Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேற்றம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டும் அதன் பின்னரும் அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews

Edited by நிழலி

இலங்கையின் இந்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உலகில் விற்று ...... திரிகிறார்கள்.

இவர்கள் இருந்தும் ஒன்று , இல்லாவிட்டாலும் ஒன்று.

ஆனால் வாக்கு போடும் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவே வேறு என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா ஏன் எம்மைச்சோதிக்கிறாய்...எமக்கு ஏனிந்த தண்டனைகள்...தேவாரம் பாடி அங்கப்பிரதட்டை,முள்ளுக்காவடி எடுப்பதெல்லாம் வீண்தானா? ஓ நீ அவன் வீட்டுக்காறந்தானெ....அவர்கள் நினைத்தது நடக்குது...அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்....எமக்கு நீ எதச்செய்யப்போகிறாய்...

இப்படியே எல்லோரும் பிரிந்து போவதைத்தான் சிங்களம் விரும்பியது.

பலமானது தமிழர் நலன் களில் உணர்வு மிக்கதுமான ஒரு அமைப்பின் தோற்றத்துக்கு இது அத்திவாரமாகட்டும்.

தமிழர்களுக்கு நன்மைகளை வழங்கும் ஒரு அமைப்பின் அவசியத்தை கஜேந்திரன் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்... வெளியிலை விடப்பட்ட அனைவரையும் உள்வாங்கி கொள்ள வேண்டும்...

Edited by தயா

இப்படியே எல்லோரும் பிரிந்து போவதைத்தான் சிங்களம் விரும்பியது.

இதைத்தான் இங்கு நாமும் விரும்பினோம்..

இதைத்தான் இங்கு நாமும் விரும்பினோம்..

ஒற்றுமை இல்லாமல் உள்ளுக்கை இருந்து ஆளுக்கு ஆள் புடுங்கு படுகிறதை விட நேரான சிந்தனை உள்ளவர்கள் வெளியில் வந்து இணைஞ்சு மக்களை வளிப்படுத்தலாம்... அதில் கெடுதல் கிடையாது... உண்மையான சீரான செயற்பாட்டாளர்களை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதுக்கும் இல்லை... அவர்கள் பலமானவர்களாக மாற காலம் ஆகும் எண்றும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடங்கள் போகலாம்...

கூட்டமைப்பு என்பது மக்களின் முன் உள்ள பிரச்சினைகள் அதை அணுக வேண்டிய முறைகளோடு ஒப்பிடும் போது ஒண்றும் பெரிய அமைப்பும் இல்லை... தீயவைகள் விலகினாலே சிறப்பான புதியவைகள் உருவாக்க படும்...

தமிழ் மக்களுக்கு தேவையாவது மாற்றம் ஒண்றுதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுத்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பில் சம்பந்தர் இருப்பது அழகல்ல, அவரும் வெளியேறி..... முந்தி என்ன கட்சியில் இருந்து வந்தாரோ.... அங்கிருந்து தேர்தலில் போட்டியிடுவது தான் முறையான செயலாக இருக்க முடியும்.

இப்படித்தான் கூட்டமைப்பு உருவாக்காப் பட்ட போது ஆனந்த சங்கரி என்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியை முடக்கி வைத்து இப்போ.... 180 வாக்குகள் எடுத்து யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்றிய அல்ப புத்தியுடன் இருக்கிறார்.

.

ஒற்றுமை இல்லாமல் உள்ளுக்கை இருந்து ஆளுக்கு ஆள் புடுங்கு படுகிறதை விட நேரான சிந்தனை உள்ளவர்கள் வெளியில் வந்து இணைஞ்சு மக்களை வளிப்படுத்தலாம்... அதில் கெடுதல் கிடையாது... உண்மையான சீரான செயற்பாட்டாளர்களை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதுக்கும் இல்லை... அவர்கள் பலமானவர்களாக மாற காலம் ஆகும் எண்றும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடங்கள் போகலாம்...

கூட்டமைப்பு என்பது மக்களின் முன் உள்ள பிரச்சினைகள் அதை அணுக வேண்டிய முறைகளோடு ஒப்பிடும் போது ஒண்றும் பெரிய அமைப்பும் இல்லை... தீயவைகள் விலகினாலே சிறப்பான புதியவைகள் உருவாக்க படும்...

தமிழ் மக்களுக்கு தேவையாவது மாற்றம் ஒண்றுதான்...

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் இது ஒரு சாதாரண அரசியல் சூழலுக்குத்தான் மிகப்பொருந்தும்.

தமிழ் மக்களின் இன்றைய கால சூழலில் அதுவும் பேரினவாதம் எழுச்சி கொண்டுள்ள பொழுது சட்ட வரைமுறைகள் எல்லாம் கூறுபோடப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் உரிமைப் போராட்டம் செய்யவேண்டி உள்ளது.

இப்போதுள்ள சூழலில் பிரிந்து நின்று ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் நின்றால் என்னவாகும்? எங்கள் வாக்குகள் திதைவடைந்து பிரதிநிதித்துவம் பறிபோகும். அதிலும் இந்த விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மையினரை எப்படி ஒதுக்கும் என்று உங்களுக்குத் தெரியும் தானே.

இப்படியே உதிரிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிவு செய்யப்பட்டால் எங்களுடன் எவன்தான் வந்து கதைப்பான்?

இறுதியில் தெரிந்தோ தெரியாமலோ சிங்களத்தின் வலையில் விழுவோம். நம்பினால் நம்புங்கள் நாங்கள் எங்களுக்குள் அடிபட அடுத்துவரும் ஏழு ஆண்டுகளில் ராசபக்ச தமிழர்களை சிங்கலவர்காக்கி விடுவான்.

Edited by Sooravali

ராசபக்ச சகோதரர்களின் திட்டங்களில்

யாழ் குடாவில் சிங்கள மக்களை சிறிது சிறிதாக காலூன்ற வைப்பது.

தமிழ்ப் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் அதிபர்களை நியமிப்பது.

அரசாங்க அலுவலகங்களில் சிங்கள முகாமையாளர்களை நியமிப்பது.

பாடத்திட்டங்களில் மெதுவாக சிங்களத்தை புகுத்துதல்.

படிப்படியாக தமிழ் மக்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தை குறைத்து அவர்களை சிங்கள அரசியல் வாதிகளில் தங்கி நிக்க வைப்பது.

இவை அனைத்தும் அடுத்து வரவிருக்கு வடமாகான சபைத் தேர்தலுடன் தீவிரமாக அரங்கேறும்.

இப்போதுள்ள நிலையில் ஒற்றுமையைத் தவிர இதை எதிர்க்க எங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை.

நான் நினைக்கிறன் ஒரு சமுகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பயமிருக்க வேண்டும்.பயம் இல்லாவிடில் அவர்கள் இப்படி பிரிந்துதான் போவார்கள் .புலிகள் இல்லை என்றவுடன் தமிழனுக்கும் பயமில்லை ,சிங்களவனுக்கும் பயமில்லை.

தமிழனும் ஜனநாயகம் பேசுகிறான்,இவனும் பிரிந்து அரசியல் செய்யிறான்.

சிங்கள்வனும் ஜனநாயகம் பேசுகிறான்,இவனும் பிரிந்து அரசியல் செய்யிறான்.

புலிகள் இருந்திருந்தால் பொன்சேகா இன்றும் கீரோதான்.புலிகள் இல்லை பொன்னர் சீரோ

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் இது ஒரு சாதாரண அரசியல் சூழலுக்குத்தான் மிகப்பொருந்தும்.

தமிழ் மக்களின் இன்றைய கால சூழலில் அதுவும் பேரினவாதம் எழுச்சி கொண்டுள்ள பொழுது சட்ட வரைமுறைகள் எல்லாம் கூறுபோடப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் உரிமைப் போராட்டம் செய்யவேண்டி உள்ளது.

இப்போதுள்ள சூழலில் பிரிந்து நின்று ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் நின்றால் என்னவாகும்? எங்கள் வாக்குகள் திதைவடைந்து பிரதிநிதித்துவம் பறிபோகும். அதிலும் இந்த விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மையினரை எப்படி ஒதுக்கும் என்று உங்களுக்குத் தெரியும் தானே.

இப்படியே உதிரிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிவு செய்யப்பட்டால் எங்களுடன் எவன்தான் வந்து கதைப்பான்?

இறுதியில் தெரிந்தோ தெரியாமலோ சிங்களத்தின் வலையில் விழுவோம். நம்பினால் நம்புங்கள் நாங்கள் எங்களுக்குள் அடிபட அடுத்துவரும் ஏழு ஆண்டுகளில் ராசபக்ச தமிழர்களை சிங்கலவர்காக்கி விடுவான்.

பஸ் போனதுக்கு பிறகு கையை காட்டி எதையும் சாதிக்க முடியாது... நீங்கள் சொல்வது போல சிறுபான்மையினர் ஒண்றாக இருக்க வேண்டும் எண்றால் தமிழ் அரசியல் வாதிகள் பிரி படுவதுக்கும் முன் எதையாவது செய்யலாம்... அப்படி செய்வது உண்மையாக தமிழர்களுக்காக எதையாவாது செய்பவர்களை அடையாளப்படுத்த உதவ வேண்டும்...

இருப்பதை சிதைக்க கூடாது ஆனால் தமிழ் கூட்டமைப்பில் இல்லாத ஒண்றை சிதைப்பது தவறு இல்லை... அந்த இல்லாத ஒண்று கொள்கை... அவர்களிடம் இருப்பது இந்திய பற்று... அதை எங்களால் சிதைக்க முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டமைப்பை ஆதரித்து 22 பொம்மை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதை விட தமிழரின் நலன் பேணும் 4 உறுப்பினர்களைத் தெரிவு செய்வது மேல். ஆகவே கஜேந்திரகுமார் தலைமையில் கூட்டமைப்பால் ஒதுக்கப்படும் தேசியத்திற்கு பாடுபடும் உண்மையானவர்களை ஒன்று சேர்த்து ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்துவதே நல்லது.செல்வம் அடைக்கலநாதனும் பிரிந்து வந்தால் நல்லது.சம்பந்தரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தனித்து நின்று டெல்லியில் அலுவலகம் திறந்து வைத்து ஈ ஓட்டட்டும்.அல்லது ஆனந்தசங்கரியைப் போல கடிதத் தலைப்புக் கட்சி நடத்தட்டும்.

பஸ் போனதுக்கு பிறகு கையை காட்டி எதையும் சாதிக்க முடியாது... நீங்கள் சொல்வது போல சிறுபான்மையினர் ஒண்றாக இருக்க வேண்டும் எண்றால் தமிழ் அரசியல் வாதிகள் பிரி படுவதுக்கும் முன் எதையாவது செய்யலாம்... அப்படி செய்வது உண்மையாக தமிழர்களுக்காக எதையாவாது செய்பவர்களை அடையாளப்படுத்த உதவ வேண்டும்...

இருப்பதை சிதைக்க கூடாது ஆனால் தமிழ் கூட்டமைப்பில் இல்லாத ஒண்றை சிதைப்பது தவறு இல்லை... அந்த இல்லாத ஒண்று கொள்கை... அவர்களிடம் இருப்பது இந்திய பற்று... அதை எங்களால் சிதைக்க முடியாது...

இதில இனி விவாதிக்க ஒண்டுமில்லை..

பிரிக்கத்தானே வேணும் பின்ன பிரிச்சுவிடுவம்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வித்தியாதரன்.. சம்பந்தரின் சாணக்கியங்களில் ஒன்றாக இதனை இனங்காட்ட ஆளின்றி சம்பந்த.. பிரேம.. இந்திய நமக குழு கஸ்டப்படுகிறதாமே..!

தேசிய தலைவர் இவர்களை எல்லாம் எவ்வளவு கஸ்டப்பட்டு ஒருங்கிணைத்திருப்பார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பிரபாகரன் என்ற அந்த நாமமே இந்த இனத்தை இவ்வளவு காலமும் இயன்றவரை ஒற்றுமைப்படுத்தி வந்தது. இன்று அதன் அஸ்தமனத்தோற்றம் கண்டதும்.. தமிழ் தேசியம் பேசிய இனம்.. சிங்கள தேசியத்துக்குள் சரணடைய இந்திய தேசியத்தின் உதவியை தேடி ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் நாடே உருப்படக் காணம்.. இதற்குள் சம்பந்தன் சாணக்கியம் செய்து.. தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து மீட்டிடப் போறாராம். பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்பதை தவிர.. இவர்களுக்கு புத்தி சொல்லி மூளையில் பதிய வைக்க முடியாது. அப்படி முடிந்திருந்தால்.. முள்ளிவாய்க்காலில் இருந்து அழுகுரல்கள் எழுந்த போது.. இந்தக் கூட்டமைப்பு வாழாது கிடந்திருக்காது.

அந்த வகையில்.. கொள்கை விலகும் கூட்டமைப்பை விட்டு விலகுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம் தான். ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களோடு வாழத்தயாராகி விட்ட சம்பந்த சாணக்கியம்.. ராஜபக்சவோடு கூட்டணி அமைப்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும். :lol::wub::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே"

ஒண்றும் செய்யாத கூட்டமைப்பின் ஆசணங்கள் குறைந்து உபத்திரம் கொடுக்கும் ஒட்டு குழுக்களின் ஆசணங்கள் கூடவே வழி வகுக்கும். :wub::lol:

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறையே தன்னையும் தன் குடும்பத்தையுமே கொள்கைக்காக கொடுக்கும் நல்ல தலைவர்கள் தோன்றுவார்கள், தமிழ்சாதி நல்ல தலைவனுக்காக இன்னமும் ஆயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும். :):wub:

பிரியிறதுதான் பிரியிரிங்கள் ஆளுக்கு ஒரு பக்கமா பிரியாமல் ஒரே கொள்கை உடைய கட்சிகளாவது ஒருபக்கத்துக்கு போய் நின்று தனிய கேளுங்கோ.

கூடியளவுக்கு தமிழ் ஆசனங்கள் தமிழ் மக்களே வெல்லவேண்டும்... குறிப்பாக திருகோணமலை மற்றும் திகாமடுல்ல போன்றன இழக்காமல் பார்க்கவேண்டும்.

கடவுளே...என்ற மனிசி இந்தக் கவிதையை பார்க்ககூடாது !!

நெடுக்ஸ் அவர்களிடம் இருந்த அதிகாரமும் ஆயுதமும் தான் காரணம் . ஆயுதம் இல்லாமல் புலிகள் இதை சொல்லியிருந்தால் சம்பந்தன் கோஸ்டி அப்பவே கேட்டுஇருக்கமாட்டார்கள்.

ஒரு கதைக்கு தலைவர் இன்றைய சூழ்நிலையில் அறிக்கைவிட்டாலும் சம்பந்தன் கோஸ்டியை அசைக்கமுடியாது

ஆயுதம்தான் ஒற்றுமைக்கு ஒரே வழி ...ஆயுதம் இல்லை என்றால் புறம்போக்கேல்லாம் ஜனநாய்கவாதிகள் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அடியைபோல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டினம்" என்பது ஆண்றோர் வாக்கு. :wub:

பொதுவாக 50 - 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லல்படும் தமிழினத்தை வழிநடத்தும் தகுதியற்றவர்கள். அல்லது அந்த வயதுக்குள் வெற்றிகரமாக வழிநடத்தி தமது தகைமைகளை, விவாதத்துக்கு அப்பால் நிலைநிறுத்தி இருக்க வேண்டும்.

இல்லையெனின் அவர்கள் திறமையான, தகுதி உடைய, துடிதுடிப்பு மிக்க இளையவர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு ஆலோசனை கூறுவதோடு, வழிகாட்டுவதோடு நின்று விடவேண்டும்.

வரலாற்று கதாபாத்திரங்களும் (இதிகாசங்கள், பைபிள் கதைகள், சுபி கதைகள், புராணங்கள் .....) இதைத்தான் எமக்கு புகட்டுகிறது!

கூட்டமைப்பில் உள்ள கிழடு கட்டைகள் இதுவரை தமது வழிநடத்தும் திறமைகளை வெளிப்படுத்தியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

2010 மே19 க்கு பின்னர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல படைப்பிரிவுகள் இயங்கவுள்ளன.... அப்போது இவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்படும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் உள்ள கிழடு கட்டைகள் இதுவரை தமது வழிநடத்தும் திறமைகளை வெளிப்படுத்தியது இல்லை.

உண்மை. காலம் காலமாக அரசியல்செய்து தோற்றுப்போனவர்கள் நந்திமாதிரி இருப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல. இந்தத் தேர்தலோடு பலர் பாலபாடம் படிக்கப் போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.