங்களமும் சேர்ந்து இவ்வாறான துரோகத்தினை இழைப்பதற்கு உலகம் பூராவுமுள்ள உலகத்தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர் தமிழர்களோடு தமிழகத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என உலகம் பூராவும் பரவி வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து தமிழருக்கான நீதிக்காக குரல் கொடுக்கவேண்டிய தருணமிது. ஜாதி, மத, கட்சி என இன்னபிற வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் அணிதிரள்வோம்!

"நாம் தமிழர்" என்ற ஒரே கோட்பாட்டுடன் அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து குரல்கொடுப்போமானால் இந்த உலகம் அதற்கு பணிந்துதான் ஆக வேண்டும். அந்த நிலையை உருவாக்குவோம்! தமிழீழம் தன்னை எமதாக்குவோம்!! தமிழருக்கான நீதியை நிலை நாட்டுவோம்!!!

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்-

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பருத்தியன் யதார்த்தமான உங்கள் கட்டுரைக்கு.புலம்பெயர் தமிழர்கள் பெரும் அரசியல் சக்திகளாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். இதனை எமக்கு சாதகமாக திசை திருப்பும் போது மேற்குலக்கு வேறு தெரிவு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

நன்றி தங்களது எழுத்துக்கு

கவனம்

யாராவது பொன்னம்பலம் காலத்துக்கு நீங்கள் திரும்பிப்போய்விட்டதாக வாங்கப்போகிறார்கள்

தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். சிங்கள தேசத்திடமிருந்து தமிழருக்கான நியாயமான தீர்வு எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கு பட்டறிந்துள்ளார்கள். இருப்பினும், சர்வதேச ஆதரவுகளினைத் திரட்டி அதன்மூலம் தமக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழினம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைகளினைப் பொறுத்தவரையில் மகிந்தவை விட சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதியானால் தமக்கு சாதகமாக இருப்பார் என்று கருதுகின்றன. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட விடயத்தில் கூட பல சர்வதேச நாடுகளின் மறைமுக தொடர்புகள் இருப்பதாகவே கருதப்படுகின்றது. மறுபக்கத்தில் மகிந்தவுக்கு பின்புலமாக சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் என இன்னொரு சர்வதேசக் கூட்டணி துணை நிற்கின்றது. இவ்வாறு தற்போதைய இலங்கை அரசியலில் சர்வதேச பின்னணி செயற்பாடுகள் தொடர்கின்றன.

இதற்கு மேலாக அமெரிக்காவும் தன் பங்கிற்கு வெளிப்படையாகவே பொன்சேகாவை ஆதரிக்கும் பாணியில் கருத்து தெரிவிதுள்ளது.

மிகவும் ஆழ்மான நுட்பமான உண்மைகளை தொட்டுச் செல்லும் கட்டுரை.

தமிழர் பட்ட மரமாகி நிற்கும் வேளையில் அருகில் வருகின்றது மேற்குலகம்,உதவ அல்ல.இது மிக அருமையான கருவேப்பிலை மரம் என்றறிந்து.

  • தொடங்கியவர்

நன்றி பருத்தியன் யதார்த்தமான உங்கள் கட்டுரைக்கு.புலம்பெயர் தமிழர்கள் பெரும் அரசியல் சக்திகளாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். இதனை எமக்கு சாதகமாக திசை திருப்பும் போது மேற்குலக்கு வேறு தெரிவு இருக்காது.

நன்றி நுணாவிலன். நீங்கள் சொல்வது உண்மைதான்... இலங்கை அரசு அச்சப்படும் அளவுக்கு புலம்பெயர்மக்களினால் அரசியல்,இராஜதந்திர நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் .... ஒற்றுமை என்ற விடயம் மேலும் தேவைப்படுகின்றது.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

நன்றி தங்களது எழுத்துக்கு

கவனம்

யாராவது பொன்னம்பலம் காலத்துக்கு நீங்கள் திரும்பிப்போய்விட்டதாக வாங்கப்போகிறார்கள்

நன்றி விசுகு........

தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்பதற்கு தமிழர்கள் காலம் பார்க்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். எப்பொழுதும் தன்மானத்துடன் தலை நிமிர்வோம்!

நட்புடன்...பருத்தியன்

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்

இதற்கு மேலாக அமெரிக்காவும் தன் பங்கிற்கு வெளிப்படையாகவே பொன்சேகாவை ஆதரிக்கும் பாணியில் கருத்து தெரிவிதுள்ளது.

மிகவும் ஆழ்மான நுட்பமான உண்மைகளை தொட்டுச் செல்லும் கட்டுரை.

தமிழர் பட்ட மரமாகி நிற்கும் வேளையில் அருகில் வருகின்றது மேற்குலகம்,உதவ அல்ல.இது மிக அருமையான கருவேப்பிலை மரம் என்றறிந்து.

நன்றி விமல்...

நாம் பட்ட மரமல்ல... வெட்ட வெட்ட தழைக்கும் மரம் என்று காட்டுவோம்!

Edited by பருத்தியன்

நன்றி நுணாவிலன். நீங்கள் சொல்வது உண்மைதான்... இலங்கை அரசு அச்சப்படும் அளவுக்கு புலம்பெயர்மக்களினால் அரசியல்இஇராஜதந்திர நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் .... ஒற்றுமை என்ற விடயம் மேலும் தேவைப்படுகின்றது.

எல்லோரும், எங்கும் ஒற்றுமையாக செயற்பட்டதும் இல்லை.

இனியும் ஒற்றுமையாக செயற்படப்போவதும் இல்லை.

ஒன்று படுபவர்கள், ஆக்க பூர்வமாக செயற்படுவோம்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்டுமென்ற காட்டமான எண்ணமாகவே பொன்சேகாவுக்கான இவர்களின் ஆதரவு அமையும் என்பதே உண்மை.

இது இவ்வாறிருக்க, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும்... அதில் யார் வெற்றி பெற்றாலும்... அதன் பின் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான விடயங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியானாலும், சரத்பொன்சேகா புதிதாக ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்களினதும் அவர்களின் பின்னாலுள்ள சர்வதேச சக்திகளினதும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியே தமிழர் பிரச்சினை கையாளப்பட இருக்கின்றது. இது எந்தளவுக்கு தமிழருக்கு சார்பானதாகவும் நியாயமானதுமாகவும் அமையுமென்பது மிகவும் சந்தேகத்துக்குரியதே.

நல்ல கட்டுரை, நிதர்சனமான வரிகள் பருத்தியன். :wub:

Edited by தமிழ் சிறி

தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். சிங்கள தேசத்திடமிருந்து தமிழருக்கான நியாயமான தீர்வு எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கு பட்டறிந்துள்ளார்கள். இருப்பினும், சர்வதேச ஆதரவுகளினைத் திரட்டி அதன்மூலம் தமக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழினம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

மிகவும் அருமையானதும் உண்மையுமான கட்டுரை பருத்தியன். ஒற்றுமையாகவிருக்கக்கூடிய தமிழர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் எமக்கு நிச்சயம் ஒரு விடிவு பிறக்கும்.

...

தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்...

...சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில், தமது வல்லாதிக்க சுயநலன்களுக்கு ஏற்றவாறாக தமக்கு எப்பொழுதுமே சாதகமாக இருக்கக் கூடியவாறான ஒரு ஆட்சி இலங்கை தேசத்தில் அமைந்தால் போதுமானது என்ற சுயநல நோக்கத்துடனேயே செயற்படுகின்றது. தமிழர்களின் அபிலாசைகள், நியாயமான தீர்வு, சுதந்திரமான வாழ்க்கை என்பதெல்லாம் சர்வதேச நாடுகளினைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சம்தான். தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து இலங்கை அரசின்மீது தமது அழுத்தங்களினை பல்வேறு வழிகளில் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது சர்வதேசம். அவை தமிழர்மீதான அக்கறையினால்தான் என்று நாம் நினைத்தோமானால், அது எமது அறிவீனம்தான்.

... ஜனாதிபதியே விரும்பினாலும் தமிழருக்கு நியாயமான தீர்வினை கொடுப்பதற்கு சிங்கள இனவாதிகள் இடங்கொடுக்கமாட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, தமிழர்களிற்கான தீர்வு என்ற பெயரில் உருப்படியில்லாத தீர்வொன்றினை முன்வைத்து அதன் மூலம் தமிழர்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் உத்வேகத்தினை குறைத்து காலப்போக்கில் விடுதலை உணர்வினையே இல்லாமற்செய்துவிடும் சாமர்த்தியத்தனமான திட்டமே வகுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை புரிந்துகொண்டு அவர்களுக்கான தீர்வினை முன்வைப்பதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அதையும் மீறி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காக சுயநலப்போக்குடன் சிங்களத்துடன் கைகோர்க்குமானால், அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்...

நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்பு உங்களுக்கே உரிய நிதானமான எழுத்துக்களின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி பருத்தியன்.

நீங்கள் குறிபிட்டு இருந்த ஒவ்வொரு கருத்துக்களும் ஆழமானவை, அர்த்தமானவை. நன்றிகள் பல... :rolleyes:

  • தொடங்கியவர்

எல்லோரும், எங்கும் ஒற்றுமையாக செயற்பட்டதும் இல்லை.

இனியும் ஒற்றுமையாக செயற்படப்போவதும் இல்லை.

ஒன்று படுபவர்கள், ஆக்க பூர்வமாக செயற்படுவோம்.

நிச்சயமாக... முடிந்தவரை ஒற்றுமையுடன் ஆக்கபூர்வமாக செயற்படுவோம்.

நன்றி கலைவாணி

நல்ல கட்டுரை, நிதர்சனமான வரிகள் பருத்தியன். :rolleyes:

மிக்க நன்றி தமிழ்சிறி :unsure:

மிகவும் அருமையானதும் உண்மையுமான கட்டுரை பருத்தியன். ஒற்றுமையாகவிருக்கக்கூடிய தமிழர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் எமக்கு நிச்சயம் ஒரு விடிவு பிறக்கும்.

மிக்க நன்றி தமிழச்சி...நிச்சயம் ஒருநாள் விடியும். அதற்காக ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்!

  • தொடங்கியவர்

நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்பு உங்களுக்கே உரிய நிதானமான எழுத்துக்களின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி பருத்தியன்.

நீங்கள் குறிபிட்டு இருந்த ஒவ்வொரு கருத்துக்களும் ஆழமானவை, அர்த்தமானவை. நன்றிகள் பல... :rolleyes:

ரொம்ப நன்றி குட்டி.... :unsure:

சகல பக்கங்களிலும் குழப்பங்கள் நிறைந்திருந்த வேளையில் ...நானும் எதையாவது எழுதித் தொலைத்து குழப்புவதற்கு விரும்பவில்லை. அதனால்தான் இந்த கால இடைவெளி.

பேரம் பேசும் வலுவற்ற தமிழர் மீது எத்தகைய தீர்வினை முன்வைத்தாலும் தற்காலிகமாகவேனும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. " பேரினவாதம் ஒரு மண்ணாங்கட்டியையும் தராது" என சிவராம் சொன்ன கருத்துத்தான் ஈழத் தமிழருக்கு எக்காலத்திலும் பொருந்தும்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்குத் தடைபோடும் எண்ணம் இலங்கையரசிற்று உண்டு. அதற்கு பொன் சேகா, மகிந்த எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடைபெறப் போகும் நிகழ்வு. கட்டுரையின்படி மகிந்தவே மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்சொன்ன நாடுகள் தீர்வினை முன்வைக்கச் செய்யும் அது கூட இந்தியாவின் தேவைகளுக்கான ஒன்றுதான்.

இலங்கையைப் பொறுத்தளவில் அமெரிக்க ஐரோப்பியநாடுகளென்றும் சீன இந்திய பாக்கிஸ்தானிய கூட்டணிகள் என்றும் தமிழரால் பிரித்துப் பார்க்க முடியாது. எல்லாமே ஒன்றுதான். ஆக இது மொத்தத்தில் தமிழருக்கு இதில் என்ன கிடைக்கக் கூடியதாக இருக்கிறதோ. அதைப் பெற்று அவர்களுகான (சுதந்திர ) நடமாட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழருக்காக போராடுவதற்கல்ல, கதைப்பதற்குக் கூட இன்று உலகில் எவரும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போதைக்கு கூட்டமைப்பினர் எந்தவழி தளத்தில் உள்ள தமிழரை கரை சேர்க்க நினைக்கிறார்களோ அந்த வழிதான் சிறந்தது.

போராட்டத்திற்கான அனைத்துப் பாதைகளும் தமிழருக்கு எதிராக இருக்கின்றன. தடுமாற்றத்தில் களத்திலும் பிளவுற்ற நிலையில் புலத்திலும் தமிழர் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் சர்வதேசத்திட்டத்தினை தற்காலிகமாகவேனும் ஏற்பதுதான் ஈழத்தில் இருக்கும் தமிழருக்குச் சிறந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பே மூன்றாக நிற்கின்றது இதற்குள் தமிழர் எல்லாரும் ஒற்றுமை?

எழுத்தில் எதுவும் எழுதலாம் நடைமுறையில் சாத்தியம்?

ஏனேனில் எழுத்திற்கும் நடைமுறைக்கும் தூரம் அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் பேரம்பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும், ஆயுதப் போராட்டமும் (தற்காலிகமாக) இல்லையென்று ஆனநிலையில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள வல்லாதிக்கம் இணங்கப் போவதில்லை. தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது.

தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை புரிந்துகொண்டு அவர்களுக்கான தீர்வினை முன்வைப்பதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அதையும் மீறி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காக சுயநலப்போக்குடன் சிங்களத்துடன் கைகோர்க்குமானால், அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்.

"தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது."

இதுதான் நாங்கள் எமது பிரச்னையை விளங்கிக்கொண்ட தன்மை...எங்களுக்கு ஆகக்குறைந்தது என்பதற்காக அது அவர்களுக்கு பொருத்தமானதா என்று யோசித்தனாங்களா? வடக்கு-கிழக்கு இணைப்பே கேள்விக்குறியாக உள்ளபோது அதற்கு மேல் அதற்கு விசேட அதிகாரம் எதிர்பார்ப்பது என்னவகையில் ஆகக்குறைந்தது என்கிற வரிகளுக்கு வரும்? நாங்கள் போராடினோம் என்பதற்காக சிங்களவர்கள் மாறவேண்டும், மாறியிருக்க வேண்டும் என்று எதிர்பாக்கலாம்? எனக்கு இதற்கு மேல் செல்ல தெரியவில்லை...

"அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும"

சர்வதேசம் இளைக்கவிருக்கும் வரலாற்று தவறுக்கு தமிழரின் பதில் ஆயுதப்போராட்டம்? :rolleyes:

தமிழர் என்றால் தலையில் ஒன்றுமில்லாதவர்கள் என்று என்று நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது அதுதான் உண்மையா? தவறென்றால் பதில் தரவும்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் ஆகக்கூடியது என்ன தருவார்கள், அவர்களிடம் ஆகக் குறைந்தபட்டம் என்ன கேட்கலாம் என்பதை விட்டுவிட்டு, தமிழர்கள் நிரந்தர அமைதியுடன் வாழ குறைந்தபட்சம் என்ன தேவை என்று உடன்படவேண்டும். சிங்களவர்க்ள் என்ன தருவார்கள், தரமாட்டார்கள் என்ற நிபந்தனைகள் எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிக்கக்கூடாது.

  • தொடங்கியவர்

பேரம் பேசும் வலுவற்ற தமிழர் மீது எத்தகைய தீர்வினை முன்வைத்தாலும் தற்காலிகமாகவேனும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. " பேரினவாதம் ஒரு மண்ணாங்கட்டியையும் தராது" என சிவராம் சொன்ன கருத்துத்தான் ஈழத் தமிழருக்கு எக்காலத்திலும் பொருந்தும்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்குத் தடைபோடும் எண்ணம் இலங்கையரசிற்று உண்டு. அதற்கு பொன் சேகா, மகிந்த எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடைபெறப் போகும் நிகழ்வு. கட்டுரையின்படி மகிந்தவே மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்சொன்ன நாடுகள் தீர்வினை முன்வைக்கச் செய்யும் அது கூட இந்தியாவின் தேவைகளுக்கான ஒன்றுதான்.

இலங்கையைப் பொறுத்தளவில் அமெரிக்க ஐரோப்பியநாடுகளென்றும் சீன இந்திய பாக்கிஸ்தானிய கூட்டணிகள் என்றும் தமிழரால் பிரித்துப் பார்க்க முடியாது. எல்லாமே ஒன்றுதான். ஆக இது மொத்தத்தில் தமிழருக்கு இதில் என்ன கிடைக்கக் கூடியதாக இருக்கிறதோ. அதைப் பெற்று அவர்களுகான (சுதந்திர ) நடமாட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழருக்காக போராடுவதற்கல்ல, கதைப்பதற்குக் கூட இன்று உலகில் எவரும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போதைக்கு கூட்டமைப்பினர் எந்தவழி தளத்தில் உள்ள தமிழரை கரை சேர்க்க நினைக்கிறார்களோ அந்த வழிதான் சிறந்தது.

போராட்டத்திற்கான அனைத்துப் பாதைகளும் தமிழருக்கு எதிராக இருக்கின்றன. தடுமாற்றத்தில் களத்திலும் பிளவுற்ற நிலையில் புலத்திலும் தமிழர் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் சர்வதேசத்திட்டத்தினை தற்காலிகமாகவேனும் ஏற்பதுதான் ஈழத்தில் இருக்கும் தமிழருக்குச் சிறந்தது.

இறைவன்.... தங்கள் யதார்த்தமான கருத்துக்களுக்கு நன்றிகள்.

ஆனால் நீங்கள் தெரிவித்த கருத்துக்களில், நான் சிவப்பெழுத்துக்களால் குறியிட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை நாம் நம் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முன்... நமக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட முன் வேண்டுமானால் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இவ்வளவு இழப்புக்களையும் தாங்கி, இப்படி ஒரு தீர்வை பெறவேண்டிய அவசியம் இல்லை.

நம் மாவீரர்களுக்கும்,இழந்த மக்களுக்கும் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தியாகங்கள் என்றும் வீண்போனதில்லை.

நாம் நிச்சயம் வெல்வோம் என்பது உறுதி!

(அதை நான் நம்புகின்றேன்..........நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது!!!???)

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பே மூன்றாக நிற்கின்றது இதற்குள் தமிழர் எல்லாரும் ஒற்றுமை?

எழுத்தில் எதுவும் எழுதலாம் நடைமுறையில் சாத்தியம்?

ஏனேனில் எழுத்திற்கும் நடைமுறைக்கும் தூரம் அதிகம்.

உண்மைதான் அர்ஜூன் ..... ஆனாலும் எழுத்துக்களும் பல விஷயங்களை நிறைவேற்றிய வரலாறுகளும் உண்டு, உள்ளன.

ஒற்றுமை என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில், அவர்களது விடுதலை உணர்வுகளின் மூலம் தோன்றவேண்டியது. அந்த் உணர்வுகளை தோற்றுவிக்கும் வலிமை எழுத்துக்களுக்கு உண்டு எனும் நம்பிக்கையில்தான் என்னைப் போன்றவர்கள் இன்னும் எழுதுகின்றார்கள்.

தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் அர்ஜூன்.

  • தொடங்கியவர்

"தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது."

இதுதான் நாங்கள் எமது பிரச்னையை விளங்கிக்கொண்ட தன்மை...எங்களுக்கு ஆகக்குறைந்தது என்பதற்காக அது அவர்களுக்கு பொருத்தமானதா என்று யோசித்தனாங்களா? வடக்கு-கிழக்கு இணைப்பே கேள்விக்குறியாக உள்ளபோது அதற்கு மேல் அதற்கு விசேட அதிகாரம் எதிர்பார்ப்பது என்னவகையில் ஆகக்குறைந்தது என்கிற வரிகளுக்கு வரும்? நாங்கள் போராடினோம் என்பதற்காக சிங்களவர்கள் மாறவேண்டும், மாறியிருக்க வேண்டும் என்று எதிர்பாக்கலாம்? எனக்கு இதற்கு மேல் செல்ல தெரியவில்லை...

"அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும"

சர்வதேசம் இளைக்கவிருக்கும் வரலாற்று தவறுக்கு தமிழரின் பதில் ஆயுதப்போராட்டம்? :)

தமிழர் என்றால் தலையில் ஒன்றுமில்லாதவர்கள் என்று என்று நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது அதுதான் உண்மையா? தவறென்றால் பதில் தரவும்....

முதலில் உங்களின் கடைசி வசனத்திற்கு பதில் தருகின்றேன்...

தமிழன் என்றால் "தன்மானமுள்ளவன்". தன்மானமுள்ள ஒருவன் தனக்கு பொருத்தமான, சுதந்திரமான, தன்மானத்துடன் கூடிய வாழ்க்கையையே வாழ விரும்புவானே ஒழிய... மற்றவன் தீர்மானிக்கும் முறைப்படி அடிமை வாழ்வு வாழ விரும்பமாட்டான். அது சர்வதேசம் ஆக இருந்தாலும் சரி... சிங்களவனாக இருந்தாலும் சரி.

வாழ்ந்தால், தன்மானத்துடன் வாழ வேண்டும்... இல்லையெனில் போராடிச் சாகவேண்டும் என்ற சுத்தத் தமிழனின் தன்மானக் கோட்பாடுகளின் படி , ஆயுதப் போராட்டமும் ஒரு தேர்வாகத்தான் அமையும்.

  • தொடங்கியவர்

சிங்களவர்கள் ஆகக்கூடியது என்ன தருவார்கள், அவர்களிடம் ஆகக் குறைந்தபட்டம் என்ன கேட்கலாம் என்பதை விட்டுவிட்டு, தமிழர்கள் நிரந்தர அமைதியுடன் வாழ குறைந்தபட்சம் என்ன தேவை என்று உடன்படவேண்டும். சிங்களவர்க்ள் என்ன தருவார்கள், தரமாட்டார்கள் என்ற நிபந்தனைகள் எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிக்கக்கூடாது.

நாம்தான் எமது அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய தீர்வினை தேர்வுசெய்ய வேண்டும். சிங்களம் தானாக முன்வந்து ஒன்றையும் தரப்போவதில்லை.நன்றி கிருபன் தங்கள் கருத்துக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் உங்களின் கடைசி வசனத்திற்கு பதில் தருகின்றேன்...

தமிழன் என்றால் "தன்மானமுள்ளவன்". தன்மானமுள்ள ஒருவன் தனக்கு பொருத்தமான, சுதந்திரமான, தன்மானத்துடன் கூடிய வாழ்க்கையையே வாழ விரும்புவானே ஒழிய... மற்றவன் தீர்மானிக்கும் முறைப்படி அடிமை வாழ்வு வாழ விரும்பமாட்டான். அது சர்வதேசம் ஆக இருந்தாலும் சரி... சிங்களவனாக இருந்தாலும் சரி.

வாழ்ந்தால், தன்மானத்துடன் வாழ வேண்டும்... இல்லையெனில் போராடிச் சாகவேண்டும் என்ற சுத்தத் தமிழனின் தன்மானக் கோட்பாடுகளின் படி , ஆயுதப் போராட்டமும் ஒரு தேர்வாகத்தான் அமையும்.

இதற்கு எனது பதில்....நீங்கள் சொல்லவருவது ஒன்றை அழுத்தி செல்கிறது..சிறைகளில் வாடுகிற எங்கள் உறவுகளும், அகதிமுகாம்களில் அழுந்துகிற எங்கள் உறவுகள் உங்களுக்கு தன்மான தமிழராய் தெரியவில்லை. இலங்கை முழுவதும் உள்ள தமிழர்களும் தமிழர்கள் அல்ல...

புலம்பெயர்ந்தவர்களும் என்னமாதிரியோ? நான் கிட்டடியில் ஒருவேலைக்கு போனேன் அங்கே ஒரு ருமேன்னியன் கேட்காத கேள்வி எல்லாம் கேட்டான்..பிறகு சொன்னான் என்னுடைய உச்சரிப்பு விளங்கவில்லை என.. ( உண்மையில் எனக்கு அழுகைவந்தது வேறுவிடயம்..) ஆனால் சூழ்நிலைக்கேற்ற மாறி வாழ்பவர்கள் தமிழர் இல்லை...

உங்களுக்கும் காகிதத்தில் வீரம் சொல்லுபவர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை...

வல்கனோ!

தயவு செய்து நான் சொல்லவருவதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நான் யாரையும் குறைத்துக் கூறவில்லை. அதற்கு எனக்கு எந்த அருகதையும் கிடையாது.

நானும் பல இடங்களில் அவ்வாறான மனக்கஷ்டங்களை வலிகளை சந்தித்து வருகின்றேன்.

ஆனால், அப்போதெல்லாம் எனக்கு தோன்றும் உணர்வெல்லாம் ...

எதற்கும் ஓர் எல்லையுண்டு... காலால் மிதிபடும்போது வலிதாங்க முடியாமல், வாயில்லாப் புழுக்கூட கடிக்க முயலும்.

நாமெல்லாம்............?

நன்றி எரிமலை.

உங்கள் விமர்சனங்களையும் அன்போடு வரவேற்கின்றேன். என் எழுத்துக்களில் தவறிருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்..

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி குட்டி.... :)

சகல பக்கங்களிலும் குழப்பங்கள் நிறைந்திருந்த வேளையில் ...நானும் எதையாவது எழுதித் தொலைத்து குழப்புவதற்கு விரும்பவில்லை. அதனால்தான் இந்த கால இடைவெளி.

எனது நிலையும் அதுவே..

எல்லோரும் இதை உணர்ந்து தமது பேனையையும்

கணணிகளையும் உபயோகிக்கவேண்டிய காலம் இன்று...

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியன் உங்களின் பதில் உள்ள பண்பும் உணர்வும் என்னை நெகிழ்ச்சிபடுத்துகிறது...

ஒரு குற்ற உணர்வு நான் பிழையான தகவலை தந்து விட்டேன் (தகவலை மறைத்து விட்டேன் ) என...அந்த ருமேனியன் சொன்னது எங்கள் இருவரினதும் (அவருடையதும் எனதும்) உச்சரிப்புகள் வேறுபடுவதால் இருவருக்கும் கடினம் என...மற்றும்படி பல நிகழ்வுகள் எங்கள் புலம்பெயந்த -கொஞ்சம் படித்திட்டு வந்த ஆட்களுக்கு நடப்பது எல்லாம் எனக்கும் நடக்குது...தனியே வெளியே வேலைக்கு போற இடத்தில் மட்டுமல்ல வீட்டிலும் உறவினர் வீடுகளிலும் ...(முதலில் என் மனைவிக்கு யாழில் நேரம் செலவழிப்பது விருப்பமில்லை இப்ப ஓரளவு OK ஏனென்றால் நான் எதோ இலகுவாக இருப்பதான உணர்வால்- இந்தவகையில் யாழுக்கு எனது நன்றிகள் :) எனது மனைவி இதில் இருந்து விலகிஉள்ளா..சில இடங்களில் கணவன் மனைவிக்கிடையிலே பிணக்குகள் வந்திருக்கு ..

நீங்கள் சொன்ன புழு கடிக்கிறது...சில நேரங்களில் கடிக்கிறோம்...பலநேரங்களில்....

இங்குள்ள identity பிரச்சனையால் பயமாக இருக்கிறது நிறைய எழுத ....முன்பு ஒருக்கா நானும் எனது நபர்களும் பயணம் செய்தபோது ஒரு சென்றியில் வாக்குவாதம் நடந்து அவர்கள் எங்களுக்கு அடித்து விட்டார்கள்...பிறகு உரிய ஆட்களை கூட்டிக்கொண்டு போய் முறைப்பாடு செய்யபோனால், அங்கு முதலே கேஸ் இருக்குது நாங்கள்தான் அவர்களுக்கு அடித்தது என....பிறகு அவரை அந்த இடத்திலிருந்து மாற்றியாச்சு... சண்டை தொடங்க எங்கட வீடுக்கு பக்கத்தில செல்விழுந்து பக்கத்து வீடுக்காரக்கு தலையால இரத்தம் ஓடுது...(அப்ப பகல் நேரம் ஊரடங்கு சட்டம் வேற...என்னிடம் உதவி கேட்டார்கள்/ நான்தான் ஒரே ஒரு பொருத்தமான ஆள் அந்த நேரத்தில்) ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போக வெளிக்கிட அதே சென்ரியில எனக்கு அடித்தவன் கிட்டதட்ட 1 - 2 வருடத்துக்கு பிறகு எண்டு நினைக்கிறேன்....அன்று நான் பயந்த பயம் ...என்னவோ திரும்பி தனிய வரும்போதும் அவன் ஒன்றும் செய்யவில்லை...அப்ப யோசித்தது சிங்களம் தெரியும் என நினைத்து அவனோட வாக்குவாதபட்டு கடைசியில் அவனிடமே உயிர்பிச்சை கேட்டதுதான் மிச்சம்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பருத்தியன் காலம்கருதிய கட்டுரை இது. எம்மாலும் முடியும், முடித்துகாட்டுவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.