Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

[ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி

gajendrakumar_ponnampalam.jpg

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் எஸ்.கனகரத்னம் ஆகியோரே ஆளும் கட்சியில் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடவுள்ளனர்.

தங்கேஸ்வரி மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிஷோர் சிவநாதன் வன்னித் தோ்தல் மாவட்டத்திலும், கனகரட்ணம் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்திலும் போட்டியிடவிருக்கின்றார்கள்.

இதே வேளையில் - கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக தோ்தல் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசரப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் இன்று அல்லது நாளை இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் அடிப்படைகளாக இருந்த - தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர் தாயகம் ஆகிய கொள்கைகளில் இருந்து கூட்டமைப்பு தடம் மாறி விட்டதாகக் குறி்ப்பிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். புதிய கட்சியின் தலைவராக சிறிகாந்தா செயற்படுவார் எனவும், செயலாளராக சிவாஜிலிங்கம் இயங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. ஏனைய 17 மாவட்டங்ளிலும் இடதுசாரி விடுதலை முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் -

“தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது. இது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தப் போரை ஆரம்பித்தது இந்தியா தான் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே கூறியிருந்தார்.

மாவிலாறு பிரச்சினையில் போர் தொடங்கிய தருணத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியப் பிரதமரை சந்தித்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவில்லை.

2007ஆம் ஆண்டில் சுமார் 15 வரையான வெளிநாடுகளுக்குச் சென்று போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவுக்கு மட்டும் செல்லாதது ஏன்?

இந்திய பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டது. இவர்களும் அதில் விரும்பியே கலந்து கொண்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட சிறிகாந்தா -

“சோனியா அரசுக்கு விசுவாசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது” என்று குறிப்பட்டார்.

puthinapalakai.com

தலைப்பே குசும்பா இருக்கு

எதையெல்லாம் சிங்களம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து, எம்மவர்களிடையே மாடு பிடிப்பதற்கும் அடியாட்களை வைத்து துரத்தி ஓரிருவரை அமத்தியதோ, .. என்ன நீ துரத்துகிறது நாமே உன் வலையில் வீழ்கிறோம் என தமிழ்த்தேசியம் போட்டி போட்டு செயற்படுகிறது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

அப்படி ஒண்டு இருந்தா தானே உடையிறதுக்கு

தன்னையே மற்றவர்களின் துணையுடன் அழித்துக் கொள்ளும் மகா சிறந்த இனம் தமிழினம்.

கடந்த சனாதிபதித் தேர்தலில் இருந்து ஆடாத ஆட்டமில்லை...

எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் சிவாஜிலிங்கத்தை திட்டித் தீர்த்தார்கள். நல்லதெது கெட்டதெது என்று இல்லாமல் கூட்டமைப்பை கடிந்தார்கள்.. இப்ப கூட்டமைப்பு உடையப்போகுதேன்று ஒப்பாரிவேறு..

இவர்கள் எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் வரும்போதே தெரிகிறது இவர்களின் அறிவின் ஆராச்சி. எந்த முடிவையும் எடுத்து யாரையும் விமர்சிக்கு முன்னர் முடிந்தளவுக்கு நிதானத்தை கடைப்பிடியுங்கோ.

இன்று கூட்டமைப்பை தேசியம் கூறி சிதைப்பவர்கள் நாளைக்கு அதுக்கு வருந்தவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பாவது உடையிறதாவது

கருணாகூட புலனாய்வு வேலைகளில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

துரோகிப்பட்டங்கள் எல்லாமே போலி..... :lol:

கூட்டமைப்பாவது உடையிறதாவது

கருணாகூட புலனாய்வு வேலைகளில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

துரோகிப்பட்டங்கள் எல்லாமே போலி..... :)

இனி தொரோகிப்பட்டம் கொடுக்கிறதுக்கு ஒருத்தனும் மிச்சமில்லை

பேசாமல் எல்லாரும் தங்களுக்கு தங்களுக்கு துரோகிப்பட்டம் கொடுக்கவேன்டியான்...

தமிழரின் தேசியத் தலைமையா? யார் தேசியத் தலைமை? :)

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கமும் சிறிகாந்தாவும் சுப்பிரமணியசுவாமி றேஞ்சுக்குப் போயிட்டினம்.இவையள கூட்டமைப்பில இருந்து விலத்தினதுக்கு தமிழ்சனம் கவலைப்படவில்லை.எங்கே மக்கள் ஆதரவு பெற்ற எம்பிக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து காங்கிரஸ் தலமையில் ஒரு பலமான கூட்டமைப்பை உருவாக்கி விடுவார்களோ என்ற அவசரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் நின்றது போல இப்பொழுதும் அவசரப்படுகிறார்கள்.தங்கள் அமைப்பில் அதிருப்பியாளர்கள் வேண்டுமானால் சேரலாம் என்று அறிக்கை விடுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய முடிவுகளை மறந்து விட்டு செயல்படுகிறார்கள். ஏன் இந்த அவசரம் தாமே புதிய கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றுவதற்காகவா??????????????

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ மஹிந்த ஆசைப்பட்டது தானாவே நடக்குது. எங்களுக்கு தான் எந்த விடிவும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி தொரோகிப்பட்டம் கொடுக்கிறதுக்கு ஒருத்தனும் மிச்சமில்லை

பேசாமல் எல்லாரும் தங்களுக்கு தங்களுக்கு துரோகிப்பட்டம் கொடுக்கவேன்டியான்...

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போது அது ஒன்றாக இருந்தது,இப்போது உடைவதற்கு..!

அதனை தமிழர்களின் உண்மையான தேசியதலைமையான விடுதலைப்புலிகள் ஒன்றாக்கி வைத்திருந்தார்கள்.

உடைவதுநல்லதுதான்.அதற்குள்ளாக நல்லகாத்திரமான தலைமைஒருவேளை வெளிவரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது அது ஒன்றாக இருந்தது,இப்போது உடைவதற்கு..!

அதனை தமிழர்களின் உண்மையான தேசியதலைமையான விடுதலைப்புலிகள் ஒன்றாக்கி வைத்திருந்தார்கள்.

உடைவதுநல்லதுதான்.அதற்குள்ளாக நல்லகாத்திரமான தலைமைஒருவேளை வெளிவரலாம்.

இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அப்படி ஒன்று உருவாகப்போவதில்லை. கஜேந்திரனதும், சிவாஜி லிங்கத்தினதும், இவர்களை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள விசைப்பலகை வீரர்களினதும் செயல்களால் ஆகப்போவது, தமிழர் ஒற்றுமை மேலும் மேலும் சீர்குலைந்து சிங்களத் தேசிய கட்சிகளுடன் ஒன்றாகி கரைந்து போவதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றில் டிப்ளமற்றிக் சிங்கங்களும் விசைபலகை பட்டதாரிகளும் இருக்கும்வரை யாருக்கும் அடிமைச்சேவகம் செய்வதில் தமிழர் ஒற்றுமையாக இருக்கமுடியும்.

பொம்மலாட்ட பொம்மைகளாக தமிழ் தலைமைகள் இருக்கும் வரையில், சுயமாக இயங்காத வரைக்கும், உந்த உடைவுகளும், பிரிவுகளும் நிரந்தரமாக இருக்கும்.

உடையுதோ இல்லையோ உடைய வேண்டும் என பல வாலுகள் குத்தி முறியினம்.யார் எப்படி குத்தி முறிந்தாலும் தேசியக்கூட்டமைப்பு வெல்வது உறுதி.ஏதோ அவர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியலை செய்துகொண்டு இருக்கப்போகின்றார்கள்(80 களுக்கு முன் இருந்தமாதிரி)

புலம்பெயர்ந்தவர்கள் தான் தாங்கள் சரியான குளிரிலும் போராட்டம் நடாத்தியபடியால் தமிழீழம் தவிர எந்த தீர்விற்கும் தயாரில்லையாம்.

நேற்று ஒருவர் வந்து வானொலியில் சொன்னார் புலத்தில் குருதியும் புலம் பெயர்ந்தவர்கள் வியர்வையும் சிந்திய போராட்டம்

எனவே எங்களுக்கும் அங்கிருக்கும் மக்களைபோல் அதே உரிமைஇருக்கு எமது தலைவர்களை தெரிவு செய்ய என்று.அதாவது குருதி=வியர்வை என்றா.என்னா தத்துவம்.

உடையுதோ இல்லையோ உடைய வேண்டும் என பல வாலுகள் குத்தி முறியினம்.யார் எப்படி குத்தி முறிந்தாலும் தேசியக்கூட்டமைப்பு வெல்வது உறுதி.ஏதோ அவர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியலை செய்துகொண்டு இருக்கப்போகின்றார்கள்(80 களுக்கு முன் இருந்தமாதிரி)

புலம்பெயர்ந்தவர்கள் தான் தாங்கள் சரியான குளிரிலும் போராட்டம் நடாத்தியபடியால் தமிழீழம் தவிர எந்த தீர்விற்கும் தயாரில்லையாம்.

நேற்று ஒருவர் வந்து வானொலியில் சொன்னார் புலத்தில் குருதியும் புலம் பெயர்ந்தவர்கள் வியர்வையும் சிந்திய போராட்டம்

எனவே எங்களுக்கும் அங்கிருக்கும் மக்களைபோல் அதே உரிமைஇருக்கு எமது தலைவர்களை தெரிவு செய்ய என்று.அதாவது குருதி=வியர்வை என்றா.என்னா தத்துவம்.

புலம்பெயந்தவை என்ன வேற்று கிரகத்திலை இருந்து இடம் பெயந்து வந்தவையோ....??? இல்லை புலம்பெயந்தவை அனுப்புற காசிலையும் தாயகத்திலை யாரும் தங்கியும் இல்லையோ...??

அங்கை அடி விழுந்தால் இங்கை நிண்டு நாங்கள் அலற வேணும்... புணர் நிர்மானத்துக்கு எல்லாம் நிலத்துக்கை இருந்து கிண்டி அள்ளின காசை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி எறியவும் வேணும்... ஆனால் எருமை மாட்டிலை மழை பெய்த மாதிரி அதுக்கும் மேலை ஒண்டும் சொல்லப்படாது... வாயை மூடி கொண்டு இருக்க வேணும் அப்பிடித்தானே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.