Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து உண்மை பேசும் ஐநாவின் முன்னாள் பேச்சாளர்

Featured Replies

இறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில் பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார்.

தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ திரட்டவில்லை என்றும் யுத்த களத்திலிருந்த நம்பத் தகுந்தவர்களிடமிருந்தே இதனைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்

அரசாங்கம் பல விடயங்களை வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் அதிக பொய்களைச் சொல்லியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள கோர்டன் விஸ் விடுதலைப் புலிகளும் மக்களை வெளியேற விடாமல் தடுத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

SOURCE : http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இந்த பொறுக்கிக்கு நன்றி கூறி ஈமெயில் அனுப்புறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

அவன் இப்போதாவது உண்மையைச் சொன்னானே?? ஆனாலும் பதவியில் இருக்கும்போது எந்த உண்மையுமே பேசப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை அரசு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது கொத்துக் குண்டுகளைப் பாவித்ததாக இவரை மேற்கோள் காட்டி AP நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. பின் இவரே ஸ்ரீலங்காவிடம் கொத்துக்குண்டுகள் இல்லை என்று கூறியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்தது. எனவே இவரிடமே அதை உறுதிப் படுத்த பின்வரும் மின்னஞ்சலை இவருக்கு அனுப்பினேன்.

I saw in the news (AP: http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gVoaDFmbCYS-Usz9ACDRIengj21QD964I8F80) quoting your name that a hospital in northern Sri Lanka was bit by cluster bomb. But later Sri Lanka's defence ministry claimed that you later told it was wrong ("After Sri Lankan denial the United Nations spokesman Gordon Weiss said that they accepted the Sri Lankan statement that it did not have any facility to fire cluster munitions" http://www.defence.lk/new.asp?fname=20090205_01).

All I would like to know: did you really later issued a statement that it was not a cluster bomb? Or is it a creation of Sri Lanka's defence ministry without your knowledge?

அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு.

We said originally that in that particular incident the bombs had fallen in

the area around the hospital (actually within about 500-1000m). A few hours

later, after a flurry of calls from the GoSL, we said that we accepted the

assurances of the GoSL that they don't procure or use cluster munitions

(this obviously still leaves the LTTE). There were many artillery strikes

on the hospital over the days surrounding this incident, which killed at

least 11 staff and patients. The GoSL later released a video purporting to

show the undamaged hospital.

அதாவது ஸ்ரீலங்காவிடமிருந்து பல தொலை பேசி அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவிடம் கொத்துக் குண்டுகள் இல்லை என்பதை ஒத்துக்கொண்டோம் என்றார். அதாவது தாங்கள் அழுத்தத்தின் மத்தியில் அவ்வாறு ஒத்துக்கொள்ள வேண்டி வந்தது என்பதை சொல்லாமல் சொல்லியிருந்தார்.

பதிலை இவ்வாறு அனுப்பினேன்.

Thank you for your reply.

I understand your situation. I know there must be some political forces that restrict your freedom of speech.

However I kindly request one thing: Once you get out of this political pressure, you should speak the truth for the sake of justice and humanity.

அதாவது நீங்கள் சில அரசியல் சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக உங்களால் சுதந்திரமாக பேசமுடியாதுள்ளது. ஆனால் இந்த அழுத்தங்கள் நீங்கும் போதாவது நீங்கள் நீதியின் பொருட்டும் மனிதாபிமானத்தின் பொருட்டும் உண்மைகளை பேசவேண்டும் என்றேன்.

நான் எழுதிய பதிலை கணக்கெடுத்தாரோ இல்லையோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவர் போன்று INGO சார்ந்த பலர் சில/பல சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக உண்மைகளை ஒழித்துவைத்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் காட்டாறு அவர்களே, தமிழர்களது இக்கட்டான வேளையில,; தங்கள் கடமையை அறிந்து, அதை நிறைவேற்றியுள்ளீர்கள். பெருமகிழ்சியும், நன்றியும்.

அதிகாரம் அற்ற நிலையில் உண்மையை சொல்லி என்ன நடக்கப் போகுதாம்,பூச்சாண்டி காட்டவா?

அவன் இப்போதாவது உண்மையைச் சொன்னானே?? ஆனாலும் பதவியில் இருக்கும்போது எந்த உண்மையுமே பேசப்படவில்லை.

பதவியில் இருக்கும் போது இலங்கை போர் தொடர்பாக பேசுவதற்கு எல்லோருக்கும் அனுமதி இருக்கவில்லை...

அனைவருக்கும் பதவியை விட்டு விலகும் பொழுதுதான் ஞானம் பிறக்கின்றது!!!!!

இதற்கு தமிழர்கள் தான் பலிக்கடாக்கள்..........

இந்த மரண அழிவை தமிழக அரசும் தமிழக மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் இருக்கும் போது பேசும் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்.பதவியில் இல்லாதவன் பேச்சை யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள்.இப்ப சரத்தைப் பாருங்க உண்மை விளங்கும்.சிறிலங்கா அரசின் எந்த அழுத்தத்திற்கும் இவர் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை.தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் எழுதியதெல்லாம் கணக்கில் எடுக்கப்படமாட்டாது.உலகத்தின் முன்னிலையில் துணிந்து வெளிப்படையாக பதவியில் இருக்கும் போது சொல்லியிருக்க வேண்டும். இவர் வேண்டுமென்றே தனது மதிப்பக்குரிய பதவியைச் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.இவர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இப்படிச் செய்தால்தான் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வார்கள்.சிறிலங்கா அரசிடமிருந்து அழுத்தங்களை அல்ல பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் அப்படிச்சொன்னாரென்று நான் குற்றஞ் சாட்டுகிறேன். இதை யாராலும் ஆதார பூர்வமாக மறுக்க முடியுமா?இலஞ்சத்தையே அழுத்தம் என்று இலாவகமாக அவர் கூறியிருக்கிறார்.அவர் மனச்சாட்சி உறுத்தியதன் காரணமாக ஓரளவு உண்மையைச் சொல்லியிருக்கிறார்.ஏனென்றால் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய நாட்டுக்கு வந்துவிட்டார். சிறிலங்கா அரசாங்கத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது.அவரின் செய்கை காரணமாக பல்லாயிரம் தமிழ் மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.அல்லது அவர் இப்படிச் சொல்வதன் மூலம் சிறிலங்காவைத் தூண்டி விட்டு சரத்தைப் போட்டுத் தள்ளி விடுங்கள் என்று மறைமுகச் சொல்கிறாரோ.சரத் உண்மைகளைச் சொல்வேன் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னது பல பேரின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.பான்கி மூன் நம்பியார் சொல்கையும்? இந்தியா என்று எல்லோருமே குழம்பியிருக்கிறார்கள்.சரததைப் போட்டுத் தள்ளுவதே மேற்படி புள்ளிகளுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய செய்தியாக இருக்கும்.

Edited by புலவர்

முள்ளி வாய்க்காலில் 40,000 பேர் அரச படைகளினால் கொல்லப்பட்டனர் (லாம்) - முன் நாள் ஐ. நா பேச்சாளர்

மலேசிய நிருபர்

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010

gordon

முள்ளி வாய்க்காலில் இறுதி நேரத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து 40,000 வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர்.இவ்வாறு தெரிவித்துள்ளார் முன் நாள் கொழும்பு ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோடன் வைஸ்.

திரு கோடன் வைஸ் ஐக்கிய நாடுகளின் கொழும்பு செயலக பேச்சாளராக இருந்தவர். மனிதாபிமான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் மட்டுமன்று இதனால் ஐக்கிய நாடுகள் சபை மேலாளர்களாலும், அரசாங்கத்தினராலும் அப்போது அடக்கி வாசிக்குமாறும் எச்சரிக்கப்பட்டவர்.

இப்போது அவர் ஐக்கிய நாடுகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இப்போது அவர் சுதந்திரமாக பேசமுடியும் ஆகையால் அவுஸ்ரேலியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் அவுஸ்ரேலிய ஒலிபரப்பு கூட்டு தாபனத்திற்கு பேட்டியளித்தார்.

இவர் மேலும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது இறுதி நேரத்தில் 300,000 மக்களும், போராளிகளும் நியூயோர்க் மத்திய பூங்கா அளவினை உடையதான பகுதிக்குள் இருந்தனர். அதனை சுற்றி இலங்கை படைகள் அனைத்து வகையான சிறிய, பெரிய ஆயுதங்களால் தாக்கினர். இதன் போது 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர் என்றார்.

இந்த தகவல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்து வந்த சிலரால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் இவர்கள் புலிகளோ அல்லது தமிழ் மக்களோ அல்லர் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை தவறாக வழி நடத்தியுள்ளது அல்லது பொய்களை கூறியுள்ளது என கூறிய கோடன் வைஸ் அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களை குறைத்து மதிப்பீடு செய்ததாக கூறியுள்ளார்,

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

எனவே இவரிடமே அதை உறுதிப் படுத்த பின்வரும் மின்னஞ்சலை இவருக்கு அனுப்பினேன்.

உங்களுடைய அர்த்தமுடைய முயற்சி மகிழ்வை தந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய அர்த்தமுடைய முயற்சி மகிழ்வை தந்தது.

அதே.. அதே..

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உண்மைகளும் 3-ஆம் தரப்பிடமிருந்து உண்மைச் சாட்சியமாக வெளிவரும் சந்தர்ப்பங்கள் இப்போது அதிகரித்துவருவதால் அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து விடுபடுவதற்காக ஐ.நா தானாகவே முந்திக்கொண்டு தன்னிடமிருந்து ஒய்வுபெற்றஅதிகாரிகள் மூலம் அல்லது இப்போது பதவியிலில்லாதவர்களின் வாக்குமூலமாக உண்மைகளை ஐ.நா கசியவிட எத்தனிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய அர்த்தமுடைய முயற்சி மகிழ்வை தந்தது.

என்னத்தை முயற்சியை செய்து?... நான் மட்டுமா எத்தனை பேர் இவர்கள் போன்றவர்களுக்கு கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். பாவிகள் அந்த நேரத்தில் வாயைத் திறந்தார்களா? ஒரு நாளில் நூற்றுக்கு மேற்பட்ட அழைப்புகளை ஒபாமாவுக்கு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று யாரோ சொன்ன கதையை கேட்டு எனக்குத் தெரிய என் நண்பர்கள் உட்பட பலர் அழைத்தோம். எதையுமே ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இப்போது தமக்கு தேவை என்றவுடன் விசயத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் அதையும் தங்கள் நலன்களுக்கேற்ற வகையில் பாவித்துவிட்டு எம்மை கைகழுவி விட்டுவிடுவார்கள்.

ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி என்ற மாதிரி முள்ளிவாய்க்காலின் பின் ஈழத்தமிழன் உலகத்தை நன்கு புரிந்துவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போன்ற ஜ நாவிலோ அல்லது என் ஜி வில் வேலை செய்பவர்கள் தங்கள் பதவிக் காலத்திலோ அல்லது பதவி முடிந்த பின்னரோ தாங்கள் வேலை செய்யும் காலத்தில் அந்த நாட்டில் என்ன நடந்தது என வெளி உலகத்திற்கு சொல்லக் கூடாதாம்...அவர்கள் அந்த வேலை ஒப்பந்தத்தில் கையிடும் போதே எழுதி வேண்டுவார்களாம்...இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாது ஆனால் சொன்னது பிரித்தானியாவில் உண்ணா விரதம் இருந்த ரிம் மாட்டின்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்து உண்மை பேசும் ஐநாவின் முன்னாள் பேச்சாளரே 40 ஆயிரமோ 50 ஆயிரமோ கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நீதி வளங்குங்கள். கொன்றவனையோ கொல்லச்சொன்னவனையோ விசாரிக்கும்போது தள்ளிக்கொண்டு போனவர்களையும் விடாதீர்கள். தெரிந்தும் தள்ளிக்கொண்டு போனது மகாகுற்றம். அக்கராயனில் ராணுவம் நின்றபோது புலம்பெயர் தமிழர்கள் கைகளில் போராட்டம் கொடுக்கப்பட்டதெனும்போது புலம்பெயர் தமிழர் சமூகத்துக்கும் முடிவு தெரிந்திருக்கின்றது. புலம்பெயர் சமூகத்து செயற்பாட்டாளர்களும் குற்றவாளிகளே அவர்களையும் விசாரிக்கவேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை முயற்சியை செய்து?... நான் மட்டுமா எத்தனை பேர் இவர்கள் போன்றவர்களுக்கு கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். பாவிகள் அந்த நேரத்தில் வாயைத் திறந்தார்களா? ஒரு நாளில் நூற்றுக்கு மேற்பட்ட அழைப்புகளை ஒபாமாவுக்கு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று யாரோ சொன்ன கதையை கேட்டு எனக்குத் தெரிய என் நண்பர்கள் உட்பட பலர் அழைத்தோம். எதையுமே ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இப்போது தமக்கு தேவை என்றவுடன் விசயத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் அதையும் தங்கள் நலன்களுக்கேற்ற வகையில் பாவித்துவிட்டு எம்மை கைகழுவி விட்டுவிடுவார்கள்.

ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி என்ற மாதிரி முள்ளிவாய்க்காலின் பின் ஈழத்தமிழன் உலகத்தை நன்கு புரிந்துவிட்டான்.

சர்வதேசம் வந்து எமக்கு ஒரு நல்ல தீர்வைதரும் என இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கிற புலம்பெயர் டமிழர் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் :D

காலம் கடந்து உண்மை பேசும் ஐநாவின் முன்னாள் பேச்சாளரே 40 ஆயிரமோ 50 ஆயிரமோ கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நீதி வளங்குங்கள். கொன்றவனையோ கொல்லச்சொன்னவனையோ விசாரிக்கும்போது தள்ளிக்கொண்டு போனவர்களையும் விடாதீர்கள். தெரிந்தும் தள்ளிக்கொண்டு போனது மகாகுற்றம். அக்கராயனில் ராணுவம் நின்றபோது புலம்பெயர் தமிழர்கள் கைகளில் போராட்டம் கொடுக்கப்பட்டதெனும்போது புலம்பெயர் தமிழர் சமூகத்துக்கும் முடிவு தெரிந்திருக்கின்றது. புலம்பெயர் சமூகத்து செயற்பாட்டாளர்களும் குற்றவாளிகளே அவர்களையும் விசாரிக்கவேண்டுகிறேன்.

அண்ணோய் அதுக்குத்தானே மகிந்தா,இந்தியா, சர்வதேசம் எல்லோரும் சேர்ந்து பயங்கரவாதிகள் என்று சொல்லி நல்லதண்டனை தந்து அழிச்சுபோட்டினம் ,இனி யாருக்காம் தண்டனையை கொடுக்கிறது,

இப்ப தண்டனை கொடுக்கிறது என்றால்,முந்தி மகாகுற்றம் செய்தவயளுடன் சேர்ந்து குற்றம் எல்லாம் செய்து போட்டு வெளியில ஒடி வந்து இப்ப ஜனநாயகம் பேசுகிற புலி எதிர்ப்பாளர்களுக்கு ஆட்களுக்குத்தான் :D

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே இல்லையெண்டு சொல்லவே பயமாக்கிடக்கு ஆனால் நீங்கள் பயமில்லாமல் சொல்லிப்போட்டீங்கள். 2008 நவம்பர்மாதம் போராட்டம் வெளிநாட்டாரிட்ட கைமாறிட்டுதாம். வெளிக் கொன்ரொலிலதான் பொதுமக்கள கொண்டுபோனதா தெரியிது. இங்கத்தய வானொலி ரிவியளில் இருந்தாக்கள் எல்லாரும் உதில சேப்பு எண்டுதான் தெரியிது. உடையார்கட்டுவரைக்கும் வெற்றிப்படம் காட்டின எல்லாருக்கும் உதில பங்கிருக்கு. கணக்கு வழக்கில்லாம சனம் சாகேக்ககூட தேசியத்த நியாயப்படுத்த கூப்பிட்ட கூட்டங்கள் எல்லாம் விசாரிக்கபடவேணும். அவை எல்லாருக்கும் முடிவு நல்லா தெரியும் தெரிஞ்சுகொண்டு உள்ளுக்கு விட்டு அடிக்கப்போறதா எங்களையும் பேக்காட்டி தமிழீழம் கிடைக்கும் எண்டு அங்கை சனத்தையும் பேக்காட்டி பலிகுடுத்ததுதான் நடந்திருக்கு. நியாயப்படுத்த வெஸ்மினிஸ்ரரில சொன்ன கதையள நினைக்க ஆத்திரம் ஆத்திரமா வருது. இங்கத்தய எங்கட ரிவிகாரங்கள கட்டாயம் விசாரிக்கவேணும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.