Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

Featured Replies

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ் நிருபர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 30, 2010

சுழிபுரம் மேற்கு கல்விளான் வயல் பகுதி கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று நண்பகல் மீட்கப்பட்டது.இது குறித்து கிராமசேவகர் மூலம் மக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தின் அருகில் இருந்து பயணப் பை ஒன்றைக் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களியிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் சுழிபுரம் பறாளையைச் சேர்ந்த கந்தையா கணேசமூர்த்தி (வயது – 49) என்பவர் என அடையாளம் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சடலத்தை அடையாளப்படுத்தினர். மேற்படி சடலத்தின் அருகில் ஒரு வித திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றும் கிடக்கக் காணப்பட்டது.

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நீண்ட காலமாகத் தனிமையில் வசித்து வந்த இவர் கடந்த சனிக்கிழமையே யாழ்ப்பாணம் வந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நீண்ட காலமாகத் தனிமையில் வசித்து வந்த இவர் கடந்த சனிக்கிழமையே யாழ்ப்பாணம் வந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் நீண்ட காலம் இருந்து, ஊருக்கு குடும்பத்தினை பார்க்க வந்தவரை, வீட்டிற்கு செல்லவிடாமல் கொன்றது எந்த ஒட்டுக்குழுவோ.....

ஒட்டுக்குழுக்களின் கொலைவெறி அட்டகாசம் அதிகரித்து விட்டது.

இவைகள் விடிவெள்ளிகளின் கண்களுக்கு தென்படுவதில்லையா????? ... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குளப்பிறயள்

இங்கிருந்து போய் பக்குவமா வரலாம் என்று இங்க விளம்பரம் நடக்குது

அதுக்கு அத்தாட்சியா பலபேர் எழுதினம்

தாங்கள் என்னடாவென்றால் ஊர் மாறிப்போனவரே போகவேண்டிய இடத்துக்கு போகாமல் வேறு இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொய்ச்செய்தி பரப்புகின்றீர்கள்

அவற்றை தொழிலை இது பாதிக்கப்போகுது

வழக்குப்போடப்போறார் இலங்கையில்

அங்குள்ள சட்டங்களின்மேலும் அதனுடைய ஒழுங்குவிதிகளின்மேலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்...

Edited by விசுகு

இவைகளுக்கு நீங்கள் யாரவது தீர்வு வைத்துருக்கின்றீகளா? சண்டையைதொடக்கி தோற்றனாங்கள் இனி நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

தங்களுக்க அடிபடத்தான் தமிழினம் சரியானது,30 வருடமாக அதில் தானே மூச்சாக நின்றார்கள்.யாழிலும் அதுதானே நடக்குது.

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அவலம் உங்ளுடைய வீட்டுகள் நடக்கவில்லைத்தானே அர்சுண்

  • கருத்துக்கள உறவுகள்

கீழ பாருங்கோ

கூட்டிக்கழித்து கணக்கு பார்க்கினம்

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இவைகளுக்கு நீங்கள் யாரவது தீர்வு வைத்துருக்கின்றீகளா? சண்டையைதொடக்கி தோற்றனாங்கள் இனி நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

தங்களுக்க அடிபடத்தான் தமிழினம் சரியானது,30 வருடமாக அதில் தானே மூச்சாக நின்றார்கள்.யாழிலும் அதுதானே நடக்குது.

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

சண்டை எப்ப தொடங்கினது சிங்களவன் எப்ப தமிழனை கொல்ல தொடங்கினவன்...??? ஒரு பளாயும் தெரியாட்டா சும்மா அடக்கி வைச்சு கொண்டு இருக்கோ...

1958 ம் ஆண்டு கலவரம் நடக்கும் முன்னர் யார் அண்ணை சிங்களவனோடை சண்டைக்கு போனவை...??

எங்களாலை கொல்லப்பட்டதாக சொல்கிறீர்களே அப்படி எங்களால் கொல்லப்பட்ட ஒரு தமிழனுக்கு தீமையே செய்யாத நல்லவன் ஒருவனை காட்டுங்கோ.....???

Edited by தயா

எனக்கு யாழ்ப்பாணத்தில உறவுமுறையாய் ஒரு பாட்டி இருந்தவ. அவவுக்கு இப்ப வயசு எழுபத்து ஒன்பது. இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருந்து அழைப்பு வந்திச்சிது. அவவை கொலை செய்துபோட்டாங்களாம். அளவெட்டியில கொலை நடந்து இருக்கிது. தனியாய் இருந்தவவாம் ஒரு பெரிய வீடு ஒண்டில. வீட்டு உரித்துக்காரர் வெளிநாட்டிலையாம். அவவிட்ட பொறுப்பு குடுத்து இருந்தவேளாம். யாரோ நேற்று கொலை செய்து இருக்கிறாங்கள். சிங்கள ஆக்களாய் இருக்கலாம் எண்டு அரைகுறையாய் சொல்லிச்சீனம். அவவெட்டியில சிங்களரும் இருக்கிறீனமோ? காசுக்காய், திருடங்கள் கொலை செய்தாங்களோ..? அவ முந்தி யாழ்ப்பாணம் நாவலர் வீதீயில இருந்தவ. அவ வீட்டுக்கு பக்கத்துவீட்டில அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இருந்தவர். நான் நினைக்கிறன் ஆண்டு 1990 - 1994க்கு இடையில இருக்கும் எண்டு. அவவுக்கு பிராணிகள் என்றால் நல்ல விருப்பம். வீட்டில பூனைக்குட்டி, நாய்க்குட்டிகள் எப்பவும் இருக்கும். நாய், பூனையை எல்லாம் வாங்கோ போங்கோ எண்டு மரியாதையாய்தான் கூப்பிடுவா. அதுகளுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் நாங்கள் பாவிக்கிற கோப்பை, குவளையிலதான் குடுப்பா. இண்டைக்கு அவ கொலை எண்டு செய்தி வந்து இருக்கிது.

இந்த செய்தியை - அளவெட்டியில நடந்த கொலை பற்றி யாராச்சும் இண்டைக்கு கேள்விப்பட்டனீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்.........தமிழ் வின் இல் ஒரு சிறுபதிவு உண்டு..........இவர் பெயர் பொன்னுத்துரை பகவதி என்று..

ஓம் இவதான் நிலாமதி அக்கா. அறியத்தந்தமைக்கு நன்றி. கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாய் போடப்பட்டு இருக்கிது.

பதிவு, இன்னும் ரெண்டு ஒரு தளங்களிலையும் இருக்கிது http://www.google.ca/#hl=en&q=%22%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%22&meta=&aq=f&aqi=&aql=&oq=%22%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%22&gs_rfai=&fp=4692a3ff86a6f392 தேடிப்பார்த்தன். இஞ்ச பாட்டா ஒருவருக்கு தொலைபேசி இலக்கம் கொடுத்து இருந்தவ தன்னை தொடர்பு கொள்ளலாம் எண்டு. பிறகு நேற்று அங்க இருக்கிற அன்ரி அவ கைத்தொலைபேசிக்கு அடிச்சுப் பார்த்து பதில் ஒண்டும் வர இல்லையாம். பிறகுதான் வீட்டை போனால் அங்க காவல்துறை நிண்டிச்சிதாம். அடிக்கடி திருட்டுக்காய் ஆக்களை கொலை செய்யுற அளவுக்கு யாழ்ப்பாணத்தில நிலமை மோசமாயீட்டிதோ? வயசு போன ஆக்கள் வீடுகளில தனியாய் இருப்பது ஆபத்துப்போல தெரிகிது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழ்ப்பாணத்தில உறவுமுறையாய் ஒரு பாட்டி இருந்தவ. அவவுக்கு இப்ப வயசு எழுபத்து ஒன்பது. இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருந்து அழைப்பு வந்திச்சிது. அவவை கொலை செய்துபோட்டாங்களாம். அளவெட்டியில கொலை நடந்து இருக்கிது. தனியாய் இருந்தவவாம் ஒரு பெரிய வீடு ஒண்டில. வீட்டு உரித்துக்காரர் வெளிநாட்டிலையாம். அவவிட்ட பொறுப்பு குடுத்து இருந்தவேளாம். யாரோ நேற்று கொலை செய்து இருக்கிறாங்கள். சிங்கள ஆக்களாய் இருக்கலாம் எண்டு அரைகுறையாய் சொல்லிச்சீனம். அவவெட்டியில சிங்களரும் இருக்கிறீனமோ? காசுக்காய், திருடங்கள் கொலை செய்தாங்களோ..? அவ முந்தி யாழ்ப்பாணம் நாவலர் வீதீயில இருந்தவ. அவ வீட்டுக்கு பக்கத்துவீட்டில அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இருந்தவர். நான் நினைக்கிறன் ஆண்டு 1990 - 1994க்கு இடையில இருக்கும் எண்டு. அவவுக்கு பிராணிகள் என்றால் நல்ல விருப்பம். வீட்டில பூனைக்குட்டி, நாய்க்குட்டிகள் எப்பவும் இருக்கும். நாய், பூனையை எல்லாம் வாங்கோ போங்கோ எண்டு மரியாதையாய்தான் கூப்பிடுவா. அதுகளுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் நாங்கள் பாவிக்கிற கோப்பை, குவளையிலதான் குடுப்பா. இண்டைக்கு அவ கொலை எண்டு செய்தி வந்து இருக்கிது.

இந்த செய்தியை - அளவெட்டியில நடந்த கொலை பற்றி யாராச்சும் இண்டைக்கு கேள்விப்பட்டனீங்களோ?

பாட்டியை இழந்து தவிக்கும் தங்களுக்கு எனது குடும்ப சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்....

எல்லாவற்றிற்கும் ஒருவன் காவல் இருந்தான்

எப்போ அவன் மீது எல்லா சுமையையும் ஏற்றிவிட்டு வாழாவிருந்தோமோ....

அன்றே இது நடக்கும் என்று புரிந்து கொள்ள தவறிவிட்டோம்

விழைவு......???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

.

மச்சான், உங்களது பாட்டிக்கு நடந்த சம்பவத்திற்கு மிகுந்த கவலையும், வேதனையும் அடைகின்றேன்.

இந்த துக்க சம்பவத்தில் நானும் பங்கு கொள்கின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

...மச்சான் ....உங்கள் உறவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த கொடூரம் தண்டிக்கக் படவேண்டியது , மிகவும் மலிந்த பொருள்" மனித உயிர் " என்று ஆகி விட்டது .தமிழ் இனம் இப்படியான் சூழலில் வாழ போகிறது.

இவைகளுக்கு நீங்கள் யாரவது தீர்வு வைத்துருக்கின்றீகளா? சண்டையைதொடக்கி தோற்றனாங்கள் இனி நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

தங்களுக்க அடிபடத்தான் தமிழினம் சரியானது,30 வருடமாக அதில் தானே மூச்சாக நின்றார்கள்.யாழிலும் அதுதானே நடக்குது.

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

நாய் நடுக்கடலிலும் நக்கி தான் குடிக்கும் என்பது உண்மை தான்.

இவைகளுக்கு நீங்கள் யாரவது தீர்வு வைத்துருக்கின்றீகளா? சண்டையைதொடக்கி தோற்றனாங்கள் இனி நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

தங்களுக்க அடிபடத்தான் தமிழினம் சரியானது,30 வருடமாக அதில் தானே மூச்சாக நின்றார்கள்.யாழிலும் அதுதானே நடக்குது.

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளுக்கு நீங்கள் யாரவது தீர்வு வைத்துருக்கின்றீகளா? சண்டையைதொடக்கி தோற்றனாங்கள் இனி நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை.

தங்களுக்க அடிபடத்தான் தமிழினம் சரியானது,30 வருடமாக அதில் தானே மூச்சாக நின்றார்கள்.யாழிலும் அதுதானே நடக்குது.

இவ்வளவு காலமும் மாதத்திற்கு 10,12 கொலை எம்மவராலேயே நடந்தது இப்ப 4,5 என்று சிங்களவனால் நடக்குது ஒப்பீட்டளவில் குறைவுதானே என திருப்திப் பட்டுக் கொள்ளலாம்

இந்த அண்ணா ஒரு பெருத்த அறிவாளி.............

அரசியல் மட்டுமல்ல விகிதாசார கண்க்கையும் எந்தளவிற்கு கற்று தெறியிருக்கிறார் என்று பாருங்கள்.

பாராட்டுக்கள்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியே விடக்குடாது......களையெடுக்கவேணும்.

நன்றி விசுகு அண்ணை, நிலாமதி அக்கா, தமிழ்சிறீ

+++

முந்தி அவ ஓர் வழக்கறிஞருக்கு உதவியாளராய் வேலை செய்தவ. வீட்டில பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் சொல்லிக்குடுக்கிறது. திருமணம் செய்ய இல்லை. எல்லாரோடையும் நல்லாய் இனிமையாய் பழகுவா. பிராணிகளில நல்ல விருப்பம். ஒரு தடவை பத்திரிகையில தன்ர நாய்க்குட்டி ஒன்று செத்ததுக்கு நினைவு அஞ்சலி கூட பிரசுரம் செய்து இருந்தா. பிராணிகளையும் அவ மனுசரை மாதிரி மதிச்சு மனுசருக்குரிய மதிப்பை கொடுத்தா. அவ வீட்டில இருக்கிற நாய், பூனைக்குட்டிகளை தன்ர பிள்ளைகள் மாதிரித்தான் பார்க்கிறது. வாழ்க்கையில தனியாய் இப்பிடி கொலை செய்யப்பட்டு சாகவேணும் எண்டு தலைவிதியோ என்னமோ..

எனக்கு நீங்கள் 10 இல்லை 20 சிவப்புபுள்ளியையும் குற்றலாம் பிரச்சனையில்லை.எனக்கு சுளிபுரம் கிணத்தில் கொலைசெய்து போடப்பட்டவரும் ஒரு உயிர் தான் மச்சானுகுத்தெரிந்த அந்த மூதாட்டியும் ஒரு உயிர்தான் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்படுவதும் உயிர்கள்தான் ,

அதேமாதிரி புலிகளால் கொல்லப்பட்டவர்களும் உயிர்களே.தற்கொலைபடைகள் உட்பட

(அனுராதபுர தாக்குதலில் அழிந்த விமானங்களின் கணக்கை நீங்கள் பார்த்தீர்கள் அதற்காக பலியான 21 உயிர்களை நினைத்து நான் கண்ணீர் விட்டேன் .இவ்வளவு கேவலமாகவா எம் இனம் வந்துவிட்டதன்று.இறைச்சி கறியும் போத்தலுடனும் கொண்டாடியவர்களும் இருக்கின்றார்கள்).

இப்படியே மற்றவன் அழிவில் தன் விடுதலையை வேண்டும் ஒரு கேடு கெட்ட இனம். எம் இனம் மாத்திரமே.

இதற்கு உண்ட இறைச்சி செமிபாடடைய ஒரு 40 சிவப்பு குத்திவிடுங்கள்.

இழப்புக்கள் இல்லாது விடிவை கண்ட இனம் எது உலகத்தில் இருக்கிறது அண்ணை.?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுளிபுரம் கிணத்தில் கொலைசெய்து போடப்பட்டவரும் ஒரு உயிர் தான் மச்சானுகுத்தெரிந்த அந்த மூதாட்டியும் ஒரு உயிர்தான் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்படுவதும் உயிர்கள்தான் ,

அனுராதபுர தாக்குதலில் அழிந்த விமானங்களின் கணக்கை நீங்கள் பார்த்தீர்கள் அதற்காக பலியான 21 உயிர்களை நினைத்து நான் கண்ணீர் விட்டேன் .

அதற்காக பலியான 21 உயிர்களை நினைத்து நான் கண்ணீர் விட்டேன் .

இதற்காக தாங்கள் மட்டுமே கவலைப்பட்டீர்கள் என்று சொல்வதன் மூலம் தாங்கள் சுயநலவாதி என்று மட்டுமே புலப்படுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நீங்கள் 10 இல்லை 20 சிவப்புபுள்ளியையும் குற்றலாம் பிரச்சனையில்லை.எனக்கு சுளிபுரம் கிணத்தில் கொலைசெய்து போடப்பட்டவரும் ஒரு உயிர் தான் மச்சானுகுத்தெரிந்த அந்த மூதாட்டியும் ஒரு உயிர்தான் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்படுவதும் உயிர்கள்தான் ,

அதேமாதிரி புலிகளால் கொல்லப்பட்டவர்களும் உயிர்களே.தற்கொலைபடைகள் உட்பட

(அனுராதபுர தாக்குதலில் அழிந்த விமானங்களின் கணக்கை நீங்கள் பார்த்தீர்கள் அதற்காக பலியான 21 உயிர்களை நினைத்து நான் கண்ணீர் விட்டேன் .இவ்வளவு கேவலமாகவா எம் இனம் வந்துவிட்டதன்று.இறைச்சி கறியும் போத்தலுடனும் கொண்டாடியவர்களும் இருக்கின்றார்கள்).

இப்படியே மற்றவன் அழிவில் தன் விடுதலையை வேண்டும் ஒரு கேடு கெட்ட இனம். எம் இனம் மாத்திரமே.

இதற்கு உண்ட இறைச்சி செமிபாடடைய ஒரு 40 சிவப்பு குத்திவிடுங்கள்.

உண்மையான உணர்வுள்ள நெஞ்சம் அத்தனையும் அந்த 21 கரும்புலி வீரர்களையும் நினைத்து அழுதது. முதலில் வெற்றிச் செய்தி வந்தபோது இருந்த மகிழ்ச்சி அவர்களின் படங்களைப் பார்த்தபோது இருக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் 21 கரும்புலிகள் எனும் போது ஒரு அதிர்ச்சியாகவும் என்னுள் ஒரு குற்ற உணர்வும் தான் வந்தது. ஒரு வித சோகத்தோடு அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைத்துக் கொண்டிருந்தேன் (ஆனால் நீங்கள் நிச்சயமாக அந்த வீரத்தை தியாகத்தை எண்ணிப்பார்த்திருக்க மாட்டீர்கள் ... ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வேள்விக்காக பலியெடுக்கப்பட்ட பலிக்கடாக்கள்). அனுராதபுரத்தில் எத்தனை விமானங்கள் தகர்க்கப்பட்டன என்பது எதுவும் நினைவில் இல்லை. ஆனால் இளங்கோவினதும் மற்ற கரும்புலி வீரரினதும் முகங்கள் இன்றும் கண்ணில் நிற்கின்றன. ஏதோ நீங்கள் பழகுற நாலு நாதரிகள் போத்தில் வைத்து கொன்டாடுவதற்காக எல்லோரையும் அவ்வாறாக எண்ணிவிடாதீர்கள்.

Edited by காட்டாறு

இழப்புக்கள் இல்லாது விடிவை கண்ட இனம் எது உலகத்தில் இருக்கிறது அண்ணை.?

பலத்த இழப்புக்களுடன் முடிவை கண்ட இனம் உலகில் இருக்கிறது தம்பி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.