Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

மிகவும் அபாயகரமான இந்த முன் முயற்சி, தனி மனித கருத்துச் சுதந்திரம் என்பதற்கும் அப்பால், பாரியதொரு நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய பகுதியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் கொண்ட மேற்குலகில் வாழும் அனைவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லுவதையும், எழுதுவதையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு எதிர்க் கருத்து வருவதையும் தவிர்க்க முடியாது. இந்த நிலையில், தனக்குப் பிடிக்காத கருத்தை ஒருவர் வைத்துவிட்டால், அவரை இனக் குழுமத்துடனோ, பிராந்திய கண்ணோட்டத்துடனோ விமர்சிப்பது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியாது.

தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில், அத்தனை கட்சிகளும், அணிகளும், அதன் வேட்பாளர்களும் பல்வேறுபட்ட விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர் கொள்ளவும், அதற்குத் தெளிவான பதில்களைக் கொடுக்கவும், தம்மீதான சந்தேகங்களைப் போக்கவும் கடமைப்பாடுடையவர்களாகவே உள்ளார்கள். இதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. 25 வருடங்களுக்கும் மேலாகத் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, தமிழ்த் தேசத்தை மீட்கும் போர்க்களத்தில் தளபதியாக நின்ற கருணாவின் துரோகத்தைப் பார்த்த தமிழீழ மக்கள் தமக்கானவர்கள் என்று தீர்மானிப்பதற்கு முன்னதாகக் கேள்விகள் கேட்கவே செய்வார்கள்.

இயல்பாக மக்கள் மனதில் எழும், எழுப்பப்படும் அத்தனை கேள்விகளையும் பிராந்திய வாதங்களை உருவாக்கித் தவிர்த்துக் கொள்வதும், தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் மிகவும் கேவலமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் தமிழ்த் தேசியத்தின்மீது தொடுக்கப்படும் மிகக் கொடூரமான தாக்குதலாகவே இதனைக் கருத முடியும். தமிழீழத்தில் பிரதேச வாதத்தை உருவாக்கி, அதன் மூலம் தனது துரோகத்தை மறைக்க முயன்ற கருணாவினால் நடந்து முடிந்தவை போதும். புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்கள் மத்தியில் புதிய கருணாக்கள் பிராந்திய பிரிவினையை உருவாக்கி, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலத்தைச் சிதைக்க முற்படுவதை யாரும் அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழீழ மக்களுக்கேயான அரசியல் சக்தி தடுமாற்றம் கொள்ளக் கூடாது. தவறாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால், அது ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மீண்டும் புதை குழிக்குள் சென்றுவிடும் என்ற தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களின் அவாவை யாரும் அர்த்தமற்றது என்று புறந்தள்ளிவிட முடியாது. கடந்த கால ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தனி மனிதர்களாகவும், குழுக்களாகவும் அரசியல்வாதிகள் செய்த தவறுகளின் தண்டனையையே இன்று தமிழீழம் அனுபவித்து வருகின்றது. கடந்தகால படிப்பினைகயோடு தமக்கான அரசியலாளர்களைப் புடம்போட்டு அங்கீகரிப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முயற்சி செய்வான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில், ஒற்றுமையின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட 'தமிழர் விடுதலைக் கூட்டணி' என்ற அரசியல் அமைப்பை வெற்றியடையச் செய்வதற்காக ஈழத் தமிழர்கள் 'சுயாட்சிக் கழகத்தின்' இலட்சியப் பாதையைக் கூட நிராகரித்து, திரு. வி. நவரட்ணம் என்ற அன்னைய தமிழீழத் தேசிய சிற்பியையும் தோற்கடித்தார்கள். அப்போதுஇ அந்த ஒற்றுமையின் பெயரால் நாடாளுமன்றம் சென்ற திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டதுடன், தமக்குத் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையையும்தூக்கி எறிந்துவிட்டது என்பதெல்லாம் எங்களது வரலாற்றுப் படிப்பினை.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயருக்காக தமிழீழ தேசம் ஒன்றுபட வேண்டுமாயின், அந்த அமைப்பும் அதன் தலைமைகளும் தமிழ் மக்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் முகம் கொடுத்து அவற்றைத் தெளிவு படுத்த வேண்டும். அதனை எதிர்கொண்டு நிவர்த்தி செய்யத் தவறினால், அவர்களது குறிக்கோள் கேள்விக்குரியதாகவே இருக்கும். அவற்றைப் பிராந்தியவாதம் பேசுவதன் மூலம் மறைத்துவிட முயற்சிப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, அதுவே மிகப் பெரிய தமிழினத் துரோகமுமாகும்.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பெரும்பாலும் முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் சம்பந்தனையே குற்றவாளியாக்கி அவரை பதவி விலக வேண்டும் என கோருவது அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற காரணமாகவும் இருக்கலாம்' என்ற ஊடகவியலாளர் இரா துரைரட்ணம் அவர்களது கருத்து ஏற்புடையதாக இல்லை. இங்கே பிராந்தியவாதம் எங்கே வருகின்றது. திரு. சம்பந்தன் அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளதால், அங்கு நடந்த, நடைபெறும் அத்தனை தவறுகளுக்கும் அவரே பொறுப்பாளராகக் கருதப்பட வேண்டியவராக இருக்கிறார். அதனால், இந்தக் கருத்துக்களை முன் வைப்பவர்களின் நோக்கத்தைப் பிராந்திய வாதம் கொண்டு மறைக்க முற்படுவது ஒரு நேர்மையான ஊடகவியலாளரின் செயலாக அமையாது.

அத்துடன், இப்பொழுது புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதாகும். சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மட்டக்களப்பு லேடி மனிங் வீதியைச் சேர்ந்தவர். சிலவேளை இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் நாராயணனின் உறவினர்கள் என புதிதாக கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களை துரோகிகள் என கூறுவதற்கு இவர்கள் எதையும் கண்டுபிடிப்பார்கள்.' என்று திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் கூறுவது தமிழ்த் தேசியத்திற்கு நஞ்சூட்டும் செயலாகவே இருக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை, பொய்களுக்கு அப்பால், ஒரு ஈழத் தமிழன் தனக்குத் தெரிந்த ஒரு அரசியல் கருத்தைக் கூறுவது என்பது அவரது தனி உரிமை. அதில்இ தவறு இருந்தால் அவர் மட்டுமே கேள்வி கேட்கப்பட வேண்டியவர். குற்றம் இருந்தால், அவர் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்காக, பிராந்தியவாதத்தைக் கிளப்பி வட தமிழீழ மக்களுக்கும், தென் தமிழீழ மக்களுக்கும் இடையே பிரிவினை வாதத்தை உருவாக்க முயற்சிப்பது, சிங்கள தேசியவாதத்தின் சூழ்ச்சிக்குத் துணைபோகும் சதியின் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

'பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார்.' என்ற இரா. துரைரட்ணம் அவர்களது கூற்று 'ஊடகவியலாளர்' என்ற அவரது பாத்திரத்திற்கு ஏற்புடையதல்ல. நண்பர் ஒருவர் சொன்னார் என்று மிகப் பெரியதொரு குற்றச்சாட்டை ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் முன் வைப்பது எந்த ஊடகத் தர்மமோ தெரியவில்லை. 'சம்பந்தனை சுட்டுத் தள்ள வேண்டும்' என்ற வாக்கியம் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய மிகத் தவறான கொலை அச்சுறுத்தல். இதனை யார் விடுத்திருந்தாலும் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ஆதாரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும். திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அதில், யாரும் அவ்வாறு கூறியதாக நான் உணரவில்லை.

புலம்பெயர் தமிழர்கள் குறித்து திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும் ஏற்புடையவை அல்ல. 'அண்மையில் சுவிஷ் நாட்டிற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கென்றி மகேந்திரன் ஆகியோரை நான் சந்தித்து கேட்ட போது ஒரு விடயத்தை சொன்னார்கள். தாங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் தரப்புடன் உறவுகளை பேணுவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதாக கூறிய அதேவேளை இங்கே பல பிரிவுகளாக இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்' என்ற அவரது கூற்று முழுமையானது அல்ல.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பை நிகழ்த்திய 'தமிழர் பேரவை', திரு. விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையிலான 'நாடு கடந்த தமிழீழ அரசு' ஆகிய இரு அமைப்புக்களும் உயர் மட்டத்தில் தெளிவான சிந்தனைகளுடனும், ஒற்றுமையுணர்வுடனுமே செயற்பட்டு வருகின்றார்கள். 'ஒரு அமைப்புடன் பேச்சு நடாத்துவதை மற்ற அமைப்பு விரும்பாது' என்பது கற்பனை வாதமே. அரசியல் நிகழ்ச்சி நிரலில், மகிந்த ராஜபக்ஷவுடனும், சரத் பொன்சேகாவுடனும், ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்கள் நடாத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தேச அமைப்புக்களுடன் பேசுவதற்கு இப்படியான காரணங்கள் கற்பிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே நோக்கப்படுகின்றது.

இந்தியா குறித்த திரு. இரா. துரைரட்ணம் அவர்களது பார்வை, அவரது சொந்தக் கருத்து. ஆனாலும், திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி ஆகியோரது வெளியேற்றத்திற்கான காரணங்களாக திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் முன்வைத்திருக்கும் கருத்து இதுவரை திரு. இரா. சம்பந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இதன் பின்னணியிலுள்ள இந்திய நிகழ்ச்சி நிரல் குறித்த சந்தேகம் இதன் மூலமும் தீர்க்கப்படவில்லை என்பதே பலமான எதிர் வினைகள் உருவாகப் போதியதாக உள்ளது.

'தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் கஜேந்திரன் பத்மினி போன்றவர்கள் இந்தியாவை விட மிக மோசமாக தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?' என்ற திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் 'சிறிலங்காவை விட, இந்தியா குறைவான தமிழர்களையே கொன்று குவித்தது. ஆகவே, இந்திய நிகழ்ச்சி நிரலுடன் பயணிப்பதே தமிழ் மக்களின் இறப்புக்களைக் குறைக்க உதவும்' என்று சொல்ல வருவதன் அர்த்தம் புரியவில்லை.

சி. பாலச்சந்திரன்

ஆசிரியர்

ஈழநாடு

http://www.pathivu.com/news/5713/54/.aspx

Edited by இளைஞன்
செய்தியை முழுமையாக இணைக்கவும்

தமிழர்களை மீண்டும் தொற்றியுள்ள இந்த பிரதேசவாதம் தமிழர்களின் இருப்புக்கு எவ்விதததிலும் உதவாது

எமக்கு நாமே போடும்

bowline-knot-03.gif

துரைரட்ணசிங்கம் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, சம்பந்தர் தாம் அடிப்படைகளில் இருந்து விலகவில்லை என்று சொல்கிறார்.அப்படியானால் தமிழரின் சுய நிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்து விட்டதா? இந்தியாவை விட்டால் எமக்கு வேறு எவரும் தீர்வைத் தராது ஆகவே நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து தான் தீர்வைப் பெற வேண்டும் எனில், இந்தியா தமிழரின் அடிப்படைக் கோரிக்கையான தேசிய சுயரிணயத்தை அங்கீகரித்து விட்டதா? நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள்?

புலம் பெயர் தமிழர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் நேர்மையாகப் பதில் சொல்ல முடியாது இருக்கிறது.அதற்க்கு இல்லாத பிரதேச வாததையும் வன்முறைக் கருத்துகளயும் இட்டுக் கட்டி எழுதுவது நேர்மையானா அரசியலா?

கஜேந்திரனோ பத்மினி சிதம்பரனாதனோ யார் எவர் ஆகினும் தமிழரின் அடிப்படைகக் கோரிக்கைகளை விற்பவர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்கள் என்பதே தமிழரின் அரசியல் வரலாறு. நீங்கள் இன்று சுடொரொளியையும் உதயனையும் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றலாம், ஆனால் தேர்தலின் பின் உங்களை நம்பிய மக்களை ஏமாற்றி உங்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் கயிற்றை நம்பி ஏமாறப் போகிறீர்கள்.

பாரிசில் ஈழமுரசு பத்திரிகையை கஜன் தொடங்கிய பொழுது தன்னுடைய ஈழநாடு பத்திரிகை வியாபாரம் விழுந்து விடும் என்று பயத்தில் அன்றைய பாரிஸ் புலிகள் பொறுப்பாளர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டது; மட்டுமல்லாமல்.பணம் வருமென்றால் புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் நடத்தவேண்டியதுதானே எதற்கு பத்திரிகை நடத்துகிறார்கள் புலியளிற்கு பத்திரிகை என்றால் என்ன என்று தெரியுமா என கேட்டதற்காக இதே பாலச்சந்திரனிற்கு அன்றைய பாரிசில் இருந்த புலிகள் நிருவாகத்தினர் மண்டையை அடித்துடைத்தனர் அதன் தழும்பு இன்றும் அவர் நெற்றியில் காணலாம் அதன் பின்னர் குகநாதனுடன் சேர்ந்து புலிகளிற்கு எதிராகவும் புலிகள் அமைப்பு நடவடிக்கைகளை பாரிஸ் 10 காவல்த்துறைக்கு தகவல் சொல்வபராகவும் செயற்பட்டுவந்த இதே ஈழநாடு சந்திரனிற்கு முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் திடீரென தமிழ்த்தேசியம் பொத்துக்கொண்டு வருவதன் மர்மம் என்னவோ???

Edited by DAM

  • கருத்துக்கள உறவுகள்

திரு துரைரட்ணம் அவர்களின் கட்டுரையை யாராவது இணைக்க முடியுமா?

திரு துரைரட்ணம் அவர்களின் கட்டுரையை யாராவது இணைக்க முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69568

மதிவதனனும் தராகியும் ஒன்று படுவது , தமிழருக்கு சுயனிர்ணயம் அவசியம் அற்ற ஒரு விடயம் என்னும் புல்ளியிலையே.இதனையே சம்பந்தரும் மறைமுகமாகச் சொல்லி இருகிறார்.அவர் ஏன் இதனை வெளிப்படையாகவே சொல்லி தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்கலாமே? ஏன் நேர்மையான அரசியல் செய்யாது, இவ்வாறு பிரதேசவாத்தின் பின்னால் மறைந்திருந்து மக்களை ஏமாற்றுகின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி.தயவு செய்து பிரதேசவாதம் பேசுவதை எல்லோரும் நிறுத்துங்கள்.தற்போதைய தமிழரின் நிலையை நினைத்தால் தலை சுற்றி மயக்கம் வருகிறது.

பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார்.' என்ற இரா. துரைரட்ணம் அவர்களது கூற்று 'ஊடகவியலாளர்' என்ற அவரது பாத்திரத்திற்கு ஏற்புடையதல்ல. நண்பர் ஒருவர் சொன்னார் என்று மிகப் பெரியதொரு குற்றச்சாட்டை ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் முன் வைப்பது எந்த ஊடகத் தர்மமோ தெரியவில்லை. 'சம்பந்தனை சுட்டுத் தள்ள வேண்டும்' என்ற வாக்கியம் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய மிகத் தவறான கொலை அச்சுறுத்தல். இதனை யார் விடுத்திருந்தாலும் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ஆதாரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும். திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அதில், யாரும் அவ்வாறு கூறியதாக நான் உணரவில்லை.

பிரான்சில் தமிழர் பேரவை நடாத்திய கூட்டத்தில் அதன் தலைவர் சோதிதான் சம்பந்தனை போட்டுத்தள்ளவேண்டும் என்று கூறியவர். நானும் கூட்டத்தில் நின்றிருந்தென்.உடனேயே கூட்டத்தில் பலரும் முக்கியமாக ரவி.இளங்கோ போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சோதியும் தான் சும்மா பகிடிக்கு சொன்னதாக சொல்லி மழுப்பினார் இது நடந்தது உண்மை அந்த நேரம் சந்திரனின் காதில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம்..

Edited by DAM

பிரதேச வாததை அடக்க அதன் குறுகிய பர்வையை அரசியல் ரீதியாக கருதியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும்.பதிலுக்கு பிரதேச வாதம் பேசுவது எதுவித பயனையும் தராது.

இவ்வாறான அவதூறான பாணியினாலான கதைகளை விட்டு விட்டு நேரடியகாப் பதில் சொல்லவும்.

தமிழரின் சுயனிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதா? அதற்க்காக ஆயுதம் எந்திப் போராடியவர்கள் தங்களை வடக்குக் கிழக்கு என்று பிரித்துப் பார்ததில்லை.சம்பந்தர் இந்தியாவிடம் இருந்து தமிழருக்கு தனைஅப்பெற்ருத் தரப் போகிறார்? இதினை அழிவுகலுக்கும் பின்னால் இருந்து செயற்பட்ட காலம் காலமாகாச்ச் செயற்பட்ட இந்தியா தமிழருக்கு அரசியல் விடுதலையைப்பெற்றுத் தருமா?

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

பிரதேச வாததை அடக்க அதன் குறுகிய பர்வையை அரசியல் ரீதியாக கருதியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும்.பதிலுக்கு பிரதேச வாதம் பேசுவது எதுவித பயனையும் தராது.

இவ்வாறான அவதூறான பாணியினாலான கதைகளை விட்டு விட்டு நேரடியகாப் பதில் சொல்லவும்.

தமிழரின் சுயனிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதா? அதற்க்காக ஆயுதம் எந்திப் போராடியவர்கள் தங்களை வடக்குக் கிழக்கு என்று பிரித்துப் பார்ததில்லை.சம்பந்தர் இந்தியாவிடம் இருந்து தமிழருக்கு தனைஅப்பெற்ருத் தரப் போகிறார்? இதினை அழிவுகலுக்கும் பின்னால் இருந்து செயற்பட்ட காலம் காலமாகாச்ச் செயற்பட்ட இந்தியா தமிழருக்கு அரசியல் விடுதலையைப்பெற்றுத் தருமா?

இப்போது(இக்காலப்பகுதியில்) தாயகத்தில் உள்ள மக்களுக்கு தமிழீழம் வேண்டாம்;உறிதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வுதான் வேண்டும்;

அவ்வாறில்லை எனக்கு தமிழீழம்தான் வேண்டும் என்றால் உங்கள் குடியுரிமைகளை கடலில் போட்டுவிட்டு சமர் களத்துக்கு வாருங்கள்

தமிழருக்கு எது வேண்டும் என்பதை ஒரு தாரக்கியோ சம்பந்தனோ தீர்மானிக்க முடியாது.துணிவும் அரசியல் நேர்மையும் இருந்தால் சம்பந்தன் தான் தமீழழத்தையோ அல்லது தமிழரின் சுயனிர்ணய உரிமைக் கோட்பாட்டையோ கைவிட்டு விடுவதாக் கூறிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறட்டும்.அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அவ்வாறில்லை எனக்கு தமிழீழம்தான் வேண்டும் என்றால் உங்கள் குடியுரிமைகளை கடலில் போட்டுவிட்டு சமர் களத்துக்கு வாருங்கள்

அண்ணை நான் வாறன். நீங்கள் எங்க நிக்கிறியள் எண்டு சொன்னியள் எண்டா வர வசதியா இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதும்செய்வினம் ஒத்துஓடினால் தமிழ்இனம் என்பார்கள்.

எதிர்த்தால் கிழக்கை ஒதுக்குகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.

சம்பந்தர் இப்போது தலைவராக இருப்பதுகூட வடக்கின் ஜி.ஜியும் செல்வாவும் போட்டராஜபாட்டையில்தான்.

Edited by mankulam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரிசில் ஈழமுரசு பத்திரிகையை கஜன் தொடங்கிய பொழுது தன்னுடைய ஈழநாடு பத்திரிகை வியாபாரம் விழுந்து விடும் என்று பயத்தில் அன்றைய பாரிஸ் புலிகள் பொறுப்பாளர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டது; மட்டுமல்லாமல்.பணம் வருமென்றால் புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் நடத்தவேண்டியதுதானே எதற்கு பத்திரிகை நடத்துகிறார்கள் புலியளிற்கு பத்திரிகை என்றால் என்ன என்று தெரியுமா என கேட்டதற்காக இதே பாலச்சந்திரனிற்கு அன்றைய பாரிசில் இருந்த புலிகள் நிருவாகத்தினர் மண்டையை அடித்துடைத்தனர் அதன் தழும்பு இன்றும் அவர் நெற்றியில் காணலாம் அதன் பின்னர் குகநாதனுடன் சேர்ந்து புலிகளிற்கு எதிராகவும் புலிகள் அமைப்பு நடவடிக்கைகளை பாரிஸ் 10 காவல்த்துறைக்கு தகவல் சொல்வபராகவும் செயற்பட்டுவந்த இதே ஈழநாடு சந்திரனிற்கு முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் திடீரென தமிழ்த்தேசியம் பொத்துக்கொண்டு வருவதன் மர்மம் என்னவோ???

நூற்றுக்கு நூறு உண்மையான வசனங்கள். 18ந் திகதிக்கு பிறகு ஈழநாடு தமிழர்மீது திடீர் பாசம் காட்ட தொடங்கி விட்டது. சுவிஸில் நடந்த தனது வானொலிபாட்டு நிகழ்ச்சிக்கு வந்த சனம் எல்லாத்தையும் தனது ஊர்சனம் என்று நினைத்து குகநாதன் மேடையில் சொன்னார் இந்த மக்கள் தன்னுடன் இருக்கும் வரை தான் புலி என்ன யாரையும் எதிர்பேன் என்று:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகநாதனின் 'டன் ரி.வி ல் விரைவில் இதே சம்பந்தனின் பேட்டிவரும்.

குகநாதன்,சம்பந்தன்,துரைரெத்தினம் போன்றோர் நகர்வது ஆதிக்கசக்தியின் உதவியுடன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் சுயனிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதா?

இப்போது(இக்காலப்பகுதியில்) தாயகத்தில் உள்ள மக்களுக்கு தமிழீழம் வேண்டாம்;உறிதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வுதான் வேண்டும்;

அவ்வாறில்லை எனக்கு தமிழீழம்தான் வேண்டும் என்றால் உங்கள் குடியுரிமைகளை கடலில் போட்டுவிட்டு சமர் களத்துக்கு வாருங்கள்

தராக்கி,

சுயநிர்ணய உரிமையை அங்கீகரி என்றால் தமிழீழம் கொடு என்று கேட்பதாக என்று அர்த்தப்படாது. தமிழராகிய நாம் சுயநிர்ணய உரிமையுடன் தான் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்தோம், காலனிய ஆதிக்கம் ஏற்படும்வரை. அந்த உரிமையையே இப்போது திரும்பக் கேட்கிறோம். சம்பந்தரோ, இல்லை வேறு எவரோ சுயநிர்ணய உரிமை தமிழருக்குத் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட முடியாது. ஏனெனில் இது பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் அனுபவித்து வந்த உரிமை.

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அது பிற்காலத்தில், தேவை ஏற்படின் தமிழீழம் மலர்வதற்கு ஏதுவாக அமையும் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு நூறு உண்மையான வசனங்கள். 18ந் திகதிக்கு பிறகு ஈழநாடு தமிழர்மீது திடீர் பாசம் காட்ட தொடங்கி விட்டது. சுவிஸில் நடந்த தனது வானொலிபாட்டு நிகழ்ச்சிக்கு வந்த சனம் எல்லாத்தையும் தனது ஊர்சனம் என்று நினைத்து குகநாதன் மேடையில் சொன்னார் இந்த மக்கள் தன்னுடன் இருக்கும் வரை தான் புலி என்ன யாரையும் எதிர்பேன் என்று:rolleyes:

குகநாதனின் 'டன் ரி.வி ல் விரைவில் இதே சம்பந்தனின் பேட்டிவரும்.

குகநாதன்,சம்பந்தன்,துரைரெத்தினம் போன்றோர் நகர்வது ஆதிக்கசக்தியின் உதவியுடன்தான்.

பாரிசில் ஈழமுரசு பத்திரிகையை கஜன் தொடங்கிய பொழுது தன்னுடைய ஈழநாடு பத்திரிகை வியாபாரம் விழுந்து விடும் என்று பயத்தில் அன்றைய பாரிஸ் புலிகள் பொறுப்பாளர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டது; மட்டுமல்லாமல்.பணம் வருமென்றால் புலிகள் பெண்களை வைத்து வியாபாரம் நடத்தவேண்டியதுதானே எதற்கு பத்திரிகை நடத்துகிறார்கள் புலியளிற்கு பத்திரிகை என்றால் என்ன என்று தெரியுமா என கேட்டதற்காக இதே பாலச்சந்திரனிற்கு அன்றைய பாரிசில் இருந்த புலிகள் நிருவாகத்தினர் மண்டையை அடித்துடைத்தனர் அதன் தழும்பு இன்றும் அவர் நெற்றியில் காணலாம் அதன் பின்னர் குகநாதனுடன் சேர்ந்து புலிகளிற்கு எதிராகவும் புலிகள் அமைப்பு நடவடிக்கைகளை பாரிஸ் 10 காவல்த்துறைக்கு தகவல் சொல்வபராகவும் செயற்பட்டுவந்த இதே ஈழநாடு சந்திரனிற்கு முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் திடீரென தமிழ்த்தேசியம் பொத்துக்கொண்டு வருவதன் மர்மம் என்னவோ???

நீங்கள் எல்லோரும் குளப்ப மட்டுமே முயல்கின்றீர்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது

தொடரட்டும் தங்கள் பணி

ஆனால் தாங்கள் தாக்கும் நபர்கள் வாழும் நாட்டில்தான் நாங்களும் இருக்கின்றோம்

என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்

Edited by விசுகு

பிருதேசவாதம் குழப்பகரமானது. அதை யார் கையில் எடுத்தாலும் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். இருப்பதோ இரண்டு மாகாணங்கள். அவையும் இப்போது முழுமையாகத் தமிழரிடமில்லை. தேர்தல்கள் எவ்வளவு வந்தாலும் ஒற்றுமை மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எது வேண்டும் என்பதை ஒரு தாரக்கியோ சம்பந்தனோ தீர்மானிக்க முடியாது.துணிவும் அரசியல் நேர்மையும் இருந்தால் சம்பந்தன் தான் தமீழழத்தையோ அல்லது தமிழரின் சுயனிர்ணய உரிமைக் கோட்பாட்டையோ கைவிட்டு விடுவதாக் கூறிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறட்டும்.அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவே எனது கருத்தும். ஒற்றையாட்சிக்குள் மகிந்த தரும் தீர்வை ஏற்றுக்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்கின்றதா இல்லையா என்பதையும் நேர்மையாக மக்களிடம் சொல்லி வாக்கைக் கேட்கப் போகலாம். போலியான/மயக்கமான வார்த்தைகள் வேண்டாம்.

தமழ் மக்களை "மக்கள்", "அந்த மக்கள்" என்று சொல்லுவதை விட்டுவிட்டு "நமது மக்கள்" என்று இந்தக் கூட்டமைப்புத் தலைவர்கள் அழைக்கப் பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் தராக்கி அவர்களே, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற பத்திரியாளரின் பெயரில், கருத்துக்கள் எழுதுகிறேன் எனக்கூறி, புலத்தின் நிலைமையை நாடிபிடித்துப்பார்ப்பதாக உதார்விடவேண்டாம். புலத்தில் நம்மவர்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் எங்களுக்குப் பிச்சைவேணடாம் நாயைப்பிடி எண்டு யாரும் அங்க கூறவில்லை அப்படிக்கூறுபவர்கள் யாழ்நகரை அண்டியுள்ள பகுதிகளில் நுளம்பக்கடிக்கு மத்தியலும்;, தேத்தண்ணி வைத்துக்குடிப்பதற்கு அருகிலுள்ள கோயில்களுக்கோ அன்றேல் முனிசிபாலிற்ரி; தண்ணீர்ப்பைப்பையோ நம்பி, காலையில் எழுந்ததும் கால்ராத்தல் பாணும் ஒரு கதலிவாழைப்பழத்துடனும் கடன்முடித்து, மாலையானதும் நல்லூர்க் கோவில்வாசலில் இருந்து ஊர்க்கதைபேசி ஏழு மணிக்குமுன்பு ஆமைப்பூட்டைப்போட்டு கேற்றை மூடிவிட்டு அயலட்டையில ஆபத்துக்கு ஐயோ எண்டு கத்தினாலும் கால்முதல் தலைவரை போத்திக்கொண்டு படுத்துறங்கும் வேடிக்கை மனிதர்கள் சிலர் உங்களது கருத்துடன் ஒத்துப்போகலாம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏழாலை வடக்கில் முனியப்பகோவிலடி என்னும் ஒரு இடமிருக்கு, அப்பிரதேசத்திற்கு அருகாமையில காவலரண் அமைக்க முயன்ற இராணுவத்துக்கு என்ன நடந்தது என்பதை, யாரிடமாவது கேட்டத்தெரிந்து கொள்ளவும். தற்போது அப்பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர்கள் பலரை இராணுவம் அள்ளிக்கொண்டு போய்விட்டதை இந்திய ஊதுகுழல் பத்திரிகைகள் என்ன காரணத்தாலோ வெளிவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது(இக்காலப்பகுதியில்) தாயகத்தில் உள்ள மக்களுக்கு தமிழீழம் வேண்டாம்;உறிதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வுதான் வேண்டும்;

அவ்வாறில்லை எனக்கு தமிழீழம்தான் வேண்டும் என்றால் உங்கள் குடியுரிமைகளை கடலில் போட்டுவிட்டு சமர் களத்துக்கு வாருங்கள்"

அன்புடன் தராக்கி அவர்களே, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற பத்திரியாளரின் பெயரில், கருத்துக்கள் எழுதுகிறேன் எனக்கூறி, புலத்தின் நிலைமையை நாடிபிடித்துப்பார்ப்பதாக உதார்விடவேண்டாம். புலத்தில் நம்மவர்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் எங்களுக்குப் பிச்சைவேணடாம் நாயைப்பிடி எண்டு யாரும் அங்க கூறவில்லை அப்படிக்கூறுபவர்கள் யாழ்நகரை அண்டியுள்ள பகுதிகளில் நுளம்பக்கடிக்கு மத்தியலும்;, தேத்தண்ணி வைத்துக்குடிப்பதற்கு அருகிலுள்ள கோயில்களுக்கோ அன்றேல் முனிசிபாலிற்ரி; தண்ணீர்ப்பைப்பையோ நம்பி, காலையில் எழுந்ததும் கால்ராத்தல் பாணும் ஒரு கதலிவாழைப்பழத்துடனும் கடன்முடித்து, மாலையானதும் நல்லூர்க் கோவில்வாசலில் இருந்து ஊர்க்கதைபேசி ஏழு மணிக்குமுன்பு ஆமைப்பூட்டைப்போட்டு கேற்றை மூடிவிட்டு அயலட்டையில ஆபத்துக்கு ஐயோ எண்டு கத்தினாலும் கால்முதல் தலைவரை போத்திக்கொண்டு படுத்துறங்கும் வேடிக்கை மனிதர்கள் சிலர் உங்களது கருத்துடன் ஒத்துப்போகலாம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏழாலை வடக்கில் முனியப்பகோவிலடி என்னும் ஒரு இடமிருக்கு, அப்பிரதேசத்திற்கு அருகாமையில காவலரண் அமைக்க முயன்ற இராணுவத்துக்கு என்ன நடந்தது என்பதை, யாரிடமாவது கேட்டத்தெரிந்து கொள்ளவும். தற்போது அப்பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர்கள் பலரை இராணுவம் அள்ளிக்கொண்டு போய்விட்டதை இந்திய ஊதுகுழல் பத்திரிகைகள் என்ன காரணத்தாலோ வெளிவிடவில்லை.

இப்போது(இக்காலப்பகுதியில்) தாயகத்தில் உள்ள மக்களுக்கு தமிழீழம் வேண்டாம்;உறிதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வுதான் வேண்டும்;

தமிழீழத்தை அடைவதை விட உறுதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வை சிங்களத்திடம் இருந்து பெறுவது மிகக் கடினமான காரியம். இப்போது பிரச்சனை தமிழீழமும் இல்லை நீங்கள் வேண்டும் தீர்வும் இல்லை இரண்டுக்கும் அ்ப்பால் தமிழீழ மக்களின் தனித்துவம் இருப்பு தக்கவைக்கப்படவேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் தமிழர்கள் தனித்துவமாக இருந்தால் தான் பஞ்சாயத்து தீர்வையேனும் பெறமுடியும். தற்போதைய சிங்களத்தின் அசைவுகள் தீர்வு என்ற ஒன்றுக்கான கதைக்கே இடமில்லை என்பதாகும். எல்லோரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். இருக்கும் தமிழர்களும் அறுபத்தெட்டு கட்சிகள் கூட்டமைப்புகள் பிரதேசவாதங்கள் என சிதைந்துகொண்டிருக்கின்றனர். அதை இன்னுமு் விரிவுபடுத்துவதிலேயே இருக்கின்றோம் தவிர தடுப்பதில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகநாதனின் 'டன் ரி.வி ல் விரைவில் இதே சம்பந்தனின் பேட்டிவரும்.

குகநாதன்,சம்பந்தன்,துரைரெத்தினம் போன்றோர் நகர்வது ஆதிக்கசக்தியின் உதவியுடன்தான்.

வந்தபின் அதுபற்றி கதைக்கலாம் இப்போது நடக்கும் பிரச்சினைக்குவாருங்கல். :(

நீங்கள் எல்லோரும் குளப்ப மட்டுமே முயல்கின்றீர்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது

தொடரட்டும் தங்கள் பணி

ஆனால் தாங்கள் தாக்கும் நபர்கள் வாழும் நாட்டில்தான் நாங்களும் இருக்கின்றோம்

என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்

குகநாதன் புலிகளுடன் முரன்படவில்லை என்று சொல்கிறீர்களா? பாரீஸ் ஈழநாட்டின் தமிழர்கள் மீதான அக்கறை 18க்கு பின்னானது என்பதை மறுக்கிறீர்களா? ரிஆர்ரி தொலைகாட்சி பிரச்சினை நடக்கவில்லை என்கிறீர்கள? :rolleyes::o:o

எப்படிப்பட்டவர்கள் பிரதேச வாதத்தை கையில் எடுப்பார்கள்?

* குறுக்கு வழியில் எதையாவது சாதிக்க நினைப்பவர்கள்

* தவறுகள் செய்துவிட்டு அதை மறைத்து தப்பிக்க நினைப்பவர்கள்

* கவனத்தை திருப்பி தாம் செய்ய இருக்கும் தவறுகளை மறைக்க விழைபவர்கள்

* பலவீனமானவர்கள், சுயநலவாதிகள்

* குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைக்கும் சுயநலவாதிகள்

* தெரிந்தோ தெரியாமலோ மக்களின் ஒற்றுமையை சிதைத்து எதிரிக்கு துணை போபவர்கள்

* தெரிந்தோ தெரியாமலோ எதிரிகளின் கைக்கூலியாகி ஓர் இனத்தை அழிக்க முயலுபவர்கள்

* .........

* தம் பிரதேச மக்கள் அழித்து, ஒடுக்கப்படும் போது, ஒடுக்குமுறையாளரை எதிர்த்து மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள்

* தம் பிரதேச வளங்கள் மற்றவர்களால் சூறையாடப்படும் போது, சூறையாடுபவர்களை எதிர்த்து மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள்

* .........

பிரதேசவாதிகள் மேற்கூறிய ஒரு வகையை / பல வகைகளை சேர்ந்தவர்களாக இருப்பர்.

Edited by Aasaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.