Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் இரட்டை முகம் போட்டு உடைக்கும் சித்தார்த்தன்.

Featured Replies

நாங்கள் இனி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எப்பொழுதும் நான் தயாராக இருக்கிறேன் குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக தர்மலிங்கம் சித்தார்தனுடன் தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

01 April 10 12:10 am (BST)

தம்பி இப்படி ஏன் செய்தான் என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக்குறிப்படும் சித்தார்த்தனை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்.

தீபச்செல்வன் :

தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 இன் பின்னர் அதற்கான பல அவசயங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றினைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?

சித்தார்த்தன் :

மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17க்கு முன்னர், மே 17இற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேணடி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துள்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன்.

இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைதான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்த்தை கொடுத்து இறுதிவரை சரத்பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.

சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்Nhதாம்.

தீபச்செல்வன் :

இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செறய்படுவீர்களா?

சித்தார்த்தன்

தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபாமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாமான தீர்வைnhன்றை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.

தீபச்செல்வன் :

அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது?

சித்தார்த்தன்

நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுபோல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்Nhதம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார்.

இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை; சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால்தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.

தீபச்செல்வன் :

இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?

சித்தார்த்தன்

1990ஆம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 இல் முள்ளி வாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலத்தியே இருந்தோம். கொழும்பிலும் மலை நாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.

வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தன் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நூங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள்.

நாங்கள் அழிவுதான் போராட்;டம் என்று பார்க்க வில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துதான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லா விட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிகிக்கிறோம் என நினைக்கிறோம்.

அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைச்சு செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைச்சு அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

தீபச்செல்வன் :

இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?

சித்தார்த்தன்

அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயக் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்ததிருக்கிறேன். முக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உன்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரபரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தீபச்செல்வன் :

வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

சித்தார்த்தன்

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

தீபச்செல்வன் :

விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள் கையளிக்கலாம் அல்லவா? கிழக்கில் யுத்த்தின் பின்னர் உருவாகிய நிலமைகளைப்போல வடக்கில் ஏற்படால் தவிhக்க இது உதவலாம். ஆதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் நீங்கள் வலியுறுத்தலாம் அல்லவா?

சித்தார்த்தன்

நீங்கள் சொல்லுவதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இப்பொழுது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் யாரும் திரிவதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் இப்பொழுது வெளியில் எந்த ஆயுதங்களுடனும் செல்வதில்லை. காவல்துறையினர் இங்கு பாதுகாப்பில் பணி புரிகிறார்கள். அவர்களைத் தவிர எனக்கு எந்த ஆயுதப் பாதுகாப்பும் இல்லை. ஏனென்னறால் ஆயுதச் சூழலற்ற ஜனநாயகச் சூழலே எங்களுக்கு தேவைப்படுகின்றது. அதை நான் வலியுறுத்துகிறேன்.

தீபச்செல்வன் :

தேர்தல் பிரசாரங்களின் பொழுது உங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் சில தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என உங்கள் வேட்பாளர்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. எதற்காக அப்படி சொல்லுகிறீர்கள்?

சித்தார்த்தன்

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியால் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகித்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்.

நேர்காணல் : குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22623&cat=1

  • Replies 53
  • Views 3.1k
  • Created
  • Last Reply

டக்கிளசை விட சித்தார்த்தன் எவ்வளவு நல்லவர் எண்டு விசுகருக்கு தான் வெளிச்சம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடைஞ்ச கூட்டமைப்ப ஒட்டவைக்கோணுமெண்டு ஜிரிவி ல பிரச்சாரம் நடக்கு....இங்க..... :(:(

  • கருத்துக்கள உறவுகள்

புலி எதிர்ப்பு அரசியல் இனி அவியாது என்பது பலருக்கும் புரிஞ்சுபோச்சு.

ஒற்றுமை வேண்டுமாம்............... மே பதினெழுக்கு பிறகு அதன் தேவை எழுந்துள்ளதாம். அதற்கு முன்னம் அது அதிகமாக தேவைபடவில்லை புலிஎதிர்ப்பு வேதாந்தம் தீனிபோட்டுகொண்டிருந்தது. இப்போது புலிஎதிர்ப்புகாரர்கள் சிங்களவனுக்கும் தேவையில்லை வடஇந்;தியனுக்கும் தேவையி;ல்லை. அதிகமாக வாக்குகளை தமிழ்மக்களிடம் பெற்று அவர்களது தாளத்திற்கு ஆடகூடிய ஒரு கட்சிதான் தேவை. மூன்றுவாக்குகளுடன் பாராளமன்றம் சென்ற காலம் மலையேறிபோய்விட்டது............... இந்த புலிஎதிர்ப்பு நக்குகுழுவை மட்டும் வைத்துகொண்டு பாரளமன்றம் செல்ல முடியாது. பாராளமன்றம் செல்லாவிட்டால் வீடுகளுக்கு போக வேண்டியதுதான் ஆமியின் காவலுக்குள் நின்றுகொண்டு நக்கியதெல்லாம் இனி மலைஏறாது.

ஆக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் போய் ஒட்டலாம் என்று நல்ல வியூகம் ஒன்றை பெருமாள் வகுத்திருக்கிறார். சம்மந்து சும்ம லேசுபட்ட ஆளோ? ஏற்கனவே றோ வுடன் இவர்களுக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி தன்னை வெளிதள்ளி த.தே.கூ தலைமையையே அபகரித்துவிடலாம் என்ற யோசனை அப்புவிற்கு வந்திருக்கு. புலிகளுக்கு ஆதரவானவர்களை துரத்திவிட்டுவிட்டேன் என்று பெருமைபேசி இந்தியாவை இப்போது தன்னோடு வைத்துகொண்டு மீதியுள்ள நாட்களுக்கு சோறு தின்னலாம் என்பது அவருடைய கணக்கு.

இந்த நாய்கள் ஒன்றாக கூடி குலைத்து ஏதோ தமிழருக்கு இல்லாத ஒன்றை பெற்றுகொடுத்துவிடுவார்கள் என்று நம்புவதற்கு இங்கு யாழ்களத்திலேயே ஆட்கள் இருக்கும்போது யாழ்பாணத்தில் இருந்தால் ஆச்சரியபட ஏதும் இல்லை. ஆக ஒற்றுமைக்கு எதிராக கருத்துகளை எழுதுகிறோம் என்ற பழிசொற்களை யாராவது உண்மைநிலையை எழுத நினைத்தால் சுமக்கத்தான் வேண்டும்.

உடைஞ்ச கூட்டமைப்ப ஒட்டவைக்கோணுமெண்டு ஜிரிவி ல பிரச்சாரம் நடக்கு....இங்க..... :(:(

நீங்கள் சனலுகளை மாத்தாமல் அப்படியே ஜிரீவியையே பாhத்துகொண்டிருங்கள்.

அடுத்த சனலில சூப்பர் குழுவுக்கு (super clue) விளம்பரம்போகுது................ அதையும் கொஞசம் பார்க்கிறது.

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் தமிழர் கூட்டமைப்பில் யாருண்டு. அவர்களால் நியமிக்கப்பட்ட அத்தனைபேருமே கூட்டமைப்பினராகக் கருதப்பட்டார்கள். இன்று இந்த சித்தார்த்தனின் பதில்களில் உண்மையிருக்கிறது என நம்பி யாழ்களத்தில் கருத்தெழுதுபவர்கள் இருக்கும் வரைக்கும் சித்தார்த்தன் போன்றவர்கள் கருத்து என்றென்றும் வாழும்.

ஓரணியில் இருக்கும் முரண்பாடுகளை, மேலும் முரண்படச் செய்யும் காரியத்தில் சித்தார்த்தன் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதுதான் எனது எண்ணம். " புலிகளால் நியமிக்கப்பட்டவர்களைத் துரத்திவிட்டேன் " என்ற கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை சித்தார்த்தன் அறிவார். அப்படிப்பட்ட காருத்தை வெளிப்படுத்துவதற்கான வேளையும் இதுதான் என்பதையும் அவர் அறிவார். இந்த விடயம் உண்மையாயிருந்தால் ஏற்கெனவே இந்தச் செய்தியை அவர் வெளியிட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன்

நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுபோல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்Nhதம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார்.

இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை; சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால்தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.

---

சித்தார்த்தன்

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22623&cat=1

இவர் இந்திய நிருபமாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கதைக்கிறார். இவர்கள் இதைத்தான் கடந்த 30 வருடமாகவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

எமது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர் வவுனியாவில் சிறீலங்காப் படைகளோடு சேர்ந்து நின்று கொண்டு எமது விடுதலைப் போராளிகள் எத்தனை பேரை அழித்திருப்பார். இப்படியாக சிங்களவன் தூக்கி வீசும் எலும்பு பொறிக்கி வாழ்ந்த நாய்கள் எல்லாம் இப்போ எமக்கு அறிவுரை சொல்லும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்கிறார். சிங்கள மக்களுக்கு ஏற்ப கூட்டமைப்பின் பெயரை மாற்ற வேண்டும் என்கிறார். தான் மட்டும் இன்னும் வடக்கி கிழக்கு தமிழர் தாயகம் என்கிறார். தனது இயக்கத்தை தமிழீழ மக்கள் விடுதலைகழகம் என்கிறார். இவற்றை சிங்கள மக்கள் அங்கீகரிப்பதாக இவரின் காதுக்குள் வந்து குசுகுசுத்தார்களோ..??!

வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஜனநாயக ரீதில் தமிழ் மக்களால் அங்கீகரிகப்பட்ட ஒன்று. 1977 ஆயுதப் போராட்டம் வீரியம் கொள்ள முதலே அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. தமிழீழம் என்பது தந்தை செல்வாவால் முன் வைக்கப்பட்டது. சிங்களவர்கள் விரும்புகின்ற வடிவில் தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் இந்த எலும்பு பொறுக்கி.. சொல்வதைத்தானே மகிந்தவும் சொல்கிறார். இவர் என்ன மகிந்தவின் எடுபிடியா கருத்துச் சொல்வதை ஏன் எம்மவர்கள் பிரசுரிக்கிறார். இதுதான் மாற்றுக் கருத்தா. ஜனநாயகமா..??!

இந்தப் புளொட் இயக்கம் ஏன் இன்னும் இருக்கிறது. இந்த இயக்கம் இலங்கைக்கு மட்டுமல்ல.. பிராந்தியத்திற்கே ஆபத்தானது. மாலைதீவில் போய் புரட்சி செய்ய வெளிக்கிட்டு.. இந்திய நலனை காப்பாற்றிக் கொள்ள உதவியதோடு சர்வதேசத்தின் கவனத்தை எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நிலை நிறுத்தியது. அதுமட்டுமன்றி வவுனியாவில் மட்டும் இவர்களின் நடவடிக்கைகளால் மாண்ட மாவீரர்களின் கணக்கு தனியாக இருக்கிறது. இப்படிப்பட்ட இயக்கங்களை முதலில் கலைப்பதை தமிழ் மக்கள் விரும்புவார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் என்பதைத்தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்பதன் மூலம் சர்வதேசத்துக்குச் சொல்கின்றனர். இன்னும் நிருபமாவின் சோனியாவின் முந்தானைக்குள் தான் தமிழர்களின் தீர்வு இருக்கிறது என்பதை தமிழ் மக்கள் எனியும் நம்பத் தயார் இல்லை. அதை சித்தார்த்தன்.. சம்பந்தன்.. வரதராஜப் பெருமாள்.. சங்கரி.. டக்கிளஸ் நம்பலாம். ஆனால் இந்தியாவின் துரோகத்தை களத்தில் சந்தித்த தமிழ் மக்களும் புகலிடத்தில் அனுபவித்த புலம்பெயர் மக்களும் நம்பத் தயார் இல்லை.

இந்தியாவை விட்டு விலகி எமக்கென்றான தனி இராஜதந்திர நகர்வுகளை சர்வதேச மட்டத்தில் செய்யாமல் நாம் எந்த உருப்படியான தீர்வையும் சிங்களத்திடம் இருந்தோ இந்தியாவிடம் இருந்தோ பெற முடியாது என்ற உண்மையை இவர்கள் இன்னும் உணரவில்லை என்றால் இவர்கள் பலியிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் மட்டுமல்ல.. இன்னும் பலியிட உயிரிகள் தேவை என்பதையே இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாடு கடந்த அரசு என்பது இந்தியா.. சிறீலங்கா உட்பட எல்லோருக்கும் இராஜதந்திர அழுத்ததைக் கொடுக்கக் கூடிய விடயம் மட்டுமன்றி தமிழீழ உணர்வை தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர்கள் தமது கொள்கையை எக்காரணம் கொண்டு தாரை வார்க்க தயார் இல்லை என்ற செய்தியை சிங்கள தேசத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்க அவசியமானது. சிங்கள தேசம் விரும்பும் தீர்வை பெறுவதாயின் அதை தந்தை செல்வா என்றோ செய்திருப்பார். அது அல்ல இன்று அவசியம். இத்தனை இழப்புக்களுக்குப் பின்னும்.. சிங்களம் மகிழ நடப்பதே தமிழர்களுக்கு தீர்வு என்று போலி அரசியல் செய்யும் தமிழீழத்தை கட்சிப் பெயரில் மட்டும் காவித்திரியும் சித்தார்த்தன்கள் எனியும் தமிழ் மக்களின் முன் சொல்லி கொண்டிருப்பதில் பயனில்லை.

தமிழ் மக்களின் தேவை.. நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியே..! அதை சிங்களம் விரும்புதோ இல்லையோ.. தமிழர்கள் தமது நிலத்தில் நிறுவ உரித்துடையவர்கள் என்பதை உலகம் ஏற்கும் நிலைக்கு நாம் உலகை நகர்த்திக் கொண்டு வர முயல வேண்டுமே அன்றி சிங்களத்தின் இந்தியத்தின் பகடக்காய்களாகி கொள்கையை விற்று அரசியல் செய்வதை அல்ல.. தமிழ் மக்கள் தீர்வாக்கி நிற்கின்றனர் என்பதை சித்தார்த்தன் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றால் எனியாவது உபத்திரபம் செய்யாமல் அரசியலில் இருந்து ஒதுக்கிக் கொள்வது நன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் தமிழர் கூட்டமைப்பில் யாருண்டு. அவர்களால் நியமிக்கப்பட்ட அத்தனைபேருமே கூட்டமைப்பினராகக் கருதப்பட்டார்கள். இன்று இந்த சித்தார்த்தனின் பதில்களில் உண்மையிருக்கிறது என நம்பி யாழ்களத்தில் கருத்தெழுதுபவர்கள் இருக்கும் வரைக்கும் சித்தார்த்தன் போன்றவர்கள் கருத்து என்றென்றும் வாழும்.

ஓரணியில் இருக்கும் முரண்பாடுகளை, மேலும் முரண்படச் செய்யும் காரியத்தில் சித்தார்த்தன் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதுதான் எனது எண்ணம். " புலிகளால் நியமிக்கப்பட்டவர்களைத் துரத்திவிட்டேன் " என்ற கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை சித்தார்த்தன் அறிவார். அப்படிப்பட்ட காருத்தை வெளிப்படுத்துவதற்கான வேளையும் இதுதான் என்பதையும் அவர் அறிவார். இந்த விடயம் உண்மையாயிருந்தால் ஏற்கெனவே இந்தச் செய்தியை அவர் வெளியிட்டிருக்கலாம்.

நீங்கள் சொல்லவருவதும் உண்மையாக இருக்கலாம்..........

ஏற்கனவே குழம்பியுள்ள கூட்டமைப்பை இன்னமும் குளப்பிவிட கூடிய எண்ணங்கள் இருக்கலாம்.

அதற்காக இவருடைய கருத்து தவறென்பதை வைத்து சம்மந்துவை சரி என்று கூறிவிட முடியாது.

சாத்தான் ஓதும் வேதம் இதுதான்.

பொய்கை. தலைப்பு சாடையா சுற்றுகிறதே!

கூட்டமைப்பை உடைக்க சித்தார்த்தன் இரட்டை முகத்தோடு உடைக்க கின்ராரா?

அல்லது கூட்டமிப்பின் இரட்டை முகத்தை சித்தார்த்தன் போட்டு உடைகின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வுடுதலை கூட்டமைப்பு என்ற பெயர் தெற்கில் பிழையாக விளங்கபடுகிறதாம். ஆனால் தமீஇழ மக்கள் விடுதலை களகம் தெற்கில் ஏற்கப்படுகிறதாக்கும். புளட்டின் உட்கட்சி கொலைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவர் இவர்.30 வருடங்களாக என்ன செய்தார் என்பதும் தமிழ் மக்களுக்கு தெரியும். இவர் "கழுவிய மீனுக்குள் நழுவுகிற மீன்".

ஜனநாயக வேடம் போடும் சித்தார்த்தனிடம் மூன்று முக்கிய கேள்விகளை கேட்க தீபச்செல்வன் மறந்தது ஏன்?

(1) சிவராமை படுகொலை செய்ததில் உங்கள் அறிய பங்களிப்பு என்ன? அதற்கு இந்திய பயங்கரவாதிகள் தந்த பரிசு என்ன?

(2) இந்திய பயங்கரவாதிகளின் தொடர்பை எதுவரை தொடர உத்தேசம்?

(3) மக்களிடம், வியாபாரிகளிடம் கப்பம் வாங்குவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?

நீங்கள் சொல்லவருவதும் உண்மையாக இருக்கலாம்..........

ஏற்கனவே குழம்பியுள்ள கூட்டமைப்பை இன்னமும் குளப்பிவிட கூடிய எண்ணங்கள் இருக்கலாம்.

அதற்காக இவருடைய கருத்து தவறென்பதை வைத்து சம்மந்துவை சரி என்று கூறிவிட முடியாது.

சம்பந்தர் பிழையானவர் என்றால், தமிழர்களைப் பிளவுபடுத்தியிருக்கக் கூடாது. அது கஜேந்திரகுமார் அணியினர் செய்த முற்றுமுழுதான பிழை. தாம்விட்டுள்ள பிழையை சம்பந்தரின் பிழைகளுக்குள் மறைத்துக் கொள்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

சாத்தான் ஓதும் வேதம் இதுதான்.

பொய்கை. தலைப்பு சாடையா சுற்றுகிறதே!

கூட்டமைப்பை உடைக்க சித்தார்த்தன் இரட்டை முகத்தோடு உடைக்க கின்ராரா?

அல்லது கூட்டமிப்பின் இரட்டை முகத்தை சித்தார்த்தன் போட்டு உடைகின்றாரா?

கூட்டமைப்பை உடைத்தது வேறை யாரும் இல்லை இந்தியாவின் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப்ப சம்பந்தர் கூட்டம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

டக்கிளசை ஆயுத கலாச்சாரம் செய்பவர் தமிழர்களை வதைத்தவர் எண்று கூறும் கூட்டமைப்பு சித்தார்த்தன் வவுனியாவில் போட்ட ஆட்டத்தையும் ஆயுத கலாச்சாரத்தையும் மறுக்கிறார்களா. ?

அவர் பேட்டியில் எங்கும் கூட்டமைப்பை மட்டம் தட்டுவது போல சொல்லவில்லையே. அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

Edited by பொய்கை

  • தொடங்கியவர்

வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஜனநாயக ரீதில் தமிழ் மக்களால் அங்கீகரிகப்பட்ட ஒன்று. 1977 ஆயுதப் போராட்டம் வீரியம் கொள்ள முதலே அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. தமிழீழம் என்பது தந்தை செல்வாவால் முன் வைக்கப்பட்டது. சிங்களவர்கள் விரும்புகின்ற வடிவில் தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் இந்த எலும்பு பொறுக்கி.. சொல்வதைத்தானே மகிந்தவும் சொல்கிறார். இவர் என்ன மகிந்தவின் எடுபிடியா கருத்துச் சொல்வதை ஏன் எம்மவர்கள் பிரசுரிக்கிறார். இதுதான் மாற்றுக் கருத்தா. ஜனநாயகமா..??!

இந்த பேட்டியை எடுத்தவர் கூட்டமைப்பின் வேட்பாளராக இருந்து இருக்க வேண்டிய வரும் கூட்டமைப்பின் ஆதரவாளர்ருமான தீபச்செல்வன்.

எதை இதன் மூலம் சாதிக்க முயல்கிறார் என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பிழையானவர் என்றால், தமிழர்களைப் பிளவுபடுத்தியிருக்கக் கூடாது. அது கஜேந்திரகுமார் அணியினர் செய்த முற்றுமுழுதான பிழை. தாம்விட்டுள்ள பிழையை சம்பந்தரின் பிழைகளுக்குள் மறைத்துக் கொள்கின்றார்கள்.

உங்களின் விருப்பு தமிழர்கள் ஒருமைப்பாட்டோடு இருக்கவேண்டும், அதற்குக் கொள்கை முக்கியமல்ல.

இப்படியான நிலையில் உங்கள் சிந்தனை இருப்பதால்தான் கஜேந்திரகுமார்தான் பிழைவிட்டவர் என்று திரும்பத் திரும்பச் சொல்லுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரமான கருத்துக்களை எழுதிய நெடுக்கிற்கு நன்றிகள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசை விட சித்தார்த்தன் எவ்வளவு நல்லவர் எண்டு விசுகருக்கு தான் வெளிச்சம்...

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் தமிழர் கூட்டமைப்பில் யாருண்டு. அவர்களால் நியமிக்கப்பட்ட அத்தனைபேருமே கூட்டமைப்பினராகக் கருதப்பட்டார்கள். இன்று இந்த சித்தார்த்தனின் பதில்களில் உண்மையிருக்கிறது என நம்பி யாழ்களத்தில் கருத்தெழுதுபவர்கள் இருக்கும் வரைக்கும் சித்தார்த்தன் போன்றவர்கள் கருத்து என்றென்றும் வாழும்.

ஓரணியில் இருக்கும் முரண்பாடுகளை, மேலும் முரண்படச் செய்யும் காரியத்தில் சித்தார்த்தன் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதுதான் எனது எண்ணம். " புலிகளால் நியமிக்கப்பட்டவர்களைத் துரத்திவிட்டேன் " என்ற கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை சித்தார்த்தன் அறிவார். அப்படிப்பட்ட காருத்தை வெளிப்படுத்துவதற்கான வேளையும் இதுதான் என்பதையும் அவர் அறிவார். இந்த விடயம் உண்மையாயிருந்தால் ஏற்கெனவே இந்தச் செய்தியை அவர் வெளியிட்டிருக்கலாம்.

இதைத்தான் நண்பரே தங்களது ஆட்களும் செய்கிறார்கள்

எவர் வென்றாலும் பரவாயில்லை

சம்பந்தர் தோற்கணும்

சரியான கூட்டுத்தான் தங்களது...

Edited by விசுகு

இதைத்தான் நண்பரே தங்களது ஆட்களும் செய்கிறார்கள்

எவர் வென்றாலும் பரவாயில்லை

சம்பந்தர் தோற்கணும்

சரியான கூட்டுத்தான் தங்களது...

டக்கிளசை வெறுக்கிறீயள் சரி... சித்தார்த்தனை அணைக்க நிக்கவில்லை எண்றா சொல்கிறீர்கள்...?? யாருக்கு கதை விடுகிறீயள்...?? இதை சுரேஸ் பிரேமச்சந்திரன் பேட்டியில் சொன்னதாக இங்கை இணைத்தவரே இறவன் தான்..

இதே சித்தார்த்தன் தமிழர்களை பிரிக்க நிக்கிறான் எண்று யாருக்கு வேடிக்கை காட்டுறீயள்...??

கீழை இருக்கிற இணைப்பிலை இறைவன் இணைச்ச பேட்டி ஒண்டு வடிவா படியும்...?? வாசிக்க தெரிய வில்லை எண்டா யாரையும் கேட்டு பாருங்கள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70329&st=0&p=576500&hl=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF&fromsearch=1&#entry576500

பகுத்தறிஞ்சு பாக்கிறது தான் அறிவு மனிதனுக்கு இருக்கு... கண்ணை மூடிக்கொண்டு நிண்டால் குறுட்டுத்தனம்...

Edited by தயா

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் தமிழர் கூட்டமைப்பில் யாருண்டு. அவர்களால் நியமிக்கப்பட்ட அத்தனைபேருமே கூட்டமைப்பினராகக் கருதப்பட்டார்கள். இன்று இந்த சித்தார்த்தனின் பதில்களில் உண்மையிருக்கிறது என நம்பி யாழ்களத்தில் கருத்தெழுதுபவர்கள் இருக்கும் வரைக்கும் சித்தார்த்தன் போன்றவர்கள் கருத்து என்றென்றும் வாழும்.

ஓரணியில் இருக்கும் முரண்பாடுகளை, மேலும் முரண்படச் செய்யும் காரியத்தில் சித்தார்த்தன் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதுதான் எனது எண்ணம். " புலிகளால் நியமிக்கப்பட்டவர்களைத் துரத்திவிட்டேன் " என்ற கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை சித்தார்த்தன் அறிவார். அப்படிப்பட்ட காருத்தை வெளிப்படுத்துவதற்கான வேளையும் இதுதான் என்பதையும் அவர் அறிவார். இந்த விடயம் உண்மையாயிருந்தால் ஏற்கெனவே இந்தச் செய்தியை அவர் வெளியிட்டிருக்கலாம்.

சித்தார்த்தனை கூட்டமைப்புக்குள் வரவளைக்க நாங்கள் முயல்கிறோம் எண்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னதாக நீங்கள் தான் கட்டுரை இணைச்சியள்... இப்ப என்ன தடுமாற்றம்...?? இல்லை ஒண்டையும் முழுமையாக வாசிக்க்காமல் தான் கொண்டு வந்து கொட்டுறனீங்களோ...??

கீழை இருப்பது தாங்கள் இணைத்தது தான்.... தொடர்ச்சியை தான் சித்தார்த்தன் சொல்கிறார்...

பதில்: நிச்சயமாக, என்னைப் பொறுத்தவரை அடிப்படையில் முரண்பாடு என்பது பிழையானது. அவர்கள் தாங்கள் அறிந்த வகையில் தமது கருத்துக்களை கூறுகின்றார்கள். எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதற்காக சித்தார்தனைக்கூட நாங்கள் இணைத்துக் கொள்ள விரும்பினோம். சித்தார்த்தன் கடைசி வரை பார்க்கலாம் பார்க்கலாம் என கூறியிருந்தார். கடைசியில் அவர் வரவில்லை. ஆனந்தசங்கரியுடனும் பேசினோம். அவர் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனம் கேட்டார். அதனால்தான் எங்களுக்கு அவருடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியவில்லை. நாங்கள் எல்லோருமே ஒர் அணியில் வருவதற்கான முயற்சியை மேற் கொண்டோம். அந்த வகையில் கஜேந்திரகுமாரை மீண்டும் வந்து இணைய நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=40&t=70329&qpid=576500

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும்போதே கூட்டமைப்புக்குள் எல்லோரையும் கொண்டுவரும் நோக்கத்தோடு எப்படி எல்லோரோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதோ அதேபோன்று ஒரு பொதுக்கொள்கை அடிப்படையில்

எவருடன் பேசி இணைந்து கொள்வதில்லை எனக்கு எந்த குத்துதலும் இல்லை

நீங்கள் சொல்லும் டக்கிளசும் சித்தார்த்தனும் எனக்கு பொது எதிரி கிடையாது

அவர்கள் எமது போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு இனியாவது தப்பான பாதையிலிருந்து விலகி எம்மோடு வந்து மக்கள் முன் சென்று வெல்வார்களாயின் அதை நான் பூரணமாக ஆதரிப்பேன்

உங்களுக்கு மறதி நோய் அதிகம் போல கிடக்கு... இண்டைக்கு கூட்டமைப்புக்கு காவடி தூக்கும் துரைரத்தினம் அவர்களி யாழுக்கு அனுப்பிய மடல் கீழை இருக்கு...

மேற் காணப்படும் கருத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன்:

டக்ளசும், சித்தார்த்தனும் எக்காரணம் கொண்டும் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். த.தே.கூ இன் உருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கம் செய்து முன்னின்று உழைத்த டி.சிவராம், நடேசன் அண்ணா போன்றவர்களுக்கு புலிகளின் தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய நிபந்தனையாக இவை இருந்தன.

மேற்படி கருத்துக்கள் யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்டிருப்பதை பார்த்தேன். யாழ் இணைய கருத்துக்களத்தில் நான் அங்கத்தவராக இல்லாத காரணத்தால் இதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

இக்கால பகுதியில் நாட்டில் ஊடகவியலாளராகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவன் என்ற வகையிலும் சில குறிப்புக்களை தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட எமக்கு ( சிவராம் நடேசன் உட்பட) விடுதலைப்புலிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

புளொட் அமைப்பையையும் இதில் இணைத்துக்கொள்வதற்காக நான்கு தடவைகள் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட புளொட் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அவர்களை இணைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பை உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்த தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய வற்றிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்தன.

1. தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களிடம் இருக்கும் ஆயுதக்குழுவை கலைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இணங்கி வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் புளொட்டில் இருந்த சிலர் அதற்கு சம்மதிக்காததுடன் இராணுவத்தினருடன் தாம் தொடர்ந்து சேர்ந்து இயங்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே புளொட் அமைப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரையும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் சந்தித்திருந்தது. ஆனால் அந்த சந்திப்புக்களில் ஒரு போதும் விடுதலைப்புலிகள் நிபந்தனைகளை விதிக்கவில்லை. இந்த முயற்சியில் ஈடுபட்ட சிவராம் நடேசன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகள் நிபந்தனை விதித்திருந்தார்கள் என்பது முற்றிலும் தவறானதாகும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி சொற்ப காலத்தில் நடந்த விடயம் அல்ல. 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

அது ஒரு நீண்டவரலாறு. ஏனைய கட்சிகளை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி முரண்டு பிடித்து நிபந்தனைகளை விதித்த சம்பவங்கள் பல உண்டு.

தேவை ஏற்படின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தோற்றம் பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.

இதில் இப்போது மிகப்பெரிய கவலை என்னவெனில் காலத்தின் தேவை கருதி மிகப்பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதற்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கும் வகையிலும் யாழ் இணையம் உட்பட சில இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருவதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு இனம் உறுதியான அரசியல் தலைமையை கொண்டிருக்க வேண்டும். இப்போது தளத்தில் விடுதலைப்புலிகள் இல்லை. அங்கு இப்போது தமிழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தரக்கூடிய ஒரே அரசியல் தலைமை தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான். அவர்களையும் துரோகிகள் என்று கூறி சிதைத்து விட்டால் அந்த மக்களுடைய அரசியல் தலைமையாக யார் செயற்பட போகிறார்கள்.

டக்ளசையும் கருணாவையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக கொண்டுவருவதற்காகவா தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க முற்படுகிறார்கள் என்ற கேள்வியே என்னிடம் எழுகிறது.

இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருவதையே அவதானிக்க முடியகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் நிலைமைகளை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் செயற்படுவதே தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

தயவு செய்து தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கின்ற வகையில் கருத்துக்களை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இரா.துரைரத்தினம்

ஊடகவியலாளர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68019&hl=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D&st=40

கூட்டமைப்பில் யாரை இணைக்க வேண்டும் யாரை இணைக்க கூடாது என்பதில் புலிகளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது...

இதில் டகிளஸ் கெட்டவன் எண்றால் சித்தார்த்தன் எப்படி நல்லவராக தெரிவு செய்தார்கள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மறதி நோய் அதிகம் போல கிடக்கு... இண்டைக்கு கூட்டமைப்புக்கு காவடி தூக்கும் துரைரத்தினம் அவர்களி யாழுக்கு அனுப்பிய மடல் கீழை இருக்கு...

அது ஒரு காலம் தயாண்ணா

இப்பவும் நான் சொல்லுறன்

அவர்களது தப்பை உணர்ந்து

மக்கள் முன் நின்று வென்றால் நான் ஏற்றுக்கொள்வேன்

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட எமக்கு ( சிவராம் நடேசன் உட்பட) விடுதலைப்புலிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

புளொட் அமைப்பையையும் இதில் இணைத்துக்கொள்வதற்காக நான்கு தடவைகள் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட புளொட் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அவர்களை இணைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பை உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்த தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய வற்றிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்தன.

1. தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களிடம் இருக்கும் ஆயுதக்குழுவை கலைக்க வேண்டும்.

தமிழீழத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் என் ஊரே அரைச்சிங்கள பிரதேசமாகியுள்ளநிலையில்.....

இன்னும் எங்களுக்குள் பிரிவுகளுக்காகவும் கட்சிகளுக்காகவும் அடிபடும் எம்மை நினைத்து மிகவும் வேதனைப்படுகின்றேன்

இங்கை இப்படி எழுதியவரும் தாங்கள் தானே...?? இது நடந்து இன்னும் மூண்று மாதம் கூட ஆகவில்லை.... அதுக்குள் உங்களுக்கை இப்படி ஒரு மாற்றமா...?? இல்லை கூட்டமைபின் மீதுள்ள கண்மூடித்தனமான பக்தி இப்படி மாற்றுகிறதா....??

உண்மையில் எம்மை பைத்தியக்காறர்கள் ஆக்கும் முயற்சியே இது.

இதற்கு நிர்வாகம் எந்தவகையில் அனுமதிக்கிறது என்று புரியவில்லை

எதையோ நிறுவுவதற்காக சுத்தி வளைத்து மூக்கைத்தொடும் விவகாரம் இது.

நிர்வாகத்தின் நோக்கமும் அதுதான் என்று நினைக்க வேண்டியுள்ளது

டக்கிளசுக்கு வோட்என்று ஆம் என்றாலும் பிரச்சினை

இல்லையென்றாலும் பிரச்சினை

என்னைப்பொறுத்தவரை இக்கேள்வியின் நோக்கம் புரிவதால் நிராகரிக்கின்றேன்

கூட்டமைப்பின் தற்போதைய தேவை புரியாது இது போன்ற குழப்பகரமான சிக்கலான நடைமுறைக்கு ஒவ்வாத பரீட்சைகளை நிராகிரிக்குமாறு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68019&st=0

என்னைப்பொறுத்தவரை..

இங்கு நடப்பது கருத்து கணிப்பு இல்லை

கருத்து திணிப்பு

பாருங்கள் ஒருவர் மட்டுமே தொடர்ந்து திணிக்கின்றார்

மற்றவர்கள் எதிர்க்கின்றனர்

சிலர் கலைத்து கலைத்து திணிப்பின் முடிவில் ஆமா போடுகின்றனர்

சிலர் தெரிந்த முகம் என்பதற்க்காக இருண்டும் கெட்டான்களாகின்றனர்

அதைவிட டக்ளசை மேலானவர் என்று நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அவர் நல்லவர் என்று மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தடவைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளதுயார் கேட்டார் இதை இப்போ... இங்கே....?

எவர் எது எழுதினாலும் அவர்மேல் திணிப்பு தொடர்கிறது

இதில் வேதனை என்னவென்றால் எமது மட்டுனரும் ஆமாம் சாமியாகியதுதான்......

நான் முன்பு சில நல்லவிடயங்களை விவாதத்துக்கு கொண்டு வந்தேன்

அதற்கு மோகன் அண்ணா கடிதம் போட்டுஇருந்தார்

நீங்கள் நல்லதற்காகத்தான் இந்த கருத்தில் விவாதத்தை ஆரம்பிக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரிகிறது

ஆனால்

இன்றைய நிலையில் தப்பான அர்த்தங்களை மக்களின் மனங்களில்விதைக்க சிலர் இதை பயன்படுத்தக்கூடும்

எனவே அனுமதிக்கமுடியவில்லை

என எழுதியிருந்தார்

ஆனால் இன்று.....???

தழிழச்சி

தங்கள் பெயரின்பால்உள்ள ஈடுபாட்டால்தான் தங்களுக்கு இதை எழுதுகின்றேன்

டக்ளசு அவர்கள் தங்களிடம் இப்படி சொல்லி வாக்கு கேட்டாரா?

கூட்டமைப்பு ஆதரித்ததா?

மகிந்தவை அவர் வெறுக்கிறாரா?

தான் செய்த கொலைகளை அல்லது கொள்ளைகளை நிறுத்தி தமிழ்மக்களால் திரும்பிப்பர்க்கும்படியாக ஏதாவது செய்து விட்டாரா..???

ஆம் என்றால் சொல்லுங்கள் எனது வாக்கும் அவருக்கே...

இல்லை யென்றால்

எதற்காக இப்படி எழுதித்தள்ளி அவருக்கு

அவரே எதிர்பார்க்காத ஒன்றை செய்து கொடுக்க துடிக்கின்றீர்கள்...

நன்றி

இன்னும் பல விதமான முரண்பாடான பினாத்தல்கள் இருக்கின்றன... உங்கட குப்பைகள் யாழுக்கை நிறைய இருக்கண்ணை..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தான் செய்த கொலைகளை அல்லது கொள்ளைகளை நிறுத்தி தமிழ்மக்களால் திரும்பிப்பர்க்கும்படியாக ஏதாவது செய்து விட்டாரா..???

ஆம் என்றால் சொல்லுங்கள் எனது வாக்கும் அவருக்கே.

இன்றும் இதுதான் நிலமை

எனது முடிவும் ஒன்றுதான்

அப்ப சித்தார்த்தன் வவுனியாவில் குழுவைத்து கப்பம் வாங்கி கொடுக்காதவர்களை போட்டது எல்லாத்தையும் விட்டுபோட்டு தமிழ் மக்களுக்கு நல்லது செய்து போட்டாரோ...??? சொல்லவே இல்லை...

எனக்கு தெரிஞ்ச ஒரு ஆச்சி... வவுனியாவில் கொஞ்சம் விவசாய காணி வைச்சு இருந்தது... அதிட்ட ஒருநாள் புளட்(நெருப்பு எண்டவன் தலைமையில்) குழு வந்து நாளைக்கு அலுவலகத்துக்கு வந்து 50 000 ரூபா கட்டி போட்டு போ எண்டு சொல்லி போட்டு போனான்... அடுத்த நாள் கிழவி ஊர் எல்லாம் திரிஞ்சு ஒரு 25 000 ரூபாவை திரட்டி அலுவலகத்துக்கு கொண்டு போய் குடுத்தா... காசை வாங்கி அவவுக்கு மேலை தூக்கி எறிஞ்சு போட்டு சொன்னான் ஒருத்தன் கொண்டு போ... கொண்டு போய் நாளைக்கு உன்ர செத்த வீட்டுக்கு தேவை படும் எடுத்து கொண்டு போ எண்டான்...

மனிசி பின்னேரத்துக்கை வேற இடங்களுக்கு எல்லாம் திரிஞ்சு காசை கட்டினது வேறகதை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் மென்மையான நிலைக்கு நான் வரக்கூடும்

இன்று எம்மக்களும் மண்ணும் சசுவீகரிக்கப்படும் நிலை தொடருமானால்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.