Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் - ஆயதப் போராட்டம் - மூன்று யோசனைகள்

Featured Replies

கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன்.

வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன.

அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வரை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்திற்கான படிப்பையும் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில்தான் இந்தக் கேள்வியும் எனக்குள் எழுகின்றது.

அரசியல் பற்றி மட்டும் என்று இல்லை, பகுத்தறிவு குறித்து எழுதுவதற்கான ஊக்கமும் இன்றைய நிலையில் என்னிடம் இல்லை. தமிழீழ விடுதலையே தமிழினத்திற்கு சமூக விடுதலையையும் சுயமரியாதையையும் பெற்றுக் கொடுக்கும் என்பதனால் பகுத்தறிவு பற்றி நம்பிக்கையோடு எழுதிக் கொண்டிருந்த என்னிடம் இன்றைக்கு பெரும் சோர்வே எஞ்சி நிற்கிறது.

………………………..

முள்ளிவாய்க்காலில் எமது தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நேரத்திலும் நான் தைரியமாகவே இருந்தேன். நடக்கப் போகின்ற விபரீதங்களுக்கு என்னுடைய மனதை முற்கூட்டியே தயார்படுத்தியிருந்தேன்

போர் தொடங்கிய பொழுது விடுதலைப் புலிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரைப் போன்றும் எனக்கும் இருந்தது. கிழக்கை சிங்களப் படைகள் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தாலும் வன்னி முழுவதையும் சிங்களம் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆயினும் சிங்களப் படைகள் பூநகரி வரை வந்த பிற்பாடு, அதுவரை நடந்த களப்போக்கையும் கவனித்து வன்னி முழுவதும் பறிபோகின்ற ஒரு நிலைக்கு என்னுடைய மனதை தயார்படுத்திக் கொண்டேன். அப்பொழுதும் விடுதலைப் போராட்டம் மரபுவழிப் போரில் இருந்து கரந்தடிப் போர் முறைக்குப் மாறப் போகிறது என்றே நம்பியிருந்தேன்.

விடுதலைப் புலிகளை „ஓயாத அலைகள் 5“இன் மூலம் சிறிலங்காப் படைகளை மீண்டும் விரட்டி அடிப்பார்கள் என்று அன்றைக்கு பலர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக கரந்தடிப் போர் முறைக்கு தமிழீழப் போராட்டம் மாறப் போகிறது என்றும் அதற்கு எம்மை தயார்படுத்த வேண்டும் என்று எழுதத் தொடங்கியிருந்தேன்.

இதைப் பற்றி அப்பொழுது யாழ் களத்தில் நான் ஆரம்பித்திருந்த விவாதத்தை இதில் பார்க்கலாம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47196&st=0&p=462310&fromsearch=1&#entry462310

ஒரு நேரத்தில் கரந்தடிப் போருக்குள் கூட தமிழீழப் போராட்டம் நுழையப் போவதில்லை என்பதும் மாறாக பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையும் புரிந்தது. இந்த நிலையில் வெளிநாட்டில் இயங்குகக் கூடிய தமிழீழத்தின் புறநிலை அரசை உருவாக்குகின்ற திட்டங்கள் பற்றி ஏப்ரல் மாத நடுப்பகுதியில் என்னுடைய வட்டத்திற்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தேன்.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நிகழ்காலத்தின் அவலங்கள் என்னைக் கலங்கச் செய்வது இல்லை.

மே 19இற்கு பின்பு போராட்டத்தை வழிநடத்த தேசியத் தலைவரும் இல்லை என்கின்ற கோரமான உண்மையும் முன்னே வந்து நின்றது. அந்த நிலையிலும் எனக்குள் நம்பிக்கை இருந்தது. தேசியத் தலைவர் தமிழினத்தை ஒன்றுபடுத்தி பலப்படுத்தி விடுதலைக்கான பாதையையும் காட்டி விட்டு சென்றிருக்கின்ற நிலையில் தமிழினம் அவர் இல்லாத நிலையிலும் அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்று நம்பியிருந்தேன்.

தேசியத் தலைவருக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யமுடியாத நிலை இன்றுவரை நிலவுகின்ற நிலையில் „வளரி“ இணையத் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த „என் இனமே என் சனமே“ என்கின்ற பாடற் காட்சியை என்னுடைய தளத்திலும் இணைத்து என் மனதிற்குள் அஞ்சலியை செலுத்தி விட்டு அடுத்தக் கட்டப் போராட்டம் பற்றி என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் தீவிரமான உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன்.

அன்றைய நாட்களில் நண்பர்கள் பலர் கலக்கத்தோடு என்னோடு தொலைபேசுவார்கள். அவர்களுக்கு தைரியம் சொல்லி தொலைபேசியில் ஒரு „வீர“உரையே நிகழ்த்துவேன். என்னுடன் பேசிய பிறகு சற்று ஆறுதலாக இருப்பதாக சொன்னவர்கள் உண்மையாகவே பலர் இருக்கிறார்கள்.

இப்படி தொலைபேசியில் பலருக்கு தைரியம் சொன்ன நான் இன்றைக்கு தமிழினத்தின் எதிர்காலம் பற்றி பெரும் அச்சத்தில் இருக்கிறேன். பேசாமல் அதி உத்தமர் மகிந்தவிடம் சரணாகதி அடைந்து விடலாமா என்ற சிந்தனை வேறு இடையிடையே வந்து தொலைக்கிறது.

………………………..

முள்ளிவாய்க்காலிற்கு பிற்பாடு மூன்று யோசனைகள் பற்றி என்னுடைய நண்பர்களுடன் விவாதித்தேன். இந்த யோசனைகளில் இரண்டு யோசனைகள் புதியவைகள் அல்ல. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே சிலரால் முன்வைக்கப்பட்டவைதான்.

1. தமிழீழப் புறநிலை அரசை உருவாக்குதல்

இது பற்றிய ஒரு விவாதத்தை இங்கே காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188&st=0&p=517845&fromsearch=1&#entry517845

(தமிழீழ அரசை நடத்தியவர்களால் வெளிநாட்டு அங்கீகாரத்தோடு ஒரு புறநிலை அரசை உருவாக்க முடியாத நிலை இருப்பதனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களினால் “நாடு கடந்த அரசு” ஒன்றை உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டம் கேபி மற்றும் உருத்திரகுமாரன் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது)

2. தமிழீழக் குடியேற்ற அரசை உருவாக்குதல்

இது பற்றிய விவாதத்தை இங்கே காணலாம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65540&st=0&p=548666&fromsearch=1&#entry548666

மூன்றாவது யோசனை பற்றி சொல்வதற்கு முன்னர் தமிழீழப் போராட்டம் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை சொல்லிவிடுகிறேன். ஆயுதப் போராட்டம் இல்லாமல் தமிழீழம் கிடைக்காது. இதை நான் உறுதியாக அடித்துச் சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் பற்றி பேசுவதே மகா பாவமான செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழீழமோ அல்லது ஒரு சுயாட்சியோ அல்லது ஒரளவு ஆதிகாரங்கள் கொண்ட மாகாணசபையோ எது வேண்டும் என்றாலும் ஆயுதப் போராட்டத்தை நடத்தாது சிங்கள அரசிடம் இருந்து அவற்றை பெற்று விட முடியாது.

சிலர் ராஜதந்திரப் போராட்டம் நடத்தி தமிழீழம் பெறுவது பற்றிப் பேசுகிறார்கள். அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஏதோ பேசி மக்களை ஆறுதல் படுத்த வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறார்கள்.

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் அந்த மூன்றாவது யோசனை பற்றி சிலரிடம் உரையாடினேன். உண்மையில் இந்த யோசனை செயற்படுத்தப்பட்டிருந்தால் உலகம் அதிர்ச்சியோடு தமிழர்களைப் பார்த்திருக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது.

மூன்றாவது யோசைன பற்றி சொல்வதற்கு முன்னர் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு தமிழர்களின் ஒற்றுமை என்பது மிக அவசியம். போட்டி பொறாமைகள் இல்லாத திறந்த விவாதங்கள் அவசியம். ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் வழங்குவதை நிறுத்தி அனைத்துத் தமிழர்களும் “விடுதலை” என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒன்றுபடுதல் அவசியம்.

“நாடு கடந்த அரசு” பற்றிய அறிவிப்பு வெளியானதும் சிறிலங்கா அரசும் சில வெளிநாடுகளும் அதை ஓரளவு அச்சத்தோடு பார்த்தன. இதை குழப்புவதற்கான வேலைத் திட்டங்களை போட்டன. இன்றைக்கு எமது எதிரிகளுக்கு வேலை வைக்காமல் எமது தமிழர்களே நாடு கடந்த அரசை பலவீனப்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல வல்லரசுகளின் துணையோடு வந்த சிறிலங்காப் படைகளை வென்று, இந்தியப் படைகளை வென்று, வன்னியை மூன்று நாட்களில் கைப்பற்றி, ஆனையிறவை வீழ்த்தி, கடற்படை கண்டு, வான்படை உருவாக்கி உயர்ந்து நின்ற ஒரு இனம் இன்றைக்கு செய்கின்ற கோமாளித்தனங்கள் மிகவும் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாவற்றையும் சாதித்தது பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டும்தானா? தமிழினத்திற்கு இதில் பங்கேதும் இல்லையா? தமிழினம் என்பது ஒரு குரங்குக் கூட்டமா?

தமிழர்களை ஒரு யூத இனம் போன்று நினைத்துக் கொண்டு கனவு காணாதே என்று நண்பர்கள் எச்சரித்த போதும் தமிழினத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. மனிதன் இசைவாக்கம் உள்ள ஒரு பிராணி. மற்ற இனங்களை விட இசைவாக்கம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்வதில் தமிழர்கள் சிறந்தவர்கள். ஈழத்தில் நடக்கின்ற இன்றைய சமரசங்கள் அனைத்தையும் இதன் அடிப்படையிலேயே பார்க்கின்றேன். இன்றைக்கு தம்மை தக்க வைத்தால்தான் நாளைய கிளர்ச்சியும் வரும்.

தமிழினத்தின் மீது வைத்திருக்கின்ற அதீத நம்பிக்கையில் நான் முன்வைத்த மூன்றாவது யோசனை பற்றி சொல்ல வேண்டும். இரண்டு நாட்களுக்குள் கட்டாயம் சொல்கிறேன்.

மூன்றாவது யோசனை ஆயுதம் இல்லாத யோசனையாக சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிது, நீ பெரிது என்று அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமையில்லாத குரங்கு தமிழ்க் கூட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

மூன்றாவது திட்டம் காலம் கடந்த யோசனையாகப் படுகின்றது.

நான் பெரிது, நீ பெரிது என்று அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமையில்லாத குரங்கு தமிழ்க் கூட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

எந்த கூட்டம் ஜனநாயகத்தின் உச்சத்தில இருக்கோ அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள், :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த கூட்டம் ஜனநாயகத்தின் உச்சத்தில இருக்கோ அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள், :D

உதாரணத்துக்கு அதி உச்ச ஜனநாயக நாடு இந்தியாவை பாருங்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜனநாயகம் கொஞ்சம் தூக்கலாக இருக்கு. :blink::wub::)

  • கருத்துக்கள உறவுகள்

புளட் புரட்சி செய்து மாலைதீவைப் பிடிக்கப் போன மாதிரி நாங்களும் புரட்சி செய்து தமிழ் நாட்டு மக்களுடன் சேர்ந்து ஆயுத புரட்சி செய்து ஈழத்தை அமைப்போம்.

நான் பெரிது, நீ பெரிது என்று அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமையில்லாத குரங்கு தமிழ்க் கூட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லவந்த மூன்றாவது திட்டத்தை சொல்லவே இந்த இழுப்பு இழுக்கின்றீர்கள்

நீங்கள் சொல்லி....

நாங்கள் பேசி....

ஒன்றுபட்டு ஒருமுடிவுக்கு வந்து....

ஆனால் சொல்லுங்கள்

ஏனெனில் நாம் கனக்க பேசவேண்டும்

எழுதவேண்டும்

இன்று இது மிகமிக முக்கியம்

3வது கருணா அம்மானுடம் பேசி அவரை தளபதியாக கொண்டு மீண்டும் கொரிலா முறையிலான தாக்குதல் செய்ய வேண்டும் இப்ப இருகிறதில கருணா ஒருவரால் தான் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3வது கருணா அம்மானுடம் பேசி அவரை தளபதியாக கொண்டு மீண்டும் கொரிலா முறையிலான தாக்குதல் செய்ய வேண்டும் இப்ப இருகிறதில கருணா ஒருவரால் தான் முடியும்.

கருனாவினால் எது முடியுதோ இல்லையோ அது மட்டும் நல்லா முயும், நல்லா வளத்து வச்சிருகிரான் உடம்பை. :(

3வது கருணா அம்மானுடம் பேசி அவரை தளபதியாக கொண்டு மீண்டும் கொரிலா முறையிலான தாக்குதல் செய்ய வேண்டும் இப்ப இருகிறதில கருணா ஒருவரால் தான் முடியும்.

என்ன பொம்பிளை பிள்ளையள் ஒண்டும் சேருறதுக்கு முன் வராதுகள்...

-

நான்காவது வழி ... ! ஒரு...கனவு ..

:(
:(

வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை பரந்த, ஒரு பாரிய நாடு ...

இரு மொழி பேசும், எங்கும் வாழக்கூடிய வல்லமை படைத்த மக்களாக, ஒரு நாடு ...

யாதுமூரே என்பதற்கிணங்க ..., ஒரு நிலமற்ற நாடு...

யாவரும் கேளீர் என்பதற்கிணங்க ..., வாழத் தெரிந்த மக்களாக, ஒரு உலகம் பரந்த நாடு ...

நாமவர் விண்வெளி கால இனமாக
..., நம்மவர் வழியில் ... ஒரு மாய நாடு ...

அறிவை ஆயுதமாகவும் ... ஆக்கத்தை தத்துவமாகவும் கொண்ட, ஒரு நாடு ... நமிழ் உலகம் ! ... நமிழ்லகம் !!

:):lol:

-

Edited by ஜெகுமார்

ஒரு சிறு தீவு. வாழ்ந்த இரண்டு இனமும் ஆழுக்காள் அடிமை இன்றி வாழும் இல்லையேல் இரண்டும் இல்லாமல் போகும் என்ற நிலைக்கு மண்டை விறைச்ச நாலு பேர் முனைந்தால் பலசாலிகள் கூடி நின்றாலும் என்னதான் செய்ய முடியும்? ஒடுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு 98 வீத தமிழ் மக்களும் பழக்கப்பட்டவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இரண்டுவீதமானவர்கள் இந்தப் பழக்கத்திற்கு நூறுவீதம் நேர்மாறனவர்கள். ஒன்றுபட்டு விடுதலை பெறுவதென்பது தமிழரை பொறுத்தவரை கல்லில் நார் உரிப்பதுக்கு ஒப்பானது. ஒடுக்குமுறைகளும் அதன் பல்வேறு வடிவங்களும் விடுதலைக்கான புதிய வழிகளை இறுதியில் உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும்.-----

-----

தமிழினத்தின் மீது வைத்திருக்கின்ற அதீத நம்பிக்கையில் நான் முன்வைத்த மூன்றாவது யோசனை பற்றி சொல்ல வேண்டும். இரண்டு நாட்களுக்குள் கட்டாயம் சொல்கிறேன்.

சோர்வும், விரக்தியும், ஆத்திரமும், சோகமும்..... தமிழனை சூழ்ந்துள்ள இந்த தருணத்தில், உங்களது மூன்றாவது யோசனையாவது கைகொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோர்வும், விரக்தியும், ஆத்திரமும், சோகமும்..... தமிழனை சூழ்ந்துள்ள இந்த தருணத்தில், உங்களது மூன்றாவது யோசனையாவது கைகொடுக்க வேண்டும்.

புலிகளது ஆயுத மௌனிப்பு, சம்மந்தர் அன்டு கோ வினுடைய சரணாகதி அரசியல் , இதன்பின் என்ன செய்யலாம் என்ற அங்கலாய்ப்பில் உள்ள தமிழினத்தக்கு கற்பனைகள் கடந்த நிய உலகத்தில் தமிழினம் எப்படித் தன்னைத் தகவவமைத்துக் கொள்ளலாம் என்பதை முன்வைப்பீர்களா? னால் பயனுடைத்தாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய சூழ்நிலையில் நடைமுறைக்கு சாத்தியமான யோசனை இருந்தால், சொல்லுங்கள்.

தற்போதைய சூழ்நிலையில் நடைமுறைக்கு சாத்தியமான யோசனை இருந்தால், சொல்லுங்கள்.

... பட்டியலில் யாராக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் கூட !!

கூட்டமைப்பினரை வெல்ல வைக்கவேண்டும் ... வேறு வழியில்லை ...?

பின்பு அவர்கள் தடம் புரண்டு விடாமல் கவனமாகக் கண்கானிக்க வேண்டும் ...
:)

-

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டத்தை இனிப் புலம்பெயர் நாடுகளில்தான் நடாத்தவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.