Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா.

ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார்.

ParamahamsaNithyananda.jpg

அந்தப் பேட்டி:

கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன்.

முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், தாழ்வையும் தொட்டுவிட்டேன்.

இவை எனக்கு வாழ்க்கையின் இதர பரிமாணங்களை கற்றுத் தந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கண்டுவருகிறேன்.

எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை உருவாகும் என்றோ, என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.

இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை தான் எனக்கு ஆறுதல்.

கேள்வி: சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள் தானா?

நித்தியானந்தா: அதில் நிறைய தவறான சித்தரிப்புகள், இடைச்செருகல மற்றும் மார்ஃபிங் நடந்துள்ளன.

வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.

அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் பிரக்ஞையற்ற நிலையில் இருந்தேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை திரிக்கப்பட்டும், தவறானதாகவும் சித்தரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. எனது 'பிரைவசி' பறிபோயுள்ளது.

அதோடு நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைக் கூட மீடியாக்கள் படமெடுத்துள்ளன. இது நிச்சயமாக என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடந்துள்ளது.

கேள்வி: வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை (ரஞ்சிதா) உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?

நித்தியானந்தா: ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா நேற்றும் இன்றும் நாளையும் எனது தீவிர பக்தைதான். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள்.

ரஞ்சிதா எனக்கு நீண்ட காலமாக எனக்கு சேவை செய்பவர். அந்த காலகட்டத்தில் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். நீண்ட நாள்கள் அப்படியிருந்தேன். அப்போது அவர் தான் என்னை முழுவதுமாக மனமுவந்து கவனித்துக் கொண்டார்.

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.

சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?

நித்தியானந்தா: தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன்.

அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் பிரக்ஞையுடன் உங்களுக்கு 'பயோ-மெமரி' அதிகளவில் இருக்குமானால், மற்றவர்களின் தேவை குறைவானதாக இருக்கும்.

உங்களது பயோ- மெமரி வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.

இந்த வீடியோ எனக்கு எதிரான மிகப் பெரிய சதி. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரத்தத்தை வைத்து ரத்தத்தைக் கழுவ முடியாது.

எனது பல்வேறு சேவைகளை கருத்தில்கொண்டு இதனை சமுதாயம் நிராகரித்திருக்க வேண்டும்.

விரைவில் பெங்களூருக்கு வருவேன்

கேள்வி: மீண்டும் ஆஸ்ரமத்திற்கு திரும்புவீர்களா?

நித்யானந்தா: 'எனது நிலையை சீடர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஹரித்வாரில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை.

நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. கும்பமேளாவில் எனது கடமைகள் முடிந்தபின் நான் பெங்களூர் ஆஸ்ரமத்துக்குத் திரும்புவேன்.

இந்த வழக்கு தொடர்பாகவோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கவோ போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை' என்றார்.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.

நித்தியானந்தா

அடி செருப்பாலை

மொக்கானந்தா திரும்பத் திரும்ப தப்பானந்தா.

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா: ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா நேற்றும் இன்றும் நாளையும் எனது தீவிர பக்தைதான். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள்.

குடுத்து வைச்ச சாமியார்.greensmilies-008.gif

ரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா.

வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.

.

thatstamil.com

இவருக்கு சொல்லுங்கோ லண்டன விட ஸ்ரீலங்காவில தான் உதை கண்டு பிடிக்கிற அதி சிறந்த தொளில்நுட்பவியலாளர்கள் இருக்கீனமெண்டு.....

ஏனெண்டால் லண்டன் தொலைக்காட்சியில் வெளியானத அவர்கள் அது திரிக்கப்பட்டதெண்டு கண்டு பிடித்தவையாம்... :rolleyes::)

Edited by shanu thinesh

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!

அதைத்தான் வீடியோவில பார்த்தமே..! :rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைத்தான் வீடியோவில பார்த்தமே..! :rolleyes::)

வீடியோவில் ஜம்பண்ணி எல்லோ எழும்பி இருந்தவர் சமாதிநிலையில் இது எந்தவடிவம் பிணங்கள் எழுந்திருக்கும் முறையோ? :lol::lol::lol:

வீடியோவில் ஜம்பண்ணி எல்லோ எழும்பி இருந்தவர் சமாதிநிலையில் இது எந்தவடிவம் பிணங்கள் எழுந்திருக்கும் முறையோ? :rolleyes::):lol:

smiley-laughing024.gifsmiley-laughing024.gifsmiley-laughing024.gifsmiley-laughing025.gifsmiley-laughing025.gif

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் ஜம்பண்ணி எல்லோ எழும்பி இருந்தவர் சமாதிநிலையில் இது எந்தவடிவம் பிணங்கள் எழுந்திருக்கும் முறையோ? :rolleyes::):lol:

மெய்நிலையை அடையும்போதே மனிதன் ஆனந்த பரவசம் அடைகிறான்.

மெய்நிலையை அடைவதற்கு தன்னிலையை மறக்க வேண்டும்.

அவர் உற்சாகமாக இருந்ததை மட்டும் வைத்து அவர் சமாதிநிலையில் இருக்கவில்லை என்று வாதிட முடியாது.

சமாதிநிலையிலும் ஒர் உற்சாகநிலையுண்டு. சமாதிநிலையை எட்டுவதற்கே அசைவற்று இருந்து பழகிகொள்ளவேண்டும்.

அதற்கு இமாலாய பகுதியில் உள்ள சாமியார்கள் கஞ்சாவை உபோயோகிக்கின்றார்கள். நாட்டில் நல்ல செல்வாக்குடன் உள்ள சாமிமார் காஞ்சனாவை ( அல்லது ரஞ்சிதாவை) பாவிக்கின்றார்கள். ஆக தன்னிலையை மறந்த நிலையே சமாதிநிலை!

அந்நிலையிலேயே சுவாமி இருந்ததை நான் வீடியோவில் பார்த்தேன்.

பாவிமனுசா...

பொய்யுக்கு மேல் போய் சொல்லி வாழும் வாழ்க்கை தேவையா உனக்கு.

பேசாமல் சாமி வேஷத்தை கலைச்சிட்டு ரஞ்ச்சிதாவேட குடும்பம் நடத்திற வழியைப்பாருடா புண்ணாக்கு.

அதைத்தான் வீடியோவில பார்த்தமே..! :rolleyes::)

:lol::lol::lol::lol::lol::lol:

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதி என்பது எல்லாவற்றையும் மறந்து இருத்தல். நிதியானந்தா அவர்கள் ரஞ்சிதாவுடன் இருக்கும்பொழுது சமாதி நிலையை உணர்ந்துள்ளார் என்பது தான் பொருள். ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய துணையுடன் இருக்கும்பொழுது சமாதி நிலையை உணர்கின்றன. அந்தக்கணப்பொழுதுதான் சமாதி நிலை. உலகத்தை மறந்தநிலை. நித்தியானந்தா சொன்னதில் பிழை ஏதும் இல்லை. இப்போது எல்லோரும் சமாதி என்றால் என்ன? சமாதியில் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஈன்மீகத்தில் சமாதியிலையும் இல்லறத்தில சமாதிநிலையும் உணர்வுகள் ஒன்றே. இதனால் தான் சிற்றின்பம், பேரின்பம் என்று சொன்னார்கள். இல்லறத்தில சமாதி சிற்றின்பம், ஆன்மீகத்தில் சமாதி நிலை நீண்டநேரத்திற்கு அனுபவிக்கலாம். இதனால் இதைப் பேரின்பம் என்றார்கள். நித்தியானந்தா சிற்றின்பசமாதியில் இருந்துள்ளார். நித்தியானந்தாவின் பேச்சுக்கள் உலகில் பலருக்கு விளங்காததால் தான் அவர் பின்னே இந்தக்கூட்டங்கள் திரிகின்றது. இல்லறச்சிற்றின்பத்தில் அனுபவிக்கும் கணப்பொழுதில் எல்லோரும் சமாதி நிலையை உணர்கின்றார்கள். சமாதி நிலை என்பது இதுதான். இதை நீங்களும் பேரின்பமாக்குங்கள். அப்படியென்றால் நீங்கள் உண்மையில் பெரிய சாமியார்கள் தான்.

இருந்ம இடத்தில் இருந்து 360 பாகையிலும் பார்க்கும் நித்தியானந்தாவிற்கு தனக்கு நடக்கப்போவதை உணரவில்லையே. சாமியென்று நம்பி பின்னே அலையும் சுட்டங்கள் இனியாவது திருந்துமா?

ஆபரின்பத்தை அடைய விரும்புகின்றவர்கள், சிற்றின்பத்தில் கணப்பொழுதில் உள்ள ஆனந்தநிலையை தனித்திருந்து நீண்டநேரம் அனுபவித்தால் அதுதான் பேரின்பநிலை. இதைவிட மேலான விளக்கம் ஏதும் இருக்கமுடியாது. நீஙகளே இறைகனைக்காணுங்கள். சாமிகளுக்குப்பின்னால் செல்லாதீர்கள்.

முற்றும் துறந்தவனுக்குச் சொத்துக்கள் இருக்கமுடியாது. சொத்துக்கள் இருப்பவர்களைச் சாமியாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். இதுவே போலிச்சாமிகளை அடையாளம் காண நல்ல சான்று.

ரொம்ப ரொம்ப தாஞ்ஸ் நித்தியானந்தா!! .... நாங்களும் எங்கேயாயினும் இடக்கு முடக்காக மாட்டுப்படுகையில் ....... "சமாதி நிலையில் இருந்தோம்" என்று மனுசிமாரிடம் சொல்லலாம், .... கட்டாயம் நம்புங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு சமூக சேவகன், சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை - நித்தியானந்தா பேட்டி

சென்னை: நான் ஒரு சமூக சேவகன். ஆன்மீக ஆராய்ச்சியாளன். மற்ற துறையினர் தவறு செய்தால் கொடுக்கப்படும் 'பெனிபிட் ஆப் தி டவுட்' கூட எனக்குத் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

ஜெயா டிவிக்கு நித்தியானந்தா அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது...

சில நாட்களுக்கு முனபாக வெளியிடப்பட்ட வீடியோ டேப் பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த பல துரதிரஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றியும் உங்கள் முன்பாக சில உண்மைளையும் சில கருத்துக்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பல பொதுமக்களிடமிருந்தும், நிருபர்களிடமிருந்து வந்திருக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன்.

முதலில் சொல்ல விரும்பும் சில கருத்துக்கள் வீடியோ டேப் குறித்து இப்போதுதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மிஸ்ரெப்ரசன்டேஷன், மேனிபுலேஷன், கான்ஸிபிரஸி இவையெல்லாம் பாகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆராய்வதற்கு முன்பாக எந்தவொரு செய்தியையும், கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. அடிப்படையாக அதைத் தாண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வீடியோ டேப் வெளியிடப்பட்ட உடனேயே அதனுடைய உண்மைகளைப் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் சமூக சேவை செய்து வரும் எனது தியான பீட ஆசிரமங்கள், பல இடங்களில் சமூக விரோத கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆசிரமம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிற, வாரந்தோறும் மருத்துவ உதவி செய்கிற, பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிற ஒரு சமூக சேவை நிறுவனம். அங்கிருந்த பிரமச்சாரி ஒருவரை தள்ளி, சமூக விரோத கும்பல் ஒன்று ஆசிரமங்களை அடித்து நொறுக்கி ஒரே ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் ஆசிரமங்களும், தியான மையங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒரு நாளுக்குள் நூற்றுக்கணக்கான இடங்களில் பல நிகழ்வுகளை செய்ததனால் யார் இதைச் செய்தார்கள், ஏன் இதைச் செய்தார்கள், எங்களுக்கு யார் விரோதி என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு விரோதிகள் இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. நாங்கள் அமைதியாக வாழ்கின்ற ஒரு ஆன்மீக இயக்கம். நான் அடிப்படையில் ஒரு ஆன்மீக ஆராய்ச்சியாளன்.

என்னுடைய வாழ்க்கையில் எனக்கு நடந்த ஜீவன் முக்தி அனுபவத்தை உலகத்தில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள என்னால் ஆன எல்லா ஆராய்ச்சிகளையும் உலகத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஆன்மீக ஆராய்ச்சியாளன். இதை நான் உலகத்தோடு செய்து கொண்டிருக்கும் பொழுது ஏன் இத்தனை பேர் என் மீது விரோதம் பாராட்ட வேண்டும் என்று எனக்குமே முழுமையாகப் புரியவில்லை. பல இடங்களில் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், கொளுத்தப்பட்டதும் துரதிர்ஷ்டவசமானது.

திடீரென்று ஒரே ஒரு இரவில், நானும் தியான பீட இயக்கமும் லட்சக்கணக்ககான பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்ந்தோம். இதற்கு என்ன என்று தெரியவில்லை. காரணமில்லாமல் யார் எங்களைத் தாக்குகிறார்கள் என்று கூட தெரியவில்லை. எதற்காக நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு சில விஷயங்களை உங்கள் முன்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ, சினிமாத் துறையிலோ, கலைத் துறையிலோ, அறிவியல் துறையிலோ யாராவது சமூக பங்களிப்பு செய்திருந்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த ஒரு மிகப் பெரிய பிரச்சனையயும், மிகப் பெரிய கலவரங்களையும் சமூகம் ஏற்படுத்துவதில்லை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை புறக்ணிக்கப்படுகிறது. அப்படியே மிகப் பெரிய பிரச்சனை வந்தாலும் சந்தேகத்தின் சாதகம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நானும் ஆன்மீகத் துறை மட்டுமல்லாமல், பல துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளேன். கல்வித் துறையில் பள்ளிகளை நடத்துவதும், யோகா துறையிலே உடல் நலத்திற்காகவும், தியானத் துறையிலே மன நலம் சார்ந்தும், இதைத் தாண்டி ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிலும் ஆராயாச்சிகளை செய்து பல துறைகளிலே பல பங்களிப்புகளை செய்துள்ளேன். பல நூல்களை அளித்துள்ளேன். ஒரு எழுத்தாளனாக 200 நூல்களை உருவாக்கியுள்ளேன். ஒரு பேச்சாளனாக பல்வேறு விதமான மேடைகளிலே பொதுமக்களோடு லட்சக்கணக்கான பொதுமக்களோடு எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு கடந்த ஏழாண்டு பொது வாழ்க்கையிலே ஆயிரக்கணக்கான மணி நேரம் சொற்பொழிவாற்றியுள்ளேன்.

இப்படி பல துறைகளிலும் பல்வேறுவிதமான பங்களிப்புகளை அளித்துள்ளேன். மருத்துவம், ஆன்மீகம், உடல் நலம், யோகா போன்றவை குறித்து மருத்துவ துறையிலே ஆராய்ச்சி செய்துள்ளேன. வலியில்லா பிரசவம் செய்வது குறித்து யோகா மற்றும் தியானத்தை வடிவமைத்துள்ளேன். பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு ஆன்மீக, மன, உணர்வுரீதியான தீர்வுகளை ஆராய்ந்து பல இடங்களில் பேசியுள்ளேன், எழுதியுள்ளேன். இதையெல்லாம் தாண்டி, மனிதனுடைய அடிப்படை உணர்வுகளான கோபம், பொறாமை, காமம், பயம் போன்றவற்றுக்கு ஆன்மீக, மருத்துவ, அறிவியல்ரீதியாக உலகத்திற்கு பல பங்களிப்புகளை செய்துள்ளேன்.

நான் ஒரு சமூக சேவகன். பலவேறு வழிகளில் சமூக சேவை செய்துள்ளேன். இதுபோல பல துறைகளிலே பங்களிப்பை செய்திருந்தாலும், ஆன்மீகத் துறையிலும் பங்களிப்பைச் செய்துள்ளேன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு வினாடி கூட எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், தீர விசாரிக்காமல், பெனிபிட் ஆப் தி டவுட் கூட கொடுக்காமல், இன்னசன்ட் டில் புரூவன் கில்டி சொல்வார்கள், எனது விஷயத்தில் கில்டி டில் புரூவன் இன்னசன்ட் என்ற வகையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. யாரையும் நான் பழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆழ்ந்து விசாரிக்காமல் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதே தவறை நான் செய்ய விரும்பவில்லை. விசாரிக்காமல் நான் பழிக்க விரும்பவில்லை.

உண்மையில் எத்துணை ஆழ்ந்து யோசித்தாலும் சட்டவிரோதமான எந்த செயலையும் நான் செய்யவில்லை. சட்டத்திற்கு விரோதமான பல துரோகங்கள் எனக்கு இழைக்கப்பட்டுளளன. பக்தர்களும், சீடர்களும், எப்படியாவது, ஏதாவது சட்ட விரோத செயலை செய்ய வேண்டும் என்று ஆசிரமம், தியான பீடங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்களது வீடுகளையும் கூட அடித்து நொறுக்கியுள்ளனர்.

எனது பிரம்மச்சரிய, சன்னியாசிகள் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கடும் சொல்லால் துயர்பபடுத்தப்பட்டிருக்கறார்க்ள்.

ஆனால், அவர்கள் எல்லாம் எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு பதிலடியில் இறங்காமல் ஆழ்ந்த அமைதியில் உள்ள லட்சோபம் லட்சம் சீடர்களையும், பக்தர்களையும் வணங்குகிறேன்.

சிலர் உண்மையில் புரிந்து கொண்டால் கூட ஆனந்தப்படுவேன். பல பேர் இது போல விசாரிக்கப்படாமல், கொடுமைப்படுத்தப்பட்டு, யோசிக்கப்படாமலேயே சிந்திக்கப்படாமலேயே அவதிக்கு உள்ளாகியிருப்பீர்கள். நீங்கள் எல்லாம் தயவு செய்து உங்களது குரல்களை கொடுங்கள், எனக்காக பிரார்த்தினை செய்யுங்கள். ஒரு சில ஆழமான விஷயங்களை நாம் கவனிக்காமல்யே போயிருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி இந்த சூழ்நிலையில் கற்றுக் கொண்ட, எனக்குக் கிடைத்த நல்ல செய்தி என்னவென்றால், கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால், சமூகத்தினுடைய படித்த, உயர்ந்த, மற்றும் யோசிக்கத் தெரிந்த தனியாக தெளிவாக சிந்திக்கத் தெரிந்த பல லட்சக்கணக்கான பேர் எனக்கு தங்களின் ஆதரவையும், அன்பையும் அளித்துள்ளனர்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரிய பாகம், அடுத்தவருடைய தனிப்பட்ட வாழக்கை சம்பந்தப்பட்ட இழிவான, கொச்சைப்படுத்தபப்ட்ட செய்திகளை பார்க்கவோ, கேட்கவோ விரும்பவில்லை. அதுபோல விஷயத்தை சார்ந்து ஒருவரை எந்தவிதமான பழித்தலுக்கும், எந்தவிதமான முடிவெடுத்தலுக்கும் செய்யவி்ல்லை என்பதை பல லட்சக்கணக்கான செய்திகள் [^], கடிதங்கள் இமெயில்கள், போன்கள் போன்றவை மூலம் தெரிந்து கொண்டதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது.

இன்னும் யாராவது தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை சார்ந்த ஓரிரு வதந்திகளை பெரிது பண்ணாமல், உண்மையா, பொய்யா என தெரிந்து கொள்ளாமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறப்படுவதைப் போல, இந்தக் காலத்தில் எதை வேண்டுமானாலும், தவறாக கூற முடியும். எந்த ஒரு செயலையும் எந்த ஒரு கோணத்திலும் சொல்லி விட முடியும். எந்தத் தீர்ப்பையும் சொல்ல முடியும்.

சமூகத்தில் ஒரு மிகப் பெரும் பாகம், இந்த மாதிரியான செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல், செய்திகளை வைத்து மனிதர்களை எடை போடாமல் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.

ஆனால் சில சமூக விரோத கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் சமூக சேவை நிறுவனமான தியானபீடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயல்களால் நானும், எனது பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்கிறோம்.

பொதுமக்களை தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன், தீர விசாரிக்காமல் எந்த முடிவுக்கும், செயலுக்கும் வர வேண்டாம். எல்லா உண்மைகளும் வெளிவந்து சொல்லப்படும் வரை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

மெளன தியானத்தை நீட்டிக்கிறேன்...

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளரான மல்ஹோத்ராவுக்கு நித்தியானந்தா அளித்துள்ள இன்னொரு பேட்டியில், நான் மக்களுக்கு கடமைப்பட்டவன், இறைவனுக்கும் தர்மத்திற்கும் கடமைப்பட்டவன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்துகிறார்களோ அதை குணப்படுத்தும் கடமை எனக்கு உண்டு. என் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர நான் பாடுபடுவேன். மதத் தலைவர்களின் ஆதரவும் எனக்கு கிடைத்து வருகிறது.

எனது மனசாட்சியின் அடிப்படையில், நான் மெளன தியானத்தை தொடர்ந்து நீட்டிக்கப் போகிறேன். போகிறேன். இது புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதுதான் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற உதவும் என கருதுகிறேன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்தினார்களோ, அவர்களை குணப்படுத்த தியானம் மூலம் நான் முடிவு செய்துள்ளேன்.

அனைத்துப் பக்தர்களையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தியானத்தை தொடருங்கள். தயவு செய்து எனது போதனைகளை, சக்திகளை புரிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை. எப்படி, சிவசூத்திரா, பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்ரா போன்றவை சக்தி வாய்ந்தவையோ, அதேபோலத்தான் எனது போதனைகளும், தியான முறைகளும். அதை விடாமல் தொடருங்கள். புத்தொளி பெறுங்கள். நமது அன்பையும், பரிவையும் உலகம் முழுவதும் பரவ விடுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

வழக்கு மாற்றப்பட்டதா இல்லையா...?:

இதற்கிடையே, நித்தியானந்தா மீதான வழக்குகள் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து டிஜிபி லத்திகா சரண் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் போலீஸார் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள், நித்தியானந்தா வழக்கு குறித்த விசாரனை எந்த அளவில் இருக்கிறது? என்று கேட்டபோது, நித்தியானந்தா வழக்கு விசாரணை கர்நாடகா அரசுக்கு மாற்றப்பட்டு விட்டது என்றார் லத்திகா.

ஆனால் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கான தகவல் கிடைக்கவில்லை என கர்நாடகா கூறியுள்ளதே? என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, வழக்கு மாற்றம் குறித்து ரிஜிஸ்டர் தபாலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் லத்திகா சரண்.

thatstamil.com

ஏனைய துறைகளைபோன்று சந்நியாசமும் பணம் பண்ணும் ஒரு துறையோ?

அடப்பாவி நீ இதுவரைக்கும் செய்ததைவிட இப்போது சொவதற்கே அடி பலமாக விழப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: 00...உச்ச கட்டத்தை சொல்கிறார் ஆக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் வீடியோவில பார்த்தமே..! :wub::)

இசை, நீங்க அந்த வீடியோவை எத்தனை தரம் பார்த்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

110310_01.jpg

110310_02.jpg

110310_03.jpg

110310_04.jpg

110310_05.jpg

Edited by கறுப்பன்

இந்தியர்கள் கீழ்த்தரமானவர்கள், பண்பற்றவர்கள் என்பவற்றை உந்த சமாதிநிலை வியாக்கியானம் சொல்கிறது!

அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இயக்கிய பயங்கரவாதிகளுக்கும், உந்த போலிச் சாமி நித்தியானந்தாவுக்கும் உது பொருந்தும்!!

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!

சமாதி என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் கீழ்த்தரமானவர்கள், பண்பற்றவர்கள் என்பவற்றை உந்த சமாதிநிலை வியாக்கியானம் சொல்கிறது!

அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இயக்கிய பயங்கரவாதிகளுக்கும், உந்த போலிச் சாமி நித்தியானந்தாவுக்கும் உது பொருந்தும்!!

இந்திய அரசியல்வாதிகள் எம்மை சீண்டுகிறார்கள். அதற்காக இந்திய மக்களை நாம் தூற்றவேண்டுமா என்று சிலமுறை நானே என்னை கேட்டிருக்கிறேன்.

இந்திய பண்பு நிலை ஆமியையும் சுவாமியையும் வைத்து சொல்லாதீர்கள். சாதாரண மக்களின் நிலையே அதுதான்.

என்னோடு வகுப்பில் படிக்கும் ஒரு தீபத் பெண் இப்போதுதான் அங்கு சென்று வந்தார் (டில்லி மும்மை) அவர் பிறந்தது இந்தியாவில் வளாந்தது இங்கு அமெரிக்காவில். பல காலம் கழித்து உறவினர்களிடமும் சுற்றுலாவுமாக சென்று வந்தார்.

இதுதான் எனது இறுதிபயணம் என்று சொல்கின்றார். காரணம் பொதுபோக்குவரத்து பஸ் ரயில் ஒன்றிலும் ஏற முடியுதில்லையாம் ஆண்கள் வந்து ஒரே உரசிகொண்டிருப்பார்களாம் உள்ளாடைகள் ஏதும் அணிவதாக தெரியவில்லையாம் தமது குறிகளாலேயே வந்து உரசுகிறார்களாம். நான் இங்கு சுதந்திரமாக இருந்து பழகிவிட்டேனோ என்னமோ எனக்கு மிகவும் அருவெருப்பாக வாந்தி வருவதுபோல் உள்ளது. ஆனால் அங்குள்ள பெண்களுக்கு அது பழகிவிட்டதோ என்னமோ? என்று சொன்னார். அவர்களுக்கு அதைவிட வேறு வழியுமில்லைதானே என்று சொல்கின்றார். இதுதான் தற்போதைய பண்பு நிறைந்த இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

சாரு நிவேதிதா எழுதிய

சரசம், சல்லாபம், சாமியார்.

புதிய விறுவிறு தொடர்

1

18.03.10 தொடர்கள்

இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நித்யானந்தாவைப் பற்றி எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை எதுவும் தெரியாது. புகைப்படங்களை மட்டுமே பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். மற்றபடி அவருடைய கட்டுரைகளைப் படித்ததில்லை. பொதுவாக தமிழ்நாட்டில் காவி உடுத்தியவர்களுக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. அதற்குக் காரணம்இ காவி உடுத்தியவர்கள் பலரும் அந்தக் காவிக்குத் தரப்பட வேண்டிய கௌரவத்துடன் வாழவில்லை. பிரேமானந்தாவில் தொடங்கி பல உதாரணங்கள் உண்டு. பாலியல் வல்லுறவுஇ பெண் கடத்தல்இ கொலை என்று சாதாரண மனிதர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத கிரிமினல் வேலைகளில் இந்தக் காவிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதால்தான் இவர்கள் மீது மக்களுக்கு மரியாதை போய்விட்டது. பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்காக பிரேமானந்தா சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறார். இரண்டு சாமியார்கள் டி.வி. சேனலில் மக்கள் பார்வையில் பேட்டை ரவுடிகளைப் போல் அடித்துக்கொண்டதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

செய்தித்தாள்களில் அவ்வப்போது தாதாக்களைப் பற்றிய பரபரப்பான செய்திகளைப் படிக்கிறோம். கொலைஇ பாலியல் வல்லுறவுஇ ஆள் கடத்தல் என்று பல சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அவர்கள் கடைசியில் ஒன்றுஇ போலீஸால் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளப்படுகிறார்கள். அல்லது சக தாதாக்களால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் யாரும் 40 வயதுக்கு மேல் வாழ்வதில்லை.

இந்த தாதாக்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத குற்றச்செயல்களில் ஈடுபடும் காவிகளோ கடவுள்களாக மதிக்கப்பட்டு முதலமைச்சர்களாலும்இ குடியரசுத் தலைவர்களாலும் காலில் விழுந்து தொழப்படுகிறார்கள். காரணம்இ மக்களின் கடவுள் நம்பிக்கை. இந்திய ஆன்மிகத்தின் செழுமையான பாரம்பரியத்தில் துறவிகளுக்கு மன்னருக்கும் மேலான மரியாதை இருந்தது. அதனால்தான் மன்னர்களே துறவிகளுக்குப் பாத பூஜை செய்தனர்.இந்த ஆன்மிக பாரம்பரியத்தையும்இ மக்களின் கடவுள் நம்பிக்கையையும் பயன்படுத்தி ஆறே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி ஆகிஇ மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தா. இப்போது அவருடைய காமக் களியாட்டங்களால் அந்த உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.

நித்யானந்தா பற்றி நான் ஆறு மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்ட செய்தி இவரும் ஒரு பிரேமானந்தா என்றே என்னை நினைக்க வைத்தது. எப்போதும் அழகான இளம் பெண்களுடனேயே இருக்கிறார் என்பதுதான் நான் கேள்விப்பட்ட செய்தி. அதுவும் அவருடைய தனி அறையில்கூட அந்த இளம் பெண்களோடுதான் இருக்கிறார் என்று அறிந்ததால் எனக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை; பிரேமானந்தாவைப் போல் எப்போது மாட்டிக்கொள்வாரோ என்றே என் நண்பர்களிடம் சொல்லி வந்தேன்.

இந்த நிலையில்இ ஆறு மாதங்களுக்கு முன் நித்யானந்தா எழுதிய ‘ஜீவன் முக்தி’ என்ற பெரிய புத்தகத்தைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தபோதுஇ இவரைப் பற்றிய என் கருத்து மாறியது. ஒரு மாபெரும் ஞானியே இதை எழுதியிருக்க முடியும் என்று நினைத்தேன். புத்தர்இ ஓஷோஇ ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தத்துவம் அனைத்தும் இதிலே ஒன்று திரண்டிருந்ததைக் கண்டேன். ஒரு நல்ல ஞானியின் மீது சொல்லப்பட்ட வீண்பழிகள் என்றே முன்பு கேள்விப்பட்ட விஷயங்களைப் பற்றி நினைக்கத் தொடங்கினேன். இத்தனை பெ

ரிய ஆன்மிக ஞானத்தை ஒரு கபட சந்நியாசியால் அடைய முடியாது என்பதே அப்போதைய என் முடிவாக இருந்தது.

இந்த நிலையில் நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கேட்டபோதுஇ அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் என் மனதை விட்டு அகன்றன. அவர் பேச்சைக் கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்விட்டனர். நானும் அழுதேன். அந்த அளவுக்கு மக்களின் இதயத்துக்குள் ஊடுருவுவதாக இருந்தது அவருடைய உருக்கமான பேச்சு. இந்தப் பேச்சுத் திறமையால்தான் அவரால் உலகம் முழுவதும் ஆறே ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகளை நிறுவ முடிந்தது. இன்றைய தினம் அவருடைய சொத்தின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கலாம். எப்படி இந்தக் கோடிகள் அவரிடம் ஆறே வருடத்தில் சேர்ந்தன?

நித்யானந்தாவைப் பார்த்ததிலிருந்து அவருடைய புகழைப் பாட ஆரம்பித்த நான் லட்சக்கணக்கில் அவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அந்தக் காரியத்தைச் செய்தேன் என்பதாக இணையதளங்களில் ஓர் அபத்தமான வதந்தி உலவி வருகிறது. இதுபற்றி ஒரு முக்கியமான விஷயத்தை வாசகர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நித்யானந்தா யாருக்குமே பணம் தர மாட்டார். அவருக்குத்தான் மற்றவர்கள் பணம் தர வேண்டும்.

முதல் முறை அவரைக் கூட்டத்தோடு கூட்டமாக நான் சந்தித்தபோதுஇ அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காகக் குனிந்தேன். உடனே நித்யானந்தாவின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு துறவி என்னைத் தடுத்தார். காலில் விழுந்து வணங்க வேண்டுமானால் 25இ000 ரூபாய் கட்டணம் என்று பிறகு தெரிந்து கொண்டேன். ஆனால்இ அதுபற்றி எனக்குச் சந்தேகம் எழவில்லை. ஏனென்றால்இ இப்படி வசூலிக்கப்படும் பணமெல்லாம் சமூகத் தொண்டுக்காக செலவழிக்கப்படுகிறது என்றார்கள்.

பள்ளிஇ கல்லூரிஇமருத்துவமனை என்றதும் நான் வாயை மூடிக்கொண்டேன்.

மேலும்இ அவர் சொற்பொழிவைக் கேட்பதற்குக் கூட ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அவரைப் பொருத்தவரை எதுவுமே இலவசம் இல்லை. அப்படிக் காசு கொடுத்துத்தான் ஒவ்வொரு சொற்பொழிவையும் நான் கேட்டேன். இது தவிரஇ ‘ஹவுஸ் விஸிட்’ என்று சொல்லப்படும் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது. நித்யானந்தா ஒரு பக்தரின் வீட்டுக்குச் சென்றால்இ அதற்குக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய். ஏழைகளுக்குக் கல்விஇ மருத்துவம் இதற்கெல்லாம் பணம் தேவைப்படாதாஇ என்ன பேசுகிறீர்கள்? நல்லவேளைஇ அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லாததால் நான் தப்பினேன். ஆனாலும் என்னிடமிருந்து ஒரு லட்சம் அந்தக் கள்ளச் சாமியாரின் கஜானாவுக்குப் போய்த்தான் சேர்ந்தது.

என் மனைவி அவந்திகா வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவள். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடையவள். கேட்க வேண்டுமா? பல காலம் நாத்திகவாதியாக இருந்த நானே நித்யானந்தாவின் பின்னே செல்ல ஆரம்பித்ததும் அவளும் விழுந்து விட்டாள்.

நித்யானந்தா அவ்வப்போது வட இந்திய தீர்த்த யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கும்பமேளா நடக்க இருப்பதால் அதில் கலந்துகொள்ள நித்யானந்தாவின் பிடாதி ஆசிரமத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நான் ஏற்கெனவே வட இந்தியாவில் நிறைய சுற்றியவன். ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணுக்கு அலுவலக வேலைஇ வீட்டு வேலை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? செல்வந்தர்களைப் போல் அவர்களால் ஆண்டுதோறும் கோடைச் சுற்றுலா செல்ல முடியுமா என்ன? அவந்திகா தன் வாழ்நாளில் எந்த ஊருக்கும் சென்றதில்லை என்பதால்இ இந்த கும்பமேளா யாத்திரைக்குச் செல்ல விருப்பப்பட்டதும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் 25 ஆண்டுகள் வேலை செய்து கிடைத்த ஓய்வு ஊதியமாக வந்த இரண்டரை லட்ச ரூபாயில் ஒரு லட்சத்தை நித்யானந்தா ஆசிரமத்தில் கொடுத்து பயணத்துக்கு ஆயத்தமானாள் அவந்திகா. இந்தக் குழுவில் பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் தாயும் இருந்தார்.

« « «

நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகளைப் பார்த்து விட்டுப் பலரும் ‘‘இதில் என்ன தவறு?’’ என்று கேட்கிறார்கள். ஓர் ஆண் 32 வயதில் செக்ஸுக்கு சலனப்படுவதில் என்ன ஆச்சரியம்? என்ன தவறு? என்பது அவர்கள் வாதம்.

ஓர் ஆண் ஒரு பெண்ணோடு செக்ஸ் கொள்வது அவர்களுடைய அந்தரங்க விஷயம்தான். அதில் நாம் தலையிட எதுவும் இல்லை. ஆனால்இ சுவாமி நித்யானந்தா இதுவரை என்ன சொல்லி வந்தார் தெரியுமா? தன்னை ஒரு கட்டை பிரம்மச்சாரி என்று மட்டும் அல்ல; ஸ்ரீராமன்இ கிருஷ்ணர் போன்றவர்களின் அடுத்த அவதாரம் என்று சொல்லிக்கொண்டார். அவர் எழுதிக் குவித்திருக்கும் 300 புத்தகங்களில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. நித்யானந்தா ஒரே நாளில் பத்து மணி நேரம் சொற்பொழிவு ஆற்றக்கூடிய திறமை படைத்தவர். ஒவ்வொரு வகுப்பாக மாறி மாறிச் சென்றுகொண்டே இருப்பார். பல நூறு வெளிநாட்டு மாணவர்களுக்கு யோகாஇ தியானம் நவீன விஞ்ஞானம் என்று நாள் முழுவதும் ஓய்வே இல்லாமல் அவர் வகுப்பு எடுப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். (ஆனால் இப்போதுதான் தெரிகிறது. இரவில் அவருக்கு கால்களையும் இன்ன பிறவற்றையும் பிடித்து விடுவதற்கு நடிகைகள் இருந்துள்ளனர் என்று).

இந்த சொற்பொழிவுகளின் எந்த சி.டி.யைக்

கேட்டாலும் நான் சொல்வதற்கான ஆதாரத்தைக் காணலாம். நித்யானந்தாவின் அத்தனை சொற்பொழிவுகளும் வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சொற்பொழிவுகள் அனைத்திலும் நித்யானந்தா குறிப்பிடும் ஒரு விஷயம். ‘‘சாமி வெறும் குரு அல்ல; கடவுளின் அவதாரம்.’’ நித்யானந்தா தன்னை எப்போதும் சாமி என்றே குறிப்பிடுவார். ‘‘சாமி என்ன நினைக்கிறோம்னா...’’ இப்படித்தான் பேசுவார். அதேபோல் ஆண்களாக இருந்தால் ஐயா என்றும்இ பெண்களாக இருந்தால் அம்மா என்றும் மட்டுமே அழைப்பார். (தனியறையில் நடிகைகளை எப்படி அழைத்தார் என்று தெரியவில்லை) தன் ஆசிரமத்துத் துறவிகளைத் தவிர வேறு யாரையும் நீஇ வாஇ போ என்று ஒருமையில் குறிப்பிடமாட்டார். அவருடைய புத்தகங்களில் கூட யாரையும் அவர் ஒருமையில் குறிப்பிட்டதில்லை. கிருஷ்ணர் வந்தார். ராவணன் வந்தார். அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் கேட்டார். இப்படித்தான் எழுதுவார்; பேசுவார். அவருடைய எந்தப் புத்தகத்திலும் அவன் இவன் என்ற வார்த்தையையே பார்க்க முடியாது.

அவரைப்போலவே அவரது ஆசிரமத்துத் துறவிகளும் பிரம்மச்சாரிணிகளும் ஐயாஇ அம்மா என்றே எல்லோரையும் அழைக்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் நித்யானந்தா தன்னைக் கடவுளின் அவதாரம் என்று மட்டும் அல்ல; கடவுள் என்றே குறிப்பிட்டிருக்கிறார். ‘‘முதலில் சாமி புத்தரை அனுப்பினேன்; அதற்குப் பிறகு பல தீர்க்கதரிசிகளை அனுப்பிப் பார்த்தேன். சமீபத்தில் கூட ராமகிருஷ்ண பரமஹம்சரை அனுப்பினேன்; விவேகானந்தரை அனுப்பினேன். மனிதர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. வள்ளலாரை அனுப்பினால் அவர் ‘என்னால் முடியாது’ என்று முப்பது வயதிலேயே திரும்பி விட்டார். அதனால்தான் பார்த்தேன். சாமியே கிளம்பி வந்துவிட்டேன்.’’

இதை அவர் தன்னுடைய நெருக்கமான பிரம்மச்சாரிணிகளிடமும்இ மஹராஜ்களிடமும் சொல்லியிருக்கிறார். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பல அடுக்கு நிலைகள் உண்டு. அதில் சாமி என்று அழைக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு அடுத்தபடியாக இருந்த துறவிகள் மஹராஜ் என்று அழைக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர்: ஞானானந்த மஹராஜ். இவர் பூர்வாசிரமத்தில் ஒரு பல் மருத்துவர். இவருக்கு உடலில் பல தீராத நோய்கள் இருந்து அதை நித்யானந்தா தீர்த்து வைத்துவிட்டதால்இ அப்படியே அவரோடு சீடராகச் சேர்ந்துவிட்டார்.

நான் இப்படிப் பல சீடர்களோடு பேசியிருக்கிறேன். ஆசிரமத்தின் எல்லா முக்கியமான சீடர்களும் இப்படியே நித்யானந்தாவினால் உடல் நோய் தீர்ந்துஇ அந்தக் காரணத்தினாலேயே துறவிகளானவர்கள்.

என்னை நித்யானந்தாவுக்கு அறிமுகப்படுத்தியவர் முன்னாள் நடிகை ராகசுதா. இப்போது நிர்மலானந்தா என்ற பெயரில் ஆசிரமத்தில் துறவியாக இருக்கிறார். இவரும்கூட முதுகு எலும்பு முறிந்துஇ டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில்இ நித்யானந்தா சரிப்படுத்தியதால் அப்படியே ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தவர்தான். சாமியாரின் செக்ஸ் லீலை அம்பலமானதும் ஆசிரமத்தில் எனக்குத் தெரிந்த பலரையும் தொடர்புகொண்டேன். யாரும் போனை எடுக்கவில்லை. ராகசுதா மட்டுமே எனக்கு மெஸேஜ் அனுப்பினார். ‘‘நீங்களுமா அண்ணா இதையெல்லாம் நம்புகிறீர்கள்? இதெல்லாம் வெறும் மாயை. விரைவில் பரிசுத்தமும்இ சத்தியமும் வெல்லும். கடவுள் உங்கள் அனைவரையும் காப்பாற்றட்டும்.’’

இதைப் படித்ததும் நான் மிகுந்த கோபத்திற்கு உள்ளானேன்.நான் பாட்டுக்கு என் எழுத்தும் நானும் என்று இருந்தேன். என்னை இந்தக் கபட சாமியாருக்கு அறிமுகப்படுத்தியவர் இந்த ராகசுதாதான். இப்போது இவ்வளவு பெரிய அசிங்கம் நடந்த பிறகும்இஅவர் அந்த செக்ஸ் சாமியாருக்கு ஆதரவாகப் பேசியதால் ஏற்பட்ட கோபம் அது. உடனே நான் ‘‘ரஞ்சிதாவைப் போல் நீங்களும் நித்யானந்தாவுக்கு ‘சேவை’ செய்தீர்களா?’’ என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன். என்னை எப்போதும் அண்ணா என்றே அழைத்து மிகுந்த பாசத்துடன் பழகும் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு மெஸேஜ் அனுப்பியதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தைச் செய்த ஒருவருக்கு எப்படி இந்தப் பெண் ஆதரவாகப் பேசுகிறார் என்று யோசித்தபோது என்னால் அப்படித்தான் கோபப்பட முடிந்தது. ஆனால் நித்யானந்தாவை சாமியாக ஏற்றுக் கொண்டவர்களை நீங்கள் சுலபத்தில் மனம் மாறச் செய்ய முடியாது.அந்த அளவுக்குத் தனது ஞானத்தினாலும்இ சித்து வேலைகளாலும் அவர் அவர்களது வாழ்க்கையின் உள்ளே சென்றிருக்கிறார்.

ஒரு பிரபலமான மூத்த நடிகையிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரைப் போன்ற ஓர் அற்புதமான மனுஷியை சினிமா உலகில் காண்பது அரிது. அவர் சொன்னார் : ‘‘நித்யானந்தா தவறு செய்துவிட்டார் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் அவர் எனக்கு கற்பித்த யோகம்இ தியானம்இ பிராணாயாமம் இன்னும் அதுபோன்ற எத்தனையோ விஷயங்களால் என் வாழ்க்கை இப்போது சிறப்பாக இருப்பதை நான் எப்படி மறுக்க முடியும்?’’ என்று கேட்டார். இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட நித்யானந்தா எனக்குக் கற்பித்த நித்ய தியானம் என்ற அருமையான தியானத்தைச் செய்துவிட்டுத்தான் எழுதுகிறேன். நிவீஸ்மீ வலீமீ பீமீஸ்வீறீ வீவள பீரமீ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல நித்யானந்தாவின் பங்களிப்பையும் இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது. மேலும்இ இது போன்ற தியான முறைகளை நித்யானந்தாவே சொந்தமாக வடிவமைத்திருந்தாலும் இதன் மூலம் பதஞ்சலி முனிவர்தான்.

ராகசுதா விஷயத்துக்கு வருகிறேன். நித்யானந்தா - ரஞ்சிதா லீலைகள் தொலைக்காட்சியில் வெளியான பிறகும் ராகசுதா இந்த சாமியாரை எப்படி ஆதரிக்கலாம்? சி.டி. பொய்யாக இருந்தால்இ அதைத் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்கள். இந்தக் காலத்தில் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்றே கண்டுபிடித்து விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு சி.டி. பொய்யா நிஜமா என்றா கண்டுபிடிக்கமுடியாது?

ரஞ்சிதாவைப் போல் நீங்களும் செய்தீர்களா?என்ற என்னுடைய அசிங்கமான கேள்விக்கும் ராகசுதா பொறுமையிழக்காமல் அழகான ஒரு பதிலை அனுப்பினார். அது என்ன என்று அடுத்த இதழில் சொல்கிறேன்.

என் மனைவி அவந்திகாவைப் போல் கும்பமேளாவுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டியவர்கள் மொத்தம் 300 பேர். இவர்களில் அந்தப் பிரபல தமிழ் நடிகரின் தாயும் ஒருவர். முந்நூறு லட்சம் என்றால் மூன்று கோடி ரூபாய். கும்பமேளா போய் வர ஒருத்தருக்கு ஒரு லட்சமா ஆகும்? சாமியாரிடம் எப்படி ஆறே ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் சேர்ந்தது என்று இப்போது தெரிகிறதா? அவந்திகா ஆசிரமத்தில் இருந்தபோது என்னை பல பத்திரிகைகளிலிருந்தும் பேட்டி கேட்டார்கள். நானோ வாயே திறக்கவில்லை. வாயைத் திறந்தால் அவந்திகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். என் இரண்டு கைகளையும் கட்டிப் போட்டது போல் உணர்ந்தேன். ‘சாமியாரிடமிருந்து பணம் வாங்கி விட்டாய்; அதனால்தான் மௌனமாக இருக்கிறாய்’ என்றெல்லாம் அவதூறு எழுதினார்கள். அப்போதும் என்னால் வாயைத் திறக்க முடியவில்லை. என் மான அவமானத்தைவிட அவந்திகாவின் உயிர் முக்கியமாயிற்றே? பிறகு எப்படி அவந்திகா ஆசிரமத்திலிருந்து தப்பினாள்?அது ஒரு துப்பறியும் கதைபோல் இருக்கும். அடுத்த இதழில் சொல்கிறேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இசை, நீங்க அந்த வீடியோவை எத்தனை தரம் பார்த்தீர்கள்?

ஒருதரம்தான்..! :D அதுக்குள்ளதான் சாமி லைட்டை நூத்துப்போட்டாரே..! sad0017.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரம்தான்..! :( அதுக்குள்ளதான் சாமி லைட்டை நூத்துப்போட்டாரே..!

சாமியா

அல்லது

தங்கள் ஆசாமியா??? :lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.