Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னால் . ..முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். இன்பம் வரும்போது துள்ளிக்குதிக்கும் மனசு துன்பத்தில் துவண்டு தான் போகிறது துன்பத்தையும் ஏற்று சகித்து வாழ் பழகினால் வாழ்கை ஒரு கின்னஸ் பதிவு ஆகி விடுகிறது. இதோ ஒரு சாதனைப் பெண்ணின் கதை.

தாய் தந்தையர்களுக்கு செல்லப் பெண்ணாக வளர்ந்தவள் தான் மஞ்சு என்னும் மஞ்சுளா ஆசைக்கு ஒரு அண்ணா. ..அவள் வளர்ந்து மணப்பருவம் அடையும் காலத்தில் ....மாதவனுக்கு வாழ்க்கைபட்டு ..வெளி நாட்டு ஆசை கொண்டு ...கனடாவுக்கு வந்து சேர்ந்தாள். காலபோக்கில் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவன் ஒரு தனியார் கம்பனியில் உதவி முகாமையாளராக பணி புரிந்தான் ....வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும் மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை. ஒரு கோடை விடுமுறையின் போது ...நான்கு, எழு வயதுக் .குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு , லண்டனுக்கு போக ஆசைப்பட்டாள். மாதவனுக்கு ...விடுமுறை கிடைக்காததால் ,மனைவி மக்களை அனுப்பி வைத்தான். அவர்களும் சேமமே சென்று ....பொழுதை இன்பமாக் களித்தனர். மஞ்சுவுக்கு கணவன் வராதது சற்று மனவருத்தம் இருப்பினும்... மகன்களின் சந்தோஷதுக்காக சகித்து கொண்டாள் .அவளும் பிள்ளைகளும் மாதவனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள்.

இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் இருக்கையில் ஒரு அதிர்ச்சி நடந்தது..........மாதவன் வார விடுமுறையின் போது நண்பனுடன் ஒரு ஒன்று கூடலுக்காக சென்றவன், . பழைய நண்பர்கள் புதியஅறிமுகங்கள் என்று .... அங்கு ஏனைய நண்பர்ககள் ஒன்று கூடியதும். ...".பார்டி " களைகட்ட தொடங்கியது. பலவித உணவுகள் ...மது உட்பட ....உண்டு களித்து....அதிகாலை வேளயில் கூடி சென்ற நண்பன் ....அவனது தொடர்மாடிக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டிருந்தான். மாதவனுக்கு லிப்ட்( உயர்த்தி ....தமிழ் தெரியலை ) இருந்தாலும் .படிஎறித்தான் செல்வான். மூன்றாம் மாடியில் இருந்த அவன் மாடிக்கு ஏறி ..அரை பங்கு தூரம் சென்றதும் ....சிறு தடுமாற்றமாய் வரவே , ( ஓரளவு குடித்திருந்தான் ) விழுந்து விடான்...நன்றாக் தலையின் பின் பகுதி அடி பட்டு விட்டது ..விழுந்தவன் தான்.........முடிவு விபரீதமாகி வி ட்டது. அதைகண்டவர்கள் நிர்வாகத்துக்கு அறிவித்து ...வைத்திய சாலைக்கு அனுப்பப் பட்டான் .........அங்கு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது ...உறவினர் ..... அயலவர்கள் உதவியுடன் .....செய்தி பறந்தது............

மஞ்சு ....மிகவும் துயரத்துடன் வந்தாள் ....அதிர்ச்சியடைந்து விட்டாள் . போய்வா என்றவன் ஒரேயடியாய் போய்விடானே..........இனி , என் எதிர்காலம் என்ன ...குழந்தைகளை எப்படி வளர்ப்பேன்...........என்று பல் கேள்விகளுடன் வந்து சேர்ந்தாள். மிகவும் சோகமாக மரணச்சடங்கு நிகழந்தது.............வந்த அயலவர் உறவுகள் எல்லோரும் போய் விட்டனர் . அவளது சகோதரனும் ...புறபட்டு விடான். இப்போது தனிமை மிக வாடியது அடுத்தது என்ன என்று........குழந்தைகளும் மிகவும் சோகமாய் இருந்தனர். .ஊரில் உள்ள தாய் தந்தையார் தம் மகளின் வாழ்வு இப்படியாகி விட்டதே என்று அடிக்கடி கடதமும் தொலை பேசியிலும் தொடர்பு கொள்வார்கள். நாங்கள் இருக்கிறோம் மனதை தளரவிடாதே என்று ஆறுதல் கூறுவார்கள்.

பாடசாலை ஆரம்பமாகியது மகன்களும் சென்று விட்டனர் . மாலை வரபோகிறார்கள் என்று உணவு சமைக்க ..ஆயத்தமானாள் .......உறவுகளின் உதவியாலும் , மாதவனின் இன்சூரன்சு ( ஆயுட்ஆயுத காப்புறுதி ) பணத்தினாலும் , மரண செலவு வேறு செலவுகள் போக மூன்று மாதங்களை கடந்து விடாள். அடுத்து என்ன என்பது தான் அவளது பெரும் கேள்வியாக் இருந்தது. தனிமையை போக்க , உறவுகள் அயலாவர்களின் பிள்ளிகளுக்கு பியானோ வாத்தியம் கற்றுக்கொடுத்தாள். இளம் பருவத்தில் அவள் கற்ற இசைக்கருவிகளின் ...படிப்பு வீண் போகவில்லை. நான்காவது மாதம் ...இருப்பிட வாடகைப் பணத்துக்காக கடிதம் வந்த போது ....துவண்டு போனாள் இனி என்ன செய்வது என்று.........

அவளது தந்தையின் நண்பர் ஒருவர் ....அங்கு தனியார் கல்வி நிறுவனமொன்றை நடத்திக் கொண்டிருந்தார்.அங்கு சென்று கற்பிப்பதற்காக ...ஒரு வேலையை பெற்றுக்கொண்டாள் ...முதலில் அங்கு ஆசிரியைக்கான தேவை இருக்க்வில்லை என்றாலும். இவளது நிலையை எண்ணி சம்மதித்தார். .முன்பு கணவனுடன் தவிர அதிகம் வெளியில் செல்லாதவள் இப்போது தனித்து எல்லாம் செய்ய கற்றுக்கொண்டாள். கடுங்குளிர் காலத்தில் போக்கு வரத்து மிகவும் கஷ்டமாக் இருந்தது ....கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மகன்களை பள்ளியில் விட்டு விட்டு தானும் வேலைக்கு சென்றாள். அம்மாவின் கடும் முயற்சியுடன் மகன்களும் புரிந்து கொண்டு நடந்தார்கள் . காலம் வெகு வேகமாக் ஓடியது..........இன்னும் சில வாரத்தில் அவளது தாயம் தந்தையும் .....குடிவரவு முறையில் வர இருக்கிறார்கள் . தனித்து விடப்பட்ட போது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை , அவளே செய்ய வேண்டும் , இயங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், இன்று அவளை மேல் நிலைக்கு உயர்த்தியது............

பெண்கள் எப்படி இருக்கவேண்டும் , என்பதற்கு இவளது வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு.........தன்னம்பிக்கையும் கடவுளின் அருளும் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.

உன்னால் முடியும் தம்பி தம்பி .....உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி ....என்னும் பாடல் என் நினைவில்............நிழலாடுகிறது. நம்பிக்கையுடன் வாழுங்கள் நாளை உங்கள் கையில். ( உபதேசம் செய்வது ...எளிது ...நடைமுறைபடுத்துவதுதான்..........?.காலம் கை கொடுக்கும். )

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தங்களைத் தாங்களே பல துறைகளிலும் முன்னேற்றிக் கொள்வதற்கு மஞ்சுவின் கதை ஒரு முன் உதாரணம்..நன்றி

வித்தியசமான கதைகள் குடுக்கிறிர்கள் நிலாமதி அக்கா... உண்மை கதைகளாகவும் இருக்கு தொடருங்கோ... பெண்கள் முடிந்தளவுக்கு எல்லாத்தையும் தெரிந்து வைப்பது நல்லம்... யாரையும் எதிர் பார்த்து வாழ்க்கை நடத்தாமல் சொந்தக்காலில் நிப்பது நல்லம்... இப்படியான நேரங்களில் கை குடுக்கும்... இல்லையென்றால் கொஞ்சம் கஸ்ர படவேண்டி வரும்/....உங்கள் கதையில் வரும் பெண்ணை பராட்டத்தான் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

தைரியசாலியான பெண்...பெண்கள் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்...நிலாக்கா நீங்கள் சந்திப்பவர்கள் அநேகர் வித்தியாசமானவர்கள்.

கடவுளின் அருளும் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.

கணவனுடன் வாழ கடவுள் அருள் கொடுக்கவில்லை போல,நொட்டி கடவுள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி...........சுஜி .........ரதி...........ஜில் ........உங்கள் கருத்துக்கு நன்றி..

.......ஜில் உங்க கருத்து " ஜில்" :lol: என்று இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னால் முடியும் என்பது ஒவ்வொருவரதும் இதயத்துடிப்பானால் இமயம் காலடியில். நம்பிக்கையூட்டும் படைப்புகள் சமூக முகிழ்வுக்கு அவசியமானது. பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும் மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை.

இப்படி எழுதியதைப் பார்க்கும் போது மாதவனை குறைகூறுவது போல உள்ளது. கனடா வந்த உடன ஏன் பிள்ளைகளை பெறோனும்? படித்து, வேலை அனுபவம் பெற்றுவிட்டு பிள்ளைகளை பெத்துத்தள்ளலாம் தானே? அப்படிச்செய்தால் இந்த ட்ராமாக்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்ணியவாதிகளின் கூச்சல்களும் குறையும். :lol:

ஏன் எங்கண்டை சமூகத்திலை மட்டும் கல்யாணம் கட்டின உடன சொல்லிவச்ச மாதிரி உடன பிள்ளையை பெர்ரது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எங்கண்டை சமூகத்திலை மட்டும் கல்யாணம் கட்டின உடன சொல்லிவச்ச மாதிரி உடன பிள்ளையை பெர்ரது?

அட கடவுளே இதற்கும் என்கன்ட சமுகத்தையா குற்றம் சொல்லுறீயள்,பின்போடுவதற்கு பல வழிமுறைகள் இருந்தும் பொறுமை காக்க முடியாமல் காஞ்சமாடு கம்பில விழுந்தமாதிரி விசயத்தை முடிக்கிற்து ப்றகு சமுகத்தில பழியை போடுகிறது,ந்ல்ல கொள்கைடாப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டுது . அழகான கதை. வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளை பெறுவதை பிற்போடுவது,கூட காலம் சந்தோசமாக இருப்பதற்கு மட்டுமல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நாலோ ஐந்தோ வருடங்களை எடுக்கட்டுமே. ஆரம்ப்பத்தில் எல்லேருமே நல்லவர்களாகத்தான் தெரிவர். புது நண்பர்கள், புது வேலை, புது மனைவி . பிள்ளை பெறும் வரை கணவன் மனைவி நல்ல உருப்படிகளாய் இருந்தால் சேந்து உடற்பயிற்சி செய்யலாம், பிள்ளைவளர்ப்பு பற்றிய பாடங்களை படிக்கலாம், நடனம் ஆடக்கற்றுக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில் ஒருவருடைய உண்மை நிலை மற்றவருக்கு தெரியும். அதையும் தான்டி ஒரு பக்குவத்தோடு இருவரும் சந்தோசமாக வாழுவார்கள் என்றால் பிள்ளைகளை பெறலாம். :lol:

இந்த விடயங்களை பற்றி தனி தலைப்பெழுத ஆசை. குறிப்பாக ஏன் பிந்திக்கல்யாணம் கட்டக்கூடாது என்ற விடயம். எங்கு எழுதலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எழுதியதைப் பார்க்கும் போது மாதவனை குறைகூறுவது போல உள்ளது. கனடா வந்த உடன ஏன் பிள்ளைகளை பெறோனும்? படித்து, வேலை அனுபவம் பெற்றுவிட்டு பிள்ளைகளை பெத்துத்தள்ளலாம் தானே? அப்படிச்செய்தால் இந்த ட்ராமாக்களுக்கு இடமில்லாமல் போகும். பெண்ணியவாதிகளின் கூச்சல்களும் குறையும். :D

ஏன் எங்கண்டை சமூகத்திலை மட்டும் கல்யாணம் கட்டின உடன சொல்லிவச்ச மாதிரி உடன பிள்ளையை பெர்ரது?

பொதுவாக ஊரில் இருந்து பெண் எடுத்து திருமணம் முடிப்பவர்கள் காலம்பிந்தியே முடிக்கிறார்கள், குழந்தைகள் பிறப்பதை பின் போட்டால் சில சமயங்களில் பிள்ளைகள் பிறக்காமலேயே போய்விடும் என்ற அச்சமும், வயது வந்து பிள்ளை பெறுவதில் உள்ள சிக்கலாலும், எதுவும் காலத்தில் செய்தால்தான் மதிப்பு இருக்கும், திருமணம் ஆகி ஜந்து ஆறு வருடங்கள் பிள்ளை இல்லாவிட்டால் சமுதாயம் என்ன பேசும் என்று இந்த சமுதாயத்தில் இருப்பவர்களுக்கு தெரியும், ஜரோப்பாவில் இருந்தாலும் தமிழர் தமது சமுதாய கட்டிபாட்டிலேயே வாழ்கிறார்கள். :D இளவயதில் முடிப்பவர்கள் வேண்டுமென்றால் முயற்சி செய்து பார்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

. கனடா வந்த உடன ஏன் பிள்ளைகளை பெறோனும்? படித்து, வேலை அனுபவம் பெற்றுவிட்டு பிள்ளைகளை பெத்துத்தள்ளலாம் தானே?

ஏன் எங்கண்டை சமூகத்திலை மட்டும் கல்யாணம் கட்டின உடன சொல்லிவச்ச மாதிரி உடன பிள்ளையை பெர்ரது?

பிள்ளைகளை பெறுவதை பிற்போடுவது,கூட காலம் சந்தோசமாக இருப்பதற்கு மட்டுமல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நாலோ ஐந்தோ வருடங்களை எடுக்கட்டுமே. ஒரு கட்டத்தில் ஒருவருடைய உண்மை நிலை மற்றவருக்கு தெரியும். அதையும் தான்டி ஒரு பக்குவத்தோடு இருவரும் சந்தோசமாக வாழுவார்கள் என்றால் பிள்ளைகளை பெறலாம். :D

இந்த விடயங்களை பற்றி தனி தலைப்பெழுத ஆசை. குறிப்பாக ஏன் பிந்திக்கல்யாணம் கட்டக்கூடாது என்ற விடயம். எங்கு எழுதலாம்?

rajeeve, தங்கள் வயதை குறிப்பிடமுடியுமா....?

எனது ஒன்றுவிட்டமகனுக்கு திருமணம் முடித்து வைத்தேன்

அடுத்தமாதம் தொலைபேசி எடுத்து என்னிடம் சொன்னார் வீட்டில் விசேசம் என்று....

நான் உடனே அவரிடம் கேட்டது

கல்யாணம் முடித்தால் பிள்ளைப்பெறவேண்டும் என்று யார் உணக்கு சொன்னது என்று....

எனது மனைவி அருகில் நின்று என்னுடன் கோபித்துக்கொண்டார்

உங்களுக்குத்தான் முதன்முதலாக இந்த செய்தியை சொல்கின்றான் இப்படியா ஏசுவது என்று...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாக்கா!

இன்று தான் இந்த ஆக்கத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது, இது ஒருவரின் வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றுதான் கூறமுடியும். இதை கதை என்று எடுத்துக்கொள்ளலாமோ என்பது என்னைப்பொறுத்தவரை சந்தேகமாகவுள்ளது.

இதை ஒரு கதையாக அமைத்திருக்கலாம் அதாவது நிறைய புனைந்து இன்னும் பல விடயங்களை உட்புகுத்தி அழகுபடுத்தியிருந்தால் இதன் தரம் வார்த்தைகளினால் விபரிக்கமுடியாதவை.

இருப்பினும் இந்த ஆக்கத்தின் மூலம் பெண் சமூகத்திற்கு ஒரு தெம்பை (உற்சாகத்தை)கொடுத்திருக்கின்றீர்கள், இந்த ஆக்கத்தின் மையக்கருத்து என்னவென்றால் வாழ்க்கையின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மனம் தான் என்பதாகும்.

எங்களது மனம் திடகாத்திரமாக(பலமானதாக)இருந்தால் ஏற்படும் தோல்வியை வாழ்க்கையின் வெற்றியின் ஆரம்பமாக மாற்றிக்கொள்ளலாம்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!!!

எனது ஆலோசனை அல்லது அறிவுரை என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமாயின் இறைவனுடன் நேரத்தை செலவழிப்பதை விட..

நாம் நினைப்பதை நல்லதாகவே நினைப்போம்!

நினைத்தவையை செயலாற்றுவோம்!

கிடைப்பவை நல்லதாகவே இருக்கும்!

பி.குறிப்பு.

ஒரு ஆக்கத்தை இங்கு இணைக்க முன்பு பலதடவை வாசித்தீர்களாயின் சொற்பிழைகளை இனங்கண்டு கொள்வீர்கள்!

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மைந்தன் அண்ணா........உங்கள் காத்திரமான் .விமர்சனத்துக்கும் அறிவுரைகளுக்கும் மிக்கநன்றி........நான் கதை எழுதும அளவுக்கு தேர்ச்சியானவள் அல்ல ஒரு சிறு கிறுக்கல் மாத்திரம் .மேலும் சிறப்பாக் அமைக்க உங்கள் கருத்து வழி செய்யும். மற்றும் கதைக்கு கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி.

நல்ல வாழக்கையுடன் ஒத்த கதை!

பாராட்டுக்கள் அன்ரி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டுது . அழகான கதை. வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிகை உடையவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள். அதற்கு மஞ்சு(ளா) ஒரு நல்ல உதாரணம். எழுதுருவாக்கிய நிலாமதிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

நீங்கள் எழுதிய கதையை வாசிக்க உங்கள் மேல் கோபம கோபமாக வருகிறது.

இதே கதை மாதிரியே எமது மக்களின் நிலையும்

கடந்த வருடம் என்ன மாதிரி துள்ளினோம் கத்தினோம் குளறினோம் குளிர் வெய்யில் இரவு பகல் பாராது வேலையையும் விட்டுவிட்டு தொடர் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தோம்

இப்போ

பாவப்பட்ட பெண்ணைப் போலவே இப்போ எமது மக்களைப் பற்றி கதையையே காணோம்.

இது அரசுக்குக்கும் தெரியும் வெளிநாடுகளுக்கும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் நிலாமதி அக்கா. தாயகத்தில் எத்தனையோ பெண்கள் இந்த நிலைமையில் குடும்பத்தை தனியாக சுமக்கிறார்கள் ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலானவர்களால் முழுமையான வெற்றியை அடைய முடியவில்லை காரணம் இங்கத்தயைப்போல வேலை வாய்ப்புகள் குறைவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.