Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாஜரீனிலும் பார்க்க பட்டரில் அதிகம் ரான்ஸ் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா?

இருக்கலாம். பெரும் பாலான பட்டர் விலங்குக் கொழுப்பை அதிகம் கொண்டிருப்பதால் அதில் நிரம்பிய கொழுப்பு அதிகம். நிரம்பிய கொழுப்பு நிச்சயம் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கூட்டும். ரான்ஸ் கொழுப்பும் அதைத்தான் செய்யப் போகிறது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 77
  • Views 34.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: உங்களுக்கு என்ன நடந்தது சிறி அண்ண??

கொலஸ்ரோல் கூடிப்போய்.... மண்டையை போட்டுவன் எண்டு,

எனக்கு இப்பவும் வெறும் தேத்தண்ணி தான்..... குட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ரோல் கூடிப்போய்.... மண்டையை போட்டுவன் எண்டு,

எனக்கு இப்பவும் வெறும் தேத்தண்ணி தான்..... குட்டி.

நான் நினைக்கிறேன் உங்களுக்கு தேநீர் தயாரிப்பவருக்கு வழக்கில் உள்ள பால் வகைகள் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று.

நாம் பாவிக்கும் பாலில்.. அது அடைத்து வரும் பிளாஸ்ரிக் போத்தலிகளின் மூடியின் நிறத்தை வைத்து அதன் தன்மையை கண்டறியலாம்.

சிவப்பு மூடி.. குறைந்த விலங்குக் கொழுப்பைக் கொண்ட பால். கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்கள் இதனைப் பாவிக்கலாம்.

பச்சை மூடி.. ஓரளவு கொழுப்பைக் கொண்ட பால். கொலஸ்ரோல் பயமுள்ளவர்கள் இதனைப் பாவிக்கலாம்.

நீல மூடி.. வளரும் பிள்ளைகள் கடின உழைப்பாளிகள்.. விளையாட்டு வீரர்கள்.. நல்ல உடற்பயிற்சி செய்வோர்.. உடலாரோக்கியம் பேணுவோர் இதனைப் பாவிக்கலாம்.

இப்படி இருக்க எதற்கு வெறும் தேனீர் குடிக்க செய்யப்படுகிறீர்கள்..???! திட்டமிட்ட சதியாக இருக்குமோ..??! :rolleyes:

கொலஸ்ரோல் கூடிப்போய்.... மண்டையை போட்டுவன் எண்டு,

எனக்கு இப்பவும் வெறும் தேத்தண்ணி தான்..... குட்டி.

சிறி அண்ண நீங்கள் வெறும் தேத்தண்ணியா குடிக்கிறீன்கள்? ஜோசிக்கதேங்கோ... 90 வயதுக்கு மேல இருப்பீங்கள்... :rolleyes:

நன்றி நெடுக்ஸ்.

இருக்கலாம். பெரும் பாலான பட்டர் விலங்குக் கொழுப்பை அதிகம் கொண்டிருப்பதால் அதில் நிரம்பிய கொழுப்பு அதிகம். நிரம்பிய கொழுப்பு நிச்சயம் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கூட்டும். ரான்ஸ் கொழுப்பும் அதைத்தான் செய்யப் போகிறது. :lol:

தீய கொலஸ்ட்ரோல் 4.2க்கு மேல் கூடினால் கூடாது என்று சொல்கிறார்கள், அதேநேரம் 6.5க்கு மேல் கூடியும் மருந்து எடுத்து குறைப்பதை விட(tables தராமல்) சாப்பாடு, உடற்பயிற்சி மூலம் மட்டும் தான் குறைக்கச் சொல்லி மருத்துவர்கள் கூறுகிறார். (red meat) இறைச்சி, மாஜரீன், எண்ணெய், மேலும் மாச்சத்து வகையான சாப்படுகளைத் தவிர்த்தும், அதே நிலையில் இருக்கிறது அல்லது கொஞ்சம் அதிகமாகிக் கொண்டே போகிறது...

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு தான் மருந்துகள் எடுக்க வேண்டுமா? இது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் உங்களுக்கு தேநீர் தயாரிப்பவருக்கு வழக்கில் உள்ள பால் வகைகள் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று.

நாம் பாவிக்கும் பாலில்.. அது அடைத்து வரும் பிளாஸ்ரிக் போத்தலிகளின் மூடியின் நிறத்தை வைத்து அதன் தன்மையை கண்டறியலாம்.

சிவப்பு மூடி.. குறைந்த விலங்குக் கொழுப்பைக் கொண்ட பால். கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்கள் இதனைப் பாவிக்கலாம்.

பச்சை மூடி.. ஓரளவு கொழுப்பைக் கொண்ட பால். கொலஸ்ரோல் பயமுள்ளவர்கள் இதனைப் பாவிக்கலாம்.

நீல மூடி.. வளரும் பிள்ளைகள் கடின உழைப்பாளிகள்.. விளையாட்டு வீரர்கள்.. நல்ல உடற்பயிற்சி செய்வோர்.. உடலாரோக்கியம் பேணுவோர் இதனைப் பாவிக்கலாம்.

இப்படி இருக்க எதற்கு வெறும் தேனீர் குடிக்க செய்யப்படுகிறீர்கள்..???! திட்டமிட்ட சதியாக இருக்குமோ..??! :lol:

நீல மூடியில் 3.5% தான் பால் இருக்கும்.

ஆனால்.... இரண்டு மூடியின் பாலை குழந்தையாக இருந்து அநுபவித்தால் தான் தெரியும்.

அதனை எல்லாம் திட்டமிட்ட சதி என்று சொல்ல முடியாது. திட்ட்ம் இடாமல் செய்யும் தாக்குதல். :):D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண நீங்கள் வெறும் தேத்தண்ணியா குடிக்கிறீன்கள்? ஜோசிக்கதேங்கோ... 90 வயதுக்கு மேல இருப்பீங்கள்... :rolleyes:

------

குட்டி, நான் வேலை இடத்திலை பால் கோப்பி, பால் தேத்தண்ணியும் குடிக்கிறனான். :lol:

-

ஓ! ... ஓமோன்கள்,
:rolleyes:
Steroid , ... அது தான் ஐம்பதுக்கு பிறகு இந்த பிரச்சனைகள், ... நன்றி நெடுக்காலபூவன் !

27 hydroxy-cholestérol , oestrogenes, எண்டு எல்லாம் கேள்விப் படேன் ... இவைகளும் ஓமோன்களா?

இந்த ஓஎஸ்த்ரொஜென் இருப்பதால் தான் பெண்கள் இருதய நோய்யகளால் பதிக்கப்படுவது குறைவாம்: இந்த ஓமோன் அவர்களது இரத்தக் குழாய்களின் மீள்தன்மை காகிறதாம் ...,

அப்பாவி ஆண்கள், ... இந்த 27 hydroxy-cholestérol அவர்களது இரத்தக் குழாய்களை கடினமாக்கி ...

thyroïdiennes ... குறைஞ்சால் கெட்ட கொழுப்பு குடுமோ ... ?

... நிபுனர்களே ! தெரிஞ்சா & நேரமிருந்தா..., கொஞ்சம் சொல்லுங்கோ ...

அதோட ஒரு பெரிய கேள்வி : இந்த ஓமோன்களை செயற்கையாக உட்கொண்டால் இளைஞனாகலாமோ ?

இன்னும் ஒன்று ...

எங்கட கருணைக் கிழங்கு, முருங்கை இலை, அஃகத்தி இலை , ...இன்னும், ... இன்னும் வேறு இலைகள், குழைகள் ... உந்தப் பிரச்சனைகளை திருத்தி விடாதோ ...?

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-

ஓ! ... ஓமோன்கள், Steroid , ... அது தான் ஐம்பதுக்கு பிறகு இந்த பிரச்சனைகள், ...

27 hydroxy-cholestérol , oestrogenes, எண்டு எல்லாம் கேள்விப் படேன் ... இவைகளும் ஓமோன்களா?

இந்த ஓஎஸ்த்ரொஜென் இருப்பதால் தான் பெண்கள் இருதய நோய்யகளால் பதிக்கப்படுவது குறைவாம்: இந்த ஓமோன் அவர்களது இரத்தக் குழாய்களின் மீள்தன்மை காகிறதாம் ...,

அப்பாவி ஆண்கள், இந்த 27 hydroxy-cholestérol அவர்களது இரத்தக் குழாய்களை கடினமாக்கி ...

thyroïdiennes ... குறைஞ்சால் கெட்ட கொழுப்பு குடுமோ ... ?

... நிபுனர்களே ! தெரிஞ்சா & நேரமிருந்தா..., கொஞ்சம் சொல்லுங்கோ ...

அதோட ஒரு பெரிய கேள்வி : இந்த ஓமோன்களை செயற்கையாக உட்கொண்டால் இளைஞனாகலாமோ ?

இன்னும் ஒன்று ...

எங்கட கருணைக் கிழங்கு, முருங்கை இலை, அஃகத்தி இலை , ...இன்னும், ... இன்னும் வேறு இலைகள், குழைகள் ... உந்தப் பிரச்சனைகளை திருத்தி விடாதோ ...?

நன்றி

-

இளமை காக்கும் ஆயுர்வேதம்

அதர்வண வேதத்தின் துணை வேதம்தான் ஆயுர்வேதம். ஒருவன் ஆயுளை நீடிப்பதற்கும், ஆரோக்கியத்தைப் மேம்படுத்துவதற்கும் ஆயுர்வேதத்தில் பல்வேறு முறைகள் உள்ளன. ஆயுர்வேத சம்தைகளின் (நூல்கள்) காலம் கி.மு. 2000 முதல் கி.மு. 300 வரை.

இளமை நல்கும் ரசாயன சிகிச்சை: ஆயுர்வேதத்தின் 8 பிவுகளில் ஒன்று ரசாயன சிகிச்சை. நரை, திரை விழுந்த சவன முனிவர் ஆயுளை நீடிப்பதற்கும், மீண்டும் வாலிபம் பெறுவதற்கும் ரசாயன சிகிச்சை செய்து கொண்டதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.

இச் சிகிச்சைக்குப் பின்னர் சவன முனிவர் இளமை திரும்பி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தாராம். "உடலில் அடைபட்ட மெல்லிய பாதைகளைத் திறந்துவிடும் முறை' என்பதுதான் ரசாயன சிகிச்சையின் பொருள்.

நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள், வியர்வைத் துவாரங்கள், மெல்லிய ரத்தக் குழாய்கள் என உடலில் பல்லாயிரக் கணக்கான பாதைகள் உள்ளன.

உணவுக் குழாய், குடல் பாதை என்பது வாயில் இருந்து ஆசனவாய் வரை நீண்டுள்ள மிகப் பெய பாதை ஆகும். இப் பாதைகளில் ஏதேனும் அடைப்பு ஏற்படுமானால், நோய் உருவாக அதுதான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆரோக்கியம் காக்க...: ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உடலின் பாதைகள் எப்போதும் அடைப்பில்லாமல் தூய்மையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால் ரசாயன சிகிச்சை என்பது உடலை இயற்கையோடு இயைந்த நிலைக்கு உருவாக்குவது. இது கேட்பதற்கு, படிப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் சிகிச்சை முறை அத்தனை எளிதல்ல. பஞ்ச கர்மா: உடல் அமைப்பைத் தூய்மைப்படுத்துவதற்கு அடிப்படையான 5 வழிமுறைகள் உள்ளன. இது "பஞ்ச கர்மா' என்று அழைக்கப்படுகிறது.

வமனா - வாய் வழியாக மருந்து கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து வாய் வழியாக கழிவுகளை வெளியேற்றுதல். விரேசனா -வாய் வழியாக மருந்து கொடுத்து குதம் வழியாக மலத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுதல்.

நஸ்யா - மூக்கில் சொட்டு மருந்துகளைச் செலுத்தி சளி முதலிய கழிவுகளை மூக்கு வழியாகவே வெளியேற்றுதல்.

வர்த்தி - ஆசனவாய் வழியாக எனிமா கொடுத்து கழிவுகளை ஆசனவாய் வழியாகவே வெளியேற்றுதல்.

ரக்த மோக்ஷா - மருந்து கொடுத்து கெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல்.

பஞ்ச கர்மா உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு திசுக்கள் அளவில் செயல்படுகிறது.

பண்டைக்கால பஞ்சகர்ம முறை: பஞ்சகர்ம முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய முறைகள், நிறைவு செய்த பிறகு செய்ய வேண்டிய முறைகள் உள்ளன. முறையான, முழுமையான சுத்திகப்புக்கு 3- 4 மாதங்கள் தேவைப்படும்.

இப் பண்டைக்கால முறையை இப்போது பின்பற்றுவது இல்லை. இதைச் சாதாரணச் சூழலில் கடைப்பிடிப்பதும் சாத்தியம் இல்லை.

எல்லாச் சூழலுக்கும் ஏற்ற வாதஅதாபிகா: எனவே எந்தச் சூழலிலும் எல்லோரும் எளிதில் பின்பற்றக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது. வெயிலிலும் மழையிலும் பின்பற்றக்கூடிய ரசாயன சிகிச்சை என பொருள்படும் வகையில் "வாதஅதாபிகா' என அது அழைக்கப்படுகிறது. பிரம்ம ரசாயனா, சவனப்பிராசம், கோஷ்மந்த ரசயானா முதலிய மருந்துகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை இரவில் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்குப் பதிலாக இவற்றை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் ரசாயனங்கள் சாப்பிட்ட பிறகு பால் சாப்பிட வேண்டியதுஅவசியம்.

உடலில் இந்த ரசாயனங்கள் முறையாகச் செயல்பட வேண்டுமானால் சிலவகை சுத்திகப்பு அவசியம்.

குடலில் உள்ள கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவதற்கு பேதி மருந்து கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து ஜீரண சக்தியை அதிகப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும்.

ஒருவருக்கு பசி உணர்வு இயல்பாக இருக்குமானால் அவருக்கு ரசாயன சிகிச்சை தொடங்கலாம். ரசாயனத்துக்கு வயது, பால், இன பேதம் இல்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை ரசாயனம் அதிகக்கிறது. உடலில் நுண்ணுயிர்கள் வளரவோ, பல்கிப் பெருகவோ முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது.

திசுக்களை வலுப்பெற வைக்கிறது. செல் வளர்ச்சி இயல்பாக இருக்குமாறு செய்கிறது. உணவோடு இச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்து நெல்லிக்காய் ரசாயனம்.

மரபணுவியலை அடிப்படையாகக் கொண்டது இன்னொரு முறை. இது "குடிபிராவேசிகா' என்று அழைக்கப்படுகிறது. குடி என்றால் வீடு. வீட்டுக்குள் பிரவேசித்து சிகிச்சை பெற்று புதிய மனிதராக வெளியே வருதல் என்பதுதான் இதன் அர்த்தம்.

இதுவும் இப்போது பின்பற்றப்படுவது இல்லை. கடைசியாக குடிபிராவேசிகா ரசாயன சிகிச்சை செய்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வயது முதிரும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ள செல்கள் அத் தன்மைக்கு தொடர்பில்லாமல் செயல்படுமாறு இச் சிகிச்சை செய்கிறது. வயது முதிர்ந்த செல்கள் புதிய, இளம் செல்களை பெருக்குமாறும், தொடர்ந்து இளமைப் புத்துணர்வுடன், செயல்துடிப்புடன் இருக்குமாறும் செய்யப்படுகின்றன.

குடிபிராவேசிகா ரசயான சிகிச்சை 45 வயதுக்கு மேல்தான் செய்யப்படும். பல், நகம், முடி முதலியவை அனைத்தும் விழுந்து, இளைமைப் பொலிவுடன் புதிய பல், நகம், முடி முளைக்கும் அளவுக்கு இந்த ரசாயன கிசிச்சை உடலின் அனைத்துச் செல்களையும் மாற்றுகிறது.

இச் சிகிச்சை செய்து கொள்பவருக்கு இதை மறுபிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இச் சிகிச்சையின்போது குறிப்பிட்ட உணவு மட்டுமே தரப்படும். பால், நெய் கலந்து தயாக்கப்படும் விசேஷ காட்டு அசி (சாலி) சோறு தரப்படும். வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. மருந்தாக நெல்லிக்காய் ராசயனம் தரப்படும்.

இச்சிகிச்சை பெறுபவர் நேரடியாக சூய ஒளி, ஒலி, காற்று படாத, மூன்று சுவர்களைக் கொண்டு இதற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் 2 மாதங்கள் அமர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

ஆயுர்வேதத்துக்கே உய தனிச்சிறப்பான ரசாயன சிகிச்சை இது. 100 ஆண்டுக்குப் பிறகு இப்போது ஆயுர்வேத மருத்துவர்கள் குழு ஒன்று சோதனை ரீதியில் குடிபிராவேசிகா சிகிச்சை செய்து பார்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான ரசாயன சிகிச்சைகள் ரத்த சுத்திகரிப்புத் திறனை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆயுர்வேத ரசாயனம் ஆன்டி ஆக்சிடன்டுகளை உற்பத்தி செய்து ரத்தத்தில் உள்ள ஃபிரீ ராடிகல்ஸ்களை கிரகித்துக் கொண்டு ரத்தத்தைத் தூய்மைப்படுத்துகின்றன.

http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/blog-post_629.html

Edited by nunavilan

தீய கொலஸ்ட்ரோல் 4.2க்கு மேல் கூடினால் கூடாது என்று சொல்கிறார்கள், அதேநேரம் 6.5க்கு மேல் கூடியும் ...

ஐஐயோ ! ஐஞ்சு ஆறு மாதத்தில நெஞ்சப் பிடித்துக் கொண்டு குளறப் போறீஙகள் .... ஆகக் கூடிய அளவு <2.5 (fr) சிகரட் + வேறு குடும்பத்தவர்கள் இருதயப் பிரச்சனை உள்ளானவர்களானல் <1 (fr)

நன்றி நுணாவிலன்,

உது சாத்தியமாகக்கூடியது என்றால் நல்லதுதான் ... ஆனால் நான் இதைப்பற்றி இன்றுவர ஒன்றும் கேள்விப்படவில்லை , உந்த மருந்துகளுக்கு சந்தையில் நல்ல பெறுமதி இருக்கிறது ... இருந்தும் ...? :rolleyes:

மீண்டும் நன்றி

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது நிறைய பேர் தங்கட கருத்துக்களையும் விளக்கங்களையும் , கேள்விகளையும் சொல்லுவதும் கேட்பதும்...

எனக்கு உள்ள குழப்பம் எங்கே தொடருவது என்று ....transfatty acid க்கும் TG க்கும் , cholestrol உக்கும் வித்தியாசம் சொல்லுவதா அல்லது 20 அனுபம் உள்ளவரிடம் அவரது அனுபவங்களை கேட்பதா ...சும்மா பார்த்து கொண்டு இருப்பதா (விரும்பினதை செய் என்று நீங்கள் சொல்லும் முன் நானே என்ற பாட்டில எழுதி தள்ளுவம் ....

முதலே சொன்ன படி கொழுப்பு ரிப்போர்ட் எப்படி பார்ப்பதது என்று சொல்லுமுன்....

நான் நினைப்பது இதுதான் ஒருவருக்கு கொழுப்பை/கொலஸ்ரோலை பற்றி ஒன்றும் தெரியாதவருக்கு ...கொழுப்பு, transfatty அசிட், TG , HDL , LDL எல்லாம் ஒண்டுதான்...ஆனால் உதைப்பற்றி PhD செய்த ஒருவருக்கு ஒவ்வோன்றும் காததூரம்...எல்லாரையும் ஒரே விதத்தில் திருப்திபடுத்த எழுத முடியாது அல்லது கருத்து சொல்ல முடியாது ...(முதலே ஓரிடத்தில் சொல்லியிருந்தேன் சிலவற்றை விளங்கப்படுத்துவதர்காக சில இட்டுக்கட்டின கதைகள் எழுதியுள்ளேன் என்று.. eg HDL LDL ...ஒரு வெஹிக்கிள் என்று போட்டிருந்தேன் உண்மையில் அதில் உள்ள apoprotein தான் receptor sensor அக தொழிற்பட்டு கலங்களை வேறுபடுத்தி லிபிட் transport க்கு உதவுகின்றன...எனக்கு தெரியவில்லை அத்தகைய தகவல்கள் யாருக்கும் தேவையோ என...எனது நோக்கம் HDL LDL கொழுப்பை அளக்க பயன்படுபவை என்று தெரிந்தால் போதும் ...)

பிறகு வருகிறேன் ..மேட்ச் பார்த்துவிட்டு --கனடா சொலோவோக்கிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி/இன்ருமொருவர் கேட்டிருந்ததார் transfatty அசிட் பற்றி .............

ஒரு சிறிய அடிப்படையுடன் ..........

எமது உடலில் பிரதானமான சத்திக்குரிய மூலப்பொருள் acetyl -CoA (2 கார்பன் சேர்வை).அதே நேரத்தில் இதுவே கொலஸ்ரோல் தயாரிப்புக்குரிய மூலப்பொருளுமாகும். உடம்பில் சக்தி தேவையெனில் acetyl -CoA .... சிட்ரிக் அமில சைக்கில்...........பிறகு ஒட்சி ஏற்ற போசுஸ்பரலேசன் ...ATP ... பிறகு சக்தியாக வரும் . அந்த சக்தியில் இருந்து ,ஆடுறது , படுறது , வேலை செய்வது...எல்லாம் செய்யலாம்

( சயனைட் ; உந்த ஒட்சி ஏற்ற போசுச்பரலேசனை தடுப்பதால் தான் சாவு வாறது .....)

ஆனால் எங்களுக்கு சக்தி தேவையில்லாத பொது அசற்ரயில் -கோ A ,கொலஸ்ரோல் ஆகவும் மற்ற மற்ற பொருட்களாகவும் மாறும்...அசற்ரயில் -கோ A இருந்து கொலஸ்ரோல வராது ஒரு பல படி கொண்ட செயன்முறை. இதில் ஒரு enzyme , HMG co A reductase அதைத்தான் நாங்கள்/ எங்களில் பலர் (சோறுமாதிரி சாப்பிடுகிற) எடுக்கிற கொலஸ்ரோல் குறைக்கும் குளிகைகள் (statins)(லிபிடோர் .......) தடைசெய்வது.

இதில transfatty அசிட் என்னவென்றால் ...அவை கொழுப்பமிலங்கள், நீண்ட கார்பனும் இதரசனும் கொண்ட அமிலங்கள். அவற்றில் ஒன்றோ அல்லது சில /பல கார்பன் கார்பன் இரட்டை பிணைப்பு உள்ளன. ஒன்றிற்கு மேற்பட்ட கார்பன் கார்பன் இரட்டை பிணைப்பு உள்ள போது அவை poly unstatuarated fatty அசிட். ஒரு கார்பன் கார்பன் இரட்டை பிணைப்பும் இல்லாட்டி saturated fatty அசிட். இந்த fattyஅசிட் உடலில் மாற்றமடையும் பொது கார்பன் கார்பன் இரட்டை பிணைப்பு உள்ளவை acetyl -கோ அக வராது ..அவை நான் நினைக்கிறேன் CO2 அக போய்விடும். எனவே unstatuarated fatty இருந்து வர acetyl -கோ எண்ணிக்கை saturated fatty அசிட்.. இருந்து வருவதை விட குறைவு ...(இப்ப நல்லெண்ணெய் எடுத்தால் அது polyunsaturated fatty அசிட் கொண்டிருக்கு...அப்ப அதிலிருந்து வர acetyl -CoA தேங்கை எண்ணையில் இருந்து வருவதை விட குறைவு என்ற படியால் acetyl -CoA கூடினால் வர பிரச்சனைகளும் குறைவாக வரும்....

மற்றது இந்த saturated fatty அசிட் தயாரிப்பதர்ர்காக(மாஜரின் .. இவை ஊக்கி முன்னிலையில் இதரசன் ஏறப்படுவதும் உண்டு) ஆகையால் அவை உடலுக்கு நல்லவை அல்ல.

ஒரு கருத்து / உண்மை விளங்க வேண்டும் ...எல்லாவற்றிலிருந்தும் acetyl -CoA வரும். ஆனால் polyunsaturated fatty அசிட் இருந்து குறைவு ....எந்தளவு குறைவு எண்டு எனக்கு வடிவா தெரியாது.

மற்றது TG பற்றி ...அது ஒரு ஹாட் டொபிக் ....அதபற்றி வடிவா சொல்ல வேண்டும் ...நாளைக்கு வரன் ...

  • கருத்துக்கள உறவுகள்

fatmetabolism1.JPG

fatfu.jpg

480px-Fructose-triglyceride.jpg

july.fig.2.jpg

தலைப்பு சாதாரண மக்களுக்கு விளங்கக் கூடிய கட்டத்தைத் தாண்டி பாண்டித்திய கட்டத்தை நோக்கிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலே வல்கனோவால் எழுதப்பட்டுள்ளவை கொழுப்பமில அனுசேபத்தாங்களுக்கான வழிமுறைகள். அதாவது கொழுப்பு மற்றும் கொலஸ்ரோல் எவ்வாறு உடலில் குறிப்பாக ஈரல் மற்றும் கலப் புன்னங்கள் இழைமணியில் நடக்கும் உயிர் இரசாயனத் தாக்கங்களில் இருந்து உருவாகிறது என்பதை சொல்ல முற்படுகிறது. ஆனால் பூரணத்துவம் அற்றதாக உள்ளது.

நான் இணைத்துள்ள படங்கள் ஓரளவிற்கு அதை எளிமைப்படுத்தும் என்று நினைக்கிறேன். படங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ஒருங்கிணைத்து நோக்க வேண்டும்.

சாதாரண மக்களுக்கு இவை தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களுக்கு தெரிய வேண்டியவை நிரம்பிய கொழுப்பு ஆபத்தானது. நிரம்பாத கொழுப்பு ஆபத்துக் குறைந்தது என்பதுதான். அத்தோடு எந்தெந்த உணவுகளில் எவ்வெவ் கொழுப்புகள் உள்ளன என்பதுவும் தான்.

அதுமட்டுமன்றி அதிக அளவிலான மாப்பொருளும் பின்னர் கொழுப்பாக மாறும் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாப்பொருளில் இருந்துதான் குளுக்கோஸ் ( Glucose) மற்றும் ஸ்ரப் (syrup) வகைகளில் இருந்து புரக்றோஸ் (Fructose) பெருமளவில் உள்ளெடுக்கப்படுகின்றன. புரக்ரோஸ் குளுக்கோசை விட இன்னிப்புச் சுவையானது என்பதால் சொக்கிலேட் ஸ்ரப் சுவை மிகு குளிர்பானக்களில் அது இருக்கும்.

Edited by nedukkalapoovan

வர்த்தி - ஆசனவாய் வழியாக எனிமா கொடுத்து கழிவுகளை ஆசனவாய் வழியாகவே வெளியேற்றுதல்.

http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/blog-post_629.html

அந்தக் காலத்துப் பரியாரிகள் எக்கச்சக்கமான பார்டிகள் தான் !! :rolleyes::D

நல்ல விளக்கங்கள் நெடுக்ஸ்.

.

-

விளக்கப் படங்களுக்கு நன்றி நெடுக்காலபூவன் ...

... எங்கட மூளைக்கு விளங்கினால் ... சில நேரம் புதிய ரத்தக் குழாயை தானாகவே போட்டு இதருத்தி விடும் ஆபார சக்தி உருவாகக் கூடும் எல்லோ ... ? :rolleyes::D

ஐஐயோ ! ஐஞ்சு ஆறு மாதத்தில நெஞ்சப் பிடித்துக் கொண்டு குளறப் போறீஙகள் .... ஆகக் கூடிய அளவு <2.5 (fr) சிகரட் + வேறு குடும்பத்தவர்கள் இருதயப் பிரச்சனை உள்ளானவர்களானல் <1 (fr)

இருதயம் திருத்துபவர் ஒருவர் சொல்கிறார்

" ... கொலிஸ்ரோல் ஒரு நல்ல வியாபரம் அதால வரும் லாபம் வேலைவாய்பபுக்கள் அபாரமானது ... அதணால் தான் அதைவிட்டு வைத்திருக்கிறார்கள் ...

... முதலில் இருதயத் தசைகளின் இரத்த குழாய்களிலே போய் படிந்து அவற்றிற்கான இரத்த வினையோகத்தை குறைப்பதால் ஒட்சிஜ வினையோகம தடைபடும், அதனால் தோன்றும் லத்திக் அமிலம் அந்தத் தசையில் வலியை உருவாக்கும், ... ... இந்த o2 முற்றாக தடை படும் பட்ததில் தசை நீலமாகி நிரந்தரமாகச் செயலிழக்கும்... அப்படியாகமுன் இருதயத்தை திருத்திவிட வேண்டும் எனபது எனது அபிப்பிராயம், இருந்தாலும் பலர் யூகிப்பது போல
மனிதனின் இயற்கைச் சக்தி அடைத்த இரத்தக் குழாயை கைவிட்ட விட்டு புதியதொரு குழாயை ஆக்கும் வல்லமை படைத்தது என்பதில் எனக்கும் அபாரமான நம்பிக்கை நம்பிக்கை இருக்கிறது
... ஏனென்றால் புற்று நோய் கலங்கள் எமது உடம்பின ஒரு மூலையில் இருந்து கொண்டு தேவையான சைகைளை மூளைக்கனுப்பி தங்களை நோக்கி இரத்தக் குழாய்களை வரச் செய்வதை கண்டிருக்கறேன் ...

எனக்குத் தெரிந்த பலர் இந்தத் துறையில் ஆய்வுகளை நடத்த முயற்சி செய்கிறார்கள் ...ஆனால் (மேல மேல கூறிய காரனத்தால்) போதிய நிதி கிடக்காததால் கைவிட்டுள்ளார்கள் ... சில துணிந்தவர்கள் புற்று நோய் கலத்தால் சுரக்கப்பட்ட ஓமோனை பாவித்து, கால் தசைகளில் அடைபட்ட இரத்தக் குழாய்களை பிரதி இடச்செய்துள்ளார்கள் ... ... பின்பு
ஒரு நாயின் இருதயத் தசையின் இரத்தக் குழாயை முற்றாகத் அடைத்த போது நாய் ஒரு கிழமை அழுதுகொண்டு படுத்திருநதது பின்பு சாதரனமாக நடமாடத் தொடங்கியது, அதன் இருதயத்தைப் சோதித்தபோது அடைக்கப் பட்ட குழாய் அப்படியே அடைபட்டிருக்க வேறு புதிய குழாய்களை உருவாக்கி, அது தனது சாதாரன நிலையை அடைந்து அவதானிக்கப் பட்டது.
..."

கொலிஸ்ரோல் ... ! உந்த நல்ல வியாபரம் எப்படி நடக்கிறது ? அடைத்த இரத்தக் குழாயை திறக்க, அந்த அடைத்த இடத்தில போய் ஒரு இரும்பு வலை குழாயை வைத்து பலூனால ஊதி விரித்து விட வேண்டும், இந்த இரும்பு வலை குழாய் , எங்கள் இரத்தக் குழாயினுள் வாழ்நாள் முழுக்க இருக்கப் போகுது ... வேற வழியிலை ஃ அந்த இரும்பு வேற பிரச்சனையை தராமல் இருப்பதற்கு வாழ்நாள் முழுக்க மருந்து சாப்பிட வேண்டும் ... ... ... ...

கூடிய விழக்கத்திற்கு ... கீழே தரப்பட்டுள் இரு இயங்கு படங்களைப் பார்கவும்.

go here to see how that machine work

இனி அறிய வேண்டியது, ... நெஞ்சுக்குள நொகுது ... அது இருதயமா ? வேறு ஏதாவதா ? ... :D அனேகம சாப்பிட்ட பிறகு நூறடி நடக்கும் போதுதான் அப்படி வருகுது ... எங்க போவது எப்படி அறிவது .... ?

அவங்கள் நெஞ்சுக்குள் இரும்பைச் செருகி அடிமையாக்க முன், ஒவ்வொரு நாளும் 4கில்லோ மீற்றர் 45 நிமிடத்தில நடப்பது நல்லது தானே ...?... :D

-

Edited by ஜெகுமார்

தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா?

...

...

மூலிகை கலவை: கூகுல் பிளஸ்:

இதுவொரு சிறப்பான மூலிகைக் கலவையாகும். இதில் உள்ள மூலிகைகள்ää உடலில் ஆரோக்கியமான கொலஸ்ரோல் அளவைப் பேணுவதற்காக கலக்கப்பட்டுள்ளன. நல்ல ஆரோக்கியத்தைத் தரவல்ல உணவுää தினந்தோறும் உடல் அப்பியாசத்துடன் கூடவே இந்த மருந்துக் கலவையையும் எடுப்பதனால் எச்.டி.எல் (நல்ல) கொழுப்பினளவை அதிகரித்து எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவைக் குறைக்கலாம். மேலும் நாடிக் குழாய்களின் உட்சுவரில் ஏற்படக்கூடிய சேதத்தையும் குறைக்கலாம். கொலஸ்ரோலைக் குறைப்பதற்காக மருந்தெடுக்கும் பலருக்கு இதுவொரு மூலிகையாலான மாற்று மருந்தாகும்.

மூலிகை கலவை: கூகுல் பிளஸ் பின்வரும் மூலிகைகளைக் கொண்டுள்ளது :

கூகுல் (கொமிபோறா முக்குல்):

கூகுல் உடலில் நடைபெறும் கொழுப்பின் ஆக்கச்சிதைவு (மெற்ராபோலிசம்) நடைமுறையை ஒழுங்காக்கி வைத்திருப்பதனால் கொலஸ்ரோல்ää ற்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றின் அளவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் இது ஈரல் கலங்களை தூண்டி ஆக்கச் சிதைவினை அதிகரிப்பதால் எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவு அகற்றப்படுகின்றது. இதன் விளைவாக நாடிக் குழாய்களில் சேதம் குறைவாகவே ஏற்படுகின்றது. மேலுமிது குருதிப் பாயத்திலுள்ள கொலஸ்ரோல்;ää ற்ரைகிளிசரைட்ஸ்; எல்.டி.எல் வி.எல்.டி.எல் ஆகியவற்றின் அளவைக் குறைக்கின்றது. இதனால் குருதிக் குழாய் உட்சுவர் தடிப்படைதல் தவிர்க்கப்படுகிறது. கூகுலில் காணப்படும் கூகுலிப்பிட் என்னும் இரசாயனமானது; குழாய்களில் முன்னேற்பட்டிருக்கும் படிவுகளை அவற்றின் முன்னைய நிலைக்கு எடுத்துச்செல்லவைக்கின்றது. மேலும் குருதிக் குழாயினுள் குருதியுறைவைக் குறைப்பதனால் ஸ்றோக் நடைபெறும் நிலைகளைத் தவிர்க்க முடியும். கொலஸ்ரோல் குருதிக் குழாயில் படிந்து ஒட்சியேற்றம் பெற்று தடிப்படைதலை கூகுல் தடுக்கிறது. அத்துடன் உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைக்கவும்;ää உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

மூலிகை: ஆட்டிசோக் (சயனாரா ஸ்கொலிமஸ்):

ஆட்டிசோக் என்னும் மூலிகையானதுää ஈரலில் கொலஸ்ரோல் இன் உற்பத்தியைக் குறைக்கவும்ää கொலஸ்ரோல் பித்தநீராக மாற்றப்படுவதையும் தூண்டக்கூடும். கொலஸ்ரோலை பித்தநீராக உடலினால் மாற்றமுடியாமல் போகும்போதுää குருதிப் பாயத்தில் கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கிறது. ஆட்டிசோக் கொலஸ்ரோல் சமிபாட்டைத் தூண்டி கழிவை சமிபாட்டுக் கால்வாயினூடு வெளியகற்றுவதோடுää ஈரலில் குறைந்தளவு கொலஸ்ரோல் மட்டுமே உற்பத்தியாகுமாறு கட்டுப்படுத்தி இரு வழிகளில் செயற்படுகிறது.

மூலிகை: உள்ளி (அலியம் சற்றைவம்):

உள்ளி மூலிகையானது குருதிப்பாய கொலஸ்ரோல் அளவைக் குறைவாக செய்வதனால்ää சிறந்த குருதிச் சுற்றோட்டத்தைப் பேணுகிறது. அத்துடன் எல்.டி.எல் கொழுப்பினளவைக் குறைத்து எச்.டி.எல் இன் அளவை உயர்த்துகிறது. உள்ளியில் கிடைக்கும் செலேனியம் என்னும் கனிப்பொருள் நாடிக்குழாய்களில் கொலஸ்ரோல் ஒட்டாவண்ணம் கவனித்துக்கொள்கிறது. அலிசின் என்னும் உள்ளியில் காணப்படும் இரசாயனப் பதார்த்தம் எச்.டி.எல் கொழுப்பை பித்தப்பையிற்கு கொண்டு செல்லும் காவிகளினளவை உயர்த்துகிறது.

மூலிகை: கீ சோ வு ( பொலிகோனம் மல்ரிபுளொறம்):

இந்த மூலிகையில் காணப்படும் பல இரசாயனங்கள் சேர்ந்து கொலஸ்ரோல் இன் அளவை குறைப்பதாக செயற்படக்கூடும். குருதிக் குழாக்களை வலுப்படுத்தி அகலப்படுத்துவதனால் உடலில் குருதிச் சுற்று ஆரோக்கியமடைகிறது. இவ்வேளையில் குருதியழுத்தம் குறைக்கப்படுவதனால்ää இதயம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் குருதி உறைவும் தவிர்க்கப்படுகிறது. மேலும் நாடிக் குழாய்களில் கொழுப்புப் படிவை இல்லாதொழித்தால்ää நாடிக்குழாய் தடிப்படைதல் நோய் தோன்ற வாய்ப்பு இல்லாது போவதோடு இரத்தோட்டம் சம்பந்தமான நோய்களின் அபாயமும் குறைவடைய உதவக்கூடும்.

மூலிகை: அர்யுனா (ரெமினேலியா அர்யுனா):

அர்யுனா பட்டையின் பிளிவு பலகாலமாகää நல்ல குருதிச் சுற்றோட்டத் தொகுதியைப் பேண பயன்படும் மூலிகையாகும். இது ஈரலில் கொலஸ்ரோல் உருவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் கொலஸ்ரோல்ää ற்ரைகிளிசரைட்ஸ் அளவைக் குறைவடைய செய்யக்கூடும்.

இம் மூலிகைகள் யாவும் கூட்டுச் சேர்ந்தால் கிடைக்கும் விளைவுச் சேர்மானமானதுää கொலஸ்ரோலின் அளவைக் குறைவடையச் செய்வதோடுää குருதிச் சுற்றோட்ட தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றே பேணக்கூடும். இதற்காகவேää இதிலடங்கிய மூலிகைகள் அதியுச்ச பலனைத தருமாறு வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

...

...

இந்த நல்ல ஆக்க பூர்வமான தகவல்கள வைத்து நாங்கள் ஒன்றுமே செய்ய முடியாது ...

சரியன ஆங்கிலச் சொற்களையோ அல்லது இணைய இணைப்புகளையோ நீங்கள் தராவிட்டால்,

ஃ நேரம் கிடைக்கும் போது ... இவற்றை உபயோகிக்க ஒரு வழி காட்டுவீர்களா . . . நன்றி நுணாவிலன் !

-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு சாதாரண மக்களுக்கு விளங்கக் கூடிய கட்டத்தைத் தாண்டி பாண்டித்திய கட்டத்தை நோக்கிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலே வல்கனோவால் எழுதப்பட்டுள்ளவை கொழுப்பமில அனுசேபத்தாங்களுக்கான வழிமுறைகள். அதாவது கொழுப்பு மற்றும் கொலஸ்ரோல் எவ்வாறு உடலில் குறிப்பாக ஈரல் மற்றும் கலப் புன்னங்கள் இழைமணியில் நடக்கும் உயிர் இரசாயனத் தாக்கங்களில் இருந்து உருவாகிறது என்பதை சொல்ல முற்படுகிறது. ஆனால் பூரணத்துவம் அற்றதாக உள்ளது.

அவர்களுக்கு தெரிய வேண்டியவை நிரம்பிய கொழுப்பு ஆபத்தானது. நிரம்பாத கொழுப்பு ஆபத்துக் குறைந்தது என்பதுதான். அத்தோடு எந்தெந்த உணவுகளில் எவ்வெவ் கொழுப்புகள் உள்ளன என்பதுவும் தான்.

நெ ...

நான் நினைக்கவில்லை நான் பாண்டிதுவத்துக்கு எழுதுவதாக ....ஏலக்கூடிய மட்டும் சரியான தகவல்களை விளங்குகிற வகையில் சொல்லுவம் என்று ..........எனக்கு தெரியாது இங்கே எழுதுபவர்களும் கேள்விகேட்டபவர்களும் யார் யாரென...நான் சொல்லவிரும்புவது இதுதான் சாதரணமாக பாமிலி டாக் சொல்லுவதை விளங்கப்படுத்துவதும் (அதில் விளங்காதை ), சொல்லாமல் விடுவதை அல்லது தவிர்ப்பதை சொல்லாம் என்று தான். ..........வேறு ஒரு நோக்கமமும் இல்லை. கஸ்ரபட்டு திருப்பி திருப்பி எனது கருத்துகளை சொல்ல தேவையில்லை / விரும்பவில்லை .....மற்றது இது ஒரு இலக்கு இல்லாமல் போவது போலவும் தெரிகிறது ...

இங்கே வேறு வேறு திசையில் இந்த திரி இழுபடுகிறது ............அதுதான் திரிக்கு அழகோ தெரியவில்லை.

நான் நினைக்கிறன் சமாந்தரமாக வருகிற/ வந்த வயதோடு குறைபாடுள்ள பிள்ளைகள் பிறக்கும் என்றகருத்து பதிவில் ...ஒருவர் சொல்லியிருந்தார் ..விக்கி பீடியாவை ..உதாரணமாக எடுத்தாக ...ஒன்று சொல்லாம் இதிலே எழுதுவதர்ற்கு விக்கி பீடியா உதாரணமாக காட்டுவதர்ற்கு இலகுவானது ..எனக்கு பெரிதாக வேறு இலகுவான தளங்கள் தெரியாது ...emedicine அல்லது myoclinic கோட் பண்ணி என்ன பிரயோசனம் ...முன்னரே சொன்னமாதிரி பாண்டிதன விளையாட்டாய்தான் முடியும் ..

இங்கே சில பிழையான தகவல்கள் பரிமாறப்படுகிறது அல்லது புலம் பெயர்ந்தவர்களிடையே அழமாக பதியப்படுள்ளது அவற்றை எனக்கு தெரிந்த வகையில் சொல்லுவதுதான் எனது நோக்கம்........

திரி அடுத்த கட்டத்துக்கு போக முன்பு......

மேலே கோட் பண்ணியவை ....

நிரம்பியவை க்கும் நிரம்பாததிர்ற்கும் உள்ள வித்தியாசம் அவை தருகிற அசெட்டில் கோ A இன் அளவிலே தங்குள்ளது ...இங்கே நல்லது கூடாது என்பதர்ற்கு மேல் அவற்றை நாங்கள் எடுக்கிற அளவிலும் நிறைய விடயம் தங்கியுள்ளது ....transfatty அசிட் சாப்பிடுகிறோம் என்று சொல்லி சாதாரணமாக நாங்கள் பாவிக்கிற அளவில் பாவிப்பதும் ...நிரம்பிய fattyacid குறைந்த அளவுகளும் பாவிப்பது ஒன்று என விளங்கவேண்டும்......இதிலே நல்லம் கூடாது என்பதர்ற்கு மேல் அவை பாவிக்கிற அளவும் கருத்தில் கொள்ளவேண்டும்...

நல்ல உதாரணம் சில /பல முஸ்லீம்கள் எல்லாநாளும் ஆட்டிறைச்சி சாப்பிடுவது ...ஒவ்வொருநாளும் சிறிதளவு ஆ.இராச்சி சாப்பிடுவது வராக்கடைசியில் மூக்கு முட்ட பிடிபதிலும் ஆரோக்கியமானது...

இதே போன்ற காரணத்தால் தான் எமது வைத்தியர்கள் உருளை கிழங்கு டைபெடிக் க்கு வேண்டாம் என்று சொல்லுவது ...டியாபெடிக் ஆக்கள் உருளை கிழங்கு சாப்பிட்டால் அதே அளவால் சோறு அல்லது புட்டு ( நாங்கள் பாவிக்கிற மாப்பொருள் பண்டம்)குறைக்க வேண்டும் இது பலருக்கு கடினமாக உள்ளதால் கிழங்கு என்றால் டியாபெடிக் கிட்டவும் வரக்கூடாது என்று கருதுகிறார்கள்...

கிடத்தட்ட தேனிருக்கு சீனி போடுவதும் போடுவதும் இப்படியே ...வெறும் தேநீரும் 4 துண்டு பாணும் ...1 கரண்டி சீனி போட்ட தேநீரும் 3 துண்டு பாணும் சில வேளை சரியாக இருக்கும்...

மற்றது நிழலி கவனித்தால் ....

உங்கள் வைத்தியர் சொன்னது என்று எழுதியிருந்தீர்கள் ..40 நிமிட exercise அல்லது physical activities ஒருகிழமையில் 3 தடவை.இரண்டும் ஒன்றல்ல. --- போன வருடம் மட்டும் தவறானது ....இப்ப மாற்றினவர்களோ தெரியாது ...ஆனால் அதற்ற்குரிய சந்தர்பம் குறைவு ...

என்ன பிரச்சனை என்றால் physical activites இல் எங்களுக்கு தேவையான தொடர்ச்சி இருக்காது ...சில வேளைகளில் பார்த்திருப்பீர்கள் ...வீதிகளில் ஓடுபவர்கள் --stop sign / சிக்னல் போன்ற இடங்களிலும் நிற்காமல் துள்ளிக்கொண்டு இருப்பதை ஏனெனில் நாங்கள் எங்களது ஓட்டத்தை நிறுத்தினால் இதயம் அது அடைய வேண்டிய உச்ச இதய துடிப்பு எண்ணிக்கையை அடையாது ..எங்களுக்கும் நாங்கள் எதிர்பார்க்கிற நல்ல பலன் வராது ....

பிறகு வாறன் tobogganing க்கு போகப்போறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நெ ...

மேலே கோட் பண்ணியவை ....

நிரம்பியவை க்கும் நிரம்பாததிர்ற்கும் உள்ள வித்தியாசம் அவை தருகிற அசெட்டில் கோ A இன் அளவிலே தங்குள்ளது ...இங்கே நல்லது கூடாது என்பதர்ற்கு மேல் அவற்றை நாங்கள் எடுக்கிற அளவிலும் நிறைய விடயம் தங்கியுள்ளது ....transfatty அசிட் சாப்பிடுகிறோம் என்று சொல்லி சாதாரணமாக நாங்கள் பாவிக்கிற அளவில் பாவிப்பதும் ...நிரம்பிய fattyacid குறைந்த அளவுகளும் பாவிப்பது ஒன்று என விளங்கவேண்டும்......இதிலே நல்லம் கூடாது என்பதர்ற்கு மேல் அவை பாவிக்கிற அளவும் கருத்தில் கொள்ளவேண்டும்...

நல்ல உதாரணம் சில /பல முஸ்லீம்கள் எல்லாநாளும் ஆட்டிறைச்சி சாப்பிடுவது ...ஒவ்வொருநாளும் சிறிதளவு ஆ.இராச்சி சாப்பிடுவது வராக்கடைசியில் மூக்கு முட்ட பிடிபதிலும் ஆரோக்கியமானது...

இதே போன்ற காரணத்தால் தான் எமது வைத்தியர்கள் உருளை கிழங்கு டைபெடிக் க்கு வேண்டாம் என்று சொல்லுவது ...டியாபெடிக் ஆக்கள் உருளை கிழங்கு சாப்பிட்டால் அதே அளவால் சோறு அல்லது புட்டு ( நாங்கள் பாவிக்கிற மாப்பொருள் பண்டம்)குறைக்க வேண்டும் இது பலருக்கு கடினமாக உள்ளதால் கிழங்கு என்றால் டியாபெடிக் கிட்டவும் வரக்கூடாது என்று கருதுகிறார்கள்...

கிடத்தட்ட தேனிருக்கு சீனி போடுவதும் போடுவதும் இப்படியே ...வெறும் தேநீரும் 4 துண்டு பாணும் ...1 கரண்டி சீனி போட்ட தேநீரும் 3 துண்டு பாணும் சில வேளை சரியாக இருக்கும்...

பிறகு வாறன் tobogganing க்கு போகப்போறேன்

நான் பாண்டித்தியம் என்று குறிப்பிட்டது மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடிக்கும் உயிர் இரசாயனம் அறிந்தவர்கள் மட்டும் விளங்கிக் கொள்ளும் படிக்கு கருத்து பரிமாறப்படுவதைத்தான்.

நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்களின் பாண்டித்துவம் பற்றி குறிப்பிடுகிறேன் என்று.

மக்களுக்கு ஒரு விடயத்தைச் சொல்லும் போது எளிமைப்படுத்தி சொல்ல வேண்டும். அசற்றைல் கோ ஏ பற்றிச் சொன்னால் அது மக்களுக்குப் புரியாது. மக்கள் விளங்க ஒன்றை எழுதாது விடின் அது அவர்களால் படிக்கப்பட மாட்டாது. அதன் பின் எதை எப்படி எழுதியும் பிரயோசனம் இல்லை. அது நீங்கள் விரும்பி எழுதுவது போல் புலம்பெயர் மக்களை சென்றடையவும் முடியாது.

நிரம்பாத கொழுப்பு.. நிரம்பிய கொழுப்பு என்றாலே மக்களுக்கு தெரியுதில்லை. இதில அசற்றைல் கோ ஏ பற்றிச் சொல்லுறது ஒன்றும் புத்திசாதுரியமான காரியமாகத் தென்படவில்லை. மக்கள் அசைற்றல் கோ ஏ யைப் பற்றி தெரிந்து கொள்வதால் தான் நிரம்பிய அல்லது நிரம்பாத கொழுப்பின் தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதும் தவறு.

நான் பொதுமக்களோடு பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதுவும் மேற்குலக நாடு ஒன்றில் பணியாற்றி அடிப்படையில் இதனைத் தெரிவிக்கின்றேன். மேற்கில் கூட மக்களுக்கு இது சரியாக விளங்கவில்லை. ஆதனால் ஒன்றை எளிமைப்படுத்திச் சொல்வதுதான் மக்கள் அதனை விளங்கி நடைமுறைப்படுத்த உதவும்.

உணவுப் பொருட்களை பட்டியலிடும் லேபல்களில் நிரம்பிய நிரம்பாத கொழுப்புப் பற்றித்தான் போடுவார்கள். அசைற்றல் கோ ஏ பற்றி எழுதமாட்டார்கள். மக்கள் எதனைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்களோ.. அதன் அடிப்படையில் தான் மக்களுக்கான விளக்கம் வர வேண்டும். அதைவிடுத்து குறித்த பாடப்பரப்பை படித்தவர்கள் மட்டும் விளங்க ஒன்றை எழுதுவது மக்களைச் சென்றடைந்ததாகக் கருத முடியாது. அது குறிப்பிட்ட அறிவுள்ளவரைத்தான் சென்றடையும்.

அதனால் தான் எளிமையாக மக்களுக்கு தேவையான அளவில் எனது பதிவை சுருக்கிக் கொண்டேன். ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு கொண்டு செல்வது அத்துணை மக்கள் மனம் கவரும் அம்சமாக இதனை மாற்றும் என்று நினைக்கவில்லை.

Edited by nedukkalapoovan

ஐஐயோ ! ஐஞ்சு ஆறு மாதத்தில நெஞ்சப் பிடித்துக் கொண்டு குளறப் போறீஙகள் .... ஆகக் கூடிய அளவு <2.5 (fr) சிகரட் + வேறு குடும்பத்தவர்கள் இருதயப் பிரச்சனை உள்ளானவர்களானல் <1 (fr)

...

5-6 மாசமா? :D:lol: இப்பவே குழற வைச்சுப் போட்டியள்...

சிகரட் பழக்கம் இல்லை,குடும்பத்தவர்களுக்கு இருதயப் பிரச்சனை இருந்தது. தகவலுக்கு நன்றி ஜெயக்குமார்.

____

மன்னிக்கவும், இணைப்பை மாறி இணைத்து விட்டேன்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஜெயக்குமார்

Edited by குட்டி

-

தீய கொலஸ்ட்ரோல் 4.2க்கு மேல் கூடினால் கூடாது என்று சொல்கிறார்கள், அதேநேரம் 6.5க்கு மேல் கூடியும் ...

ஐஐயோ ! ஐஞ்சு ஆறு மாதத்தில நெஞ்சப் பிடித்துக் கொண்டு குளறப் போறீஙகள் .... ஆகக் கூடிய அளவு <2.5 (fr) சிகரட் + வேறு குடும்பத்தவர்கள் இருதயப் பிரச்சனை உள்ளானவர்களானல் <1 (fr)

நான் கெட்ட கொலிஸ்ரோலை பற்றி பேசுகிறேன் . . . ! .

HDL Cholesterol

Male

< 1,0 mmol/L

elevated risk

> 1,0 mmol/L

no elevated risk

Female

< 1,1 mmol/L

elevated risk

> 1,1 mmol/L

no elevated risk

எதற்கும் . . . காரணமில்லாமல் கேள்வி வராது . . . ஃ . . . இருதய வைத்தியரை பார்பதுநல்லது . . . :D

Edited by ஜெகுமார்

கொலஸ்ரோல் ... என் பங்கிற்கும் .....

.... வந்த பொழுதில், நான்கு கூட்டுகளுடன் இருப்பு, படிப்பது என்ற போர்வையில் இரவு வேலை, (விடிய பள்ளிக்கு போக மனம் வருமா?)காலை வேலையால் வந்தவுடன் நாலு பாண் துண்டுகளுக்கு இரண்டு முட்டை பொரியல் அத்துடன் இரண்டு மாட்டு பேகர் உள்ளுக்குள் தள்ளிப் போட்டு படுத்தால் ... அழாழுக்கு ரேன் போட்டு எழு நாளும் பின்னேரச்சாப்பாடு சோத்துடன் ஆடு ... ஆடு... ஆட்டுக்கறிதான்!!

போதாக்குறைக்கு நல்ல குடும்பப்பின்னனி!!!! அப்பன், சித்தப்பன், பெரியப்பன் ... ஒண்டும் தப்ப விடாமல் இதயத்தை வெட்டிப் போட்டு இருக்கிறார்கள்!

வந்து இப்படி ஓரிரு வருடங்களாக .... உதே சாப்பாடோடு போக ... குடும்பத்தில் ஒன்றுக்கு இதயம் அடிசிட்டுது ... சின்னப்பயம் மனச்சுகுள் ... எனது அப்போதுள்ள டாக்குத்தரும் தமிழ் மனுசன்!! போய் ஒருக்கால் இரத்தைதை சோதிக்க வேண்டும் என்றேன், "தம்பி, நீ சின்னப்பொடியன் தேவையில்லை" என்றார், நானும் பிடிவாதமாக இரத்தச் சோதனைக்கு போய் விட்டேன்!!....

..... ஐந்தாம் நாள், டாக்குத்தரை போய் பார்த்தேன், உனக்கு 8.5 என்று சொல்லி ... என்னடா உது என்றார். விளங்கவில்லை, என்ன சொல்கிறீர்கள் என்றேன்! எனது சாப்பாடு பழக்கங்கள், குடும்ப வரலாற்றை கேட்டு விட்டு "கனகாலம் உயிரோடு இருக்க விருப்பமில்லையோ?" என்றார். அப்பதான் புரிந்தது இது வில்லங்கம் தான் என்று!! ... வீடு போகும்போது 40 மில்லி கிராமுகளில் உள்ள குளிசைகளையும் திணித்து விட்டார்!

... வந்து கூட்டுகளுக்கு கதையை சொல்ல எல்லோரும் ஒரு நகைப்பு!! ... நாட்கள் சென்றன, கூட்டுகள் ஒவ்வொருவராக போய் இரத்தை சோதித்திருக்கிறார்கள் ... அதில் ஒருவருக்கு 10ஐ தாண்டி விட்டதாம் ... டாக்குத்தர் சொன்னாராம் "தம்பி, சிலவேளை வீடு போயும் சேரமாட்டாய்"என்று!!

.... பின் நாளில் உந்த கொலஸ்ரோல் ... ஒரு கல்யாணத்தையும் குழப்பியது ..... இங்கு நால்வருக்கு சொன்ன கொலஸ்ரோல் கதை ... வழுவி/மருவி ... காட் வருத்தக்காரன் என்று எதிரொலித்திட்டுதாம்!!! ... புண்ணியம் செய்த அப்பிள்ளை தப்பி விட்டது, பின் இன்னொரு பாவம் மாட்டுப்பட்டுடுது!!!!

இங்கு என்னத்துக்கும் எத்தனை வருட அனுபவம் என்று கேட்பது வழக்கம் .... அவ்வாறே எனக்கும், எனது ... இந்த கொலஸ்ரோலில் ... இருபது வருட அனுபவம் கொண்டனான் ... ம்ம்ம்ம்ம்ம் ... பெருமை!!! ...... எப்போதோ அடிக்கத்தான் போகுது ... தப்பினால் ... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ரோல்(LDL) அளவை குறைக்கும் சில உணவுகள்

மேலே குறிப்பிட்ட பழங்களில் ஒலிவ், அவகாடோஸ் (butter fruit)அளவாக சாப்பிட வேண்டும். வைனும் ஓரிரு கிளாஸ் மட்டும். :D

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் தனது பாதையை விலத்தி செல்வதால் இதில் எழுதுவதை தவிர்த்தேன்..ஒருவகையான நேரப்பிரச்சனை என்றும் சொல்லாம். இங்கே புதிய வடிவில் தர முற்படுகிறேன்..இங்கே நான் சொல்லுவது ஒரு பொது மருத்துவ புத்தகத்தில் இருந்து எடுத்தது..மேலதிக விபரங்கள் தேவைப்பட்டால் இங்கே யாழில் கேட்கலாம் அல்லது போசனை பற்றிய சிறப்பு புத்தகங்கள், இணையங்களில் பார்க்கலாம்.

கொழுப்பு கூடிய நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகள்

1 . எடுக்கும் கொழுப்பின் அளவை குறைத்தல்....

பற்பொருட்டகளும் இறச்சிவகைகளும் குறைக்கவேண்டும்..பதிலாக மீனும் கோழி இறைச்சி எடுக்கலாம். உணவில் / இறைச்சியில் உள்ள தெரியக்கூடிய கொழுப்புகளும், தோலும் அகற்ரவேண்டும். எமக்கு தேவையான சக்தியில் 30 % மேற்படாமல் கொழுப்பால் கிடைக்காமல் பார்க்க வேண்டும்.

2 . நிரம்பாத கொழுப்பமிலங்களை பயன்படுத்த வேண்டும்..mono + poly unsaturated fatty acid

நிரம்பிய அமிலங்களுக்கு பதிலாக நிரம்பாத கொழுப்பமிலங்களை (USFA) பயன்படுத்த வேண்டும். olive ஆயில் (மோனோ USFA), sunflower ஆயில் , corn ஆயில் , soya ஆயில் என்பன poly USFA ...அவற்றை நிரப்பிய FA பதிலாக பயன்படுத்த வேண்டும்

3 . ச்கொலேச்ற்றோல் அளவை குறைத்தல்..

ஈரல், மீன் சினை ( Fish roes ) கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். முட்டையும் றாலும் கூடியளவு கொலச்ற்றோளை கொண்டிருந்தாலும் அவற்றினால் கொடுக்கப்படும் கொலச்ற்றோளில் அளவு உடலில் மொந்த கொலேச்ற்றோளில் அளவுடன் ஒப்பிடும் பொது சிறிது என்பதால், ஒரு பூரண உணவு திட்டத்தில் (Balanced - diet ) அவைகளும் உள்ளடக்கப்படலாம். ...........கவனம் வடிவாக வாசிக்கவும் :lol:..............

4 . நார்தன்மையான உணவுகளை கூடுதலாக எடுத்தல்

உதாரணமாக சிறுதானியங்கள், பருப்புகள், வேர் கிழங்க்குள், இலை வகைகள், தயாரிக்கபாடாத தானியங்கள் ( unprocessed cereals )

5 . மது அருந்துதலை குறைத்தல்

6 . உடலில் நிறையை கவனித்தல்/ குறைத்தல்

7 . stanol esters உள்ள பொருட்ட்களை உணவில் சேர்த்து கொள்ளல்.

சில வகை மாயரின்களில் இவை சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும் ..

8 . மருந்து குளிகைகள் ..

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறே எனக்கும் எனது ... இந்த கொலஸ்ரோலில் ... இருபது வருட அனுபவம் கொண்டனான் ...

நேரம் இருக்கும்போது எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரான்சில் 30 வயது வரும்போது அரசால் ஒரு கடிதம் வரும்

இலவசமாக முழுமையாக பரிசோதிக்கும்படி..

எனக்கும் வந்தது

அதுதான் முதல்முறை பிரான்சில் வைத்தியரிடம் நான்போனது

அவர் எனக்கு சொன்னது

கொழுப்பு சீனி எல்லாமே 50 வயதில் இருக்கவேண்டியைதை இப்போதே சேமித்துவிட்டீர் என்று.[/color]

அதற்கு பின் சொல்லியவை நிழலிக்கு சொன்னவைகளே..

வைத்தியரிடம் நான்கேட்டது மாத்திரை வேண்டாம் வேறுவழி சொல்லுங்கள்

அன்றிலிருந்து நான் நிறுத்தியவை.

1- தேனீருக்கு சீனி

2- கேக் மற்றும் இனிப்பு பலகாரங்கள் இனிப்பு வகைகள்

3- பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி

4- முட்டைப்பொரியல் அவியல்

5- வீட்டில் பொரியல் வதக்கல் பிரட்டல்

6- இறால் நண்டு

7- கட்டிப்பால் மற்றும் ரின்பால்

8- குறைந்தளவு சோறு

9- அடிக்கடி கொறித்தல்......

சேர்த்துக்கொண்டவை

1- அதிகளவு மீன் கோழி

2- சலாட்

3- பாலாடை நீக்கிய பால்

4- பாண் மற்றும்இலகு சாப்பாடுகள்

5- ஆட்டா மா உணவுகள்

6- சாப்பாட்டுடன் அதிகளவு மரக்கறி.......

செய்யாதவை :- நடப்பது ஒரு நாளைக்கு 500 மீற்றருக்கும் குறைவு

உடற்பயிற்சி

ஓய்வு

Edited by விசுகு

என்ன பிரச்சனை என்றால் physical activites இல் எங்களுக்கு தேவையான தொடர்ச்சி இருக்காது ...சில வேளைகளில் பார்த்திருப்பீர்கள் ...வீதிகளில் ஓடுபவர்கள் --stop sign / சிக்னல் போன்ற இடங்களிலும் நிற்காமல் துள்ளிக்கொண்டு இருப்பதை ஏனெனில் நாங்கள் எங்களது ஓட்டத்தை நிறுத்தினால் இதயம் அது அடைய வேண்டிய உச்ச இதய துடிப்பு எண்ணிக்கையை அடையாது ..எங்களுக்கும் நாங்கள் எதிர்பார்க்கிற நல்ல பலன் வராது ....

நான் ஓடுவது treadmill இல் என்பதால் இடையில் நிறுத்தி ஓடுவதில்லை. கிழமையில் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 KM என தற்போது ஓடுகின்றேன். இதனால் வாரத்தில் 12 KM இனை ஓடி முடிக்க கூடியதாக இருக்கு. அத்துடன், ஒரு நாளொன்றில் காலை அல்லது இரவில் whole wheat, mixed beans என்பனவற்றை மட்டும் உண்கின்றேன். பார்ப்பம் மூன்று மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கும் போது எப்படி இருக்கின்றது என

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.