Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பட்டியலிலிருந்து தீபச்செல்வன் விலக்கப்பட்டுள்ளார்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு ஜெயபாலன்

அண்மையில் நான் மட்டக்களப்பு கிரானுக்கு சென்றேன். (கருணாவின் ஊர்) அங்கு பல மக்களுடன் பேசினேன். வீடு வீடாக சென்றோம். அனைத்து மக்களும் மனந்திறந்து பேசினார்கள். பிளவு படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பைதான் வலியுறுத்தினார்கள். வடக்கும் கிழக்கும் மனதால் நிலத்தால் பிரிவுபடாத பூர்வீக தாயகம் என்பதை கண்டேன். அவர்கள் சொன்னார்கள். ஆக்கிரப்பால் அவர்கள் எதர்கொள்ளும் நெருக்கடிகள் மிகுந்த கொடுமையானவை.

விடுதலைக்கான ஆயுதம் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது. இனி விடுதலைக்கான கருத்து அரசியல் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கப்போகும் தேர்தல் குறித்து பெரும் அதிருப்தியும் பதற்றமும் காணப்படுகிறது. எமது மக்கள் நல்ல பாடங்களையும் இந்த தேர்தலில் புகட்டக்கூடும். அதற்கு நாமும் ஊடகங்களும் சரியான வழிகளை காட்ட வேண்டும்.

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தில் கருத்தாடலில் கலந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுகிறேன். அவை என்னை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்த உதவுபவை. நான் யாழ்ப்பாணத்திலிருந்து இப்படி மனந்திறந்து பேசும் நிலை, அவசியமாகவும் - வாய்பாகவும் இருக்கிறது. இனி நாம் ஒளிந்திருந்து கொள்ள முடியாது. வெளியில் இறங்கி செயல்பட வேண்டியிருக்கிறது. மக்களை ஏமாற்றி பிழைக்கும் யாராக இருந்தாலும் எமது மக்களின் கனவை அரசியல்வலுவை விற்கும் - அடகு வைக்கும் யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டி மனந்திறந்து உரையாடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நின்றவாறு பல்வேறு இடர்கள், இடர்கள் என்பதைவிட மரணத்து நிழலில் நின்றே உண்மையான உணர்வாளர்களது நகர்வுகள் இருக்கிறது. பதவிகளுக்கப்பால் பரந்த நோக்குடனான ஒன்றிணைந்த மக்கள் சக்தியே மானுட விடுதலையின் அடிநாதமாகும். விதைக்கப்படடிருக்கும் விருட்சங்களின்மேல் நின்று ஒலியெழுப்பகிறது சிங்களம். அந்த ஒலியைக்காட்டியே தமிழினத்தை அச்சுறுத்தி பணியவைக்க முனைகிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களது துடிப்பான தொலைநோக்கான செயல்களே இன்றைய தேவையாகும். உங்களது பெயரும் இணைக்கப்பட்டபோது மகிழ்வாக இருந்தது. ஆனால் இது கூட ஒருவகையில் நன்மையே. முத்திரைகுத்தப்படாத தபால்களுக்கு நாமே பணம் செலுத்திப் பெற்றுக் கொள்வதுபோல், காலம் தனது இலக்கில் பயணிக்கிறதாகவே எண்ணத் தோன்றுகிறது. நெருப்பாறுகளைக் கடந்த இனத்தால் தற்போது நெருப்பாறா? வெறும் புகை மண்டலமா என்று பிரித்தறியமுடியாத மயக்கமான நிலையில் தங்களைப் போன்றோரது காத்திரமான பணியே மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கும்.

அரசியல் பிழைப்புவாதிகளே பிரதேசம் வகுப்புவாதம் பேசுகிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றுபட்ட தமிழ்த்தேசியமாக நிற்பதையே விரும்பவதை தங்களது கிரான் பயணம் மீளவும் பதிவு செய்துள்ளது. புலத்திலே மத்திய கிழக்கில் இருந்து, இங்கே கணொளி ஊடக நேரடி நிகழ்வில் பல இஸ்லாமியச் சகோதரர்கள் நாம் ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதைக் காணலாம். அவர்கள் பெரும்பாலும் தென்தமிழீழத்தவர்களாய் இருப்பார்கள். மக்களுக்கு விளங்குகிறது அடம்பன் கொடியாய் திரண்டிருக்க வேண்டமென. ஆனால் அரசியல் பிழைப்புவாதிகளுக்கு....?

பயணங்கள் வெற்றி பெறட்டும்.

Edited by nochchi

களத்தில் நின்றவாறு பல்வேறு இடர்கள், இடர்கள் என்பதைவிட மரணத்து நிழலில் நின்றே உண்மையான உணர்வாளர்களது நகர்வுகள் இருக்கிறது. பதவிகளுக்கப்பால் பரந்த நோக்குடனான ஒன்றிணைந்த மக்கள் சக்தியே மானுட விடுதலையின் அடிநாதமாகும். விதைக்கப்படடிருக்கும் விருட்சங்களின்மேல் நின்று ஒலியெழுப்பகிறது சிங்களம். அந்த ஒலியைக்காட்டியே தமிழினத்தை அச்சுறுத்தி பணியவைக்க முனைகிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களது துடிப்பான தொலைநோக்கான செயல்களே இன்றைய தேவையாகும். உங்களது பெயரும் இணைக்கப்பட்டபோது மகிழ்வாக இருந்தது. ஆனால் இது கூட ஒருவகையில் நன்மையே. முத்திரைகுத்தப்படாத தபால்களுக்கு நாமே பணம் செலுத்திப் பெற்றுக் கொள்வதுபோல், காலம் தனது இலக்கில் பயணிக்கிறதாகவே எண்ணத் தோன்றுகிறது. நெருப்பாறுகளைக் கடந்த இனத்தால் தற்போது நெருப்பாறா? வெறும் புகை மண்டலமா என்று பிரித்தறியமுடியாத மயக்கமான நிலையில் தங்களைப் போன்றோரது காத்திரமான பணியே மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கும்.

அரசியல் பிழைப்புவாதிகளே பிரதேசம் வகுப்புவாதம் பேசுகிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றுபட்ட தமிழ்த்தேசியமாக நிற்பதையே விரும்பவதை தங்களது கிரான் பயணம் மீளவும் பதிவு செய்துள்ளது. புலத்திலே மத்திய கிழக்கில் இருந்து, இங்கே கணொளி ஊடக நேரடி நிகழ்வில் பல இஸ்லாமியச் சகோதரர்கள் நாம் ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதைக் காணலாம். அவர்கள் பெரும்பாலும் தென்தமிழீழத்தவர்களாய் இருப்பார்கள். மக்களுக்கு விளங்குகிறது அடம்பன் கொடியாய் திரண்டிருக்க வேண்டமென. ஆனால் அரசியல் பிழைப்புவாதிகளுக்கு....?

பயணங்கள் வெற்றி பெறட்டும்.

நொச்சி, தெளிவாக கூறிவிட்டீர்கள். என் கருத்தும் இதுதான்

Edited by நிழலி

சம்பந்தரோ கூட்டமைப்போ

சரியோ பிழையோ

ஆனால் இந்த சந்தர்ப்பம் திரும்ப வராது... கூட்டமைப்பு செய்தது எலாம் சரியென்று சொல்லமுடியாது

அதுக்காக ஒற்றுமையை குலைத்தது எந்த விதத்திலும் சரிப்படுத்த முடியாதது..

இன்று கூட்டமைப்பால் எதைப் பெறமுடியுமோ அதைப் பெறுங்கள் அல்லது குறைந்த பட்சம் இருக்கும் பலத்தையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள். நாளை என்றொரு நாள் இருக்கும் அன்று குறையை நிவர்த்திக்கொள்ளுங்கள்.

இன்று இழக்கப்படும் ஒற்றுமை நாளைக்கு உங்களுக்கு முடிவுரை எழுத பயன்படலாம்.

இன்று எங்கள் ஒற்றுமையை குலத்தவர்களை நாளை கருணாவின் பட்டியலில் காலம் நிச்சயம் சேர்க்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிலும்இடம் கிடைக்காதுவிட்டால் ஜே.வி;.பில் தன்னும் நிற்ககோரும் 'பொயட்'டின் கருத்து..ஆள்க்கூட்டிக்கொடுக்கும் வேலைக்கு ஒப்பானது.ஏன் இவர்போய் நிற்கலாம்தானே...?

ஜே.வி.பி தமிழர்களின்தாயகக்கோட்பாட்டை ஆதரிக்கிறதா..?

வடக்கு-கிழக்கு தமிழர்களின்தாயகம் என்று சொல்லத்தயாரா..?

தீபச்செல்வனின் பிரச்சனை ஏதாவதுகட்சியில் நின்றுவென்று பா ராளுமன்றம் செல்லவேண்டும் என்பதுமட்டுமா..?

வடக்கு-கிழக்கில் தீபச்செல்வன்மட்டுமே உயிர்ஆபத்தில் வாழ்கிறாரா..?

கஜேந்திரனுக்கோ,சிவாசிலிங்கத்துக்கோ ஆபத்து என்பது முழுவதுமாக இல்லை என்று கோத்தாபாய் இங்குயாருக்காவது உறுதி தந்திருக்கிராரா..?

கூட்டமைப்பிலை இருந்து நல்லவை தூர இருக்கிறது தான் நல்லது.

தீபச்செல்வன் நீங்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களையும் கூறினால் இங்கு பலரிற்கு தெளிவு பிறக்கும் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

எனக்குள் ஒரு கேள்வி கன காலமாய் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது, எதற்காக நீங்கள் வரிந்துகட்டிக்கொண்டு சம்பந்தனையும் அவர் செய்கிற செயல்களையும் ஆதரித்துக்கொண்டிருக்கிறீர்கள்??ஒன்றில் நடப்பவை பற்றி முழுவதும் தெரிந்தவராக இருக்க வேன்டும்(அந்தரங்கம் உட்பட) அல்லது நடப்பவை எதுவுமே தெரியாமலிருக்க வேண்டும்.அன்னாரின் அண்மைய நேர்காணல்கள், கருத்துக்கள், பத்திரிக்கைப் பேட்டிகளைத் தொடர்ந்து கேளுங்கள். அப்போதாவது சிலவேளை உங்களுக்கு உண்மை புரியும்.

இந்த கேள்வி என்னை நோக்கியா..?

அதற்கு முன் எனக்கு ஒரு பதில் தாருங்கள்

தாங்கள் இன்று கூட்டமைப்புக்குள் நடப்பதாக வெளிவரும் பிரச்சினைகளை வரவேற்கின்றீர்களா....?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலமைப்பதவி தேசியத்தை ஆதரிக்கும் இளையவர்களிடம் போய்ச்சேர வேண்டும். இந்திய அடிவருடிகளும், அடிமைகளும் கூட்டமைப்பிலிருந்து துக்கியெறியப்பட வேண்டும். மொத்தத்தில் ஒரு முற்றான களையெடுப்பு நடைபெற வேண்டும். அதற்கு இப்போதுள்ள தலமை மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நான் அன்றிலிருந்து எதிர்க்கின்றேன்

உண்மையைச்சொன்னால் நாம்தான் அவர்களை இந்தநிலைமைக்கு கொண்டுவந்தோம்

சந்தேகப்பட்டு

சந்தேகப்பட்டு

கேள்விமேல் கேள்விகேட்டு

குத்தி குத்தி காட்டி

மோதவிட்டு

எம்மிலிருந்து அவர்களைப்பிரித்து பார்த்து

அரவணைக்கவேண்டிய வேளையில் காறித்துப்பி

எம்மிடம் ஒட்டாது பார்த்துக்கொண்டோம்

அவர்கள் வேறு என்ன செய்யமுடியும்

தம்மை ஆதரிக்கும் ஒரு சில மக்களுடன் எங்கோ ஒரு இடத்தில் ஒதுங்கியுள்ளனர்

அவ்வளவுதான்

அதிகதூரம் போகவேண்டாம்

இங்கு யாழில் சம்பந்தர் பற்றியும் கூட்டமைப்பு பற்றியும் எழுதப்பட்டவற்றை வாசித்தால்

அவர் தமிழராகவே இருப்பதை விரும்பமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

:D நாம் என்று யாரைச் சொல்கிறீர்கள்? புலிகலையா?? கூட்டணியின் கடந்தகால அரசியல் எங்களுக்குத் தெரியும். நீங்கள் அதன் தீவிர விசுவாசி என்றால் உங்களுடன் பேசுவதில் எந்தப்பயனுமில்லை. நல்லது நீங்கள் சம்பந்தனைக் கடவுளாகக் கொண்டாடுங்கள். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அவரை நாங்கள் எப்போதுமே தலைவராக ஏற்றுக்கொண்டதுமில்லை, இனியும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எமக்கு எப்பவுமே ஒரே தலைவர்தான். அந்த இடத்தில் ஒரு இந்திய அடிவருடியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

:D நாம் என்று யாரைச் சொல்கிறீர்கள்? புலிகலையா?? கூட்டணியின் கடந்தகால அரசியல் எங்களுக்குத் தெரியும். நீங்கள் அதன் தீவிர விசுவாசி என்றால் உங்களுடன் பேசுவதில் எந்தப்பயனுமில்லை. நல்லது நீங்கள் சம்பந்தனைக் கடவுளாகக் கொண்டாடுங்கள். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அவரை நாங்கள் எப்போதுமே தலைவராக ஏற்றுக்கொண்டதுமில்லை, இனியும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எமக்கு எப்பவுமே ஒரே தலைவர்தான். அந்த இடத்தில் ஒரு இந்திய அடிவருடியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

உண்மை.

Edited by பொய்கை

இந்தியாவின் நலனின் அடிப்படைக்குள் தான் ஈழத்தமிழரின் இருப்பிற்கான அரசியல் தீர்வு என்றால், இந்தியாவின் விருப்பிற்குச் செயற்படும் தமிழத்தேசியக்கூட்டமைப்பு எமக்குத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு அரசியல் இதெல்லாம் தெரியாது அதனால் எனக்கு சில கேள்விகள் உண்டு

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்(தப்பாக நினைக்கவேண்டாம்)

1.ஒரு பெரிய தனிக்கட்சியில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் அதிகமாக எத்தனை ஆசனங்கள் கிடைக்கும்? 1,2,3?

2. இலங்கையின் விகிதாசாரப்பிரதினித்துவ தேர்தலில் தமிழ் பேசும் மக்களுக்கு கூட்டமைப்பினால் எவ்வகையான நன்மையை கொண்டு வரலாம், கடந்தகாலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த கூட்டணியால் என்ன நனமை ஏற்பட்டது?

உ+ம்

கருணா,தேவா,பிள்ளையான் எல்லாரையும் ஒரே அணியில் இணைத்து தமிழ் பேசும் மக்களின் பிரதினித்துவத்தை ஒரே கட்சி ஏற்று பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு கூட்டாட்சியுடனான ஏதாவது தீர்வைக்கொண்டு வரமுடியுமா விகிதாசாரப்பிரதினித்துவத்தை பிரதிபலிக்கும் இலங்கைப்பாராளுமன்றத்தினூடாக?

3.அவ்வாறெனில் பாராளுமன்றத்தேர்தலில் வென்றவர்களைச்சேர்த்து மீண்டும் ஓர் கூட்டணி அமைக்கலாமே? உண்மையில் மக்கள் கட்சியடிப்படையில் தனிப்பட்ட ரீதியாக மோசமானவர்களை பாராளுமன்றிற்கு அனுப்பி பின்னர் அவர் ஊடகவியாளரை கொலை செய்வதான அச்சுறுத்தல் எல்லாம் வராது தானே?

உ+ம்

கட்சி கொள்கை அடிப்படையிலே கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கீழ் ஒரே குடையின் கீழ் 90% வீதமானவர்கள் ஒன்றிணைந்தனர்

(அந்த ஏக பிரதினித்துவம் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பது வேறு விடயம்)

5.கடைசியாக முகாம் மக்களின் விடுதலை ,போராளிகளின் விடுதலையை இந்த அரசிய வாதிகளால் வாங்கிக்கொடுத்து சாதிக்கமுடியுமா இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம்?

போராளிகளின் விடுதலையை இந்த அரசிய வாதிகளால் வாங்கிக்கொடுத்து சாதிக்கமுடியுமா இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம்?

போராளிகளின் விடுதலையை வாங்கித்தர முடியாது, போராளிகளின் விடுதலையை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளின் விடுதலையை போராட்டகுணம் உள்ளவர்களால் மட்டுமே செய்யமுடியும்.

கூட்டமைப்புத்தான் பொர்க்குணத்தைவிட்டு ரொம்பகாலம் ஆச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

[எதிலும்இடம் கிடைக்காதுவிட்டால் ஜே.வி;.பில் தன்னும் நிற்ககோரும் 'பொயட்'டின் கருத்து..ஆள்க்கூட்டிக்கொடுக்கும் வேலைக்கு ஒப்பானது.ஏன் இவர்போய் நிற்கலாம்தானே...?

ஜே.வி.பி தமிழர்களின்தாயகக்கோட்பாட்டை ஆதரிக்கிறதா..?

வடக்கு-கிழக்கு தமிழர்களின்தாயகம் என்று சொல்லத்தயாரா..?

தீபச்செல்வனின் பிரச்சனை ஏதாவதுகட்சியில் நின்றுவென்று பா ராளுமன்றம் செல்லவேண்டும் என்பதுமட்டுமா..? - poketdog]

ஐயோ poketdog, நீங்கள் தவறாக வாசித்து விட்டீர்கள். நண்பரே நீங்கள் என்னை திட்ட விரும்பினால் சும்மாவே திட்டலாமே. ஜெ.வி.பியினர் தீபசெல்வனுடன் தொடர்பு கொண்டிருந்தனர் தீபச் செல்வன் சமதிக்காதமை தொடர்பாக எனக்கும் தீபச் செல்வனுக்கும் நண்பர்களான ஜேவிபி தலைவர்கள் என்னுடனும் பேசினர் என்பதைக் குறிப்பிட்டு இந்த தருணத்தில் செய்ய்க்கூடியது அடிப்படைகளை தக்க வைத்துக் கொள்வதுதான் (இதுபற்றி சூறாவழி சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்) ஆதலால் சம்பந்தரோடு நில்லுன்கள் என்று வலியுறுத்தியிருக்கிறேன். நீங்கள் ஆரம்பத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள் தயவு செய்து திரும்ப ஒருமுறை முழுமையாக வாசியுங்கள்.

இதுதான் நான் எழுதியது

தீபச் செல்வன், உனது பதிலையும் கூட்டணியை பலகீனப் படுத்த விரும்பாத உனது நிலைபாட்டையும் நான் ஆதரிக்கிறேன். என்னிடம் தொலைபேசியில் பொருத்தமான வேட்பாளர்களை அறிமுகப் படுத்தும்படி கோரி பேசிய ஜெ.வி.பி தலைவர்கள் நீ அவர்களது வேட்பாளனாக நிற்பதையே பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் உனக்கு தேசிய பட்டியலில்கூட இடம்தர கூடும். இதுபற்றி நீயும் அறிவாய். எல்லாவற்றையும் தோற்றுவிட்டோமடா. எதிரி முக்கால் நாம் கால் என போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களது நம்பிக்கைகள் வாய்ப்புகள் வழிகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டோமடா. நிலத்தில் சைபர் மட்டத்தில் கிடக்கிறது எங்கள் தாயகம். அதுவும் வடக்கு கிழக்கென பிழவுபட்டுபோய் சீரழிகிறது. இன்றுள்ள சூழலில் வடகிழக்கு தமிழர்கள் இணைந்து ஒரே அணியாக நிற்க்கிறது என்பதை உலகுக்குச் சொல்வதுதான் முக்கியம். முஸ்லிம் தலைமையோடு இணக்கம் உள்ளதையும் நாம் உறுதிப் படுத்த வேண்டும். இந்த பணிகளை சம்பந்தர் சரியாகவே ஆரம்பிதிருக்கிறார். அதை நாங்கள் ஆரம்பிக்க வேணும். நம்முள் மறைந்து கிடக்கும் யாழ்மையவாத பிசாசு அடுத்த தெல்லாவற்றையும் துரோகிகளாக்கும் என்பதை அறிவாய். தீபச் செல்வா. இந்த ஆசனங்கள் போகும் வரும். வரலாறுதான் எமது சிம்மாசனமாகும்.

இந்த தருணத்தில் வடகிழக்கு இணைப்பையும் முஸ்லிம்களோடு இணக்கப் பாட்டையும் முன்னிலைப் படுத்தி சம்பந்தரது தலைமையில் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் எமது இனத்தின் உயிர்த்தெழும் முயற்ச்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.”[/i]இதில் எங்கே நீங்கள் கூட்டிக் கொடுப்பதாகச் சொன்ன கருத்திருக்கிறது சொல்லுங்கள்?

Edited by poet

:D:lol:^_^

போராளிகளின் விடுதலையை போராட்டகுணம் உள்ளவர்களால் மட்டுமே செய்யமுடியும்.

கூட்டமைப்புத்தான் பொர்க்குணத்தைவிட்டு ரொம்பகாலம் ஆச்சே.

உங்கட போர்குணத்தைத்தான் பார்த்தோமே....

வெளிநாடுகளில் இருந்து கொண்டு போராடுவது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட போர்குணத்தைத்தான் பார்த்தோமே....

வெளிநாடுகளில் இருந்து கொண்டு போராடுவது

இங்குசிலர் இப்போதுதான் விழுப்புண்களுடன்வந்து கருத்து எழுதுகிறார்களோ..?

தாயகத்தில் நின்று போராடியபோது தெரிந்துகொள்ள இவர்என்ன தமிழர்தரப்புடன் நின்றராரா??

இவர் நின்றது,சாப்பிட்டது,தோன்றியது எல்லாம் துரோகிகளுடன்தானே

அதுசரி,இவர்என்ன கஞ்சிக்குடிஆற்றில் காட்டுக்குள்நின்றா இதனை எழுதுகிறார்.

Edited by mankulam

இந்தத் தேர்தல் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.சம்பந்தருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் இங்கு இருக்கும் ஜெயபாலனுக்கும் இந்தியா என்றால் என்ன என்று இன்னும் தெரியவில்லையா இல்லை தெரியாதது போல் நடிக்கிறார்களா என்று தெரியவில்லை.விகிதாசாராப் பிரதினிதுவப்படி நடக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டாகாப் போட்டி இட்டாலும் பெரிய வேறு பாடு கிடையாது.கூட்டமைப்பு ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றம் சென்று ஒன்றையுமே சாதிக்கப்போவதில்லை.இந்தியா கொடுக்கும் கயிறைப் பற்றிக் கொண்டு சம்பூரைப்போல் தமீழத்தின் வளங்களை விற்பதற்க்கு தரகர்களாகச் செயற்படுவார்கள்.

இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்கள் விடுதலை பெற்றாலே தமீழமும் விடுதலை பெறும்.இந்தியாவை ஆளும் கும்பலை அழிக்க வல்ல சக்திகளுடன் ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வேறு வழியில்லை.சுயனிர்ணய உரிமைக்கு எதிராகச் செயற்படும் இந்திய ஆளும் வர்க்கம் தமிழரின் சுய நிர்ணயத்தை அங்கிகரித்து எமக்கு விடுதலைப் பெற்றுத் தரும் என்று சொல்பவர்கள் அரசியல் அரிச் சுவடி தெரியாதவர்கள்.இந்திய ஆளும் வர்க்கத்தின் நலங்களும் தமிழரின் நலன்களும் என்றும் ஒன்றாகப்போவதில்லை.இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எல்லா ஆட்டமும் முடிந்து விடும்.

நாம் புலத்தில் செய்ய வேண்டிய வேலைகளைக் கவனிப்போம்.எமக்கான நிறுவனக்களை அமைப்பதிலும் அவற்றைப் பலப்படுத்துவதிலும் ஈடுபடுவோம்.வரலாற்றில் இருந்து படித்துக் கொள்ளாதவர்கள் மீண்டும் படிக்கட்டும்.எமக்கான தருணம் வரும் வரை காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மக்களின் ஆகக்குறைந்தஉரிமைகளுக்குக்கூட எதிர்ப்புத்தெரிவித்து அரசியல்செய்யும்கட்சி ஜே.வி.பி.

சுனாமிமீள்கட்டுமாண இணைந்தவேலைத்திட்டத்துக்கும்,வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் எதிராக நீதிமன்றம்வரை சென்று தடைவாங்கியவர்கள் ஜே.வி.பி.

எழுத்தில்தன்னும் தமிழர்தாயகம்,சுயநிர்ணயம் என்றுஇருப்பவர்கள் தமிழர்கூட்டமைப்பினர்.

இவர்கள் இருவரும் ஒரேநபரை வேட்பாளராக்கதுடிக்கினம் என்றால் அவரின் கொள்கை என்னவாக இருக்கமுடியும்.

இதுக்குமுதலே ஒரு தமிழன் ஜே.வி.பி ன் பாராளுமன்றஉறுப்பினராக இருந்து விட்டஅறிக்கைகளும்,பேட்டிகளும் பார்த்துpர்கள்தானே..?? :D

Edited by mankulam

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து நாரதர்.

அடிவருடிகளுக்கும், அபிமாணிகளுக்கும் கண் மூடப்பட்டிருக்கிறது. கனவு தேசத்தில் வசிக்கும் அவர்களுக்கு இந்தியாவே எல்லாம், எல்லாமே இந்தியாதான். ஆகவே அதை நியாயப்படுத்துவதற்கு புலம்பெயர்ந்தவர்களையும் அவர்களது சளைக்காத போராட்டங்கலையும் ஒன்றில் கொச்சைப்படுத்துவர் அல்லாதுவிட்டால் உங்களால்த்தான் எமக்குப் பிரச்சினை என்பர்.

அதிலும் ஒருவர், ஏதோ யாழ்ப்பானத்துக் காரனால்த்தான் எல்லாப் பிரச்சனையுமே. ஆகவே திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தன் ஐய்ய கிழக்கு மக்களுக்கு நால் வழி காட்டுவார், அத்துடன் முஸ்லீம்கலையும் இனைத்துக்கொள்வோம் , யாழ்ப்பானத்தான் தேவையில்லை என்கிறார். கேட்டால், நான் புலிகளின் தலைவர்களுடன் கதைத்து ஆலோசனை வழங்கினேன், இந்திய சதிகாரிகள், அரசியல் வாதிகளுடன் மந்திராலோசனை நடத்திவிட்டுத்தான் இப்போது வருகிறேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லுவார். சிலவேளைகளில் அவரது கருத்துக்களை வாசிக்கும் போது தேவையற்ற மனவழுத்தம் தான் வருகிறது. போதுமடா சாமி.

கவிதை எழுதலாமே??!!!!எவருக்கும் பிரச்சனையில்லாமல்??!!!

இந்தத் தேர்தல் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நாராயணா!!.... விடிய விடிய ராமர் கதை, விடிந்தபின் ...??? ..... இன்று நீங்கள், நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசம் ஒரு ஜனநாயக செயற்பாட்டின் மூலம் வரும் பிரதிநிதிகளையே என்னத்துக்கும் எதிர்பார்க்கிறது. அது நல்லதோ/கெட்ட்தோ/கறுப்போ/வெள்ளையோ என்பதற்கு மேலாக!!!

ஆரம்பத்தில் சிறிலங்கா தேர்தல்கள் தேவையில்லை/புறக்கணிப்போம் என்று புராணம் பாடித்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய வாக்குகள் பெற்ற டக்லஸை பிரதிநிதியாக்கி ... உலக வலமும் வரவிட்டோம்!!! இந்தப் பன்னாடையை இன்று ஏதோ ஒரு பிரதிநிதியாக்கியதில் எம் பங்கை மறைக்க முடியாது!!!!! ... கேட்டவர்களையும் போட்டோம் ... பின்புதான் அரசியல் ஓரளவு புரிந்து ஈரோஸ் என அனுமதித்தோம் .... நினைவில்லையா??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.