Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது சரியான வயது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் புலம் பெயர் நாட்டில் எமது சமூகத்தில் திருமணம் முடிக்க எது சரியான வயது எனக் கருதுகிறீர்கள்...குறிப்பாக பெண்கள் திருமணம் முடிப்பதற்கு எது சரியான வயது என நினைக்கிறீர்கள்...அதற்கான காரணம் என்ன?

புலம் பெயர் நாட்டில் நான் கண்ட சில பெண்கள் நாட்டுப் பிரச்சனை காரணமாக பதினெட்டு வயதிலேயே மணம் முடித்து உள்ளார்கள்..இது அவர்களை உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்காதா...காரணம் நாட்டில் இருந்து வரும் பெண்கள் அரைவாசிப் பேர் வீட்டில் தான் இருக்கிறார்கள் வேலைக்கு போவதில்லை அப்படி வேலைக்குப் போனாலும் குழந்தை பிறந்தவுடன் நின்று விடுவார்கள்..மனைவி வேலைக்குப் போகாததால் ஆண்கள் இரவு பகல் பாராது கடுமையாய் உழைக்க வேண்டி உள்ளது...இதன் காரணமாக ஆண்களால் தமது மனைவியுடன் பொழுதைக் கழிக்க முடியாமல் உள்ளது...இதனால் அதிகம் பாதிப்படைவது பெண்கள் அல்லவா...ஆண்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பொழுது போய் விடும் ஆனால் பெண்களுக்கு? இதனால் பெண்கள் மன ரீதியான அழுத்ததிற்கு ஆளாகுவார்கள் அல்லவா.

ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் பதினெட்டு வயதிலிருந்து நாற்பத்தி ஜந்து வரைக்கும் உள்ளவர்கள் திருமணம் முடிக்க எந்த தடையும் இல்லை என நினைக்கிறேன்...காரணம் ஆண்களுக்கு வயது போனாலும் அவர்கள் இள வயது பெண்களை மணம் முடிப்பதால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு காணப்படுகிறது ஆனால் பெண்கள் முப்பது முப்பதைந்து வயதைத் தாண்டினால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது இதற்கு என்ன காரணம்...இதனால் அவர்கள் இருபத்தி ஜந்து வயதுக்கு முதல் மணம் முடிப்பது கட்டாயம் ஆகிறது..ஆனால் நாகரீகம் வளர்ச்சி அடைய அடைய பெண்களது கல்வி,தொழில் வாய்ப்பு,குடும்ப சூழ்நிலை போன்ற்வற்றால் அவர்களது திருமணம் தள்ளிப் போனால் இது அவர்களது தாம்பத்திய வாழ்க்கைக்கோ அல்லது குழந்தை பெறுவதையோ பாதிக்கும் எனக் கூறுகிறார்கள் இது உண்மையா...

மேலும் விதவைகள்,விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்வதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன... ஆண்கள் மணம் முடிக்கா விட்டாலும் தனித்து வாழலாம் ஆனால் பெண்களுக்கு அது கஸ்டம் என நினைக்கிறேன்.தயவு செய்து இது பற்றிய ஆக்க பூர்வமான கருத்துகளையும்,விமர்சனங்களையும் முன் வையுங்கள்.

  • Replies 59
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பொதுவாக் இருபத்தி மூன்று வயதுக்கு பின் திருமணம் செய்யலாம் .அதற்கு முன் சந்த்ர்பப் வசத்தால் திருமணம் செய்ய நேர்ந்தால் இந்த விஞ்ஞான் உலகில் அதிக வசதி வாய்ப்பு இருக்கின்றன் குழந்தை பேற்றை தள்ளி போட.தீர்மானம் எடுப்பதற்கு ..ஆணும் பெண்ணும் இணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு .... படிப்பு..... வேலை வாய்ப்பு.... வசதி என்பவற்றை தேடிக்கொண்டு குழந்தை பேற்றை தீர்மானிக்கலாம். ஊரில் குழந்தை கிடைத்தால் தாயாரின் கவனிப்பு ஊரார் உறவுகளின் உதவி இருந்தது. வெளி நாட்டில் அந்த வசதி குறைவு எனவே தம்பதிகள் தான் குழந்தை பேற்றை தீர்மானிக்கவேண்டும். ஆண்கள் தங்கள் குடும்பத்தை கொண்டு நடத்த உடல்.... மன ....பொருளாதார ரீதியாக் தயாரான பின் திருமணம் செய்யலாம் . இதில் குடும்ப பொறுப்புகளும் அடங்கும். விவாக் ரத்து பெற்றவர்கள் தமக்கு துணையை, காலம் கடந்த பின் யோசிக்காது , தேடிக்கொள்ளவேண்டும் . தாரம் இழந்தவர்கள் குழந்தைக்க்ளுடன் இருப்பின் ...சற்று சிந்தித்து முடிவெடுக்கவேண்டும். இவை எல்லா வற்றையும் தீர்மானிக்கவேண்டியது .திருமணம் செய்ய இருக்கும் ,அந்த இருவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் 16 வயதுப் பெண் சட்டப்படி பாலுறவு வைத்துக் கொள்ளலாம். அவளின் விருப்பத்திற்கு இணங்க. ஆனால் 16 வயதுப் பெண்ணை ஆண்கள் கட்டாயப்படுத்தி பாலுறவு கொண்டால் அது வன்புணர்வாக கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும்.

பெண்கள் திருமணம் செய்ய என்ன வயது சரி என்று எனக்குத் தெரியல்ல. ஆனால் திருமணம் என்பதை இன்று பெண்கள் பிற தேவைகளிற்கும் பயன்படுத்துவதால் அந்தத் தேவைகளின் காலத்தோடு ஒட்டி அவர்களின் திருமணமும் நடக்கிறது.

ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஊரில் வந்து நின்று பிள்ளைக்கும் ஒரு 16 வயதிருந்து.. அவரின் கண்ணில் இவா பட்டு புடுச்சுப் போச்செண்டு வையுங்கோ.. அதுவும் பெற்றோர் நடுத்தர அல்லது வறிய குடும்பம் என்று வையுங்கோ.. உடன சாடை மாடையா கலியாணம் பேசி.. கட்டி அனுப்பி வைச்சிடப் பிளான் போட்டிருவினம். இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில.. இதுதான் திருமணம் வயதென்று எப்படி வரையறுக்கிறது..???!

ஏதோ தேவையைப் பொறுத்து கட்டிக்கொண்டு போக வேண்டியதுதான். வேற என்னத்தைச் சொல்லலாம்.. இந்த சமுதாயத்திற்கு. நாங்கள் என்னதான் விஞ்ஞானம் அறிவுரை சொன்னாலும் எவன் கேட்கப்போறான். எல்லாம் சுய தேவைகளைப் பொறுத்துத்தான்.. இன்று காதலும் சரி கலியாணமும் சரி. மனிசனை மனதை உடல் தகுதியை.. பொருண்மியத்தை எங்க பார்க்கிது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற ஒரு தகுதியும்.. சாமத்தியப்பட்ட ஒரு பொம்பிளையும் என்றால் எப்பவும் கலியாணம் கட்டலாம். இதுதான் எங்கள் சமுதாயத்தின் கொள்கை..! இது எங்க திருந்திறது..???! :blink::rolleyes:

Edited by nedukkalapoovan

நெடுக்கு அண்ணே முதலில தாம்பத்திய உறவுன்னா என்ன என்று சொல்லுங்கண்ணே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் எனக்கும் ஒரு டவுட் இருந்தது ..சரியான கேள்வி....

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆண்களுக்கு வயது போனாலும் அவர்கள் இள வயது பெண்களை மணம் முடிப்பதால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு காணப்படுகிறது ஆனால் பெண்கள் முப்பது முப்பதைந்து வயதைத் தாண்டினால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது இதற்கு என்ன காரணம்...இதனால் அவர்கள் இருபத்தி ஜந்து வயதுக்கு முதல் மணம் முடிப்பது கட்டாயம் ஆகிறது..

ஐம்பது வயதிலும் பிள்ளைகள் பெற்ற பெண்கள் உள்ளார்கள். பெண்களுக்கு 35 வயதிற்குப் பின் இடுப்பு எலும்புகள் விரிவடைந்து கொடுக்க சந்தர்ப்பம் இல்லாததால்,வயிற்றில் கத்தி வைத்துத் தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும்.

மற்றும்படி, திருமணம் முடித்த பின் விருப்பமான நேரம் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.

வயது போன காலத்தில் பிள்ளைகள் பெற்றால், பிறக்கும் பிள்ளை தாய், தகப்பனை ...... அம்மா, அப்பா என்று கூப்பிட கூச்சப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எது சரியான வயது! [தாம்பத்திய உறவில் ஈடுபட

இதற்கு வயது எல்லை கிடையாது .

இது நாடுக்கு நாடு வேறுபடும். மட்டுமல்லாது, அந்தந்த நாட்டின் கலாச்சாரத்துடன் சம்பத்தப்பட்டதுமாகும்.குத்துமதிப்பாக வயதெல்லை குறிக்கமுடியாது. வேண்டுமானால் உடல் மற்றும் மனம் ரீதியான நலன் கருதி மருத்துவர்கள் வயதெல்லையை குறிப்பிடலாம்.35வயதிற்கு மேற்பட்டு கருத்தரிக்கும் பெண்களை Pre Natal பரிசோதனை செய்கின்றார்கள்.மறுமணத்தை ஈ. வே.ராவே வலியுறித்தியவர்.ஆகவே மறுமணம் செய்வதொன்றும் சாமிக்குற்றமில்லை.

Edited by sitpi

  • கருத்துக்கள உறவுகள்

வயதெல்லை இல்லை எண்டாலும் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டால் ஆணும் சரி பெண்ணும் சரி 30 வயதிற்குள் திருமணம் செய்வதே சிறந்தது

Edited by vathavuran

  • கருத்துக்கள உறவுகள்

வயதெல்லை இல்லை எண்டாலும் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டால் ஆணும் சரி பெண்ணும் சரி 30 வயதிற்குள் திருமணம் செய்வதே சிறந்தது

இதனை எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் சில பரம்பரை நோய்களின் தாக்கம் இள வயதுத் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் அதிகம் இருப்பதையும் அதே நேரம் பிரசவம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் 35 வயதை தாண்டிய தாய் மாருக்கும் உள்ளதையும் மருத்துவ உலகம் கண்டே வருகிறது.

ஆண்களில் 40 வயதுவரை ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க எந்தச் சிக்கலும் எழுவதில்லை. குறைபாடுள்ள ஆண்கள் இள வயதினரிலும் காணப்படுகின்றனர். அதே நேரம் 60 வயதில் குழந்தைகளைப் பெற்ற ஆண்களும் உள்ளனர்.

அதுவும் இன்று ஐ வி எவ் என்ற மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் சில ஆண் உயிர் அணுகளையும் பெண்ணின் முட்டையையும் கொண்டே குழந்தைகளை ஆய்வுசாலையில் உருவாக்கி கருப்பையில் பதிக்கும் முறைகள் வளர்ந்துவிட்டுள்ள நிலையில்.. இந்தக் கருத்துக்கள் எவ்வளவுக்கு ஏற்புடையது என்பது கேள்விக்குறியே.

மருத்துவம் முன்னேறாத காலத்தில் என்றால் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். இன்று மருத்துவம் முன்னேறி விட்டுள்ளதுடன் ஆராய்ச்சிகளும் புதிய புதிய முடிவுகளைத் தந்து கொண்டிருக்கும் நிலையில்.. இதுதான் சிறந்தது என்று வரையறுப்பது கடினமானது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்போது பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் 30 வயதுக்கு குறைந்த ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை விட ஆரோக்கியத்தில் குறைந்தவர்களாக இலகுவில் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதற்கு பிரதான காரணமாக இப்ப இருக்கிற துரித உணவுகளினால் ஆண் விந்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் இது நிகழ்வதாகவும் வயது ஏற ஏற இதன் பாதிப்பு அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதன் முலத்தை இணைக்கலாம் ஆனால் வாசிச்ச வலைத்தளத்தை மறந்து விட்டேன்

Edited by vathavuran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனெனில் சில பரம்பரை நோய்களின் தாக்கம் இள வயதுத் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் அதிகம் இருப்பதையும் அதே நேரம் பிரசவம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் 35 வயதை தாண்டிய தாய் மாருக்கும் உள்ளதையும் மருத்துவ உலகம் கண்டே வருகிறது.

நெடுக்கு இந்த தகவலை எங்கு எடுத்தனீர்கள்? 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பிரவசம் சம்பந்தபட்ட பிரச்சனைகளும் இளையவர்களுக்கு பரம்பரையாக வருகிற வருந்தங்களும் கூட என?

நான் ஏற்றுக்கொள்கிறேன் 35 வயதிற்கு கூடியவர்களுக்கு பிரவசம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உண்டென ஆனால் அவர்களுக்கு பரம்பரையாக வருகிற வருந்தங்களும் மிக கூடுதலாக வரும் உதாரணத்துக்கு டௌன் சின்றோம் (Down syndrome)

Maternal age influences the chances of conceiving a baby with Down syndrome. At maternal age 20 to 24, the probability is one in 1562; at age 35 to 39 the probability is one in 214, and above age 45 the probability is one in 19.[56] Although the probability increases with maternal age, 80% of children with Down syndrome are born to women under the age of 35,[57] reflecting the overall fertility of that age group. Recent data also suggest that paternal age, especially beyond 42,[58] also increases the risk of Down Syndrome manifesting in pregnancies in older mothers.[59]

இதே போல ஆண்களுக்கு வயது கூடினாலும் வருகிற வியாதிகள் உண்டு ...

http://en.wikipedia.org/wiki/Paternal_age_effect

மற்றது வயது கூடும் பொது ஆணோ பெண்ணோ மற்ற மற்ற வியாதிகளால் பதிக்கப்படுகிற தன்மையும் உண்டு உதாரணம் பிரஷர் , டியாபெடிக் ....அவையும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கும்...

நீங்கள் சொல்லுவது மாதிரி நவீன மருத்துவ வசதிகள் உண்டேன்னிலும் அவை எல்லாருக்கும் கிடைப்பதில்லை..கனடாவில் அவை அரச மருத்துவ காப்புறுதிக்குள் வராது என்றே நினைக்கிறன் (உறுதியாக தெரியாது ) ...அவற்றிற்கான செலவுகள் மிக கூட ...

எனவே தாம்பத்திய உறவில் பிள்ளைகளும் வேண்டும் என்றால் 35 வயதுக்குள் தாம்பத்தியம் செய்வதே நன்று...ஏன் அந்த 35 , 25 நல்லம் என்று நான் சொல்லுவேன்.

மற்றது, தாம்பத்தியம் /தாம்பத்திய உறவு என்றால் கலியாணம் என்று எடுத்தால் ...நான் சொல்லுவேன் அதற்க்கு வயது இல்லை...நல்ல குடும்பத்தின் ஒருபகுதியே நல்ல நோய் நொடியற்ற குழந்தை பாக்கியம் ஆனால் அதுவே கலியாணம் என்றாகிரவராது. 18 வயதில் நல்ல அரோக்கியமான 1 / 2 குழந்தையை/களை வைத்து அந்த குழந்தை என்ன செய்யும்? அதேபோல் 40 வயதிலும் பிள்ளைகளை சரியாக வளர்க்கிற தாய்மாரை / தந்தைமாரை நான் பார்த்திருக்கிறேன் ...பார்த்துக்கொண்டிருக்கிறேன் ....

ஒரு சாதாரண பெண் தனது முதல் குழந்தையை ஆகக் கூடியது 25 - 27 வயதுக்குள் பெறுவதுதான் நல்லது என்று, தென்-கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்துள்ள தலை சிறந்த மருத்துவ - விஞ்ஞான ஆய்வுகூடத்தின் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். (இவர்கள் யார் என்றறிய இறுதிப் பந்தி பார்க்க).

இப்பிரதேச பெண்களில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், முதல் குழந்தையை 21 - 26 வயது இடைவெளிக்குள் பெறுவது தான் இருவருக்கும் நல்லது, ஆரோக்கியமானது என்கிறார்கள் அவர்கள்.

21 - 26 வயது இடைவெளியில் முதல் குழந்தை பெற்ற சாதாரண பெண்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 1000 குழந்தைகளில் 3 குழந்தைகள் சிறு பாதிப்புக்களுடன் பிறக்கின்றன. பாரிய பாதிப்புக்கள் மிக அரிது. இவர்களுக்கு, இரண்டாவது, மூன்றாவது, ... குழந்தைகள் பெறும் வயதுகள் பிரச்சினையாக அமைவதில்லை.

ஆனால், 27 - 32 வயது இடைவெளியில் முதல் குழந்தை பெற்ற சாதாரண பெண்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 1000 குழந்தைகளில் 195 குழந்தைகள் சிறு பாதிப்புக்களுடனும், 115 குழந்தைகள் கணிசமான பாதிப்புக்களுடனும், 60 குழந்தைகள் பாரிய பாதிப்புக்களுடனும் பிறக்கின்றன. இதில் கணிசமான உடல், ஆரோக்கிய பாதிப்புக்கள் உடன் தெரிவதில்லை என்றும், 9 - 40 வயதினுள் அவை வெளிப்படுகிறன என்றும் அந்த சிறந்த ஆய்வு நிலைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகையவர்களில் 35% ஆனவர்கள் குழந்தை உருவாக்க பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.

மேலும் குழந்தை உருவாக்கத்தை பிற்போட மருந்துகள் எடுப்பவர்களில் மேற்கூறிய பிரச்சினைகள் இரண்டு மடங்குகள் ஆகின்றன (குறைந்தது). அதிலும் பெண்கள் மருந்து எடுப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகையவர்களில் 70% ஆனவர்கள் பிற்காலத்தில் குழந்தை உருவாக்க பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

பெண்ணினதும் குழந்தைகளினதும் ஆரோக்கியத்தை கருத்தில் எடுத்தால், 21 - 26 வயது இடைவெளியில் முதல் குழந்தையை பெறுவது தான் ஆரோக்கியமானது. அந்த 6 மாடி இனவிருத்தி ஆரோக்கிய ஆய்வு நிலையத்தின் (Reproductive Health - Research Section) முன் பக்கத்தில் இந்த ஆலோசனை பெரிதாக செதுக்கப்பட்டுள்ளது.

எனவே, பெண்கள் 25 வயதின் முன் கல்யாணம் செய்வது தான் நல்லது. முதல் குழந்தையை ஆகக் கூடியது 27 வயதுக்குள் பெறுவதுதான் நல்லது. இந்த அடிப்படையில் ஆணின் வயதை அவரவர் தீர்மானிக்கலாம்.

குறிப்பிட்ட ஆய்வாளர்கள், ஆசியாவில் புதிய நோய்கள் ஏற்பட்டால் அனைத்து நாடுகளும் நோய் samples களை அனுப்பும் 2 - 3 தலை சிறந்த ஆய்வு கூடங்களில் ஒன்றினை சேர்ந்தவர்கள். குறித்த நிலையத்தில் 22 தனித் தனி ஆய்வு நிலையங்கள் பரந்த ஒரு வளாகத்தினுள் உள்ளது. ஒரு பயிற்சிக்காக குறித்த நாட்டுக்கு சென்றிருந்த போது, உந்த ஆய்வு நிலையத்துக்கு சென்று, என்னுடன் வந்திருந்த மருத்துவ நண்பர்கள் அந்த ஆய்வாளர்களுடன், சிறுவர் சுகாதாரம், இனவிருத்தி சுகாதாரம், ஆட்கொல்லி தோற்று நோய்கள் பற்றி 5 தினங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்தபோது அவர்கள் கருத்தினை கேட்கும், ஆய்வினை பார்வையிடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. பல வெளிக்கள நிலையங்களுக்கு விஜயம் செய்து சில பாதிப்புக்களை நேரடியாகவும் பார்த்தோம். அப்போது குறித்து வைத்தவை தான் இத் தகவல்கள். அவர்களது ஆய்வு முடிவுகள் அடங்கிய பல புத்தகங்களை மருத்துவ நண்பர்கள் கொண்டுவந்தனர். அதை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்துவர் என்று நம்புகிறேன்.

[பல காரணங்களுக்காக சில விடயங்களை வெளிப்படையாக குறிப்பிட முடியாதுள்ளது]

மேலும் விதவைகள்,விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்வதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன... ஆண்கள் மணம் முடிக்கா விட்டாலும் தனித்து வாழலாம் ஆனால் பெண்களுக்கு அது கஸ்டம் என நினைக்கிறேன்.தயவு செய்து இது பற்றிய ஆக்க பூர்வமான கருத்துகளையும்,விமர்சனங்களையும் முன் வையுங்கள்.

இன்றைய கால சூழ்நிலையில், விதவை என்று அழைக்கப்படும் கணவனை இழந்த பெண்ணும், விவாகரத்து பெற்ற பெண்ணும் பொருத்தமான, புரிந்துணர்வுடைய ஒருவரை மறுமணம் முடிப்பதே நல்லது. இதையும் மிக பொறுமையாக சிந்தித்து (காலம் தாழ்த்தாமல்) செய்வதே நல்லது.

ஆனால், இன்னொரு குடும்ம்பப் பெண்ணின் வாழ்வோ, குழந்தைகளின் / பிள்ளைகளின் வாழ்வோ சீரழியும் வகையில் இந்த இரண்டாவது கல்யாணம் அமையக்கூடாது.

நிலாமதி கூறியது போல "தாரம் இழந்தவர்கள் குழந்தைகளுடன் இருப்பின் ...சற்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டியது .திருமணம் செய்ய இருக்கும், அந்த இருவரும்".

அத்துடன், ஆண்களும், பெண்களும் முடிந்தளவு விவாகரத்துக்களை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகளும், மாமன் - மாமியாரின் தலையீடுகளும், அவ்வப்போது உதிர்க்கும் குத்தலான கடும் வார்த்தைகளும் தான் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

ஒப்பீடுகளும், அதீத ஆசைகளும், கடுப்பாடற்ற வாழ்க்கை முறைகளும் பிரச்சினைகள் உருவாக காரணமாகின்றது. சிறு பிரச்சனைகளை மனதில் புதைக்காமல் உடனுக்குடன் பேசி தீர்த்துக்கொள்வதோடு, மறந்தும் விட வேண்டும்

உண்மையான அன்பு / பாசம் இருக்குமிடத்தில் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகளாக மாறவே மாறாது.

மச்சான் எனக்கும் ஒரு டவுட் இருந்தது ..சரியான கேள்வி....

அதைப்பற்றி எழுத ஆக்கள் வெக்கப்படுறீனம் போல. இல்லாட்டிக்கு அனுபவம் இல்லையோவும் தெரியாது. குறிப்பாய் நெடுக்காலபோவனுக்கு உதிலை அனுபவம் இல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதைப்பற்றி எழுத ஆக்கள் வெக்கப்படுறீனம் போல. இல்லாட்டிக்கு அனுபவம் இல்லையோவும் தெரியாது. குறிப்பாய் நெடுக்காலபோவனுக்கு உதிலை அனுபவம் இல்லை. :D

நெடுக்காலை போவானுக்கு இதிலை அனுபவம் இல்லாவிட்டாலும், அவருக்கு இதிலை கேள்வி ஞானம் அதிகம். :lol:

Edited by தமிழ் சிறி

அனுபவம் இல்லாத விசயத்தை, அதை அனுபவிக்க முன்னம்.. நல்லதோ கெட்டதோ என்று தெரியாமல் அதற்கு உகந்த வயசை ஆராய்ச்சி செய்யலாமோ

  • கருத்துக்கள உறவுகள்

தான் அனுபவிச்சதை வெளியிலை சொல்ல கூச்சப்படுகிறவர்களும் அல்லது புத்தகத்திலையும்,இன்ரநெற்றிலையும் பார்த்து குத்து மதிப்பாக ஆராய்ச்சி செய்பவர்களும் இருக்கிறார்கள் தானே.....

  • கருத்துக்கள உறவுகள்

தான் அனுபவிச்சதை வெளியிலை சொல்ல கூச்சப்படுகிறவர்களும் அல்லது புத்தகத்திலையும்,இன்ரநெற்றிலையும் பார்த்து குத்து மதிப்பாக ஆராய்ச்சி செய்பவர்களும் இருக்கிறார்கள் தானே.....

அண்ணை இது சொந்த அனுபவமோ

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இப்படி ஒரு திரி இருக்குதா என்ர கன்னில படாமல். :lol: சரி விசயத்துக்கு வருவம்.முதல்ல தாம்பத்தியத்துக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை :D .அது உங்கள் வசதி வாய்புகள்,விருப்பு வெறுப்புகளை பொறுத்தது.ஆனால் தங்களை காத்துக்கொள்கிற அளவு

அறிவு நிச்சயம் வேண்டும்.திருமணம் நிச்சயமாக இரு பாலாரும் 30 வயதுக்குள் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இது சொந்த அனுபவமோ

ஹிஹி...... நொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு அண்ணே முதலில தாம்பத்திய உறவுன்னா என்ன என்று சொல்லுங்கண்ணே.

honeymoon_hug.jpg

வேறை என்ன அதுதான்......... உதுக்கு விளக்கமாய் பதிலெழுத வெளிக்கிட்டால் வில்லங்கள் கனக்க வரும்

உந்த தாம்பத்திய உறவுபற்றியும் அது கடைசியிலை எங்கைபோய் நிக்கிது எண்டதுபற்றியும் கீழைஉள்ள முகவரியிலையும் கொஞ்சம் அலம்பியிருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி என்ன திடீரென்று தலையங்கத்திலை மாற்றம் தெரியுது

ஏன் ரதி அக்கா விவாகரத்து செய்ய போறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இந்த தகவலை எங்கு எடுத்தனீர்கள்? 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பிரவசம் சம்பந்தபட்ட பிரச்சனைகளும் இளையவர்களுக்கு பரம்பரையாக வருகிற வருந்தங்களும் கூட என?

நான் ஏற்றுக்கொள்கிறேன் 35 வயதிற்கு கூடியவர்களுக்கு பிரவசம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உண்டென ஆனால் அவர்களுக்கு பரம்பரையாக வருகிற வருந்தங்களும் மிக கூடுதலாக வரும் உதாரணத்துக்கு டௌன் சின்றோம் (Down syndrome)

Maternal age influences the chances of conceiving a baby with Down syndrome. At maternal age 20 to 24, the probability is one in 1562; at age 35 to 39 the probability is one in 214, and above age 45 the probability is one in 19.[56] Although the probability increases with maternal age, 80% of children with Down syndrome are born to women under the age of 35,[57] reflecting the overall fertility of that age group. Recent data also suggest that paternal age, especially beyond 42,[58] also increases the risk of Down Syndrome manifesting in pregnancies in older mothers.[59]

இதே போல ஆண்களுக்கு வயது கூடினாலும் வருகிற வியாதிகள் உண்டு ...

http://en.wikipedia.org/wiki/Paternal_age_effect

நீங்கள் தந்த இணைப்பிலேயே உங்கள் கேள்விக்கு விடை இருக்கிறது.

Although the probability increases with maternal age, 80% of children with Down syndrome are born to women under the age of 35,[57] reflecting the overall fertility of that age group.

The new research suggests the father's age appears to make the most difference with young mothers. Among children whose mothers were younger than 25, autism was twice as common when fathers were older than 40 than when dads were in their 20s.

http://news.yahoo.com/s/ap/20100208/ap_on_he_me/us_med_autism_mother_s_age

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.